Home Blog Page 231

IPL 2024: ராஜஸ்தானை பின்தள்ளிய டெல்லி அணி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

48ம் நாள்: ஐபிஎல் 2024 – 07.05.2024

ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

இன்று டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

டெல்லி அணி (221/8, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 50, அபிஷேக் போரல் 65, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 41, குல்புடீன் நயிப் 19, அக்சர் படேல் 15, ரிஷப் பந்த் 15, அஷ்வின் 3/24) ராஜஸ்தான் அணியை (201/8, சஞ்சு சாம்சன் 86, ரியன் பராக் 27, ஷுபம் துபே 25, ஜாஸ் பட்லர் 19, ரொவ்மன் போவல் 13, கலீல் அகமது2/42, முகேஷ் குமார் 2/30, குல்தீப் யாதவ் 2/25) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் டெல்லி அணி முதலில் மட்டையாடவந்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (20 பந்துகளில் 50 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் போரல் (36 பந்துகளில் 65 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.

அதற்குப் பின்னர் ஷாய் ஹோப் (1 ரன்),  அக்சர் படேல் (15 ரன்), ரிஷப் பந்த் (15 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஆயினும் அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (20 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் குல்பதீன் நயீப் (15 பந்துகளில் 19 ரன்) எடுத்தனர்.

பின்னர் ரசிக் சலாம் (9 ரன்), குல்தீப் யாதவ் (5 ரன்) எடுத்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 221 ரன் எடுத்தது. 

222 ரன் என்பது அடையக்கூடிய சற்றே கடினமான இலக்கு. இந்த இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய  ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் நான்கு ரங்கள் அடித்து இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய டி20 அணிக்கு தொடக்க வீரராகத் தேர்வாகியிருக்கும் இவரும் ரோஹித் ஷர்மாவும் இதுவரை நல்ல ஆட்டங்களை தொடர்ந்து வழங்கவில்லை. தொடர்ந்து மிகக் குறைவான ஸ்கோரில் ஆட்டமிழக்கிறார்கள் என்பது சற்று கவலைக்குரிய விஷயம்.

மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் (இம்பேக்ட் வீரராக ஆட வந்தவர்) 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனால் வெற்றிக்கான முழுச் சுமையும் சஞ்சு சாம்சனின் தலையில் வ்    களம் இறங்கியது. அவர் 15.4 ஓவர் வரை விளையாடி 46 பந்துகளில் 86 ரன் அடித்தார். அதில் 8 ஃபோர், 6 சிக்சர் அடக்கம். அவருக்குத் துணையாக ரியன் பராக் (22 பந்துகளில் 27 ரன்) மற்றும் ஷுபம் துபே (12 பந்துகளில் 25 ரன்) கொஞ்ச நேரம் கம்பனி கொடுத்தனர். சஞ்சு ஆட்டமிழக்கும்போது அணியின் வெற்றிக்கு 60 ரன் கள் தேவையாக இருந்தது. ஆனால் மற்ற வீரர்களால் அதனை எடுக்க முடியவில்லை. 

ரொவ்மன் போவல் (13 ரன்), டொனோவன் ஃபெரைரா (1 ரன்), அஷ்வின் (2 ரன்), போல்ட் ஆட்டமிழக்காமல் 2 ரன்) மர்றும் ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 7 ரன்) எடுத்தபோதிலும் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.  இதனால் அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தொல்வியடைந்தது. 

டெல்லி அணியின் குல்தீப் யாதவ் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். 

நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

07.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1183161.453
ராஜஸ்தான் 1183160.476
சென்னை1165120.700
ஹைதராபாத்1165120.065
டெல்லி126612-0.316
லக்னோ116512-0.371
பெங்களூரு11478-0.049
பஞ்சாப்10468-0.062
மும்பை12488-0.212
குஜராத்11478-1.320

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

pmmodi speech in meeting - 2026
#image_title

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.  மேலும் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் 100 நாட்களின் தீர்மானங்களின் மீது, பணிகள் நடந்து வருகின்றன. 

இங்கே இண்டிக்கூட்டணிக்காரர்களும் கூட, தங்கள் தாளம், தங்கள் ராகம், பாடி வருகிறார்கள்.   இதைக் கேட்டு உங்களுக்குச் சிரிப்புக் கூட வரக்கூடும்.   பயமும் கூட ஏற்படலாம்.   சில ஊடக அறிக்கைகளில் வந்திருக்கிறது, இந்த இண்டிக் கூட்டணிக்காரர்களிடம் விவாதம் நடைபெறுகிறதாம்.   ஏனென்றால் மோதி மீண்டும்மீண்டும் கேட்கிறார், சொல்லுங்க ஐயா, இத்தனை பெரிய தேசம், இதை யார் ஆளுவார்கள்.   பெயரைச் சொல்ல வேண்டுமில்லையா சொல்லுங்கள்.  

பெயரே தெரியாமல் இத்தனை பெரிய தேசத்தை ஒப்படைக்க உஙகளால் முடியுமா?   இவர்களோ பெயரைச் சொல்லத் தயாராக இல்லை.   இங்கே மோதி இருக்கிறார் நீங்கள் சொல்லுங்கள் என்கிறார்கள் இவர்கள்.   வாக்களிக்க விரும்புவோர் மோதிக்கு அளியுங்கள் என்கிறார்கள்.   சொன்னார்களா இல்லையா?  

உங்கள் முன்பாக பெயர் இருக்கிறதில்லையா?  அந்தப்பக்கத்திலே பெயரே இல்லை.   இத்தனை பெரிய தேசம், யாருக்கு அளிக்கிறோம், என்ற விபரம் தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா?   தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா சொல்லுங்கள்?  

யாருக்கு அளிக்க விரும்புகிறார்கள் உங்களுக்குத் தெரியுமா சொல்லுங்கள்?   யாருக்காவது தெரியுமா?  இப்படி இருட்டில குறிபார்க்க முடியுமா சொல்லுங்கள்?   இங்கே தெளிவாக பத்தாண்டுகள் அனுபவம் இருக்கிறது.  மோதி உங்கள் முன்பாக இருக்கிறார்.  

இங்கே அனைவரும் கூறிவிட்டார்கள், மோதி நம்முடைய வேட்பாளர் என்று.   இவர்கள் எல்லாம், இதற்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.   விடையோ அவர்களுக்குக் கிடைத்தபாடில்லை.  

ஆனால் சில ஊடகங்களில் என்ன வருகிறதென்றால், இந்த மோதி மீண்டும்மீண்டும் கேட்கிறார், உங்கள் தலைவர் யார்……. யாரிடம் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறீர்கள்? ஃபார்முலா ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.  

யார் பிரதமர் ஆவார்கள் என்பதற்கு ஒரு ஃபார்முலாவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.   என்ன சொல்கிறார்கள் என்றால், இவர்கள், ஓராண்டுக்கு, ஒரு பிரதமர் ஃபார்முலாவை ஏற்படுத்தி வருகிறார்களாம்.  அதாவது, ஓராண்டுக்காலம் ஒரு பிரதமர், இரண்டாவது ஆண்டு…. இரண்டாவது பிரதமர், 3ஆவது ஆண்டு…. 3ஆவது பிரதமர், 4ஆவது ஆண்டு, 4ஆவது பிரதமர், 5ஆவது ஆண்டு, 5ஆவது பிரதமர், தேசம் என்னவாகும் சொல்லுங்கள்?   என்ன ஆகும்?   என்ன ஆகும் என்று கூறுங்கள் நண்பர்களே.   தேசம் தப்பிக்குமா?  

உங்களுடைய கனவுகள் பிழைக்குமா?   உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தப்பிப் பிழைக்குமா?   என்ன அர்த்தம் என்றால் இவர்கள் பிரதமர் நாற்காலியை ஏலத்தில் விட்டுவிட்டார்கள் என்று புரிகிறதா!!   யார் பையை நிரப்புகிறார்களோ அவர்கள் ஓராண்டுக்கு அமர்வார்கள்.  இதன் பிறகு என்ன வேடிக்கை நடக்கும் தெரியுமா?  

மேலே அமர்பவர் இருக்கிறாரே, அதிலே நான்கு நபர்கள் நாற்காலியின், கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்வார்கள்.  எப்போது இவருடைய ஓராண்டு முடிவடையும் என்ற சந்தர்ப்பத்துக்குக் காத்துக் கிடப்பார்கள்.  அதை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள்.  

சகோதர சகோதரிகளே, இதை எல்லாம் கேட்ட பிறகு என்ன தோணுதுன்னா ஆசை இருக்கு தாசில் பண்ண ஆனா அதிர்ஷ்டம் இருக்கு சிரிப்பு.  ஆனால் நண்பர்களே உங்களுக்குள்ளே, விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். 

எச்சரிக்கை அளிக்க விரும்புகிறேன்.   இது ஆசை இருக்கு தாசில் பண்ண எனும் பழமொழியைச் சொல்லி, உறங்கச் செல்லும் விஷயம் அல்ல.   இது மிகவும் பயங்கரமான விளையாட்டு.   இது தேசத்தை அழிக்கின்ற விளையாட்டு.   இந்த ஆசை அழகானது இல்லை நண்பர்களே.  

இந்த ஆசை உங்கள் கனவுகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் நாசகார ஆசை சொந்தங்களே.   ஆகையால் நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள்.   விழிப்புணர்வு பெறுங்கள்.  உங்கள் வாக்குகளின் சக்தியைப் புரிந்து கொள்ளுங்கள்.  

எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, தேசத்தைக் காப்பாற்ற நீங்கள் முன்வாருங்கள்.   ரீல்களிலே, சமூக வலைத்தளங்களிலே விளையாட்டாக மக்கள் கூறுவதை, அவை பற்றி, இண்டிக் கூட்டணி, மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறதாம். 

நீங்கள் கூறுங்கள் மக்களே, சரி ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற ஃபார்முலா உங்களுக்கு சம்மதமா சொல்லுங்கள்?   

ஐந்தாண்டுகளிலே ஐந்து பிரதமர்கள் என்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?  சரி தேசத்தை இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் விட்டுவிட முடியுமா?   சரி உலகமே நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்குமா சிரிக்காதா?  

சரி உலகத்திலே நாம் கஷ்டப்பட்டு சேர்த்திருக்கும் நற்பெயர், மண்ணோடு மண்ணாகிப் போய் விடாதா சொல்லுங்கள்?   இதோ சந்திரயான் அனுப்பியிருக்கிறோம், அடுத்து ககன்யான் அனுப்ப இருக்கிறோம், அதை அனுப்ப முடியுமா?  

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள்
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

pmmodi speech in meeting - 2026
#image_title

நண்பர்களே, காங்கிரஸ், தாழ்த்தப்பட்டவர்களின், பிற்பட்டவர்களின், பழங்குடியினத்தவர்களின், அதிகாரங்களைப் பறிக்கும், சதிகாரச் செயலை, பலகாலமாகவே செய்து வருகின்றது.  

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று, அப்போது அவர்களின் ஆட்சி இருந்தது.   அப்போதிருந்த காங்கிரசின் மத்திய அரசு, மதத்தின் பெயரால், இடஒதுக்கீட்டை அளிக்கும், ஒரு குறிப்பை, ஒரு நோட், அமைச்சரவையில் முன்வைத்தது.  

இந்த அமைச்சரவைக் குறிப்பிலே, என்ன கூறப்பட்டிருந்தது தெரியுமா?   நமது ஓபிசி சமுதாயத்திற்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது.   மண்டல் கமிஷனின் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது.  

அந்த இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை வெட்டியெடுத்து, 27 சதவீதத்திலிருந்து ஒரு பகுதியை பிரித்தெடுத்து, மதத்தின் பெயரால் கொடுக்கப்படும்.   வெறும் மூன்றே நாட்களில், 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று, இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. 

அதன் பிறகு, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்றம், காங்கிரஸ் அரசின் இந்த ஆணையினை, ரத்து செய்தது.   இவர்கள் உச்சநீதிமன்றத்துக்கும் சென்றார்கள்.   ஆனால் அங்கும் எந்தப் பயனுமில்லை.  

அதன் பிறகு 2014இலே, காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையிலே பதிவிட்டது.   அதாவது மதத்தின் பெயரால், இட ஒதுக்கீடு செய்வதற்கு, சட்டம் இயற்றப்பட வேண்டுமானால் சட்டமும் இயற்றுவோமென்றார்கள்.  

ஆனால் 2014ஆம் ஆண்டிலே, ஓபிசி சமுதாயம் விழித்துக் கொண்டது.   தாழ்த்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டார்கள்.  பழங்குடியினச்சமூகம் விழித்துக் கொண்டது.   அவர்கள் எல்லாம் தீர்மானம் செய்தார்கள், இவர்கள் வந்து இப்படியெல்லாம் செய்தால், நமது வருங்காலத் தலைமுறையினர் நாசமாகிப் போவார்களே!!   நம்முடைய கனவுகள் பொடிப்பொடியாகுமே!!  

இதன் பிறகு தான், இந்தச் சமூகங்களெல்லாம் ஒன்றிணைந்து, காங்கிரசின் கனவுக்கோட்டைகளைத் தரைமட்டமாக்கினார்கள், அவர்களை ஆட்சியிலிருந்து துரத்தி விட்டார்கள்.  

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

பிரதமர் மோடியின் உரைகள்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

pmmodi speech in meeting - 2026
#image_title

சுமார் 300 கூட்டுறவு வங்கிகளை இந்த இடதுசாரிகள் நடத்துகிறார்கள்.  மேலும், சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாயை, கேரளத்தின் ஏழைகளின் சாதாரண மக்களின் பணம் அதில் போடப்பட்டிருக்கிறது.  

இப்போது நீங்களே பாருங்கள் இவர்கள் என்ன செய்தார்கள்?   இதை நிர்வாகம் செய்யும் நபர்கள், இந்தப் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பெரியபெரிய சொத்துக்களை வாங்கினார்கள். 

 நாங்கள் நடவடிக்கை எடுத்த, இப்போது ஒரு வங்கியிலே, அதிலே நாங்கள் சுமார் 90 கோடி ரூபாயை, பறிமுதல் செய்திருக்கிறோம்.   இப்போது நாங்கள் சட்ட ஆலோசனையைக் கேட்டிருக்கிறோம்.  

இப்போது பறிமுதல் செய்த 90 கோடி ரூபாய், யாருடைய பணம் வங்கியில் இருந்ததோ, இவர்களுக்கு, எப்படி திருப்பிக் கிடைக்கச் செய்யலாம்?   நான் ஈடியிடமும் கூட வேண்டுகோள் விடுத்திருக்கிறேன், அதை அளிக்கத் தொடங்குவோமே!!!   யார் கொள்ளையடித்தார்களோ… அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யுங்கள்!!  

நாங்கள் இதுவரை, 17,000 கோடி ரூபாயை, எப்படி பறிமுதல் செய்தோமோ, அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்தோம் 17000 கோடி ரூபாய்.   ஆகையால் கேரளத்திலே 300 வங்கிகளில் இவர்கள் மோசடி செய்திருக்கிறார்களே, பல நூற்றுக்கணக்கான கோடிகள் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய், இது சின்ன ரொக்கமல்ல.  

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.   இது சாதாரண மனிதனின் வாழ்க்கை பற்றிய விஷயம்.  

  • பிரதமர் மோடியின் உரைகள்
    தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை, ஆனால் பாவம் புரிந்த காங்கிரஸ்!

pmmodi speech in meeting - 2026
#image_title

நண்பர்களே, கர்நாடகத்திலே, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.   அவர்கள் செய்திருக்கின்ற பாவச்செயல் என்ன?   உங்களுக்கு அதிர்ச்சியே ஏற்படும்.  

இப்போது நீங்களே சொல்லுங்கள்.  உங்கள் கிராமத்தில் ஒரு நாள் ஒருவர் வந்து உங்களிடம் சொல்கிறார், இப்போது இந்த கிராமத்திலே, அனைவரும் இனி இந்த மாதிரி இல்லை வேறாகி விட்டார்கள். 

இது உங்களுக்குச் சம்மதமா?   காங்கிரஸ் அரசாங்கம், கர்நாடகத்திலே, எத்தனை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ, உயர்மட்டமாக இருக்கலாம், செல்வர்களாக இருக்கலாம், வியாபாரிகளாக இருக்கலாம் தொழிலதிபராக இருக்கலாம் நீதிபதியாக இருக்கலாம்.   யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.   நீங்கள் முஸ்லிமாக இருந்தால் மட்டும் போதும்.  

அவர்கள் முஸ்லிமாக இருந்தால், இவர்கள், இரவோடு இரவாக, ஒரு காகிதத்தில் எழுதிக் கையொப்பமிட்டு, அவர்கள் அனைவரையும், ஓபிசி என்று அறிவித்து விட்டார்கள்.   இவர்களை ஓபிசி என்று அறிவித்த பிறகு பெரிய புயல் வெடித்துக் கிளம்பியது.  

அதாவது, அங்கே காங்கிரஸானது, கல்வி, மற்றும் அரசு வேலைகளில், முதலில் யாருக்கு ஓபிசி இடஒதுக்கீட்டின்படி கிடைத்து வந்ததோ, அந்த ஓபிசி சமூகத்தில் இத்தனை பேரையும் நுழைத்ததால், ஓபிசி சமூகத்துக்குக் கிடைத்துவந்த இடஒதுக்கீட்டை, அவர்களிடமிருந்து பறித்து விட்டார்கள்.   திருட்டுத்தனமாகப் பறித்து விட்டார்கள்.  

மேலும், எந்த முஸ்லீம்களை புதிய ஓபிசியாக ஆக்கினார்களோ,  சட்டவிரோதமாக ஏற்படுத்தினார்களோ, அரசியல் சட்டத்திற்குப் புறப்பாக ஏற்படுத்தினார்களோ, பாபாசாகேப் ஆம்பேட்கரின் உணர்வுகளுக்கு விரோதமாக ஏற்படுத்தினார்களோ, அந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு, ஓபிசிக்குக் கிடைத்து வந்ததை, அதைக் களவாடிக் கொடுத்து விட்டார்கள்.  

உங்களனைவருக்கும் நன்கு தெரியும், தேசத்தின் அரசியல் சட்டம் உருவான வேளையில், மாதக்கணக்கில் ஆழமான கருத்தாய்வுகள் செய்யப்பட்டன.   விவாதங்கள் நடந்தன.  தேசத்தின் மதிப்புமிக்க சான்றோர்கள் இதன் மீது விவாதங்கள் செய்தார்கள்.  

பாபா சாகேப் ஆம்பேட்கர் அவர்கள், இந்த விவாதங்களின் அடிப்படையில் அரசியல் சட்டத்தை அமைத்துக் கொடுத்தார்.   அனைவரும் நன்கு ஆய்ந்து புரிந்து ஒரு முடிவை மேற்கொண்டார்கள்.   நம் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்காக, தேசத்தின் அரசியல்சட்டம், எந்த ஒரு காரணத்திற்காகவும்,  மதத்தின் அடிப்படையிலே, இடஒதுக்கீட்டை அளிக்காது என்றார்கள்.  

பாபா சாகேப் ஆம்பேட்கர் கூறினார், மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை கொடுக்க முடியாது என்றார்.  ஆகையினால் தான் காங்கிரஸார், ஏமாற்று வேலையில் இறங்கினார்கள்.  

பின்வாசல் வழியாகக் கொடுத்தார்கள்.   பாபாசாகேப் ஆம்பேட்கருடைய முதுகினிலே, கத்தியால் குத்தி விட்டார்கள்.   ஆனால் வாக்குவங்கி,  மற்றும் திருப்திப்படுத்தலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ், கர்நாடகத்தின் இதே மாதிரியை, நாடு முழுவதிலும் அமல்படுத்த விரும்புகிறது.  

  • பிரதமர் மோடியின் உரைகள்
    தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

sabarimalai nadai open - 2026
#image_title

உலகப்புகழ் பெற்ற சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாத சூழலில் கேரள அரசும் திருவாங்கூர் தேவஸம் போர்டும் இனி ஆன்லைன் புக்கிங் முறையில் மட்டும் தினசரி 80ஆயிரம் பக்தர்களை மட்டும் தினசரி அனுமதிக்கவும் ஸ்பாட் புக்கிங் முறையை ரத்து செய்து பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பதிவு மூலம் தரிசன முறையை திருமலை மாதிரி நடைமுறைப் படுத்த நினைக்கும் தேவஸம் போர்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருமலை போல் வசதிகளை செய்து தருவதில்லை.இதனால் மீண்டும் ஆன்லைன் முன் பதிவு முறையை கேரள அரசு காவல்துறையிடம் ஒப்படைத்து தினசரி சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

சபரிமலை மண்ட, மகர விளக்கு சீசனில் கடந்த ஆண்டு போல நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக, ‘ஸ்பாட் புக்கிங்’ ரத்து செய்யப்படுகிறது. தினம், 80,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்க கேரள அரசும், தேவசம் போர்டும் முடிவு செய்துள்ளன.

கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு, 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காடுகளிலும், மலைகளிலும் சிக்கிய பக்தர்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் முடிக்காமல் இருமுடி கட்டுகளை காட்டுகளுக்குள்ளே விட்டு திரும்பினர்.

சபரிமலையில், 14 ஆண்டுகளுக்கு முன், ‘விருச்சுவல் கியூ’ என்ற ஆன்லைன் முன்பதிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துவக்கப்பட்டது. கொரோனாவுக்கு பின் முழுமையாக அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக நிலக்கல், பம்பை, எருமேலி மற்றும் கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டது. ஏற்கனவே, 80,000 பக்தர்கள் முன்பதிவு வாயிலாக தினமும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்பாட் புக்கிங் வாயிலாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் பெரும் சிக்கலானது.

தொடர்ந்து, நவம்பர் மாதம் துவங்க உள்ள மண்டல, மகர விளக்கு கால சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை முழுமையாக ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் முடிவு செய்துள்ளன.

தினசரி முன்பதிவு, 80,000 ஆக தொடரவும், சீசனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் முன்பதிவை துவங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பிரசாந்த் கூறினார்.

இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவு எதற்கு கேரளாவில் தரிசனம் செய்ய வர அனைத்து பக்தர்களும் அனைத்து கோவில்களிலும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதா சட்டம் ஏதாவது உள்ளதா என ஐயப்பா சேவை சங்கங்கள் மற்றும் பக்தர்கள் கேள்வி கேட்கின்றனர்.

திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு இதே நடைமுறையை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு கண்ட்ரோலில் உள்ள அனைத்து கோவிலிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்று எந்த நடைமுறையும் இல்லை

பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத தேவஸ்தானம் உண்டியல் வருமானத்தை மட்டும் எப்படி கணக்கெடுக்கிறார்கள்.என பக்தர்கள் புகார் கூறுகின்றனர்

சபரிமலை நிர்வாகத்தை வேறு ஒரு தேவஸ்தானத்திடம் திருவாங்கூர் தேவஸ்தானம் ஒப்படைக்க வேண்டும்
எங்களால் சபரிமலை நிர்வாகத்தை நிர்வாக படுத்த முடியவில்லை என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்

குருவாயூரில் தினமும் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள் அங்கு எந்த ஒரு பிரச்சனையும் நடைபெறவில்லை..சோட்டானிக்கரை தினமும் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

60 நாட்கள் இவர்களால் சமாளிக்க முடியாததால் திருவாங்கூர் தேவஸம் போர்டு தற்போதைய நிர்வாகக்குழு நிர்வாகத்தை விட்டு விலக வேண்டும்

இதற்கு முன்பு பல வருடங்களுக்கு முன்பெல்லாம் இதைவிட அதிகமான கூட்டம் எல்லாம் இருந்த போதும் எந்த ஒரு பிரச்சினையும் நடைபெறவில்லை தற்போது தான் இந்த பிரச்சனை இந்த ஆண்டுதான் அதிகப்படியான பிரச்சனை தொடங்கியுள்ளது.

இதற்கு முழு காரணம் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தோல்வியே அவர்கள் நிர்வாகத்தை விட்டு விலகி வேறு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் முடியாது என்று சொல்பவர்களிடம் நிர்வாகம் எதற்கு.என்று உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் கூறுகின்றனர்.

ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாத சூழலில் கேரள அரசும் திருவாங்கூர் தேவஸம் போர்டும் இனி ஆன்லைன் புக்கிங் முறையில் மட்டும் தினசரி 80ஆயிரம் பக்தர்களை மட்டும் தினசரி அனுமதிக்கவும் ஸ்பாட் புக்கிங் முறையை ரத்து செய்து பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பதிவு மூலம் தரிசன முறையை திருமலை மாதிரி நடைமுறைப் படுத்த நினைக்கும் தேவஸம் போர்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருமலை போல் வசதிகளை செய்து தருவதில்லை.

இதனால் மீண்டும் ஆன்லைன் முன் பதிவு முறையை கேரள அரசு காவல்துறையிடம் ஒப்படைத்து தினசரி சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

தாம்பரம் —திருவனந்தபுரம் கொச்சுவேலி இடையே விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழியாக வாரம் இரு முறை கோடைகால விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த ரயில்கள் முழுமையான 16 எல் ஹெச்பி பெட்டிகளுடன் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும்.

விருதுநகர் செங்கோட்டை புனலூர் கொல்லம் வழியாக மலைவழிப்பாதையில்இரு வழிகளிலும் இயக்கவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் வியாழன் சனிக்கிழமைகளில் இரவு 07.30 க்கு புறப்பட்டு வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.45 க்கு திருவனந்தபுரம் கொச்சுவேளி ரயில் நிலையத்தை சென்றடையும்.
திரும்பும்போது வெள்ளி ஞாயிறு தினங்களில் திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் பகல் 12.30 க்கு புறப்பட்டு சனி திங்கள் கிழமைகளில் காலை 04.15க்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மேற்காணும் தகவல்களின்படி இந்த ரயில்கள் 16/05/24 முதல் 29/06/24 வரை தாம்பரத்திலிருந்தும் 17/05/24 முதல் 30/06/24 வரை திருவனந்தபுரம் கொச்சுவேலி யிலிருந்தும் இயக்கப்படும்.

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது. 14 பிளஸ் 2 மூன்றடுக்கு ஏசி எகானமி எல் எச் பி பெட்டிகளோடு இவை இயங்கும்.

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

ipl 2024 - 2026

47ம் நாள்: ஐபிஎல் 2024 – 06.05.2024

  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்

சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தால் மும்பை வெற்றி 

இன்று மும்பை வான்கடெ மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

ஹைதராபாத் அணியை (173/8, ட்ராவிஸ் ஹெட் 48, பேட் கம்மின்ஸ் 35, நித்தீஷ் குமார் ரெட்டி 20, ஹார்திக் பாண்ட்யா 3/31, பியூஷ் சாவ்லா 3/33) மும்பை அணி (17.2 ஓவரில் 174/3, சூர்யகுமார் யாதவ் 102*, திலக வர்மா 37*, புவனேஷ் குமார் 1/22, மார்கோ ஜான்சென் 1/45, பேட்கம்மின்ஸ் 1/35) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடவந்தது. ஹைதராபாத் அணியில் இன்று ட்ராவிஸ் ஹெட் (30 பந்துகளில் 48 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) வழக்கம்போல அதிரடியாக ஆட அடுத்த தொடக்க வீரர், அபிஷேக் ஷர்மா (16 பந்துகளில் 11 ரன்) 5.5ஆவது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதற்குப் பின்னர் மாயங்க் அகர்வால் (5 ரன்) 7.4ஆவது ஓவரில் இன்று புதிதாய் ஆடவந்த அன்ஷுல் காம்போஜ் பந்தில் அவுட்டானார். நிதீஷ் குமார் ரெட்டி இதன் பின்னர் ஹார்திக பாண்ட்யாவும் பியுஷ் சாவ்லாவும் தலா மூன்று விக்கட் எடுத்து சன்ரைசர்ஸ் அணியை 20 ஓவரில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 173 ரன் கள் என்ற நிலையில் இன்னிங்க்ஸை முடித்தனர். 

174 ரன் என்பது அடையக்கூடிய சற்றே கடினமான இலக்கை அடைய மும்பை அணி களம் இறங்கியது. ஆனால் பவர்பிளே முடிவதற்குள் ரோஹித் ஷர்மா (4 ரன்), இஷான் கிஷன் (9 ரன்) மற்றும் நமன் தீர் (பூஜ்யம் ரன்) மூவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் சூர்ய குமார் யாதவ் (51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ரன், 12 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (32 பந்துகளில் 37 ரன், 6 ஃபோர்) அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். இதனால் அந்த அணி 17.2 ஓவரில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 7 விக்கட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

நாளை டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

06.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1183161.453
ராஜஸ்தான் 1082160.622
சென்னை1165120.700
ஹைதராபாத்1165120.065
லக்னோ116512-0.371
டெல்லி115610-0.442
பெங்களூரு11478-0.049
பஞ்சாப்10468-0.062
மும்பை12488-0.212
குஜராத்111478-1.320

IPL 2024: சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி!

ipl 2024 - 2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

46ம் நாள்: ஐபிஎல் 2024 – 05.05.2024 

இரண்டு ஆட்டங்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை; எனவே இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணி (167/9, ரவீந்தர ஜதேஜா 43, ருதுராஜ் குய்க்வாட் 32, டேரில் மிட்சல் 30, ராஹுல் சாஹார் 3/23, அர்ஷ்தீப் சிங் 2/42, ஹர்ஷல் படேல் 3/24) பஞ்சாப் அணியை (139/9, பிரப்சிம்ரன் சிங் 30, ஷஷாங்க் சிங் 27, ஹர்பிரீத் ப்ரார் 17, ராஹுல் சாஹார் 16, ரவீந்தஜதேஜா 3/20, துஷார் தேஷ்பாண்டே 2/35, சிமர்ஜீத் சிங் 2/16) 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று தர்மசலாவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சென்னை அணி முதலில் மட்டையாடவந்தது. 

வெற்றிக்குத் தேவையான 168 ரன்களை அடைய ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி சுமார் 45 நிமிடங்களில் தங்களின் மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அவர்களது ஆட்டத்தில் கெட்டது நல்லதை விட அதிகமாக இருந்ததைக் காண்பித்தது.

சாம் கரனின் வீரர்கள் டாஸில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். ஐந்தாவது மற்றும் ஏழாவது ஓவர்களுக்கு இடையில் 18 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து அவர்கள் விளையாடிய போது, 168 ரன்களை எளிதில் அடித்துவிடுவார்கள் எனத் தோன்றியது. 

அப்போது சமன்பாடு 78 பந்துகளில் 112 ரன்கள் தேவை என்பதாகும். அச்சமயம் அவர்களிடம் எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. இது சரிவதற்கான நேரம் அல்ல, ஆனால் பஞ்சாப் அணி சரிந்தது. அவர்களின் செட் பேட்டர்கள், அவர்களின் கேப்டன் மற்றும் அவர்களின் ஃபினிஷர் இருவரையும் இழந்தனர். அவர்கள் 62/2வில் இருந்து 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களுக்குச் சரிந்தனர்.

சென்னை அணியில் இன்று ருதுராஜ் கெய்க்வாட் (21 பந்துகளில் 32 ரன்), டேரில் மிட்சல் (19 பந்துகளில் 30 ரன்), ரவீந்தர ஜதேஜா (26 பந்துகளில் 43 ரன்) மூவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். அஜிக்யா ரஹானே (9 ரன்), ஷிவம் துபே (பூஜ்யம் ரன்), மொயீன் அலி (17 ரன்), மிட்சல் சாண்ட்னர் (11 ரன்), தோனி (கோல்டன் டக், பூஜ்யம் ரன்) என மற்ற வீரர்கள் இன்று சரியாக ஆடவில்லை. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 167 ரன் மட்டுமே அடித்தது. 

168 ரன் என்பது எளிய இலக்கு எனச் சொல்ல முடியாது; இருப்பினும் அடையக்கூடிய இலக்கு. பஞ்சாப் அணியின் ஜானி பெயர்ஸ்டோ (7 ரன்) மற்றும் ரிலீ ரோஸ்கோ (பூஜ்யம் ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் பிரப்சிம்ரன் சிங் (23 பந்துகளில் 30 ரன்) மற்றும் ஷஷாங்க் சிங் (20 பந்துகளில் 27 ரன்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன் பின்னர் சாம் கரண் (7 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (பூஜ்யம் ரன், கோல்டன் டக்), அஷுத்தோஷ் ஷர்மா (10 பந்துகளில் 3 ரன்), ஹர்பிரீத் பிரார் (13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 17 ரன்), ஹர்ஷல் படேல் (12 ரன்), ராஹுல் சாஹர் (16 ரன்) ரபாடா (ஆட்டமிழக்காமல் 11 ரன்) ஆகிய வீரர்கள் நிலைத்து ஆட முயற்சிக்கவில்லை. இதனால் அந்த அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 

சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜதேஜா தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கொல்கொத்தா அணி (சுனில் நரேன் 81, பில் சால்ட் 32, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 32, ரமந்தீப் சிங்க் 25*, ஷ்ரேயாஸ் ஐயர் 23, நவீன் உல் ஹக் 3/49) லக்னோ அணியை (16.1 ஓவரில் 137, மார்கஸ் ஸ்டோயினிஸ் 36, கே.எல். ராகுல் 25, ஆஷ்டன் டர்னர் 16, ஆயுஷ் பதோனி 15, ஹர்ஷித் ரானா 3/24, வருண் சக்ரவர்த்தி 3/30, ஆண்ட்ரு ரசல் 2/17, சுனில் நரேன் 1/22) 98 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று லக்னோவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் கொல்கொத்தா அணி முதலில் மட்டையாடவந்தது. 

இந்த ஆட்டம் முழுவதும் கொல்கொத்தா அணியின் ஆதிக்கம்தான். அந்த அணியின் ரமந்தீப் சிங் 416.7 என்றா ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார். குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வெங்கடேஷ் ஐயருடையது. அவர் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்ததால் ஸ்ட்ரைக்ரேட் 100. இருநூறுக்கும் மேல் ஸ்ட்ரைக்ரேட் கொண்டவர்கள் இருவர். 100க்கும் 200க்கும் இடையே ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர்கள் நால்வர். பந்து வீசும்போது சுனில் நரேனைத்தவிர மற்ற சுழல் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா மூன்று விக்கட் எடுத்தார்கள். இதனால் கொல்கொத்தா அணி சூப்பர் வெற்றி பெற்றது. இதன் மூலம் நல்ல் நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளது.

கொல்கொத்தா அணி முதலில் பேட்டிங் செய்த்டபோது சுனில் நரேன் (39 பந்துகளில் 81 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) லக்னோ அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் துவம்சம் செய்தார்.   அவருடன் தொடக்க வீரராக இறங்கிய பில் சால்ட் (14 பந்துகளில் 32 ரன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (26 பந்துகளில் 32 ரன்), ரசல் (8 பந்துகளில் 12 ரன்), ரிங்கு சிங் (11 பந்துகளில் 16 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (15 பந்துகளில் 23 ரன்), ரமன் தீப் சிங் (6 பந்துகளில் 25 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (1 ரன்) எடுத்ததால் கொல்கொத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 235 ரன் எடுத்தது.

236 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய லக்னோ அணியில் அதிக பட்ச ஸ்கோரே 36 ரன் தான். ஒற்றை இலக்க ஸ்கோர் எடுத்தவ்ர்கள் ஆறு பேர். கே.எல். ராகுல் (25 ரன்), அர்ஷின் குல்கர்ணி என்ற மற்றொரு தொடக்க வீரர் (9 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (21 பந்துகளில் 36 ரன்), இந்த ஐபிஎல்லின் மெகா ஃபெயிலியரான தீபக் ஹூடா (5 ரன்), நிக்கோலஸ் பூரன் (10 ரன்). ஆயுஷ் பதோனி (15 ரன்), ஆஷ்டன் டர்னர் (16 ரன்), க்ருணால் பாண்ட்யா (5 ரன்), யுத்வீர் சிங் (7 ரன்), ரவி பிஷ்னோய் (2 ரன்), நவீன் உல் ஹக் (பூஜ்யம்) என அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்ததால் லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 137 ரன் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.  

கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

05.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1183161.453
ராஜஸ்தான் 1082160.622
சென்னை1165120.700
ஹைதராபாத்1064120.072
லக்னோ116512-0.371
டெல்லி115610-0.442
பெங்களூரு11478-0.049
பஞ்சாப்10468-0.062
குஜராத்11478-1.320
மும்பை11386-0.356

IPL 2024: குஜராத்துக்கு எதிராக, பெங்களூரு அணி… திக்கித் திணறி பெற்ற வெற்றி!

ipl 2024 - 2026

45ம் நாள் : ஐபிஎல் 2024 – 04.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

குஜராத் டைடன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

          குஜராத் அணியை (19.3 ஓவரில் 147, ஷாருக் கான் 37, ராஹுல் திவாத்தியா 35, டேவிட் மில்லர் 30, ரஷீத் கான் 18, விஜய் ஷங்கர் 10, சிராஜ் 2/29, யஷ் தயால் 2/21, விஜயகுமார் வைஷாக் 2/23) பெங்களூரு அணி (டியு பிளேசிஸ் 64, விராட் கோலி 42) 152/6 நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

                    இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் குஜராத் அணி முதலில் மட்டையாடவந்தது.

குஜராத் அணியில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் (24 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) டேவிட் மில்லர் (20 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ராகுல் திவாத்தியா (21 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினார்கள். இவர்களைத் தவிர மற்றவர்கள் – விருத்திமான் சாஹா (1 ரன்), ஷுப்மன் கில் (2 ரன்), சாய் சுதர்ஷன் (6 ரன்), ரஷீத் கான் (18 ரன்), விஜய் ஷங்கர் (10 ரன்), மானவ் சுத்தர் (1 ரன்), மோஹித் ஷர்மா (பூஜ்யம் ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

இதனால் குஜராத் அணி இன்று 20 ஓவர் வரை விளையாடவில்லை. 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் அந்த அணி இழந்தது.

          148 ரன் என்ற மிக எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணி இடையில் சற்று சொதப்பியது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் ஃபேஃப் டியு பிளேசிஸ் (23 பந்துகளில் 64 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விராட் கோலி (27 பந்துகளில் 42 ரன் 2 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துவிட்டனர்.

இருப்பினும் டியு பிளேசிஸ் 5.5ஆவது ஓவரில் அட்டமிழக்க அவருக்குப் பின் 7ஆவது ஓவரில் வில் ஜேக்ஸ் (1 ரன்), எட்டாவது ஓவரில் ரஜத் படிதர் (2 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ் வெல் (4 ரன்), பத்தாவது ஓவரில் கேமரூன் கிரீன் (1 ரன்) என பெங்களூரு வீரர்கள் வரிசையாக ஒருவர் ஒருவராக ஆட்டமிழந்தனர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக விராட் கோலி 10.4ஆவது ஓவரில் அவுட்டானார். வெற்றி உறுதி என இருந்த நிலையில் இருந்து தோல்வி பெறுவார்கள் என்ற நிலைக்கு வந்தனர். ஆனால் தினேஷ் கார்த்திக் (12 பந்துகளில் 21 ரன்) ஸ்வப்னில் சிங் (15 ரன்) இருவரும் இணைந்து ஆடி வெற்றிய 13.4ஆவது ஓவரில் பெற்றுத் தந்தனர். இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை ஞாயிற்றுக்கிழமை; எனவே இரண்டு ஆட்டங்கள் நடைபெறும்.

முதல் ஆட்டம் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

04.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்1082160.622
கொல்கொத்தா1073141.098
லக்னோ1064120.094
ஹைதராபாத்1064120.072
சென்னை1055100.627
டெல்லி115610-0.442
பெங்களூரு11478-0.049
பஞ்சாப்10468-0.062
குஜராத்10468-1.113
மும்பை11386-0.356