MP டிக்கெட்டா? IPL டிக்கெட்டா?
வேட்பாளர் டிக்கெட் கிடைத்துவிடும் ஆனால IPL டிக்கெட் கிடைக்காது
1000 ரூபாய் டிக்கெட் 10000 ரூபாய்.
திரையரங்கில் 50 ரூபாய் டிக்கெட் பிளாக்கில் விற்றவனை அழிக்கிறேன் என்று சொல்லி, மெகா மால் கட்டியதில், குறைந்தபட்சம் டிக்கெட் விலை ரூ. 200 ஆனது.
ஆன்லைன் மட்டுமே டிக்கெட் விற்பனை என்று கூறி IPL டிக்கெட் குறைந்த பட்சம் 11,000 ரூபாய்க்கு விற்பவன் பாமரனா இல்லை படித்தவனா?
இத்தனை விலை கொடுத்து டிக்கெட் வாங்கி குடிக்க தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கி குடித்து வருபவன் படித்தவனா? பைத்தியமா?
பத்தாயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கும் ஏழைக்கு இலவச பஸ் பயணம் கொடுக்கும் அரசு? போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்குகிறதா?
ஆயிரக் கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்குபவனுக்கு பாவம் பஸ் டிக்கெட் வாங்க பணமில்லை!
பல மெகாபைட் வேகம் உள்ளவன் மட்டும் டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்றால் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது?
புக்கிங் தொடங்கிய இரண்டு நிமிடத்தில் முடிவடைகிறது என்றால் 36,000 சீட் யார் கையில்?
பார்கோட் , டெக்னாலஜி எல்லாம் ஏமாற்று வேலையா?
அரசு நடவடிக்கை எடுக்க காத்திருக்காமல் நாம் புறக்ககணிக்க வேண்டும்…!
விளையாட்டு வீரர் லஞ்சம பெற்றால் வஞ்சிக்கும் நாம் விளையாட்டை நடத்துபவர்கள் இப்படி விளையாடினால் என்ன தண்டணை?
எதிலும் நேர்மையில்லாத இந்த IPL தேவையா?
- கணேஷ் கிருஷ்ணன்