தமிழனின் உயிர் மலிவு விலையா? தமிழக அரசின் தவறான செயல்பாட்டால் தடம் மாறி போகிறது தமிழகம் என்று குறிப்பிட்டு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து, இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி த. மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகம் போதையில் தடுமாறும் நிலைக்கு டாஸ்மாக் தமிழர்களை சீரழித்தது. டாஸ்மாக் சரக்கில் விழுந்த தமிழன். விலை மலிவான போதை அதிகமாக, எதை வேண்டுமானாலும் நாடும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்கள் பொன்னான எதிர்காலத்தை இழந்து நடைபிணமாக வாழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் தான் இதிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பது வேதனையான உண்மை.
கடந்த வருடம் கள்ள சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு அதிலும் அந்த விஷ சாராயத்தை விற்ற அயோக்கியனுக்கும் அரசு பத்து லட்சத்தை வாரி வழங்கியது. உண்மையில் இது மனிதாபிமான அடிப்படையில் என்பது சரி. ஆனால் இதனால் கள்ள சாராய விற்பனை, போதை பொருள் விற்பனை தான் ஊக்கம் பெற்றது.
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராய சாவு ஏன்? என்று தமிழக அரசு சிந்தித்ததா? இல்லையா எனத் தெரியவில்லை? தமிழனின் உயிர் மலிவு விலையாகிபோனது.
இப்போதும் அரசு நல நிதி தரலாம். இதனை மனிதாபிமான அடிப்படையில் என ஊடகமும் அரசியல் கட்சிகளும் பசப்பலாம். இவை எல்லாம் மக்களின் கோபத்தை திசை திருப்ப நடக்கும் நாடகம்.
கள்ள சாராயம் எங்கு விற்றார்கள்? காவல்துறை, கள்ளக்குறிச்சி கோர்ட், கலெக்டர், அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்கு அருகிலேயே என கூறப்படுகிறது. இது உண்மையானால், இது எத்தகைய வெட்கக்கேடான விஷயம். மனித உயிர்கள் போன பின்பு நடவடிக்கை எடுப்பது என்பது கண்துடைப்பு நாடகம்.
இவர்களை போதையில் தள்ளியது யார்? நேற்று திமுக கொடியுடன் சென்னையில் சாலையின் நடுவில் போதையில் மட்டையான இளைஞன் காரில். இதுபற்றி திமுக வாயை திறந்ததா? முதல்வரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் அவர்களுக்கு இது தெரியுமா? அவரோ மர்மயோகி போல் ஆட்சி நடத்துகிறார் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், உழைக்கும் இளைஞர்கள் இன்று பெருமளவில் போதைக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது வேதனையான உண்மை.
இதற்கு முக்கிய காரணம் போதையை ஏற்றும் டாஸ்மாக் சரக்கில் ஆல்கஹால் அதிகம். அது குடிப்பவனை உடனே அது குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். குடிக்கு அடிமையானவரால் குடிக்காமல் இருக்கமுடியாத நிலையை ஏற்படுத்துகிறது. டாஸ்மாக் கடையை நடத்துவது தமிழக அரசின் பணியா?
பீகாரிலும், குஜராத்திலும் மது வருமானம் இல்லாத ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் மீளமுடியாத அளவு போதையில் போகிறது. காரணம் மது ஆலைகளை நடத்துவது அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகள். இவர்களால் தமிழகம் சீரழிந்து வருகிறது.
இந்த அவல நிலையை போக்க மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போராட முன்வர வேண்டும். வருங்கால சமுதாயத்தை காப்பாற்ற போதை எனும் அரக்கனை ஒழிக்க வேண்டும்.
தமிழக அரசு டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த சிந்திப்பதை நிறுத்தி, போதை மறுவாழ்வு இல்லங்களை மாவட்டம் தோறும் திறந்தாக வேண்டியது அவசியமாகிறது.
மீண்டும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டுமானால் முதலில் போதையில் வீழ்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கண்துடைப்பு நாடகம் நடத்துவது மட்டும் இதற்கு தீர்வு தராது.
எனவே முழுமையான போதை பொருள், கள்ள சாராயம் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை மாவட்டம் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு விவகாரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்! என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது. ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன.
சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது? என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.
கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மதுவணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சி தான் இது. இதில் உண்மை இல்லை. கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் நவீனமடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.
கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல… டாஸ்மாக் மதுவை குறித்து விட்டு அட்டகாசம் செய்யும் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நாட்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய தமிழக அரசு, அதற்கான தண்டமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரக்காணம் நிகழ்வில் வழங்கப்பட்டது போன்று தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 10-க்கும் மேற்பட்டோருக்கு தரமான மருத்துவம் அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக., நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்- திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது.
கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது.
கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான்.
கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். கடந்த காலங்களில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போக மறுத்த காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதனால், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் மேலாக கள்ளச்சாராய சாவு தொடர்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்துள்ளார். கள்ளச்சாராய சாவு குறித்த செய்தி வெளியான பிறகு தான் நேற்று மாலை அந்த பதாகை அகற்றப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளது.
கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்தது அம்பலமானது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். – என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்; பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதை அடுத்து வழக்கமான நடவடிக்கையாக, கள்ளச் சாராய உயிரிழப்பு இல்லை என பகிரங்கமாக தவறான தகவல் அளித்த மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி., மற்றும் எட்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியர் மற்றும் எஸ்.பி நியமனம் செய்யப் பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப் பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அங்குள்ளவர்களிடம் கள்ளச் சாராயத்தை விற்பனை செய்வதும், அதனை அவர்கள் வாங்கிச் செல்வதுமான வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தில் மெத்தனால் அதிகமாகக் கலக்கப்பட்டதால், அதனைக் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிவிரைவு, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சின்னதுரை என்பவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 10 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) June 19, 2024
இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது. ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன.
சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது? என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.
கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மதுவணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சி தான் இது. இதில் உண்மை இல்லை. கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் நவீனமடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். – என்று குறிப்பிட்டிருந்தார்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க…
மேலும், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் திரு @MKStalin அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, @BJP4Tamilnadu சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அ.தி.மு.க. சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.
ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்! – என்று, எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கள்ளச் சாராயத்தை மட்டுமல்ல… டாஸ்மாக் மதுவை குறித்து விட்டு அட்டகாசம் செய்யும் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நாட்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!
டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 16 ஜூன் முதல் 17 ஜூன் வரை
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
அட்டவணை
(லீக் சுற்று ஆட்டங்களின் முடிவு வரை)
குரூப் A
குரூப் B
குரூப் C
குரூப் D
இந்தியா – 7
அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 5
பாகிஸ்தான் 4
கனடா – 3
அயர்லாந்து 1
ஆஸ்திரேலியா 8
இங்கிலாந்து 5
ஸ்காட்லாந்து 5
நமீபியா 2
ஓமன் 0
மேற்கு இந்தியத் தீவுகள் 8
ஆப்கானிஸ்தான் 6
நியூசிலாந்து 4
உகாண்டா 2
பாபுவா நியூகினியா 0
தென் ஆப்பிரிக்கா 8
வங்கதேசம் 6
இலங்கை 3
நெதர்லாந்து 2
நேபாளம் 1
லீக் சுற்றின் கடைசி ஐந்து ஆட்டங்கள் 16ஆம் தேதியும் 17ஆம் தேதியும் நடந்தன. 16.06.2024 அன்று லாடர்ஹில் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் அயர்லாந்து (106/9) பாகிஸ்தான் (18.5 ஓவரில் 111/7) அணிகள் விளையாடின. அதில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 107 ரன் என்ற இலக்குடன் இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி சற்று திணறியது என்றுதான் சொல்ல வேண்டும்.
பாபர் ஆசம் மற்றும் ஷாஹின் ஷா அஃப்ரிடி இருவரின் முயற்சியால் அந்த அணி 18.5 ஓவரில் ஏழு விக்கட்டுகள் இழப்பிற்கு 111 ரன் அடித்து ஆறுதல் வெற்றிபெற்றது.
அதே நாளில் கிங்க்ஸ்டனில் வங்கதேசம் (106) நேபாளம் (19.2 ஓவரில் 85) அணிகளுக்கிடையில் நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, சூப்பர் 8இல் தனது இடத்தை உறுதிசெய்தது.
அன்றைய தினத்தின் மூன்றாவது ஆட்டம் கிரோஸ் ஐலட்ஸ் மைதானத்தில் இலங்கை (201/6) நெதர்லாந்து (16.4 ஓவரில் 118) அணிகளுக்கிடையே நடந்தது அதில் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
17.06.2024 அன்று இரண்டு ஆட்டங்கள் நடபெற்றன. முதல் ஆட்டம் தரௌபாவில் பாப்புவா நியுகினியா (78) நியூசிலாந்து (12.2 ஓவரில் 79/3) அணிகளுக்கிடையே நடந்தது அதில் நியூசிலாந்து அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
அதே நாள் கிரோஸ் ஐலட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் (218/5) ஆஃப்கானிஸதான் (16.2 ஓவரில் 114) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சூப்பர் 8
குரூப் 1
குரூப் 2
A
இந்தியா
அமெரிக்கா
B
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
C
ஆஃப்கானிஸ்தான்
மேற்கு இந்தியத் தீவுகள்
D
வங்கதேசம்
தென் ஆப்பிரிக்கா
சூப்பர் 8 ஆட்டங்கள் இன்று 19 ஜூன் முதல் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. 20 ஜூன் 2024 அன்று இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடுகின்ற ஆட்டமும் ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் ஆட்டமும் நடைபெறுகின்றன. அதன் பின்னர் பின்வரும் ஆட்டங்கள் நடபெறுகின்றன.
இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா – 21.06.2024
அமெரிக்கா – மேற்கு இந்தியத் தீவுகள் – 21.06.2024
இந்தியா – வங்கதேசம் – 22.06.2024
ஆஃப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா- 22.06.2024
அமெரிக்கா – இங்கிலாந்து – 23.06.2024
மேற்கு இந்தியத் தீவுகள் – தென் ஆப்பிரிக்கா – 23.06.2024
ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவனை ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்று பாராட்டினர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கட்டளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் குமார் என்பவரை மகன் ஆதிமகேந்திரன்(19), இவர் தடகளப் போட்டியில் ஆர்வம் கொண்ட நிலையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 12ம் தேதி ஜம்மு காஷ்மீரில் கேரள, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட பல் பல்வேறு மாநிலங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிலையில் தமிழகத்திலிருந்து மாணவர் ஆதிமகேந்திரன் கலந்து கொண்டுள்ளார். இதில் 3ஆயிரம் மீட்டர் தடகள போட்டி பிரிவில் பங்கேற்று முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை தேடித்தந்த மாணவன் ஆதி மகேந்திரனை ஊர் திரும்பிய நிலையில், தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு ஊர் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மாணவன் ஆதிமகேந்திரனுக்கு இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி உற்சாக ஊர்வலமாக அழைத்துச் சென்று பாராட்டினர்.
பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார். மோடி பிரதமராக இருந்த இந்த பத்து ஆண்டுகளில் நூறு எபிசோட்கடந்து இந்த நிகழ்ச்சி வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியைக் கேட்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், வானொலிக்கு விளம்பர வருவாய் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகரித்தது.
இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை இல்லாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஒலிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் தொடங்க உள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாத நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறும். அனைவரும் உங்கள் யோசனைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Delighted to share that after a gap of some months due to the elections, #MannKiBaat is back! This month's programme will take place on Sunday, 30th June. I call upon all of you to share your ideas and inputs for the same. Write on the MyGov Open Forum, NaMo App or record your…
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 110வது பகுதி, கடந்த பிப்ரவரி 25-ல் கடைசியாக ஒலிபரப்பப்பட்டது. மூன்று மாத இடைவெளிக்குப் பின், தற்போது ஜூன் மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையில், மீண்டும் மனதின் குரல் ஒலிபரப்பாகவுள்ளது குறிப்பிடத் தக்கது.
பிரதமர் மோடியின் முந்தைய 110வது மனதின் குரல் நிகழ்ச்சியின் சுட்டி…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) இணைந்துள்ள அகில பாரதீய ராஷ்டிரிய சைக்ஷிக் மஹா சங்கம்(ABRSM) தேசிய செயற்குழுக் கூட்டம் ஜூன் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு சார்பில் மாநிலத் தலைவர் திரிலோகசந்திரன், பொதுச் செயலாளர் மு.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கடந்த கால செயல்பாடுகள், வருங்கால நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர் .
இந்தக் கூட்டத்தில், தேசிய ஆசிரியர் சங்கம் – தமிழ்நாடு சார்பில், அதன் பொதுச்செயலாளர் மு.கந்தசாமி கலந்து கொண்டு பேசிய போது, ஆசிரியர் மற்றும் மாணவர் நலம் சார்ந்த கீழ்க்காணும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அகில பாரதீய ராஷ்ட்ரீய சைக்ஷிக் மஹாசங்கம் – ABRSM தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு வலியுறுத்திய கோரிக்கைகள்:
1) நாடு முழுவதும் தேசிய / பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு கடைசி ஊதியத்தில் 50% கிடைக்கும் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
2) ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25 என உள்ளவாறு அனைத்து நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களும் முறையான நியமனமாக கால முறை ஊதியத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். (தரமான சமமான கல்வித்தரம் உறுதி செய்திட).
3) ஆசிரியர்கள் ஆண்டுதோறும் வருமான வரியாக, பெரும் தொகை செலுத்தி வருவது மிக அதிருப்தி அளிக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது தனி வருமான வரி விகித அட்டவணை வழங்கப்பட வேண்டும்.
4) அனைத்து நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளிலும் NCC அமைப்பு செயல்பட வேண்டும்.
5) NMMS தேர்வில் வெற்றி பெற்று பரிசுத்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் பரிசுத்தொகையும் இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.
6)1-8. வகுப்பு போதிக்கும் அனைத்து வகை ஆசிரியர்களும் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் விவாதப் பொருளாகி உள்ள NCTE NOTIFICATION RTE சட்டம் நிறைவேற்றப்பட்ட 23-8-2010 க்கு முன் பணியேற்ற ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்ற அறிவிப்பாணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) 23-8-2010 இல் RTE சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET தேர்வு கட்டாயம் என 16-11- 2012 இல் தான் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டு இடைப்பட்ட காலத்தில் பணி நியமனம் பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கும் தவிர்ப்பாணை வழங்கப்பட்டது போலும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் 2013 வரை நியமிக்கப்பட்டவர்களை பணி வரன்முறை படுத்தியது போல தமிழ்நாட்டில் பணிபுரியும் சிறுபான்மையற்ற ஆசிரியர்களை பணி வரன்முறை படுத்தி 1500ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியம் உள்ளிட்ட இதர சலுகைகள் பெறவும் NCTE ஐ வலியுறுத்தி தவிர்ப்பாணை பெற வேண்டும்.
8) தமிழ்நாட்டின் பிற மாநில எல்லைப்புற மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் பயன்பெறும் வகையில் மும்மொழிக் கொள்கை (அவர்கள் விரும்பும் தாய்மொழி) ஏற்கப்பட வேண்டும். – ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
இந்தக் கூட்டத்தில், 1. சங்க அமைப்பை க்ளஸ்டர் CLUSTER அளவில் கொண்டு செல்வது தலையாய பணியாக இருக்க வேண்டும்,
2 NEP 2020 ஐ அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்,
3. ஆசிரியர்கள் முன் மாதிரியாக நடந்து கொண்டு சமூக பிரச்னைகளை தீர்க்கப்பாடுபடுவதன் மூலம் மாணவர்களை மேற்படி பணியில் ஈடுபடுத்த முடியும் என்ற வகையில் பணியாற்ற வேண்டும்,
4. ஆசிரியர்கள் சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு காண மத்திய அரசை தேசிய அமைப்பும் அந்தந்த மாநில அரசுகளை மாநில அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும் – எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு தேசிய துணைத் தலைவர் மகேந்திர குமார் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் மகேந்திர கபூர் , இணை அமைப்பு செயலாளர் லட்சுமண் பொதுச்செயலாளர் சிவானந்த சிந்தன்கரே ஆகியோர் வழிநடத்தினர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் கடந்த 10 தேதி வைகாசிபெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம் அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா இன்று நடந்தது.இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து அங்கிருந்து கோவில் முன்பு உள்ள மூன்றுமாத கொடிக்கம்பத்தைச் சுற்றி நான்கு ரத வீதி வலம் வந்து நேர்த்திகடனை செலுத்தினார்கள்.இந்த விழா நேற்றுஇரவு முதல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து வந்தனர்.
நேர்த்திக் கடனுக்காக உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில் குழந்தை எடுத்து வருதல், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வருதல், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அண்டை மாநிலங்களில் இருந்தும் மற்றும் பலமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கான பேர்வருகை புரிந்து திருவிழாவை கண்டுகளித்து அம்மனை தரிசித்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு முத்துமுருகா அறக்கட்டளை தலைவர் வக்கீல் சிவக்குமார் ஏற்பாட்டில் பக்தர்கள் வசதிக்காக அதி நவீன மின்ஒளியில் வைகை ஆற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பக்தர்கள் குளிப்பதற்கு பல இடங்களில் குழாய் வசதி செய்திருந்தனர். இந்த வசதியை ஏற்படுத்தி இருந்த அறக்கட்டளை நிர்வாகத்தினரை பக்தர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள்மாணவர் சங்கம்.உட்பட பல்வேறு அமைப்பில் இருந்து நீர்,மோர் வழங்கினார்கள்.எம்விஎம் குழுமத் தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் முத்து குமரன் நகை மாளிகை இருளப்பன் ராஜா அன்னதானம் வழங்கினார்கள். இதே போல் பல இடங்களில் அன்னதானம் வழங்கினார்கள்.
சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார்,சுகாதாரப் பணி ஆய்வாளர் சூரியகுமார்,துணைத்தலைவர் லதாகண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பணியாளர்கள் வைகைஆற்றை சுத்தம் செய்து கூடுதலாக மின்விளக்கு,குடிநீர்வசதி, கழிப்பறைவசதி செய்திருந்தனர்.
இதேபோல் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மற்றும் தென்கரை ஊராட்சி பகுதிகளில் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பாதைகள் அனைத்திலும் சுத்தம் செய்யப்பட்டு கூடுதலாக மின்விளக்கு வசதிகள் செய்திருந்தனர்.
பக்தர்கள் செல்லக்கூடிய இடங்களில் டிராக்டரகளில் வாட்டர் டேங்க் அமைத்து ரோடுகளில் தண்ணீர் தெளித்து வெயில் தாக்கத்தை தனித்து பக்தர்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தினர்.
மாலை அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அபிஷேகம் நடைபெறும்.இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை அடையும்.
சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ்,சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர்,என்சிசி மாணவர்கள்,சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் ஆகியோர் முகாம் அமைத்திருந்தனர்.
நேற்று எட்டாம் நாள் மண்டபம் முன்னிட்டு சோழவந்தான் நாடக நடிகர் சங்க கிராமிய கலைக்குழுவின் சார்பாக கிராமிய தெம்மாங்கு பாட்டு கச்சேரி நடந்தது சீனிவாச பிரபு தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன் முன்னிலை வகித்தார்.
டி ஆர் மகாலிங்கம் பேரன் டி ஆர் எம் எஸ் ராஜேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சோழவந்தான் நாடக நடிகர் சங்க கிராமிய கலை குழுவின் தலைவர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.
நாளை மாலை மந்தைகளம் மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் இளமதி தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா பெருமாள் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பூஜைகள் செய்தனர்.
மதுரையில் அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.
மதுரை மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், உள்ள அருள்மிகு லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக, முதல் காலையாக பூஜை கடந்த 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி,
வாஸ்து சாந்தி மிருதச கிரகணம் வேதிகா அர்ச்சனை மண்டப பூஜை உள்ளிட்ட
வைகளோடு துவங்கியது.
இதனைத் தொடர்ந்து, யாக கால பூஜைகள் விநாயகர் பூஜை, விஷாந்த சந்த பூஜை ,
வேதிகா அர்ச்சனை, மண்டப பூஜை உள்ளிட்டவை இரண்டாம் நாள் நடைபெற்றது. பின்னர், நான்கு காலை யாகசால பூஜைகள் நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் விழா குழுவினர் உட்பட அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மனமுறுக வேண்டினர். நான்கு கால யாகசாலை பூஜைக்கு பிறகு யாக குண்டத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு , யாகசலையில் இருந்து கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அருள்மிகு லட்சுமி விநாயகர் கோவிலுடைய விமானத்திற்கு மகா அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கின்ற அடிப்பட்டையில் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆன்றோர்கள் சான்றோர்கள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழா
இன்று 17.06.2024 மாலை சரியாக ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி என்றால் என்ன என யோசிக்கிறீர்களா? நமது நண்பர் வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழாவைத்தான் சொல்கிறேன்.
எனக்கும் அழைப்பு வந்திருந்தது. எனவே நானும் சென்றிருந்த்டேன். இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என ஜெகன்னாத் கேட்டிருந்தார். எனவே நான் அதனை தமிழில் மொழி பெயர்த்திருந்தேன். அதனால்தான் எனக்கும் அழைப்பு வந்திருந்தது என நினைத்தேன்.
காஜுலு பற்றிய வீடியோ
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் SMaRT நிறுவனத்திலிருந்து ஒருவர் இன்று வெளியாக உள்ள நூலுக்கும் அவர்கள் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசினார். அதன் பின்னர் காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி அவர்கள் பற்றிய ஆங்கில வீடியோ ஒன்று ஒலிபரப்பப்பட்டது. இதன் தமிழ் வெர்சனும் தயாரித்தால் நல்லது. நான் அதனை மொழிபெயர்த்துத்து, டப்பிங் செய்து தருகிறேன். (ஜெகன்னத் மற்றும் குமரேசன் இருவரும் கவனிக்க)
வரவேற்புரையும் ஜெகன்னாத் அவர்களின் உரையும்
சரியாக மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. CSIS-இன் (Centre for South Indian Studies – CSIS) திரு குமரேசன் அவர்கள் வந்தோரை வரவேற்றார். அவருக்குப் பின்னர் விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு ஜெகன்னாத் ஆங்கிலத்தில் உரையாற்றினார். பிறகு மேகலாயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் எஸ்.வைத்யநாதன் அவர்கள் பேசினார். அவரது உரையின் முதல் பகுதி நூல்கள் படிக்கவேண்டியதன் அவசியம் பற்றி இருந்தது. வழக்குரைஞர் ஜெகன்னாத் அவர்களின் நூலுக்கு நீதியரசர் ஒரு அழகான முன்னுரையையும் எழுதியிருக்கிறார்.
நான்கு நூலகள் வெளியீடு
இதன் பின்னர் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. மூன்று நூல்கள் சுமார் 160 பக்க அளவிலானவை. காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி அவர்களைப் பற்றிய வழக்குரைஞரி ஜெகன்னாத் எழுதிய ஆங்கில நூல், மற்ற இரண்டு நூலகள் இந்த நூலின் தெலுகு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள். நான்காவது நூல் அளவில் பெரியது. திரு ஜெகன்னாத் அவர்கள் திரட்டிய பல்வேறு ஆவணங்கள் அடங்கியது. அதன் பின்னர் ஆளுநர் திரு ரவி அவர்கள் பேசினார்.
ஆளுநர் உரை
இந்த நூலின் பொருளடக்கம், ஆளுநருக்கு மிகவும் பிடித்தமானது. நேற்றுதான் ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் “ஜம்பூத்வீபப் பிரகடனம்” பற்றிய நிகழ்ச்சியை நடத்தவேண்டும் எனச் சொல்லியிருந்தார். இன்று அவரது உரை வாஞ்சிநாதனை நினைவுபடுத்துவதோடு தொடங்கியது. தமிழகப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் தமிழகத்தின் சுதந்திரப்போர் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகவும் ஆணித்தரமாகச் சொன்னார்.
கம்பனி ஆட்சியில் இந்தியாவில் கல்வியின் நிலை
திரு ஜெகன்னாத் இந்த நூலை மிகவும் சுருக்கமாக எழுதியிருப்பதாக நினைக்கிறேன் என ஆளுநர் சொன்னார். பள்ளிக்கூடத்திற்கே போகாத இராபர்ட் கால்டுவெல் எவ்வாறு டாக்டர் பட்டம் வாங்கினார் என எனக்குப் புரியவில்லை எனச்சொன்னார். ஆங்கிலேயர்களின் கல்வி முறை மெட்ராஸ் பிரசிடென்சியில் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் இருந்தனர்; அதில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது; ஆசிரியர்களுக்கும் எந்த விதமான சம்பளமும் கிடையாது; ஆசிரியர்களின் வாழ்க்கைக்குத் தேவையானவாற்றை சமூகம் பார்த்துக்கொள்ளும். அதற்கென 30% நிலங்கள் நிலவரியின்றி ஒதுக்கப்பட்டிருந்தன. அதனை 5% எனக் குறைத்தது அன்றைய கம்பனி அரசு; இதனால் நமது பள்ளிகள் குறைந்து ஆங்கிலேயர்கள் தொடங்கிய கல்வி நிறுவனங்கள் வேர்விடத் தொடங்கின – என ஆளுநர் சொன்னார்.
தென் ஆற்காடு மாவட்டத்தில் மட்டும் 6000க்கும் மேல் பள்ளிகளும் 69 உயர் கல்வி நிறுவங்களும் இருந்தன. அதில் சுமார் 1000 பிராமணர்களும் 4500 சூத்திரர்களும் படித்தனர் – என்ற தகவலியயும் சொன்னார். இந்தத் தகவல்கள் எல்லாம் நமது ஆவணக் காப்பகத்தில் உள்ளன எனவும் சொன்னார்.
பிராமண எதிர்ப்பு ஏன்?
இந்திய வழி கல்வியை அழிக்கவேண்டுமானால் அதனைப் போதிக்கும் பிராமணர்களை ஒழிக்கவேண்டும் என ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அதே சிந்தனை 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கங்ககளால் வேறு விதத்தில் சொல்லப்பட்டது – எனவும் ஆளுநர் சொன்னார்.
இவ்வாறு ஆளுநர் மீண்டும் ஒரு முறை உண்மையைச் சொல்லி, உள்ளதைச் சொல்லி ஆளும், திராவிட மாடல் எனச் சொல்லிக்கொள்ளும் அரசுக்கு இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சவால் விடுத்திருக்கிறார்.
இனி நூலைப் பற்றி
இந்த நூல் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆய்விற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கிறது. தமிழக ஆவணக்காப்பகம், கன்னிமாரா நூலகம், இங்கிலாந்து தலைமை நூலகம் போன்ற பல நூலகங்களில் இருந்து ஆவணங்கள் திரட்டப்பட்டு நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்று நூல். 1885ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, இங்கிலாந்து பாராளுமன்றம் மூலமாக நமது உரிமைகளைப் பெற வேண்டும் என நினைத்ததாகக் கூறுவார்கள். அதற்காக அவர்கள் பல மனுக்களை அனுப்பியதாகக் கூறுவார்கள். அனேகமாக அவர்களுக்கு இவ்வாறு செய்து உரிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி வர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து ஏற்பட்டிருக்கவேண்டும். உங்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். விலை ரூ 200/-.