பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவி.,க்கு அளித்த பேட்டி, பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதில், அவர் தமிழகத்தின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழக அரசியலை புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். இன்றைய அரசியல் களத்தை விளாசித் தள்ளியிருக்கிறார். தனது அரசியல் பயணத்தில் தமிழகத்தைப் பற்றிய புரிந்துணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் எதிர்காலம் பாஜக., குறிப்பாக அண்ணாமலை கையில் என கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த நேர்காணல் இங்கே நன்றியுடன் தமிழாக்கி எடுத்தாளப் படுகிறது.
தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்
Table of Contents
Question on the visit of PM to TN during olden times….
பார்க்கப்போனா 5 தசாப்தங்களாகவே நான், தமிழ்நாட்டுக்கு வந்து போயிட்டு இருக்கேன். பல்வேறு சூழ்நிலைகள்ல நான் வர வேண்டியிருந்தது. தெரிஞ்சுக்கற ஆர்வத்தில தேசம் முழுக்க நான், சுத்திப் பார்த்த காலத்திலயும் நான் வந்தேன். ஆனா ஒரு வேளை நான், தெளிவா சொல்லணும்னு எதோட எல்லாம், எனக்கு ஈர்ப்பு இருந்துதுன்னா, அது வந்து, கன்னியாகுமரியில அப்ப, விவேகானந்தர் நினைவு மண்டபம் அப்ப உருவாகிட்டு இருந்திச்சு..
அந்த வேளையில, அந்தக் காலகட்டத்தில நான் வந்திருந்தேன், அப்பத் தான் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அதன் பிறகு… 1975இல… திருமதி இந்திரா காந்தி அவசரநிலையை பிறப்பிச்ச வேளையில, அப்ப அவசரநிலை காலத்தில நான் தலைமறைவாயிருந்தேன். அப்ப ஒருங்கிணைப்பு பணிகளுக்காக நான், நாடு முழுக்க பயணப்பட்டிருந்தப்ப தமிழ்நாட்டுக்கும் வந்தேன்.
அவசரநிலைக்காலம் முடிவுக்கு வந்த பிறகு, நாங்க எல்லாம், நாங்க ஒரு சில பேரு என்ன முடிவு செஞ்சோம்னா அதாவது நம்ம, தேசம் முழுவதிலும், அவசரநிலைக்கு எதிரா நடந்த போராட்டம், மேலும் பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டம், அவற்றோட அனைத்து, தரவுகளும் தொகுக்கப்படணும்னு நாங்க தீர்மானம் செஞ்சோம். இது தொடர்பா நான் நாடு முழுக்கவும், மாநிலத் தலைநகரங்களுக்குப் போனேன் சில வேளை சிறைகளுக்குப் போனேன். அப்ப மும்முரமா போராட்டத்தில ஈடுபட்டிருந்தவங்களை சந்திச்சேன். எப்படி ஈடுபட்டாங்கங்க என்ன நடந்திச்சுங்கற விபரங்களை எல்லாம் சேகரிச்சோம்.
இந்தப் பணிக்காக அவசரநிலைக்காலத்துக்குப் பிறகு கணிசமான நேரம் அங்க வந்து…. நான் இருக்க வேண்டியிருந்திச்சு. அப்புறமா… கட்சிப்பணிகளுக்காக நான் அடிக்கடி வந்து போயிட்டிருந்தேன். அதன் பிறகு….. ஏக்தா யாத்திரை ரொம்ப மகத்துவம் வாய்ந்த ஒரு விஷயம். கன்னியாகுமாரியிலிருந்து நாங்க அதைத் தொடக்கினோம். நாங்க ஸ்ரீநகரை நோக்கிப் போயிட்டிருந்தோம். நாங்க ஒரு கனவைத் தாங்கிப் பயணிச்சோம் அப்ப எல்லாம் லால்சவுக்குல மூவண்ணக் கொடி எரிக்கப்பட்ட காலகட்டம் ஸ்ரீநகர்ல.
முழுமையான வகையில…. ஜம்மு கஷ்மீரத்தை இணைக்கவல்ல ஒரு, வாய்ப்பு அது. மேலும் இதில என்ன சந்தோஷம்னா, நான் மூவண்ணக் கொடியை ஏந்திட்டுப் போனது. அப்ப அந்த நாட்கள்ல, பகத்சிங் சுக்தேவ் அப்புறம் ராஜ்குரு, மூவரோட குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தாங்க. அவங்க எல்லாம், மூவண்ணக் கொடியை எங்களுக்கு அளிச்சாங்க, இதைத் தான் நாங்க ஸ்ரீநகரோட லால்சவுக்குல ஏத்தினோம். கன்னியாகுமாரியில. கன்னியாகுமாரில. கிட்டத்தட்ட.
Question on the most memorable experience in TN
என்னோட எல்லா அனுபவங்களும் ஒண்ணை விட ஒண்ணு சிறப்பாவே இருந்திச்சு. ஏதோ ஒண்ணை மட்டும் என்னால குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, ஆனா ஒரு விஷயத்தை நான் சொறேன். என் இதயத்தைத் தொட்ட விஷயம். நாங்க… கன்னியாகுமாரிலேர்ந்து புறப்பட்ட போது, கேரளத்துக்குப் போயிட்டு, மறுபடி தமிழ்நாட்டுக்குள்ள, ஈரோடு போன்ற இடங்களுக்குப் போனோம்.
சுதந்திரப் போராட்டத்தில ஈடுபட்ட ஒரு மாபெரும் உயிர்த்தியாகி. ரொம்ப சின்ன வயசிலேயே அவர் உயிர்த்தியாகி ஆயிட்டாரு. அவரோட குடும்பத்தைச் சேர்ந்த யாரோ…. ஒரு 90 வயது இருக்கும், ஒரு அம்மா. அவங்க எனக்கு ஆசீர்வாதம் செய்ய வந்தாங்க, அப்ப நான் அங்க போயி, அந்தத் தியாகியோட சமாதி அங்க ஈரோடுல, அங்க நான் மலரஞ்சலி செலுத்தினேன்.
ஆனா அந்த அம்மாவோட உணர்வு….. அவங்க, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த உயிர்த்தியாகி யாருங்கறது எனக்கு இப்ப சரியா நினைவு இல்லை. ஆமா ஆமா நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க. என் மனசுல அது ஆழமா பதிஞ்சிருச்சு. அவங்க அளிச்ச அந்த ஆசிகள் அவங்களோட உணர்வு, மேலும் நம்ம…. குமரனோட, விடுதலைக்காக உயிரையே அர்ப்பணிச்ச அந்த சம்பவம் பத்தி, அவங்க பெருமைப்பட்டாங்க.
நாங்க எந்தப் பணிக்காக போனோமோ அதுக்கு இது உத்வேகமா அமைஞ்சுது. ரெண்டாவதா. எங்களோட ஏகதா யாத்திரை பயணிச்ச வேளையில, வயல்வெளியில ஒரு மனிதர்…. பலமா கத்திக்கிட்டு இருந்தாரு. அரையில கோவணம் தான் கட்டியிருந்தாரு வயக்காட்டுல வேலை செஞ்சிட்டு இருந்தாரு. ஐயா…. நில்லுங்க நில்லுங்க நில்லுங்கன்னாரு. என்ன ஆச்சோ தெரியலையேன்னு நாங்க, உடனே எங்க பயணத்தை நிறுத்தினோம். அவரு வந்தாரு, அவருக்கு நாங்க பேசறது பெரிசா…. புரியலை. ஆனா அவரு என் கையில, 11 ரூபாய் குடுத்தாரு. அப்ப நான், தமிழ் பேசக்கூடிய தொண்டர்களை அழைச்சு அவரு என்ன சொல்றாருன்னு கேட்டேன். அந்த மனிதருக்கு ஏதும் தெரியாது இது சமய யாத்திரையா என்னென்னு.
அவரு நீங்க கஷ்மீர் போறீங்களான்னு கேட்டாரு. என் காணிக்கையா 11 ரூபாயை போடுங்கன்னாரு. கஷ்மீருக்கு நீங்க போறீங்க. யாத்திரை கஷ்மீரம் போகுதுங்கறது வரை அவருக்குத் தெரியும். ஆகையினால தான் அவரு, என் காணிக்கையா 11 ரூபாயை சேர்த்திருங்கன்னாரு. அதாவது அவரு மனசுல இத்தனை உணர்வுகள் இருந்திச்சு இடுப்புல கோவணம் தான். அந்த ஏழை விவசாயி, வயல்ல வேலை பார்க்கற கூலித் தொழிலாளின்னு எனக்கு தோணுது. இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான பல சம்பவங்கள் நடந்திச்சு இதை மறக்க முடியாது.
Question on the most favourite thing of TN. Language, culture or food.
அதாவது நாம, தமிழ்நாடுன்னு சொல்லும் போது அதை தனித்தனி பாகங்களா பார்க்க கூடாது. ஒரு முழுமையான வடிவத்தில பார்க்கணும். சரி மொழிலேர்ந்து தொடங்கறது இயல்பு தான். ஆனா ஒண்ணு, என் மனசுல ரொம்ப கோவம் இருக்கு ரொம்ப. கோவம் எதுனாலனா, அதாவது நம்மோட மனிதர்களே, இத்தனை மகத்தான பாரம்பரியத்துக்கு எதிரா அநியாயம் செஞ்சிருக்கோம். ஏதோ இடத்தில, டைனோசரோட முட்டை கிடைச்சா, தேசம் முழுக்க கொண்டாடுது.
பாரதம் கிட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, உலகத்திலேயே வளமான மொழி இருக்கு, ஆனா நாம நெஞ்சை நிமிர்த்தி இதை உலகம் முழுக்க பறை சாற்றலை. நாம சொல்றதில்லையே!! நாம இதை ஏன், இந்த மாதிரி குறுக்கி வச்சிருக்கோம்? என் மனசுல இது, ஒரு முள்ளா தைக்குது. ஆகையினால தான், நான்… ரெண்டொரு வரிகளை அப்பப்ப பேசறேன். கேட்க முயற்சி செய்யறேன் புரிஞ்சுக்க முயற்சி செய்யறேன்.
ஆனா என் மனசுல ரொம்ப உறுதியோட இருதேன் நான், ஐநாவுல கண்டிப்பா, தமிழ் பத்திப் பேசுவேன்னு. அதாவது என்னென்னா உலகத்திலேயே மிகவும் தொன்மையான மொழின்னு உலகமறிய பேசினேன். இது உலகத்துக்குத் தெரியணும். மேலும் எத்தனை வளமான பாரம்பரியம்!! எல்லா இடத்திலயும் இதுக்கு பரணி பாட வேண்டாமா? ஆகையான நான்… இப்ப… இப்ப நீங்களே பாருங்க. மொழி அரசியலாக்கப்பட்டிடுச்சு.
நல்ல காலம், இட்லி தோசை இன்னும் அரசியலாக்கப்படலை. இல்லைன்னா அதுவும் தமிழ்நாட்டுக்குள்ளயே குறுகிப் போயிருக்கும். இன்னைக்கு… ஸ்ரீநகருக்குப் போங்க இட்லி தோலை கிடைக்கும் கௌஹாத்திக்குப் போங்க இட்லி தோசை கிடைக்கும். கட்ச் குஜராத்தின் கட்சுக்குப் போங்க அங்க கிடைக்கும். எனக்கு என்ன தோணுதுன்னா, எப்படி இட்லி தோசை உலகம் முழுக்க பரவியிருக்கோ, நம்மோட தமிழ் மொழியும் கூட பரவியிருந்திருக்கணும். ஆனா… அரசியல் காரணங்களுக்காக அதை குறுக்கி வைக்கப்பட்டிருக்கு, இதன் காரணமா, தமிழ் மொழிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கு, இந்தியாவுக்குமே கூட பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கு.
Question on favourite food
பொதுவா நான் நான்….. உப்புமாவை விரும்பி சாப்பிடுவேன். (சிரிப்பு) அதே போல எனக்கு…. உங்க… கிச்சடி மாதிரி இருக்குமே, கிச்சடி பொங்கல். அது ரொம்ப லைட்டா இருக்கும்.
Question on Modi Idly in Salem
ஹாங்.. (சிரிப்பு) அது எனக்கு இன்னைக்குத் தான் தெரியும் நான் கூட, இப்ப சேலம் போயிட்டு வந்தேன் அவங்க கிட்ட சொல்லியிருக்கலாம். அப்படியா? (சிரிப்பு)
Question on various initiatives regarding Tamil and Tamil tradition. What lead you to this?
அதாவது பார்த்தீங்கன்னா, காசி தமிழ் சங்கமம்னு சொன்னா, நான் காசியோட நாடாளுமன்ற உறுப்பினராகறதுக்கு முன்னாடி கூட காசிக்கு போயிட்டு வர்றதுண்டு. ஆனா எம்பி ஆன பிறகு, அங்க, என்னோட பார்வை கொஞ்சம் மாறியிருச்சு என்னோட கவனம் மாறியிருச்சு. நான் ஒரு விஷயத்தை கவனிச்சேன், அங்க இருக்கற படகோட்டிகள், அங்க, குஜராத்திகளும் கூடத் தானே காசிக்கு வர்றாங்க?
வங்காளிகள் வர்றாங்க. மராட்டியர்களும் வர்றாங்க. ஆனா வெகுசில படகோட்டிகள் மட்டுமே, இந்த மொழிகள்ல பேசறாங்க இல்லை… உரையாடறாங்க. ஆனா ஆச்சரியகரமா, அங்க பல படகோட்டிகள், அங்க இருக்கறவங்க அந்த ஊர்க்காரங்க, அவங்க தமிழ்நாட்டுக்காரங்க இல்லை, தமிழ்ல பேசறாங்க. ஏன்? அதிகபட்ச யாத்ரீகர்கள் தமிழ்நாட்டிலேர்ந்து தான் வர்றாங்க. இந்தக் காரணத்தால தான் ரொம்ப இயல்பாவே தமிழ் வருது, அவங்களால இந்தில பேச முடியாது. மிகப்பெரிய பிணைப்பை இது ஏற்படுதறதை நான் உணர்ந்தேன்.
மேலும், நம்ம பாரதி அவர்களோட குடும்பத்தார் இன்னைக்கு அங்க வசிக்கறாங்க. நம்ம, சுப்பிரமணிய பாரதியார். அவரு குடும்பத்தார் இப்பவும் அங்க வசிக்கறாங்க. பிறகு நான் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில, பாரதியார் பெயரில, ஒரு இருக்கையை அமைச்சோம். பிறகு என் மனசுல தோணிச்சு காசி, தமிழ் சங்கம நிகழ்ச்சியை செய்யணும்னு. அங்க மக்கள் ரொம்பவே ஒருங்கிணைக்கப்பட்ட முறையில வர்றாங்க. அங்க காசியில மக்களுக்கு தமிழ் கலாச்சாரம், பத்தின உணர்வு உண்டாகணும். அங்க தமிழ் கலாச்சார, நிகழ்ச்சிகள் நடக்குது. தமிழ் நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்குது. தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்குது. உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம், அதிக அளவுல புத்தகங்கள், தமிழ் இலக்கியம் பத்தின நிகழ்ச்சிகள்ல, தமிழ் புத்தகங்கள் விற்பனை ஆச்சு.
அப்ப எனக்கு தேசத்தின் ஒருமைப்பாடு பத்தின மிகப் பெரிய பலத்தை நான் உணர்ந்தேன். அதே போல, செங்கோல்னு சொன்னா, பாருங்க இது, ரொம்ப குறைவானவங்களுக்கே தெரியும், நம்ம பாரதத்தோட சுதந்திரத்தின், முதன்மையான கணம்னு சொன்னா… சுதந்திரத்தோட முதல் கணம், அதாவது நாம சுந்திரம் அடைஞ்சாச்சுங்கற கணம், அந்தக் கணம், இந்தச் செங்கோலோட தொடர்புடையது.
அந்தக் கணம், நம்மோட, தமிழ்நாட்டின், புனிதர்கள் இருக்காங்களே, ஆதீனம் ஆதீனங்கள் ஆமா, அவங்க தான் இந்தச் செங்கோலை குடுத்தாங்க. பண்டித நேருவுக்கு… ஆட்சி மாற்றத்தைக் குறிக்கற வகையில ஒரு ராஜதண்டம் அவரு கிட்ட கொடுக்கப்பட்டிச்சு. ஆனா… அவருக்கு அதில சிரத்தை இல்லையோ வேற என்ன காரணமோ அது இலாபாதில அவரோட, நினைவகத்தில கைத்தடிங்கற பெயரில வைக்கப்பட்டிருந்திச்சு. இத்தனை பவித்திரமான பொருளுக்கு கீழ கைத்தடின்னு எழுதிட்டாங்க. என் கவனத்துக்கு இதெல்லாம் கொண்டு வரப்பட்டிச்சு.
அதுக்கு என்ன ஆச்சுன்னு நான் தேடிப் பார்க்கச் சொன்னேன். அங்க எனக்குக் கிடைச்சுது. நானும் ஆதீனங்கள் கிட்ட இது பத்தி எல்லாம் தீர விசாரிச்சேன். தமிழ்நாட்டுல இதைச் செய்த பொற்கொல்லர் கிட்டயும் விசாரிச்சேன். முழுக்க ஆய்வு செய்து பார்த்தேன், ஓராண்டுக்கு ஆய்வு செய்தேன். நான் அப்பவே தீர்மானிச்சேன் இது நான், பாரதத்தின் விடுதலையோட, முதன்மையான சாட்சின்னு.
இது நம்மோட கருத்தூக்கம். புதிய நாடாளுமன்றம் உருவாகும் போது, அங்க இதை நாம நிர்மாணம் செய்யலாம்னு. பிறகு இதை ஒரு மூலையில வச்சிருவோங்கற மாதிரி இல்லை. நாம இதை, உயிர்ப்புடையதா ஆக்கினோம் இப்ப குடியரசுத் தலைவர், போன போது முதல்ல செங்கோல் போச்சு. பிறகு குடியரசுத் தலைவர் போனாங்க. அதன் பிறகு, குடியரசுத் தலைவருக்கு முன்பாவே செங்கோல் நிறுவப்பட்டு அதன் பிறகு அவங்க உரை தொடங்கிச்சு. இப்படி ஒரு பெரிய வழிமுறையை, நாங்க மேம்படுத்தியிருக்கோம்.
தேசத்தின் சுதந்திரத்தின் முதல் கணம், நினைவுல நிலைநிறுத்தப்படணும். செங்கோல்ங்கறது, பாரதத்தின், தமிழ்நாட்டில மிக ஆழமா வேரூன்றிப் போன ஒரு மகத்தான பாரம்பரியம். நாம பெருமைப் படணும். தேசத்தோட துரதிர்ஷ்டத்தைப் பாருங்க, அதாவது தமிழ்நாட்டின் தலைவர்களே கூட, தமிழ்நாட்டின் தலைவர்களே கூட, இதைப் புறக்கணிச்சாங்க. இதை விட பெரிய அவலம் வேற ஏதாவது உண்டா? இப்ப தமிழ்நாட்டின் தலைவர்களே தமிழ் கலாச்சாரம், தமிழின் வரலாறு, இது பத்தி பெருமைப்படலைன்னா, அப்புறம் எத்தனை, தீங்கு ஏற்படும்னு இவங்களுக்கு கொஞ்சமும் விளங்கலை.
Question on the political motives of Modiji that it is done to garner votes of Tamils.
இதனால வாக்குகள் கிடைக்கும்னா, இவங்க இதை விட பத்து மடங்கு இல்லை செஞ்சிருக்கணும்!! அவங்க கிட்ட எல்லா அதிகாரமும் இருக்கே!! அவங்களுக்குத் தெரியும், இதனால தேசம் பலமுடையதாக ஆகும், அவங்களுக்குத் தெரியும், இதனால வாக்கு அரசியல் குறைவாக ஆகும். அவங்களுக்கு நல்லா தெரியும், இப்படி செய்யறதால குடும்ப அரசியல் முடிவுக்கு வந்துடும்னு. அவங்களுக்கு இது பத்தின பயம் இருக்கு. இதனால வாக்குகள் கிடைக்கும்னா எனக்கு முன்னால அவங்க ஓடிப் போயிருப்பாங்க.
Question on speculation of PM contesting from Kashi and Rameshwaram. Has it been ever considered? Any possibility in the future?
நான் வாழ்க்கையில தேர்தல்ல போட்டிடறதைப் பத்தி யோசிச்சதே இல்லை. இந்தப் பாதையில திடீர்னு நான் வர வேண்டியிருந்திச்சு. நான் வேற பணியில, என்னை ஈடுபடுத்திக்கிட்டு இருந்தேன். என்னைக்குமே நான் என்னைப் பத்தி நினைச்சதேயில்லை. நான் தேர்தல்ல போட்டியிடணும்னு, நானும் சிந்திச்சதில்லை தீர்மானமும் செஞ்சதில்லை. நான் ஒரு தொண்டன் ஒழுங்குமுறைப்படி நடக்கும் ஒரு தொண்டன்.
கட்சி தான் தீர்மானிச்சுது. சட்டப்பேரவைத் தேர்தல்ல போட்டியிடுனு கட்சி தீர்மானிச்சுது. முதல்ல ராஜ்கோட்ல போட்டியிடுன்னாங்க போட்டியிட்டேன் பிறகு மணிநகர்னாங்க அங்க நின்னேன். பிறகு பரோடாவுல போட்டி போடுன்னாங்க பிறகு காசின்னாங்க. என் கட்சி என்னை எங்க அனுப்பிச்சோ அங்க போய் போட்டியிடறேன். நான் இதில எல்லாம் என் கவனத்தை செலுத்தறதில்லை. 15.41
Are you open to the idea?
விஷயம் என்னென்னா, நான், என்னோட பயணத்தோட , அடிப்படைக் காரணம்னு சொன்னா, அதாவது நான், திறந்த மனசோட தான் எதையுமே செய்யறேன். இப்ப நான் உங்களுக்கு நேர்முகம் அளிக்கறேன் உங்களை சந்திக்கறேன்னா, நான் திறந்த மனசோட தான் சந்திச்சிருக்கேன். திறந்த மனது தான் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான, வாயில்களைத் திறக்குது.
Question on Viksit Bharat and plans for TN in it?
முத விஷயம் என்னென்னா, விக்சித் பாரதம், தில்லியின் வளர்ச்சின்னு மட்டும் கிடையாது. (சிரிப்பு). பாரதத்தோட ஒவ்வொரு இடமும் பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனும், அவங்க விக்சித் பாரதத்தோட சொந்தக்காரர்களா ஆகணும். அடுத்ததா, பாரதம் ஒரு கூட்டாட்சி அமைப்பு உடையது. நான் குஜராத்தில இருந்தப்பகூட இதை சொல்லிக்கிட்டே இருப்பேன். பாரதத்தோட வளர்ச்சிக்காக குஜராத்தோட வளர்ச்சி.
இந்தக் கோட்பாட்டோட தான் நான் அங்க பணியாற்றினேன். நம்ம எல்லாரோட எண்ணமும் என்னவா இருக்கணும்னா, இந்த வளர்ச்சியடைந்த பாரதத்தை ஏற்படுத்த நாம வளர்ச்சியடைந்த மாநிலத்தை உருவாக்கணும். ஆகையினால முதல்…. விஷயம் என்னென்னா, வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக வளர்ச்சியடைந்த தமிழ்நாடுங்கற உறுதிப்பாட்டை, தமிழ்நாட்டின் அனைத்துக் குடிமக்களும் மேற்கொள்ளணும். தமிழ்நாட்டின் அனைத்துக் குடிமக்களும் தேசத்துக்கு இணையா இதில இணையணும். என் கருத்து என்னென்னா, தமிழ்நாடு, எத்தனை சக்தியுடையதுன்னா, வளர்ச்சியடைந்த பாரதத்தோட மிகப்பெரிய உந்துசக்தியா, தமிழ்நாடு ஆக முடியும்.
நீங்களே பாருங்க இப்ப, உதாரணத்துக்கு எடுத்துக்கிட்டா… தயாரிப்பு. உங்களுக்கு திறமையான இளைஞர்கள் கிடைப்பாங்க. நீங்க அங்க…. மெட்ராஸ் ஐஐடியை எடுத்துக்குங்க. 5ஜியில, மிகப்பெரிய பங்களிப்பை, மெட்ராஸ் ஐஐடி செஞ்சிருக்கு. மேலும் இன்னைக்கு நம்மோட 6 ஜி இலக்குல, அதில நாம உலகத்திலயே முதன்மையாவும் இருக்கலாம். அதிலயும் கூட, ஐஐடி மெட்ராஸ் மிகப்பெரிய பங்காற்றி வருது. அதாவது தொழில்நுட்பமாகட்டும், அதிலயும் மிகப்பெரிய பங்களிப்பு. தொழில்துறைன்னு சொன்னா, அதிலயும் பெரிய பங்களிப்பு.
பார்த்தீங்கன்னா முன்னொரு காலத்தில, தமிழ்நாட்டோட ஒரு மாவட்டம் பேரு மறந்து போச்சு. 200 300 ஆண்டுகள்னு சொல்லுவாங்க. அங்க விவசாயிகள் பயிர் செய்யற நெல், தலா ஒரு ஏக்கர்ல அவருக்கு கிடைச்ச சாதனை மகசூலை, இன்னை வரை உலகத்தில யாராலயும் அடிச்சுக்க முடியலை இது தமிழ்நாட்டுல ஏற்படுத்தப்பட்டிச்சு. இது தானே அவங்களோட வல்லமை!! இந்த வல்லமையை கண்டுக்காம இருக்க முடியாது. இப்ப வளர்ச்சியடைந்த பாரதம் படைக்கப்படணும்னா, இந்த சக்தி இருக்கே, இந்த சக்தி துணையோட வளர்ச்சியடைந்த பாரதம் உருவாகும். இந்த சக்திக்கு மேலும் வல்லமை சேர்க்கறது, இந்த சக்திக்கு மேலும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தறது, ஒட்டுமொத்த தேசத்தோட சக்தியை அந்த சக்தியோட இணைக்கறது, இதைக் கொண்டு தான், அங்க பாதுகாப்பு இடைவழி உருவாக்கப்படுது. நான் உறுதியா நம்பறேன். இது நம்ம பாரதத்தை தற்சார்பு பாரதமா வார்த்தெடுக்கற விஷயம். பாதுகாப்புத்துறையில தற்சார்புடையத இருக்கணும். இது இந்த பாதுகாப்பு இடைவழியால ஏற்படும். என் மனசுல இது தெளிவா இருக்கு. (சிரிப்பு)
Question on why TN is a tough nut for the PM to crack and whether it is changing in this election?
இந்த வினா… நிறைய ஊடகவியலார்கள் மனசுல ஏன் வருதுன்னா, தவறா நினைக்காதீங்க நான் உங்களையும் விமர்சனம் செய்ய இருக்கேன். உங்க தொலைக்காட்சிக்கு முன்னாலயே செய்யறேன். என்னை தவறா எடுத்துக்காதீங்க. துர