அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம். டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது; எமர்ஜென்சியை பயன்படுத்தி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என்று தெரிவித்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக அளவில் போட்ட வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க சட்டப்படி வரி விதிக்க பார்லிமென்ட்டுக்கே அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது வர்த்தக பற்றாக்குறையைக் காரணம் காட்டி வரிகளை விதித்தார். இதற்கு அந்நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் டிரம்ப்பின் வரி விதிப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளதாவது: அமெரிக்க சட்டமான சர்வதேச அவசரநிலை பொருளாதார சட்டத்தின்படி வரி விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை. அமெரிக்க சட்டப்படி, வரிவிதிக்க பார்லிமென்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை.
நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு கூறிய நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டன. இது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?
இன்றைக்குத் தமிழ், செம்மொழி என்ற தகுதியோடு துலங்குகிறது என்றால் அதற்கு மூலகாரணம் இந்த கும்பகோணம் அகத்தியர்தான். நமது செந்தமிழ் செம்மொழி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கான பழந்தமிழ் ஆதாரங்கள் வேண்டுமே! அழிவு நிலையில் இருந்த நமது பழந்தமிழ் இலக்கியங்களை ஊர் ஊராய்த் தேடித் தேடிச் சென்று திரட்டி, அவற்றை ஒப்புநோக்கி, பிழை நீக்கி, சாகா வரம் பெற்ற நூல்களாய் அச்சிட்டவர் அந்த நவீன அகத்தியர்.
இப்போது புரிந்திருக்குமே அந்த நவீன அகத்தியர் யார் என்பது? ஆம்! நமது தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர்தான் அவர். இதை நான் சொல்லவில்லை. மகாமகோபாத்யாய பட்டம் பெற்ற உ.வே.சா. அவர்களை வாழ்த்தி 1906-இல் வாழ்த்துப் பா இயற்றியபோது மகாகவி பாரதியார் இப்படிப் பாராட்டியிருக்கிறார். “கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று உ.வே.சா. அவர்களைக் குறிப்பிடும் பாரதி, “பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்கு வாயே” என்று அவரை வாழ்த்தியுள்ளார்.
அக்கால இன்குபேட்டர் போன்ற) குடத்தில் இருந்து பிறந்தவர் என்று கூறப்படுவதால் அகத்தியருக்கு கும்பமுனி என்று பெயர். கும்பமேளாவை ஒத்த மகாமகம் நடைபெறும் குடந்தை நகரமும் கும்பத்தில் இருந்து தோன்றியதால் அதற்கு கும்பகோணம் என்று பெயர். அந்த கும்பகோணம் அருகே சூரியமூலை என்ற சிறிய கிராமத்தில் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றியவர் சாமிநாதர்.
அவரது தந்தையின் பெயரான உத்தமதானபுரம் வேங்கடசுப்ரமணியன் என்ற பெயரையும் சேர்த்து உ.வே. சாமிநாத ஐயர் என்று அழைக்கப்பட்டார். சூரியமூலையில் பிறந்த அவர்தான் மூலை முடுக்குகளில் பதுங்கியிருந்த பழந்தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து, அதன் புகழொளியை உலகெங்கும் பாய்ச்சினார். அதனால்தான் தமிழ் வாழும் காலம் முழுவதும் புலவர்களால் பாராட்டப்பட்டு அமரனாக வாழ்வாய் என்று மகாகவியால் உ.வே.சா. வாழ்த்தப்பட்டார்.
அப்படிப் புகழும் அளவுக்கு என்ன செய்தார் உ.வே.சா? ஓலைச் சுவடிகளிலும், ஏடுகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் பதுங்கியிருந்த பழந்தமிழ் இலக்கியங்களையும் தேடிக் கண்டுபிடித்து, புதுப்பித்து, நூலாகப் பதிப்பிப்பதற்கு தம் வாழ்நாளில் ஏறத்தாழ 60 ஆண்டுக் காலத்தை மட்டுமின்றி, தன் சொத்துகளையும் செலவழித்தவர் உ.வே.சா. தீயிலும், ஆற்று வெள்ளத்திலும், அருமை தெரியாமலும் அழிவின் விளிம்புக்குச் சென்ற பழந்தமிழ் இலக்கியங்களை அச்சு வாகனமேற்றி அழகுபார்த்தார் உ.வே.சா.
இவ்வாறாக 90 பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார் உ.வே.சா. அவற்றுள் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும், திருமுருகாற்றுப்படை தொடங்கி மலைபடுகடாம் வரையான பத்துப்பாட்டு நூல்கள் முழுவதும், புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஐங்குறுநூறு, குறுந்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களும் அடங்கும். இதுபோக புறப்பொருள் வெண்பா மாலை, நன்னூல் உரை போன்ற இலக்கண நூல்களையும், பல்வேறு புராணங்கள், சிறு காப்பியங்கள் உள்ளிட்ட நூல்களையும் அவர் தேடிக் கண்டுபிடித்து அச்சு நூல்கள் ஆக்கியுள்ளார்.
மகாவித்வான். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சீடராகத் தமிழ் பயின்ற உ.வே.சா., கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் பின்னர் சென்னைக் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் இடைக்காலத் தமிழிலேயே அதிகத் தேர்ச்சி பெற்றிருந்த உ.வே.சாமிநாதையரை சங்கத் தமிழின்பால் நாட்டம் கொள்ளச் செய்ததோடு, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிப்பதை தமது வாழ்வின் லட்சியமாகவும் அவர் ஆக்கிக் கொள்ள வழிவகுத்தது சேலத்தில் இருந்து பணிமாற்றலாகி வந்திருந்த அரசு அதிகாரியும் தமிழன்பருமான இராமசாமி முதலியார் என்பவருடனான சந்திப்புதான். இராமசாமி முதலியார் கொடுத்த கையெழுத்துப் பிரதியான சீவக சிந்தாமணிதான் உ.வே.சா. அவர்களின் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தது.
1874-ஆம் ஆண்டு தொடங்கி, தாம் மறைந்த 1942 ஆம் ஆண்டு வரையில் தமிழ் நூல்களை அச்சேற்றும் அரும் பணியை அயராது செய்து வந்தார் உ.வே.சா. அவரது இத்தமிழ்த் தொண்டில் சி.வை. தாமோதரம் பிள்ளை என்ற தமிழறிஞரும் உதவிகரமாகச் செயல்பட்டார்.
சங்கத் தமிழ் நூல்களை பொக்கிஷமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தந்ததுடன் மட்டுமின்றி, இன்றைக்குத் தமிழிசைத் தழைத்திடவும் காரணமாக அமைந்தவர் உ.வே.சா. சுமார் 4 நூற்றாண்டுக் காலமாக தமிழ்நாட்டில் தெலுங்கு, சம்ஸ்கிருத கீர்த்தனைகளே கோலோச்சி வந்த நிலையில், உ.வே.சா. தேடிக் கண்டுபிடித்து அச்சேற்றிய சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் மூலம், அவற்றில் காணப்படும் தமிழின் பழங்காலப் பண்கள் மீண்டும் வெளியுலகைப் பார்த்தன. உலகைத் தம் வசம் மீண்டும் ஈர்த்தன.
ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.
வருகிற மார்ச் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகை புரிய உள்ளார் . அப்போது புதிய வழித்தடங்களில் ரயில் சேவைகளையும் துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
✓ சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி காரைக்குடி வழியாக இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்
✓ நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மதுரை வழியாக ஹைதராபாத் சார்லபள்ளி வரை அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவையும்
✓ மங்களூரில் இருந்து சோரனூர் பாலக்காடு பொள்ளாச்சி பழனி மதுரை வழியாக இராமேஸ்வரம் வரை வாராந்திர ரயிலும்
✓ பொள்ளாச்சி பழனி வழியாக தாம்பரம் மங்களூர் அம்ரித் பாரத் ரயில் சேவையும்
எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலத்தின் ஜோக்பானி வரை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும்
துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. நிகழ்ச்சி தொடர்பான உத்தேச தகவல்கள் இன்றைய கேரள செய்தித்தாளில் தகவலாக வெளியிடப்பட்டுள்ளது .
மேலும் தற்போது இயங்கி வரும் எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயிலை தினசரி ரயிலாகவும் எர்ணாகுளத்தில் இருந்து செங்கோட்டை விருதுநகர் வழி ராமேஸ்வரத்திற்கு வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு கொல்லம் செங்கோட்டை வழியாக ஈரோடு கோயமுத்தூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்கமும் ரயில்வே துறை முடிவு செய்து வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த செய்தியில் பொள்ளாச்சி வழியாக தாம்பரம் மங்களூர் மற்றும் இராமேஸ்வரம் மங்களூர் ரயில்கள் தனது பயணத்தை துவங் கஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
விரைவில் இது தொடர்பான முழு அறிவிப்பு வழியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது . மார்ச் ஒன்றாம் தேதி கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது …. எனவே புதிய ரயில் சேவைகள் துவக்கம் நடைபெறப்போவது உறுதியாகியுள்ளது .
அதே நேரத்தில் எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் செல்லும் இன்ப தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்படும்
திருச்செந்தூர் – தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை!
18 கி.மீ இணைக்கப்பட்டால் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்!
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தற்போதைய சிக்கல் என்ன? தற்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் நெல்லை வழியாகச் சுற்றிச் செல்வதால், 138 கி.மீ கூடுதல் பயண தூரமும், சுமார் 3 மணி நேர கூடுதல் பயண நேரமும் ஆகிறது.
தீர்வு என்ன? திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரி வரையிலும், மறுபுறம் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து ஸ்பிக் நகர் வரையிலும் ஏற்கெனவே ரயில் பாதைகள் உள்ளன. எனவே, ஆறுமுகநேரிக்கும் – ஸ்பிக் நகருக்கும் இடையே வெறும் 18 கி.மீ தூரத்திற்குப் புதிய ரயில் பாதை அமைத்தால் மட்டுமே போதும்! இதன் மூலம் தூத்துக்குடி – திருச்செந்தூர் முழுமையான ரயில் இணைப்பைப் பெறும்.
திட்டத்தின் பயன்கள்: பயண நேரம் மற்றும் தூரம் கணிசமாகக் குறையும். ஆத்தூர், பழையகாயல், புன்னக்காயல் மற்றும் ஸ்பிக் நகர் பகுதி மக்களுக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும். வாஞ்சி மணியாச்சி மற்றும் மதுரை வழியாகப் புதிய மாற்று வழித்தடம் உருவாகும்.
தென் மாவட்ட மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ரயில்வே துறை விரைந்து நிறைவேற்றுமா என விருதுநகர் மதுரை திண்டுக்கல் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி 11, 12ஆம் நாள்கள் 17 & 18.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
17.02.2026 அன்று முதல் ஆட்டம் சென்னையில் காலை 1100 மணிக்கு கனடா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் பல்லேகலேயில் மதியம் 0300 மணிக்கு அயர்லாந்து, ஜிம்பாபே அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தத்லிக்கப்பட்டது. இதனால் குரூப் B பிரிவில் ஜிம்பாபே அணி சூப்பர் 8 கட்டத்திற்கு தேர்வானது. மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நேபாளம், ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் நேபாள அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் பாகிஸ்தான் நமீபிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 102 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிபெற்று சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறியது. மூன்றாவது ஆட்டம் இந்திய, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கு அகமதாபாத்தில் நடந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, குரூப் அளவில் நான்கு ஆட்டங்கலிலும் வென்று 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியல் 18.02.2026 அன்று மூன்றாவது ஆட்ட முடிவில்
குரூப் A
வ. எண்
அணி
ஆட்டம்
வெற்றி
தோல்வி
முடிவு இல்லை
புள்ளிகள்
1
இந்தியா
4
4
0
0
8
2
பாகிஸ்தான்
4
3
1
0
6
3
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
4
2
2
0
4
4
நெதர்லாந்து
4
1
3
0
2
5
நமீபியா
4
0
4
0
0
குரூப் B
வ. எண்
அணி
ஆட்டம்
வெற்றி
தோல்வி
முடிவு இல்லை
புள்ளிகள்
1
இலங்கை
3
3
0
0
6
2
ஜிம்பாபே
3
2
0
1
5
3
அயர்லாந்து
4
1
2
1
3
4
ஆஸ்திரேலியா
3
1
2
0
2
5
ஓமன்
3
0
3
0
0
குரூப் C
வ. எண்
அணி
ஆட்டம்
வெற்றி
தோல்வி
முடிவு இல்லை
புள்ளிகள்
1
மே.இ. தீவுகள்
3
3
0
0
6
2
இங்கிலாந்து
4
3
1
0
6
3
ஸ்காட்லாந்து
4
1
3
0
2
4
இத்தாலி
3
1
2
0
2
5
நேபாளம்
4
1
3
0
2
குரூப் D
வ. எண்
அணி
ஆட்டம்
வெற்றி
தோல்வி
முடிவு இல்லை
புள்ளிகள்
1
தென் ஆப்பிரிக்கா
4
4
0
0
8
2
நியூசிலாந்து
4
3
1
0
6
3
ஆஃப்கானிஸ்தான்
3
1
2
0
2
4
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
4
1
3
0
2
5
கனடா
3
0
3
0
2
நாளை (19.02.2026) முதல் ஆட்டம் கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு இத்தாலி, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் இலைங்கை ஜிம்பாபே அணிகளுக்கு இடையே மதியம் 0300 மணிக்கு நடைபெறும். மூன்றாவது ஆட்டம் சென்னையில் இரவு 0700 மணிக்கு ஆஃப்கானிஸ்தான் கனடா அணிகளுக்கு இடையே நடைபெறும்.
Dr. B.R.J.கண்ணன் MD., DM (Cardio) இதயநோய்நிபுணர், வடமலையான் மருத்துவமனை, மதுரை
உணவே மருந்து
நம் உணவில் உள்ள சத்துக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. மாவுச்சத்து 2. புரதம் 3. கொழுப்பு
இதில் எது நமக்குத் தீங்கு விளைவிக்கிறது என்று கேட்டால், தயங்காமல் கொழுப்பு என்று கூறுவீர்கள். நீங்கள் மட்டுமல்ல பெரும்பாலான மருத்துவர்களும் உலக மக்களும் கடந்த 50 ஆண்டுகளாக இதைத்தான் உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள், இனி மேற்கொண்டு படிக்கும் முன்பு உணவு பற்றிய உங்கள் அபிப்ராயத்தை உங்கள் மூளையில் இருந்து முழுவதுமாக அகற்றிவிட்டு, திறந்த மனதுடன் படிக்கவும்.
நாம் எந்த மாதிரி உணவு எடுக்க வேண்டும்? சரிவிகித உணவு. ஆங்கிலத்தில் இதை BALANCED DIET என்று கூறுவார்கள். அதாவது உணவில் 50 முதல் 55% வரை மாவுச்சத்தும், 20% புரதச்சத்தும், 25% கொழுப்புச்சத்தும் இருக்க வேண்டும். ஆனால் முழு நாளும் நீங்கள் உண்பது பெரும்பாலும் மாவுச்சத்துள்ள உணவுகளே, உடம்பிற்கு வேண்டிய புரதமும் கொழுப்பும் எங்கே? நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
மாவுப்பொருட்கள் என்றால் எவை?
அரிசி கோதுமை, கேப்பை, சிறு தானியங்கள், ஓட்ஸ் மற்றும் அவைகளால் செய்த உணவுகள் இட்லி, தோசை சாதம், சப்பாத்தி உப்புமா என நாம் அன்றாடம் உண்ணும் எல்லாமே. இவை செரிமானம் ஆகி சர்க்கரையாக மாறுகிறது. இவைகளைத்தான் சிம்பிள் டயட் என்று உண்டு வந்திருக்கிறோம். ஆனால் நோய்கள் பெருகியுள்ளதே ஒழிய குறையவில்லை.
மாவுச்சத்து சாப்பிட்டால் நம் உடம்பில் என்ன நடக்கிறது?
1. போதும் என்ற எண்ணத்தைக் கொடுப்பதில்லை. குழம்பு சாதம், ரச சாதம், தயிர் சாதம் என்று உண்ட பின்பும் பாயாசமும், ஐஸ்கீரீமும் உண்ண முடியும். நம் இரைப்பை வீங்கி மேற்கொண்டு இடமில்லை என்றவரை நம்மை சாப்பிடத் தூண்டும். ஆகையால் சர்க்கரை அளவு எளிதாகக் கூடுகிறது.
2. ரத்தத்தில் ஏறும் சர்க்கரையில் ஒரு குறுகிய அளவே அப்படியே சேமித்து வைக்க முடியும். மீதமுள்ள சர்க்கரையை நம் ஈரல் கொழுப்பாக மாற்றிவிடும். உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு எல்லாம் மாவுச்சத்து உண்டதால் வந்ததே அன்றி கொழுப்பு உண்டதால் அல்ல.
3. நீங்கள் எவ்வளவு உண்டிருந்தாலும் அடுத்த 2 அல்லது 3 மணி நேரத்தில் மறுபடியும் பசி ஏற்படும். மேலும் மாவுப்பொருட்களை உண்ணத் தூண்டும்.
மாவுச்சத்து அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன தீமைகள் உண்டாகும்?
1. நீரிழிவு நோய் இதனாலேயே வருகிறது. 2. குடல் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு காரணியாக அமைகிற்து. உதாரணம்: எருக்களிப்பும், ஏப்பமும், குடல் புண்ணும் இதனாலேயே வருகிறது. 3. உடல் பருமன் எப்படி என்று ஏற்கனவே மேலே விளக்கப்பட்டுள்ளது. 4. இதய நோய், இன்னும் பிற நோய்களுக்கு காரணியாகவோ, கிரியாவூக்கியாகவோ இருக்கிறது. 5. பல ஒவ்வாமை சம்பந்தப்பட்ட நோய்கள், Auto Immune நோய்கள், தைராய்டு போன்றவற்றில் இது பெரும்பங்கு வகிக்கிறது.
ஆக அரிசி, கோதுமை, கேழ்வரகு, ஓட்ஸ் என எல்லாமும் விடவேண்டும் என்றால் என்னதான் சாப்பிடுவது? அதிக புரதங்களையும், கொழுப்பு உணவுகளையும் உண்ண வேண்டும். என்னது? கொழுப்பு அதிகம் உண்ண வேண்டுமா? என்று நீங்கள் திகைப்பது தெரிகிறது.
நல்ல கொழுப்பு எவை? தேங்காய், நெய், வெண்ணெய், பன்னீர், முழுக்கொழுப்பு பால், தயிர், முட்டை (மஞ்சட்கருவுடன்), இறைச்சிகள் (மீன், சிக்கன், மட்டன், நண்டு) பாதாம், முந்திரி பருப்பு போன்றவைகள். இவைகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் ஏறி, மாரடைப்பு வரும் என்பதுதானே உங்கள் பயம். இல்லவே இல்லை. (தினசரி அசைவம் சாப்பிட்டால் மட்டுமே இந்த அளவை மீற முடியும்.) நிர்ணயிக்கப்பட்ட 25% ஐ நம்மால் தாண்ட முடிவதில்லை.
நிறைய நான்-வெஜ் சாப்பிட்டு குண்டாகி விட்டேன் கேள்விபட்டிருப்பீர்கள். அசைவம் எப்படி உண்கிறீர்கள்? ஒரு கையளவு என்று சோற்றை உள்ளே தள்ளி, பின்னர் சிறிது மாமிசத்தை உண்கீறீர்கள். ஒரு பிளேட் நான்-வெஜ்-ஐக் காலி செய்ய அரைக்கிலோ சோறு தேவைப்படுகிறது 200 கிராம் பன்னீருக்கு 4 அல்லது 5 சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள். உண்ட சோறும் சப்பாத்தியும் தான் எடையைக் கூட்டுகிறது. பாவம் செய்தது இந்த மாவுப்பொருட்கள். ஆனால் பழி விழுவதோ கொழுப்புமேல், அசைவம் சாப்பிடாத ஆனால் உடல்பருமனோடு உள்ளவர்களை நீங்கள் பார்த்ததில்லையா?
இப்பொழுது உங்கள் தட்டை திருப்பி வைக்கவும். 300 கிராம் சமைத்த பன்னீரை நடுவில் இடவும். அதைத்தான் உண்ண வேண்டும். அதை அப்படியே உண்ண முடியவில்லை என்றால் குழைத்து சாப்பிட சிறிதளவு சோற்றையோ, அரை சப்பாத்தியையோ எடுத்துக் கொள்ளலாம். புரதமும் கொழுப்பும் போதும் என்ற எண்ணத்தை விரைவாகவே உண்டாக்கும். உங்களால் அதிகமாக உண்ணவே முடியாது. முட்டை உண்ண வேண்டுமா?
2 முட்டைகளால் ஆம்லேட் செய்தோ, பொறியல் செய்தோ உண்ணலாம். அதை மட்டும், அதன்பின், மேலும் பசி இருக்கிறதா? ஒரு குவளை தயிர் எடுத்துக் கொள்ளலாம். அதாவது சைடு டிஷ் என்று கூறுவதையே மெயின் டிஷ் ஆக சாப்பிட வேண்டும். ஒரு உணவுப் பட்டியல் மாதிரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வேண்டியவாறு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
காலை : இரண்டு முட்டையும் (மஞ்சளுடன் சேர்த்து) பாலும். அல்லது முளை விட்டபயறு / அவித்த பருப்பு / பயறு, ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பு போன்றவை. இட்லியை விட முடியாதவர்கள் ஒன்றை மட்டும் போட்டுக்கொண்டு நிறைய நெய்யை அதன்மேல் ஊற்றி கொஞ்சம் பொடி தூவியோ, தேங்காய் சட்னியுடனோ உண்ணலாம். பழங்கள், தயிர் மட்டுமே கூட காலை உணவாக எடுக்கலாம்.
மதியம் கட்டாயமாக நிறைய காய்கறிகள், கீரை வகைகள் சேர்க்க வேண்டும். அவற்றை நிறையவும் சிறிதளவு சோற்றையும் உண்ணவும், கட்டித் தயிரோடு காய்கறிகளை உண்டு சோறை அறவே தவிர்க்க முடிந்தாலும் சரியே.
இரவு ஒரு கப் சுண்டல், காராமணி, மொச்சை, பட்டர் பீன்ஸ், காளான், பன்னீர், என்று ஏதாவது அல்லது எண்ணை கத்திரிக்காய், புடலங்காய் என ஏதாவது ஒன்று. அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, 200கிராம் கோழி, மீன், மட்டன் என்று ஏதாவது எடுக்கலாம் உடன் வெங்காயமோ தயிரோ சேர்க்கலாம். இதே உணவை மதியத்திற்கும் சாப்பிடலாம்.
காப்பி அல்லது டீ குடித்தால், சிறிதளவு இனிப்பு (சர்க்கரை வெல்லம், கருப்பபட்டி) சேர்க்கலாம், மாத்திரை வேண்டாம். நிறைய தண்ணீர் / இளநீர் / மோர் / எலுமிச்சை சாறு – நாள் முழுக்க குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள், இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்றவைகளை அன்றாடம் உண்ணும் உணவுப் பட்டியலிருந்து நீக்கி, என்றைக்காவது உண்ணும் பட்சணமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
இரவு உணவுக்கும், அடுத்தநாள் காலை உணவுக்கும் 12.00 மணி நேர இடைவெளி வேண்டும். ஆகையால் இரவு உணவை முடிந்த அளவு சீக்கிரம் எடுத்துக்கொள்வது நல்லது. ஏதேனும் சாப்பிடவேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் வெள்ளரி, கேரட், தேங்காய் துண்டுகள், தயிர், உலர்பழங்கள், பாதாம், முந்திரி, கடலை பட்டாணி, போன்றவைகள் எடுத்துக் கொள்ளலாம்.
பிஸ்கட், சிப்ஸ், போன்றவைகளை அறவே தவிர்க்க வேண்டும். இம்முறையில் கீரைகளையும், காய்களையும் உண்பது கட்டாயமாவதால் விட்டமின்களும், மற்ற தாதுப்பொருட்களும் நம் உடம்பிற்கு அதிகமாகவே கிடைக்கும்.
இம்மாதிரி செய்தால் மட்டுமே, ஒரு உணவு சரிவிகித உணவு (Balanced Diet) ஆக இருக்கும். இந்த முறையை பின்பற்றுவது கடினம் இல்லை. மாவுச்சத்துப் பொருட்களையே உண்டு. பழகியதால் முதலில் சில அசௌகரியங்கள் சிலபேருக்கு உண்டாகலாம். பின்னர், நம் உடம்பு பழகிக்கொள்ளும். உடம்பு ஒத்துழைத்தாலும் மனதை அடக்குவது தான் பெரும் பிரச்சனை. முழு மனதோடு முழுவதுமாகவும் பின்பற்றினால் தான் முழுப்பலன் கிடைக்கும்.
பேருக்கு முயற்சிசெய்துவிட்டு இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று விடுவர் அநேகர். ஒன்றிரண்டு மாதங்கள் இதைப் பின்பற்றியவர்கள் இதன் பலனைக் கண்டுவிட்டால் பின்னர் பழைய நிலைக்குத் திரும்புவதே இல்லை. சுய கட்டுப்பாடு வந்துவிடுகிறது. தேவையின்றி எதையும் உண்பதில்லை. ஏனென்றால் புரதமும் கொழுப்பும் உள்ள பொருட்கள் பசியை அடக்கும் குணம் கொண்டவை.
இந்த முறையில் உடல் எடை குறைந்து பயனடைந்தோர் ஏராளம். நிரிழிவு நோயாளிகள், இன்சுலின் ஊசியை நிறுத்தி இருக்கிறார்கள். மாத்திரை மட்டும் உண்டவர்கள் அதை அறவே துறந்தும் இருக்கிறீர்கள். உடலும், மனதும் சோர்வில்லாமல் இது வைத்துக் கொள்ளும் என்பதால் இந்தநாள் வரை எந்த உடற்பயிற்சியும் செய்யாதவர்கள் இப்பொழுது செய்யத் தொடங்குகிறார்கள். இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.
ரம்ஜான் நோன்புக்காக கூடுதல் செலவினம் எனக் கூட பாராமல் தாராள நிதி ஒதுக்கீடு!! இந்து கோவில்கள் என்றால் மட்டும் பாரபட்சம்! என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆளும் திமுக அரசு வருகின்ற முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜான் நோன்பிற்காக 8,700 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் 20 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக துவங்கப்பட்ட காலம் முதல் சிறுபான்மையினர் நலன் மீது அதீத அக்கறை செலுத்துவார்கள் என்பது எல்லோரும் அறிந்ததான். ஆண்டுதோறும் ரம்ஜான் நோன்பிற்காக பல்லாயிரக்கணக்கான மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அதைவிட அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இந்து கோவில்களின் பராமரிப்பு பணிகளுக்காக, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கோவில்களுக்கு அந்த நிதி இன்றுவரை ஒதுக்கப்பட்டதா என்றால் இதுவரை இல்லை.
பல தொன்மை வாய்ந்த பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை பழுதடைந்த நிலையிலேயே இருக்கிறது. இதையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை கண்டு கொள்வதில்லை.
பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துகின்றோம் என்ற பெயரில் அவசர கதியில் கோவில்களினுடைய பராமரிப்பு பணிகளும் முறையாக நடைபெறாமல் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படுகிறது.
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல்வேறு வகையான குளறுபடிகள் ஏற்பட்டது. அங்கே கட்டிட வேலையின் போது உயிரிழந்த இளைஞருக்கு கூட தமிழக அரசு நிதி உதவி செய்யவில்லை.
பிரபல தொழிலதிபர் சிவநாடார் அவர்கள் திருச்செந்தூர் திருக்கோவிலின் கட்டிடப் பணிக்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். இதையெல்லாம் வாங்கிக்கொண்டு ஏதோ திமுக தனது சொந்த பணத்தில் கும்பாபிஷேகம் நடத்தியதாக பெருமை பேசிக்கொள்கிறது.
கோவில் சிலைகள் ஒரு பக்கம் களவு போகின்றன. பல கோவில்களில் திருத்தேர்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.
பல கோவில்களின் கும்பாபிஷேகத்தின் போது பொது மக்கள் அனுமதிக்கப்படாமல் அரசியல் கட்சிபிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
கோவில்களின் உண்டியல் பணத்தை மட்டுமே பெரிதாக எடுத்துக் கொள்ளும் அறநிலையத்துறை. பக்தர்களின் வசதிக்காக எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை.
கடந்த வார தைப்பூச நிகழ்வில் கூட திருச்செந்தூர், பழனி போன்ற முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையெல்லாம் தாண்டி ஆகம விதிகளுக்கு எதிராக பிரேக்கிங் தரிசன கட்டண முறையை அறிமுகப்படுத்தவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பக்தர்களின் தொடர் எதிர்ப்பால் அந்தத் திட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடவுளை காட்சிப் பொருளாக்கி கட்டண தரிசன முறையில் மட்டும் கரிசனமாக நடந்து கொள்ளும் திமுக அரசுக்கு, இந்து கோவில்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
ஆனால் கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை புனரமைக்க முதலமைச்சர் அவர்கள் 20 கோடி ஒதுக்குகிறார். இந்த அரசு கிறிஸ்துவ சமுதாயத்திற்கு அரணாக நிற்கும் எனவும் பேசி வருகிறார்.
முஸ்லிம் சமுதாயத்திற்காக ஹஜ்யாத்திரை செல்லும் பயணிகளுக்கு அரசாங்க நிலத்தில் கட்டிடம் கட்டப்படுகிறது. இப்படியாக பெரும்பான்மை இந்து கோயில்களை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு சலுகை காட்டும் திமுகவின் போக்கு இந்துக்களை கோபமடையச் செய்திருக்கிறது.
17,000 இந்து கோவில்களில் ஒருவேளை பூஜை செய்யக் கூட வசதி இல்லை என தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்கிறது. ஆனால் இந்து கோவில்களின் மூலம் வரும் வருமானத்தைக் மட்டும் எடுத்துக்கொள்கிறது.
தற்பொழுது ரம்ஜான் நோன்பிற்காக வழங்கப்பட்ட நிதி என்பது முழுக்க முழுக்க தேர்தலை கவனத்தில் கொண்டு முஸ்லிம் ஓட்டுகளை பெறுவதற்கான தி.மு.கவின் திட்டமே என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
இந்து கோவில்கள் விஷயத்தில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர்.
கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள் கலாச்சாரம் என எது குறித்தும் அக்கறை இல்லாமல், வழக்கம்போல பொய்களை வாசித்துச் சென்றிருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?
திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில், மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று, வேண்டுமென்றே தவறான திட்ட அறிக்கையை வழங்கிவிட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் தமிழக நிதியமைச்சர், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? உண்மையாகவே மெட்ரோ திட்டம் வர வேண்டுமென்று அக்கறை திமுகவுக்கு இல்லை. அதனால்தான், நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், அவசர அவசரமாக பட்ஜெட் அறிக்கையை வாசித்ததைப் பார்த்தால், ‘அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம்’ என்ற நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது.
முதலமைச்சரின் தந்தை மறைந்த திரு கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்து, திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ₹1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை.
தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. இதில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்:
4 வழிச்சாலைகள், மேம்பாலங்கள் என தமிழ் நிலப்பரப்பு முன்னேறி வருகிறது.
திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நமது திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன; மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒரு புறம் இருக்கிறது.
நாட்டிலேயே முதன் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
மிகப்பெரும் அளவில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அதே நேரத்தில் சிறு, குறு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளோம்
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்
மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை இன்று தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில், இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது…
தமிழகத்தின் வளர்ச்சி முதல்வர் ஸ்டாலினால் வழி நடத்தப்படுகிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம். ஏஐ உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும். உணவு உற்பத்தியில் தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1 கோடியே 31 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் ரூ. 5 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட போது இந்த நாடே திரும்பிப் பார்த்தது.
தமிழர் பெருமையை பறை சாற்றும் வகையில் பல்வேறு அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ நா சபை அங்கீகரித்த மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. சோழர் அருங்காட்சியகம், நவாய் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழகம் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழகத்தில் பணிபுரிகின்றனர்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர்.
கப்பல் கட்டுமானம், கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழகம் கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதனால் கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்கும். தூத்துக்குடியில் ரூ.5,200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் கட்டப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.
நெல்லை, கோவை, திருச்சியில் ரூ.902 கோடியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழக செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும். தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது. திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பார்க் பூங்கா நிறுவப்பட்டும்.
துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:
1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு 2. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு 3. உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு 4. சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு 5. ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு 6. சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு 7. நகராட்சி நிர்வாகம் மற்றும் நலன் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கீடு 8. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு 9. தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு 10. நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு 11. மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22.090 கோடி ஒதுக்கீடு 12. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு 13. தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு 14. நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு 15. எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
முன்னதாக, மாபெரும் காது குத்தும் விழா என அதிமுக. அழைப்பிதழுடன் வந்தது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி ‘காது குத்தும் விழா‘ அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்தனர் அதிமுகவினர். பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசால் காது குத்தும் விழா நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி பத்தாம் நாள் 16.02.2026
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இன்று (16.06.2026) முதல் ஆட்டம் டெல்லியில் காலை 1100 மணிக்கு ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையேயும் இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மதியம் 0300 மணிக்கு, இங்கிலாந்து இத்தாலி அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் இலங்கையில், பல்லகலேயில் இரவு 0700 மணிக்கு ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயும் நடைபெற்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
பூவாதலையா வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாட வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் ஆலிஷான் ஷரஃபு (40 ரன்), சோயிப் கான் (68 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர்.
பிற மட்டையாளர்கள் ஜொலிக்கவில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டு இழப்பிற்கு 160 ரன் எடுத்தது.
இரண்டாவதாக விளையாடவந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சர்தான் (53 ரன்), டார்விஷ் ரசோதி (33 ரன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆட்டமிழக்காமல் 40 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 19.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றாது. இது ஆஃப்காணிஸ்தான் அணியின் முதல் வேற்றி.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஏற்கனவே ஒரு வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் அந்த அணி சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி (6 புள்ளிகள்) சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணி தடுமாறி வென்றது
கொல்கொத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் வில் ஜேக்ஸ் (53 ரன்) மட்டும் சிறப்பாக ஆடினார்.
பிற மட்டையாளர்களான பில் சால்ட் (28 ரன்), பெதேல் (23 ரன்), டாம் பேண்டன் (30 ரன்), சாம் கரன் (25 ரன்) ஆகியோர் நன்றாக ஆடினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 202 ரன் எடுத்தது.
இரண்டாவதாக விளையாடவந்த இத்தாலி அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் மோஸ்கா (43 ரன்) நல்ல தொடக்கம் தந்தார். பென் மனேண்டி (60 ரன்), கிராண்ட் ஸ்டுவர்ட் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
எனினும் ஜாமி ஓவர்டன் (3 விக்கட்) மற்றும் சாம் கரன் (3 விக்கட்) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் இரண்டாவது அப்செட் –
இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது
பூவாதலையா வென்ற இலங்கை அணிமுதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிட்சல் மார்ஷ் (27 பந்துகளில் 54 ரன்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (29 பந்துகளில் 56 ரன்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இவர்கள் ஆட்டமிழந்தபினர் காமரூன் கிரீன் (3 ரன்) மற்றும் டிம் டேவிட் (6 ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்துவிட்டனர்.
அதன் பின்னர் ஜோஷ் இங்கிலிஷ் (27 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (22 ரன்) இருவரும் நன்றாக ஆடினர். ஆனால் பிற மட்டையளர்கள் சரியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 181 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆட வந்த இலங்கை அணியின் தொடக்க வீரர் பதுன் நிசாங்கா (52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்) சதமடித்தார். அவருக்குத் துணையாக குசால் மெண்டிஸ் (38 பந்துகளில் 51 ரன்) மற்றும் பவன் ரத்னநாயகே (15 பந்துகளில் 28 ரன்) சிறப்பாக விளையாடியதால் இலங்கை அணி 18 ஓவர்களில் 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 184 ரன் அடித்து வெற்றி பெற்றது. பதுன் நிசாங்கா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் இலங்கை சூப்பர் 8க்குச் செல்வது உறுதியாகிவிட்டது. இந்த குரூப்பில் சூப்பர் 8 க்குச் செல்லும் மற்றொரு அணி ஜிம்பாபேயா ஆஸ்திரேலியாவா என்பதை வரப்போகின்ற ஆட்டங்கள் சொல்லும்.
நாளை (17.02.2026) முதல் ஆட்டம் சென்னையில் காலை 1100 மணிக்கு கனடா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் பல்லேகலேயில் மதியம் 0300 மணிக்கு அயர்லாந்து, ஜிம்பாபே அணிகளுக்கு இடையே நடைபெறும்.
மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான் கடே மைதானத்தில் நேபாளம், ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும்.