Home Blog Page 229

சுறுசுறுப்புடன் சிவகாசி: கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

flags in sivakasi - 2026

மக்களவை தேர்தல் சிவகாசியில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்..

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அனைத்து கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரம்…
விருதுநகர் மாவட்டம், தேர்தல் என்றாலே, கட்சியினர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை கரைவேட்டி, கட்சிக்கொடி, தொப்பி,சின்னம் என எல்லாம் அதகளப்படும். அதன்பொருட்டு பிரசாரத்திற்கு தேவையான துண்டு பிரசுரம் முதல் சுவரொட்டிகள், பேனர்கள் அச்சிடும் பணிகளும் சூடுப்பிடிப்பது வழக்கம்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் “குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தற்போது அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், தொப்பி மற்றும் சின்னங்கள் பொறித்த அட்டை மற்றும் பிளாடிக் மாஸ்க் உள்ளிட்டவைகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி, தேசிய கட்சிகளான பாஜக,காங்கிரஸ், மாநில கட்சிகளான அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சி பாகுபாடு இல்லாமல் இல்லாமல் அனைத்து கட்சிகளின் வரவேற்பு பேனர்கள், கட்சிகொடிகள், சின்னம், தோரணங்கள், துண்டு, தொப்பி ஆகியவை என அந்தந்த கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதில் குறிப்பாக புதுவரவாக ஸ்டார் வடிவுலான கொடிகள் அனைத்து கட்சியினரிடையே வரவேற்பை பெற்று வருகிறது‌. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், “ஒரு ஸ்டார் கொடியின் விலை ரூ. 2.50 பைசா தான். மேலும் 30 வகையான கொடிகள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பம்சமாகும்.

மேலும் தேர்தல் சமயத்தில் தான் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளருக்கும் விற்பனையாளர்களுக்கும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து கட்சிக்கொடி தயார் செய்வதற்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஆனால் ,தற்பொழுது கட்சிக் கொடிகளின் ஆர்டர்கள் மந்தமாக உள்ளது.

அதற்கு காரணம் இன்னும் பல கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்து அறிவிக்கவில்லை. , முன்னனி கட்சிகள் தங்கள் கூட்டணியை அறிவித்த பிறகுதான் தேர்தல்களம் சூடு பிடிக்கும் எனவும் அதற்கு பிறகு கட்சிக்கொடிகள் தயாரிக்கும் பணி தீவரமடைய என்றும் அந்த சமயத்தில் இந்த தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் ஒரு படி முன்னேற்றம் அடையும் என்றும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்தார்கள்.

SADHGURU SWAMI SRI GNANANANDA OF TAPOVANAM..!

0
gnanananda swamigal - 2026

J K SIVAN

Many of us know the name SWAMI GNANANANDA of Tapovanam, but those who have had His dharshan are quite fortunate. He was a great saint who lived amidst us until recently. I write this for the information of those who have not heard about Him or not fortunate to have His dharshan. For those who know about Him and have read about Him, let this refresh their memory.

Sri Gnanananda was a Himalayan sage, a great yogi and a legend in his own lifetime. He conquered the aging process of body keeping everyone guessing about his age. I have heard many devotees say that he lived for about 350 years. He would parry all questions about it, as many were curious to know the secret of His longevity. He used to direct them to inquire about the Immortal Spirit, Athma within, and not worry about the mortal perishable body. He would not speak about the past, His sadhana, His miracles and other spiritual attainments, which were obviously extraordinary and known to those who were His close devotees. Swamiji always considered that all achievements belong to the realm of the ego. He never used to guide the disciples but requested them to self search for knowledge of Atma.

He lived from moment to moment, in the Eternal Now, with no thoughts of a dead yesterday and unborn tomorrow.

Swami Gnanananda’s early life is an unknowable mystery. It is believed that He was born nearly two hundred years ago. It is reported that He was born in a Karnataka village near Mangalore, on the west coast of South India. Even as a boy, by the grace of the Almighty, He walked to Pandharpur, a great center of Maharashtra mysticism. There He met His guru, the pontiff of the northern regional center of advaita at Badrinath, established by Sri Adhi Sankaracharya. Swami Gnanananda accompanied His guru to Srinagar in Kashmir and after the latter’s mahasamadhi He spent many years performing austerities in the higher altitudes of the Himalayas, visited Kailash,, Nepal, Burma, and Sri Lanka before settling in Tamil Nadu. Sometime around 1860 Swamiji visited Chidambaram. Swamiji walked everywhere for over many decades as a parivrajaka, dedicated monk, coming into contact with the spiritual luminaries of His time. At the beginning of 20th century Swamiji stayed in the Sampathgiri Hills of Polur near Tiruvannamalai.

Swamiji was with Sri Aurobindo, who arrived Pondicherry from Chandarnagore. Sri Gnanananda also met with Sri Ramana Maharshi in the Virupaksha Cave. He was first and foremost a paramahamsa parivrajaka, a true wandering monk without belongings or obligations. He remained a simple sadhu roaming alone, in anonymity, as a true sanyasi till His end.
He moved away as disciples built ashrams for Him. After a long time He settled down at Thapovanam on the outskirts of the ancient temple town of Tirukovilur on the banks of a sacred river Pennar, within the spiritual aura of Arunachala. The ashram is situated about 1 km away from the 400 year-old samadhi tomb of another great Hindu saint, Sri Raghottama Swami. It is located on the Tiruvannamalai-Tirukovilur highway, about 200 km from Chennai. I have been fortunate to visit His ashram and meditate for about an hour.

The earliest inmates of the ashram, were monks mainly from Sri Shivananda Ashram of Rishikesh in the Himalayas. Later, the locals, mostly house holders stayed in the ashram and served the saint. Brahmacharis came for spiritual guidance and served the guru and learnt vedic scripts under monks who trained them. Many came for initiation into monastic life. Sri Gnanananda was deeply interested in monastic revival and gave initiation into traditional sannyasa to many.

In 1969 Sadguru Gnanananda established a retreat center at Yercaud, a hill station, called Sri Gnanananda Pranava Nilayam for meditation on Atman and “OM”, the pranava. There is no ritual or communal worship at Yercaud. Sri Gnanananda propagated the importance of Karma Yoga and Bhakti Yoga. Devotees in large number were trained in His ashram for worship of deities. Thus Thapovanam sannyasins are trained in study and practicing meditation side by side with bhaktas, devotees singing kirtans in the praise of the Lord. Some of them prefer ritualistic worship with Vedic chants. Thus the unique institution represents the many facets of the Master’s personality.

Fr. Henri Le Saux, a Benedictine monk from the monastery of Kergonan in France met Swamiji at Thapovanam in December 1955 and became Swami Abhishiktananda. He together with Fr. Jules Monchanin, founded a Christian ashram at Shantivanam, Kulitalai, near Trichy in Tamil Nadu. He was already acquainted with the teachings of Bhagawan Sri Ramana Maharshi, the Sage of Arunachala and of the Upanishads, and was attracted to the caves of Arunachala at Tiruvannamalai. Sri Gnanananda also made a very deep impression on him. As advised by him, he came again to Thapovanam in February 1956 for two weeks of retreat in silence and meditation. He enabled the disciples to know Vedanta, the upanishads, and taught them mahavakyas explaining them in detail for easy understanding.

Sri Gnanananda was not for all cheap spirituality. His teaching is fundamentally the way of total renunciation so that finally there is no ego left to manifest itself. His teachings are the same as that of the Upanishads.. Being is Knowing. Gnanananda’s whole being radiated a pure and tender love, a love which was complete for each and everyone. Devotees visiting Tapovanam received Swamiji’s abundant love. It exclusively filled everyone’s heart and resulted in a high degree of detachment. It was the personality of the Self alone, the Atman, in each person which was immediately perceived by Him with no discrimination of caste, gender or creed. Sri Gnanananda was a Rishi living out of the pages of the Upanishads.

A Jesuit priest from Tamil Nadu, drawn to advaita, met Sri Gnanananda. He asked the sage whether he should become a Hindu to pursue his advaitic Vedantic sadhana. Swamiji told him that there was no need to change one’s religion. Vedanta is the transcendent element in all great religions. Everyone should go deep into his own religion and would discover it there.
Sri Gnanananda preached that one should evolve athma vicharam to realize God as his own Self, which is the transcendent element in all religions. Like the nucleus of the atom, the innermost core of any religion explodes when the abyss of man’s consciousness is pierced to its depth by the ray of Pure Awakening.

பிரதமர் மோடியுடன் சேலம் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் ராமதாஸ்; பாஜக.,வுடன் கைகோத்த பாமக.,!

bjp with pmk - 2026

மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைத்து பாமக., போட்டியிடுகிறது. கூட்டணியில் பாமக.,வுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் மேடையில் பாமக., தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக., பாமக., இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு கையெழுத்தாகிறது.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கான முதல் கட்டத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, கூட்டணி, தொகுதிப் பங்கீடு இவை குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பேசி வருகின்றன. முன்னதாக முதல் கூட்டணியாக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேசி அறிவித்து தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்து வேலைகளில் இறங்கி விட்டன.

பாஜக.,வின் தே.ஜ., கூட்டணியில் சிறு சிறு கட்சிகள் இணைந்து கடந்த காலங்களில் நடைபெற்ற பிரதமர் மோடியின் கூட்டங்களில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். எனினும் பெரிய கட்சியான பாமக.,வுடன் பேச்சுவார்த்தையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள்.

அதேநேரம் கடந்த சில நாட்களாக பாமக.,வுடன் அதிமுக.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எனினும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக., பொதுச்செயலர் பழனிசாமியின் இல்லத்தில் பாமக., சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. எனினும் தாங்கள் பழனிசாமியை சந்திக்க செல்லவில்லை என அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர், பாமக., எம்எல்ஏ., சேலம் அருள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதற்காக பாமக.,வின் உயர்மட்டக் குழு திங்கள்கிழமை நேற்று கூடியது. மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பாமக., நிர்வாகிகளுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக., மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பாஜக.,வுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதன் பின்னர் செவ்வாய்க் கிழமை இன்று காலை பாஜக., பாமக., கட்சிகளிடையே தொகுப் பங்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ள பாஜக., தலைவர் அண்ணாமலை, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், பாமக., தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது மகிழ்ச்சிகரமான சூழல் நிலவியதாகக் கூறப்பட்டது. இதன் பின்னர் இரு தரப்பும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தைலாபுரத்தில் அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, “10 ஆண்டு காலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுடன் இணைந்து போட்டியிடுகிறோம். நாட்டின் நலன் கருதியும் கட்சியின் நலன் கருதியும் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது வெறுப்பான சூழல் உள்ளது. மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இதற்கென இந்த முடிவை எடுத்துள்ளோம். மோடி 3வது முறையாக பிரதமராவார்“. இவ்வாறு” என்று, அன்புமணி கூறினார்.

பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய போது, “பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பாமக., இணைந்துள்ளது. இதற்கு ராமதாசுக்கு நன்றி. ராமதாஸ் கனவை மோடி நிறைவேற்றுவார். இது வலுவான கூட்டணி. மக்கள் புதிய மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றனர். எனவே இந்தக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். நேற்று இரவில் இருந்து தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 ல் அனைவரும் நினைக்கும் மாற்றம் வரும். மோடியின் மேடையில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அமர வேண்டும். அதற்காக இன்று அவசர, அவசரமாக சேலம் வந்தோம். இந்தியாவுக்கு வழிகாட்டும் தலைவராக ராமதாஸ் இருப்பார். அவருக்கு நல்ல மரியாதை அளிப்போம். 10 தொகுதிகளில் பாமக., போட்டியிடும்” என்று தெரிவித்தார்.

மோடியின் மனதை வென்ற கோவை மக்கள்: 1998 குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு மோடி அஞ்சலி!

modi in covai - 2026

கோவை, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணியாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 1998ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்..

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக திங்கட்கிழமை இன்று மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவைக்கு வந்தார். முன்னதாக, கர்நாடக மாநிலம் ஷிவ்மோகாவில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு  தமிழகத்தின் கோவைக்கு வந்தார்.   கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறிப் புறப்பட்ட பிரதமர் மோடி, கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகில் இருந்து திறந்த வாகனத்தில் பேரணியாக வந்தார்.  சாலையின் இரு புறங்களிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடி.. மோடி.. என உற்சாகக் குரல் எழுப்பி, பூக்களைத் தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். வழிநெடுக நின்று வரவேற்பு கொடுக்கும் மக்களைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்து புன்னகைத்தார்.  அவ்வப்போது, வாகனத்தில் உடன் வந்த அண்ணாமலையிடம் கூட்டத்தைக் கைகாட்டி விளக்கம் கேட்டு வந்தார். அவருக்கு அண்ணாமலை விளக்கம் அளித்தார். வாகனத்தில் வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.  

பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்ட பாஜக., தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி பிரதமரை வரவேற்றனர். தங்கள் கைகளில், மோடியை வரவேற்று பதாகைகளையும் வைத்திருந்தனர்.  பொய்க்கால் குதிரை ஆடியும், சிறுவர் சிறுமியர் வீணை இசைத்தும் கோவை தெருக்களை ரம்யமாக்கினர்.  பிரதமர் மோடியை இசைக் கலைஞர்கள், வேத விற்பன்னர்கள் தங்கள் பாணியில் வரவேற்றனர்.

பிரதமர் மோடியை வரவேற்க சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைத்து பாஜக.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர். சாலையின் இருபுறமும், கூடிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர். இந்தப் பேரணி, வடகோவை, டி.பி.ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ., தொலைவுக்கு நடைபெற்றது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

முன்னதாக, இந்தப் பேரணிக்கு கோவை காவல் துறையினர் தடை விதித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பள்ளித் தேர்வுகள் காரணமாக பேரணி நடத்த அனுமதிக்க இயலாது என்று கூறினர். உடனே பாஜக.,வினர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் தனிப்படையினர் பார்த்துக்  கொள்வார்கள் என்றும், மாலை 5.30க்கு மேல்தான் பேரணி என்பதால், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறி, பேரணிக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு அளிப்பதுதான் போலீஸாரின்  கடமை என்று நீதிபதி குறிப்பிட்டார். மேலும், தான் செயல்படுத்திய திட்டங்களைக் கூறி மக்களைச் சந்திக்க பிரதமர் விருப்பப் படுகிறார் என்றால் அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் குறிப்பிட்டார். இதை அடுத்து, இன்று பேரணி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இந்தப் பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி, 1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து காரில் புறப்பட்டு இரவு 7.15க்கு, கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கச் சென்றார். நாளை கோவையில் இருந்து விமானம் மூலம் பாலக்காட்க்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

வஞ்சிக்கப்படும் தென்காசி பகுதி; அண்ணாமலை ‘மனசு’ வைக்க ரயில் பயணிகள் கோரிக்கை!

railway news - 2026
#image_title

வஞ்சிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வரும் தென்காசி பகுதி ரயில் பயணிகளின் கோரிக்கைகளை தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை தலையிட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்று, ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக, அண்ணாமலைக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் கடிதம், கடந்த ஜனவரி மாதமே அனுப்பப் பட்டிருக்கிறது. எனினும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்பதால், மீண்டும் அண்ணாமலையிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு, மார்ச் 18ம் தேதியிட்ட மின்னஞ்சலில், அண்ணாமலையும் தங்களது மின்னஞ்சல் கடிதம் கிடைத்தது. தங்கள் கோரிக்கைகளுக்கு ஆவன செய்கிறோம் என்று பதில் அணுப்பியிருக்கிறார்.

நெல்லை வரை வந்த ஈரோடு ரயில், செங்கோட்டைக்கு நீட்டிக்கப்பட்டதில் அண்ணாமலையின் பங்கு அதிகம் என்பதால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம் வலியுறுத்தி, ரயில் திட்டங்களை தென்காசி பகுதி மக்கள் பயனடைய மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் எல்.எம். முரளி, செயலர் கே.எச்.கிருஷ்ணன் ஆகியோர், கடந்த ஜனவரியில் அண்ணாமலைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…

வணக்கம். எங்கள் பகுதியான செங்கோட்டையின் ரயில் தேவைகள் பற்றி கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைக்கிறோம்.

வெகு விரைவில் நாடாளுமன்ற தேர்தல்கள் வரவிருப்பதால் எங்கள் வேண்டுகோள்களை விரைவில் தாங்கள் பெற்று தந்திட பணிவன்போடு வேண்டுகிறோம்.

1) கடந்த சில ஆண்டுகளாக செங்கோட்டை – தென்காசி – கடையநல்லூர் -சங்கரன்கோவில் – ராஜபாளையம்- ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – திருத்தங்கல் பாதையில் நிரந்தரமான புதிய ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

எங்கள் தேவைகள்

1) தினசரி பகல் நேர முன்பதிவில்லா செங்கோட்டை – கோயம்புத்தூர் & கோயம்புத்தூர் – செங்கோட்டை ரயில்கள் வழி மதுரை திண்டுக்கல் பழனி.
கோவையில் வேலை பார்ப்போர் ,
கல்லூரிகளில் படிப்போர்,மற்றும் பழனியில் முருகனை தரிசனம் செய்வோர் ஆகியோர் இந்த ரயில்களால் பெரிதும் பயனடைவர்.

2) தென்காசியிலிருந்து வடகாசியான வாரணாசிக்கு வாராந்திர விரைவு ரயில்கள் தேவை.

3) செங்கோட்டை – திருப்பதி தினசரி விரைவு ரயில் இயக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

4) மதுரையோடு நிற்கும் மும்பாய் , புதுடெல்லி, ஹைதராபாத் ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.தற்போது விருதுநகர் – சிவகாசி – ராஜபாளையம் -தென்காசி செங்கோட்டை மின்சார வழித்தடம் கடந்த சில மாதங்களாக மின்சார இன்சின்களால் இயக்கப்படுவதால் இந்த ரயில்களை நீட்டிப்பு செய்யலாம்.மேலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நல்ல தண்ணீர் வசதி லோக்கோ பைலட்டுகள் விடுதி பயண டிக்கட் சோதனை அதிகாரிகள் ஓய்வறை மற்றும் ரயில்களை சுத்தம் செய்யும் ஒப்பந்தக்கார ஊழியர்கள் உள்ளதால் ரயில்களின் நீட்டிப்பால் எந்த தடங்கலும் வராது.

5) தற்போது செங்கோட்டை சென்னை இடையே வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதிவேக ரயிலை தினசரி ரயிலாக மாற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6) செங்கோட்டை – மயிலாடுதுறை & மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் தினசரி முன்பதிவில்லா ரயில்களின் பெட்டிகளை 18 ஆக கூட்ட வேண்டும்.இதில் முன்பதிவு வசதியோடு கூடிய இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதியுள்ள பெட்டியை இணைக்க ஆணை பெற்றுத்தர வேண்டும்.

7) செங்கோட்டை – சென்னை இடையே ராஜபாளையம் சிவகாசி மதுரை வழியாக வந்தே பாரத் ரயிலோ அல்லது அம்ருத பாரத் ரயிலோ விரைவில் துவக்க வேண்டும்.
நன்றி! வணக்கம்!

இந்நிலையில், இன்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்

செங்கோட்டை தென்காசி வட்டார மக்கள் கீழ்க்காணும் புதிய ரயில்களை தென்காசி செங்கோட்டை வழியாக தெற்கு ரயில்வே இயக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்

1) தினசரி காலையிலும் மாலையிலும் முன்பதிவில்லா திருநெல்வேலி – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – திருநெல்வேலி ரயில்கள் வழி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்

(2)இதே மாதிரி தினசரி முன்பதிவில்லா ரயில்கள் மதுரை – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – மதுரை காலையிலும் மாலையிலும் வழி விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்

(3)வாரம் மூன்று நாட்கள் ஓடும் சிலம்பு அதிவேக ரயிலையும் செங்கோட்டை தாம்பரம் அதிவேகரயிலையும் தினசரி ஆக்க வேண்டும்

(4) திருவனந்தபுரம் / கொல்லம் இவற்றிலிருந்து செங்கோட்டை வழியாகவோ அல்லது திருநெல்வேலியில் இருந்து அம்பை பாவூர்சத்திரம் தென்காசி வழியாகவோ கீழ்கண்ட ஊர்களுக்கு விரைவு ரயில்கள் உடனடியாக தேவை.

1) மும்பாய்
2) டெல்லி
3)மைசூர் / பெங்களூர்
4)மங்களூர்

5)வாரணாசி

6)ஹைதராபாத் வழி திருப்பதி

7)செங்கோட்டையில் இருந்து தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் வழியாக
சென்னைக்கு அம்ருத பாரத் ரயில்கள் விடவேண்டும்

8) தென்காசி -விருதுநகர் வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கலாம் என ரயில் சோதனை ஓட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதால் தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

9)2017ல் சில நாட்களே ஓடி நிறுத்தப்பட்ட செங்கோட்டை – தாம்பரம் பகல் நேர முன்பதிவில்லா அந்தியோதயா ரயில்களை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும்.

10)தற்போது புனலூரோடு நிற்கும் ரயில்களை தென்காசி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

இதர கோரிக்கைகள்

1) செங்கோட்டையில் தற்போது 3 நடைமேடைகளே உள்ளன. மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்க வேண்டும்.
2) செங்கோட்டை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்
3) செங்கோட்டையில் பிட்லைன் அமைக்க வேண்டும்
4) பகவதிபுரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டிகளுக்கான தண்ணீர் மற்றும் இதரவசதிகள் & இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டு பொதிகை சிலம்பு ரயில்கள் இவை செங்கோட்டை வந்து சேர்ந்த பிறகு பகவதிபுரம் செல்ல வேண்டும். மீண்டும் மாலையில் செங்கோட்டைக்கு வர வேண்டும்.

பவன் கல்யாண் பேசியபோது மின் கம்பத்தில் ஏறிய தொண்டர்கள்; மோடி செயலால் நெகிழ்ந்த மக்கள்!

pm modi in ap meeting - 2026

நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பிலான பொதுக்கூட்டம் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் நடைபெற்றது. தெலுகுதேசம், ஜனசேனா, பாஜக., தொண்டர்கள் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி செய்த செயல், சமூகத் தளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக் கூட்டத்தில் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, பொதுக் கூட்டத்தைப் பார்க்க வந்த தொண்டர்களில் சிலர், அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறினர்.

இதைப் பார்த்ததும் பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செய்த செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உரையின் போது தொண்டர்கள் மின்கம்பத்தில் ஏறுவதைக் கண்ட பிரதமர் மோடி, உடனே பவன் கல்யாணிடம் உரையை நிறுத்துமாறு குறிக்கிட்டார். பின்னர் தானே எழுந்து வந்து மைக்கில், தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அவர்களை மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்குமாறு வலியுறுத்தினார்.

“அங்கு மின் வயர்கள் உள்ளன. அங்கு என்ன செய்கின்றீர்கள்? உங்களது உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது. தயவு செய்து கீழே இறங்குங்கள். ஊடகத்தினர் உங்களப் படம் எடுத்துள்ளனர். இப்போது கீழே வாருங்கள். அங்கிருக்கும் காவலர்கள், தயவு செய்து மக்களை பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், எங்களுக்கு அது மிகுந்த வலியை ஏற்படுத்திவிடும்” என்று பேசிக் கொண்டே இருந்தார். அவர் சொல்லச் சொல்ல, ஒவ்வொருவராக மின் கம்பத்தை விட்டுக் கீழே இறங்கி வந்தனர். அனைவரும் கீழே இறங்கியதைப் பார்த்த பிறகு தான், மோடி தனது இருக்கைக்கு திரும்பிச் சென்றார்.

அதன் பிறகு, ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் பிரதமர் மோடி சொன்னதை தெலுகில் சொல்லி, யாரும் மின் கம்பம் பக்கம் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தனது உரையைத் தொடர்ந்தார்.

மேடையில் அமர்ந்து கொண்டு, கீழே எவ்வளவு நுணுக்கமாக மக்களை, மக்களின் மனங்களைப் படிக்கிறார் பிரதமர் மோடி என்று பலரும் சமூகத் தளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

புதிய பாரதத்தின் உதயத்துக்கு கட்டியம் கூறும் அயோத்தி ராம்லல்லா பிராண ப்ரதிஷ்டை!

abjps nagpur 2024 - 2026

நாகபுரி தீர்மானம் : அயோத்தி ராம் லல்லா பிராணப் பிரதிஷ்டை பற்றி ஆர்.எஸ்.எஸ் – “புதிய பாரத உதயத்திற்கு கட்டியம்”!

நாகபுரியில் 2024 மார்ச் 15,16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இயற்றபட்ட தீர்மான வாசகம்:

“ஸ்ரீ ராமர் அவதரித்த தலத்தில் 2024 ஜனவரி 22 அன்று ஸ்ரீ ராம் லலா (குழந்தை ராமர் ) விக்ரகத்தின் மகத்தான தெய்வீக பிரதிஷ்டை உலக வரலாற்றின் ஈடிணையற்ற பொன்னேடாக அமைந்தது. வணக்கத்திற்குரிய மகான்கள், ஆன்றோர் வழிகாட்டுதலில் நாடு தழுவிய அளவில் ஹிந்து சமுதாயத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுக்கால தொடர் போராட்டமும் தியாகமும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரின் ஒருமித்த திடவுறுதி ஆகியவை மோதலின் ஒரு நீண்ட அத்தியாயத்திற்கு மகிழ்ச்சியான தீர்வு தந்தன. இந்த நன்னாளை கண்கூடாக காணும் பெரும் பேற்றின் பின்னணியில் ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள், தியாகம் புரிந்த கரசேவகர்கள், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயம், அரசு நிர்வாகம் என அனைவர் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் அகில பாரத பிரதிநிதி சபை சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துவதுடன், மேற்கூறிய அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்ரீ ராமர் கோவிலில் பூசிக்ககப்பட்ட அட்சதை விநியோக இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் தீவிரமாகப் பங்கேற்றார்கள். லட்சக்கணக்கான ராம பக்தர்கள் அனைத்து நகரங்களிலும், பெரும்பாலான கிராமங்களிலும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களைத் தொடர்பு கொண்டனர். 2024 ஜனவரி 22 அன்று, பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அற்புதமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வீதி தோறும் ஊர் தோறும் தன்னெழுச்சியான ஊர்வலங்கள், ஒவ்வொரு வீட்டிலும் தீபத் திருவிழா, கோயில்கள், மடங்களில் காவிக்கொடி தாங்கி பஜனை போன்றவற்றால் சமுதாயத்தில் ஒரு புதிய ஆற்றல் பொங்கியது.

“அயோத்தி பிரதிஷ்டை நன்னாளில், நாட்டின் மத, அரசியல் சமதாய வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் வந்து கலந்து கொண்டதும் அனைத்து சம்பிரதாயங்கள், மதங்களின் மரியாதைக்குரிய துறவிகள் வந்திருந்ததும் ஸ்ரீ ராமபிரானின் லட்சியங்களுக்கு ஏற்ப இணக்கமான, நன்கு ஒருங்கிணைந்த தேசிய வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்தது. தேசிய மறுமலர்ச்சியின் புகழ்பெற்ற அத்தியாயத்தின் தொடக்கத்தையும் இது குறிக்கிறது. ஸ்ரீராமர் பிறந்த மண்ணில் ராம் லலாவின் (குழந்தை ராமரின்) விக்ரக பிரதிஷ்டையால், அந்நியர்களின் ஆட்சிக் காலத்திலும், போராட்டக் காலத்திலும் ஏற்பட்ட அவநம்பிக்கை தன்னுணர்வின்மை ஆகியவற்றை உதறி சமுதாயம் வெளிவருகிறது. ஒட்டுமொத்த சமுதாயமும் ஹிந்துத்துவ உணர்வில் திளைத்து, தன் “சுயத்தை” அறிந்து அதன் அடிப்படையில் வாழத் தயாராகி வருகிறது.

மரியாதா புருஷோத்தமராம் அண்ணல் ராமனின் வாழ்க்கை, சமூகப் பொறுப்புகளில் உறுதியாக இருந்து, சமுதாயத்திற்காகவும், தேசத்திற்காகவும் தியாகம் புரிய நமக்கு உந்துதல் தருகிறது. ராமரின் ஆட்சி முறை உலக வரலாற்றில் “ராம ராஜ்யம்” என்ற பெயரில் இடம் பெறுகிறது. அதன் கொள்கைகள் அனைவருக்குமானவை; நித்தியமானவை. வாழ்க்கை விழுமியங்களின் சீரழிவு, மனித உணர்வுகளின் சரிவு, அதிகரித்து வரும் வன்முறை, நாடுபிடிக்கும் கொடுமை போன்ற சவால்களை எதிர்கொள்ள ராமராஜ்ய கருத்து முழு உலகிற்கும் இன்றும் முன்மாதிரியாக உள்ளது.

“ராமபிரானின் லட்சியங்களை வாழ்வில் நிலைநிறுத்துவதற்கு ஒட்டுமொத்த சமுதாயமும் உறுதிமொழி எடுக்க வேண்டும், அப்போதுதான் ராமர் கோயில் புனரமைப்பு நோக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது பிரதிநிதி சபையின் திடமான கருத்து. இன்று சமுதாயத்தில் ஸ்ரீராமரின் வாழ்க்கை காட்டும் தியாகம், அன்பு, நீதி, வீரம், நல்லிணக்கம், நியாயம் போன்ற நிரந்தரப் பண்புகளை மீண்டும் நிலைநாட்ட வேண்டியது அவசியம். அனைத்து வகையான பரஸ்பர பகைமை, வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்குவதே ஸ்ரீராமரின் உண்மையான வழிபாடு.

“சகோதரத்துவம், கடமை, கௌரவமான சமூக நீதி ஆகியவற்றை உறுதி செய்யும் திறன்மிக்க பாரதத்தை உருவாக்க அனைத்து பாரதியர்களுக்கும் பிரதிநிதி சபை வேண்டுகோள் விடுக்கிறது. நலன்கள் எல்லாம் கொண்ட உலகளாவிய அமைப்பை உருவாக்குவதில் பாரதம் அப்போதுதான் முக்கிய பங்கு வகிக்க முடியும்”.

வளர்ச்சிப் பாதையில் ஆர்.எஸ்.எஸ்.

சங்க ஷாகாக்கள் ஒரு பார்வை:
1) தினசரி ஷாகாக்கள்:
45,600 இடங்களில் 73,117 ஷாகாக்கள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டினை விட 2,987 இடங்களில் 4,466 ஷாகக்கள் அதிகரித்துள்ளது.

2) வாராந்திர மிலன்: 27,717
கடந்த ஆண்டினை விட 840 அதிகம.

3) சங்க மண்டலி (மாதம்): 10,577
கடந்த ஆண்டைவிட 155 அதிகம்.

நகரங்கள் & பெரு நகரங்களில் 10,000 இடங்களிலும், கிராமப்புறங்களில் 43,000 இடங்களிலும் ஷாகாக்கள் நடைபெறு கின்றன.

ஷாகாக்களில் 60% மாணவர்கள் &
40% தொழில் புரிபவர்களும் உள்ளனர்.

40 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் ஷாகாக்கள் 11% உள்ளன.

நாட்டிலுள்ள 99% மாவட்டங்களில் சங்கப் பணிகள் நடைபெறுகின்றன.

சங்கப் பணியின் கட்டமைப்பு:
1) மாநிலங்கள்: 45
2) விபாக்: (2 அல்லது 3 மாவட்டங்கள் அடங்கியது)
3) மாவட்டம்
4) கண்ட: (ஒன்றியம்)
5) மண்டல்: (5 முதல் 10 கிராமங்கள் அடங்கியது)

922 மாவட்டம், 6,597 கண்டாவில், 27,720 மண்டலாவில் 73,117 தினசரி ஷாகாக்கள் நடை பெறுகின்றன:

  • ஆர்.எஸ்.எஸ். ஆண்டறிக்கையிலிருந்து மேற்கண்ட புள்ளி விவரங்கள் திரட்டப் பட்டது.

ரூ.509 கோடி திமுக.,வுக்கு அளித்த லாட்டரி மார்டின்! பின்னணி என்ன?!

mkstalin - 2026

தேர்தல் பத்திரங்கள் – புதிய தரவுகள் வெளியீடு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியீடு – யார் யாரிடம் இருந்து எவ்வளவு நிதிகள் பெறப்பெற்றது என்ற தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்கனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது.

அன்றே ஜூனியர் விகடன் இதழில் இது குறித்த செய்தி வெளியானது. கடந்த 2019ம் வருடம் “500 கோடி தேர்தல் நிதி!!”சிக்கிய மார்டின் சிக்கலில் திமுக” என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது. அதற்கு, ஸ்டாலின் விகடன் குழுமம் மீது 1 கோடியே 10 லட்சம் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விவரங்கள், அதற்கு பிறகு வெளியான தகவல்கள் இல்லை. ஆனால் 2021 ஜூலை 21ல், தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளிக்கப் படும் என செய்தி கசிந்தது. 1968ல் அண்ணாவால் லாட்டரி திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டதாகவும் தமிழக அரசின் வருவாயைப் பெருக்கும் திட்டம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதேபோல் அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6 கோடி பெற்றுள்ளது. இவற்றில் ரூ.4 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் அளித்துள்ளது புதிய விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிதி அளித்தபோது அதிமுகவின் பொருளாளராக ஓபிஎஸ் இருந்துள்ளார். இதுதவிர கோயம்புத்தூர் தலைமையிடமாக கொண்ட லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அதிமுகவுக்கு நிதியாக அளித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் புதிய தரவுகளின்படி, தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக மொத்தமாக ரூ.6,986.5 கோடியை பெற்றுள்ளது. இவற்றில் 2019-20ம் ஆண்டு மட்டும் ரூ.2,555 கோடியை பாஜக பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளது.

  • நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ரூ.944.5 கோடி பெற்றுள்ளது,
  • ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.442.8 கோடி பெற்றுள்ளது.
  • சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 181.35 கோடி பெற்றுள்ளது.
  • மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1397 கோடி பெற்றுள்ளது.
  • கே சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1322 கோடி பெற்றுள்ளது.
  • சமாஜ்வாடி கட்சி ரூ.14.05 கோடி பெற்றுள்ளது.
  • அகாலிதளம் ரூ.7.26 கோடி பெற்றுள்ளது.
  • அதிமுக ரூ.6.05 கோடி பெற்றுள்ளது.
  • தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சம் பெற்றுள்ளது.

ஏப். 19 அன்று தமிழகத்தில் தேர்தல்!

election voting - 2026

ஏப்ரல் 19 அன்று, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், முதல் கட்டத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அதன்படி, ஏப். 19 அன்று தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியும் என்று தேர்தல் ஆணையர் கூறினார்.

அதன்படி,
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள்:
மனு தாக்கல் – மார்ச் 20
மனு தாக்கல் முடிவு – மார்ச் 27
மனுக்கள் பரிசீலனை – மார்ச் 28
மனுக்கள் திரும்பப் பெற – மார்ச் 30
வாக்குப் பதிவு – ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4

நாடு முழுவதும் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 96.8 கோடி பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் மார்ச்-16 இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தவை…

நடப்பு, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் இறுதியில் முடிவடைகிறது. இதற்குள் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. இதற்கென ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

தேர்தல் அனைத்தும் சவால் நிறைந்தது. நியாயமான நேர்மையான வெளிப்படையான தேர்தல் நடத்தப்படும் . 800 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்தேன்.

தேர்தலுக்காக 55 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. இந்தத் தேர்தலில், நாடு முழுவதும் 96. 8 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் 49.7 கோடி பேர் ஆண்கள் , பெண்கள் 47. 7 கோடி பேர்.

இவர்களில் மாற்றுத்திறனாளிகள் 88. 4 லட்சம் பேர், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 82 லட்சம் பேர்.

வயது மூப்பால் வாக்குச் சாவடிக்கு வர இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

முதல் முதலாக 1. 82 கோடி பேர் ஓட்டளிக்க உள்ளனர். ஏப்ரல் 1ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.

மக்கள் வாக்களிக்க 10.7 லட்சம் வாக்குச் சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வன்முறை இல்லாத அமைதியான தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடி நீர் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும்.

மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். சர்வதேச எல்லைகளிலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணி நடக்கும்.

பணம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். போலி செய்திகள் பரவாமல் கண்காணிக்கப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித் துறை, அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். மாலை 6 மணிக்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

வாக்குக்கு பணம் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹெலிகாப்டர்கள், தனி விமானங்களில் தீவிர சோதனை நடத்தப்படும். சமூக விரோதிகளுக்கு எதிராக கடும்0 நடவடிக்கை எடுக்கப் படும்.

சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலி செய்தி பரப்பக்கூடாது. எல்லாம் விமர்சனத்துக்கு உட்பட்டது. தேர்தல் ஆணையத்தை கூட விமர்சிக்கலாம். ஆனால் பொய்ச் செய்திகளைப் பரப்புவது கண்டறியப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலியான தகவல்கள், செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்கக்கூடாது. தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் இருக்கக்கூடாது.

கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பிரசாரம் செய்ய வேண்டும். மத ரீதியில் தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது. விளம்பரங்களை நம்பத் தகுந்த செய்தியாக மாற்றக்கூடாது.

பிரசாரத்தில் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளை ஈடுபடுத்தக் கூடாது.

இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. வேட்பாளர் விவரங்களை செயலியில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹாப்பி ஸ்ட்ரீட் எனும் அரக்கனின் கோர முகம்; உஷார் பெற்றோர்களே!

madurai happy streets - 2026
#image_title
  • ஆனந்தன் அமிர்தன்

எந்த விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணப்படாது… பெரிய பெரிய கிரிமினல் விசயங்கள் தான் மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படியான ஒன்று தான் ” #ஹாப்பி_ஸ்ட்ரீட் ”. இதைப் படிச்சா உங்க குடும்பத்திற்கு நல்லது.

ஹாப்பி ஸ்ட்ரீட் என்றவுடன், ஏதோ கலாச்சார சீரழிவு என்று நினைத்துக் கொண்டு கலிகாலம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால், அது லெஃப்ட்ல போட்ட இண்டிகேட்டர். நிஜத்தில் வலதுபுறமா கூட்டிட்டுப் போய் போதைப் பொருள் விற்கும் தளம் அது!

மனிதர்களுக்கு பொதுவாகக் கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. பண்டிகைகள் / கோவில் திருவிழாக்கள், நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் போடுவது, அவ்வளவு ஏன்…. ஞாயிற்றுக் கிழமை கறி எடுத்து குடும்பத்துடன் சேர்ந்து புசிப்பது கூட கொண்டாட்ட மனநிலை தான். இது தனிமையில் கிடைக்காது. குறைந்தபட்சம் சிறு கூட்டம். வாய்ப்பு கிடைத்தால் பெருங்கூட்டம்.

கொஞசம் யோசித்துப் பாருங்கள்… நியூ இயர் கொண்டாட்டம் என்பதில் என்ன நடக்கிறது? யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லிக்கலாம். ஆரவாரமாக எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் கூட கத்திக் கொள்ளலாம். வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டிக் கொள்ளலாம். குடித்து விட்டு பொது நாகரீகம் இல்லாமல் அலையலாம். ஏன் பொதுவிடத்திலேயே குடிக்கலாம். இதெல்லாம் கூட்டமாகச் செய்யும் போது குற்றவுணர்வின்றி போகும்.

எல்லாரும் செய்வதால் தவறில்லை என்ற மாயை. எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன்.

இப்ப புரியுதா…? கூட்டமா செய்யும் போது சமூக பயம் , சமூக ஒழுங்கு, கட்டற்ற கொண்டாட்ட மனநிலை.

சரி, ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்கும், போதைப் பொருள் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் பெரிய ஸ்பீக்கர் வைத்து இளைஞர்களின் தினவுக்கு இரையாக ஆடச் செய்வர். ஆண்களுக்கு பெண்கள் முன் வித்தையைக் காட்டவும், பெண்களுக்கு ஆண்கள் முன் ஈர்ப்பைக் காட்டவும், ஆட்டத்தில் உற்சாகமும், அதீத கொண்டாட்டமும் பொங்கும். நிகழ்ச்சி முடிந்ததும், ஏதோ பெரிதாகக் கொண்டாடியது போன்ற ஒரு மகிழ்ச்சி உருவாகும்.

அடுத்து….?

நாமெல்லாம் நண்பர்களுடனோ சில குடும்பங்கள் சேர்ந்தோ டூர் போய்விட்டு திரும்பும் போதே… அடுத்து எங்கே போகலாம் என்று திட்டமிடுவோம் இல்லையா? அதே போல அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டிற்கு இப்படி போகணும், அவனையும் கூப்பிடணும் லைட்டா சரக்கு அடிச்சுட்டுப் போனா கூடுதல் மஜாவா இருக்கும் என்றெல்லாம் திட்டம் எழும். அடுத்த சில நாட்களுக்கு ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடியதை எல்லாம் சற்றே மிகைப் படுத்தி நண்பர்களிடம் பகிரப்படும். ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்குப் போகாதவனெல்லாம் சமகால இளைஞன் அல்ல என்பதாக சித்தரிக்கப்படும்.

அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டில் சீனியர்கள் சரக்கடித்து விட்டு வந்திருப்பார்கள். உடன் வந்த குடிப்பழக்கம் இல்லாத பெண்களை, “இன்று மட்டும் கொஞ்சமா” என்று வற்புறுத்துவார்கள். அவர்களும், அவர்கள் வற்புறுத்துவதால் மட்டும் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். இதன்… நீண்ட நாள் இலக்காக…

இந்தக் கூட்டத்திற்குள் ஒருவன் நுழைந்து ஒரு ஸ்டஃப் இருக்கு பாஸ்… யூஸ் பண்ணிப் பாருங்க என்று ஒரு பணக்கார இளைஞனை இழுப்பான். முதலில் ஓசியாக… பிறகு ஷேரிங்காக, அப்புறம் அவனவன் காசில், பிறகு ஸ்டஃப் கிடைக்கவில்லை என்று டிமாண்ட் கூட்டி… வேண்டுமென்றால் கொஞ்சம் மொத்தமாக வாங்கணும். இன்னும் நாலைந்து பேர் ஷேர் பண்ணினால் தான் என்று இன்னும் இளைஞர்களை உள்ளிழுப்பார்கள். இது தான் எல்லா தேசத்திலும் போதை விற்பனை ஆசாமிகளின் சேல்ஸ் டெக்னிக்.

நம்பாதவர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் ஸ்பான்சர்களின் நெட்வொர்க்கை தேடிப் பாருங்கள்.

ஒன்று பத்தாகும், பத்து ஆயிரமாகும். நாளைக்கு பிடிபடுபவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார பெருசுகளாக இருப்பதால், பணத்தை விட்டெறிந்து ரகசியம் காப்பார்கள். இந்த போதைப் பழக்கம் நடுத்தரக் குடும்பத்திற்குள் நுழையும் போது, பணத் தட்டுப்பாட்டால், வழிப்பறி திருட்டு, கொலை வரை சர்வசாதாரணமாகி விடும்.

எச்சூச்மீ…. உங்க வீட்ல இளம் வயதினர் இருக்காங்களா? ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி பேசத் தொடங்கும் போதே செருப்பால் அடித்து அடக்கி வச்சுடுங்க. புள்ள முக்கியமா இல்ல அதோட பிடிவாதம் முக்கியமா?