Home Blog Page 331

அமித்ஷா பதவிக்கு மாறாக பேசி வருகிறார் -முத்தரசன்..

IMG 20230729 WA0216 - 2026

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர் வகிக்கும் பதவிக்கு மாறாக பேசி வருகிறார் அமலாக்கத் துறையை வைத்து எதிர்க்கட்சிகளை அடக்கும் முறையில் அவர் பேச்சு உள்ளது.மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து வரிகின்ற செப்டம்பர் மாதம் 12.13.14. தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்ற மாநில செயலாளர் முத்தரசன் ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இராஜபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார் கூட்டத்தில் முன்னாள் எம்பி மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்ட செயலாளருமான லிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி .
ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .

கூட்டம் முடிந்த பின்பு மாநிலச் செயலாளரும் முத்தரசன் செய்தியாளர்கள் சந்தித்தபோது .

நேற்றைய முன் தினம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வகிக்கின்ற பொறுப்பிற்கு ஏற்றது போல் பேசாமல் மாறாக திமுக அரசை அச்சுறுத்தும் விதமாக பேசியிருக்கிறார் அண்ணாமலை தொடங்கி இருக்கின்ற யாத்திரை முடிவதற்குள் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வரும் என பேசி இருக்கிறார் அது எந்த விதமான மாற்றம் ஏற்படும் அமலாக்கத்துறை இயக்குனர் உடைய பதவி காலம் முடிந்த பின்பும் அதை நீடிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்துள்ளது அமலாக்க துறையை இயக்குனரை வைத்து மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைக்கின்றனர் நேர்வழியில் ஆட்சியில் அமர முடியாத பாஜக குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைக்கின்றார்கள் குறுக்கு வழி ஒருபோதும் வெற்றி பெறாது .மக்கள் அவர்களை நிராகரித்து அவருடைய எண்ணங்களை முறியடிப்பார்கள்.

பாதயாத்திரை என்றால் எங்கு தொடங்குகின்றார்
களோ எங்கு முடிக்கின்றார்களோ அதுவரை நடந்து செல்ல வேண்டும் ஆனால் குளிரூட்டப்பட்ட வாகன வசதியுடன் சென்று விளம்பரம் தேடும் முயற்சியில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளது

ஊழலைப் பற்றி பேசும் பாஜக அரசு திமுக அரசை மட்டும் பேசுகின்றனர் ஏன அதிமுக அரசை பற்றி பேசுவதில்லை குட்கா ஊழலின் டைரியும்கிடைத்தது அது சம்பந்தமாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை அது சம்பந்தமாக பாஜக எதுவும் பேசாதது ஏன்
எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த முயற்சியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்

மத்தியில் ஆளக்கூடிய ஒன்றிய அரசு தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக விலைவாசி உச்சத்தை எட்டி உள்ளது குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்கு ஒன்றிய அரசு துணை போகிறது அதை போல் அரிசி பருப்பு போன்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது ஆகையால் அதை கண்டித்தும் வருகினற செப்டம்பர்
12, 13 .14 .தேதிகளில் ஒரு லட்சம் பேர் திரட்டி ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார் .

மேலும் இம்சை அரசன் மோடியை ஆட்சியை விட்டு வெளியேறு என்கின்ற கோஷங்களை எழுப்பி மூன்று நாள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்

நெய்வேலி பிரச்சனையில் விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தும் போது அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இதற்கு முன்பாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பொழுது உரிய நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை ஆகையால் அதற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் தமிழக அரசு நெய்வேலி பிரச்சனை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை வைத்து அடக்கு முறையில் ஈடுபடுவது நல்லதல்ல வன்முறையும் அடக்கு முறையும் எந்த ஒரு போராட்டத்திற்கும் தீர்வாகாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்தார்

அதிமுக மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் ..

IMG 20230729 WA0223 - 2026

அதிமுக சார்பில் நடைபெற உள்ள மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் சிவகாசியில் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அதிமுக சார்பில் நடைபெறக்கூடிய முதல் மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அழைத்து வருவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் சிவகாசி உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது .

இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி தங்கமணி கே.பி முனுசாமி திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு கூட்டம் நடைபெறுவதற்கான காரணம் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம்போல் நகைச்சுவை உணர்வோடு பேச்சுக்களை தொடங்கினார் சாப்பாட்டிற்கு நேரம் ஆகிவிட்டதால் ஒருவர் மணியை பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒருவர் பின்பக்க கதவை திறந்து செல்கிறார் ஒருவர் இந்த கதவை திறந்து செல்கிறார் சண்டாள பாவிகளா பயலுகளா இப்படியாடா இருக்கீங்க என்று நகைச்சுவையோடு பேசி அரங்கத்தை மகிழ்வித்தார்.

53 ஆண்டுகளுக்கு முன்னர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்குதேர்தல் கமிஷன் தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது இன்று வரை தமிழகத்தில் அதிக முறை ஆண்ட பெருமை அதிமுகவுக்கு உண்டுஅதிமுகவுக்கு நிரந்தர பொதுச் செயலாளரை தெய்வம் தான் தந்துள்ளது ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆகியோர் ஜாதி அரசியல் செய்கிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

S.P. வேலுமணி பேசியதாவது.வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் யார் நன்றாக பேசுவார்கள் என்று எண்ணிய போது கே டி ராஜேந்திர பாலாஜி நன்றாக பேசுவார் என்று , சொல்லி அவர் பேசினார். நான் எத்தனையோ பேச்சைக் கேட்டு இருக்கிறேன்.அந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலினை பற்றி அவ்வளவு கடுமையாக பேசினார். உண்மையை பேசினார்.2. மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரா இருக்கும்போது என்னென்ன பண்ணாரு தெரியும். எடப்பாடி அற்புதமா ஆட்சி செஞ்சார்.பத்திரிகைகளை அடிமையா வச்சி எடப்பாடிக்கு எதிராக இருபதாயிரம் போராட்டங்களை நடத்தி ,ஆட்சியை என்னென்னமோ செஞ்சு இந்த ஆட்சியை கலைக்கணும்னு நினைச்சாரு.3. அதன் பின்பு கோயமுத்தூரில் என்னுடைய தொகுதியில் , கே டி ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினை பற்றி கடுமையாக பேசினார்.

அதற்காக தான் அவருக்கு வழக்கு.அது ஒன்னுமே இல்லாத வழக்கு. திமுக அமைச்சர்கள் இன்னைக்கு பார்த்த கோடி கோடியா கொள்ளை அடிக்கிறாங்க. அவரப் பிடிக்க எத்தனையோ தனிப்படையினர் அமைச்சாங்க . அவர் பேசுனது என்ன ஸ்டாலின் போய் குற்றாலத்தில குளிச்சிட்டு வந்தா அவரு முடியோட வர்றாரா எப்படி வராரு பார்போம் என்று இதுதான் அவர் பேசுனது. ஸ்டாலின் உண்மையான நிலையை அவர் இயல்பான வாழ்க்கையை பற்றி தான் பேசினார். கே டி ராஜேந்திர பாலாஜி கட்சிக்காக துணிச்சலாக பேசி பொய் வழக்குகளை பெற்றுள்ளார்.

ராமேஸ்வரம் வாங்க… உங்க பாவங்களைக் கழுவும் யாத்திரையை நடத்துங்க: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!

1719347 mk stalin - 2026

திமுக., இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது…

எனக்கு 70 வயது. ஆனால் நான் 20 வயது இளைஞர் போன்ற உணர்வில் நின்று கொண்டிருக்கிறேன். உங்களை பார்க்கும்போது புத்துணர்ச்சி பெறுகிறேன். உதயநிதிக்கு கிடைத்து இருக்கும் அமைச்சர் பதவி அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அவர் பாராளுமன்ற தேர்தலில் காட்டிய ஒற்றை செங்கலை எப்படி மறக்க முடியும்? இன்னும் அதை எண்ணி எதிர்க்கட்சிகள் புலம்புகின்றன.

நீட் தேர்வு, அதிமுக., ஆட்சியில் நடந்த முறைகேடுகள் உள்பட அநீதிக்கு எதிராக உதயநிதி தீவிரமாக போராடினார். கட்சிப் பணி, ஆட்சிப்பணி இரண்டையும் சிறப்பாக செய்து நல்ல பெயரை வாங்கி தருகிறார். இளைஞர் அணியினர் உதயநிதி போல் பணியாற்ற வேண்டும். நான் பிறந்த பயனை அடைந்து விட்டேன். இல்லந்தோறும் இளைஞர் அணி என்ற தீர்மானத்தை பாராட்டுகிறேன். மாணவர்கள், இளைஞர்களுக்கு நம்மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட மாடலை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் ஐஎண்டிஐஏ கூட்டணி. இந்தப் பெயரை கேட்டாலே பிரதமருக்கு பிடிக்கவில்லை. எங்கு சென்றாலும் திமுக.,வைப் பற்றித்தான் பேசுகிறார். இந்த ஆட்சி குடும்ப ஆட்சிதான். ஒன்றியத்தில் ஆள்வதால் வெல்ல முடியாத கட்சி போல் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

அமித்ஷா நேற்று வந்தாரே புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவா வந்தார்? ஏதோ பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாத யாத்திரை அல்ல. பாவ யாத்திரை. 2002-ல் குஜராத்தில் நடந்ததற்கும், இப்போது மணிப்பூரில் நடக்கும் சம்பவத்துக்கும் மன்னிப்பு கோரும் பாவ யாத்திரை… என்று அவர் பேசினார்.

ஸ்டாலின் பாவ யாத்திரை என்று பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எண்ணற்ற பாவங்களைச் செய்துள்ள திமுக.,வும் ஸ்டாலினும் ராமேஸ்வரம் வந்து பாவ மன்னிப்பு கேட்டு, யாத்திரை நடத்துங்கள் என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த #EnMannEnMakkal நடைபயணம், தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை, பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.

தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.

2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் திரு @mkstalin தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்கள், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 
K. அண்ணாமலை

சதுரகிரி மலையில் தொடரும் காட்டுத்தீபற்ற வைத்தவர் கைது..

IMG 20230729 WA0229 - 2026

சதுரகிரி மலையில் நேற்று முன் தினம் பற்றிய காட்டுத்தீ நேற்று இரண்டாம் நாளாக தொடர்ந்து எரிந்தது. அங்கு தீயை பற்ற வைத்த மலைவாழ் பழங்குடி இனத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சதுரகிரி மலையில் கடந்த ஜூலை 15-ம் தேதி காட்டுத்தீ பற்றியது. இதனால் அமாவாசை தரிசனத்திற்காக மலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அடிவாரம் வர முடியாமல் தவித்தனர். வனத்துறையினர் மூன்று நாட்களாக போராடி தீயை அணைத்தனர்.

இந்நிலையில் நேறறு முன் தினம் இரவு சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட 5 வது பீட் மறறும் ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக 6வது பீட்டிற்கும் பரவியது. வனச்சரகர்கள் செல்லமணி, பிரபாகரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரு குழுக்களாக பிரிந்து இரண்டு நாட்களாக போராடி நேற்று இரவு தீயை அணைத்தனர்.

ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ந்து இரு தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்தது வனத்துறையினருக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் மலையடிவாரமான தாணிப்பாறை ராம் நகர் பழங்குடியின மக்கள் குடியிருப்பை சேர்ந்த யானை கருப்பன் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில்,

மலைவாழ் மக்கள் மலையில் உள்ள மூலிகை மற்றும் தேன், நெல்லி, சாம்பிராணி போன்ற மகசூல் தரும் பொருட்களை சேகரிப்பதற்கு வனத்துறை தடைவிதித்ததாலும், மலைப்பாதையில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய அனுமதி நாட்களில் தற்காலிக கடை வைக்க அனுமதி மறுத்ததாலும், ஆடு மாடுகள் மேய்ப்பதற்கு வனப்பகுதிக்குள் செல்ல தடை விதித்ததாலும் ஆத்திரமடைந்து வனத்திற்கு தீ வைத்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.

பெற்ற மகள் பாலியல் வன்கொடுமை தாய், தந்தை கைது..

அருப்புக்கோட்டை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை உடந்தையாக இருந்த தாயை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAMILDHINNEWSLOGO copy - 2026

அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியரின் 14 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை அவரது தந்தை தனது மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கு முன் தனது மகளை படிப்பதற்காக திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் சேர்த்து விட்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

காப்பகத்தில் இருந்த அந்த சிறுமி தனது தந்தை தன்னிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதை காப்பக நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காப்பக நிர்வாகிகள் இது பற்றி விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் தெரிவித்து. அந்த சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் தாய் இருவரையும் கைது செய்தனர்.

பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி..

TAMILDHINNEWSLOGO copy - 2026

அருப்புக்கோட்டையில் தலையாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 9,50,000 பணம் வாங்கி மோசடி. மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை கலைஞர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குருசாமி என்பவர் மகன் ராஜ். இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே மணி டிரான்ஸ்பர் நிறுவனம் நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் தலையாரி வேலைக்கு தயாராகி வந்துள்ளார். இவர் வேலைக்கு தயாராகி வந்ததை அறிந்த அவருடன் பழகி வந்த சுந்தரகோபி என்பவர் தனக்கு தெரிந்த நரிக்குடியை சேர்ந்த அரசியல்வாதி விஜயலட்சுமி என்பவர் உள்ளதாகவும் அவரிடம் பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் எனவும் ராஜ் யிடம் கூறியுள்ளார். இதை நம்பிய ராஜ் தனக்கும் தன்னுடைய மனைவியின் சகோதரி கார்த்திகா என்பவருக்கும் வேலை வாங்குவதற்காக ரூ 9,50,000 பணத்தை விஜயலட்சுமி, சுந்தரகோபி மற்றும் சுந்தரகோபின் தந்தை முருகனிடம் வழங்கியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி தலையாரி வேலை வாங்கி தராததால் ராஜ் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப தராமல் மூன்று பேரும் ராஜ்-க்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீதிமன்றம் உத்தரவுப்படி நகர் குற்றப்பிரிவு போலீசார் சுந்தரகோபி, விஜயலட்சுமி, முருகன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை : ஒரு பார்வை!

national education policy - 2026

— கமலா முரளி —


மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட  புதிய தேசியக் கல்விக் கொள்கையை, மத்தியக் கல்வி அமைச்சகம் 29 ஜூலை 2020 அன்று வெளியிட்டது.

ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரைக்குமான விரிவான மற்றும் முழுமையான வரைவுத் திட்டத்தை உள்ளடக்கிய இக்கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள்  பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

சிறந்த வடிவமைப்பின் தூண்களான அனைவருக்குமான எளிதான வாய்ப்பு, தரம், மாணாக்கர்களுக்கு அதிக பொருட்செலவு இல்லாமை மற்றும் பொறுப்புணர்வோடு கூடிய திட்டமைப்பு ஆகிய அம்சங்களுடன் இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கை அமையப் பெற்றுள்ளது. நம் பாரதத்தை உலக அளவில் கவனத்தை ஈர்க்கக் கூடிய ‘உத்வேகமுள்ள அறிவுசார் சமூகமாக” மாற்ற இந்த புதிய கல்விக் கொள்கை ஒரு திறவுகோலாகும்.

ஆழ்ந்து சிந்தித்தல், புதுமையான சிந்தனை, கூட்டு முயற்சி, அறிதலில் ஆர்வம், தகவல் தொடர்பு ஆகிய 21வது நூற்றாண்டின் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளுதல், நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய கல்வி / பாடங்கள் அறிமுகம், பல பாடங்களை ஒருங்கிணைந்து ( Multi Disiciplinary ) கற்க வாய்ப்பு , முழுமையான வளர்ச்சி போன்ற உயரிய கற்றலின் கூறுகளை உள்ளடக்கியதாக ,ஒவ்வொரு மாணவனின் கல்விப் பாதையைச் சீர்பட அமைத்து, தங்கள் திறனைத் திறம்பட வளர்த்துக் கொள்ளும் விதத்தில் இப்புதிய திட்டம் வரையப்பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • உலகளாவிய அணுகுமுறையுடன், கல்வியைப் பொதுமயமாக்குதல்.
  • 2030ஆம் ஆண்டுக்குள் அரசின் கல்விக்குடைக்குள் அனைத்துக் குழந்தைகளும் இருப்பதற்கான ஆயத்த நடவடிக்கைக்களை மேற்கொள்ளுதல்.
  • ”இடைநிற்றல் ”  இல்லாமல், கல்வியைத் தொடர , திறன் சார்ந்த கல்வித்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
  • இளஞ்சிறார்களுக்கான கல்வியை நெறிப்படுத்தி, தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் கொணர்தல்.
  • பள்ளிக்கல்வி 5+3+3+4 முறையில் செயல்படுத்தப்படும்.
  • அடித்தள நிலை ( ஐந்து ஆண்டுகள் ) 3 ஆண்டுகள் அங்கன்வாடி மற்றும் பாலர் கல்வி மேலும் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு அடித்தள நிலையான ஐந்து வருடங்கள். மூன்று வயது முதல் எட்டு வயதிலான குழந்தைகளின் கல்வி. கற்றலில் ஆர்வம் ஏற்படும் வகையில்  செயல்பாட்டுடன் கூடிய வழிமுறை (ஆக்டிவிட்டி ), சுகாதாரம் மற்றும் அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு உறுதி செய்யப்படும்.
  • தயாரிப்பு நிலை:  (மூன்று ஆண்டுகள் ) 3 முதல் 5 வகுப்புகள். படிப்படியாக பேசுவது, வாசித்தல், எழுதுதல், உடற்கல்வி, மொழிகள், கலை, அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தப்படும்.இது எட்டு முதல் பதினொரு வயது உடையவர்களை உள்ளடக்கும்.
  • நடுத்தர நிலை: ( மூன்று ஆண்டுகள் ) 6 முதல் 8 வகுப்புகள். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகிய பாடங்களில் அடுத்த நிலை கோட்பாடுகள் சுருக்கமான  கருத்துக்களாக அறிமுகப் படுத்தப்படும். தொழில் மற்றும் திறன் சார்ந்த பாடங்கள் அறிமுகம்.பதினான்கு  வயது வரையிலான குழந்தைகளை உள்ளடக்கியது.
  • இரண்டாம் நிலை: 9 முதல் 12 வரையிலான வகுப்புகள்.
  • 9 மற்றும் 10 வகுப்புகள் ஒரு கட்டமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகள் இரண்டாம் கட்டமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான மற்றும் விமர்சன சிந்தனையுடன் இணைந்து பலதரப்பட்ட படிப்பை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. பாடங்களைத் ( தொழில் சார்ந்த பாடங்களும் )தேர்வு செய்வதற்கு பல விதமான விருப்ப வாய்ப்புகள் வழங்கப்படும்.
  • தொழில்/ வேலை மற்றும் திறன் சார்ந்த கல்வி வாய்ப்பு
  • மதிப்பெண்கள் என இல்லாமல், தொடர்ச்சியான மதிப்பீடுகள்
  • விளையாட்டு, கலை, இசை, உள்ளூர் திறன்கள் பயிற்சி
  • இந்திய மற்றும் மாநில பாரம்பரியம், வட்டார மற்றும் உள்ளூர் கலைகள் மற்றும் சிறப்புகளை அறிதல்
  • உயர் கல்வியிலும் புதுமையான கூறுகளைக் கொண்டுள்ளது புதிய கல்வித்திட்டம்.
  • மாணவர்கள் பல்வேறு நிலைகளிலும் தங்கள் கல்வியைத் தொடரக்கூடிய வாய்ப்பு, திறன் சார்ந்த, வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் போன்ற எண்ணற்ற வாய்ப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.

மொழிக்கொள்கை

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழித்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனை “மொழித்திணிப்பு- குறிப்பாக இந்தி / வடமொழி மொழித்திணிப்பாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், மொழிக்கொள்கை எந்தத் திணிப்பையும் உள்ளடக்கியது அல்ல. ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கள் தாய்மொழி அல்லது வட்டார மொழியில் (மீடியம்) பாடங்களைப் பயிலாம்.

இளம் பருவத்தில் மொழியினைக் கற்பது எளிது. எனவே, தாய்மொழி அல்லது வட்டார மொழி தவிர இந்திய மொழிகள் மற்றும் அந்நிய மொழிகள் பயில வாய்ப்பினை ஏற்படுத்துகிறது இந்த கல்வித் திட்டம்.

சமீபத்தில் மத்தியக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.ஸி) மாணவர்கள் தங்கள் தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.

சவால்கள்

இத்தகைய  உயரிய நோக்கங்களையும் அம்சங்களையும் உள்ளடக்கிய  கல்வித்திட்டத்தை அவ்வளவு எளிதாக வெற்றிகரமாக செயல்படுத்திவிட முடியமா? இதனைச் செயல்படுத்துவதில் பல சவால்களும் உள்ளன.

அரசியல் ரீதியான சவால்களும் பிரச்சினைகளும் ஒருபுறமிருக்க, இக்கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தி, செயல்படுத்த எத்துணை காரணிகளைப் பற்றியும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியுள்ளது ?

அதையும் படிப்படியாக நிறைவேற்றிவரும் மத்திய அரசைப் பாராட்டத்தான் வேண்டும்.

கல்விக்கூடத்தின் கட்டமைப்புகள், பாலர் கல்வி, திறன்சார் கல்வி, உயர்கல்விப் பாடங்கள், கலை விளையாட்டுக் கல்வி போன்ற அனைத்து புதிய அம்சங்களுக்கான பாடத்திட்டங்கள், கற்றலின் கோட்பாடுகள், மாணாக்கர் -ஆசிரியர் விகித ஏற்றத்தாழ்வு,ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பயிற்சி, தேர்வு முறை மாற்றங்கள் என   எந்த ஒரு கோணத்தை எடுத்துக் கொண்டாலும் , அதற்கான தகவல் பரிமாற்றங்கள், பயிற்சி பட்டறைகள் என இந்த மூன்று வருடத்தில் சிறப்பான முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லுகிறது புதிய கல்வித் திட்டத்தின் பயணம்.

புதிய கல்வித் திட்டத்தின் எல்லா அம்சங்களையும் ஏற்றுக் கொள்வதில் அரசியல் ரீதியான சவால்கள் இருந்தாலும், எல்லா மாநிலங்களும் , இதனை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து  கொண்டிருக்கின்றன. கர்நாடகா, மத்தியபிரதேஷ், உத்தரபிரதேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் சீக்கிரமே இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடும். சில வடகிழக்கு மாநிலங்கள் உயர் கல்வியில், (கல்லூரி) புதிய திட்ட முறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

மேனாள் இஸ்ரோ ( ISRO) தலைவர் திரு. கிருஷ்ண்ஸ்வாமி கஸ்துரிரங்கன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு சமர்ப்பித்த ஆவணம் , மத்திய அமைச்சரவையால் அறிமுகபடுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகள் மற்றும் கருத்தரங்க விவாதங்களுக்குப் பின்னரே, புதிய கல்விக்கொள்கை வெளியிடப்ப்ட்டுள்ளது.

கொரொனா தாக்கத்தால், இரண்டு ஆண்டுகள் பள்ளிகளில் செயல்படுத்துதல் சற்று தொய்வாக இருந்தாலும்,திட்டமிடல், கட்டமைப்பு பணிகள் , பாடத் திட்ட ஆய்வுகள், ஆசிரியர் தேர்வு மற்றும் பயிற்சி, கருத்தரங்குகள் ஆகியன தொடர்ந்தன.

இனி வரும் காலம், மாணவர்களுக்குப் பொற்காலமாக ஆகட்டுமே !

அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையைத் தொடங்கி வைத்து அமித் ஷா பேச்சு!

amitsha annamalai rameswaram - 2026

பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” என்ற கோஷத்துடன் 168 நாளில் 1,700 கி.மீ. தொலைவு பாதயாத்திரை தொடக்க விழா இன்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களான ஆர்.பி. உதயகுமார், ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள தில்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்ச்சர் அமித் ஷா ராமேஸ்வரம் வந்திருந்தார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை தொடக்க விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசினார்கள். அதிமுக., சார்பில் ஆர்.பி. உதயகுமார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தேவநாதன் யாதவ், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.

பின்னர் தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியபோது…

இந்த புண்ணியபூமியான ராமேஸ்வரத்திற்கு நாம் அனைவரும் ஆண்டவன் சாட்சியாக வந்துள்ளோம். காரணம் தமிழகத்தில் தி.மு.க, ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

2024 தேர்தலில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக அமர வேண்டும் என்பதும் என்பதும் நமக்கு தெரியும். இதற்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டுளளனர். மிக நீண்ட இரவு விலகுவது போன்று தோன்றுகிறது. பிரதமர் சாமானியர் இந்தியாவில் நடப்பது சாமானியனின் ஆட்சி. பிரதமர் மோடி இதயத்தால் தமிழர். அனைத்து நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பெருமிதத்துடன் பார்க்கின்றன. 2024ல் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வர நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்த யாத்திரை பாஜக.,வின் ஒவ்வொரு தொண்டனின் யாத்திரை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற உள்ள யாத்திரை. என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. பிரதமர் மோடியின் சாதனைகளை தமிழகத்தில் விளக்கவே இந்த யாத்திரை நடத்துகிறோம்.

மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை இந்த அளவிற்கு உயர்த்தி பிடித்ததில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் திருக்குறளை பிரபலப்படுத்த வில்லை. மோடியின் ஆட்சியில் அனைத்து குடும்பங்களும் பயன் அடைந்து உள்ளது. திட்டங்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் மோடி உள்ளார். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது. பயனடைந்த ஒவ்வொருவரின் முகவரின் தான் பிரதமரின் முகவரி .

மத்திய அரசின் சாதனைகளை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்திருக்கிறது. தமிழகத்திற்கு மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. எந்த ஆட்சியிலும் வராத பணம் இது. எந்த ஆட்சியிலும் வராத ஏராளமான திட்டங்கள் இங்கு வந்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை 9 ஆண்டுகளில் பிரதமரால் கிடைத்துள்ளது.

நம்முடைய கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். ஆனால் ஐஎண்டிஐஏ., என்ற பெயரில் ஒரு கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணியை வைத்துக்கொண்டு திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன் கிழமை கேசிஆர் பிரதமர், வியாழக்கிழமை தாக்கரே பிரதமர், வெள்ளிக்கிழமை இன்னொருவர் புதிதாக சேருபவர் பிரதமர். ராகுல் காந்தி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர். ஏனென்றால் அன்றுதான் விடுமுறை. சனி, ஞாயிறுக்கு பிரதமராக இருக்கக்கூடிய ராகுல் காந்தியை கொண்டு வந்து ஐஎண்டிஐஏ., என்கிறார்கள்.

இந்தியாவை தன்னுடைய மூச்சாக, தன்னுடைய டிஎன்ஏவாக, தன்னுடைய ரத்தமாக, தன்னுடை சதையாக, தன்னுடைய எலும்பாக வைத்துக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கும் நம்முடைய பிரதமர் மோடி மறுபடியும் ஐந்தாண்டுகள் பிரதமராக வரவேண்டும்.

இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும், தொண்டர்களும், நம்முடைய யாத்திரையாக கருத வேண்டும். இங்கு பேச மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். அவர் அதிக நேரம் பேச வேண்டும்… என்று அண்ணாமலை பேசினார்.

என் மண் என் மக்கள் யாத்திரை – என்பது முழு உலகிலும் தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், மாநிலத்தில் வாரிசு அரசியலையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலம் ஏழைகளின் நலனுக்கான ஒரு சகாப்தத்தை உருவாக்குவதற்கான யாத்திரை…- என்று அமித் ஷா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

அவர் இந்த யாத்திரை குறித்து தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது…

ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பாஜகவின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை கொடியசைத்து துவக்கி வைத்தேன். தமிழகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான பாஜக உறுதி பூண்டுள்ளது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலை வேரோடு அகற்றி, ஏழைகள் மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவான அரசை அமைப்பதன் மூலம் திமுக ஆட்சி, தமிழகத்தை தவறாக கொண்டு செல்வதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற முழக்கத்தை இந்த நடைபயணம் எழுப்பும். மாநிலத்தின் 39 நாடாளுமன்ற மற்றும் 234 சட்டமன்ற தொகுதிகளை ஒட்டிய இந்த யாத்திரை, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சமூக நீதியின் வழியில் செயல்படுவதை இது எதிரொலிக்கும். இந்தப் பாதயாத்திரைக்காக திரு @annamalai_k அவர்கள் மற்றும் @BJP4TamilNadu குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலையின் இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசிய போது…

இந்த விழா மேடையில் அமர்ந்துள்ள அனைத்து கூட்டணி தலைவர்களுக்கும் வணக்கம். தமிழில் பேச முடியாததற்கு என்னை மன்னிக்க வேண்டும். இந்த ராமேஸ்வரம் பூமியானனது இந்தியாவின் ஹிந்து மதத்தின் பாரம்பரிய சின்னம். ராமநாத சுவாமி ஆசியுடன் தமிழகம் முழுதும் என் மண், என் மக்கள் என யாத்திரையை அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணம் தமிழகத்தின் பெருமையை காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டு செல்லும்.

தமிழ் மொழியை உலகம் முழுதும் கொண்டு செல்லும் பயணம் இது. தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கை சீர்படுத்துவதற்கான நடைபயணம் இது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வரவே அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். 234 தொகுதிகளிலும் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். தமிழ்நாட்டை ஊழலில் இருந்து மீட்பதற்கான நடைபயணம் தான் என் மண், என் மக்கள் நடைபயணம்.

ஐ.நா.வில் தமிழின் பெருமை குறித்து பிரதமர் மோடி பேசினார். அதுமட்டுமல்ல தமிழின் சிறப்பை உலகமெங்கும் எடுத்துச் சென்றுள்ளார். காசி தமிழ்ச்சங்கம், செளராஷ்டிரா தமிழ்ச்சங்கமம் மூலம் தமிழ் பெருமையை வடக்கிலும் பரப்பியவர் பிரதமர் மோடி. மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை உயர்த்திப் பிடித்ததில்லை.

காங்கிரஸ், திமுக., ஆட்சியில் ரூ. 12,000 கோடி ஊழல் நடந்துள்ளது. இஸ்ரோ நிறுவனத்தில் ஊழல் செய்தது காங்கிரஸ் கூட்டணி. ஐஎன்டிஐஏ., கூட்டணியில் வாக்கு கேட்டுச் சென்றால் ஊழல் பற்றித் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும். துல்லிய தாக்குதலை காங்கிரஸ் கூட்டணி எதிர்த்தது. யுபிஏ., கூட்டணி அரசு தமிழ் மொழியின் பின்னடைவுக்கு காரணம்.

சோனியாவுக்கு ராகுலை பிரதமராக்க ஆசை. மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு தனது மருமனை முதல்வராக்க ஆசை. ஐஎண்டிஐஏ., கூட்டணியில் உள்ளவர்களுக்கு வாரிசுகளை முதல்வராக்க ஆசை. பிரதமர் மோடி மட்டுமே நாட்டுக்காக உழைக்கிறார். பல்வேறு திட்டங்களை அமல்படுத்துகிறார்.

தமிழக அரசு நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு. ஒவ்வொரு துறையிலும் திமுக., அரசு ஊழல் செய்து வருகிறது. ஊழலில் கைது செய்யப்பட்டவரை அமைச்சராக வைத்திருப்பது வெட்கக் கேடானது. முதல்வராக உள்ள ஸ்டாலின் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் ஊழல் செய்கிறது திமுக., அரசு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன நன்மை கிடைத்தது?!

செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யச் சொன்னால் அவர் ரகசியங்களைப் போட்டு உடைப்பார்! அவரை ராஜினாமா செய்யச் சொல்லாதது ஏன் ? தமிழக அமைச்சர்கள் செய்த ஊழல் அம்பலமாகியுள்ளது. அண்ணாமலை ஒரு டிவிட் போட்டால் தமிழக அரசில் பூகம்பம் ஏற்படுகிறது.

இலங்கையில் தமிழர்கள் ஒழிக்கப்பட்டதற்கு இதே கூட்டணி தான் காரணம். மத்திய அரசு தரும் நிதி மக்களுக்கு சென்று சேர்வதில்லை. தமிழ்நாட்டில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ தவிர்த்து பிற ரயில்வே திட்டங்களுக்காக ரூ.34 ஆயிரம் கோடி தந்துள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் 36 லட்சம் மக்ககளுக்கு நேரடி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிவறை திட்டத்தை பிரதமர் தந்துள்ளார். 15 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்- திமுக., என்றால் நிலக்கரி, 2ஜி ஊழல் தான் நினைவுக்கு வரும். பிரதமர் 9 ஆண்டு கால ஆட்சியில ஊழலுக்கு எதிராகவும், குடும்ப வாரிசு அரசியலுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க சர்ஜிக்கல் விமானப்படை தாக்குதலை பிரதமர் நடத்தினார். காங்கிரஸ் கூட்டணியினர் நாட்டை வளப்படுத்த நினைக்கவில்லை குடும்பத்தை வளர்க்கவே நினைக்கின்றார்கள்.

ஒன்பது ஆண்டு ஆட்சிக் கால திட்டங்களின் கணக்குகளைக் காட்ட நான் தயார் என்று பேசினார் அமித் ஷா.

இன்று ராமேஸ்வரம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு கலாம் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிவிட்டு, அவர் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்க்கிறார். பின், ராமேஸ்வரம் தனியார் ஓட்டலில் நடக்கும், ‘கலாம் நினைவுகள் ஒரு நாளும் மறையாது’ என்ற நுாலை வெளியிடுகிறார். நுால் வெளியீட்டு விழாவில் அண்ணாமலையும் பங்கேற்கிறார்.

கோயில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் தொடர்பில் இந்து முன்னணி கோரிக்கை!

kadeswara subramaniam hindu munnani - 2026

கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த மனிதாபிமானத்துடன் உத்தரவு இடுவதை பரிசீலிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

கோவில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்பட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ள மனு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் முதலாளித்துவ பாசிச மனநிலை பிரதிபலிக்கிறது.

வருமானம் குறைவாக உள்ள கோவில்களில் கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் கூட கொடுக்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை கூறுவது மனிதாபிமானமற்ற செயல்.

சட்டப்படி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரப்பட வேண்டும் என்பது தொழிலாளர் நல சட்டம் இதனை செயல்படுத்த மறுக்கும் நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அது தனியார் ஆனாலும் அரசின் கீழ் உள்ளதானாலும்.

இதுவே வருமானம் இல்லாத கோவில்களில் நியமிக்கப்படும் செயல் அலுவலர்களுக்கு சம்பளம் வழங்குவது இல்லையா?

மேலும் கோவில் நிலங்களுக்கான குத்தகை வீடு கடைகளுக்கான வாடகை முதலியவற்றை முறையாக வசூலிக்காமல் அதிகாரிகளாக உள்ளவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?

அதிக வருமானம் உள்ள கோவில்களின் வருமானம் ஆடம்பரத்திற்கும் அரசியல் செய்வதற்கும் வீணடிக்கப்படுகிறது. எங்கோ இருக்கும் அதிகாரியின் காருக்கு பெட்ரோல் கோவில் நிதியிலிருந்து செலவழிக்க படுகிறது. இவையெல்லாம் தடுக்கப்பட வேண்டும்.

எப்படி ஒருகால பூஜைகூட நடக்காத கோவிலுக்கு நிதி ஒதுக்கி முறையாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமோ, அதுபோல கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் போதிய வருமானம் தகுதி திறமை அனுபவம் முதலானவை கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். அதிலும் அரசின் தொழிலாளர் நல சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் தற்காலிக ஊழியர்களுக்கு கூட வழங்கப்பட வேண்டும்.

கோவில் நிதியில் சுயநலமாக, சொகுசாக வாழும் அரசியல்வாதிகளுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் கோவில் பணியை புண்ணிய காரியமாக செய்து வரும் திருப்பணி தொண்டர்கள் வயிற்றுப் பசி புரியுமா?..

எனவே நீதிமன்றம் இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு இடைக்கால நிவாரணமாக கோவில் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த மனிதாபிமானத்துடன் உத்தரவு இடுவதை பரிசீலிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

திருநாடு அலங்கரித்தார் ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர்!

sriperumbudur jeeyar - 2026

ஶ்ரீபெரும்புதூர் ஜீயர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர் தனது 100 வது வயதில் ( மாசி மாதம் க்ருத்திகை திருநட்சத்திரம்) இன்று திருநாடு அலங்கரித்தார்.

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என இன்றய ஶ்ரீவைணவர்கள் எல்லோரும் கூறும் ஶ்ரீவைணவ தாரக மந்திரத்தை முதன் முதலில் சொன்னவர், ஶ்ரீபெரும்புதூர் ஸ்ரீஅப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள்தான்!

இந்த வார்த்தையை ஸ்வாமி ஒரு ஒருமுறை ஶ்ரீவைணவ குழு ஒன்றுக்கு ஒரு பட்டிமன்ற தலைப்பாக தந்தார் அதுவே இன்று ஶ்ரீவைணவர்கள் அனைவரும் உச்சரிக்கும் வைணவ தாரக மந்திரமாயிற்று.

இவர், வைணவத்துக்கு தான் சன்யாச தீட்சை பெறும் முன்பிருந்தே என்னறிய கைங்கர்யங்களை செய்துள்ளார். ஸ்வாமி பூர்வாசிரமத்தில் குமாரவாடி சே. ராமாநுஜ ஆச்சாரியர் என்று அழைக்கப்பட்டார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு தீவிர தேசபக்தியை பரப்பியவர்.

அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். இண்டியன் எக்ஸ்பிரஸ், மற்றும் தினமணியில் பணி செய்தவர். தினமணியில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த போது, இவர் இதழ்கள் பிரிவில் பணி செய்துள்ளார். தினமணிக் கதிர், தினமணி சுடர் இவற்றின் பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸின் 60ஆம் ஆண்டு விழாவினை சென்னை மயிலாப்பூரில் ஏற்பாடு செய்ததோடு அதில் முதல்வர் காமராஜர், முத்துரங்க முதலியார், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் போன்ற தலைவர்களை அழைத்து விழா நடத்தியவர். அன்றைய காலகட்டத்திலேயே ஈவேராவின் திராவிடக் கழகம் செய்த பிராமண வகுப்பு துவேஷங்களை எதிர்த்த இந்திய தேசபக்தர். எம்.எஸ். சுப்பிரமண்ய ஐயர் தலைமையில் பல கூட்டங்களில் உரையாற்றி போராடியவர்.

தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு இந்துமத எதிர்ப்பாக மாறி நாத்திகம் தலையெடுத்த சமயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாடுகளில் பங்குகொண்டவர். இவரும் அக்கால சைவ சமய உபன்யாசகருமான ஶ்ரீகிருபானந்த வாரியாரும் சநாதன(இந்து) தர்மத்தின் சைவ – வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி பாண்டிசேரி அருகே கடலூரில் 1974ல் ஒரே மேடையில் தோன்றி நாங்கள் இரு குழல் துப்பாக்கி எங்களின் இலக்கு ஒன்றே என்று வீர முழக்கமிட்டு நாத்தீகர்களை வியக்க வைத்தனர்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் பலர் இன்றும் கையில் எடுத்து போராடும் வடகலை-தென்கலை காழ்ப்புணர்வுகளை முற்றிலும் நீக்க ஐக்கிய வைஷ்ணவ பிரசாரத்தில் லிப்கோ பதிப்பின் அதிபர் கிருஷ்ணசாமி சர்மா அவர்களுடன் 1974 இல் இணைந்து பாடுபட்டவர். ஸ்ரீபெரும்பூதூரில் 1974 இல் ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீமந் நாராயண ராமானுஜ ஜீயர் ஸ்வாமி நடத்திய ஸ்ரீராமாநுஜ க்ரது விழாவில் பங்குகொண்டு ஸ்வாமி தாம் எழுதிய பகவத் ராமானுஜர் என்ற நூலை வெளியிட்டு காஞ்சி மஹா வித்வானின் முன்னுரை பெற்று பாராட்டையும் பெற்றவர்.

இந்த ஸ்வாமி சுமார் முப்பத்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக திருமால் என்ற ஆன்மீக இதழை எவ்வித தொய்வும் இன்றி நடத்தி ஸ்ரீவைஷ்ணவ கொள்கைகளை மக்களிடம் பரப்பிவந்தார். ஶ்ரீவைணவப் பேரவை சார்பில் பாஷ்யம் செட்டியாரோடு சேர்ந்து ராமானுஜர் இயக்கத்தில் பங்கு கொண்டு சுமார் 630 கிராமங்களுக்கும் மேல் சென்று சொற்பொழிவு செய்து ஸ்ரீவைஷ்ணவத்தைப் பரப்பியவர்.

இவருக்கு திருநாவீறுடைய பிரான் என்று காஞ்சி ஸ்வாமியும், ஸார க்ராஹி என்று காரப்பங்காடு ஸ்வாமியும் பாராட்டி கௌரவித்து விருது அளித்துள்ளனர். பாரதி கலைக்கழகம் ஸ்வாமிக்கு செந்தமிழ் வேதியர் என்கிற விருதை அளித்துச் சிறப்பு செய்தது.

ஶ்ரீவைணவ மாமணி என்ற விருதை ஸ்வாமிக்கு கடுக்கலூர் திருமால் அடியார் அருள்நெறி மன்றம் வழங்கியுள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக ஸ்ரீவைஷ்ணவ ஸிம்ஹம் ஶ்ரீஸுதர்சனர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமியின் வைணவப்பணி சிறக்க வாழ்த்தி பெரிய மடலை எழுதியுள்ளார். ஶ்ரீவைஷ்ணவ ஸிம்ஹம் ஶ்ரீஸுதர்சனர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமியுடன் சேர்ந்து ஐக்கிய வைஷ்ணவ பிரசாரம் மூலம் தென்கலை வடகலை ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டார்.

சென்னைக் கம்பர் கழகம் ஸ்வாமிக்கு மர்ரே ராஜம் நினைவுப் பரிசை 1995 இல் வழங்கியுள்ளது. தமிழக ஸ்ரீ வைஷ்ணவப் பேரவை ஸ்வாமிக்கை திருவாய்மொழி சிந்தனைச் செல்வர் என்ற விருதை இவருக்கு வழங்கி கௌரவப்படுத்தியது. திருமால் அடியார் குழாம் என்ற அமைப்பை தொடங்கி அதைக் கொண்டாடும் விதமாக 15 விதமான வைணவத தலைப்புகளை ஏற்படுத்தி பல பெரியோர்களை சொற்பொழிவாற்ற செய்த போது அதில் ஒரு தலைப்பாக தான் இன்று ஸ்ரீ வைஷ்ணவ உலகம் போற்றும் உய்யஒரேவழி உடையவர்திருவடி என்னும் தாரக மந்திரம்.

இவரது சிந்தனையில் உதித்த ஶ்ரீவைணவ பட்டிமன்ற தலைப்பானது இன்று ஒவ்வொரு ஶ்ரீவைணவர்களும் தினமும் உச்சரிக்கும் ஒரு தாரக மந்திரம் என்றால் அது மிகையே இல்லை. திரைத்துறையில் கூட ஸ்வாமியின் பங்குண்டு. உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜி.வி. ஐயருடன் சேர்ந்து அப்போது பிரிசித்தி பெற்ற இராமானுஜர் என்ற திரைப்படத்திற்கு கதை வசனம் எழுத உதவியதோடு ஸ்வாமி அந்த இராமானுஜர் திரைபடத்தில் திருக்கோட்டியூர் நம்பியாகவும் நடித்துள்ளார்.