Home Blog Page 332

‘டிராவலர்ஸ் செக்’ பயன்பாட்டுக்கு வந்த இடம் எது தெரியுமா?!

travellers cheque - 2026

Traveller’s Cheque பயன்பாட்டிற்கு வந்த இடம் எது தெரியுமா?

Traveller’s Cheque பயன்பாட்டிற்கு வந்த இடம் எது தெரியுமா? அதென்ன ‘டிராவலர்ஸ் செக்’ என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்.

வேத காலத்தில் “நிஷ்கா”, “சதமானா”, “ஸ்வர்ணா” போன்ற நாணயங்கள் வழக்கில் இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. இவை குறிப்பிட்ட எடையுடைய விலை உயர்ந்த உலோகங்களாகவும் ஆபரண வடிவிலும் கூட இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். “சொர்ண புஷ்பம் சமர்ப்பயாமி”என்று வேதம் ஓதுகிற இடத்தில் பூஜை நடைபெறுகிற இடத்தில் நாம் கேட்டிருக்கிறோம். இறைவனுக்கு நாம் சாற்றும் தங்க ஆபரணம் ஆகும் இது!!

சங்ககாலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெள்ளி முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளனர். நாணயங்கள் தயாரிக்க செம்பு, ஈயம், வெள்ளி, தங்கம் உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்தி உள்ளார்கள்.

சேரர்கள் காசுகளில் வில் அம்பு,சோழர் காசுகளில் புலி, பாண்டியர்கள் காசுகளில் மீன் சின்னம், மலையமான் காசுகளில் குதிரை சின்னங்கள் பெரும்பாலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

சேரர், சோழர்,பாண்டியர் செப்புக் காசுகளில் யானை சின்னம் இடமாகவோ, வலமாகவோ, காசின் முகப்பிலும் அமைந்துள்ளது. யானை உருவத்திற்கு மேலாக மங்கலச் சின்னங்கள் ஸ்வஸ்திகம், கும்பம், மத்தளம், திருமறு போன்ற உருவங்களும் சிறு உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. குதிரை, காளை, சிங்கம், மீன், சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காசுகளின் எடை 500 மில்லிகிராம் முதல் 16 கிராம் எடை வரை பல்வேறு அளவுகளில் செப்புக் காசுகள் பழக்கத்தில் இருந்தன என்கிறார்கள் தொல்லியல் துறையினர்.

சங்ககால காசுகளில் யானை சின்னம் பொறிக்கப்பட்டதன் நோக்கமானது அரசர்களின் வலிமையையும் மேன்மையையும் காட்டுவதற்காக இருக்கலாம்.நாணயத்தில் சைவ சமய சின்னமான சிவனின் வாகனமாக கருதப்படும் காளை, நாணயங்களில் பொறிக்கப் பட்டிருக்கக்கூடும். காளை செல்வத்தின் அறிகுறி ஆகும் .

மலையமான் காசுகளில் முன்பக்கம் குதிரைச் சின்னமும், அதனுடன் அங்குசம், நந்திபாதச் சின்னம், பிறை, எருதுதலை, மேடையில் ஒரு தொட்டி போன்ற சின்னங்களில் ஒன்று அமைந்திருக்கும். அதன் பின் பக்கத்தில் மலை முகடுகளும், நதியும், நதியில் மீன்கள் நீந்துவது போன்ற உருவங்களும் பதிக்கப்பட்டிருக்கும் !!

முதன் முதலில் travellers cheque பயன்பாட்டிற்கு வந்த இடம் எது என்று தெரியுமா? எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்கா என்று தான் பதில் சொல்வோம். ஆனால் உண்மையில் Travellers Cheque அறிமுகம் ஆன இடம் தமிழகம் தான்.

அந்தக் காலத்தில் திருப்பனந்தாள் ஆதீனத்திடம் பொற்காசுகளைக் கொடுத்தால் பனை ஓலையில் பெற்றுக் கொண்டதற்கான விவரத்தை எழுதிக் கொடுப்பார்கள். இதை எடுத்துக் கொண்டு காசிக்குச் சென்றால் அங்குள்ள மடத்திடம் காண்பித்தால் அவர்கள் நமக்கு வேண்டிய எல்லா பொருட்களையும் தருவதோடு வசதிகளையும் செய்து தருவார்கள் என்று ஒரு கட்டுரையில் ரிசர்வ் வங்கியில் வேலை செய்த எழுத்தாளர் பருத்தியூர் சந்தான ராமன் பதிவு செய்திருக்கிறார். அப்படியானால் travellers cheque எனகிற concept பிறந்த இடம் தமிழகம் தானே?

“மனிதன் தனது தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை வாங்கவும், கொடுக்கவும் வேண்டியிருந்ததால் ஆரம்ப காலத்தில் பண்டமாற்று முறையைப் பயன்படுத்தினான். தங்களது பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களில் தேவைக்குப் போக மிஞ்சியதைப் பிறப் பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்காகப் பண்டமாற்று செய்தனர்.

இவ்வாறாகச் சில பகுதிகளில் சிறிது சிறிதாக நடைபெற்ற பண்டமாற்று மக்கள் பெருக்கம் காரணமாக வணிகப் பொருட்களுக்கு ஏற்பட்ட தேவையாலும் (demand) உபரி உற்பத்தியாலும் (Surpius production) பெருமளவில் நடைபெறத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக உப்புக்குப் பதிலாக அரிசியையும் நெய்யிற்கு மாற்றாக நெல்லினையும் பெற்றனர். நிலம், ஆபரணங்கள் போன்றவற்றைப் பரிமாற்றம் செய்யும் பொழுது சமமான மாற்றின்மையால் வணிக நடைமுறைகள் சிக்கலானது. இதனால் பொதுவானதொரு மாற்றுப் பொருளின் தேவையை உணரத் தொடங்கினர். எனவே தொடக்கக் காலங்களில் செல்வமாகக் கருதி வந்த “பசு”வை பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். அஸ்டாத்யாயி என்னும் நூலில்.“கோபுச்சம்”

(gobuchcham) என்ற ஒரு நாணய வகை குறிப்பிடப்படுகிறது. கோ என்பது மாடு என்றும் புச்சம் என்றால் வால் என்றும் பொருள்படும்” என்கிறார் ஒரு தொல்லியல் ஆய்வாளர்.

பெரிய புராணக் கதை ஒன்று இங்கே சிந்திக்க தக்கது……… கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருத்தலம்தான் அரிசில் கரைப்புத்தூர். அரிசலாற்றின் தென்கரையில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.அழகாபுத்தூர் என்றும் அழைப்பார்கள்.63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணை நாயனார் பிறந்த ஊர் .

புராணத்தின் படி, புகழ் துணை ஏழ்மையில் இருப்பவர். ஆனால் தீவிர சிவபக்தர், கோவிலின் மூலவருக்கு தினசரி அபிஷேகம் செய்வார். இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஆனாலும் புகழ் துணை அபிஷேகம் செய்யும் சேவையைத் தொடர்ந்தார். அவரது முதுமை மற்றும் ஏழ்மை காரணமாக, அவர் உடல்நிலை சரியில்லாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது மூலவரின் உருவத்தின் மீது விழுந்தார்.

மக்களை துன்பத்திலிருந்து விடுவிக்குமாறு சிவனிடம் கையெடுத்து கும்பிட்டு வேண்டினார். சிவன் அவரது பக்தியில் மகிழ்ந்து , ஒரு நாணயத்தை (தமிழில் படிக்காசு என்று அழைக்கப்படுகிறது) ஒவ்வொரு நாளும் வழங்கினார் என்று பெரிய புராணம் சொல்கிறது!!

திருவிளையாடல் புராணத்திலும் தருமி பாண்டிய மன்னனிடம் இருந்து பொற்காசுகளைப் பெற்ற விவரத்தையும் அறிய முடிகிறது. எனவே நாணயம் காசு என்கிற சிந்தனை பண்டைய காலம் தொட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்!

A Book a Week-8: Stolen Focus

0
stolan focus book - 2026

Title: Stolen Focus: Why You Can’t Pay Attention-and How to Think Deeply Again


By     Narasimhan Vijayaraghavan


In today’s world, FOCUS in all caps, is more important than ever to have it . We are constantly bombarded with distractions, from our phones and more to our social media feeds. Indistractability is a faculty that anyone would love to possess. But even while penning these words, one is taunted and tormented by the ‘zings and pings’ viz. notifications, all around you. How to remain indistracted? Let us focus on focus then.

Johann Hari is a British author, journalist, and writer born on January 21, 1979. He is best known for his thought-provoking works exploring various social and political issues. One of his most notable books is “Chasing the Scream: The First and Last Days of the War on Drugs,” published in 2015. In this book, Hari delves into the history and impact of the global war on drugs, offering a critical perspective on its consequences.

Read Also: A Book a Week -6

Moreover, Johann Hari has also written extensively about mental health and depression. His book “Lost Connections: Uncovering the Real Causes of Depression – and the Unexpected Solutions” was published in 2018, examining the societal factors contributing to depression and proposing alternative approaches to treatment.

Now to the amazing stories from his new book on our table.

The day multitasking almost cost me my life. Hari tells the story of how he was driving home one day when he was multitasking by fiddling with his iPod. He wasn’t paying attention to the road, and he almost crashed his car. This experience made him realize how important it is to focus on one thing at a time.

The vet who diagnoses dogs with ADHD. Hari meets a vet who diagnoses dogs with ADHD. The vet explains that dogs are just as susceptible to the effects of multitasking and attention-deficit as humans are. This story shows how widespread the problem of attention loss has become.

Read Also: A Book a Week- 7

The favela in Rio where everyone lost their attention. Hari visits a favela in Rio de Janeiro where everyone has lost their attention. The people in the favela are constantly bombarded with noise and stimulation, and they have become unable to focus on anything for very long. This story shows how the environment can have a profound impact on our ability to focus.

The office in New Zealand that discovered a remarkable technique to restore their workers’ attention. Hari visits an office in New Zealand where the workers have discovered a remarkable technique to restore their attention. The workers take regular breaks to go outside and walk in nature. This simple technique has helped them to focus more effectively and to be more productive.

The book is full of stories that will make you think about the importance of focus in our modern world.A few other amazing anecdotes from the book:The study that showed that students who took a break to daydream before a test did better than those who didn’t.The experiment that showed that people who were interrupted while working on a task were more likely to make mistakes.The story of the man who was so addicted to his phone that he had to have it surgically removed from his hand.

This  week’s book is-

Title: Stolen Focus: Why You Can’t Pay Attention-and How to Think Deeply Again
Author: Johann Hari
Genre: Self-help, nonfiction
Publication date: 2022

Stolen Focus is a book about the attention crisis. Hari argues that our ability to focus has been declining for decades, and that this decline is due to a number of factors, including the rise of technology, the decline of nature, and the increasing pace of life.

The book is divided into three parts. The first part explores the history of attention and how it has changed over time. The second part examines the factors that are contributing to the attention crisis. The third part offers solutions for how to reclaim our focus.

Hari’s writing is clear and engaging, and he does a good job of weaving together personal anecdotes, scientific research, and historical analysis. He also interviews a wide range of experts, including neuroscientists, psychologists, and technology executives.

Stolen Focus is an important book that raises some serious concerns about the future of our attention. Hari’s solutions are not always easy to implement, but they are worth considering if we want to reclaim our focus and live more meaningful lives.

If this 5 minute read could take place without loss of focus,  you may have it in you to become Indistractible!


(Writer of multiple books and practicing advocate in the Madras High Court)


டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு!

school kalam memories function - 2026

மதுரை: மதுரை எல்.கே.பி. நகர் பள்ளியில், அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார்.

ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்‌ . அப்துல் கலாம், படத்திற்கு மாலை அணிவித்து, வட்டார கல்வி அலுவலர் சிறப்புரை வழங்கினார்.

விழாவில், கலாம் பற்றிய பேச்சு, கட்டுரை, ஓவியம், பொன்மொழிகள், கவிதை முதலிய போட்டிகள் நடைபெற்றன. அய்பா சங்க நிர்வாகிகள் மற்றும் டாக்டர் மயூரி அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

தமிழக அரசின் பசுமைச் சாம்பியன் விருது பெற்ற சமூக ஆர்வலர் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

அசோக் குமார், மரங்களின் பெயர்களால் வரைந்த அப்துல் கலாம் உருவ படத்தினை வட்டார கல்வி அலுவலர் அவர்கள் வெளியிட, ஆசிரியர் ராஜ வடிவேல் பெற்றுக் கொண்டார்.
மாணவர் சேர்க்கையில், முனைப்பாக செயல்பட்ட ஆசிரியை அம்பிகா, கலை நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியை மனோன்மணி ஆகியோரை, வட்டார கல்வி அலுவலர்கள் அவர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார்.

ஆசிரியை அருவகம் தொகுத்து வழங்கினார். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை, தமிழ்ச்செல்வி, அகிலா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இங்கே தக்காளி விலை கிலோ ரூ.60 தானாம்!

tomato sales in dindukkal - 2026

திண்டுக்கல் மார்கெட்டில், தக்காளி கிலோ ரூ. 60 விற்பனை ஆகிறது.

திண்டுக்கல் காய்கறி சந்தையில், தக்காளி கிலோ ரூபாய் 60-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், தக்காளியை வாங்க சந்தையில், வாடிக்கையாளர் ஆர்வம் குறைந்து வருகிறது. திண்டுக்கல் சந்தையில் கிலோ ரூபாய் 60க்கு தக்காளி விற்கப்பட்டாலும் ஒரு நபருக்கு இரண்டு கிலோ மட்டும் வழங்கப்படுகிறது.

உச்சத்தில் தக்காளி விலை: இன்று மொத்த விலையில் ஒரு தக்காளி முதல் ரகம் 140க்கும், இரண்டாம் ரகம் 30க்கும், மூன்றாவது ரகம் 120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 160 வரை விற்கப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் மார்க்கெட் செல்ல முடியாததால் சில்லறை கடைகளில் அதிக விலை கொடுத்து, தக்காளி வாங்குகின்றனர். இதனால், ரேஷன் கடைகளில் அதிகளவில் விற்பனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு, தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நியாய விலைக் கடைகளில், கூடுதலாக தக்காளி அளவை அதிகப்படுத்தி விற்பனை செய்ய கோரிக்கை வலுத்து வருகிறதாம்.

வண்ணங்களில் எண்ணம் கரைத்தவர், காலத்தில் கரைந்த ஓவியர் மாருதி!

oviyar maruthi - 2026

சரியாக பத்து வருடங்களுக்கு முன் எழுதியது… ஓவியர் மாருதி குறித்து…!

அடிக்கடி நேரில் போய்ப் பார்த்து, கதை, கட்டுரைக்கு ஏற்றார்ப்போல் படம் வரைந்து வாங்கி வருவேன். தீவிர ராகவேந்திரர் பக்தர். இன்று குருவின் திருவடி அடைந்துள்ளார். அன்னாருக்கு நம் சிரத்தாஞ்சலி

ஓவியர் மாருதி ரசிகத் தன்மையுடன் கேட்டது இப்போதும் என் காதில் கேட்கிறது… “ஏன் ஸ்ரீராம் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல..?”

என் பதில்… “சார் நீங்க வரையற மாதிரியான அந்த அழகான முகத்தை தேடிக்கிட்டிருகேன்… இன்னும் கிடைக்கல…” — என்பதில் இருக்கிறது ரசிகர் மாருதியின் ஓவியத் தன்மை.


நான் 2013ல் பதிவு செய்தது…
**
கண்கள் – உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி.
அது அழகிய கவிதை!

கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!

ஆணோ, பெண்ணோ… ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்!

எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்…!

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாதஇதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு.

சிறுவயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுப் பூர்வமாகப் படித்ததாலோ என்னவோ… கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ… பெண்ணின் அழகு முகமோ… எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு… அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது… என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!?

அப்படி ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுவார் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும்.

மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்… ஏன் ஸ்ரீராம்… இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?

நான் சொன்னேன்… நீங்க படம் வரைவீங்களே… ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்… ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..!

இந்த பதிலில் இரண்டு வெளிப்படும். ஒன்று என் உளக்கிடக்கை. இரண்டு அவருக்கான பாராட்டு!
அவர் முறுவலிப்பார். ம்… நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன்.

இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம்.

இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் – அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே!

கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது!

கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது வேறு எங்கோ வெறித்துக் கொண்டோ பேசுபவரிடம் நான் பேச்சைத் தொடர்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்!
உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?!

அட… இப்போதுதான் புரிகிறது… கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்து விடுகிறார்கள் என்று! கண்களைத் திறந்து கொண்டு பேசினால் கேட்பவர் கண் திறந்துவிடுவாரே!

வல்லரசுப் பட்டியலில் 3வது இடத்தில் பாரதம்: பிரதமர் மோடி சூளுரை!

pm modi third time - 2026

வல்லரசுப் பட்டியலில் 3வது இடத்தில் பாரதம்: பிரதமர் மோடி சூளுரை!
देशवासियों को PM Modi की गारंटी, Third Term में दुनिया का Top Three Economy बनेगाा भारत

”தற்போது இருப்பதை விட வேகமான வளர்ச்சி விகிதத்துடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், 2,700 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ‘பாரத் மண்டபம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசியது…

நண்பர்களே, இன்று நமது அரசாங்கத்துடைய செயல்பாடுகளை, மேலும் கடந்த ஆட்சிக்காலச் செயல்பாடுகளின் விளைவுகளை, நாடுமுழுவதும் கவனித்துக் கொண்டிருக்கிறது.   

இன்று, தேசத்தின் நம்பிக்கை நன்கு உறுதிப்பட்டு விட்டது, அதாவது, பாரதத்தினுடைய வளர்ச்சிப் பயணம், தடைப்படப் போவது இல்லை.   உங்களுக்கு நினைவிருக்கிறதா, நம்முடைய முதல் ஐந்தாண்டுகள் தொடக்கத்தில், பாரதம், உலகப் பொருளாதார வரிசையில் 10ஆம் இடத்தில் இருந்தது.  எனக்கு நீங்கள்…. பணியளித்த போது, அப்போது நாம் 10ஆம் இடத்தில் இருந்தோம். 

இரண்டாவது ஆட்சிக்காலத்திலே பாரதம், உலகின் 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாகும்.  மேலும் இது கடந்தகாலச் சாதனைகளின் ஆதாரத்தின்படி, போகிற போக்கில் பேசுவது கிடையாது.  செயல்பாடுகளின் அடிப்படையிலே நான் கூறுகிறேன்.   நான் தேசத்திற்கு மேலும் ஒன்றை உறுதியளிக்க விரும்புகிறேன், அதாவது 3ஆவது ஆட்சிக்காலத்திலே, 3ஆவது ஆட்சிக்காலத்திலே, உலகத்தின், முதல் மூன்று பொருளாதாரங்களிலே, ஒரு பெயர் பாரதத்தினுடையதாக இருக்கும். 

அதாவது, 3ஆவது ஆட்சிக்காலத்திலே, முதல் மூன்று பொருளாதாரங்களிலே, பெருமிதத்தோடு, ஹிந்துஸ்தானம் நிமிர்ந்து நிற்கும் நண்பர்களே.  3ஆவது ஆட்சியிலே, தலைசிறந்த 3 பொருளாதாரங்களில் இடம் பெற்றே தீரும் பாரதம்.   

மேலும் இது, மோதியளிக்கும் காரண்டி ஆமாம்.   நான் நாட்டுமக்களுக்கு, மேலும் ஒரு நம்பிக்கையளிக்க விரும்புகிறேன்.   அதாவது 2024ற்குப் பிறகு, நம்முடைய மூன்றாவது ஆட்சியின் போது, தேசத்தின் வளர்ச்சிப் பயணம், மேலும் வேகமாக முன்னேறும். 

என்னுடைய மூன்றாவது பணிக்காலத்திலே, நீங்கள் உங்களுடைய கனவுகள், உங்கள் கண்களுக்கு முன்பாகவே மெய்ப்படுவதைக் காண்பீர்கள். 

Oppenheimer (2023): A Thought-Provoking Masterpiece by Christopher Nolan!

1
oppenheimer pic - 2026

A Thought-Provoking Masterpiece by Christopher Nolan

— By Janaki Balasubramanian

Director Christopher Nolan’s “Oppenheimer” (2023) is a remarkable cinematic achievement. It delves into the life and moral complexities of J. Robert Oppenheimer, the brilliant physicist. He is one of the key figures behind the development of the atomic bomb during World War II.

Plot and Storytelling

The film revolves around the life of J. Robert Oppenheimer, played skillfully by a captivating actor, Cillian Murphy. He brings depth and vulnerability to the character. Nolan’s non-linear narrative style is a hallmark of his directorial expertise. Nolan adds layers of intrigue and suspense to the film. The story fluidly shifts between pivotal moments in Oppenheimer’s life, from his academic days to the Manhattan Project. Further, focus on ethical dilemmas he faces as the destructive power of the atomic bomb becomes apparent.

Nolan skillfully balances historical accuracy with artistic liberty. He presents the audience with an immersive experience that challenges their preconceptions. It provides a fresh perspective on Oppenheimer’s life and decisions.

Cinematography, Visuals and Music

“Oppenheimer” is a visual spectacle that showcases Christopher Nolan’s signature aesthetic style. The film’s cinematography is breathtaking. The sweeping shots of the New Mexico desert and intimate close-ups bring out the emotional turmoil of the characters. The juxtaposition of the beauty of nature with the imminent destruction brought about by Oppenheimer’s scientific discoveries adds a poignant layer to the film.

Hans Zimmer’s evocative and powerful musical score complements and performances and the film’s emotional arc.

openh - 2026

Themes and Philosophy

As with many of Nolan’s films, “Oppenheimer” explores complex themes and moral dilemmas. The film prompts the audience to reflect on the consequences of scientific discoveries. The ethical implications of unleashing powerful technologies upon the world. Nolan doesn’t shy away from the human cost of Oppenheimer’s work. The film raises profound questions about the responsibility of scientists and the consequences of their actions on humanity.

In addition to the ethical aspects, “Oppenheimer” also delves into the personal struggles and sacrifices of the individuals involved in the Manhattan Project. The movie humanizes these historical figures beyond their roles in shaping world history.

Conclusion

“Oppenheimer” seamlessly weaves together history, science, and philosophy to create a thought-provoking narrative. This aspect challenges the audience’s perception of one of the most significant events in modern history. With its outstanding performances, breathtaking visuals, and resonant themes, “Oppenheimer” leaves a lasting impression. It establishes itself as a must-watch film in the pantheon of thought-provoking cinema.

அனைத்துப் பல்கலை.,க்கும் பொதுப் பாடத்திட்டம், கல்வித் தரத்தை சீர்குலைக்கும்!

hindumunnani - 2026

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அவசரகதியில் பொது பாடத்திட்டமா? கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்கள் கல்வித் தரத்தை குலைக்க திட்டமா? என்று, ந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தங்களது சித்தாந்தத்தையும், கொள்கையையும் மாணவர்களிடத்தில் திணிக்க முற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த முறை தரமே இல்லாத சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்து கல்வியை சீரழித்ததுபோல, இந்த முறை பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி அதே நிலையை உருவாக்க திமுக நினைக்கிறது. ஆசிரியர்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் பெற்றோர் மற்றும் தொழில் முனைவோர்களிடத்திலும் எந்த விதமான கருத்தையும் கேட்காமல் ஒரே ஆண்டில் 301 பாடத்திட்டங்களை தயாரித்து, அதை ஆசிரியர்களிடத்தில் கூட கலந்தாலோசிக்காமல் அமல்படுத்த அவசரம் காட்டுவது மாபெறும் தவறாகும்.

பாடத்திட்டத்தை போதிக்க சரியான பயிற்சி அளிக்காமலும், பாடப் புத்தகங்களை விநியோகிக்காமலும் தனியார் நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை மேற்கோள்காட்டி அதை வாங்கி மாணவர்களை படிக்க சொல்வது ஏன்?

அதேபோல இன்ஜினியரிங் படிப்பு அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. அதை திருத்தி ஒரே மாதிரியாக பாடத்திட்டம் கொடுக்கப்படும் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இத்தகைய அவசர கதியில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது கருணாநிதி நூற்றாண்டு விழாவிற்காக எனவும், சிலரை திருப்திப் படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் முயற்சிக்கிறார் எனவும் மக்கள், மாணவர்கள் கருதுகிறார்கள்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள் நலனிலா அக்கறை காட்டிவிடப் போகிறார்? என்றும் மக்கள் பேசுகிறார்கள்.

எனவே தமிழக அரசு கல்வித்துறையில் எதேச் அதிகாரப் போக்குடன் செயல்பட்டு மாணவர்களின் வாழ்க்கையை சிதைக்க வேண்டாம் எனவும் இந்த பொதுப்பாடத் திட்ட முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் (15): 2023 தகுதிச் சுற்று!

world cup cricket 2023 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 15 – 2023 தகுதிச் சுற்று

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் ஏழு இடங்களைப் பிடித்த (1) இங்கிலாந்து, (2) நியூசிலாந்து, (3) இந்தியா, (4) ஆஸ்திரேலியா, (5) பாகிஸ்தான், (6) ஆப்கானிஸ்தான், (7) வங்கதேசம், (8) தெனாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வாயின.

2019ஆம் ஆண்டு போட்டியில் கடைசி ஐந்து இடங்களைப் பிடித்த (1) அயர்லாந்து, (2) நெதர்லாந்து, (3) இலங்கை, (4) மேற்கு இந்தியத் தீவுகள், (5) ஜிம்பாபே ஆகிய அணிகளும் உலகின் பல்வேறு பகுதிகளில் தகுதிச் சுற்றில் விளையாடிய அணிகளில் வெற்றி பெற்ற அணிகளான (1) நேபாளம், (2) ஓமன், (3) ஸ்காட்லாந்து அணிகளும் நமீபியாவில் நடந்த மற்றுமொரு தகுதிச் சுற்றுப் போட்டியிலிருந்து (1) ஐக்கிய அரபு அமீரகம், (2) அமெரிக்கா ஆகிய நாடுகள் தகுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன. தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாபேயில் நடந்தன.

பத்து அணிகளும் குரூப் A மற்றும் குரூப் B என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் ஜிம்பாபே, நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றுள் ஜிம்பாபே, நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸுக்குத் தேர்வாயின.

குரூப் B பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸுக்குத் தேர்வாயின.

சூப்பர் சிக்ஸ் ஆட்டங்களும் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் ஆடப்பட்டன. இதில் இலங்கையும் நெதர்லாந்தும் 2023 உலகக் கோப்பையில் பங்கு பெறத் தேர்வாயின. 1975இலும் 1979இலும் உலகக் கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஐந்தாமிடம் பெற்றது அதிர்ச்சிக்குரிய செய்தியானது

நடைபயண கூட்டங்களில் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள்- அண்ணாமலை..

IMG 20230727 WA0100 - 2026

நடைபயண பொதுக்கூட்டங்களில் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள் நடைபயணத்தின் போது புள்ளி விபரங்கள் மத்திய அரசின் சாதனைகள் விளக்கப்படும். அமலாக்கத்துறை பற்றி குறை கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நாளை ராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்குகிறேன். இங்கு தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. இதையடுத்து நாளை மறுநாள் முதல் பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறேன்.

அதன்படி முதல் தொகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொள்கிறேன். அப்போது மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக்கூறுகிறேன். இந்த நடைபயணத்தின் போது புள்ளி விபரங்களுடன் மத்திய அரசின் சாதனைகள் விளக்கப்படும். தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.

வரும் நாட்களில் நடைபெறும் தொடர் நடைபயணத்தின்போது பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் நடைபயணத்திற்கு இடையே 10 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் அதிக பயனாளர்கள் என்ற அடிப்படையில் அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை பற்றி குறை கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று கூறுவது முதலமைச்சருக்கு அழகு கிடையாது. ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் எப்போதும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.