December 6, 2025, 6:48 AM
23.8 C
Chennai

செங்கோல், காசி தமிழ்ச் சங்கமம் – தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கானதா?: பிரதமர் மோடி அளித்த பதில்!

pm narendra modi - 2025
#image_title

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்தியேக பேட்டியில், ராமர் கோயில் தொடர்பாக பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் ஒளிபரப்பான அந்த பேட்டியில் இருந்து சில துளிகள் … தந்தி டிவியின் சார்பில்  முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரசியமான பதில்கள்… 

கேள்வி:  ‘காசி தமிழ் சங்கமம்’, நாடாளுமன்றத்தில் ‘தமிழ் செங்கோலை’ நிறுவியது போன்ற பல நல்ல விஷயங்களை நீங்கள் செய்து இருக்கிறீர்கள். ஒரு பிரதமராக இவற்றையெல்லாம் செய்யத் தூண்டியது எது?

பிரதமர் மோடியின் பதில்: 

நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பின்னர், காசி குறித்த எனது பார்வை மாறியது. காசிக்கு, குஜராத், மேற்கு வங்காளம்,;மகாராஷ்டிரா என பல இடங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். ஆனால் காசியின் படகோட்டிகள் இந்த மாநிலங்களின் மொழிகளைப் பேசுவது குறைவு. ஆச்சரியப்படும் விதமாக காசியின் படகோட்டிகள் பலர், தமிழ் பேசுகிறார்கள். காரணம், அதிகபட்ச பயணிகள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள். அவர்கள் இந்தி பேசுவதில்லை; அதனால் படகோட்டிகள் சகஜமாக தமிழைக் கற்றுக் கொண்டு தமிழில் பேசுகிறார்கள். நமது சுப்பிரமணிய  பாரதியாரின் குடும்பமும் அங்கே வசிக்கிறது. எனவே நான் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் பெயரில் ஒரு ‘இருக்கை’ ஏற்படுத்தினேன். பிறகு ‘காசி தமிழ் சங்கமம்’ நடத்த எண்ணம் தோன்றியது. இதன் மூலம் காசியில் மக்கள் தமிழ்ப் பண்பாட்டை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினேன். அங்கே தமிழ்நாட்டின் உணவு வகைகள் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது; தமிழகத்தின் நாட்டிய வகைகள், தமிழிலக்கியம் பற்றிய நிகழ்ச்சிகள், இவையெல்லாம் நடத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான புத்தகங்ககள், தமிழிலக்கிய நிகழ்ச்சியில் விற்பனையாயின. நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் மிகப் பெரிய சக்தி இதிலே எனக்குத் தெரிந்தது.  

செங்கோல் பற்றி பலருக்கு தெரியவில்லை. நாட்டின் சுதந்திரத்தின் முதல் கணம் இந்தச் செங்கோலுடன் தொடர்புடையது. அதோடு தொடர்புடைய தமிழகத்தின் ஆதீனங்கள் இந்த செங்கோலைத் தந்தனர். இவர்கள் பண்டித நேருவிற்கு, ஓர் அரசியல் மாற்றத்தை உணர்த்தும் வண்ணம் அதைத் தந்தனர். ஆனால் அதன் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை … அது அலகாபாத் மியூசியத்தில் கிடந்தது … அது நேருவின் நடைப்பயிற்சிக்கான கைத்தடி என்றே கருதப்பட்டது. இவ்வளவு புனிதமான விஷயத்தை கைத்தடி என நினத்துவிட்டார்கள்… 

இந்த விவரங்கள் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. நான் அதை மியூசியத்தில் இருந்து கொண்டுவந்தேன். தமிழகத்தின் ஆதீனங்களிடம் இதுபற்றிக் கேட்டேன். இதை உருவாக்கிய தமிழகத்தின் பொற்கொல்லரிடம் கேட்டேன். விவாதித்தேன் … பின்னர் என் மனதளவில் முடிவு செய்தேன் … பாரதத்தின் சுதந்திரத்தின் அந்த முதல் கணத்தின் சின்னத்தை புதிய நாடாளுமன்றம் உருவாகும்போது அதில் நிறுவ முடிவுசெய்தேன். அதன் பின்னர் அந்த செங்கோலை ஒரு மூலையில் தூக்கி வைத்துவிடும் நிலை வரக்கூடாது என்பதற்காக அதனை மையப்பகுதியில் நிறுவினேன். இந்த முறை குடியரசுத்தலைவர் நாடாளுமன்றம் வந்தபோது முதலில் செங்கோலைப் பார்வையிட்டார்  செங்கோல் முதலில் குடியரசுத்தலவருக்கு அளிக்கப்பட்டது… அதன் பின்னர் அவர் தனது உரையைத் தொடங்கினார். இதைப் போன்ற ஒரு சபை மரபினை நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 

நாட்டிற்கு அதன் சுதந்திரத்தின் முதல் கணம் நினைவில் இருக்க வேண்டும். மேலும் செங்கோல் என்பது நாட்டில் அரசு செயல்பாடுகளுடன் தொடர்புடைய … தமிழகத்திலிருந்து நாட்டிற்கு கிடைத்திருக்கும் ஒரு பாரம்பரியம் … இதனை நாம் பெருமையாக நினைக்கவேண்டும் … 

ஆனால் நாட்டின் துரதிருஷ்டத்தைப் பாருங்கள் … தமிழ்நாட்டின் தலைவர்கள் இதனைப் புறக்கணிக்கிறார்கள் … இதைவிட துரதிருஷ்டம் வேறு என்ன இருக்கமுடியும்? தமிழ்நாட்டின் தலைவர்கள் தமிழகப் பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றின் மீது பெருமை கொள்ளவில்லை என்றால், இதனால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை.  

***

கேள்வி: ஆனால் மோதி இவை அனைத்தையும் அரசியல் காரணங்களுக்காகச் செய்கிறார்… தமிழ்நாட்டிலிருந்து வாக்குகள் பெறுவதற்காகச் செய்கிறார் என்று விமர்சிக்கிறார்களே!

பிரதமர் மோடியின்  பதில்:

ஒருவேளை இதனால் வாக்குகள் கிடைக்குமென்றால் இவர்கள்தானே இந்தச் செயலை,  நான் செய்வதற்கு முன்னால் செய்திருப்பார்கள்?! அவர்களிடம் அதற்கான் சக்தி இருக்கிறதே! ஆனால்  செய்யவில்லை!. அவர்களுக்குத் தெரியும் இதனால் நாடு வலுவடைகிறது… இதனால் வாக்கு வங்கி அரசியல் முடிவடைகிறது … இதனால் குடும்ப அரசியல் முடிவுக்கு வருகிறது… எனவேதான் இவர்கள் இந்த விஷயங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் … 

கேள்வி: காசியில் இருந்தும் ராமேஸ்வரத்திலிருந்தும் நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வதந்தியாகக் கூறினார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து போட்டியிடலாம் என நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?

பிரதமர் மோடியின் பதில்:

நான் கட்சியின் ஒரு படைவீரன் … கட்சி என்னை தேர்தலில் போட்டியிடச் சொன்னது, நான் பொட்டியிட்டேன் … முதலில் ராஜ்கோட் சென்று போட்டியிடச் சொன்னது, போட்டியிட்டேன் … பின் மணிநகர் தொகுதி … பின் பரோடா தொகுதி … பின்னர் நாடாளுமன்றத்திற்கு காசியிலிருந்து போட்டியிடச் சொன்னார்கள்! இப்படி கட்சி என்னை எங்கிருந்து போட்டியிடச் சொல்கிறதோ அங்கிருந்து போட்டியிடுகிறேன். எனக்கு இதில் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துமில்லை!

கேள்வி: நீங்கள் 2047இல் வளர்ச்சியடைந்த பாரதம் பற்றிப் பேசுகிறீர்கள்! இதில் தமிழகத்துக்கான திட்டங்கள் என்ன?

பிரதமர் மோடியின் பதில்:

முதலில், வளர்ச்சியடைந்த பாரதம் என்றால் தில்லி மட்டும் வளர்ச்சியடைவது அல்ல … பாரதத்தின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் உரிமை கொண்டாடவேண்டும். இரண்டாவது … பாரதம் ஒரு கூட்டாட்சி நாடு … நான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பாரதத்தின் வளர்ச்சிக்காக குஜராத்தின் வளர்ச்சி என செயல்பட்டேன் … நாம் அனைவரும் இதன் அடிப்படையிலேயே செயல்படவேண்டும் … நாம் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய வளர்ச்சியடைந்த மாநிலங்களை உருவாக்க வேண்டும் … வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்க ஒவ்வொரு தமிழரும் முயற்சி செய்ய வேண்டும் … ஒவ்வொரு தமிழரும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் போல இந்தப் பணியில் இணைய வேண்டும்! வளர்ச்சியடைந்த பாரதத்தின் உந்து சக்தியாக தமிழகம் இருக்கக்கூடும் …

தமிழகத்தில் திறமையான இளைஞர்கள் இருக்கிறார்கள் … மெட்ராஸ் ஐ.ஐ.டியைப் பாருங்கள் …   5G  தொடர்பான விஷயங்களில் மெட்ராஸ் ஐ.ஐ.டி தலைமை வகிக்கிறது. நம் 6G தொடர்பான விஷயங்கள் … நாம் உலகில் இத்துறையில் முத்லிடத்தில் இருக்கிறோம் … அதிலும் மெட்ராஸ் ஐ.ஐ.டி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது … அதாவது தொழில்நுட்பத்தில், தொழில்துறையில் மிகப்பெரிய பங்களிப்பு … 

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டம் … தஞ்சாவூரில்  ஒரு ஏக்கருக்கு விளைவிக்கப்படும் நெல்லின் அளவு ஒரு சாதனை அளவாக இருந்தது … அந்தச் சாதனையை இன்னும் யாரும் இதுவரை உலகில் முறியடிக்கவில்லை… இது ஒரு திறமை … இந்தத் திறனை இருட்டடிப்பு செய்ய முடியாது … 

வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக வேண்டும் என்றால் இந்த சக்திகளால்தான் அது நடக்க வேண்டும் … அந்த சக்தியை அதிக திறன் மிக்கதாக ஆக்குதல், அதற்குத் தேவையான வாய்ப்புகளை வழங்குதல், இந்த முழு நாட்டின் சக்தியுடன் அதனை இணைத்தல் … இப்போது பாதுகாப்பு முனையம் உருவாக்குதல் … இது பாரதத்தை சுயசார்பு பாரதமாக மாற்றும் விஷயம் … பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பு பாரதமாக மாறவேண்டும் என்றால் அது இந்த பாதுகாப்பு முனையத்தால் மட்டுமே முடியும்.

( கேள்வியும் பதிலும் தொடர்கின்றன…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories