Home Blog Page 228

ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்து; தேடும் பணி தீவிரம்!

iran raizi - 2026
#image_title
  • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு
  • தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல்
  • ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல்
  • அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாக தகவல்
  • மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல், டிரோன்கள் மூலம் மீட்புப் பணி தீவிரம்- அதிகாரிகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

IPL 2024: ஆக… ஆக… தோனி புராணம் இனி இல்லை… அடடே!

ipl 2024 - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐம்பத்தியொன்பதாம் நாள்

ஐபிஎல் 2024 – 18.05.2024

இன்று பெங்களூருவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. இன்று பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை நேற்று தெரிவித்திருந்தோம். எதிர்பார்த்ததைப் போலவே முதலாவதாக பெங்களூரு அணி விளையாடியபோது மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆட்டம் முழுமையாக நடைபெற்றது. 

பெங்களூரு அணி (218/5, டியு பிளேசிஸ் 54, விராட் கோலி 47, ரஜத் படிதர் 41, காமரூன் கிரீன் 38*, தினேஷ் கார்த்திக் 14, கிளன் மேக்ஸ்வெல் 16, ஷர்துல் தாகூர் 2/61) சென்னை அணியை (191/7, ரவின் ரச்சீந்திரா 61, ரவீந்திர ஜதேஜா 42*, அஜிங்க்யா ரஹானே 33, எம்.எஸ். தோனி 25, யஷ் தயால் 2/42) 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (29 பந்துகளில் 47 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் டியு பிளேசிஸ் (39 பந்துகளில் 54 ரன, 3 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். இடையில் மூன்றாவது ஓவருக்குப் பின்னர் 20 நிமிடம் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. கோலி 10ஆவது ஓவரிலும் டியு பிளேசிஸ் 13ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த டியு பிளேசிஸ் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்தபோது ரஜத் படிதர் அடித்த பந்தை சாண்ட்னர் தடுத்ததால் பந்து ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆணார். ரஜத் படிதர் (23 பந்துகளில் 41 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்), காமரூன் கிரீன் (17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ரன் 3 ஃபோர், 3 சிக்சர்), தினேஷ் கார்த்திக் (6 பந்துகளில் 14 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), கிளன் மேக்ஸ்வெல் (5 பந்துகளில் 16 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) என அனத்து பெங்களூரு அணி பேட்டர்களும் நன்றாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கட் இழப்பிற்கு 218 ரன் எடுத்தது. 

219 ரன் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்) முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா (37 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக ஆட்னார். மூன்றவதாகக் களமிறங்கிய டேரில் மிட்சல் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தபோதிலும் அவருக்குப் பின்னர் வந்த அஜிங்க்யா ரஹானே (22 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ரச்சினுக்கு கம்பனி கொடுத்தார். இன்று ஷிவம் துபே (7 ரன்), மிட்சல் சாண்ட்னர் (3 ரன்) இருவரும் ஜொலிக்கவில்லை. ஆயினும் நம்பிக்கை ஆட்டக்காரர் ரவீந்திர ஜதேஜா (22 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் தோனி (13 பந்துகளில் 25 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சென்னைக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினர். 20ஆவது ஓவரில் யஷ் தயால் பந்துவீச்சில் இரண்டாவது பந்தில் தோனி அவுட்டானார். அதற்கடுத்த நாலு பந்துகளையும் யஷ் ரன் அடிக்கமுடியாத வகையில் வீசினார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணியால் 7 விக்கட் இழப்பிற்கு 191 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.   

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைகிறது. சென்னை போட்டியில் இருந்து வெளியேறுகிறது. கடைசி ஓவரில் 35 ரன் எடுத்தால் வெற்றி; 16 ரன் எடுத்தால் பிளே ஆஃபுக்கு சென்னை அணி போகலாம் என்ற நிலை இருந்தது. முதல் பந்தில் தோனி ஒரு சின்சர் அடித்தார். ஆனால் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பதிலாக விளையாட வந்த ஷர்துல் தாகூர் அடுத்த இரண்டு பந்துகளில் ரன் எடுக்க முடியவில்லை. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன் எடுக்க வேண்டும்; அந்த இரண்டு பந்துகளையும் சந்தித்தவர் ஜதேஜா. சாதாரணமாக இரண்டு தொடர் சிக்சர்கள் ஜதேஜாவால் அடிக்க முடியும். ஆனால் அவரால் அடிக்க முடியவில்லை. பெங்களூரு அணி வெர்றிக்கு உரியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

பெங்களூரு அணியின் அணித்தலைவர் ஃபெஃப் டியு பிளேசிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் கௌஹத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்  அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

18.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
ஹைதராபாத்1375150.406
பெங்களூரு1477140.459
சென்னை1477140.392
டெல்லி147714-0.377
லக்னோ147714-0.667
குஜராத்145712-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை144108-0.318

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

pmmodi speech in meeting - 2026
#image_title

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

சிஏஏ தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு மோதி விடுக்கும் சவால்

சமாஜ்வாடி காங்கிரஸ் போன்ற கட்சிகள்,  யுபி மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும், கலவரங்களை ஏற்படுத்த முழுமையாக முயற்சிகளை மேற்கொண்டார்கள்.  

இந்த இண்டிக் கூட்டணிக்காரர்கள் கூறுகிறார்கள், இந்த மோதி, இவர் ஏதோ சிஏஏவைக் கொண்டு வந்திருக்கிறார் இல்லையா, என்று இவர் அகல்கிறாரோ, இந்த சிஏஏவும் போய் விடுமாம்.   சொல்லுங்கள் இந்த தேசத்திலே, சிஏஏவை முடிவுக்குக் கொண்டு வரும் யாராவது, இதுவரை பிறந்திருக்கிறார்களா?  

நான் மிகமிகத் தெளிவாகப் பேசுகிறேன் சகோதர சகோதரிகளே, நாட்டிலும் சரி அயல்நாடுகளிலும் சரி, எத்தனை பேரை வேண்டுமானாலும் கூட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.   நானும் களத்தில் இருக்கிறேன் நீங்களும் களத்தில் இருக்கிறீர்கள்.   என்றைக்கும் உங்களால் சிஏஏவை தடுக்க முடியாது.

இண்டிக் கூட்டணி நொறுங்கிப் போகும், சட்டுசட்டுன்னு சட்டுப்புட்டுன்னு

சமாஜ்வாடி காங்கிரஸின் அரசகுமாரர்களுக்கு, தேசத்தின் வளர்ச்சி என்றால், ஏதோ ஒரு பகுதியில் வாழும் குழந்தைகள், எல்லோரும் சேர்ந்து கிட்டிப்புள்ளு விளையாடுவது போல இவர்களுக்கு இருக்கிறது.   மாளிகைகளில் பிறப்பெடுத்த, இந்த அரசகுமாரர்களுக்கு, உழைத்தும் பழக்கமில்லை, விளைவுகளை ஏற்படுத்தியும் வழக்கமில்லை.  

ஆகையால் தான் கூறுகிறார்கள், தேசத்தின் வளர்ச்சி தானாக நடக்குமென்று.   என்ன சொல்கிறார்கள் இவர்கள்?   வளர்ச்சி எப்படி ஏற்படுமாம்?   அதாவது சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு.   இவர்கள் நினைக்கிறார்கள், பாரதம் தற்சார்புடையதாக, தானாகவே ஆகி விடுமென்று.   யாராவது எப்படி என்றால் உடனே, சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு என்கிறார்கள். 

இவர்கள் நினைக்கிறார்கள், புதிய நெடுஞ்சாலைகள், தாமாகவே ஏற்பட்டு விடுமென்று.   யாராவது எப்படி என்றால் உடனே, கவலையே படாதப்பா சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு என்கிறார்கள்.   இவர்கள் நினைக்கிறார்கள் பாரதத்தின் ஏழ்மை தொலைந்து போகுமென்று.   எப்படி என்றால் உடனே, சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு என்கிறார்கள்.   அட யாராவது இவர்களுடைய புத்திக்கு,  உரைக்கும்படி சொல்லுங்கள், இப்போது ராய்பரேலியின் மக்களும் கூட, சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு சட்டுபுட்டுன்னு, வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.   அமேடியிலிருந்து காணாமல் போனார், ராய்பரேலியிலிருந்தும் காணாமல் போவார்.  

நண்பர்களே, தேசத்தை ஆளுவதென்பது, தங்கத் தொட்டிலில் பிறந்து வளர்ந்த பாலகர்களுக்கான விளையாட்டு அல்ல.   அது உங்களால் முடியாத காரியம்.   ஏனென்றால் ஜூலை 4ஆம் தேதிக்குப் பிறகு, மோதி அரசு கண்டிப்பாக அமைந்தே தீரும்.   நாட்டுமக்கள் மோதி அரசை ஏற்படுத்தியே தீருவார்கள்.  

ஆனால் இதுமட்டுமல்ல.   மேலும் நிறைய நடக்க இருக்கிறது.   என்ன நடக்கும் என்று நான் கூறவா?   ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு, மோதியரசு அமையும் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான்.   இன்னும் கூட நிறைய நடக்கும் என்ன என்பதை நான் சொல்லவா?   சொல்லவா?   இந்த இண்டிக் கூட்டணி, உடைந்து சின்னாபின்னமாகிப் போகும் சட்டுப்புட்டுன்னு சட்டுப்புட்டுன்னு.  

தோற்றுப் போன பிறகு, பலியாடு யார் என்பதைத் தேடத் தொடங்குவார்கள்.   சட்டுப்புட்டுன்னு சட்டுப்புட்டுன்னு.   அப்புறம் அரசகுமாரர்கள், அது லக்னவின் அரசகுமாரனாகட்டும், அல்லது தில்லிக்காரர்.  

இந்த அரசகுமாரர்கள், கோடை விடுமுறைக்காலத்தில், வெளிநாடு சென்று விடுவார்கள், சட்டுப்புட்டுன்னு சட்டுப்புட்டுன்னு.   யாரோ என்னிடத்தில் கூறினார், டிக்கெட்டை புக் செய்யச் சொல்லியும் விட்டார்களாம்.  சகோதர சகோதரிகளே, இவர்கள் சட்டுப்புட்டுன்னு சட்டுப்புட்டுன்னு ஓடிப் போய் விடுவார்கள், நாம் தான் இங்கே இருப்போம், நானும் நீங்களும் மட்டுமே இருப்போம்.   நாட்டுமக்கள் தங்கி இருப்பார்கள்.   நான் உங்களுக்கு கேரண்டி அளிக்கிறேன்.  

நான் உங்கள் சேவையிலே, இரவுபகல் பாராது சலியாமல் உழைப்பேன்.  என்னுடைய கணம்தோறும், உங்களின் பெயர்.   என்னுடைய உடலின் கணுதோறும், உங்களின் பெயர்.   நாம் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக்குவோம்,  தற்சார்பு பாரதத்தை உருவாக்குவோம்.   இதை உருவாக்க, நாட்டுமக்கள் நாமனைவரும் இணைந்து, இன்முகத்தோடு உழைப்போம்.  

எனக்கு பலமான நம்பிக்கை இருக்கிறது, நீங்கள் அனைவரும் எனக்குத் துணை வருவீர்கள் என்று.  வருவீர்களா?  வருவீர்களா?  ஆமாம் இது மோதியளிக்கும் கேரண்டி மக்களே.  

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

yogi adityanath - 2026
#image_title

இண்டியா டிவியின் அதாலத் கேள்வி பதில் நிகழ்ச்சியில் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்…

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

கஜ்வா ஏ ஹிந்த்

கேள்வி– நாட்டில் இருந்து கொண்டே சிலர் கஜ்வா ஏ ஹிந்த் எனும் நாட்டின் மீதான இஸ்லாமியத் தாக்குதல் குறித்துப் பேசுகிறார்கள், பாரதத்தைக் கைப்பற்றுவது பற்றிப் பேசுகிறார்கள்.   இது பற்றி உங்கள் கருத்து?

பதில்– அதாவது இந்த கஜ்வா ஏ ஹிந்த் பத்தின கனவு, இறுதித்தீர்ப்பு நாள் வரை கூட….. வெற்றியடைப் போறதில்லை.   நான் சொல்றதை நல்லா குறிச்சு வச்சுக்குங்க, பல தலைமுறைகள் மடிஞ்சு போகலாம், ஆனா இந்தக் கனவு நிறைவேறப் போறதில்லை.  அதோட பாரதம் தன்னோட பயணத்தை இதே முறையில, தொடர்ந்து முன்னேறிப் போகும்.   மேலும் மோதிஜியோட தலைமையில, உலகத்தோட மிகப் பலம் வாய்ந்த சக்தியாவும் ஆகும். 

கேள்வி– இந்தத் தேர்தலுக்குப் பிறகு மோதி அரசு தேசம் முழுக்க பொதுச் சிவில் சட்டத்தை அமல் செய்யுமா?  

பதில்– இது அமல் செய்யப்பட்டே ஆகணும் அதோட,  இதை நாங்க எங்களோட சங்கல்ப பத்திரத்தில கூட பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடுறதில்லை அது சங்கல்ப பத்திரம்……   சங்கல்பம்னா என்ன அர்த்தம்?   மாற்று கிடையாது.   செய்யப்பட்டே ஆகும்ங்கற உறுதிப்பாடு.   பாரதிய ஜனதா கட்சியோட ஆட்சி அமையும்.   நாங்க தேசத்தில பொது சிவில் சட்டத்தை அமல் செஞ்சே தீருவோம் நான் என்ன விரும்பறேன்னா மொத்த தேசமும், பொது சிவில் சட்டத்துக்காக, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவா, அணி திரளணும்.

கேள்வி – நமாஸை சாலைகளில் படிக்க அனுமதிக்க மறுக்கிறீர்களே?

பதில் – பாருங்க, நான் முன்ன கூட சொல்லியிருந்தேன்.   சாலையில நீங்க நமாஸ் படிச்சீங்கன்னா என்னால ஹனுமான் சாலீஸா படிக்கறதை தடுக்க முடியாது.  தவிர, நான் மாநிலத்தோட 25 கோடி பேர்களை கவனிக்க வேண்டியிருக்கு.   அவங்க போக்குவரத்துக்கு தடை ஏற்படுறதை என்னால அனுமதிக்க முடியாது.   ஆலயம் பூஜை பண்ற இடம்.  மஸ்ஜித் நமாஸுக்கானது.  

நீங்க நமாஸ் படிக்கணும்னா ஒண்ணு மஸ்ஜிதுக்கு போங்க இல்லை இத்காவுக்குப் போங்க.   அதிக கூட்டம் வந்தா ரெண்டு ஷிஃப்டா இல்லை மூணு ஷிஃப்டா படிங்க.   ஆனா, சாலையில இல்லை.   மேலும் சாலையில, எனக்கு சந்தோஷமா இருக்கு, இன்னிக்கு யுபியில சாலைகள்ல எங்கயும் நமாஸ் படிக்கறதில்லை.  

மஸ்ஜித் வழிபாட்டு இடங்கள்ல இருக்கற கூம்பு ஒலிபரப்பிகளை அகற்றியாச்சு.   அமைதியான முறையில நோயாளிகள் குழந்தைகள், மாணவர்களும் கூட, இவங்க எல்லாரும்…… ஆனந்தமா தங்களோட தேர்வுகளுக்குத் தயார் செஞ்சுக்கலாம்.   நோயாளிகள் ஆசுவாசமா வீட்டுல ஓய்வு எடுத்துக்கலாம்.   பிள்ளைங்க எல்லாரும் சந்தோஷமா வீட்டுல இருக்கலாம்.   காட்டுக்கத்தல்ல நோயாளிங்க குழந்தைங்க எல்லாருக்கும் உளைச்சல்.  

தேர்வுகளுக்குத் தயாராகற மாணவர்கள் கருத்தூன்றி படிக்க ஆரம்பிக்கையில எங்கிருந்தாவது சத்தம் கேட்கும் அவங்க கவனம் சிதறிடும்.   எத்தனை கஷ்டம் பாருங்க.   இப்ப யுபியில இதெல்லாம் கிடையாது.   ரொம்ப அமைதி.  ரொம்ப அமைதியான சூழ்நிலை.   யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்லை.   ரொம்ப அமைதியான முறையில எல்லா நிகழ்ச்சிகளும் நடக்குது.  

மேலும், இது எல்லாருக்கும் சமமான முறையில அமல் செய்யப்பட்டிருக்கு.   பெரியபெரிய நிகழ்ச்சிகள் நடக்குது.   பிரயாக்ராஜ் கும்பமேளாவில 24 கோடி பக்தர்கள் கலந்துக்கிட்டாங்க.   இப்ப ராமஜன்மபூமி நிகழ்ச்சியில நீங்ககூட பார்த்திருக்கலாம்.   இன்னும் நடந்துக்கிட்டு இருக்கு.   இதில, ஓவ்வொரு நாளும், தேர்தல்…. அறிவிக்கப்பட்டதுக்கு முன்னாடி வரைக்கும், நாளொன்றில 3 இலட்சம் பேர் வந்தாங்க.   மூணுலேர்ந்து அஞ்சு இலட்சம்.   இப்பவும் கூட ஒண்ணுலேர்ந்து ஒண்ணரை இலட்சம் பக்தர்கள் அயோத்திக்கு வர்றாங்க.  

எல்லாம் அமைதியா நடக்குது.  எல்லாரும் சிரத்தையோட வர்றாங்க, தரிசனம் செய்யறாங்க சந்தோஷமா போறாங்க யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.   எல்லாரும், உணர்வுரீதியா கலந்துக்கறாங்க. 

அயோத்தி பத்தி அவங்க கேள்விப்பட்டிருக்காங்க, இன்னைக்கு அயோத்தியை நேர்ல பார்க்கும் போது ஆச்சரியப்படுறாங்க.   அயோத்தியில ஃபோர் லேன், அயோத்தில சிக்ஸ் லேன்…. அயோத்தியில சர்வதேச விமானநிலையம்.   விமானநிலையமும் மகரிஷி வால்மீகி பெயர்ல.   அதோட, உணவு விடுதி.   .

அன்னை சபரி பெயர்ல.   ஓய்விடம்.   நீங்க பயணிக்க நினைச்சா, அது நிஷாத்ராஜ் பெயர்ல.   இது புதிய அயோத்தியின் புதிய அடையாளம் பகவான் இராமனின் அனைத்து சகாக்களும், இன்னைக்கு அயோத்தியோட இணைஞ்சு அயோத்தியோட பயணத்தை மேலும் வலுப்படுத்தறாங்க.  

மேலும், அயோத்தியில ராம்ஜன்மபூமியில அடிக்கல் நாட்ட பிரதமர் தானே வந்ததோட பிராண பிரதிஷ்டையிலயும் 11நாள் அனுஷ்டானங்களையும் முடிச்சுக்கிட்டு, பகவான் இராமனோட தொடர்புடைய பவித்திரமான இடங்களுக்குப் போயி அதுக்கப்புறம் அயோத்திக்கு வந்து தன் கைகளாலயே பிராணபிரதிஷ்டை செஞ்சு முடிச்சு இராமன் தேசத்தின் அடையாளம்னாரு.  

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

tn secretariat - 2026
#image_title

தமிழகத்தில் 42 யானை வழித்தடங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறும் அறிக்கை.

புரியாத ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்போவதாக கூறுவதா?

தமிழக அரசின் அறிக்கையை, தமிழில் தயாரிக்க திராணியற்ற இவர்கள் தான், தமிழ் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்

அப்பாவி மக்களின் நிலத்தை அபகரிப்பதன் மூலம், அவர்களின்  வாழ்வாதாரத்தை பறிக்கத் துடிக்கும் கொடூர மனம் கொண்ட  திமுக அரசு.

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

யானைகளுக்குத்  தீங்கு விளைவிக்காத அப்பாவி மக்களை, வெளியேற்றி விட்டு திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா? – இவ்வாறு கேள்வி எழுப்பி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளைப் பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியைச் சேர்ந்த, 46 கிராமங்கள் இதில் உள்ளன. அப்பகுதிவாழ் மக்கள் வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 2022-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 80 யானைகள் இருப்பதாக  அன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை தேவர்சோலா- நிலம்பூர் மற்றும் ஓவேலி. தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் 34,796 குடும்பங்கள் வசிக்கின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில், 2,547 குடும்பங்கள் வசிக்கின்றன.

அதேபோல மசினக்குடி வனக்கோட்டத்தில் 61 யானைகள் இருப்பதாக 2023 கணக்கெடுப்பில் தெரியவந்தது. இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள சீகூர் வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் 513 குடும்பங்கள் வசிக்கின்றன.

கூடலூரில், தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் குத்தகை காலம் முடிந்த  தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் சென்று விடும் எனவும், பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற  வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கூடலூர் மற்றும் மசினக்குடி கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள 61,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை  யானை வழித்தடம் எனக் கூறியுள்ளார்கள். இவ்வளவு பெரிய பகுதியை வழித்தடமாக மாற்றும்போது, யானைகள் தங்கள் வாழ்விடங்களை மாற்றும் அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த 61,000 ஹெக்டேர் பகுதியில் 1193 ஹெக்டேர் நிலப்பரப்பில் 10 பகுதிகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள். முதுமலை முதல் சத்தியமங்கலம் வரை உள்ள காடுகள் வழியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் யானைகள் சென்று வருகின்றன; மனிதர்களும் அவற்றை சீண்டுவதில்லை.  அப்படிப்பட்ட சூழலில், திடீரென யானை வழித்தட  அறிக்கை ஏன் என்பது தான் அப்பகுதி மக்கள் முன் வைக்கும் கேள்வி.

பொதுமக்கள்  பல ஆண்டுகாலமாக யானைகளோடு தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று சூழலியல் நிபுணர்கள் பலரும் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது.  சுற்றுச்சூழல், வனப்பகுதி பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் திமுக அரசு பின்பற்றுவதாகத்  தெரியவில்லை. மனம்போன போக்கில் தன்னிச்சையாக இந்தத்  திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிகிறது. 

2000-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் 2017இல் மீண்டும் ஒரு கணக்கெடுப்பில், 18 வழித்தடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. 2023இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது 42 என்கிறார்கள்.

மேலும் இந்த அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள். சாதாரண மக்கள் இதை எப்படி படித்து புரிந்துகொள்வார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என பீற்றிக்கொள்ளும் திமுக அரசின் லட்சணம் இது தான். தமிழக அரசின் அறிக்கையை தமிழில் தயாரிக்க திராணியற்ற இவர்கள் தான் தமிழ் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். 

ஆங்கிலத்தில் சாதாரண மக்களுக்குப் புரியாத மொழியில் அறிக்கை என்று ஒன்றை வெளியிட்டு, என்ன நடக்கிறது என்று யாரும் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்குவதும், இதனைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதும் தான் இதன் பின்னால் இருக்கும் திமுக அரசின் சதித்திட்டம்.

தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதாக இவர்கள் கூறுவது வேடிக்கையான ஒன்று. 

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களோ, கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதிகளில் உள்ள மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை, இப்போது வெளியிடப்பட்டிருப்பது ஒரு திட்ட வரைவு மட்டுமே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்களிடம் இது குறித்து கருத்து கேட்கவில்லை. தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் சென்று கருத்து கேட்போம் என்கிறார். 

தமிழக அரசிடம் நான் கேட்கும் கேள்வி இது தான். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அவசர கதியில் இந்த அறிக்கையை வெளியிட  வேண்டிய அவசியம் என்ன? மக்களிடம் கருத்துக் கேட்கக்கூட கால அவகாசம் இல்லை என்றால், ஏன் உடனடியாக வெளியிட வேண்டும்? 

யாரையும் வெளியேற்றினால், அவர்களுக்குத்  தகுந்த நஷ்ட ஈடும், மாற்று இடமும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மதிவேந்தன் கூறுகிறார். இதில் இருந்தே அந்தப் பகுதியில் காலம் காலமாக வசிக்கும் மக்களை வெளியேற்றி விட்டு அந்தப் பகுதியை ஆக்கிரமிக்கும் திட்டம் திமுக குடும்பத்திற்கு வந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. 

கூடலூரின், ஓவேலி பகுதியில் புலிகள் காப்பகத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நஷ்ட ஈடும், மாற்று இடமும் தரப்படுவதாக சொன்ன வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. 

பல தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் ஒருபோதும் யானைகளின் வாழ்விடங்களையோ, வழித்தடங்களையோ ஆக்கிரமித்ததில்லை. அப்படிப்பட்ட மக்களை வெளியேற்றி விட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு வழங்குவதற்காகத்  தான் அவசர கதியில் யானை வழித்தடம் என்ற புதிய பீதியை திருட்டு மாடல் திமுக அரசு செய்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

யானைகள் வழித்தடத்தை காக்க வேண்டும் என்ற கடமை எல்லோருக்கும் உள்ளது. அதை மக்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. அதேசமயம் மக்களின் சந்தேகங்களை தீர்க்காமல், அப்பாவி மக்களின் நிலத்தை அபரிக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மக்களிடம் கருத்து கேட்பதை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள இருப்பதாகத்  தெரிகிறது. அதற்குப் பதிலாக கடைக்கோடி மக்களிடமும் நேரடியாக சென்று கருத்து கேட்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

-Dr.L. முருகன் (மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை  மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர்)

IPL 2024: அந்த சம்பவத்துக்கு பின்… சுதாரித்துக் கொண்ட கே.எல்.ராகுல்!

ipl 2024 - 2026

58ம் நாள்: ஐபிஎல் 2024 – 17.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும் என்பதையும்  மும்பையில் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நேற்று தெரிவித்திருந்தோம்.

எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவதாக மும்பை அணி விளையாடியபோது மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆட்டம் முழுமையாக நடைபெற்றது. 

லக்னோ அணி (214/6, நிக்கோலஸ் பூரன் 75, கே.எல். ராகுல் 55, மார்கஸ் ஸ்டோயினிஸ் 28, ஆயுஷ் பதோனி 22, க்ருணால் பாண்ட்யா 12, நுவன் துஷாரா 3/28, பியுஷ் சாவ்லா 3/29) மும்பை அணியை (196/6, ரோஹித் ஷர்மா 68, நமன் தீர் 62*,  டிவால்ட் ப்ரிவிஸ் 23, ஹார்திக் பாண்ட்யா 16, இஷான் கிஷன் 14, ரவி பிஷ்னோய் 2/37, நவீன் உல் ஹக் 2/50) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. இதனால் லக்னோ அணி முதலில் மட்டையாட வந்தது. இன்று லக்னோ அணிக்கு கே.எல். ராகுலும் தேவதத் படிக்கலும் தொடக்கவீரர்களாக இறங்கினர்.

படிக்கல் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் ராகுல் (41 பந்துகளில் 55 ரன் 3 ஃபோர், 3 சிக்சர்) 17.1ஆவது ஓவர் விளையாடினார்.

மூன்றவதாகக் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (22 பந்துகளில் 28 ரன்), தீபக் ஹூடா (9 பந்துகளில் 11 ரன்), அர்ஷத் கான் (பூஜ்யம் ரன்) ஆகியோருக்கு இன்று நல்ல நாளாக அமையவில்லை.

ஆனால் நிக்கோலஸ் பூரன் இன்று அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 29 பந்துகளில் 5 ஃபோர், 8 சிக்சர்களுடன் 75 ரன் எடுத்தார். 75 ரன்களில் 68 ரன் கள் ஃபோர்களிலும் சிக்சர்களிலும் வந்தன.

ஆயுஷ் பதோனி (10 பந்துகளில் 2 ரன்), க்ருணால் பாண்ட்யா (12 ரன்) இருவரும் கடைசி ஓவர்களில் அதிக ரன் சேர்த்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 6 விக்கட் இழப்பிற்கு 214 ரன் எடுத்தது. மும்பை அணியி நுவன் துஷாராவும் பியுஷ் சாவ்லாவும் தலா 3 விக்கட் எடுத்தனர். 

215 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மா (38 பந்துகளில் 68 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அவருடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய டிவால்ட் ப்ரிவிஸ் (20 பந்துகளில் 23 ரன்), இஷான் கிஷன் (15 பந்துகளில் 15 ரன்), ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 16 ரன்) என அனைவரும் ரன்ரேட்டை தொடர்ந்து தேவையான அளவில் வைத்திருந்தனர்.

மும்பை அணியில் இன்று சரியாக விளையாடதவர்கள் சூர்யகுமார் யாதவ் (பூஜ்யம் ரன்), மற்றும் நெஹல் வதேரா (1 ரன்) இருவரும்தான். கடைசி கட்டத்தில் நமன் தீர் (28 பந்துகளில் 62 ரன், 4 ஃபொர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடினார்.

இருப்பினும் 20 ஓவர்களில் மும்பை அணியால் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  

லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை பெங்களூருவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். நாளை பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. 

17.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
ஹைதராபாத்1375150.406
சென்னை1376140.528
டெல்லி147714-0.377
லக்னோ147714-0.667
பெங்களூரு1367120.387
குஜராத்145712-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை144108-0.318

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

santhanam movie - 2026
#image_title

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ – திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்
பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்.28 ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து, சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இப்படத்துக்கு, ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில், சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பாலசரவணன், ’லொள்ளு சபா’ மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, ஜி.என். அன்புச்செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச்செழியன் ஆகியோர் கோபுரம் பிலிம்ஸ் என்ற பேனரில் தயாரித்தனர்.

இதில், எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம். தியாகராஜன் எடிட்டிங் பணிகளை செய்தார்.

பாடல் வரிகளை, விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து , மே.17- ல் உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் சார்பில், மதுரையில் ரசிகர்களை சந்திக்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் சந்தித்து குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கலந்துரையாடினார்.

IPL 2024: குஜராத் Vs ஹைதராபாத்… வென்றது மழை!

ipl 2024 - 2026

57ம் நாள்: ஐபிஎல் 2024 – 16.05.2024

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழைகாரணமாக ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

இந்த முடிவின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு கொல்கொத்தாவுடன் ஒரு ஆட்டம் பாக்கியிருக்கிறது. ஹைதராபாத் அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்னும் ஒரு ஆட்டம் பாக்கியிருக்கிறாது. இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து யார் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பெறுவார்கள் என முடிவாகும். 

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். மும்பையில் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

16.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
ஹைதராபாத்1375150.406
சென்னை1376140.528
டெல்லி147714-0.377
பெங்களூரு1367120.387
லக்னோ136712-0.787
குஜராத்145712-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை13498-0.271

IPL 2024: பஞ்சாப் அணி வெற்றி; ஆனாலும் பலனில்லை!

ipl 2024 - 2026

56ம் நாள்: ஐபிஎல் 2024 – 15.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

ராஜஸ்தான் அணியை (144/9. ரியான் பராக் 48, அஷ்வின் 28, டாம் கோலர் காட்மோர் 18, சஞ்சு சாம்சன் 18, போல்ட் 12, சாம் கரண் 2/24, ஹர்ஷல் படேல் 2/28, ராஹுல் சாஹர் 2/26) பஞ்சாப் அணி (18.5 ஓவரில் 145/5, சாம் கரன் 63, ஜிதேஷ் ஷர்மா 22, ரிலீ ரோஸ்கோ 22, ஜானி பெயிர்ஸ்டோ 14, ஆவேஷ் கான் 2/28, சாஹல் 2/31) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 ரன்) இன்றும் ஜொலிக்கவில்லை. முதல் ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் டாம் கோலர் காட்மோர் (18 ரன்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (15 பந்துகளில் 18 ரன்) நிலைத்து ஆடவில்லை.

இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ரியன் பராக் (34 பந்துகளில் 48 ரன், 6 ஃபோர்) மற்றும் அஷ்வின் (19 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இவகளுக்குப் பிறகு ஆடவந்த துருவ் ஜுரல் (பூஜ்யம் ரன்), ரோவ்மன் போவல் (4 ரன்), டொன்னொவன் ஃபெரேரா (7 ரன்), போல்ட் (12 ர்ன), ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 3 ரன்) ஆகியோர் சரிவர விளையாடாததால் ராஜஸ்தான் அணி 20ஆவது ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாகப் பந்துவீசினர்.

145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியின் வீரர்கள்  4.5ஆவது ஓவருக்குள் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்), ஜானி பெயர்ஸ்டோ (14 ரன்), ரிலீரோஸ்கோ (22 ரன்), ஷஷாங்க் சிங் (பூஜ்யம் ரன்) என வரிசையாக சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 8 ஓவர் முடிவில் 4/48.

அதன் பின்னர் அணித்தலைவர் சாம்கரன் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஜித்தேஷ் ஷர்மா (20 பந்துகளில் 22 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். கடைசியாக அஷுத்தோஷ் ஷர்மா (11 பந்துகளில் 17 ரன்) சாம் ரனுடன் இணைந்து ஆடி அணிக்கு வெற்றியத் தேடித்தந்தார்.

பஞ்சாப் அணி 18.5 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்து 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. 

இன்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் நிலையில் மாற்றமில்லை; அது 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலேயே உள்ளது. 

பஞ்சாப் அணியின் அணித்தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சாம் கரண் தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

15.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
டெல்லி147714-0.377
பெங்களூரு1367120.387
லக்னோ136712-0.787
குஜராத்135711-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை13498-0.271

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

madurai chozhavanthan spiritual news - 2026
#image_title

உலக வேண்டியும், ஆதிசங்கரர் ஜெயந்தி விழா!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள, ஶ்ரீ மலையாளம் ஶ்ரீ க்ருஷ்ணையர் வேத சாஸ்திர பாடக சாலையில், பாடசாலை அத்யாபகர் ஶ்ரீ வெ. வரதராஜ பண்டிட் , தலைமையில் பல வேத விற்பன்னர்களாலும், மற்றும், வேத பாடசாலை வித்யார்த்திகளாலும் அதி விமர்சையாக நடைபெற்றது.

மேற்படி, வைபவம் லோக க்ஷேமத்திற்காகவும், மழை வேன்டியும், குருவின் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டியும், அன்று காலை 7.05 க்கு மேல் குரு வந்தனம், விக்னேஷ்வரர் பூஜை, புண்யாகவாசனம், ஶ்ரீ சங்கர பகவத் பாதாச்சார்யர் க்ராம ஊர்வலம், சங்கர பகவத் பாதர் த்யான ஆவாஹன சோடஷ உபசாரங்கள், சங்கர பகவத் பாத அஷ்டோத்திரம், மகன்யாச ருத்ர ஜெபம், உபநிஷத் பாராயணங்கள், அதனைத் தொடர்ந்து, கணபதி ஹோமம்,
ருத்ர ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம், சொத்தாரா ஹோமம், மஹா பூர்நாஹுதி, சங்கர பகவத் பாத புணர் அர்ச்சனை, மஹா தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர் வேத பாராயணம்,திராவிட வேதம், ஸ்தோத்ர பாராயணம்,
தட்சிணா மூர்த்தி அஷ்டகம், தோடகாஷ்டகம், சங்கர பகவத் பாத பிக்ஷா வந்தனம், மஹா தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெற்றது.


சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான், மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது.

பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண் வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம் பிள்ளை குடும்பத்தினர் சார்பாக, அன்னதானம் வழங்கப் பட்டது.பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம். கே. முருகேசன், கமிட்டி செயலாளர் ஆதி பெருமாள், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வீரணன், முத்துக்குமரன் நகை மாளிகை உரிமையாளர் இருளப்பன் என்ற ராஜா, பைனான்சியர் முத்துராமன் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாலை திருவிளக்கு பூஜை . இரவு அம்மனும் சுவாமியும், யான வானத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதி உலாவும் நடைபெறும்.

உபயதார் செந்தில் என்ற தில்லை சிதம்பரம் பிரசாதம் வழங்கினார். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சுகாதார பணி மற்றும் கூடுதலாக தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து இருந்தனர். நாளை மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம், வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.


பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை வந்தடைந்த பக்தர்களை மேளதாளம் முழங்க அதிர்வேட்டு, வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு ,பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்.

இதையொட்டி , 10 நாட்கள் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 21ந்தேதி பக்தர்கள் சந்தனக்குடம், பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் முளைப் பாரி ஊர்வலம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் காரணக்காரர்கள், விழாக் குழுவினர், அசோக்நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.