சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார். அதற்கு என் குடும்பமும் பின்னால் நிற்கிறது” என்று, அருப்புக்கோட்டையில் ராதிகா சரத்குமார் பேசினார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியினரின் ஆர்வத்தையும் வெறியையும் பார்க்கும் போது மிக சந்தோசமாக உள்ளது. பணியாற்றுபவர்களை மரியாதையாக நடத்தக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சி.
சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும் சுயமரியாதையோடு வாழ வேண்டும். வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் அதற்கு ஒரே நம்பிக்கை மோடிஜி தான். நான் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தவள்.
உழைப்பு மட்டுமே என் வாழ்வில் எனக்கு துரோகம் செய்யாதது. உழைப்பு அனைவருக்கும் பலமாக இருக்கும். சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்து கொடுத்து நீ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன் என ஒரு தூண் போல் இல்லாமல் ஒரு ஆலமரமாக நிற்கிறார் அதற்கு என் குடும்பமும் பின்னால் நிற்கிறது. எனக்கு அதுதான் மிக்க மகிழ்ச்சி.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அவர்தான் அவருக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன். 50 வருடமாக இந்த திராவிட கட்சிகள் என்ன செய்தது அவர்கள் குடும்பம் மட்டும் தான் உயர்ந்துள்ளது என பேசினார்.
நிகழ்ச்சியில் இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ராதிகா சரத்குமார்.
தங்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு
கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியும் எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு வெற்றி வரும் என பேசினார். மக்களை கணிக்க முடியாது அவர்கள் நிச்சயம் ஒரு வெற்றியை கொடுப்பார்கள் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்.
மேலும் இந்த தொகுதியில் செயல்படுத்த படாத திட்டங்களை தெரிந்து கொண்டோம் அதை நிச்சயம் செயல்படுத்துவோம். வீடு தண்ணீர் விட்டு அடிப்படை விஷயங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என பேசினார்.
முன்னதாக அருப்புக்கோட்டை தேர்தல் அலுவலகத்திற்கு வந்த ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமாருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.