குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி, குடியுரிமை கோரி விண்ணப்பிக்க பதிவு செய்யும் வகையில், புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில், இஸ்லாமியர்களின் சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறைகளில் ஈடுபட்டதால் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார். அதன்படி, நாடு முழுவதும் மார்ச் 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த, அந்நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளான முஸ்லிம்கள் அல்லாத அந்நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வகை செய்கிறது.
இதை அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ன் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மொபைல் ஆப் – செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்காக இணைய தளம் உருவாக்கப்பட்ட நிலையில், ‘CAA-2019’ என்கிற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
‘CAA-2019’ Mobile App for making application under Citizenship (Amendment) Act, 2019 has become operational. Home Ministry said that applicants can download the app from Google play store. It can also be downloaded from website – indiancitizenshiponline.nic.in