தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது
செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 113-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பஸ் நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சிலைக்கு வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹரசுப்பிரமணியன், அவரது மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் தியாகிகள் வாரிசுகள் ஓட்டபிடாரம் மாடசாமி வாரிசு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, நகராட்சி மேலாளர் கண்ணன் மற்றும் நகராட்சி சுகாதார மேற்பார்வை யாளர்கள், பணியாளர்கள், கோதையம்மாள் தியாகி வாரிசு கைலாசநாதன், சாவடி சொக்கலிங்கம்பிள்ளை வாரிசு செண்பக குற்றாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி, தலைமை நிலைய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் அவர் என் கணேசன், மாவட்ட பிரிவு நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர் உசேன், கவுன்சிலர்கள் முத்துபாண்டி, ஜெகன் உள்பட பலர் கலந்த கொண்ட னர்.
பா.ஜனதா சார்பில் நகர தலைவர் வேம்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ராமர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் ஜோதிலிங்கம், ஆதிமூலம், ராஜீவ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மகளிரணியினர் உள்பட பலர் ஊர்வலமாக வந்து, வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதேபோல் தேசிய சிந்தனை பேரவை, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து சிரத்தாஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நாள் முழுதும் வாஞ்சி சிலைக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆளுநரின் அஞ்சலி
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து தமது சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். அவரது பதிவில், மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் திரு வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார். எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தனியாத துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது – என்று குறிப்பிட்டிருந்தார்.
மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் திரு வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து,… pic.twitter.com/ZjZPhGGyHW
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) June 17, 2024
108 திவ்ய தேசங்களில் விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தங்கல், ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற வைணவ கோவிலான ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோவிலில் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் – ஸ்ரீசெங்கமலத் தாயார் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் திருவிழா 17ம் தேதி (திங்கள் கிழமை) காலை, கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு, ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் – ஸ்ரீசெங்கமலத் தாயார் சுவாமிகள் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்மம், சேஷம், கருடன், அன்னம் வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை அன்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் அமைந்திருக்கும் ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் அதிஷ்டான அருளாலயம், மணி மண்டபம், ராஜகோபுரம், மூர்த்திகள் சந்நிதி ஆகியவற்றுக்கு ஆகம மற்றும் வைதீக முறைப்படி நடைபெற்ற இந்த மஹாகும்பாபிஷேக வைபவத்தில், தமிழகம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தபோவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றார்கள்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பணிகள் கடந்த ஓராண்டாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன. ஒவ்வொரு சந்நிதிக்கும் பாலாலயம் ஆகி, சந்நிதிகள், மணிமண்டபம், அதிஷ்டான அருளாலயம், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு வண்ணமிடல், ஓவியங்கள் புதுப் பொலிவு பெறும் வகையில் வண்ணம் தீட்டுதல், சுதைச் சிற்பங்களை சரிசெய்தல், மண்டபங்கள் இவற்றில் பராமரிப்புப் பணிகள் செய்தல் என தபோவன வளாகத்தில் திருப்பணிகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான தங்கும் வசதிகள், உணவுக் கூடம், வைதீகர்கள் தங்கும் இடங்கள், உணவுச்சாலைகள் என புதிதாக ஏற்படுத்தப் பட்டன.
இதை அடுத்து கும்பாபிஷேக விழாவுக்கான தொடக்கமாக பந்தல்கால் நடப்பட்டு, ஜூன் 12ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்று, கும்பாபிஷேகத்துக்கான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், கோ பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, ம்ருத் சங்க்ரஹணம், பிரவேசபலி ஆகியவை நடைபெற்றன. ஜூன் 13ம் தேதி மாலை தொடங்கி, அடுத்த மூன்று நாட்களிலும் இரு வேளைகளிலும் இரு காலமாக, ஆறு கால பூஜைகள் நடைபெற்றன.
ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால யாகசாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிஷ்டானம், மணிமண்டபம், மூர்த்திகள், ராஜகோபுர யாகசாலைகளில் விசேஷ மூல மந்த்ர ஹோம த்ரவ்யாஹுதி, நவாவரண பூஜை ஆகியவை முடிந்து, மங்கள பூர்ணாஹுதி, யாத்ராதானம் ஆகியவை முடிந்து, காலை 6.15க்கு மேள தாளம் வேத கோஷம் முழங்க கடம் புறப்பாடு ஆனது. பின்னர் ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகள் சந்நிதிகளில் ஆகம முறைப்படியும், ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளின் அதிஷ்டான அருளாலயம், மணிமண்டபம் ஆகியவற்றில் வைதீக முறைப்படியும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, புனித நன்னீர் தெளிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் ஆனது.
கும்பாபிஷேக விழாவில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றார்கள். ஹைதராபாத் வேத பவனத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச, ஸ்ரீராம கணபாடிகள் உள்ளிட்ட வேத பண்டிதர்கள், யாகசாலை பூஜைகளை சிறப்பாக நடத்தி வைத்தார்கள். கும்பாபிஷேகம் குறித்த சிறப்பான தகவல்களுடன் நேரலை வர்ணனையை சுதா சேஷய்யன் செய்திருந்தார்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கும், தபோவனத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராம மக்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு, தொடர் அன்னதானங்கள் நடைபெற்றன. இவற்றில் ஒவ்வொரு வேளையும் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்று ஸ்வாமி பிரசாதம் ஏற்றுக் கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், தினமும் விரிவான அன்னதானம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இலவச மருத்துவ முகாம், நீர் மோர்ப் பந்தல் ஆகியவையும் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தபோவன அறக்கட்டளையின் செயலாளர் கே.அமர்நாத், தலைவர் விஜயராகவன், பொருளாளர் டாக்டர் ரமணி உள்ளிட்ட அறங்காவலர்கள் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். பெருமளவில் கூட்டம் கூடி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், ஒவ்வொரு பகுதிக்கும் இத்தனை பேர் தான் என முன்னதாக திட்டமிட்டு, நான்கு இடங்களில் பகுதி பகுதியாக பக்தர்கள் பிரித்து அமர வைக்கப் பட்டனர். தபோவன தன்னார்வலர்கள் பலர் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார்கள்.
டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 10 ஜூன் முதல் 15 ஜூன் வரை
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
அட்டவணை (15 ஜூன் வரை)
குரூப் A
குரூப் B
குரூப் C
குரூப் D
இந்தியா – 7 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 5 கனடா – 3 பாகிஸ்தான் 2 அயர்லாந்து 1
ஆஸ்திரேலியா 8 இங்கிலாந்து 5 ஸ்காட்லாந்து 5 நமீபியா 2 ஓமன் 0
ஆப்கானிஸ்தான் 6 மேற்கு இந்தியத் தீவுகள் 6 நியூசிலாந்து 2 உகாண்டா 2 பாபுவா நியூகினியா 0
தென் ஆப்பிரிக்கா 8 வங்கதேசம் 4 நெதர்லாந்து 2 நேபாளம் 1 இலங்கை 1
11.06.2024 அன்று நியூயார்க்கில் கனடா (106/7) பாகிஸ்தான் (17.3 ஓவரில் 107/3) அணிகளுக்கிடையே நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
12.06.2024 அன்று ப்ளோரொடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற இருந்த நேபால், இலங்கை அணிகளுக்கான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அதே நாள் மேற்கு இந்தியத்தீவுகளில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்றா நமீபியா (72) ஆஸ்திரேலியா (5.4 ஓவரில் 74/1) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அன்றையதினம் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் நியூயார்க் மைதானத்தில் அமெரிக்கா (110/8) இந்திய (111/3) அணிகள் மோதின. அதில் இந்திய அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா அமெரிக்க அணிகளின் ஆட்டம்
இந்தியாவில் எப்படி இடது புறத்தில் வாகனம் ஓட்டுவது அபூர்வமானதோ அது போல் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கிரிக்கெட் அந்நியமாக இருக்கலாம். இருப்பினும், மோனாங்க் படேலின் ஆட்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய கட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்ததால், 2024 டி 20 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் டீம் இந்தியாவுக்கு எதிராக இணை ஹோஸ்ட்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று அமெரிக்காவின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் எதிர்பார்த்தனர். இந்தியா மற்றும் ‘மினி இந்தியா’ மோதலாகக் கூறப்படும், ஐசிசி நிகழ்வின் போட்டி எண்.25 இன் முடிவு, பெரிய மாற்றத்தைத் தரவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காத்திருக்கும் நிலையில், அர்ஷ்தீப் சிங், நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அமெரிக்காவிற்கு (அமெரிக்கா) எதிரான தனது முதல் ஓவரிலேயே வரலாற்றை எழுதுவதன் மூலம் பவர்பிளேயில் முக்கியத்துவம் பெற்றார். 2024 டி20 உலகக் கோப்பை போட்டி எண்.25ல் ரோஹித் ஷர்மாவின் டீம் இந்தியாவுக்கான தாக்குதலைத் துவக்கி, ஐசிசி உலக டி20யின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் பெற்றார். ஷயான் ஜஹாங்கீருக்கு கோல்டன் டக் கொடுத்த பிறகு, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் தனது முதல் ஓவரை ஆண்ட்ரீஸ் கௌஸின் விக்கெட்டில் முடித்தார். கேப்டன் மோனாங்க் படேலின் சேவையை தவறவிட்டதால், மாபெரும் வெற்றியை தங்கள் வசம் வைத்திருந்த அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக குறைந்த பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்தது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்தியரின் சிறந்த எண்ணிக்கையைப் பதிவுசெய்து, வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் பும்ராவுடன் இணைந்து ரோஹித்தின் ஆட்கள் அமெரிக்காவை 20 ஓவர்களில் 110-8 என்று கட்டுப்படுத்த உதவினார். 110 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு மும்பையில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நேத்ரவல்கர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் விலைமதிப்பற்ற விக்கட்டுகளால் அதிர்ச்சியைத் தந்தார். வேகப்பந்து வீச்சாளர் நேத்ரவல்கர், குறைந்த ஸ்கோரை சந்தித்த கோஹ்லிக்கு கோல்டன் டக் கொடுத்தார்.
குரூப் ஏ பிரிவில் இந்தியாவை முதலிடத்தில் அமர்த்த சூர்யகுமார் யாதவ்ரிஷப் பந்துடன் இணைந்தார், முதல் தரவரிசை பேட்டர் ஆட்டத்தை மாற்றியமைக்கும் அரை சதத்தை எட்டினார். நியூ யார்க்கில் இந்தியா அதிக வெற்றிகரமான ரன் சேஸிங்கை நிறைவு செய்ததால், நம்பர்.1 டி20ஐ பேட்டர் தனது ஐந்தாவது அரை சதத்தை அடித்தார். சூர்யகுமார் (ஆட்டமிழக்காமல் 50), ஷிவம் துபே (ஆட்டமிழக்காமல் 31) ஜோடி 18.2 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா நுழைந்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே: (1) டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா நுழைந்துள்ளது. (2) குரூப் ஏ பிரிவில் இந்திய அணி மட்டும் எந்த ஆட்டத்திலும் தோற்கடிக்கப்படவில்லை. (3) சூர்யகுமார் யாதவ் 5வது அரைசதத்தை விளாச, இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. (4) 15வது ஓவரில் அமெரிக்க அணி குறைவான ஓவர் வீசியதற்காக 5 பெனால்டி ரன்களைப் பெற்றது. (5) 12ஆவது ஓவரில் சௌரப் நேத்ரவல்கரால் சூர்யகுமார் வீழ்த்தப்பட்டார். (6) சூர்யகுமார் 10 ஓவரில் இந்தியாவை 47-3 என உயர்த்தினார். (7) அலி கான் 7வது ஓவரில் ரிஷப் பந்தை (18) சிறப்பாக வீழ்த்தினார். (8) ரோஹித் சர்மாவை மலிவாக நீக்கினார் நேத்ராவல்கர். (9) விராட் கோலிக்கு நேத்ராவல்கர் கோல்டன் டக் அதாவது தங்க வாத்து வழங்கினார். (10) அர்ஷ்தீப் சிங் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக சிறந்த பந்துவீச்சைப் (4/9) பதிவு செய்தார். (11) 20 ஓவர்களில் அமெரிக்கா 110-8 ரன்கள் எடுத்தது. (12) ஹர்திக் ஆபத்தான ஆண்டர்சனை நீக்கினார். (13) நிதிஷ் குமாரின் கேமியோவை முடிக்க முகமது சிராஜ் ஒரு கண்மூடித்தனமான பந்துவீசினார். (14) ஜெயிண்ட்கிலர்ஸ் அமெரிக்கா 12 ஓவர்களில் 59-4 ரன்களை எட்டியது. (15) அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக குறைந்த பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்தது. (16) டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப். (17) நியூயார்க்கில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். (18) அமெரிக்க அணியில் ஐந்து பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். (19) அமெரிக்க நட்சத்திரம் ஹர்மீத் சிங், ராகுல் டிராவிட் கண்காணிப்பில் ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.
13.06.2024 அன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் தரௌபா மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் (149/9) நியூசிலாந்து (136/9) அணிகளுக்கு இடையில் நடைபெற்றது அதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் கிங்க்ஸ்டன் மைதானத்தில் வங்கதேசம் (159/5) நெதர்லாந்து (134/8) அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மேற்கு இந்தியத்தீவுகளில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஓமான் (47) அணியை இங்கிலாந்து (3.1 ஓவரில் 50/2) அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அன்றைய தினம் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் தரௌபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் பாப்புவா நியூ கினியா (95) அணியை ஆஃப்கானிஸ்தான் (15.1 ஓவரில் 101/3) அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
14.06.2024 அன்று ப்ளோரிடா, லாடர்ஹில் மைதானத்தில் அமெரிக்க அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அன்று நடந்த இரண்டாவது ஆட்டம் கிங்க்ஸ்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா (115/7) நேபாளம் (114/7) அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. அன்றைய தினமே தரௌபாவில் நடந்த ஆட்டத்தில் உகாண்டா (40) நியூசிலாந்து (5.2 ஓவரில் 41/1) அணியிடம் 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மிக மோசமான தொல்வியச் சந்தித்தது.
15.06. 2024 அன்று மூன்று ஆட்டங்கள் நடந்தன. முதலாவது ஆட்டம் நியூயார்க்கில் இந்திய கனடிய அணிகளுக்கிடையே நடைபெற இருந்தது. ஆனால் மழையால் கைவிடப்பட்டது – இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இரண்டாவது ஆட்டம் வட சவுண்ட் மைதானத்தில் இங்கிலாந்து (122/5) நமீபியா (84/3) அணிகளுக்கு இடையே நடந்தது. இங்கிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டம் க்ரோஸ் ஐலெட் மைதானத்தில் ஸ்காட்லாந்து (180/5), ஆஸ்திரேலியா (19.4 ஓவரில் 186/5) அணிகளுக்கு இடையே நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
சூப்பர் 8 நிலைக்கு முன்னேறிய அணிகள்
குரூப் A பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன.
குரூப் C பிரிவில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் முன்னேறியுள்ளன.
குரூப் D பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் முன்னேறியுள்ளன. இன்று 16.06.2024, இரண்டு ஆட்டங்கள் இந்தப் பிரிவில் நடக்கவுள்ளன.
2024 லோக் சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிமுக-வுடனான கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளாமல் போனது பற்றிப் பலரும் விவாதிக்கிறார்கள். அந்த விவாதத்தின் மையம், பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் முன்னதாகத் தங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டதால், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியுமாக இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்கொண்டன, அதோடு தங்களுக்குள் ஒன்றை ஒன்றும் எதிர்த்தன. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் 39, பாண்டிச்சேரியில் ஒன்று, ஆக 40 லோக் சபா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. இங்கு அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்குக் கிடைத்த இடங்கள் பூஜ்யம்.
இந்தத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அக் கட்சிகளின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள் மற்றதும் அதிமுக-பாஜகவோடு சேர்ந்திருந்தால், அவர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கும்? குறைந்த பட்சம், தமிழகத்தின் 13 தொகுதிகளில் அவர்களின் கூட்டணி நிச்சயம் வென்றிருக்கும், திமுக கூட்டணி தோற்றிருக்கும். ஏனென்றால், அந்த 13 தொகுதிகளில் இப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் தனித்தனியாகப் பெற்ற ஓட்டுகளின் கூட்டு எண்ணிக்கை, திமுக கூட்டணி வேட்பாளர்கள் அங்கு ஜெயித்து வாங்கிய ஓட்டுகளை விட அதிகம்.
சென்ற இரண்டு தேர்தல்கள் போல இல்லாமல், லோக் சபாவில் பெரும்பான்மையைக் குறிக்கும் 272 தொகுதிகளை இந்த முறை பாஜக தனியாக எட்டவில்லை. இப்போது அது வென்றிருப்பது 240 தொகுதிகள் தான். பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கூட்டாகப் பெரும்பான்மை இலக்கைச் சற்றுத் தாண்டின. அவைகள் 293 இடங்களில் வென்று, பாஜக-வின் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகி இருக்கிறார். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்து அதற்கு 13 இடங்கள் கிடைத்திருந்தால், பாஜக-வுக்கு அது இன்னும் பலமாகும்.
மக்களவையில் பாஜக-வுக்குக் கூட்டணிக் கட்சிகளினால் கூடுதல் பலம் கிடைக்காமல் போனதற்கு, தமிழகத்தில் அண்ணாமலையின் அரசியல் அணுகுமுறைதான் காரணமா? மொத்தத்தில் இது பாஜக-வுக்கு நஷ்டமா? இதுதான் கேள்வி.
ஒரு கருத்து இது. அதிமுக பலமுறை திமுக-வைத் தோற்கடித்துத் தமிழகத்தில் ஆட்சி அமைத்த கட்சி. அது பாஜக-வை விட மாநிலத்தில் பெரிய கட்சி. அதிமுக-வின் தலைமையில் பாஜக ஒரு கூட்டணியில் இருக்கும்போது, அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்தால் பாஜக-தான் அதிமுக-வுக்கு விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகவேண்டும்.
இந்தக் கருத்தை விரிவாக்கி இன்னும் தெளிவாக ஒரு உதாரணத்தோடு சொல்லலாம். அதாவது, தமிழக காங்கிரஸ் கட்சி திமுக-விடம் எப்படிப் பணிவாக, பவ்யமாக நடந்துகொண்டு, அவ்வப்போது திமுக தலைவர் மனம் குளிரப் பேசி, தேர்தல் சமயத்தில் திமுக-விடம் அழுது கெஞ்சிக் கூடியவரை அதிகத் தொகுதிகள் பெற்று சமாதானப் படுகிறதோ, அது போல் பாஜக-வும் அதிமுக-விடம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்திருந்தால், இந்த லோக் சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்குத் தமிழகத்தில் 13 இடங்களாவது கிடைத்து, அதில் பாஜக-வுக்கும் இரண்டோ மூன்றோ கிடைத்திருக்குமே?
திமுக-வின் விரலை சமர்த்தாகப் பிடித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி, ஆனால் அதிமுக-வின் கையை விட்ட அசட்டு பாஜக-வுக்கு மாநிலத்தில பூஜ்யம் என்றாகி விட்டதே? இந்த ரீதியில் ஒரு கருத்து நிலவுகிறது.
இந்தக் கருத்தின் இன்னொரு பக்கம் இது. அதிமுக-விடம் தமிழக பாஜக இணக்கமாக, பதவிசாக, பணிவாக நடக்கவில்லை என்றால் அதற்கு அர்த்தம்: தமிழக பாஜக-வின் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் அப்படி நடக்கவில்லை என்று அர்த்தம். பிரச்சனை இங்குதான் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி எம். ஜி. ஆர் இல்லை, ஜெயலலிதாவுமில்லை. மக்கள் செல்வாக்கு மிகுந்த எம். ஜி. ஆர் மறைந்த பின்னர், ஜெயலலிதா தனக்கென ஒரு மக்கள் செல்வாக்கை ஏற்படுத்தி வைத்திருந்தார். அந்த இரு தலைவர்களும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தைக் கட்சித் தொண்டர்கள் மனதில் பதிய வைத்திருந்தார்கள்.
பழனிசாமிக்கு, சொல்லும்படியாக மக்கள் செல்வாக்கு இல்லை. எம். ஜி. ஆர், ஜெயலலிதா இருவரும் தலைமை ஏற்ற அதிமுக-வின் இன்றைய தலைவராகப் பழனிசாமி இருப்பதால், கட்சியின் சின்னம் இரட்டை இலைக்காக, அந்தக் கட்சியின் தொண்டர்கள் அவர்மீது பேருக்கு ஒரு மரியாதை வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.
பாஜக-வைப் பொறுத்தவரை, தமிழகத்தில் முன்பிருந்த அதன் தலைவர்களை விட மிக அதிக மக்கள் செல்வாக்கைக் குறுகிய காலத்தில் பெற்றவர் அதன் இப்போதைய தலைவர் அண்ணாமலை. பாஜக-வின் ஏறுமுகம் அண்ணாமலை. அதிமுக-வின் இறங்குமுகம் எடப்பாடி பழனிசாமி.
திமுக என்கிற தீய அரசியல் சக்தியிடம் சாதாரண மக்கள் பொதுவாக அஞ்சிப் பணிந்து, கிடைப்பதை வாங்கி, அக்கட்சியை ஆதரிக்கிறார்கள். அந்தத் தீய சக்தியை நேருக்கு நேர் பார்த்துப் போராடி அடக்கி வைக்கும் ஆற்றல் அண்ணாமலைக்கு உண்டு என்ற நம்பிக்கை சாதாரண மக்களிடம் பெருகி வருகிறது. இதனால் அண்ணாமலைக்கான மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதுவரை ஆளும் கட்சியாக இல்லாத பாஜக-வுக்குத் தமிழகத்தில் ஆதரவு கூடி வருகிறது என்றால், பாஜக யாரை எதிர்க்கிறது, எந்தக் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கவல்லது, என்று மக்கள் பார்த்து ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.
பாஜக-வுடன் கூட்டணியில் தொடர்ந்தால், அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கால் சொற்பமான தனது மக்கள் செல்வாக்கு இன்னும் சரியும், தனது கட்சிக்குள் தன்னுடைய மதிப்பும் குறையும் என்று கணக்கிட்டார் எடப்பாடி. அதனால் தனது சுயநலத்துக்காக, தனது அரசியல் கெத்து சிறிது காலம் நீடிக்க, அதிமுக-பாஜக உறவு முறிவதற்கு வழி வகுத்தார் எடப்பாடி. அது நடந்தது.
அதிமுக-விடம் பணிவும் பயமும் காட்டி, பேருக்குக் கட்சித் தலைவராக இருப்பதை அண்ணாமலை விரும்பவில்லை. தமிழகத்தில் அதிமுக-வைச் சாராமல் பாஜக-வை வளர்க்கும் தெம்பும் திராணியும் தலைமைப் பண்புகளும் அவரிடம் இருக்கின்றன. கட்சியின் அகில இந்தியத் தலைமையும் இந்த நிதர்சனத்தை அங்கீகரித்திருக்கிறது. அது இன்னும் முக்கியம்.
2019-ல், தமிழகத்தில் பாஜக-வின் ஓட்டு சதவிகிதம் 3.6 சதவிகிதம் இருந்தது. இந்த லோக் சபா தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல், திமுக-வையும் எதிர்த்து நின்று, அது தனது ஓட்டு சதவிகிதத்தை 11.2 என்று உயர்த்திக் காண்பித்தது. இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு ஓட்டு சதவிகிதம் சுமார் 6 குறைந்து, இப்போது 27 சதவிகிதம் என்று ஆகி இருக்கிறது.
பாஜக-வின் ஓட்டு சதவிகிதம் மூன்று மடங்குக்கு மேல் வளர்ந்திருக்கிறது. இதை இப்போது ஊர்ஜிதப் படுத்திக் கொண்டதால் அந்தக் கட்சியின் மதிப்பு-மரியாதை மற்ற கட்சியினரிடமும் மக்களிடமும் உடனே கூடி இருக்கிறது. அண்ணாமலைக்கு, பாஜக தொண்டர்களுக்கு, இது இன்னும் உத்வேகம் அளித்துக் கட்சி மேலும் தனியாக வலுப்பெற உதவும். இந்த நிலையைத் தள்ளிப்போடாமல் இப்போதே – அண்ணாமலையின் 40 வயதிலேயே – அடைந்திருப்பது நல்லது. நீண்ட வளர்ச்சிப் பயணத்திற்கும் காலம் வேண்டுமே?
தமிழகத்தில் தொகுதிகள் குறைந்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களவைத் தேவைகளை நாம் வேறுவகையில் பார்த்துக் கொள்ளலாம், என்று எண்ணி, அண்ணாமலையின் வீரியத் தலைமையை உணர்ந்து அவருக்குத் துணை நின்றார் பிரதமர் மோடி. எல்லாவற்றையும் கணக்கிட்டு, சில தருணங்களில் தைரிய முடிவு அவசியம் என்று மோடிக்கும் தோன்றியது.
தமிழக பாஜக சீராக விரைவாக வளர்ச்சி பெறுவதற்கு அண்ணாமலையின் அணுகுமுறை சரி என்று கட்சியின் தலைமை நம்புகிறது, அது அண்ணாமலைக்கும் தெரியும்.
கட்சித் தலைமையின் ஒப்புதலோடு, ஆதரவோடு, தமிழக பாஜக-வை வழி நடத்தும் அண்ணாமலையைத் தனியாக யார் எதில் பெரிதாகக் குறை சொல்ல முடியும்? பொழுது போகாதவர்கள் கணினி விளையாட்டுக்கள் விளையாடலாமே?
Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி பூரதேரோட்டம் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வெகு சிறப்பு பெற்றதாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த இங்கு, ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் அவதரித்த நாளின் போது மிக பிரமாண்டமான தேரில் ஆண்டாளும் ரங்க மன்னரும் எழுந்தருள்வர்.
இந்தத் தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகள் வழியே நிலைக்கு சேர்ப்பார்கள். இந்தத் திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே மிக குறிப்பிடத்தக்க விழாவாகவும் உள்ளது.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேர்த் திருவிழாவிற்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக ஆண்டாள் சந்நிதியில் விஸ்வரூப பூஜை முடிந்த பின்னர் புண்யாகவாசனம், ஸ்தம்ப ஆவாஹன பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் நடத்தி, அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தேர் நிலைக்கு வந்து முகூர்த்தக்காலுக்கு பல்வேறு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க ஆவாஹணம் செய்யப்பட்டது.
ஆகம முறைப்படி பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் இரா.இலட்சுமணன், ஸ்தானிகர் ரங்கராஜன் என்ற ரமேஷ், மணியம் கோபி ஸ்ரீ ராமன், சுதர்சன், ஏழுர் நாயுடு மகாஜன சங்கத் தலைவர் வெங்கடேஷ் பெருமாள், சங்க செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…
இராமேஸ்வரம் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வு ஊதிய திட்டப்படி கட்ட வேண்டிய தொகையை தற்காலிக ஊழயர் சிவன் அருள் குமரன் கணக்காளர், இணை ஆணையர் துணையோடு முறைகேடாக திருடியது குறித்து சிபிசிஐடி பிரிவால் இராமேஸ்வரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கமானது 2016இல் துவங்குகிறது.இந்த குற்றச்சாட்டு 2020இல் விசாரணைக்கு வந்தது. ஆக இந்த குற்றத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. 2000 பக்கங்கள் கொண்ட இந்த குற்ற பத்திரிகையை நீதிபதி படித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளிடம் இருந்து சுமார் ஒரு கோடி மோசடி பணத்தை எப்போது மீட்பார்கள்?
இதுபோல இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு பொருட்காட்சியில் இருக்கும் பாரத கலை பொக்கிஷமான நமது தெய்வங்களின் விக்கிரகங்கள் தெரிய வந்துள்ளன. இவை ஏலம் போடும்போது தான் தெரியவருகிறது என்பது வேதனையானது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்று தமிழக காவல்துறையில் செயல்படுகிறது. ஆனால் அது சுதந்திரமாக செயல்படுகிறதா?என்ற சந்தேகம் எழுகிறது.
விக்ரகங்கள் கிடைக்கும் போது அதனை திருடி கடத்தியவர்கள் யார் யார் என விசாரணை நடைபெறுகிறதா? அந்த விக்ரகங்கள் எந்த திருக்கோயிலுக்கு சொந்தமானவை என்பதும் அது திருடு போனது குறித்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என உரிய அதிகாரிகள் மீது வழக்கு போடப்படுகிறதா? என்பது ரகசியமாகவே இருக்கிறது.
பல கோடி மதிப்பிலான நிலங்கள் இடங்கள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்து முதல்வரின் ஆன்மிக ஆட்சி என பெருமை பேசினார். ஆனால் அதனை ஆக்கிரமித்து அனுபவித்தவர்கள் யார் யார் என்று தெரிவித்தாரா? அவர்களின் சொத்துக்களை வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தாரா? இல்லையே! ஏன்? திருடுகிறவனுக்கு அனுபவிக்கும் உரிமை இந்த திராவிட அரசு கொடுத்து மகிழ்கிறதா?
திருக்கோவிலை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலையத்துறை போல ஒரு மோசடி நிர்வாகத்தை வேறு எந்த துறையிலும் பார்க்க முடியாது. மற்ற துறைகளினால் பலனடைபவரிடம் இருந்து லஞ்சம் பெறுவார்கள். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் பக்தர்கள் தங்கள் சொந்த பணத்தை கோவிலுக்கு கைங்கர்யம் செய்வதற்கு கூட லஞ்சம் பெறப்படுகிறது என்பது எத்தனை அநியாயம்.
மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விசாரணை முடியும் வரை வேலை நீக்கம் செய்து அவர்கள் வங்கி கணக்கு சொத்து முதலானவற்றை முடக்கி வைக்க வேண்டும்.
ஆனால் அரசியல்வாதிகளைப் போல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஜாமீன் பெற்ற உடனே அமைச்சரின் செல்வாக்கில் உலா வருவது அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளுக்கு முரணானது. அமைச்சரும் முறைகேடு கடத்தல் வழக்கிற்கு உடந்தையோ என்ற சந்தேகத்தை இத்தகைய செயல்பாடு ஏற்படுத்துகிறது.
எனவே இந்து சமய அறநிலையத்துறையினால் நடக்கும் அனைத்து கிரிமினல் சிவில் வழக்குகளை விரைவாக விசாரித்து உடனடியாக தீர்ப்பு வருவதற்கு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைத்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
மோடி குடும்பம் என்று மோடியின் அன்பர்கள் சமூகத் தளங்களில் போட்டுக் கொண்டது போதும், அவற்றை எடுத்து விடலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
Through the election campaign, people across India added 'Modi Ka Parivar' to their social media as a mark of affection towards me. I derived a lot of strength from it. The people of India have given the NDA a majority for the third consecutive time, a record of sorts, and have…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடியை குடும்பம் இல்லாத நபர் என விமர்சித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், பாஜக., அமைச்சர்களும், நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் தங்களின் பெயருக்கு பின்னால் தாங்கள் மோடியின் குடும்பம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ‘மோடி கா பரிவார்’ என, மோடியின் குடும்பத்தினர் என்ற வார்த்தையை சேர்த்து, தங்கள் ப்ரொபைல் பிக்சர் ஆக வைத்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகத் தளப் பதிவில் வெளியிட்ட தகவல்:
என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தின் போது, நாடு முழுதும் பலர் சமூக வலைதள கணக்கில், தங்கள் பெயருக்கு பின்னால் மோடி கா பரிவார் எனப்படும் மோடியின் குடும்பம் என்ற வார்த்தையை சேர்த்திருந்தனர். இது எனக்கு பெரும் பலத்தை தந்தது.
தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் மூன்றாவது முறையாக வெற்றியைக் கொடுத்துள்ளனர். இது சாதனை. இந்த வெற்றியின் வாயிலாக நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி.
இனி, மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்… என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக பெயர் வைப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்ற வகையில் திபெத்தில் உள்ள இடங்களுக்கு இந்தியா புதிதாக பெயர் சூட்டியுள்ளது
இந்தியாவின் பகுதியான அருணாசலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு, புதிதாகப் பெயர்களை சூட்டிய சீனாவுக்கு பதிலடி தரும் விதமாக திபெத்தில் உள்ள 30 இடங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இதற்காக பல கட்ட பேச்சு வார்த்தைகளும் அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2020 மே 5ல் லடாக் எல்லையை சீனா ஆக்கிரமிக்க முயன்றபோது இந்திய சீன வீரர்களுக்கு இடையே அது மோதலாக வெடித்தது. பாங்காங் ஸோ பகுதியில் சீன நாட்டு வீரர்கள் தடுக்கப்பட்டு, இந்திய வீரர்கள் பெரும் பதிலடி கொடுத்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பின் இந்தியா – சீனா இடையேயான ராஜீய உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. வர்த்தக உறவைத் தவிர மற்ற உறவுகள் சுமுகமாக நடைபெறவில்லை.
இந்நிலையில் வேண்டுமென்றே இந்தியாவை உசுப்பேற்றும் விதமாக இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனது நாடு தொடர்பிலான பெயர்களை வைத்து, அதனை வரைபடத்தில் குறிப்பிட்டு, சீனா அவ்வப்போது சீண்டி வருவது வழக்கமாகிவிட்டது.
அந்த வரிசையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா, அங்குள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் கடந்த ஏப்ரல் மாதம் பெயர்களை மாற்றியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ‘புதிதாக பெயர்களை சூட்டுவதன் வாயிலாக, அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி என்ற உண்மை நிலை மாறிவிடாது’ என்றார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு, தற்போது சீனாவின் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவும் சீனாவின் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு வேறு பெயர்களைச் சூட்டி வருகிறது.
திபெத்தில், இந்தியா வசம் உள்ள 30 இடங்களுக்கு இந்திய மொழியில் புதிய பெயர்களை சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, பிராந்திய உரிமையை உறுதிப்படுத்துவதே நம் அரசின் நோக்கம். புதிய பெயர் சூட்டும் இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைப் பிரதேசங்கள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைவழிப்பாதை மற்றும் ஒரு நிலப்பரப்பு இடம் பெற்றுள்ளன.
திபெத்தின் வரலாற்று ஆராய்ச்சி அடிப்படையில் சூட்டப்பட்டுள்ள இந்த பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்தப் புதிய பெயர்ப் பட்டியலுடன் கூடிய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை வரையறுக்கும் வரைபடத்தையும் இந்திய ராணுவம் விரைவில் வெளியிட உள்ளது.
இது குறித்து பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியபோது, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உறவு மற்றும் சிக்கல்கள் வெவ்வேறானவை. சீனாவுடன் தொடர்ந்து வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். ஆனால், பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட முயற்சித்து வருகிறோம் என்றார்.
நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால், அவர்களின் 20-25 நிமிட உரைகளில் 10 நிமிடங்கள் வரை, கரீபி எனும் ஏழ்மை பற்றி பேசுவார்கள். எந்த ஒரு தேர்தல்காலப் பரப்புரையை வேண்டுமானாலும் கேளுங்கள், அவர்கள் ………. ஜபமாலையை உருட்டித் தீர்ப்பார்கள்.
நேரு, 1951 – நாம் இரண்டாவது போராட்டத்தை நடத்த வேண்டும், அந்த உண்மையான போராட்டம், இந்தியாவின் ஏழ்மையோடு நாம் தொடுக்கும் போர். இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தோடு போர்.
இந்திரா காந்தி, 1982 – தேசத்திலிருந்து ஏழ்மை அகல வேண்டும் என்பது தான் இன்று நமது குறிக்கோள். பிற்பட்டிருக்கும் பகுதிகளில் இருப்போர் பிற்பட்ட நிலையிலிருந்து உயர வேண்டும்.
இந்திரா காந்தி, 1984 – தன்னிறைவான, மற்றவர்களை விடச் சிறப்பான வாழ்க்கை வாழ்வோரின் தேவைகளை நிறைவேற்றும் அதே வேளையில், வாழ்க்கையில் பின் தங்கிப் போன, ஏழ்மையில் இருப்போரின், பலவீனமானவர்களின் தேவைகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
ராஜீவ் காந்தி, 1985 – பாரதநாட்டின் ஏழ்மையை நாம் அகற்றவில்லை என்று சொன்னால், நாம் செய்யத் திட்டமிடும் அனைத்துப் பணிகளும் வீணாகியே போகும். ஆகையால் நாம் ஏழ்மையை அகற்றும் பணியில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம்.
ராஜீவ் காந்தி, 1987 – ஏழ்மையை அகற்றுவதற்கு நாங்கள் முதன்மை அளித்திருக்கிறோம். ஏழ்மையை அகற்றுவதில் எங்களின் முழுச் சக்தியையும் நாங்கள் செலுத்தியிருக்கிறோம்.
மன்மோஹன் சிங், 2005 – நமது இந்த வேகத்தை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமேயானால், வரவிருக்கின்ற 5-10 ஆண்டுகளில் பாரதம் முழுவதிலிருந்தும் ஏழ்மை, பட்டினிச் சாவு, நோய்களிலிருந்து விடுபட முடியும்.
ராகுல் காந்தி, 2013 – பாதி ரொட்டியாவது உண்போம் என்ற உங்களுடைய கோஷத்தை நான் மாற்ற விரும்புகிறேன். முழு ரொட்டியை உண்போம், 6 நாட்கள் வேலை செய்வோம், மருந்துகளை எடுப்போம், காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவோம்.
சோனியா காந்தி, 2014 – நம் மண்ணிலிருந்து ஏழ்மை என்ற சாபம் முடிவுக்குக் கொண்டு வரப்படாத வரை நம்மால் நிம்மதியாக உறங்க முடியாது.
ராகுல் காந்தி, 2019 – எங்களுடைய பணி, காங்கிரஸ் கட்சியின் பணி இந்தியாவைப் பாதுகாப்பது. இந்தியாவின் ஏழைகளைப் பாதுகாப்பது. பலவீனமானவர்களைப் பாதுகாப்பது.
ராகுல் காந்தி, 2024 – ஒரே ஒரு அடியில், ஒரே ஒரு அடியில், இந்தியாவிலிருந்து ஏழ்மையை நாங்கள் அகற்றி விடுவோம்.