Home Blog Page 230

ஹாப்பி ஸ்ட்ரீட் எனும் அரக்கனின் கோர முகம்; உஷார் பெற்றோர்களே!

madurai happy streets - 2026
#image_title
  • ஆனந்தன் அமிர்தன்

எந்த விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணப்படாது… பெரிய பெரிய கிரிமினல் விசயங்கள் தான் மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படியான ஒன்று தான் ” #ஹாப்பி_ஸ்ட்ரீட் ”. இதைப் படிச்சா உங்க குடும்பத்திற்கு நல்லது.

ஹாப்பி ஸ்ட்ரீட் என்றவுடன், ஏதோ கலாச்சார சீரழிவு என்று நினைத்துக் கொண்டு கலிகாலம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால், அது லெஃப்ட்ல போட்ட இண்டிகேட்டர். நிஜத்தில் வலதுபுறமா கூட்டிட்டுப் போய் போதைப் பொருள் விற்கும் தளம் அது!

மனிதர்களுக்கு பொதுவாகக் கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. பண்டிகைகள் / கோவில் திருவிழாக்கள், நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் போடுவது, அவ்வளவு ஏன்…. ஞாயிற்றுக் கிழமை கறி எடுத்து குடும்பத்துடன் சேர்ந்து புசிப்பது கூட கொண்டாட்ட மனநிலை தான். இது தனிமையில் கிடைக்காது. குறைந்தபட்சம் சிறு கூட்டம். வாய்ப்பு கிடைத்தால் பெருங்கூட்டம்.

கொஞசம் யோசித்துப் பாருங்கள்… நியூ இயர் கொண்டாட்டம் என்பதில் என்ன நடக்கிறது? யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லிக்கலாம். ஆரவாரமாக எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் கூட கத்திக் கொள்ளலாம். வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டிக் கொள்ளலாம். குடித்து விட்டு பொது நாகரீகம் இல்லாமல் அலையலாம். ஏன் பொதுவிடத்திலேயே குடிக்கலாம். இதெல்லாம் கூட்டமாகச் செய்யும் போது குற்றவுணர்வின்றி போகும்.

எல்லாரும் செய்வதால் தவறில்லை என்ற மாயை. எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன்.

இப்ப புரியுதா…? கூட்டமா செய்யும் போது சமூக பயம் , சமூக ஒழுங்கு, கட்டற்ற கொண்டாட்ட மனநிலை.

சரி, ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்கும், போதைப் பொருள் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் பெரிய ஸ்பீக்கர் வைத்து இளைஞர்களின் தினவுக்கு இரையாக ஆடச் செய்வர். ஆண்களுக்கு பெண்கள் முன் வித்தையைக் காட்டவும், பெண்களுக்கு ஆண்கள் முன் ஈர்ப்பைக் காட்டவும், ஆட்டத்தில் உற்சாகமும், அதீத கொண்டாட்டமும் பொங்கும். நிகழ்ச்சி முடிந்ததும், ஏதோ பெரிதாகக் கொண்டாடியது போன்ற ஒரு மகிழ்ச்சி உருவாகும்.

அடுத்து….?

நாமெல்லாம் நண்பர்களுடனோ சில குடும்பங்கள் சேர்ந்தோ டூர் போய்விட்டு திரும்பும் போதே… அடுத்து எங்கே போகலாம் என்று திட்டமிடுவோம் இல்லையா? அதே போல அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டிற்கு இப்படி போகணும், அவனையும் கூப்பிடணும் லைட்டா சரக்கு அடிச்சுட்டுப் போனா கூடுதல் மஜாவா இருக்கும் என்றெல்லாம் திட்டம் எழும். அடுத்த சில நாட்களுக்கு ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடியதை எல்லாம் சற்றே மிகைப் படுத்தி நண்பர்களிடம் பகிரப்படும். ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்குப் போகாதவனெல்லாம் சமகால இளைஞன் அல்ல என்பதாக சித்தரிக்கப்படும்.

அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டில் சீனியர்கள் சரக்கடித்து விட்டு வந்திருப்பார்கள். உடன் வந்த குடிப்பழக்கம் இல்லாத பெண்களை, “இன்று மட்டும் கொஞ்சமா” என்று வற்புறுத்துவார்கள். அவர்களும், அவர்கள் வற்புறுத்துவதால் மட்டும் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். இதன்… நீண்ட நாள் இலக்காக…

இந்தக் கூட்டத்திற்குள் ஒருவன் நுழைந்து ஒரு ஸ்டஃப் இருக்கு பாஸ்… யூஸ் பண்ணிப் பாருங்க என்று ஒரு பணக்கார இளைஞனை இழுப்பான். முதலில் ஓசியாக… பிறகு ஷேரிங்காக, அப்புறம் அவனவன் காசில், பிறகு ஸ்டஃப் கிடைக்கவில்லை என்று டிமாண்ட் கூட்டி… வேண்டுமென்றால் கொஞ்சம் மொத்தமாக வாங்கணும். இன்னும் நாலைந்து பேர் ஷேர் பண்ணினால் தான் என்று இன்னும் இளைஞர்களை உள்ளிழுப்பார்கள். இது தான் எல்லா தேசத்திலும் போதை விற்பனை ஆசாமிகளின் சேல்ஸ் டெக்னிக்.

நம்பாதவர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் ஸ்பான்சர்களின் நெட்வொர்க்கை தேடிப் பாருங்கள்.

ஒன்று பத்தாகும், பத்து ஆயிரமாகும். நாளைக்கு பிடிபடுபவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார பெருசுகளாக இருப்பதால், பணத்தை விட்டெறிந்து ரகசியம் காப்பார்கள். இந்த போதைப் பழக்கம் நடுத்தரக் குடும்பத்திற்குள் நுழையும் போது, பணத் தட்டுப்பாட்டால், வழிப்பறி திருட்டு, கொலை வரை சர்வசாதாரணமாகி விடும்.

எச்சூச்மீ…. உங்க வீட்ல இளம் வயதினர் இருக்காங்களா? ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி பேசத் தொடங்கும் போதே செருப்பால் அடித்து அடக்கி வச்சுடுங்க. புள்ள முக்கியமா இல்ல அதோட பிடிவாதம் முக்கியமா?

ஆர்எஸ்எஸ்., சங்க முகாம்களின் அமைப்பில் புதிய மாற்றங்கள்!

abjps nagpur 2024 - 2026

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சங்க முகாம்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முகாம் நாட்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ்., சங்க முகாம்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிராதமிக் எனப்படும் ஆரம்ப நிலை முகாம் 7 நாட்களும், முதலாம் ஆண்டு முகாம் 20 நாட்களும், இரண்டாம் ஆண்டு 20 நாட்களும், மூன்றாம் ஆண்டு 25 நாட்களும் இருந்தது.

சங்க முகாம்களின் அமைப்பில் புதிய மாற்றங்கள்:

இப்போது புதிய கட்டமைப்பில், முதன் முதலாக 3 நாட்கள் அறிமுக ஆயத்த வகுப்பு, 7 நாட்கள் பிராதமிக் முகாம் மற்றும் 15 நாட்கள் முதலாம் ஆண்டு முகாம், கார்யகர்த்தர் விகாஸ் வர்க்க -1 20 நாட்கள் மற்றும் கார்யகர்த்தர் விகாஸ் வர்க்க -2 25 நாட்கள் இருக்கும். இந்த வகுப்புகளில் சிறப்பு நடைமுறை பயிற்சியும் இருக்கும்.

2017 முதல் 2023 வரை ஒவ்வொரு ஆண்டும் RSS.org (JOIN RSS) மூலம் புதிதாக சங்கத்தில் இணைவோர் இந்த இணையதளத்தில் RSS இல் சேர வருடம் தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி 2024 இல், ராம் லல்லாவின் பிரதிஷ்டைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக்குழுவின் மூன்று நாள் கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொஸபல்லே உட்பட, 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். 1925ல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு நிறைவு விழா காண்கிறது. மேலும், தற்போது ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகரான நரேந்திர மோடி பிரதமராக உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார். இந்த நேரத்தில், இந்தப் பொதுக்குழு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் செயல்பாடுகள், சாதனைகள், சந்தித்த சவால்கள் குறித்து பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொஸபல்லே அறிக்கை அளித்தார்.

அப்போது அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். ஆர்.எஸ்.எஸ்.,ஸில் பயிற்சி முகாம்கள் என்பது முக்கியமானது. ஏழு நாட்கள் ஆரம்ப நிலை, 20 நாட்கள் முதலாம் ஆண்டு, 20 நாட்கள் இரண்டாம் ஆண்டு, 30 நாட்கள் மூன்றாம் ஆண்டு என, நான்கு கட்டங்களாக பயிற்சி முகாம்கள் நடக்கும். அதில், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் மட்டுமே நடக்கும். ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இருப்பவர்களுக்கு இந்த நான்கு கட்ட பயிற்சி முகாம்களையும் முடிப்பதே லட்சியமாக இருக்கும்.

தற்போது, பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக மூன்று நாட்கள் அறிமுக பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். அடுத்த ஏழு நாட்கள் ஆரம்ப நிலை பயிற்சி முகாம் நடத்தப்படும். முதலாம் ஆண்டு பயிற்சி முகாம் 20 நாட்களுக்கு பதிலாக, 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம்களுக்குப் பதிலாக பொறுப்பாளர்கள் மேம்பாட்டு முகாம்கள் 20 நாட்கள், 25 நாட்கள் என, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய தத்தாத்ரேய ஹொஸபல்லே, ஆர் எஸ் எஸ் என்பது மக்களுக்கான அமைப்பு, அது தனியான அமைப்பல்ல இன்று குறிப்பிட்டு அமைப்பின் நூற்றாண்டு விழாவை மக்களுக்கான விழாவாக கடைபிடிக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.

இவ்ளோ பணம் இவங்க வாங்கிட்டு பாஜக.,வை ‘கை’ நீட்டி… அதிர்ச்சி அளித்த தேர்தல் பத்திர விவகாரம்!

supreme court of india - 2026

நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கும் நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது யதேச்சையானது என்று கருதுவதற்கு இடமில்லை. ஊழலற்ற ஆட்சியை அளிப்போம் என்று கூறி கடந்த பத்தாண்டுகளாக மக்கள் நலப் பணிகளில் சரியான வகையில் திட்டமிட்டு முதலீடுகளை மேற்கொண்டு வரும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது ஏதாவது குற்றச்சாட்டு சுமத்த முடியாதா என்று குயுக்திகளால் நிரம்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடு தேர்தல் பத்திர விவகாரம் என்பது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் குறித்த வலையில் அதன் கூட்டணி கட்சிகளே அதிகம் விழுந்து காயப்பட்டு கிடக்கின்றன என்பது இண்டி கூட்டணிக்கு விழுந்து உள்ள பேரடியாக பேசப்படுகிறது.

தேர்தல் பத்திரங்கள் எனும் நடைமுறை அரசியலில் வெளிப்படை தன்மையும் தூய்மையும் இருக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. அதாவது அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் மறைமுகமாக கணக்கில் வராத கருப்பு பணத்தை கொடுத்து காரியங்கள் சாதித்துக் கொள்வதை தடுப்பதற்காக, வெளிப்படையாக தேர்தல் நன்கொடைகளை கட்சிகள் பெற வேண்டும் என்ற நோக்கில் வங்கிகளின் மூலமாக கணக்கில் வரும் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் எந்த கட்சி எந்த நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றது என்ற விவரத்தை அதிகாரபூர்வமாக பராமரிக்க முடியும்.

இந்நிலையில் தான் ‘அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றை வாங்கியவர்கள், அவற்றில் எவ்வளவு அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டன போன்ற விவரங்களை தாக்கல் செய்ய, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் எஸ்பிஐ., வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவ்வாறு வங்கி அளிக்கும் தகவல்களை, தேர்தல் ஆணையம் தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, பல்வேறு தயக்கங்களின் ஊடாக, அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ., வழங்கியது. இந்தத் தகவல்களை தேர்தல் ஆணையம் தன் இணையதளத்தில் வெளியிட்டது.

இரண்டு தொகுப்புகளாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 337 பக்கங்கள் உள்ள முதல் தொகுப்பில், பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள், நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்பு ஆகியவை வெளியிடப்பட்டு உள்ளன. அடுத்து 426 பக்கங்கள் உள்ள இரண்டாவது தொகுப்பில், எந்தெந்த கட்சிகள், அந்தப் பத்திரங்களை பணமாக்கியுள்ளன என்ற விவரம், தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. தேதி வாரியாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் குறிப்பிட்ட நிறுவனம் மொத்தம் எவ்வளவு தொகை வழங்கியுள்ளது, அது எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது போன்ற விவரங்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்படவில்லை. அதுபோல, அரசியல் கட்சிகள் மொத்தமாகப் பெற்றுள்ள நன்கொடை தொடர்பான விவரமும் இதில் வெளியிடப்படவில்லை. இந்த பட்டியலின் படி…

நன்கொடை அளித்த நிறுவனங்கள்

  • பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் – 1,368 கோடி ரூபாய்
  • மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் — 966 கோடி ரூபாய்,
  • குயிக் சப்ளை செயின் நிறுவனம் – 410 கோடி ரூபாய்,
  • வேதாந்தா நிறுவனம் – 400 கோடி ரூபாய்,
  • ஹால்தியா எனர்ஜி – 377 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.
  • பார்த்தி குழுமம் – 247 கோடி ரூபாய்,
  • எஸ்ஸல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் – 224 கோடி ரூபாய்

என தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடைகளை வழங்கியுள்ளன.

நன்கொடை பெற்ற கட்சிகள்

பாஜக., காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், திமுக., பாரத் ராஷ்டிரீய சமிதி (பிஆர்எஸ்.,), அதிமுக., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் என, பெரும்பாலும் நாட்டின் அனைத்து கட்சிகளுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளன.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் திரட்டிய நிதி எவ்வளவு?

எஸ்பிஐ அழித்த பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டதன் புள்ளிவிவரத்தின் படி,

2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக தேசிய கட்சியான பா.ஜ.க. ரூ.6,060.51 கோடி நிதி திரட்டிyuள்ளது.

தேசிய கட்சிகளில் காங்கிரஸ் கட்சி ரூ.1,421.86 கோடி நிதியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ரூ.65.45 கோடி நிதி பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் மொத்தம் ரூ.5,221 கோடி நிதி பெற்றுள்ளன. நிதி திரட்டிய பிராந்திய கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக. 4-வது இடத்தில் உள்ளது.

பிராந்திய கட்சிகள் பெற்ற நிதி விவரம்:

  • திரிணாமுல் காங்கிரஸ் – ரூ.1,609.53 கோடி
  • பாரத் ராஷ்டிர சமிதி – ரூ.1,214.70 கோடி
  • பிஜு ஜனதா தளம் – ரூ.775.50 கோடி
  • தி.மு.க. – ரூ.639 கோடி
  • ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் – ரூ.337 கோடி
  • தெலுங்கு தேசம் கட்சி – ரூ.218.88
  • சிவ சேனா – ரூ.159.38
  • ராஷ்டிரிய ஜனதா தளம் – ரூ.73.5
  • மதச்சார்பற்ற ஜனதா தளம் – ரூ.43.40
  • சிக்கிம் கிரந்திகாரி கட்சி – ரூ.36.5
  • தேசியவாத காங்கிரஸ் – ரூ.31 கோடி
  • ஜன சேனா கட்சி – ரூ.21 கோடி
  • சமாஜ்வாடி கட்சி – ரூ.14.05 கோடி
  • ஐக்கிய ஜனதா தளம் – ரூ.14 கோடி
  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ரூ.13.5
  • அகாலி தளம் – ரூ.7.2 கோடி
  • அ.தி.மு.க. – ரூ.6.05 கோடி
  • சிக்கிம் ஜனநாயக முன்னணி – ரூ.5.5 கோடி

மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு கோடிக்கும் குறைவான நிதியை பெற்றுள்ளன.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ., வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு முன் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ., வங்கி முழுமையாக வெளியிடாதது ஏன்? பத்திரங்களின் பிரத்யேக எண் ஏன் குறிப்பிடப்படவில்லை தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது. அதை அளித்தால்தான் விவரங்கள் முழுமை பெறும். எனவே அதனை எஸ்.பி.ஐ., தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய கட்சியான பாஜக 18 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது ஆனால் அது பெற்ற நன்கொடை தனித்தனியாக பார்த்தால் மிகக் குறைவு. அதே நேரம் ஒரு மாநிலத்தை மட்டுமே ஆளக்கூடிய மாநிலக் கட்சிகள் உச்சபட்ச அளவாக நன்கொடை பெற்றுள்ளன. எனவே முழுமையான புள்ளி விவரங்கள் வரும்பொழுது மாநில கட்சிகளின் வண்டவாளம் தெரிய வரும் என்கின்றனர் அரசியல் நோக்கங்கள்.

சிஏஏ – பதிவு செய்ய மொபைல் ஆப்; அறிமுகப் படுத்தியது மத்திய அரசு!

caa mobile app - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி, குடியுரிமை கோரி விண்ணப்பிக்க பதிவு செய்யும் வகையில், புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில், இஸ்லாமியர்களின் சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறைகளில் ஈடுபட்டதால் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார். அதன்படி, நாடு முழுவதும் மார்ச் 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த, அந்நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளான முஸ்லிம்கள் அல்லாத அந்நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வகை செய்கிறது.

இதை அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ன் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மொபைல் ஆப் – செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்காக இணைய தளம் உருவாக்கப்பட்ட நிலையில், ‘CAA-2019’ என்கிற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.


‘CAA-2019’ Mobile App for making application under Citizenship (Amendment) Act, 2019 has become operational. Home Ministry said that applicants can download the app from Google play store. It can also be downloaded from website – indiancitizenshiponline.nic.in


பிரதமர் மோடி மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது; தமிழக போலீஸுக்கு நீதிமன்றம் பதில்!

chennai highcourt - 2026

பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்திப்பதை ஏதாவது காரணம் சொல்லி தடை செய்ய முடியாது, பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை என்று கூறியது சென்னை உயர் நீதிமன்றம்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18ம் தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி நாடாளுமன்றத்தில் போட்டியிடும் பாஜக., மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மேலும், பிரதமர் மோடி நேரடியாக மக்களை சந்திக்கும் வகையில், பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பாஜக., திட்டமிட்டது.

இது தொடர்பில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்த ஆலோசனையின் போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த அனுமதிக்க, மாநகர காவல்துறை மறுத்தது.

இதை அடுத்து, கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. பொதுத் தேர்வு, மத பதட்டம் உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்தது. மேலும், எந்தக் கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் விளக்கம் அளிக்கப் பட்டது.

இதனால், கோவை மாவட்ட பாஜக., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசமாக விசாரிக்கப்பட்டு, இன்று மாலை 4.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அதில், பிரதமர் மோடியின் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

அப்போது, மக்களை சந்திக்க தலைவர்களை தடுக்க முடியாது என்று, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது…

  • தலைவர்களை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால் மக்களை சந்திக்க அவர்களை தடுக்க முடியாது
  • நலத்திட்டங்களை எடுத்துக் கூறி மக்களை சந்திக்க பிரதமர் விரும்புகிறார்
  • வாகனப் பேரணி மாலை 5 மணிக்கு நடப்பதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது
  • தேர்வை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது
  • பிரதமரின் பாதுகாப்பை சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி செய்துகொள்வார்கள்
  • காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர மத ரீதியாக பதட்டமான பகுதி எனக்கூறி அனுமதி மறுக்கக் கூடாது
  • உரிய பாதுகாப்புடன் நியாயமான கட்டுப்பாடுகளை விதித்து பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும்
  • சட்டம் ஒழுங்கு பிரச்னை இன்றி சுமூகமாக நடப்பதை அனைத்துத் தரப்பும் உறுதி செய்ய வேண்டும்
  • இவ்வாறு, கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு இந்து முன்னணி வைக்கும் கோரிக்கைகள்!

hindumunnani - 2026

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் என்று குறிப்பிட்டு, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

இந்து முன்னணி அரசியல் இயக்கம் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் இந்து சமுதாய நலனை கருத்தில் கொண்டு ஜனநாயக வழியில் பொதுவாக செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கைகளை முன் வைக்கும். இந்து முன்னணியின் கோரிக்கைகளை ஏற்கின்ற கட்சிகளை தேர்தலில் வெற்றி பெற வைக்க நமது ஆதரவை தெரிவித்து ஒட்டுமொத்த இந்துக்களும் வாக்களித்திட வேண்டுகோள் விடுக்கும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணி சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம். அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து முன்னணி ஆதரிக்கும்.

இந்து முன்னணியின் கோரிக்கைகளை ஊடகங்களின் மூலம் பொதுமக்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் இந்து முன்னணியின் கோரிக்கைகள்:

ஆலயங்கள் பாதுகாத்திட..

புராதனமான கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இறைவன் திருமேனிகள், அரிய கட்டிட கலைகள், நமது ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றிற்குச் சாட்சியாக இருக்கும் கல்வெட்டுகள் முதலானவற்றை வழிபாட்டுடன் கூடிய பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக…
ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்து அமைந்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெருகி வருகிறது. குறிப்பாக பாலியல் வன்முறை போன்றவை மிக அதிக அளவில் நடக்கிறது. இதுபோன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் நன்னெறிக் கல்வி, நல்லொழுக்க கல்வி போன்றவை பள்ளி அளவில் இதற்காக நடத்தப்பட வேண்டும்.

பெருகிவரும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும்…

வருங்கால பாரதத்தின் வளமான எதிர்காலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் உள்ளது. ஆனால் அவர்களின் வாழ்வை சீரழித்து சிதைக்கும் வண்ணம் அனைத்து வகையான போதைப் பொருட்களும் நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தை மையப்படுத்தி தாராளமாக புழங்கி வருகிறது. மது உட்பட அனைத்து போதை பொருட்களும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். அவற்றை விற்போர், வாங்குவோர், அவர்களுக்கு உதவுவோர் என அனைவரின் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை விவசாயம்- முன்னுரிமை வழங்குக..

பசுஞ்சாண உரம், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.

*நாட்டுப் பசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக… *

நாட்டுப் பசுவை பாதுகாக்கவும், நாட்டு பசு இனம் பெருகிடவும் கவனம் கொடுக்க வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதியையும், மாட்டுத்தோல் பொருட்களையும் தடை செய்ய வேண்டும். தோல் தொழிற்சாலைகளால் ஆறுகள், நிலத்தடி நீர் நாசமாகிறது. அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாழாவதுடன், மர்ம நோய்கள் பரவுகின்றன. எனவே, மாமிச ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஆகியவற்றைத் தடை செய்ய நடவடிக்கை தேவை.

இந்துக்களும் சேவை மையங்கள், கல்வி நிலையங்கள் நடத்திட அனுமதி.. சலுகை..

சிறுபான்மையினர், அவர்கள் மதத்தை பரப்பிடவும், மதத்தின் பெயரால் சேவை மையங்களும், கல்வி நிலையங்களும் நடத்திடவும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி துறையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி அனுமதி வழங்குகிறது. ஆனால், பெரும்பான்மையான இந்துக்களுக்கு இச்சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இந்த பாரபட்சமான சட்டத்தை நீக்கி, இந்து சமுதாயத்தை, சமயத்தை பாதுகாத்திட, வளர்த்திட சேவை மையங்கள் நடத்திடவும், கல்வி நிறுவனங்கள் நடத்திடவும் அனுமதி அளித்திட வேண்டும். உரிய உதவித் தொகை, வரி சலுகை முதலானவையும் வழங்கிட வேண்டும்.

இந்து விரோத தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை..

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தொடர்ந்து திட்டமிட்டு இந்து விரோத கருத்துக்களை, தேசவிரோத கருத்து திணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைத் தேவை.
குடும்ப உறவுகளை கெடுத்தும், கலாச்சார சீரழிகளை ஏற்படுத்தியும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி மெகா தொடர்களுக்கு தணிக்கை (சென்ஸார்) அவசியம். மது மற்றும் போதை காட்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.

பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..

பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் படுகொலைகள் முதலான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக தடை செய்யப்பட்டுள்ளன. அந்த அமைப்பினர் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேறு பெயரில், வேறு தளத்தில் இயங்கி வருகின்றனர். அவர்கள் இன்னும் முழுவதுமாக கண்காணித்து முடக்கப்படவில்லை. அவர்களுக்கு உதவியவர்கள், குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை முழுமையாக எடுக்கப்படவில்லை. எனவே, பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஊடக கருத்துரிமையை ஒழுங்குப்படுத்த வேண்டும்..

பொய்யுரை விவாதங்கள், தவறான தகவல்களைப் பரப்பும் தொலைக்காட்சி ஊடகத்திற்கும், சமூக ஊடகத்திற்கும் சட்டக் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான தகவல்கள், தேசவிரோத கருத்துக்கள் பரப்புவதையும், சமூக விரோத நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தடுக்க சட்டம் கொண்டுவந்து, கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமூக பொறுப்புணர்வோடு செய்திகள், கருத்துக்கள், விவாதங்கள் நடைபெற வழி காண வேண்டும்.

தேச விரோத கருத்தை பரப்பும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை..

தேசவிரோத கருத்துக்களை பரப்புகின்ற நகர்புற நக்ஸல் அமைப்புகளையும், பயங்கரவாத ஆதரவு அமைப்புகளையும் நாடு முழுவதும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தை சீர்குலைக்கும் போக்கை மாற்றுக..

பட்டாசு, நெசவு போன்ற உள்ளூர் தொழில்களை முடக்கும் போக்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் தொழில்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தீபாவளி, ஜல்லிக்கட்டு, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளை திட்டமிட்டு ஏதேதோ காரணம் கூறி சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நமது பாரம்பரியமான விழாக்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்திட வேண்டும்.

மதமாற்றத்தை தடை செய்க..

மதமாற்றம் தேசிய அபாயம். இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதம் மாற்றுவதைத் தடுக்க நாடு முழுவதற்குமான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

நீர் நிலைகள், மலைகள், மழைக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்..

நீர் நிலைகள், மலைகள், காடுகள் முதலானவை இறை ரூபமாக பார்க்கப்பட்டதால் தான் இது நாள் வரை அவை இருக்கின்றன. சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷனரிகள் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. அதுபோல காடுகள், சதுப்பு நிலங்கள் முதலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும் உறுதியான நடவடிக்கை தேவை.

தேசத்தின் வளர்ச்சியை தடுக்கும் தேசவிரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை..

தவறான பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களைக் குழப்பி, தேசத்தின் வளர்ச்சியை தடுக்க நகர்புற நக்சல் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவர்களை ஒடுக்க உறுதியான சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

ஆன்மீக யாத்திரைக்கு சலுகை வழங்குக..

நாடு நெடுகிலும் இந்துக்கள் யாத்திரை சென்று வருவது தொன்றுதொட்டு நடைபெறும் ஆன்மிக நிகழ்வு. இதன் மூலம் பாரதத்தின் இறையாண்மை, ஒற்றுமை உணர்வு பலப்படுகிறது. எனவே, ஆன்மீக யாத்திரைக்கு சலுகைகள் வழங்கிடவும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முன் வர வேண்டும்.

பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை தடுத்திட..

தமிழகத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் , ரேவ் பார்ட்டி, பப் பார்ட்டி, கிளப் பார்ட்டி போன்றவை அதிகரித்து வருகிறது. இது நமது பண்பாட்டிற்கு எதிரானது மட்டுமல்ல போதை வலையில் இளைஞர்களை சிக்க வைக்கும் வஞ்சகச் செயல். இவற்றையெல்லாம் முற்றிலுமாக தடை செய்ய உறுதி அளிக்க வேண்டும்.

கல்வியில்..

அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியும், மற்றொரு மொழியாக இந்தியோ அல்லது அவரவர் விருப்ப மொழியோ கற்பிக்க வழிவகை வகுக்கப்பட வேண்டும். அத்துடன், ஆரம்பக் கல்வி கட்டாயம் தாய்மொழியில் அமைந்திட வேண்டும்.

ஒவ்வொரு நாளும், யோகா, விளையாட்டு மற்றும் நன்னேறிக் கல்வி வகுப்பும், தற்காப்பு கலைகள் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும்.

மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் (நீட் தேர்வில்) இந்தியாவிலேயே அதிக இடங்களில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், அதன் பலனை எல்லோரும் பெற்றிட, விருப்பம் உள்ள, திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து எட்டாம் வகுப்பு முதலே, இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளியிலேயே தொழில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.

சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை போல, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.

இந்து முன்னணி, வைக்கும் இக்கோரிக்கைகள் குறித்த
அரசியல் கட்சிகளின் மேலான பதிலை உடனே எதிர்பார்க்கிறோம்.

இந்து சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை ஊடகத்தில் வெளியிட்டு, தேர்தலில் அவை வாக்குறுதிகளாக, அரசியல் கட்சிகள் ஏற்றிட, ஊடக நண்பர்கள் உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

“தமிழகத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் விரோதி திமுக.,!” : கன்யாகுமரியில் கர்ஜித்த பிரதமர் மோடி!

modi in kanyakumari - 2026

‛‛தமிழகத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் விரோதி திமுக.,” என்று, கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டிப் பேசினார்.

கன்யாகுமரி, அகஸ்தீஸ்வரத்தில் பாஜக., சார்பில் தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தமிழக பாஜகவில் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்து தன்னையும் இணைத்துக் கொண்ட சரத்குமார் அவரது மனைவி ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். சரத்குமார் பேசும்போது தான் கட்சியில் இணைத்துக் கொண்ட விதம், காரணம், பிரதமர் மோடியின் சிறப்பு இவை குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, கன்னியாகுமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த மண்ணில் தான், அன்று மோடி, ஒற்றுமை யாத்திரையை ஆரம்பித்தார். குமரி மண்ணின் மைந்தராக மோடி உள்ளார். நமது நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவதற்காக உறுதியுடன் இங்கு வந்துள்ளார்.

இண்டி கூட்டணியில் குடும்ப கட்சிகள், வாரிசுகளை பதவியில் அமர்த்தும் கட்சிகளே உள்ளன. மக்களே என் குடும்பம் 142 கோடி இந்தியர்களே எனது குடும்பம் என மோடியின் குடும்பமாக சகோதரராக சகோதரிகளாக உள்ளனர். 400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது. இந்திய மக்களின் உணர்வு.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார். நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்து, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உழைத்து வருகிறார். 1892 ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார். தற்போது வந்துள்ள பிரதமர் மோடி ‛விஸ்வகுரு’ ஆக மாறி உள்ளார்.

2047 ல் மோடி தலைமையில் இந்தியா வல்லரசு நாடாகும். குமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து கட்சிகளும் தேஜ., கூட்டணியில் உள்ளன. 3வது முறையாக மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இது உறுதி என்று பேசினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “மோடி தமது 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு 11 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மோடி பிரதமர் ஆன பின் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. மீனவர் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகம் ஏற்படுத்தி 38,500 கோடி ரூபாய், மீனவர் நலனுக்காக ஒதுக்கி உள்ளார்.

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குமரி, தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்களை ஒரே தொலைபேசி அழைப்பு வாயிலாக பிரதமர் மீட்டார். மீனவர் நலனில் உண்மையான அக்கறையுள்ள தலைவராக மோடி திகழ்கிறார்.

2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் வேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.,க்கள் வென்றனர். எண் மண் மக்கள் யாத்திரை மூலம் 40 தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெறும். 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக., வெற்றி பெற்று 3வது முறையாக மோடி ஆட்சி அமைப்பது உறுதி” என்றார்.

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

  • பாஜக., அரசின் திட்டங்களை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி
  • கேலோ இந்தியாவை நாம் நடத்துகிறோம், அவர்கள் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்தார்கள்.
  • தி.மு.க. தமிழ்நாட்டின் வருங்கால, கடந்த கால வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் எதிரி.
  • ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பு தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களுக்கு வந்தேன்.
  • அயோத்தி விழாவை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்க கூட தி.மு.க. அரசு தடை விதித்தது.
  • புதிய பாராளுமன்ற கட்டடத்தில் நாங்கள் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை நிறுவினோம்.
  • ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர்.
  • தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.
  • திமுக தமிழ்நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரி.
  • மாற்று கட்சி தலைவர்களுக்கு குமரியில் இருந்து வரும் முழக்கம் தூக்கத்தை கெடுத்துள்ளது.

1990களில் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீருக்கு யாத்திரை சென்றேன். இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்துள்ளேன். நாட்டைத் துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். தமிழக மக்களும் வரும் தேர்தலில் தூக்கி எறிவார்கள்.

தமிழகத்தில் இண்டி கூட்டணி எடுபடாது. திமுக., – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும். இண்டி கூட்டணியின் கர்வத்தை தமிழக மக்கள் அடக்குவார்கள். இண்டி கூட்டணி கட்சிகளின் ஊழல் பட்டியல் மிகவும் நீண்டது. 2ஜி, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழல் பட்டியல் நீளும். ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பதே இண்டி கூட்டணி கட்சிகளின் இலக்கு.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக., அலை வீசுகிறது. இண்டி கூட்டணி தமிழகத்தில் எவ்வித வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் முக்கியத் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதிலும் ஊழல் செய்தனர்.

கன்னியாகுமரி மக்களை எப்படி சுரண்டலாம் என்று திமுக.,- காங்கிரஸ் கூட்டணி காத்துக் கொண்டுள்ளது. தமிழக மண்ணில் பெரிய மாற்றத்தைக் காண்கிறேன்.

மார்த்தாண்டம் – பார்வதிபுரம் இடையிலான மேம்பாலம் பாஜக., ஆட்சிக்கு வந்த பின்னர்தான் நிறைவேறியது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை நிறைவேற்றியது பாஜக.,

திமுக., தமிழகத்தின், தமிழ்ப் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல. நமது கடந்த காலத்தையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி.

அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியைப் பார்க்க அக்கட்சி விரும்பவில்லை. தமிழகத்தில் டிவி.,யில் காட்டுவதற்கும் தடை விதித்தது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. நமது பண்டாட்டின் மீது திமுக., வெறுப்பைக் கக்குகிறது. இண்டி கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை மனதாரப் பாராட்டுகிறேன்.

ரயில்வே பணிகளுக்காக 6,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வளர்ச்சிக்கு திமுக., எதிரியாக உள்ளது!

தமிழ்ப் பாரம்பரியத்தை எதிர்க்கும் செயலையும் திமுக., செய்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் அரசு தடை விதித்த போது திமுக., அமைதியாக வேடிக்கை பார்த்தது. ஆனால், ஜல்லிக்கட்டை பாஜக., அரசு தான் மீட்டெடுத்தது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பெருமை. தமிழகத்தின் பாரம்பரியமிக்க சிறப்பு அம்சங்களை மோடி இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதை திமுக., புறக்கணித்தது. இனிமேல் தமிழகத்தின் பெருமையை யாராலும் புறக்கணிக்க முடியாது. மோடி அதனை அனுமதிக்க மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்!

கன்னியாகுமரியில் இவ்வளவு பெரிய ஆதரவுக் குரலை கேட்டு தில்லியில் எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது. உங்களின் அன்பும், பாசமும் ஆதரவும் மோடிக்கு மட்டுமல்ல, மொத்த இந்தியாவிற்கும் பலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இண்டி கூட்டணியினர் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தைச் செய்தவர்கள். திமுக- காங்கிரஸ் செய்த தவறுக்கும் பாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

பாஜக.., அரசு பெண்களுக்கான அரசு. பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசு. ‛இண்டி ‘ கூட்டணிக்கு பெண்களை ஏமாற்ற மட்டும்தான் தெரியும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் அரசு பாஜக., அரசு.

என்னால் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. தமிழைக் கற்காதது மிகப்பெரிய குறையாகவே எனக்கு உள்ளது. அந்தக் குறையைப் போக்க, இனி தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழியில் பேசுவேன். இனி சமூக ஊடகங்களில், நமோ செயலியில், தமிழில் என்னுடைய குரலில் பேசுவேன். அண்ணாமலை அதைப் பற்றி சொல்வார்.. என்று கூறி முடித்துக் கொண்டார் பிரதமர் மோடி.

சமூக ஊடகம், நமோ செயலியில் நமோ தமிழ் மூலம் பிரதமர் தமிழ் மொழியில் பேசுவது குறித்து விளக்கம் தரச் சொன்னதால், மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதுகுறித்து பொதுக்கூட்டத்தில் விளக்கினார். ”செயற்கை நண்ணறிவைப் பயன்படுத்தி நமோ தமிழ் பக்கத்தில், பிரதமரின் பேச்சு அவரின் குரலில் அதே உணர்வில் வீடியோவாக வரும். இதனை, எல்லா சமூக வலைதளப் பக்கங்களிலும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்துக்கு பிரதமர் வரும் போது இங்குள்ள உரைகள் மட்டுமல்லாது, தமிழகத்துக்கு வெளியே மற்ற மாநிலங்களிலும் சென்று பிரதமர் பேசிய உரைகளின் முக்கிய அம்சங்களை தமிழில் கேட்கலாம். அதனை நீங்கள் கேட்பதுடன் மற்றவர்களையும் கேட்கச் செய்ய வேண்டும். ‛மன் கி பாத் ‘ நிகழ்ச்சி போன்று பிரதமர் மோடியின் பேச்சை நமோ செயலியில் நாம் தமிழிலேயே கேட்கலாம்“.” என்று விளக்கினார்.

தேர்தல் தேதி நாளை அறிவிப்பு; 7 கட்டங்களாக நடத்த வாய்ப்பு!

500x300 1167856 election commission - 2026

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலை 7 கட்டங்களாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, அடுத்த அரசு பதவி ஏற்க வேண்டும். எனவே, தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இதனிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். எனவே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணையராக பதவியில் இருந்து வந்தார். இதை அடுத்து இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். இதை அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து முன்னரே முடிவு எடுத்து விட்டதால், அது தொடர்பாக புதிய தேர்தல் ஆணையர்கள் இருவருடனும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார். அவர்கள் தேர்தல் தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்த்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட வுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 6 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படக் கூடும். 48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப் படுமா?: என்ன சொல்கிறார் உள்துறை அமைச்சர்!

1723147 amith sha - 2026

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்ட நிலையில், “தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் இது அமல்படுத்தப்பட்டுள்ளது ஏன்?” என்று கேட்டு, பாஜக., மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதுடன்,  தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநில அரசுகள் சிஏஏ-வை எங்கள் மாநிலத்தில் அமல் படுத்த விடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை:-

பொய் சொல்கிறார்கள்:

வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. ராகுல், மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், பினராயி விஜயன் போன்றோர் வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் சொல்கிறார்கள்.  

,மாநில அரசுக்கு அதிகாரமில்லை:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. அகண்ட பாரதத்தில் ஓர் அங்கமாக இருந்தவர்கள் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்க வேண்டியது நமது தார்மீக, அரசியல் சாசன கடமை.

இஸ்லாமியர்களும் விண்ணப்பிக்கலாம்

இஸ்லாமியர்களும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் உரிமை உள்ளது. யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை. போதிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

குடியுரிமை வழங்குவது; பறிப்பதல்ல!

சிஏஏ என்பது, குடியுரிமை வழங்குவது மட்டுமே. யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. மக்களவைத் தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன்.

திரும்பப் பெறப்படாது:

சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது. நம் நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை. அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். எங்களைக் குற்றம் சாட்டுவதை விட எதிர்க்கட்சிகள் ஏதும் செய்யவில்லை. 

இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். சிஏஏ பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. சிஏஏ-வை திரும்பப் பெறுவது நடக்காத செயல். இது முழுக்க முழுக்க அரசமைப்பு ரீதியாக செல்லும்படியாகும் சட்டம். இந்தச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. 

75 ஆண்டுகளாக சொல்லி வருவது

சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஏர் ஸ்டிரைக் நடத்தப்பட்டபோது கூட அரசியல் ஆதாயம் தேடினார்கள். அதேபோல் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோதும் அதைத்தான் செய்தார். நாங்கள் 1950-ல் இருந்து 370 சட்டப்பிரிவை நீக்குவோம் என்று சொல்லி வந்தோம்.

நிதானம் இழந்த கேஜ்ரிவால்

தில்லி முதல்வர் கேஜ்ரிவால், தன்னுடைய ஊழல் வெளிப்பட்ட நிலையில்,நிதானத்தை இழந்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அந்த மூன்று நாடுகளில் இருந்து வந்தவர்கள் இந்தியாவில்தான வாழ்ந்து வருகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது. அவருக்குக் கவலை இருந்தால், ஏன் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் மற்றும் ரோகிங்க்யாவிற்கு எதிராக அவர் பேசவில்லை? அவர் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார். அவர் பிரிவினையின் பின்னணியை மறந்து விட்டார். அவர் அகதிகளின் குடும்பத்தை சந்திக்க வேண்டும்.

பொய் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்

ஓவைசி, ராகுல் காந்தி, கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி பொய் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல. பாஜக., தனது தேர்தல் அறிக்கையில் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. 2019-ல் மசோதா நிறைவேறிய நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் கால தாமதம் ஆனது. எதிர்க்கட்சிகள் திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்ய விரும்புகிறார்கள். தங்களுடைய வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

சிஏஏ-வை அமல்படுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என உத்தவ் தாக்கரேயிடம் கேட்க விரும்புகிறேன். சிறுபான்மையினர் வாக்குகளுக்கான அவர் திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

தேர்தலுக்குப் பிறகு ஒத்துழைப்பார்கள்

இந்திய அரசமைப்பின் 11-வது சட்டப்பிரிவு குடியுரிமை தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. இது மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசைச் சார்ந்தது அல்ல. தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பாளர்கள் என்று நினைக்கிறேன். 

இவ்வாறு அந்த பேட்டியில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் – இந்திய இஸ்லாமியர்களின் புரிந்துணர்வு!

caa citizenship amendment act1 - 2026
  • இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள நாட்டுப்பற்று:
  • CAA – குடியுரிமை சட்டதிருத்த மசோதாவின் புரிதல்
  • மக்கள் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவித்தல்

குடியுரிமை சட்டதிருத்த மசோதா 2019 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அன்று முதல் இந்த சட்டம் பேசும்பொருளாக மாறிவிட்டது.

குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இதனை தங்கள் மக்களுக்கு பாதகமான சட்டம் என எண்ணுகின்றனர் . இதனுடம் சம்பந்தபட்ட எதிர்ப்பு சம்பவங்களை (சம்பந்தப்பட்ட வன்முறைகள்) யாராலும் மறக்க இயலாது. அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட போதனைகள் மற்றும் முகமது நபியினால் கூறிய எடுத்துக்காட்டுதளின் படி இஸ்லாத்தில் ஒரு நாட்டின் மீது மற்றும் அதன் சட்டதிட்டங்கள் மீது விசுவாசம் கொள்வதன் முக்கியத்துவத்தை இஸ்லாத்தின் அடிப்படையில் ஆராய்வது அவசியமானதாகும் .

இறைநம்பிக்கை மற்றும் நாட்டின் மீது வைக்கும் விசுவாசத்தின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாத்தில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கீழ்படிதல் பற்றி குரானில் ஸுரா அன் நிசா (4:60 ) கூறுகையில் “இறைநம்பிக்கை உள்ளவர்களே , கடவுளை அஞ்சிக் கொள்ளுங்கள் , நபிகள் நாயகத்திற்க்கு கீழ்ப்படியுங்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கீழ்படிந்து செயல்படுங்கள்”.

குரானில் கூறிய இந்த கூற்று நாட்டின் சட்டதிங்கள் மற்றும் நாட்டை ஆழ்பவர்களுக்கு மரியாதை கொடுத்து நடப்பதை இந்திய முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகின்றது. தாய்நாட்டின் மீது உள்ள அன்பு மற்றும் உண்மையான தேசபக்தியே நம்பிக்கையின் அடிப்படை அம்சம் என நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ளார் .

“தாய்நாட்டின் மீது கொண்ட அன்பு நம்பிக்கையின் ஒரு அங்கமாகும்” என்று நபிகள் நாயகம் கூறுகிறார். இஸ்லாமியர்களின் இறைவன் மீது கொண்ட அன்பு மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட அர்ப்பணிப்பு இவை அனைத்தும் முரண்பட்ட கருத்துகள் அல்ல மாறாக அது இரண்டுமே நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.  அமைதியை ஊக்குவிக்கவும் மக்களின் நலனுக்குப் பாடுபடவும் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழியுறுத்துகிறது .

இறைவன் மீது கொண்ட உண்மையான அன்பு மற்றும் இஸ்லாம் இரண்டுமே தாய்நாட்டின் மீது கொண்ட விசுவாசம், மரியாதை மற்றும் நாட்டின் மீது கொண்ட பக்தி இவற்றை நம்முள் ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் பொறுப்புள்ள மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும், அவர்களின் செயல்களில் நீதி மற்றும் நியாயமான கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். சட்டத்தை தன் கையில் எடுத்தல் அல்லது நாட்டிற்க்கு எதிராக சூழ்ச்சி செய்தல் இவை அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவையாகும் .

இஸ்லாம் அமைதி, நீதி மற்றும் சட்டத்தின்படி  ஆட்சி ஆகியவற்றை வழியுறுத்துகிறது.  ஏதேனும் குறைகள் அல்லது கவலைகள் இருப்பின் அனைத்தும் நாட்டின் சட்ட வரையறைக்குள் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். ஒரு தனிமனிதன் சட்டபடி செய்யபடும் மனிதனாக , நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவனாக மற்றும் தன்னால் முடிந்த பங்களிப்பை தன் சமூகத்திற்க்கு வழங்குபவனக இருக்க வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் வழியுறுத்துகிறது .

இந்த புரிதலின் அடிப்படையில் , இந்த சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்பதை இந்திய முஸ்லிம்கள் அறிந்துகொள்ளவேண்டும். இந்த சட்டமானது மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளாகி அந்நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும்.

இஸ்லாத்தின் போதனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், இந்திய முஸ்லிம்கள் தங்கள் தேசத்திற்கு விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஒரு இணக்கமான மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை வளர்ப்பதில் தீவிரமாக பங்கேற்கலாம்.

CAA என்பது இந்திய முஸ்லிம்களை குறிவைத்து ஏற்றப்பட்ட சட்டம் இல்லை, அது மதம் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளான மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட வடிவமாகும்.

CAA பற்றிய தவறான கருத்துக்களை அகற்றி, குரானின் மொழிகளுக்கு ஏற்ப்ப இந்திய இஸ்லாமியர்கள் விசுவாசத்தின் ஆழமான உணர்வை வளர்த்து, இஸ்லாம் பரிந்துரைக்கும் நீதி, அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்தி, தங்கள் நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்கு தீவிரமாக பங்களிக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்திய இஸ்லாமியர்கள்  இணக்கமான சமூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றவேண்டும் .