சோழவந்தான் அருகே, மன்னாடி மங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமம் கல்லாங்காடு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ,கடந்த 22 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு முதல் கால யாக வேள்வி, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, இரவு 9 மணி அளவில் கணபதி ஹோமம், நடைபெற்று 21 பந்தி தெய்வங்களின் ஹோமம் மற்றும் பரிகார தேவதை ஹோமங்கள் மகாபூர்ணாகதி நடைபெற்று மகா தீபாராதனையுடன் முதல் காலையாக பூஜை நிறைவு பெற்றது. தொடர்ந்து , இன்று காலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை தொடங்கி, கோமாதா பூஜை, கன்னியா பூஜை, பூஜையுடன், முத்தையா சாமிக்கு 21 பந்தி தெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் விசேஷ மூலிகை ஹோமங்கள் பூஜையுடன் மகாபூர்ணாகதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, காலை 9 . 35 மணிக்கு முத்தையா சாமி மாரியம்மன் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சோழவந்தான் தொழிலதிபர் பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் எம். வி. எம். மணி முத்தையா, சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், 8-வது வார்டு கவுன்சிலர் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் எம் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை, எம். வி.எம். குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். கும் பாபிஷேகத்திற்கான பூஜைகள் அனைத்தும் சோழவந்தான் ஸ்ரீ வே வரதராஜ் பன்டிட்ஜி தலைமையில் அர்ச்சகர்கள், யாக வேள்வி மற்றும் பூஜைகள் செய்தனர்.
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா மகாபாரதத்தில் வரக்கூடிய கதைக்கேற்ப பாத்திரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில் தெளித்தனர்.பின்னர் பூ வளர்த்தனர்.
பகல் 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது.அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் மருதுபாண்டியன், சங்கோட்டை கிராம நல சங்க தலைவர் வக்கீல் சிவகுமார் ,செயல் தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் சேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டைகிராமம்,முதலியார்கோட்டை கிராமம்,ரயில்வேபீடர்ரோடு வழியாக மார்க்கெட் ரோடு,நான்குரதவீதி பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும்தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாத சிவன் ஆலயத்தில், நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது . இதை ஒட்டி, இக்கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள சக்கரத் தாழ்வாருக்கு, மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகத்தின் வழிபாடு நடைபெற்றது.
இதை அடுத்து நரசிம்மருக்கு அலங்காரமாகி அர்ச்சனைகள் தீபாராதனை நடைபெற்றது. இதை அடுத்து, கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பெண்கள் நரசிம்மருக்கு துளசி மாலை பானகம் படைத்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தொழில் அதிபர் எம். பி .எம் .மணி கவுன்சிலர் வளிமயில் மற்றும் கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல, மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சௌபாக்கிய ஆலயத்தில், நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
எலிமினேட்டர் ஆட்டம் பெங்களூரு vs ராஜஸ்தான் – 22.05.2024
இன்று முதல் இறுதிப்போட்டிக்கான தகுதி ஆட்டம் அகமதபாத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
பெங்களூரு அணியை (172/8, ரஜத் படிதர் 34, விராட் கோலி 33, மஹிபால் லோமர் 32, காமரூன் கிரீன் 27, டியு பிளேசிஸ் 17, ஆவேஷ் கான் 3/44, அஷ்வின் 2/19) ராஜஸ்தான் அணி (யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 41, டாம் கோலர் 20, சஞ்சு சாம்சன் 11) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (24 பந்துகளில் 3 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் டியு பிளேசிஸ் (14 பந்துகளில் 17 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய காமரூன் கிரீன் (21 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) கோலிக்கு கம்பனி கொடுத்தார். ஆனால் கிளன் மேக்ஸ்வெல் (பூஜ்யம் ரன்), தினேஷ் கார்த்திக் (11 ரன்), ஸ்வப்னில் சிங் (ஆட்டமிழக்காமல் 9 ரன்), கரண் ஷர்மா (5 ரன்) ஆகியோர்இன்று விரைவில் ஆட்டமிழந்தனர்.
ஆயினும் ரஜத் படிதர் (22பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் மஹிபால் லோமர் (17 பந்துகளில் 32 ரன்)இருவரும் அணிக்கு ரன் சேர்க்க முயன்றனர். இருப்பினும் அஷ்வினின் அருமையான சுழப் பந்துவீச்சால் பெங்களூரு அணி அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது.
173 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யசஷ்வீ ஜெய்ஸ்வால் (30 பந்துகளில் 45 ரன், 8 ஃபோர்) மற்றும் டாம் கோலர் (15 பந்துகளில் 20 ரன், 4 ஃபோர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த சஞ்சு சாம்சன் (13 பந்துகளில் 17 ரன், 1 சிக்சர்) மற்றும் ரியன் பராக் (26 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து ஆடி, வேகமாக ரன் சேர்த்தனர். இதன் பின்னர் ஆடவந்த துருவ் ஜுரல் (8 ரன்) இன்று ஜொலிக்கவில்லை.
ஆயினும் ஷிம்ரன் ஹெட்மயர் (14 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ரொவ்மன் போவல் (8 பந்துகளில் 16 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியை 19 ஓவர்களில் தேவையான் ரன் (174/6) எடுத்து, அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
ராஜஸ்தான் அணி வெற்றிபெற்ற போதிலும் இடையில் தடுமாறினர். சஞ்சு சாம்சன் தினேஷ் கார்த்திக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டபோதும் துருவ் ஜுரல் ரன் அவுட் ஆனபோது அந்த தடுமாற்றம் தெரிந்தது.
இருந்தாலும் 19ஆவது ஓவரில் ரொவ்மன் போவல் முதலிரண்டு பந்துகளில் அடித்த இரண்டு ஃபோர்களும், கடைசி பந்தில் அடித்த ஒரு சிக்சரும் வெற்றியை 19ஆவது முடிவிலேயே உறுதி செய்தன.
ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி இரண்டாவது இறுதி தகுதி ஆட்டத்தில் நுழைகிறது. 24.05.2024 அன்று சென்னையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் கொல்கொத்தா அணி 26.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.
முதல் அரையிறுதி ஆட்டம் கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ் – 21.05.2024
இன்று முதல் அரையிறுதி ஆட்டம் அகமதபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஹைதராபாத் அணியை (19.3 ஓவரில் 159, ராகுல் திரிபாதி 55, கிளாசன் 32, பாட் கம்மின்ஸ் 30, மிட்சல் ஸ்டார்க் 3/34, வருண் சக்ரவர்த்தி 2/26) கொல்கொத்தா அணி (13.4 ஓவரில் 164/2, ஷ்ரேயாஸ் ஐயர் 58, வெங்கடேஷ் ஐயர் 51, ரஹ்மானுல்லா குர்பாஸ் 23, சுனில் நரேன் 21) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன்), மற்றும் அபிஷேக் ஷர்மா (3 ரன்)அதிர்ச்சித் தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (35 பந்துகளில் 55 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) சற்று நிலைத்து ஆடினார். ஆனால் நிதீஷ் குமார் ரெட்டி (9 ரன்), ஷபாஸ் அகமது (பூஜ்யம் ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த கிளாசன் (21பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), அப்துல் சமது (16 ரன்) அணிக்கு ரன் சேர்க்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் ஆட்டம் கொல்கொத்தா அணியின் கைக்குள் வந்துவிட்டது. சன்வீர் சிங் (பூஜ்யம் ரன்), புவனேஷ் குமார் (பூஜ்யம் ரன்), விஜய்ஸ்கந்த் (7 ரன்) ஆகியோரால் குறைவான் ரன்னே எடுக்க முடிந்தது. எனினும் பேட் கம்மின்ஸ் (24 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அதிரடியால் ஹைதராபாத் அணி 19.3 ஓவரில் 159 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.
160 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (23 ரன்), மற்றும் சுனில் நரேன் (16 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) சிறப்பாக ஆடினார்கள்.
இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த வெங்கடேஷ் ஐயர் (28 பந்துகளில் 51 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (24 பந்துகளில் 58 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் இணைந்து ஆடி, வேகமாக ரன் சேர்த்து 13.4 ஓவரில் தேவையான் ரன் (164/2) எடுத்து, அந்த அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
கொல்கொத்தா அணியின் மிட்சல் ஸ்டார்க் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா அணி இறுதி ஆட்டத்தில் நுழையும் முதல் அணியாகிறது.
நாளை அகமதாபாத்தில் ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ஹைதராபாத் அணி 24.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.
கேள்வி– ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார் என்பது குற்றச்சாட்டு. நீங்கள் லவ் ஜிஹாத் பிரச்சனையை எழுப்பியிருக்கிறீர்கள்.
பதில்– பாருங்க லவ்ஜிஹாத், இந்த தேசத்துக்கு எதிரான, இந்த தேசத்தின் கலாச்சாரத்துக்கு எதிரான, ஒரு, சர்வதேச சூழ்ச்சி. இந்த சூழ்ச்சி, குறித்து நான் பேசலை. உத்திர பிரதேச உயர்நீதிமன்றம் 2006இலே, உத்திர பிரதேச அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை அளிச்சுது.
உத்திர பிரதேச மாநிலத்திலே, இந்துப் பெண்கள் ஏன் இத்தனை வேகமாக கடத்தப்படுகிறாங்கனு என்று கேட்டிச்சு? ஆனால் இது உத்திர பிரதேசத்தோடு நின்னு போயிடலை.
2009இலே, கேரள உயர்நீதிமன்றமும் இது தொடர்பா, அங்கிருக்குற அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை கொடுத்திச்சு அதாவது, நான்கு ஆண்டுகளிலே 5000த்திற்கும் மேற்பட்ட இந்துப் பெண்கள் கடத்தப்படுவது, மர்மமா இருக்கே இது என்ன?
கர்நாடக உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக அறிவுறுத்திச்சு, இது ஏன் சிஐடி புலனாய்வு செய்யப்படலை? திடீர்னு ஏன் இந்துப் பெண்கள் காணாம ….. போறாங்க கடத்தப்படறாங்க அவங்களுக்கு என்ன ஆகுது? இது வெறுமனே….. இரண்டு நபர்களுக்கு இடையேயான பரஸ்பர காதல்னா, பிரச்சனையே இல்லை, காதலிக்கட்டும்.
பரஸ்பர சம்மதத்தோட செஞ்சுக்கட்டும். ஆனா வஞ்சனை சூது காரணமா கூடாது, ஏமாற்றுனால இல்லை. ராஞ்சியில நடந்ததாகட்டும், மீரட்டுல நடந்ததாகட்டும், ஹரியாணாவுல நடந்ததாகட்டும்.
இந்த மாதிரியான கெட்ட நடவடிக்கையை, ஜிஹாத்ங்கற பெயரால இந்தியா மேல திணிக்கற முயற்சிகள் நடக்குது, அதை நாம எந்த வகையிலயும்….. ஏத்துக்கவே முடியாது.
கேள்வி – யோகிஜி, ஒரு இந்துப் பெண் முஸ்லிம் பையனைக் காதலிச்சா லவ் ஜிஹாத். ஆனா ஒரு முஸ்லிம் பெண் இந்துப் பையனை காதலிச்சா வாழ்கவாழ்கவா? இது ரெட்டை நிலைப்பாடு இல்லையா?
பதில் – இந்துப் பையனோடு முஸ்லிம் பெண் போனா தன்னோட சமூகப் பாதுகாப்புக்காகப் போகுறா. அதாவது எதற்கு போகுறான்னீங்கன்னா ஒரு, ஹிந்துப் பையன் ஒரு முஸ்லிம் பெண்ணை மணக்கும் போது அவன் ஒருவனுக்கு ஒருத்திங்கற வாக்கைக் கடைப்பிடிக்கிறான். அவளுக்கு சமூக பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை அவன் அளிக்கிறான்.
இஸ்லாம் இதுமாதிரியான உத்திரவாதத்தை அளிக்குதா? அளிக்காது. அங்கே, அவகிட்ட, அங்க…. நடக்கறதுக்குப் பின்னால ஒரு பெரிய சர்வதேச சூழ்ச்சி கும்பலே இருக்குங்க…. லவ்ஜிஹாத் பெயர்ல. இதுக்கு பேக்கேஜ் அறிவிக்கப்பட்டிருக்கு.
இந்துப் பெண்கள் கடத்தப்படணும், அவங்ககிட்ட, வலுக்கட்டாயமா, தவறா நடக்கறது, அவங்க வாழ்க்கையை நாசப்படுத்தறது, அதுக்குன்னு பல்வேறு பேக்கேஜ்கள் வெளியாயிருக்கு.
எல்லாம் ஏமாத்து வேலை…. ஏன் முதல்லயே உண்மையான பெயரை சொல்றதில்லை? உங்க சரியான பேரைச் சொல்லுங்க, ஏன் குட்டு பப்புன்னு எல்லாம்….. போலி பெயர்களால சமூகத்தை முட்டாளாக்கப் பார்க்கறீங்க? சரியான பெயரால வெளிப்படுத்திக்குங்க.
நமக்கு காதல் மேல ஆட்சேபணை இல்லை, ஆட்சேபணை என்னென்னா லவ்ஜிஹாத், தேசத்துக்கு எதிரான சர்வதேச சூழ்ச்சி. இதை நான் மட்டும் சொல்லலை, 2010ஆம் ஆண்டுல கேரளத்தோட கம்யூனிஸ்ட் முதலமைச்சர், கே எஸ் அச்சுதானந்தனும் கூட இதைச் சொல்லியிருக்காரு, அதாவது கேரளத்தில லவ் ஜிஹாத், கேரளத்தை ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக்கற சதியோட ஒரு பகுதின்னு சொல்லியிருக்காரு.
ஒரு கம்யூனிஸ்ட் முதலமைச்சர் இந்த விஷயத்தைச் சொல்றாரு. அப்ப நீங்க தவறா எடுத்துக்கறதில்லை. ஆனா நான் சொல்லும் போது, உங்களுக்குத் தவறா படுது. என்ன படுதுன்னா, கண்டிப்பா இது அலசி ஆய்வு செய்யப்பட வேண்டியது.
கேள்வி – ஏன் தவறா படுதுன்னா, காதலிக்கறவங்க மதம் ஒரு தடையா இருக்க முடியாதுன்னு கருதறாங்க. வயதுக்கு வரம்போ, மதத்தின் தளையோ கூடாதுன்னு ஒரு கவி எழுதி இருக்காரு. காதலிக்கறவங்க மனதை மட்டுமே பார்க்கறாங்க. இப்ப மதம் எங்க வந்திச்சு?
பதில் – நான் தான் சொன்னேனில்லையா…. பரஸ்பர சம்மதம்னா எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா சூழ்ச்சியால ஏன்? ஏமாற்று எதுக்காக?
கேள்வி– நான் தாருல் உலூம் வல்லுனர்கள் கிட்ட கேட்டேன். அங்க இருக்கற மௌல்வி சொன்னாரு, இது இருவரோட பரஸ்பர உறவு, ஏதோ 3-4 சம்பவங்கள்ல தவறா இருந்திருக்கலாம், ஆனா இதுக்காக யோகிஜி விஷத்தைக் கக்கறது சரியானது இல்லைன்னு அவரு சொன்னாரு.
பதில் – ஒரு முஸ்லிம் பெண் ஒரு ஹிந்துப் பையனைக் காதலிச்சுக் கலியாணம் செய்யும் போது அதுல அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லைங்கறதையும் மௌல்வி சொல்லியிருக்கணும். அப்ப அவரு இதுபத்தி ஃபத்வாவை அறிவிக்கணும். தியோபந்த் சிரியாவுலயும் ஈராக்குலயும் ஐஎஸ் ஐஎஸ் நடவடிக்கைகளுக்கு எதிரா ஃபத்வா அறிவிச்சா நல்லாயிருக்கும்.
அதுக்கு எதிரா ஃபத்வாவை அறிவிச்சாங்கன்னா, கஷ்மீர்ல நடக்கறதுக்கு எதிரா ஃபத்வாவை அறிவிச்சிருந்தாங்கன்னா நல்லாயிருந்திருக்கும். மொத்த தேசத்திலயும் ஏன் பொதுவான சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க தயங்கறீங்க? பல ஆண்டுகளா இந்த துர்பாக்கியமான நிலைமை நீடிக்குது.
இந்த தேசத்தோட பெரும்பான்மை சமுதாயம் தேசத்தில பொது சிவில் சட்டம் வேணும்னு கேட்குது. இந்த தேசத்தின் பெரும்பான்மை சமுதாயம் தனக்குன்னு சிறப்பு உரிமைகள் எதையும் கேட்கலை.
கேள்வி – இப்ப நாம பேசறது லவ் ஜிஹாத் பத்தி. மௌலானா மதனி சொன்னதை நானும் கேட்டேன். இது ஜிஹாத், இது காதல்னு சொல்ல யோகி யாருன்னு கேட்டாரு. தீர்மானிக்கணும்னு சொன்னா அதை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்கட்டும்.
பதில் – நான் தான் 3 உயர்நீதிமன்ற தீர்ப்புக்களை சொன்னேனில்லையா?
கேள்வி – இந்துப் பெண்களை முஸ்லிம் பையன்கள் கலியாணம் செஞ்சுக்கிட்டா அது லவ் ஜிஹாத்னு சொல்றீங்க. உங்க கட்சியோட மூன்று பத்திரிக்கை தொடர்பாளர்கள், முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், எம் ஜே அக்பர் எல்லாம் இந்துப் பெண்களைத் தானே கலியாணம் செய்திருக்கின்றார்கள்!!! அப்படியென்றால் பிஜேபியின் இந்த மூன்று செய்தித் தொடர்பாளர்களும் லவ் ஜிஹாதிக்களா?
பதில் – இல்லை, பாருங்க, இவங்க ஏமாத்திப் பண்ணலையே!! இவங்க ஏமாத்தியேதும் செய்யலையே!! தங்களோட இயல்பான வகையிலேயே செஞ்சாங்க. ரெண்டாவதா, இந்த மூன்று தலைவர்களுமே, பாரதத்தின் பாரம்பரியம் மேல நம்பிக்கை வச்சிருந்தாங்க.
திருமணம் ஆன பிறகு அவங்க தங்களோட மனைவி கிட்ட, நீங்களும் நமாஸ் படிங்கன்னு அவங்களை கட்டாயப்படுத்தலை. அதுவரை அவங்க ஏற்றுக்காத இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளை இனிமேல் நீங்களும் கடைப்பிடிக்கணும்னு வற்புறுத்தலை. அவங்க மேல வலுக்கட்டாயமா திணிக்கலை. ஆனா ராஞ்சியில இப்படி நடக்கலை.
கேள்வி –கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் என்ன கூறிக் கொள்கிறார்கள் என்பதில் நீங்கள் ஏன் குறுக்கில் வருகிறீர்கள்?
தீபாவளி பண்டிகையில கலந்துக்கறது பத்தி அவரு பேசுவாரா? அவரால செய்ய முடியாது. அவரு செய்ய மாட்டாருன்னு தெரியும். ஆகையால இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாதுங்கறது பத்தி அவரால பேச முடியுமே தவிர இந்த 3 தலைவர்களும் வீட்டுல கொண்டாடிக்கிட்டு இருக்காங்களே!!
கேள்வி – இப்ப ஷாருக்கான் ஒரு இந்துப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு. அதே போல ஆமிர்கானும்செஞ்சுக்கிட்டாரு. இவங்க எல்லாரும் ஜிஹாதிக்களா?
பதில் – ஜிஹாதி பத்தி சொன்னேனில்லையா? ஜிஹாத் கஃப்ருன்னு, நான் எதை சொன்னேன்? யாரு….. பொய் சொல்லி வஞ்சகமா ஏமாத்தி.
கேள்வி – வஞ்சகமா இல்லையா, காதலா இல்லையான்னு யார் தீர்மானிப்பாங்க? நீங்க தீர்மானிப்பீங்களா?
பதில் – நான் இல்லை அதாவது என்ன உதாரணம் உங்க முன்னால கண்கூடா இருக்கோ, தேசம் நெடுக எல்லாம் வெளியாகுது, அதைத் தான் சொல்றேன்.
கேள்வி – அது பத்தின கவலையை பெற்றோர் கிட்ட விட்டுடலாமே இடையில நீங்க ஏன்?
பதில்– நாங்க…… நாங்க ஏன் இருக்கோம்னா, சமுதாயத்தோட விழிப்புணர்வுள்ள குடிமகன்ங்கற முறையில இதுக்கு எதிரா குரல் கொடுக்கறது என் கடமை இது சமூகம் சமூக கண்ணியத்துக்கு எதிரானது. நாங்க இதுக்கு எதிரா குரல் எழுப்பியாகணும் குரலை எழுப்பிக்கிட்டு இருக்கோம்.
கேள்வி – தியோபந்த் உலேமா இது இஸ்லாத்துக்கு எதிரான சதிங்கறாரு. முஸ்லிங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்த யோகியும் அவங்க கூட்டளிங்களும் லவ் ஜிஹாத்ங்கற பெயரை ஏற்படுத்தியிருக்காங்க அப்படீங்கறாரு.
பதில் – இந்தச் சொல்லை நாங்க யாரும் ஏற்படுத்தலை. இந்தச் சொல் கேரளத்திலிருந்து வந்திருக்கு. மொத்த தேசத்திலயும் கேரளம் தான் முதன்முதலா இதுக்கு இரையாச்சு. கேரளத்துக்குப் பிறகு…. கர்நாடகம்…. உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு உத்தர பிரதேசம்.
உத்திர பிரதேசத்திலேயே மேற்கு உத்தர பிரதேசம் அதிகமா….. பீடிக்கப்பட்ட ……. பாதிக்கப்பட்ட பகுதி.
துரதிர்ஷ்டவசமா அங்க இப்ப அமைஞ்சிருக்கற அரசாங்கம், இந்த மாதிரியான சக்திகளுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது. ஆகையால இந்தச் சொல்லை நான் ஒண்ணும் கொடுக்கலை.
இந்தச் சொற்கள், அங்க புழக்கதில இருந்திட்டு இருக்கு. அதோட மேலும், இது இஸ்லாத்தின் பேரால செய்யப்படுறதால இதுக்கு ஜிஹாத்ங்கற பெயர் அளிக்கப்பட்டிருக்கு.
கேள்வி – ஆனா நீங்க செஞ்சதோட விளைவு என்னென்னா, நீங்க சொல்ற ஏமாத்துனால இல்லாம உண்மையாவே காதலிச்சாலும் தொல்லைகள் கொடுக்கறாங்களாம்.
பதில் – தினமும் செய்தித்தாள்கள்ல வருது தினமும் நீங்களே பார்க்கறீங்க. தினம்தினம் இந்தமாதிரி நடக்குது. முதல்ல அவன் பெயர், ஒண்ணா இருக்கு, மாத்தப்பட்ட பெயரை கொஞ்சம் மாத்தி பிறகு ஒரு சமயம் உண்மையான பெயர் வெளியாகும் போது அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்றா. இது தான் நடக்குது. லவ் ஜிஹாத் பெயர்ல இது தான் நடக்குது.
கேள்வி – அப்ப நீங்க பெண்களுக்குப் புரிய வையுங்களேன்?
பதில் – நான் தான் சொன்னேனே….. மொத்த சமுதாயத்துக்கும் சொல்றேன். மேலும் நான் நிர்வாகம் அதிகாரிகள் கிட்டையும் சொல்றேன். இந்த லவ் ஜிஹாத், தேசத்துக்கு எதிரான ஒரு சூழ்ச்சி. கேரளத்தோட முதலமைச்சர் கம்யூனிஸ்ட் கட்சியோட முதலமைச்சர் இதை வெளிப்படையா சொல்றாருன்னு சொன்னா, இந்த லவ் ஜிஹாத்….
இந்த தேசத்தில மதரீதியான சகோதரத்துவத்தைக் குலைக்க, மற்றும் தேசத்தை, ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடாக ஆக்கும் சதியின் ஒரு அங்கம், இதைக் கண்டிப்பாக எதிர்த்தே ஆகணும்.
வங்காளத்தில் மடங்களின் மீதான தாக்குதல் வரம்பை மீறிய செயல், எச்சரிக்கிறார் மோதிஜி
நண்பர்களே, வங்காளத்திலே, உங்கள் நம்பிக்கைகளின் மீது தாக்குதலைக் கட்டவிழ்க்கும் பாவச்செயலை, டி எம் சி அரசாங்கம் செய்கிறது. டிஎம்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள், நம் இராமர் ஆலயம் பவித்திரத்தன்மை இல்லாததாம்.
இராமர் ஆலயம் பவித்திரமானது கிடையாதா? இராமர் ஆலயம் பவித்திரமானது இல்லையா? டிஎம்சியின் நோக்கங்கள் தூய்மையானதா சொல்லுங்கள்? அட டிஎம்சி அரசாங்கமே, ராமநவமி கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து ஆணை பிறப்பிக்கிறதே!!
டி எம்சி குண்டர்கள், ராமநவமி ஊர்வலங்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றார்களே!! இப்போது இங்கிருக்கும் முதலமைச்சரோ, தானே, இந்துத் துறவிகளுக்கு மிரட்டலா விடுக்கிறார்?
இராமகிருஷ்ணா மிஷன், இஸ்கான், பாரத் சேவா சன்ஸ்தான், இவை நம்முடைய வங்காளத்தினுடைய, ஆன்மீக அடையாளங்கள்.
இந்த மாநிலத்தின் முதல்வர், மேடையிலேயே, இந்த மகத்தான அமைப்புக்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். இந்த மிரட்டல் தான், டிஎம்சியின் குண்டர்களுக்கு தைரியத்தை அளித்திருக்கிறது.
என்ன தெரிய வந்திருக்கிறது என்றால், ஜல்பைகுடியிலே, இராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திலே, நேற்று இரவு காலித்தனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிரமத்திலே பணியாற்றுகின்ற பணியாளர்களை, அடித்துப் போட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. நம் வங்காளத்தை இப்போது, எந்தத் திசையில் கொண்டு செல்கிறது டிஎம்சி அரசாங்கம்?
ஒருகாலத்தில் வங்காளத்திலே, இராமகிருஷ்ண மிஷனுக்கு மிரட்டல் விடப்படும், ஆசிரமத்தில் காலித்தனம் நடக்கும் என்று, நாட்டுமக்கள் எப்போதாவது நினைத்திருப்பார்களா?
ஆனால், தன்னுடைய வாக்குவங்கியை குஷிப்படுத்த வேண்டி, டி எம் சி அரசாங்கம், வரம்பை மீறிக் கொண்டிருக்கிறது.
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கைது செய்துள்ளது.
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை – ஏடிஎஸ்., சந்தேகப்படும் நபர்களை தீவிர விசாரணைக்காக ஒரு தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக TV9 குஜராத்தி செய்தி வெளியிட்டுள்ளது. ஆமதாபாத் விமான நிலையத்தில் அவர்கள் இருப்பதற்கான துல்லியமான நோக்கம் தெளிவாக இல்லை.
பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஆமதாபாத் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பாகிஸ்தானில் உள்ள நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் கூறப்பட்டது. இதை அடுத்து, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று ஐபிஎல் அணிகள் ஆமதாபாத் விமான நிலையத்திற்கு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் இருவர் மார்ச் மாதம் இந்தியாவில் வங்கதேச எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்டனர். ஹரியானா மாநிலம் பானிபட்டில் வசித்து வந்த ரெஹான் என்ற அனுராக் சிங் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசித்து வந்த ஹரிஷ் அஜ்மல் ஃபரூக்கி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு பேரும் இந்தியாவில் துடிப்பாக செயல்படும் மற்றும் மூளைச்சலவை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தளபதிகளாக வகைப்படுத்தப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களைப் (IEDs) பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.
“இந்தியா முழுவதும் பல இடங்களில் IEDகள் மூலம் ஆட்சேர்ப்பு, பயங்கரவாத நிதி மற்றும் பயங்கரவாத செயல்களை நடத்துவதற்கான சதித்திட்டங்கள் மூலம் அவர்கள் இந்தியாவில் ISISக்கான செயல்பாடுகளை வேகப்படுத்தினர்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த இருவர் மீதும் லக்னோவில் ATS மற்றும் புதுதில்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக STF கூறுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில், என்ஐஏ-வின் அதிகம் தேடப்படுவோர் பட்டியலில் இருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஷாபி உஸ்ஸாமா என்ற ஷாநவாஸ், பயங்கரவாத எதிர்ப்பு ஏஜென்சியின் பெரிய தேடுதல் வேட்டையின் போது டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்யும் நம்பகமான துப்பு தகவல் கொடுப்பவர்களுக்கு NIA ₹3 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது.
அசாத்தியமான ஒரு பிதற்றலைப் பிதற்றி, தான் அரசியலில் இருப்பதைக் காட்டி இருக்கிறார், ஈ. வி. கே. எஸ். இளங்கோவன். அவர் தமிழ்நாட்டில் ஒரு முன்னணி காங்கிரஸ் தலைவர்.
சமீபத்தில் இளங்கோவன் பொதுமேடையில் பேசியபோது, “ஸ்டாலின்தான் காமராஜர்” என்று அதே வார்த்தைகளில் சொல்லவில்லை. ஆனால் அதே அர்த்தத்தில், “ஸ்டாலின் ஆட்சியைக் காமராஜர் ஆட்சி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது” என்று பேசி இருக்கிறார்.
ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு, அதுவும் ஒரு தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவருக்கு, இளங்கோவனின் வார்த்தைகளைச் சொல்ல வெட்கமாக, கூச்சமாக இருக்க வேண்டும். இளங்கோவனுக்கு அந்தத் தடைகள் இல்லை.
காமராஜ் என்ற அரசியல் தலைவர் எளிமையானவர், தூய்மையானவர், தன்னலமற்றவர், மக்கள் நலம் சார்ந்தவர், தேசிய சிந்தனை உள்ளவர், மதிநுட்பம் கொண்டவர், நிர்வாகத் திறன் நிறைந்தவர், தலைமைப் பண்புகள் மேலோங்கியவர். 1954 முதல் 1963 வரை ஒன்பது வருடங்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகச் சிறப்பாக ஆட்சி செய்தவர். ஒரு அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக, முதல் அமைச்சராக, திமுக-வின் மு. க ஸ்டாலின் காங்கிரஸின் காமராஜுக்கு நூறு படிகள் கீழே இருக்கிறார்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த ஜனநாயக நாடுகளில், சீரான ஊழலற்ற அன்றாட ஆட்சி நிர்வாகம் நிலவுகிறது. அங்கெல்லாம் வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத் துறை போன்ற மக்கள் அதிகம் தொடர்பு கொள்ளும் அரசுப் பணி இடங்களில் லஞ்ச ஊழல் இருக்காது, முறைகேடுகள் நடக்காது. விதிவிலக்குகள் அபூர்வம். ஆனால் இந்திய நிலைமை வேறு.
இந்தியா முதிர்ச்சி அடையாத ஜனநாயகம். மமூலான அன்றாட நிர்வாக ஊழல்கள் போக, அரசாங்க கான்டிராக்ட்டுகள், மது வியாபாரம், மணல் வியாபாரம், கனிமவளக் கொள்ளைகள், மாட்டுத் தீவன ஊழல், சனிமா உலகைச் சிறைப்பிடித்தல் என்று பல விதத்தில், பல இடங்களில் – முக்கியமாக, பெரிய இடங்களில் – ஊழல் பொதுவாக வியாபித்திருக்கும் நாடு இந்தியா.
இந்தியாவின் ஒரு பிரதேசத்தில் – அதுவும் 1967-க்குப் பிந்தைய தமிழகத்தில் – காமராஜ் போன்ற ஒரு முதல் அமைச்சர் இருந்தால்தான் மக்களைப் பண ரீதியில் இம்சிக்காத ஒரு நல்ல நிர்வாகம் சாத்தியமாகும். அந்த நல்ல நிர்வாகத்தை முடிந்த அளவுக்குச் செய்து காட்டும் எண்ணமும் முனைப்பும் மன உறுதியும் அவரைப் போன்ற ஒரு தலைவருக்கு மட்டும் உண்டு. அதனால்தான் அத்தகைய ஆட்சியைக் காமராஜ் பெயரோடு ஐக்கியப்படுத்தி, அது காமராஜ் ஆட்சி என்று சொல்கிறோம்.
ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் கைசுத்தமானவரா, கைசுத்தம் உள்ள மற்றவர்களை அவர் அமைச்சர்களாக வைத்திருக்கிறாரா, கைசுத்தத்தை அவர் அரசு ஊழியர்களிடம் உண்மையில் எதிர்பார்க்கிறாரா, அதில் அவரது கண்காணிப்பு இருக்குமா, என்பதை அம்மாநில அரசு ஊழியர்கள் உடனடியாக உணர்வார்கள். அதற்கு ஏற்ப, பொதுமக்களிடம் அந்த அரசு ஊழியர்களின் அணுகுமுறை அமையும்.
வேறு வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒரு மாநிலத்தில் மாறி மாறி முதல் அமைச்சர்களாக வரும்போது, அவர்கள் அனைவரும் கைசுத்தமாக இருந்து, தங்கள் அமைச்சரவையை அப்படி வைத்திருந்து, அரசு ஊழியர்களிடமும் அதை எதிர்பார்த்துக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் லஞ்ச ஊழலற்ற அன்றாட நிர்வாகம் காலப் போக்கில் மாநிலத்தில் நிலைக்கும். இதில் கருணாநிதியின் திமுக ஆட்சி முன்பு எவ்வளவு மார்க் வாங்கியது, இப்போது ஸ்டாலின் ஆட்சி எவ்வளவு வாங்கி சோபிக்கிறது, என்பது ஸ்டாலின் அறிந்தது, இளங்கோவனும் அறிந்தது, மாநிலமே ஓரளவு அறிந்தது.
காமராஜ் ஒன்பது வருடங்கள் தமிழகத்தின் முதல்வராக ஆட்சி செய்தார். மு. க. ஸ்டாலின் இப்போது மூன்று வருடங்களாக அந்தப் பதவியில் இருக்கிறார். என்ன சொல்கிறார் இளங்கோவன்? இந்த மூன்று வருடத்திலேயே, காமராஜ் ஆட்சிக்கு நிகராகத் தான் ஆட்சி செய்வதை ஸ்டாலின் நிரூபித்து விட்டாரா? அதுவும் செந்தில் பாலாஜி, துரைமுருகன், பொன்முடி, உதயநிதி, சபரீசன் என்று பலரையும் பக்கத்தில் அணைத்துக் கொண்டு?
இன்னொரு விஷயம். ஸ்டாலினின் தந்தை கருணாநிதி இந்த மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்து சுமார் பத்தொன்பது வருடங்கள் ஆட்சி செய்தார். கருணாநிதி தனது ஆட்சியைச் சிறந்த ஆட்சியாக – காமராஜ் ஆட்சி போல – அத்தனை வருடமாகியும் நிரூபிக்கவில்லை என்று இளங்கோவனே நமக்கு உணர்த்த விரும்புகிறார். கருணாநிதி அப்படி ஒரு சிறந்த ஆட்சியைத் தமிழ்நாட்டிற்குக் கொடுத்தார் என்று இளங்கோவன் கருதினால், “ஸ்டாலின் ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி” என்றே இளங்கோவன் பேசி இருப்பாரே!
எல்லாம் போகட்டும். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சுயலாப, மக்கள் விரோத அரசியல் செய்பவை என்று கணித்து, அவை இரண்டையும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று கண்டனம் செய்தவர் காமராஜ். அந்த திமுக-வின் இன்றையத் தலைவர் ஸ்டாலின் தனது கட்சியின் கொள்கைகளை, போக்கை, தலைகீழாக மாற்றிக் கொண்டு, தானும் புனிதப்பட்டு, இப்போது காமராஜை நினைவூட்டும் விதமாக நல்லாட்சி தருகிறார் என்று இளங்கோவன் புளகாங்கிதம் அடைகிறார்.
இளங்கோவனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் விஷயம்.
திமுக-வில் இப்போது ஸ்டாலின்தான் பெரிய முக்கியஸ்தர். ‘ராகுல் காந்தி, ஜவஹர்லால் நேருவைப் போன்ற ஆட்சி தருவார் என்று புகழ்வதைவிட, ஸ்டாலின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று பொதுவெளியில் சிலாகித்தால், ஸ்டாலினின் தயவு கிடைக்கும், மாநிலத்தில் நாம் பயன் பெறலாம்’ என்று இளங்கோவன் நினைத்திருக்க வேண்டும்.
கட்சி மானத்தைத் திமுக-வின் காலடியில் வைத்துத் தமிழகத்தில் பிழைக்க வேண்டிய பரிதாப நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கட்சி நிலைமையே அது என்றால், அதன் மாநிலத் தலைவர் ஒருவர் தன்னைத் திமுக-விடம் தனியாகப் பாதுகாத்து விசேஷமாகப் பிழைக்க நினைக்கலாம். அவர் வேறு எப்படிப் பேசுவார்?
Author: R Veera Raghavan, Advocate, Chennai (veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரைசியும் பங்கேற்றாா்.
இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றார்கள்.
இதன் பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரைசி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன் உள்பட பலா் பயணித்தார்கள்.
அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில், ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டா் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த சிரமத்துடன் தரையிறங்கியதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் தொடக்கத்தில் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அந்த ஹெலிகாப்டா் உசி என்ற சிற்றூருக்கு அருகில் தரையிறங்கியதாக அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டா் தரையிறங்கிய இடம் குறித்த விவரங்களில் முரண்பாடு நிலவியது. இது உலக அளவில் பல்வேறு குழப்பமான தகவல்களைக் கொண்டு சேர்த்தது.
இந்நிலையில், மீட்புப் படையினரின் ஹெலிகாப்டரைத் தரையிறக்கி, பாதிக்கப்பட்டவா்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
இதை அடுத்து, அதிபா் ரைசியின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. ஹெலிகாப்டர் அவரசரமாக தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்ட சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விபத்து நடந்து முடிந்த 17 மணி நேரத்துக்குப் பின்னர் துருக்கியின் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதையடுத்து முகமது முக்பர் ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
Deeply saddened and shocked by the tragic demise of Dr. Seyed Ebrahim Raisi, President of the Islamic Republic of Iran. His contribution to strengthening India-Iran bilateral relationship will always be remembered. My heartfelt condolences to his family and the people of Iran.…
ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். சையத் இப்ராஹிம் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் கௌஹத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. கௌஹாத்தி ஆட்டத்தின் தொடக்கம் மழையால் தாமதமானது.
பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத்
பஞ்சாப் அணியை (214/5, பிரப்சிம்ரன் சிங் 71, அதர்வா தாடே 46, ரிலீ ரோஸ்கோ 49, ஜிதேஷ் ஷர்மா 32*, நடராஜன் 2/33) ஹைதராபாத் அணி (19.1 ஓவரில் 215/6, அபிஷேக் ஷர்மா 66, கிளாசன் 42, ராகுல் திரிபாதி 33, நிதீஷ் குமார் ரெட்டி 42, அர்ஷதீப் சிங் 2/37, ஹர்ஷல் படேல் 2/49) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் அதர்வா தாடே (27 பந்துகளில் 46 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (45 பந்துகளில் 71 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். ரிலீ ரோஸ்கோ (24 பந்துகளில் 49 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்), ஷஷாங்க் சிங் (2 ரன்), திதேஷ் ஷர்மா (15 பந்துகளில் 32 ரன், 2ஃபோர், 2 சிக்சர்), அஷுதோஷ் ஷர்மா (2 ரன்), ஷிவம் சிங் (2 ரன்) என அனத்து பஞ்சாப் அணி பேட்டர்களும் நன்றாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கட் இழப்பிற்கு 214 ரன் எடுத்தது.
215 ரன் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்) முதல் பந்தில் கிளீன் போல்ட் ஆகி, ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (28 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) சிறப்பாக ஆடினார். மூன்றவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (18 பந்துகளில் 33 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), நிதீஷ் குமார் ரெட்டி (25 பந்துகளில் 37 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), ஹென்றிச் கிளாசன் (26 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஷாபாஸ் அகமது (3 ரன்), அப்துல் சமது (11 ரன்), சன்வீர் சிங் (6 ரன்) என அனிவரும் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர்களில் ஹதராபாத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 215 ரன் அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள், புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் சிறப்பான ரன்ரேட்டுடன் நுழைகிறது. பஞ்சாப் அணி போட்டியில் இருந்து வெளியேறுகிறது.
ஹைதராபத் அணியின் அபிஷேக் ஷர்மா தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இத்துடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றன. செவ்வாய்கிழமை அன்று அகமதாபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் (புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் (புள்ளிப்பட்டியலில் முதலிடம்) இடையே ஆட்டம் நடைபெறும்.
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
கௌஹாத்தியில் ஏற்பட்ட மழை காரணமாக கொல்கொத்தா மற்றும் ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 20 புள்ளிகளுடன் கொல்கொத்தா அணி முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 17 புள்ளிகள் மற்று ஹைதராபாத் அணியைவிட குறைவான் ரன்ரேட்டுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.