spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்அண்ணாமலை, தமிழக பாஜக., பற்றி மோடி சொன்னது இதைத்தான்..!

அண்ணாமலை, தமிழக பாஜக., பற்றி மோடி சொன்னது இதைத்தான்..!

- Advertisement -
pm narendra modi

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்தியேக பேட்டியில், ராமர் கோயில் தொடர்பாக பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் ஒளிபரப்பான அந்த பேட்டியில் இருந்து சில துளிகள் … தந்தி டிவியின் சார்பில்  முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரசியமான பதில்கள்… 

தொடர்ச்சி…

கேள்வி : உங்களின் திறமையான முயற்சிகளுக்குப் பின்னரும் தமிழகத்தின் அரசியல் நிலைமை தங்களுக்கு ஒரு தீர்க்கமுடியாத சவாலாகவே உள்ளது. அது ஏன்? இந்தத் தேர்தலில் அந்த நிலைமை மாறிவருவதாக  நினைக்கிறீர்களா?

பிரதமர் மோடியின் பதில்:

நான் அரசியலில் இருக்கிறேன், அதற்காக எல்லா செயல்களையும் அரசியலுக்காகவே செய்வேனா? வாக்கு பெறுவதற்காக மட்டும் செயல்படுவேனா? ஆட்சியில் இருப்பதற்காகச் செய்வேனா? இந்த எண்ணம் குறைந்தபட்சம் எனக்குப் பொருந்தாது …

நான் நாட்டிற்காகப் பணிபுரிகிறேன். … தமிழ்நாடு என் நாட்டின் மிகப்பெரிய சக்தி … ஆட்சியை யாருக்குக் கொடுக்கிறீர்கள் அது பற்றி நான் சிந்திக்கவில்லை … ஒருவேளை இதுதான் விஷயம் என்றால் நான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் எந்தப் பணியையும் செய்திருக்க மாட்டேன்.  வடகிழக்கு மாநிலங்களில் என்னுடைய அமைச்சர்கள், 150க்கும் அதிகமான அமைச்சர்கள் அங்கே சென்றிருக்கிறார்கள்.

இந்தியாவின் எத்தனை பிரதமர் இருந்தார்க்ளோ அவர்கள் அனைவரும் சேர்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு எத்தனை சென்றார்களோ நான் அதைவிட அதிக முறை சென்றிருக்கிறேன். எனவே ஒவ்வொரு விஷயத்தையும் தேர்தல் … அரசியல் … பிஜேபி … இந்த எண்ணத்திலேயே அளவிடுவது என்னுடைய இந்த வளர்ச்சிப் பணிகளுக்குச் செய்யப்படும் ஒரு அநியாயமாகும்.

நான் என்னுடைய நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காகப் பணிபுரிகிறேன் … தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது எனது பிரச்சனையல்ல … அவர்களின் திறமையைப்பற்றி … அவர்களின் ஆசைகள் பற்றி… அவர்களின் இலக்குகள் பற்றி நான் யோசிக்கிறேன் !

அந்த விஷயத்தில், மக்கள் இன்று என்னை எந்த இடத்தில் அமர்த்தியிருக்கிறார்களோ, அங்கிருந்து நான் அவர்களுக்கு நான் சேவை செய்ய முடியுமென்றால் அது எனது பாக்கியமாக இருக்கும் … இதனை நான் தில்லியில் அமர்ந்து கொண்டு செய்யமுடியாது … அந்தந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் … இதற்காக இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் செல்கிறேன் … தமிழ்நாடிற்கும் செல்கிறேன். எனவே தயவுசெய்து நான் ஏதோ அரசியல் திட்டத்தோடு அங்கு செல்கிறேன் எனச் சொல்லாதீர்கள். குறைந்தபட்சம் என்விஷயத்தில் அப்படிச் சொல்லாதீர்கள்.

கேள்வி – நீங்கள் ஒரு பிரதமராக, பல நல்ல நடவடிக்கைகளை தமிழகத்துக்கு எடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஓர் அரசியல்வாதியாக … நான் இத்தனை நற்செயல்கள் செய்கிறேன் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறார்கள் என யோசித்ததுண்டா?

பிரதமர் மோடியின் பதில் – 

இல்லை … ஒருபோதும் இல்லை. தமிழக மக்கள் மீது எனக்கு எவ்விதமான குற்றச்சாட்டும் இல்லை! எனக்கு அவர்கள் மீது அன்பு இருக்கிறது … நான் அவர்கள் மீது பைத்தியமாக இருக்கிறேன்! தமிழர்களின் பண்பாட்டின்மீது நான் பைத்தியமாக இருக்கிறேன்! இந்த அன்பு என்னை அங்கே இழுத்துக் கொண்டுபோகிறது.

தேசப் பற்றின் காரணத்தால் அண்ணாமலை இங்கே சேர்ந்தார்!

கேள்வி – தமிழ்நாட்டில் அண்ணாமலை பாஜக.,வின் மாநிலத் தலைவராக வந்துள்ளார். அவரது தலைமியில் கட்சி வளர்ச்சி அடைவதாக நினைக்கிறீர்களா?

பிரதமர் மோடியின் பதில் – 

இதோ பாருங்கள் … பாரதிய ஜனசங்கத்தின் காலத்தில் இருந்து நான் நாடு முழுவதும் பணியாற்றுகிறேன். தமிழ்நாட்டிலும் பணியாற்றுகிறேன். முனிசிபாலிடியில் தேர்தலில் போட்டியிடும் நேரம் வந்தபோது அதற்காக எங்களில் வேட்பாளர்கூட கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் இருந்து நாங்கள் வேலை செய்கிறோம்.

என்னுடைய கட்சிக்கு நான்கு தலைமுறைகள் கடந்துவிட்டன. தமிழகத்தில் பாஜக அல்லது பாரதிய ஜனசங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் பணி நடக்கிறது. இதில் பல தலைமுறைகள் பணியாற்றியிருக்கின்றன. அதில் அண்ணாமலையும் ஒருவர்.

அண்ணாமலை இப்போது மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்; குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கிறார். அவர்து நல்ல் வேலையை உதறிவிட்டு இந்த மனிதன் கட்சிப் பணிக்கு வந்திருக்கிறார். அவர் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என நினைத்திருந்தால் திமுகாவில் இணைந்திருப்பார். அல்லது அஇஅதிமுகாவில் இணைந்திருப்பார். சிறந்த பின்னணியும் உள்ளது; சிறந்த உழைப்பாளி. இளவயதுடையவர். ஆனால் அவர் பாஜகவில் சேரும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்குப் பதிலாக அவர் நாட்டு நலனை கையிலெடுத்திருக்கிறார். அந்த விஷயத்தில் தமிழ்நாடு பிந்தங்கிவிடக்கூடாது என்ற அடிப்படையில் அண்ணாமலை பணியாற்றுகிறார்.  

அதிமுக.,வினர் தான் வருத்தப்பட வேண்டும்!

கேள்வி– இந்தத் தேர்தலில் அஇஅதிமுகவும் தே.ஜ. கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு இருந்தது. இன்று அவர்கள் கூட்டணியில் இல்லை என வருத்தப்படுகிறீர்களா?

பிரதமர் மோடியின் பதில் – 

இந்த விஷயத்தை நாம் வேறுவிதமாகப் பார்க்கவேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. நான் ஆட்சி அரசியலில் நீண்ட நாட்கள் இருந்ததில்லை. 1995இல் அம்மா ஜெயலலிதாவுடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பின்னர் நான் முதலமைச்சரானேன் …

பலர் … 2002 தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்சியின் மீது குற்றம் சாட்டினர். அச்சமயத்தில் அம்மா குஜராத் வந்தார்கள். நான் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வந்தார்கள் … பிறர் எத்தனையோ விமர்சனம் செய்தபோதும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை … என்னுடையது இத்தகைய தொடர்பு … எனவே வருத்தம் யாருக்காவது இருக்குமானால் அது அஇஅதிமுக கட்சியினருக்கு இருக்க வேண்டும்.

எங்களுக்கு வருத்தம் ஏற்படுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. எதையாது இழந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் இழந்திருக்கிறார்கள். ஜெயலலிதா அவர்களின் கனவுகளைச் சிதைக்கின்ற பாபம் செய்பவர்கள் அவர்களுக்கு வருத்தம் ஏற்படவேண்டும். பாஜகவுக்கு வருத்தம் ஏற்படக் காரணமேயில்லை.

பாஜக.,வுக்குக் கிடைக்கும் வாக்கு நேர்மறையான வாக்கு!

கேள்வி – திமுக.,விற்கு எதிரான என் வாக்கை இந்த முறை அஇஅதிமுகவிற்குப் பதிலாக நான் ஏன் பாஜகவிற்கு தரக்கூடாது என பலர் நினைக்கலாம் அல்லவா?

பிரதமர் மோடியின் பதில் – 

இந்த முறை பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மிகவும் வலுவாக உள்ளன. சமூகத்தின் பல இடங்களில் உள்ள பல வலுவான சமூகங்களை இணைக்கும் கூட்டணி. வெவ்வேறுவிதமான பொருளாதார, சமூகக் குழுக்களை உள்ளடக்கியது. தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருவகையான மலர்ச்செண்டு; இதனுள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த மலரைப் பார்க்கின்றனர். இது என்னுடைய மலர் என நினைக்கிறார்கள். இது எங்களுடைய மிகப் பெரிய பலம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜகவிற்கு அளிக்கப்படும் வாக்கு ஒரு நேர்மறையான வாக்கு; அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு, இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு இதெல்லாம் இல்லை … இம்முறை பாஜகவிற்கு வாக்களிக்கவேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. எங்களுக்குக் கிடைக்கும் வாக்கு யாருக்கும் எதிராகக் கிடைக்கும் வாக்கு அல்ல; பாஜகவிற்கு ஆதரவான வாக்கு. நேர்மறையான வாக்கிறகு அதிக பலம் உண்டு.

எங்களுடைய 10 ஆண்டு கால ஆட்சியில் இளைஞர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம் … மகளிருக்கான எங்கள் செயல்பாடுகள் … விவசாயிகளுக்கான எங்கள் செயல்பாடுகள் … ஏழைகள் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றிருக்கும் விதம் … இந்த அனைத்து விஷயங்களாலும் தமிழ் நாட்டில் பாஜகவிற்கு ஆதரவான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான நிலை நிலவுகிறது.

கேள்வி பதில் தொடர்கிறது…நீங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe