Home Blog Page 226

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

kumarimunai modi thavam - 2026
#image_title

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். காவி உடை உடுத்திக் கொண்டு, தவசியாக தவம் செய்து வரும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி உள்ளன.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் கடைசி கட்ட பிரச்சாரம் ஓய்வடைந்த நிலையில் வழக்கம்போல் தனிப்பட்ட வகையில் தியானம் செய்வதற்காக நேற்று மாலை குமரிமுனைக்கு வந்தார் பிரதமர் மோடி. அவர் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்றார். பின்னர் மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.

பின்னர் பிரதமர் மோடி தியான மண்டபத்துக்குச் சென்று விட்டு திரும்பினார். நேற்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்திக் கொண்டார். தனது 3 விரல்களால் விபூதியைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டு, அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துவிட்டு, முழு அளவிலான பக்தர் கோலத்தில் தெரிந்தார்.

பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு ஆகியவற்றை அணிந்து கொண்டு முற்றும் துறந்த துறவியாகவே தோற்றமளித்தார். கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனைத் தன் விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி வந்தார்.

மண்டபத்தின் கிழக்குப் பகுதிக்குச் சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார். பின்னர் சொம்பில் இருந்த தீர்த்தத்தை கடலில் அர்க்யம் என ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று கூறப்படுகிறது.

சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கடல் அழகையும் ரசித்துப் பார்த்தார். பின்னர் விவேகானந்தரின் முழு உருவச் சிலையுடன் கூடிய மண்டபத்துக்குச் சென்ற மோடி, விவேகானந்தர் சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் தியானம் செய்ய அமர்ந்தார்.

விவேகானந்தரின் சிலையைப் பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டார். ருத்ராட்ச மாலையை விரல்களால் உருட்டியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார். பிறகு தியான மண்டபத்துக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவிக் கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.

அந்நேரம், தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான வகையில், மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இந்தக் காட்சிகள் இன்று வீடியோவாக வெளியிடப்பட்டது. இது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் தியானம் நாளை மதியத்துக்கு மேல் நிறைவுறுகிறது. பின், பிற்பகல் 3.30க்கு அவர், கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார். நாளை பிற்பகலில் தியானத்தை முடித்தபின், திருவள்ளுவர் சிலையைச் சென்று பார்வையிடுகிறார். இதன் பிறகு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் தில்லிக்குச் செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப் படுகிறது.

கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரிக் கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில்வந்து கண்காணித்து வருகின்றனர்.

முழு அளவு ஜனநாயகம் சாத்தியமா?

election voting - 2026

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

பல கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் சில மாநிலங்களிலும் இல இடங்களிலும் நடக்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிவு வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதுவரை நடந்த தேர்தல் முறையைப் பார்க்கும் போது சில அம்சங்கள் தெளிவாகின்றன. வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இல்லை. சாதாரணமாக அறுபது சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. சில இடங்களில் ஓரளவு பரவாயில்லை.

வருத்தமளிக்கும் செய்தி என்னவென்றால் தொழில்நுட்பம் பல துறைகளில் வியக்கத்தக்க அளவுக்கு வளர்ச்சியும் சீர்திருத்தங்களும் அடைந்தாலும் தேர்தல் அமைப்பில் தகுந்த அளவு முன்னேற்றத்தை சாதிக்க இயலவில்லை. மத்திய, மாநில தேர்தல் அதிகாரிகளின் உள்ளத் தூய்மையை சந்தேகிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் சரியான வகையில் பல இடங்களில் நிர்வாகம் நடக்கவில்லை என்ற உண்மையை மறுக்க முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் பல இடங்களில் மோசடிகள் நடந்துள்ளன. அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு ஆளான போலீசாரும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்குச் சாவடி அலுவலர்கள் அச்சம் காரணமாக அக்கிரமங்களைத் தடுக்க முடியாமல் போனார்கள். சில கொடுமைகள் நடந்தேறின.

ஜனநாயக தேசத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் தேர்தல்களை சரிவர நடத்த இயலாமல் போவது வருத்தத்திற்குரியது. பல தொகுதிகளில் வாக்காளர்களின் பெயர்களே காணாமல் போயின. தமக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அதிமுள்ள இடங்களை முன்பாகவே கணித்து, அவர்களின் பெயர்களை ஓட்டர் லிஸ்ட்லிருந்து நீக்கிவிட்ட செயல்களும் நடந்தேறின.

இனி, கள்ள ஓட்டுகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மத வெறியர்கள் திட்டமிட்டு திருட்டு அடையாள அட்டைகளைத் தயாரித்து இந்தியரல்லாதவருக்கும் அக்கிரமமாக இந்தியாவுக்குள் நுழைந்தவருக்கும் பாதுகாப்பு அளித்து அவர்களுக்கு வாக்குரிமை அளித்தார்கள்.

பலர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வாக்களிக்க வராமல் போவதால்தான் வாக்குப்பதிவு குறைந்தது என்று இத்தனை காலம் நினைத்து வந்தோம். ஆனால் பலர் ஓட்டுப் போடுவதற்கு சென்ற போது அவர்களின் பெயர்கள் ஓட்டர் லிஸ்டில் இல்லாமல் போனதால்தான் ஓட்டு சதவிதம் குறைந்தது என்ற விஷயம் தெளிவாகப் புரிகிறது.

இப்படிப்பட்ட அக்கிரமங்கள, கொடுமைகள், வாக்காளர் பெயர்கள் காணாமல் போவது போன்றவை ஹைதராபாத், கோயம்பத்தூர், மேற்கு வங்காளம் முதாலான பல இடங்களில் நடந்ததாக அதிகாரப் பூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன.

தேச முன்னேற்றம், பாதுகாப்பு, தேச நலன் போன்றவற்றுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து விட்டு, ஓட்டுக்காக மதவாதிகளை திருப்திப்படுத்துவதே நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட கட்சிகள், மத வெறியைத் தூண்டுவதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக, “குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவருக்கே தேச வளத்தில் முதன்மை உரிமை ஏற்படுத்துவோம் என்றும் ரிசர்வேஷன்களை அவர்களுக்கு மட்டுமே ஒதுக்குவோம்” என்றும் அறிவிக்கின்றன.

உண்மையில் கடந்த பத்தாண்டுகளாக பாரத தேசத்தின் பன்முக வளர்ச்க்கு முயற்சித்து வருபவர்களின் மேல் மதவாதம் என்று அபாண்டத்தைத்தைச் சுமத்தித் தம்முடைய குதர்க்கமான மத தத்துவத்தை செக்யூரிலசம் என்று ஏமாற்றி வருவது எதிர்க்கட்சிகளின் வியூகமாக உள்ளது. தேசத்தைத் துண்டாக்குவோம் என்று முழங்கியவர்களைக் கட்சித் தலைவர்களாக்கி டிக்கெட் கொடுத்து தேர்தலில் நிற்க வைக்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஜாதிக் கணக்கெடுப்பு, மத முக்கியத்துவம் போன்றவையே தம் வழிமுறை என்று அறிவித்து வருகிறார்கள்.

தேசம் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும், பின்தங்கி இருந்தாலும், துண்டு துண்டானாலும் அவர்களுக்கு மறுப்பேதும் இல்லை. எங்கள் மதம் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும், எங்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் போதும் என்ற கூவும் கும்பல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

வியாபாரத்திற்காகவும் வேலைக்காகவும் பிற தேசங்களில் வசிக்கும் தம் மதத்தைச் சேர்ந்த இந்தியர்களை சொந்தச் செலவில் வரவழைத்து அவர்களைக் கொண்டு தம் மதத்திற்கு அனுகூலமாக ஓட்டளிக்கக் வைக்கிறார்கள்.

அத்தகைய விடாமுயற்சி ஹிந்துக்களுக்கு இல்லை. அதுமட்டுமில்லை. எண்ணற்ற ஹிந்துக்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. சில இடங்களில் ஹிந்து வாக்காளர்களை அச்சுறுத்தி ஓட்டளிக்கக் விடாமல் தடுத்தார்கள்.

இப்படிப்பட்ட விபரீதங்களுக்கு, வெளிநாட்டு வியாபாரிகளும் பாரத தேசத்தின் ஆதிக்கத்தை சகிக்க இயலாத வெளிநாட்டு ஆட்சியாளர்களும் மத நிலையங்களும் முழுஅளவில் உதவி புரிகின்றன.

நம் தேசத் தேர்தல்களின் மேல் உலக நாடுகளின் பார்வை மையம் கொண்டுள்ளது. பாரத நாட்டு முன்னேற்றத்திற்கே தம்மை அர்ப்பணித்திருக்கும் ஆளும் கட்சியின் ஆட்சி முறையைத் தவறாக விமர்சிக்கும் ‘ஒட்டுப்போட்ட’ கட்சிகளும் அவர்களுக்கு ஒத்தூதும் ஊடகங்களும் பொய்ப் பிரசாரம் செய்வதற்கும் பின் வாங்கவில்லை.

என்ன செய்ய வேண்டும்?

உலக அளவில் பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடக்கும் வழிகளை ஆராய்ந்து பார்ப்பதோ, தகுந்த மாற்றங்களைக் கொண்டுவருவதோ இந்திய தேசத்தில் முழமையான அளவில் நடப்பது இல்லை. உலகில் பல நாடுகளில் 92 முதல் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு நடக்கையில் சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அறுபது சதவிகிதத்திலேயே உள்ளோம். அதிலும் நேர்மையாக ஒட்டளிக்கும் வாய்ப்பு பல வாக்காளர்களுக்குக் கிடைப்பதில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு வாக்காளர் தம் ஓட்டுரிமையை இழக்காதபடி பல வழிகளை ஏற்படுத்த முடியும். ஆனால் அந்த வழிமுறைகளை எதனால் கடைப்பிடிக்க இயலாமல் இருக்கிறோம்? வங்கி விவகாரங்கள் போன்ற முக்கியமான வழிமுறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது தேர்தல் வழிமுறைகளில் அவற்றை ஏன் எடுத்து வரவில்லை?

சிலர் தேர்தல் தினத்தன்று கட்டாயம் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி வந்தால் ஒட்டு போட முடியாமல் போகிறார்கள். தொலைவான இடங்களுக்குச் சென்றவர்கள் தகுந்த அடையாள அட்டைகளைக் காட்டி அங்கிருந்தபடியே வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த இயலாதா? நூற்றுக்கு நூறு சரியான வாக்குப் பதிவு நடக்கும்படி தேர்தல் அமைப்பின் வழிமுறையைத் திருத்துவது சாத்தியம் இல்லையா? உண்மையான வாக்காளர்களின் பங்களிப்பு எப்போது கிடைக்கும்?

எது எப்படியானாலும் வரப் போகும் தேர்தல் முடிவுகள் தேசத்திற்கும் தர்மத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று பகவானை பிரார்த்திப்போம்.

(தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ்,
ஜூன், 2024)

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரி மாணவிகளுக்கு இலக்கமுறை கல்வியறிவு பயிற்சி!

courtallam collegemeeting - 2026
#image_title

குற்றாலம், ஶ்ரீ பராசக்தி ‌‍‍மகளிர் கல்லூரி,மகளிர் பயில்வு மையம் மற்றும் தென்காசி மாவட்ட சமுகநலத்துறை பெண்கள் அதிகாரம் அளிக்கும் மையம் ஆகியவை இணைந்து இலக்கமுறை கல்வியறிவு பயிற்சி பராசக்தி கல்லூரியில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நாகேஸ்வரி தலைமை தாங்கினார். விஜிலா நேசமணி அனைவரையும் வரவேற்று பேசினார். இலக்கமுறை கல்வியறிவு பயிற்சியாளர் உதயாவேனி தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த பயிற்சி அளித்தார்.

மகளிருக்கான ஒரு நிறுத்த மைய வழக்கு பணியாளர் முருகேஸ்வரி மகளிருக்கான அவசர உதவி அமைப்பு மற்றும் பாதுகாப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாட்டினை நுகர்வது குறித்து எடுத்துரைத்தார்.

நிதி கல்வியறிவு நிபுணர் சுபாஷினி மகளிர் தன்னிறைவுடன் இருக்கவேண்டும், கண்டிப்பாக உயர்கல்வி ஒவ்வொரு மகளிரும் பெறவேண்டும் என்பது குறித்து உரையாற்றினார். முடிவில் இளங்கலை மூன்றாமாண்டு விலங்கியல் துறை மாணவி சிவசத்யா நன்றி கூறினார்.

இதான் சீனா ஸ்டைல்! வூஹான் சம்பவம் பற்றி வீடியோ போட்ட பெண் பத்திரிகையாளர்… 4 வருடங்கள் கழிந்து…? 

zhang zhan released after four years - 2026
#image_title

வூஹானில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் COVID-19 என்ற உருவாக்கப்பட்ட வைரஸ் வெடித்துப் பரவியதில், சைனா குறித்து புகார் தெரிவித்து  வெளியுலகுக்கு சொன்னது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைதாகி சிறையில் இருந்த ஜாங் ஜான் எனும் பெண் பத்திரிகையாளர், நான்கு ஆண்டுகளுக்குப் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் வெளியிட்ட வீடியோ பதிவின்படி, தண்டனை முடிந்து வெளியான எட்டு நாட்களுக்குப் பிறகு வீடியோ மூலம் தகவல் சொல்வதாக அவர் அதில் தெரிவித்திருந்தார். 

சீனாவில் பதிவு செய்யப்படும் அரசியல் வழக்குகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் தெளிவில்லாது வரையறுக்கப்பட்ட குற்றச்சாட்டாக, “சண்டைகளைத் தூண்டிவிட்டு, பிரச்சனையைத் தூண்டிய” குற்றச்சாட்டின் பேரில், ஜாங்கிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது விடுதலையை எதிர்பார்த்து பல்வேறு போராட்டங்கள் புதுவில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அவர் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். 

ஆனாலும், அவர் விடுதலையான நாளில், அவரது முன்னாள் வழக்கறிஞர்கள் அவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ அணுக முடியவில்லை. அவர் விடுவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, ஷாங்காய் போலீசார், அந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அவரது முன்னாள் வழக்கறிஞர்களைப் பார்வையிட்டு விசாரித்துள்ளனர்.

வெளியான ஒரு சிறிய வீடியோவில், ஜாங் ஸங் தனது தண்டனையை முடித்த நாளான மே 13 அன்று தனது சகோதரர் ஜாங் ஜூவின் வீட்டிற்கு காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார். மேலும், “அனைவருக்கும் அவர்களின் உதவி மற்றும் அக்கறைக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் மெல்லிய குரலில் சொன்னார். இங்கிலாந்தில்  ‘ஃப்ரீ ஜாங் ஜான்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கிய மற்றும் ஜாங் ஸங்கின் முன்னாள் வழக்கறிஞர்களில் ஒருவருடன் தொடர்புடைய வெளிநாட்டு ஆர்வலர் ஜேன் வாங் இந்த வீடியோவை வெளியிட்டார்.

“அவரது பெற்றோரும் சகோதரரும் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதையும், ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்க வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்ததையும் நான் புரிந்துகொள்கிறேன். நண்பர்களின் அழைப்புகளுக்கும் பதில்கள் இல்லாமல் போய்விட்டது… இவை மிகவும் கவலையளிக்கும் அறிகுறிகள்,” என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், ஜாங்கிற்கு இன்னும் வரையறுக்கப்பட்ட சுதந்திரம் இருப்பதாக வாங் கூறியுள்ளார். ஜாங் இனி சிறையில் இல்லையென்றாலும், காவல்துறையினரால் மேலும் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவார் என்று அவர்கள் பெரிதும் கவலையை வெளிப்படுத்தினர். ஜாங் ஸங்கின் நிலை குறித்த கவலையுடன் கூடிய அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறையும் வெளியிட்டது.

எல்லைகளற்ற நிருபர்கள் (RSF), ஜாங்கிற்கு 2021 இல் தனது பத்திரிகை சுதந்திர விருதை வழங்கியது, “முன்னதாக, அவர் தண்டனை முடிந்து வெளியான நாளும் கடந்த நிலையில், திங்கட்கிழமை அவரது நிபந்தனையற்ற விடுதலையை உறுதி செய்ய சர்வதேச சமூகம் அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று சமூக தளமான X வெள்ளிக்கிழமை ஒரு இடுகையில் அழைப்பு விடுத்தது.

ஷாங்காயின் பெண்கள் சிறையில் ஜாங் ஸங் அடைக்கப்பட்டிருந்த போது, ​​அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார், 2021 இல் ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜாங் ஸங்கின் குடும்பத்தினர், அவருடன் அடிக்கடி தொலைபேசியில் மட்டுமே பேச முடியும், அவர் சிறையில் இருந்தபோது போலீஸாரின் அழுத்தத்தை எதிர்கொண்டார், மேலும் அவரது பெற்றோர் செய்திகளைப் பேச மறுத்துவிட்டனர். 

தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், பிப்ரவரி 2020 இல் சீன அரசு அதைக் கட்டுப்படுத்திய பின்னர், மத்திய சீன நகரமான வூஹானுக்குச் சென்ற ஒரு சில பத்திரிகையாளர்களில் ஜாங்ஸங்கும் ஒருவர். கொரோனா வைரஸ் நாவலைப் பற்றிய அச்சம் அதிகரித்ததால், பொது வாழ்க்கையை ஆவணப்படுத்த அவர் நகரம் முழுவதும் நடந்தார். 

தொற்றுநோயின் ஆரம்ப நாட்களை ஆவணப் படுத்தியதற்காக பலர் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்தனர். இதில் ஃபாங் பின் உட்பட சிலர், கொரோனா  வெடிப்பின் போது நெரிசலான மருத்துவமனைகள், மற்றும் கிடத்தப்பட்ட உடல்களின் வீடியோக்களை வெளியிட்டதால், ஃபாங்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஏப்ரல் 2023 இல் விடுவிக்கப்பட்டார்.

மற்றொரு பத்திரிகையாளரான சென் கியுஷி பிப்ரவரி 2020 இல் வூஹானில் படப்பிடிப்பின் போது காணாமல் போனார். செப்டம்பரில் 2021 ஆம் ஆண்டு தனது நண்பரின் யுடியூப் நேரலையில் சென் மீண்டும் தோன்றினார், அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் அவர் காணாமல் போனது குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை. 

சீனாவில் கொரோனா வைரஸ் விவகாரம் இப்போதும் ஒரு முக்கியமான விஷயமாகவே உள்ளது. மே முதல் வாரத்தில், கோவிட்-19 வைரஸின் வரிசையை முதன்முதலில் வெளியிட்ட சீன விஞ்ஞானி, பல ஆண்டுகளாக பதவி இறக்கம் மற்றும் பின்னடைவுகளைச் சந்தித்தார். அதிகாரிகள் அவரை தனது ஆய்வகத்துக்குச் செல்வதைத் தடை செய்தனர். அதை எதிர்த்துப் போராடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். 

பிப்ரவரி 2020 தொடக்கத்தில், வூஹான் பூட்டப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஜாங் ஷாங்காயிலிருந்து மத்திய சீன நகரத்திற்கு சுமார் 400 மைல்கள் பயணம் செய்து, வைரஸ் பரவுவதைப் பற்றியும் அதைத் தடுக்கும் முயற்சிகள் பற்றியும் தெரிவித்தார்.  அரசு அதிகாரிகள் சீன ஊடகங்களின் தணிக்கையை கடுமையாக்கியது போலவே தனியார் சமூக ஊடகங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தினர்.

முன்னதாக, ஜங் ஸங் கடந்த 2020ல் மூன்று மாதங்களுக்கும் மேலாக, வூஹானில் ‘லாக் டவுண்’ வாழ்க்கையின் சிரமங்கள் மற்றும் அதன் நகரவாசிகள் எதிர்கொள்ளும் கடுமையான யதார்த்த வாழ்க்கை, நிரம்பி வழியும் மருத்துவமனைகள் முதல் வெற்றுக் கடைகள் வரை, உலகம் முழுவதும் வைரஸ் பரவுவதற்குத் தயாராக உள்ளது என்பது குறித்த, அவரது அவதானிப்புகள், கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை WeChat, Twitter மற்றும் YouTube இல் பதிவிட்டுள்ளார். ஆனால் இவற்றில் பிந்தைய இரண்டு சமூக ஊடகமும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

“எல்லாமே மறைக்கப்பட்டதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. இந்த நாடு இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினை இதுதான். எங்களிடமிருந்து வரும் எந்தவொரு எதிர்க் கருத்துகளும் ‘வதந்திகள்’ என்று நிராகரிக்கப்படலாம், ”என்று அவர் வூஹானுக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு வீடியோவில் முகமூடி அணிந்தபடி சொன்னார்.

“நம் சொந்தக் குரல்கள் கூட நம் கட்டுப்பாட்டில் இல்லை. தொற்றுநோய் தடுப்பு என்ற பெயரில் நம்மைச் சிறையில் அடைத்து, நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்… உண்மையைப் பெற முடியாவிட்டால், சத்தியத்தின் மீதான அவர்களின் ஏகபோகத்தை நம்மால் உடைக்க முடியாவிட்டால், உலகம் நமக்கு அர்த்தமற்றதாகிவிடும்.” என்று தனது கருத்தை அவர் பகிரங்கப் படுத்தினார்.

இந்நிலையில் 2020 மே மாதத்தின் நடுப்பகுதியில் அவரது சமூகத் தள இடுகைகள் திடீரென நிறுத்தப்பட்டன. பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் ஷாங்காய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

சீனாவில் நீண்டகாலமாக பணியாற்றிய மனித உரிமை வழக்கறிஞர்கள், ஜாங் ஸங் சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிகாரிகளின் நெருக்கமான கண்காணிப்பில் வாழ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். “ஜாங் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவள் சுதந்திரமாக இருப்பாள் என்று அர்த்தம் இல்லை” என்று ப்ரீடம் ஹவுஸ் என்ற வக்கீல் குழுவின் சீனாவின் ஆராய்ச்சி இயக்குனர் யாக்கியு வாங் கூறினார்.

“சீன அரசின் பதிவேடுகளில் ‘கடந்தகால பதிவுகள்’ ஏதேனும் அறிகுறியாக இருந்தாலும், அந்த நபர் அதிகாரிகளின் தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பை எதிர்கொள்வார். ஜாங் ஜானின் கடந்தகால நடவடிக்கைகள் ஏதேனும், அறிகுறியாக இருந்தால், அவரை அமைதிப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து போராடுவார் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

சர்வதேச மன்னிப்புச் சபையின் சீன இயக்குநர் சாரா ப்ரூக்ஸ், ஜாங் ஸங்கின் பயணம் அல்லது உறவினர்கள் மற்றும் பிறருடன், குறிப்பாக சீனாவுக்கு வெளியே உள்ளவர்களுடன் அவர்  தொடர்பு கொள்வது கடுமையாக கட்டுப்படுத்தப்படலாம் என்று அவர் கவலை தெரிவித்தார்.

“ஜாங் ஸங் முதலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடாது; இப்போது, ​​​​அவளுடைய நேரத்தைச் சிறையில் செலவழித்ததால், அவளுடனும் அவளுடைய குடும்பத்துடனும் ஒரு பாதுகாப்பான மறு இணைவு மற்றும் ஆரோக்கியத்திற்கான பாதை, அவளுடைய முக்கியமான மனித உரிமைகள் பணியில் தொடர்ந்து ஈடுபாடு, இவை குறித்து எங்களுக்கு நம்பிக்கை உள்ளது,” என்று அவர் கூறினார்.

“ஜாங் ஸங்கை சீன அரசாங்கம் சிறையில் அடைத்தது அவரது மனித உரிமைகள் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். மேலும் அவரது விடுதலை ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்க வேண்டும்.”  என்று அவர் தெரிவித்தார்.

சிறையில் இருந்தபோது ஜாங் ஸங்கின் மோசமான உடல்நிலை காரணமாக அவர் விடுவிக்கப்பட்டவுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பது குறித்து ஆதரவாளர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் கவலை கொண்டுள்ளன. 40 வயதான அவர் தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டில், ஜாங்கின் தாய், தனது மகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், வலிமை இல்லாததால் தலையை நிமிர்த்த முடியவில்லை என்றும், மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும் கூறினார். 

ஓர் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, ​​அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஜாங் கட்டையால் கட்டப்பட்டு வலுக்கட்டாயமாக உணவளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியது. அவர்கள் அளிக்கும் சிகிச்சையானது சித்திரவதைக்கு சமம் என்று அந்தக் குழு கூறியது.

சிவபெருமானின் ஆசிகள் நிரம்பப் பெற்ற மோதிஜி

modi in times now interview - 2026
#image_title

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

பரமாத்மா செய்ய விரும்பற செயல்களை என் வாயிலாச் செய்யறான்னே நான் நினைக்கிறேன்.    அவன் என் மூலம் செய்பவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  

இந்த விஷயங்கள் எல்லாத்திலயும் பார்க்கும் போது பிரும்மாண்டத்தில நாம தலைவணங்கற ரொம்ப சக்திவாய்ந்தவங்க எல்லாம் அவங்க பற்றற்றவங்களாவே காணப்படுறாங்க.   முழுமையா பற்றே இல்லாதவங்க.  

அவங்க உடல்ல ஆடைகள் இல்லை.  அவங்க மேல அலங்கார அணிகலன்கள் இல்லை.   மாளிகை இல்லை.   ஒண்ணுமே இல்லை.   அவங்க மலைகள்ல சுற்றித் திரியறாங்க, பற்றற்ற வாழ்க்கை.  

சிவபெருமானுடைய இந்த பற்றற்ற தன்மை தான், எனக்கு ஒருவேளை, ஆணையிட்டிருக்கணும், நீ பற்றற்றவனா வாழணும்னு.   நானும் கூட, அமைப்புகளுக்கு உட்பட்டு எந்த இடமா இருந்தாலும்,   என்னுடைய உடல் என்ன வகையா வேணா இருக்கலாம், ஆனா நான் மனதாலும் ஆன்மாவாலும் பற்றற்ற நிலையில வாழறேன்.   இந்த பற்றற்ற நிலையில வாழ எனக்கு சிவபெருமான் தான் ஆணையிட்டிருக்கிறான்னு நான் நினைக்கறேன்.

T20 உலகக் கோப்பை போட்டி: ஆரம்பிக்கலாங்களா?

t20 worldcup - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்         

T20 ஆண்கள் கிரிக்கட் உலகக் கோப்பை 01.06.2024 முதல் 29.06.2024 வட அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கவுள்ளது. அந்தப் பகுதியின் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு வெளியில் அமெரிக்காவில் முதன் முதலில் நடைபெறுகின்ற உலகக் கோப்பைப் போட்டி இது. இங்கிலாந்து நடப்புச் சாம்பியனாகும். சென்ற முறை நடந்த போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இங்கிலாந்து அந்தப் பட்டத்தைப் பெற்றது.

          இதுவரை 16 அணிகள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. இம்முறை 20 அணிகள் கலந்துகொள்கின்றன.  20 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் உள்ளன. குரூப் B பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய நாடுகள் உள்ளன. குரூப் C பிரிவில் நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், பாபுவா நியூகினியா, உகாண்டா ஆகிய நாடுகள் உள்ளன. குரூப் D பிரிவில், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் ஒன்றோடொன்று 01.06.2024 முதல் 19.06.2024 வரை லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு குரூப்பிலும் பட்டியலில் முதலிரண்டு அணிகள் சூப்பர் எட்டு பிரிவுக்குச் செல்லும்.

           சூப்பர் எட்டில் அணிகள் குரூப் 1 குரூப் 2 என இரண்டாக பிரிக்கப்படுகின்றன. குரூப் 1இல் A1, B2, C1, D2 அணிகள் இடம்பெறும். A2, B1, C2, D1 அணிகள் இடம்பெறும். இந்த இரண்டு குரூப்புகளிலும் முதலிரண்டு இடம் பெறும் அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லும். இங்கிருந்து ‘நாக் அவுட்’ போட்டிகள் தொடங்குகின்றன. இதில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

          இந்த டி20 ஆட்டங்களை பல்வேறு நாடுகளில் வெவ்வேறு ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கின்றன. இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் இணையத்திலும் ஒளிபரப்பு செய்கின்றன.

          இந்திய அணி அமெரிக்காவில் நடக்கும் லீக் சுற்று ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு ஏதுவாக பெரும்பாலும் காலையில் நடக்கின்றன. அந்த நேரத்தில் இந்தியாவில் இரவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் எல்லா போட்டியும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அமெரிக்க நேரப்படி மூன்று போட்டிகள் காலை 9.30 மணிக்கும், ப்ளோரிடா மாகாணத்தில் நடக்கும் ஒரு போட்டி மட்டும் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. ஆனால் இந்த போட்டியும் இந்திய நேரப்படி நாம் இரவு 8 மணிக்கு பார்க்கலாம். மேலும் இந்தப் போட்டிகளை டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஆன்லைனில் டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் பார்க்கலாம். இந்தியாவின் லீக் சுற்று ஆட்டங்கள் பின்வரும் நாட்களில், பின்வரும் மைதானங்களில் நடக்கின்றன:

(1) ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து நியூயார்க் மைதானம்

(2) ஜூன் 8ஆம் தேதி பாகிஸ்தான் நியூயார்க் மைதானம்

(3) ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா நியூயார்க் மைதானம்

(4) ஜூன் 15ஆம் தேதி கனடா ப்ளோரிடா மைதானம் 

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

modi in kanyakumari - 2026
#image_title

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார். இங்கே, இரு தினங்கள் தியானம் மேற்கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி, சனிக்கிழமை மாலை வரை அவர் அங்கே தியானம் மேற்கொள்கிறார்.

மக்களவைத் தேர்தலின் சூறாவளி பிரசாரத்தை முடித்துக் கொண்ட பின்னர், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார். இதன் ஒரு பகுதியாக, இன்று தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த அவர், புகழ்பெற்ற சக்தி பீடக் கோயிலான பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்றார். அங்கே சுவாமி விவேகானந்தர், பகவால் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி சந்நிகளில் வழிபட்டு, தனது தியானத்தை தொடங்கினார். இன்று தியானத்தை தொடங்கும் அவர் ஜூன் 1-ந்தேதி மாலை தான் தியானத்தை நிறைவு செய்கிறார். சுமார் 48 மணி நேரங்கள் தொடர்ந்து தியானத்தில் இருக்கவுள்ளார் பிரதமர் மோடி. இந்த இரு நாட்களும் உணவு ஏதும் ஏற்காமல், முழுமையான தியான நிலையில் இருப்பதாக தீர்மானித்துள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு நாட்டின் வட கோடியில் உள்ள இமயமலையின் கேதார்நாத் சென்று அங்கே குகைகளில் தியானம் மேற்கொண்டார். இப்போது நாட்டின் தென்கோடி முனையான கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், வழக்கம் போல் அரசியலில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான திமுக., ஆகியவை. ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்போது, மோடி தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும். இதனால் தியானத்தை தடைவிதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இது தேர்தல் நடத்தையில் வராது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, இன்று முதல் ஜூன் 1-ந்தேதி வரை மாலை வரை தியானம் மேற்கொண்டிருக்கிறார்.

பிரதமர் வருகையொட்டி கன்னியாகுமரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

IPL 2024: கோப்பையை தட்டித் தூக்கிய கோல்கத்தா!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல்-2024 இறுதி ஆட்டம் – சென்னை

கொல்கொத்தா vs ஹைதராபாத் – 26.05.2024

          இன்று ஐபிஎல்-2024இன் இறுதிப்போட்டிக்கான ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.

          ஹைதராபாத் அணியை (18.3 ஓவரில் 113, பேட் கம்மின்ஸ் 24, ஐடன் மர்க்ரம் 20, கிளாசன் 16, ராகுல் திரிபாதி 9, ஷபாஸ் அகமது 8, ரசல் 3/19, மிட்சல் ஸ்டார்க் 2/14, ஹர்ஷித் ராணா 2/24) கொல்கொத்தா அணி (10.3 ஓவரில் 114/2, ரஹ்மானுல்லா குர்பாஸ் 39, வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 52, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 6 ரன், சுனில் நரேன் 6 ரன்) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்), அபிஷேக் ஷர்மா (5 பந்துகளில் 2 ரன்), ராகுல் திரிபாதி (13 பந்துகளில் 9 ரன்) மிக மோசமான தொடக்கம் தந்தனர். அதற்குப் பின்னர் வந்த ஐடன் மர்க்ரம் (23 பந்துகளில் 20 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (10 பந்துகளில் 13 ரன்), கிளாசன் (17 பந்துகளில் 16 ரன்), ஷபாஸ் அகமது (7 பந்துகளில் 8 ரன்), அப்துல் சமது (4 பந்துகளில் 4 ரன்)  பாட் கம்மின்ஸ் (19 பந்துகளில் 24 ரன்), ஜெய்தேவ் உனக்தத் (4 ரன்) புவனேஷ் குமார் (றன் எடுக்கவில்லை, ஆட்டமிழக்கவில்லை) ஆகியோர் இன்று சரியாக ஆடவில்லை. இதனால் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 113 ரன் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோராகும்.

          114 ரன் அடித்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு இரண்டாவது ஓவர் இரண்டாவது பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது, அதிரடி பேட்டர் சுனில் நரேன் இரண்டு பந்துகளைச் சந்தித்திருந்த நிலையில் 6 ரன் கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பஆஸ் (32 பந்துகளில் 39 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) வெங்கடேஷ் ஐயர் உடன்  (26 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை 100 ரன்னுக்கு எடுத்துச்சென்றார். அவருக்குப்பின்னர் ஆட வந்த அணியின் தலைவர் ஷ்ரேயாச் ஐயர் மூன்று பந்துகளில் 6 ரன் அடித்து கொல்கொத்தா அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவி செய்தார்.

          இந்த வருட ஐபிஎல் ஆட்டங்களில் ஆறு முறை 200க்கும் மேல் ரன் எடுத்த சன்ரைசர்ஸ் அணி இன்று 113 ரன்னுக்கு ஆட்டமிழந்தது மிகவும் பரிதாபம்.

          கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். அதே அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் சுனில் நரேன் இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

IPL 2024: யாரு ஜெயிச்சாங்க தெரியுமா? அதான் எனக்கு முன்னாடியே தெரியுமே!

ipl 2024 - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டம்

ராஜஸ்தான் vs ஹைதராபாத் – 24.05.2024

இன்று இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. 

ஹைதராபாத் அணி (175/9, ஹெராவிஸ் ஹெட் 34, ஷபாஸ் அகமது 18, அபிஷேக் ஷர்மா 12, போல்ட் 3/45, ஆவேஷ் கான் 3/27, சந்தீப் ஷர்மா 2/25, ஹென்றிச் கிளாசன் 50, ராகுல் திரிபாதி 37, ட்) ராஜஸ்தான் அணியை (139/7, துருவ் ஜுரல் 56*, யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 42, டாம் கோலர் 10, சஞ்சு சாம்சன் 10, ஷாபாஸ் அகமது 3/24, அபிஷேக் ஷர்மா 2/24) 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (28 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் அபிஷேக் ஷர்மா (5 பந்துகளில் 12 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (15 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) அதிரடி ஆட்டம் ஆடினார். அதற்குப் பின்னர் வந்த ஐடன் மர்க்ரம் (1 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (5 ரன்), அப்துல் சமது (பூஜ்யம்  ரன்), பாட் கம்மின்ஸ் (ஆட்டமிழக்காமல் 5 ரன்), ஜெய்தேவ் உனக்தத் (5 ரன்) ஆகியோர் இன்று சரியாக ஆடவில்லை. இடையில் ஹென்றிச் கிளாசன் (34 பந்துகளில் 50 ரன், 4 சிக்சர்) ஷபாஸ் அகமது (18 பந்துகளில் 18 ரன், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 175 ரன் என்ற நிலைக்கு எடுத்துச் சென்றனர். 

176 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யசஷ்வீ ஜெய்ஸ்வால் (28 பந்துகளில் 42 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் டாம் கோலர் காட்மோர் (16 பந்துகளில் 10 ரன், 1 ஃபோர்) சுமாரான தொடக்கம் தந்தனர்.  இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த சஞ்சு சாம்சன் (11 பந்துகளில் 10 ரன், 1 ஃபோர்) மற்றும் ரியன் பராக் (10 பந்துகளில் 6 ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. இதன் பின்னர் ஆடவந்த ஷிம்ரன் ஹெட்மயர் (4 ரன்), அஷ்வின் (பூஜ்யம் ரன்) ரொவ்மன் போவல் (6 ரன்) ஆகியோர் இன்று சொற்ப ரன் களுக்கு ஆட்டமிழந்தனர். துருவ் ஜுரல் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன், 4 சிக்சர்) வெற்றி பெற இன்னமும் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தந்துகொண்டிருந்தார். இருப்பினும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கட் இழப்பிற்கு 139 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. தமிழக வீரர் நடராஜன் கடைசி இரண்டு ஓவர்களை பிரமாதமாக வீசினார். ஆனால் துருவ் ஜுரலுக்கு அவர் வீசிய ஒரு பந்து தொண்டையில் பட்டது. இதனை அவர் தவிர்த்திருக்கலாம். சுழல்பந்து வீச்சாளர்கள் ஷபாஸ் அகமதும் அபிஷேக் ஷர்மாவும் சிறப்பாக பந்து வீசினார்கள். சன்ரைசர்ஸ் அணிக்காக 15 பந்துகளில் 37 ரன் எடுத்த ராகுல் திரிபாதி போல ராஜஸ்தான் அணியில் ஒருவர் கூட ஆடாததே தோல்விக்குக் காரணமானது. 

இனி வருகின்ற 26ஆம் தேதி சென்னையில் இறுதிப்போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடும். சன்ரைசர்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷாபாஸ் அகமது தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். 

மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா!

IMG 20240523 WA0024 - 2026
#image_title

மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா::

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பால்குடம் மற்றும் தேர், பறவை காவடி ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தி வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் சாமி பல்வேறு வாகனங்களில் காலை , மாலை இரு வேளைகளிலும் வீதி உலா வருவார்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்
கடனாக பால்குடம் மற்றும் இளநீர் காவடி, தேர் , பறவை காவடி, அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வைகை ஆறு சிந்தாமணி, அவனியாபுரம், வில்லாபுரம், போன்ற பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி
கடனை செலுத்தினர்.

அதிகாலை 4. மணிக்கு மதுரையில் பல்வேறு பகுதிகளிலிருந்து, பால்க் குடத்துடன், திருப்பரங்
குன்றம் முருகன் கோயில் வரை நடந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், அருள்மிகு சித்திவிநாயகர் கோயில், சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், வைகாசி விசாகத்தையொட்டி, முருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகத்தை செய்யப்பட்டது.
இதையடுத்து, முருகன் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழஙாகப்பட்டது.
இதறாகான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பெண்கள் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.

வைகாசி விசாக விழா.

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், வைகாசி விசாகத்தையொட்டி, முருகனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளை, குப்பு லால் பட்டர் செய்தார்.

கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் |அலங்காநல்லூர் அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கோவிலில் கருவறையில் உள்ள முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் மலர் அலங்காரமும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தெத்தூர் கொழிஞ்சிபட்டி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்..