- K. V. Balasubramanian
ஜான்சன் – வாய்யா ஜானி … என்ன நேத்திக்கி மேட்ச் பாத்தியா? விசாகப்பட்டனத்துல நம்ம தல என்னமா ஆடினாரு தெரியுமா?
ஜானகி – நான் பாக்கல … அதான் தோத்தாச்சே …
ஜான்சன் – என்ன பாக்கலையா? … என்னடா சி.எஸ்.கேவின் பெரிய ஃபேனாச்சே நீ … ஏன் பாக்கல.
ஜானகி – நேத்திக்கி தந்தி டிவில மோதியோட நேர்காணல் கேட்டுகிட்டு இருந்தேன்.
ஜான்சன் – அதையெல்லாம் எதுக்கு கேக்கற … வேஸ்ட் … தமிழ்நாட்டுல அவங்க ஒரு சீட்டு கூட ஜெயிக்கமாட்டாங்க.
ஜானகி – ஏன் அப்படி சொல்ற?
ஜான்சன் – வடக்க ஸ்ரீ ராம்னு சொல்லி ஓட்டு வாங்கிரலாம் … ஆனா தமிழ்நாட்டுல முடியாது.
ஜானகி – உனக்கு ஊரு இராமநாதபுரம் தானே? அந்த ஊருக்கு ஏன் அந்தப் பெயர்? வடக்க ஜெய் ஸ்ரீ ராம்-ன்னு சொன்னா இங்க தமிழ்நாட்டுல ‘ராமஜெயம்’ அப்படீன்னு சொல்றீங்க … அங்க சீத்தாராம் அப்படீன்னா இங்க சீதாராமன்; அங்கே ஜானகிராம் என்றால் இங்கே ஜானகிராமன் … என்னோட பேரு … அங்கே ராம்நரேஷ் என்றால் இங்கே ராமராஜன் … அங்கே ரகுராம் இங்கே ரகுராமன் … அங்கே ராம்சந்தர் இங்கே ராமசந்திரன் … அங்கே ராம்ஸ்வாமி இங்கே ராமசாமி.
ஜான்சன் – ஐயோ ராமா … அதை விடு. நான் இன்னொரு கேள்வி கேக்கறேன். மோதி அரசு அதானி, அம்பானி போன்ற கார்ப்பொரேட்டுக்குத்தான் வேலை செய்யுது … ஏழை மக்களுக்கு எதுவும் செய்யல அப்படீன்னு ராகுல் காந்தி சொல்றாரே அதுக்கு என்ன சொல்லற?
ஜானகி – இது நேரு காலத்திலிருந்து சொல்ற குற்றச்சாட்டு … அப்ப காங்கிரஸ் அரசை டாடா-பிர்லாவின் அரசு அப்படீன்னு சொல்லுவாங்க … இது ஒரு இடதுசாரி சிந்தனை … இப்ப காங்கிரஸ் கட்சியும் ஆலுகின்ற அரசைப் பார்த்து இதைச் சொல்றதுதான் வேடிக்கை.
முதல்ல கரீப் கல்யாண் அன்ன யோஜனாவிலிருந்து ஆரம்பிக்கிறேன். இது ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம். இந்த நாட்டில் 80 கோடி மக்களுக்கு கோவிட் சமயத்தில் இருந்து இன்று வரை இலவச ரேஷன் கிடைக்கிறது. இது நாட்டின் பணக்காரர்களுக்கான திட்டமா? அல்ல. கார்பொரேட்டுகளுக்கான திட்டமா? ஏழைமக்களுக்கான திட்டம் மட்டுமே.
அடுத்தது ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் – நாட்டின் 50% மக்களுக்கு வங்கியில் கணக்கு கிடையாது. மோதி அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளார். இதன் மூலம் அரசு மானியங்கள், திட்டப் பலன்கள் மக்களுக்கு நேரடியாகப் போய்ச் சேருகிறது. இடைத்தரகர்கள் நடுவில் கைவைக்க முடியாது. இது என்ன கார்ப்பொரேட்டுகளுக்கான திட்டமா? அல்லது பணக்காரர்களின் திட்டமா? முழுக்க முழுக்க ஏழைகளின் திட்டம்.
வீடுகளுக்கு மின் இணைப்புத் திட்டம் – இதனை சௌபாக்யா யோஜனா என்று சொல்வார்கள். இந்த நாட்டில் இரண்டரைக் கோடி மக்களின் வீட்டில் மின்சாரம் கிடையாது. அவர்கள் மண்ணெண்ணை விளக்கு எரித்து வாழ்க்கை நடத்துகிறார்கள். 2014 வரை இதுதான் நிலைமை. மோதி, அவர்களது இரண்டரைக் கோடி வீடுகளுக்கு மின்சாரம் தந்திருக்கிறார். இந்த வீடுகளெல்லாம் கார்ப்போரேட்டுகளின் வீடுகளா? அல்லது பணக்காரர்களின் வீடுகளா? ஏழை மக்களின் வீடுகள் … மலைஜாதி மக்களின், பிந்தங்கிய மக்களின், 60 ஆண்டுகாளமாக மின்சாரத்தைப் பற்றி அறியாத மக்களின் வீடுகள்.
ஜான்சன் – அப்பா சாமி விடு தப்பா கேட்டுட்டேன் …
ஜானகி – அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா? இன்னும் சில முக்கியமான திட்டங்கள் இருக்கின்றன. முக்கியமாக தனிநபர் கழிவறைத்திட்டம். நமது தாய்மார்கள், சகோதரிகள் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டனர். அவர்கள் சொம்புல தன்னி எடுத்துகிட்டு காடுகளுக்கு சூரிய உதயத்திற்கு முன்னாடி அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் செல்ல வேண்டும். நகரத்தில வசிக்கின்ற உனக்கு எங்க இதெலாம் தெரியப்போவுது … அவர்களின் துன்பத்தைப் போக்க மோதி அவர்கள் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டினார். வட இந்தியாவில் இதனை ‘மரியாதை வீடு’ எனச் சொல்லுகின்றனர். இதனை கழிவறை என்று சொல்லுவதில்லை. இதனால் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதை கிடைத்துள்ளது. இந்தப் பணி பெண்களின் டிகினிட்டி சம்பந்தப்பட்டது.
பெண்களுக்கு மரியாதை தந்த திட்டம் இதுமட்டுமல்ல பெண்கள் சுய உதவிக்குழு கேள்விப் பட்டிருக்கயா? அதானி அல்லது அம்பானி இதுல எங்கியாவது சம்பந்தப் படுறாங்களா? பத்து கோடி பெண்கள் இந்தக் குழுக்களில் இணைந்துள்ளனர். இதனால் அவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. இவர்கள் வங்கியில் கடன் பெறுகிறார்கள். மோதியின் இலக்கு என்னவென்றால் மூன்று கோடி சுய உதவிக் குழுவின் பெண்களை ‘லட்சாதிபதி அக்கா’-வாக மாற்றவேண்டும் என்பதுதான். இதெல்லாம் ஏழைகளுக்கான திட்டம் இல்லையா?
அடுத்தது ஆயுஷ்மான் பாரத் திட்டம். இந்த நாட்டின் 50 கோடி மக்களுக்கு 5 லட்சம் வரை சிகிச்சைக்கு ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 கோடி மக்கள் இதன் பயனாளர்கள். இந்த 50 கோடி மக்களும் பணக்காரர்களா?
இதோடு மக்கள் மருந்தகம் திட்டம். மலிவுவிலையில் மருந்துகள் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களுக்கு எவ்வளவு பணம் மிச்சமாகிறது தெரியுமா?
அப்புறம் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் அதாவது குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம். இந்த நாட்டில் 80 விழுக்காடு வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக எங்கோ அலைய வேண்டியிருந்தது. இன்று குழாய் மூலம் குடிநீர் சுமார் 12 கோடி வீடுகளுக்குத் தரப்பட்டுள்ளது.
இன்னமும் உஜ்வலா திட்டம் எனப்படுகின்ற இலவச எரிவாயுத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ 6000 வழங்கும் திட்டம் என பல திட்டங்கள் இருக்கிறது. இப்ப சொல்லு மோதி கார்ப்பொரேட்டுகளுக்கு திட்டம் போடுகிறாரா அல்லது ஏழைகளுக்குத் திட்டம் போடுகிறாரா?
ஜான்சன் – இப்ப நீ என்ன சொல்ல வர?
ஜானகி – மீண்டும் மோதி; வேண்டும் மோதி