விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் , தங்கம் தென்னரசு ஆகிய இரு அமைச்சர்கள் உள்ளனர். தங்கம் தென்னரசு பெயரில் மட்டும்தான் தங்கம் இருக்கிறது அவரது செயல்பாடுகள் சொல்லும்படி இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி அலை வீசுகிறது. மக்கள் மீண்டும் மோடி ஆட்சியை விரும்புகின்றனர் என விருதுநகரில் தமிழக மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
விருதுநகர் பாஜக சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தில் தமிழக மக்களவை தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்கள்.
முதலில் பேசிய ராதிகா சரத்குமார், “பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி எனக்காக விருதுநகர் வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சி. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகரில் போட்டியிடுகிறேன். எல்லாத் தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் வரும் 14ஆம் தேதி பிரதமர் மோடி விருதுநகருக்கு வருவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேதி உறுதி செய்யப்பட்டவுடன் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்
தேர்தல் களம் உண்மையாகவே நன்றாக இருக்கிறது. ஒரு மௌன புரட்சி மாறி போய்க்கொண்டிருக்கிறது. நம்ம நினைக்கிறோம்… பாஜக அடிமட்ட லெவலில் அரசியல் பணிகளை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்கள் கிராமங்கள் முழுவதும் சென்றிருக்கிறது… என்றார் ராதிகா.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியபோது…
வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிச்சயம் வெற்றி பெறுவார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும தங்கம் தென்னரசு ஆகிய இரு அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் தங்கம் தென்னரசு பெயரில் மட்டும்தான் தங்கம் இருக்கிறது அவரது செயல்பாடுகள் சொல்லும்படி இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி அலை வீசுகிறது. மக்கள் மீண்டும் மோடி ஆட்சியை விரும்புகின்றனர்.
வரும் மக்களவை தேர்தலில் பாஜக 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாஜக 370 இடங்களிலும் என் டி ஏ கூட்டணி கட்சிகள் 30 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறும்.
காங்கிரஸ் , திமுக ,ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் , லாலு பிரசாத் யாதவ் , மம்தா பானர்ஜி, முலாயம் சிங் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலுள்ள பல்வேறு கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. ஆனால் பாஜக நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்றும் கட்சி.
நாட்டில் மோடி அலை வீசுகிறது என்றும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.
நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மோடி என்றும் அவர் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்கிறார். உலக நாடுகள் மத்தியில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
நாட்டிலுள்ள பல்வேறு கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. ஆனால் பாஜக நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்றும் கட்சி. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமராகவும் 23 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையிலும் எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் பிரதமர்.
24 மணி நேரமும் மக்களுக்காக அவர் உழைக்கிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அளித்த 502 வாக்குறுதிகளில் இதுவரை 200 வாக்குறுதிகளை கூட அவர்களால் எட்ட முடியவில்லை. இம்முறை தமிழக மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் வாக்களிப்பார்கள்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழக மக்களும் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் கடலோர பகுதிகள் பாதுகாக்கப்படும். கச்சத்தீவு பிரச்சனை குறித்து மக்களுக்கு தெரியும். தமிழக முதல்வர் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா அனைவருக்கும் பிரபலமானவர். விருதுநகர் தொகுதியில் ஏற்கனவே இருந்த காங்கிரஸ் எம்பி அறிக்கை மட்டும் தான் வெளியிடுவார், செயல்படுவது இல்லை. தாமரை ஆட்சி நிச்சயம்! சேவையே எங்கள் லட்சியம்! என்று கூறினார்.