இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற ஒன்று இருந்தே தீருகிறது. அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை. உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன.நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது.
சரிந்து போன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்கு காமமே முதல் காரணமாக இருக்கிறது. தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்களில் பலர், தம்மை மறந்த நிலையில் பிடிபட்டதற்கும் காமமே காரணமாக இருக்கிறது.சராசரி மனித வாழ்வில் பசி,காமம் இரண்டும் தவிர்க்க முடியாதவை..கட்டுப்பாடாக அதைத் தவிர்த்தவர்களுக்குப் பெயரே ஞானிகள்.
உடல் வற்றிப்போய் காய்ந்த எலும்புக்கூடக் கிடைக்காமல் ,பசியோடு அலையும் ஆண் நாய்,ஒன்று ஒரு பெண் நாயைக் கண்டவுடன் பசியையும் மறந்து காம உணர்வு கொள்வதாக ஒரு பாடல் உண்டு.வடமொழியில் ”காமம்” என்ற வார்த்தைக்கு ”பாலுணர்ச்சி” என்பது மட்டுமல்லாமல் வேறு பல பொருள்களும் உண்டு.
ஆனால் பாலுணர்ச்சியைமையமாகக்கொண்டு இந்த மதத் தத்துவங்களை ஆராயப்புகுந்தால் காமத்தை தவிர்ப்பதற்கு அது சொல்லும் வழிகள் ஏராளம்.முதலில் ,சந்நியாசிகளில் ஒரு வகையினர் நிர்வாணமாக இருப்பதே,இந்த உணர்ச்சியைத் தவிர்க்கத்தான்.
பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு தோற்றத்தை தான் பெற்றிருந்தால், பெண்களுக்குத் தன் மீது ஆசை வராது, என்பதே அந்த நிர்வாணத்தின் நோக்கம்…ஆடை,அலங்காரங்களினால் மூடப்பட்ட உடம்பு சுருதியைத்தூண்டிவிடுகிறது. அழகாக அலங்கரிக்கப்பட்ட சிகையும் ஷவரம் செய்யப்பட்ட முகமும், பெண்களின் உணர்ச்சித் தந்தியை மீட்டி விடுகின்றன.
ஆகவே அலங்கோலமான உருவத்தைச் செயற்கையாக தேடிக் கொள்வதே ஜடாமுடி தரிப்பதன் நோக்கம்.அவர்கள் வெறும் கோவணத்தோடு இருப்பதற்கும் காரணம் அது தான்.சகல உணர்வுகளையும் ,உறவுகளையும், துறந்து விட்ட நிலைக்கு”நிர்வாணம்“ என்பது பெயர்.
அந்த மகா நிர்வாணத்தை,இந்து தத்துவங்களில் இருந்தே பௌத்தம் எடுத்துக்கொண்டது.இந்து மதமே உலகின் ஆதி மதம்.சந்நியாசம்” ”துறவு” என்பவை அது உண்டாக்கியவையே.அந்தத் துறவு நிலையை உடையவர்களே உலகத்திற்கு உபதேசிக்க முடியும் என்பதால்…பின்னால் தோன்றிய ஒவ்வொரு மதமும் அதனை மேற்கொண்டன.
உணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருள்களையும் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்களையும் விலக்கி , கடுங்குளிரிலும் கூட குளிர்ந்த நீரிலே நீராடி, காம உணர்வை அகற்றினர் இந்து ஞானிகள். ஆண் பெண் உறுப்புக்களுக்கு அவர்கள் ”ஜனனேந்திரியங்கள்” என்று பெயர் கொடுத்தார்கள்.
சில உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுப்பதற்காக மட்டுமே இந்த அங்கங்கள் படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.அதில் ஏற்படுகின்ற சுகத்தை ”அற்ப சுகம்” என்றார்கள்.தமிழுங்கூட அதைச் ”சிற்றின்பம்” என்றே அழைத்தது.
மனைவி என்பவள் தன் கணவனின் காமச்சூட்டைத் தணிப்பதற்காக வரும் வெறும் கருவியல்ல.அதற்கு மேற்பட்ட சமூக சம்பிரதாயங்களே அவளுக்கு அதிகம். ஆணைவிடப் பெண்ணுக்கு ஐந்து மடங்கு அதிகமான உணர்ச்சி உண்டு. ஆனால் பத்து மடங்கு அடக்கம் உண்டு. இது இயற்கையாக அவளுக்கு வந்ததல்ல.
இந்து மதம் காலங்காலங்களாகப் பெண்ணை அப்படிப் புடம் போட்டு எடுத்தது.இழிந்த குலப்பெண்கள்,இதன் மறுஎல்லைக்குப் போவதுண்டு.இந்த இருவகைப் பெண்டிரில், முதல் வகையினர் நூற்றுக்குத்தொண்ணூறு பேராவர்.இரண்டாம் வகையினர் விதிவிலக்கில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.
ஒரு குலமகளுக்குப் பள்ளியறையும்,காம உணர்ச்சியும் ஒரு குழந்தைக்குத் தாயாகிற தொழிலுணர்ச்சியே தவிர,சுகம் முதல் காரணமாகாது. சுகமும் அதிலே ஒன்று” என்பதைத் தவிர அதற்குஒரு தனி முக்கியத்துவத்தை அவர்கள்கொடுப்பதில்லை. காரணம் இந்து மதம் அவர்களை அப்படி வளர்த்திருக்கிறது.
கணவனிடம் அத்தகைய சுகம் கிடைக்காவிட்டாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதிலேயே அதைப்பெற்று விடுகிறாள் ஒரு இந்துப்பெண்.காமத்தின் மின்சாரத் தாக்குதல் ,நற்குடிப் பிறந்த இந்துப் பெண்களிடம் பலிப்பதில்லை. ஆனால் ஆடவர்களது நிலை வேறு. அவர்களது ரத்த அரிப்பு, அந்த எல்லைக்கும் அவர்களைத் தூண்டுகிறது.
லௌகிக மனிதனுக்கு இந்த ராட்சத அரிப்பு ஏற்படும் போது, குலப்பெண்களைக் கெடுக்காமல், அவன் அந்த உணர்ச்சிகளைத் தணித்துக்கொள்வதற்காகவே ”தேவதாசி” முறை ஏற்பட்டது.முடிந்தவர்களுக்கு ஏக பத்தினி விரதத்தையும், முடியாதவர்களுக்கு இந்த வகை வாழ்க்கையையும் அது அனுமதித்தது.
ஒரே இதிகாசத்தில் ஒரே அரண்மனையில் இந்த இருவகைக் காட்சிகளையும் அது காட்டிற்று.தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர்” என்றது.அவன் மகன் ராமன் ஏகபத்தினி விரதன் என்றது.அது தசரதன் செயலைக்குற்றம் சாட்டவில்லை.ஆனால் ராமனின் நடத்தையைப் புகழ்ந்துரைத்தது. பல மாதர் உறவுக்கு அது நியாயம் கற்பிக்கவில்லை.ஆனால் அனுமதித்தது.
அதே சமயம் ஒருதார வாழ்க்கையை உயர்ந்த இடத்தில் வைத்துப்போற்றிற்று.அதைத் தெய்வீகம் என்றது.மனித மனத்தின் சபலங்களை அங்கீகரித்து அதைத்தட்டிக்கொடுத்து, மெது மெதுவாக மீட்பதே அது செய்யும் பணி.எந்த உணர்ச்சியையும் அது அறுவைச் சிகிச்சை மூலம் தீர்க்க விரும்பவில்லை.
அங்கீகரித்துத் திருத்தும் நாகரிகத்தைக் கையாண்டது.நீ பன்றியைக் கூடச் சாப்பிடலாம். ஆனால் உடலில் கொழுப்பேறிவிடும், பார்த்துச் சாப்பிடு என்று சொன்னதே தவிர, கட்டளையிடவில்லை.எண்ணெய் ஸ்நானம் செய்த அன்று மனைவியோடு உறவு கொண்டால், சிலருக்கு ஜன்னி காணும். அந்த உடற்கூறு உண்மையைக்கூட அது நாகரிகமாக ”தரித்திரம் பிறக்கும்” என்று சொன்னதே தவிர,ஜன்னி காணும் ”என்று பயமுறுத்தவில்லை.
அது காமத்தை ஒரு வகைக் குற்றமாகக் கருதவில்லை.ஆனால் குற்றங்களுக்குக் காரணமான காமத்தை அது கதைகளிலே விவரிக்கிறது.இளம் விதவைகள் வேதம் படிக்கிறார்கள். புராணம் படிக்கிறார்கள், இதிகாசம் படிக்கிறார்கள், உணர்ச்சியடங்கி விடுகிறதே? எப்படி?அவர்களே நமது வாரப் பத்திகைகளையும் மாதப்பத்திரிகைகளையும் தொடர்ந்து படித்தால் என்னவாகும்?
சராசரி மனிதனின், தவிர்க்க முடியாத உணர்ச்சியாகிய காமத்தை, இந்து மதம் எவ்வளவு வைதிகமாகக் கையாளுகிறது. காமம் எப்போது பாவமாகிறது” என்பதை அது எவ்வளவு அற்புதமாக விவரிக்கிறது.இந்து சாஸ்திரங்களில் ஓரிடத்தில் ”உடலுக்கு ஏற்ற உறவு எது? என்பது கூடக் கூறப்பட்டிருக்கிறது. தன்னைவிடப்பத்து வயதுக்கு மேல் அதிகமான ஒரு பெண்ணுடன் ஒருவன் உறவு கொண்டால் அவன் உடம்பு மெலிந்து முகம் களையிழந்து போகிறதது.
வயது குறைந்த பெண்ணோடு தொடர்பு கொண்டால் முகம் பிரகாசமடைகிறது. ஒரு மத சாஸ்திரம் இதை ஏன் விவரிக்க வேண்டும்?ஒன்று-ஒரு ஆரோக்கியமான உடம்புக்குப்பொறுப்பேற்றுக்கொள்வது., இரண்டு- பத்து வயது அதிகமான பெண் குறைந்த வயதுடைய ஆணுடன் தொடர்பு கொள்ள வருகிறாள் என்றால், ஒன்று அவள் கெட்ட நடத்தையுடையவளாக இருக்க வேண்டும். அல்லது இன்னொருவன் மனைவியாக இருக்க வேண்டும்., அதைத் தடுப்பது.
அப்படியென்றால் குறைந்த வயதுடைய பெண்ணோடு தொடர்பு கொள்வதைச் சிலாகித்துப்பேசுவது கற்பழிப்பதற்கு வகை செய்யாதா?இல்லை, அதனால் தான் அது பல தர மணத்தை ஏற்றுக்கொண்டது.நீ எதை விரும்பினாலும்,அதற்கொரு அளவை நிர்ணயித்து, அதை அனுமதித்துப் பின் உன்னை ஞானியாக்குவதே இந்துமதம். காம உணர்ச்சியிலும் அதன் கட்டம் அத்தகையது தான்.
எப்போது காம உணர்ச்சி பாவமாகிறதோ அப்போது தண்டனை கடுமையாகிறது. இந்து மதத்தின் பயமுறுத்தல் என்பது, அங்கே மட்டும் தான் வருகிறது.யாரையும் கெடுக்காத யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு ஆடவனின் உணர்ச்சிகளை, இந்து மதம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது என அர்த்தமுள்ள இந்துமதத்தில் கவியரசு கண்ணதாசன் கூறியுள்ளார்.
விருதுநகரில் தனியார் கல்லூரியில் உள்ள நீச்சல்குளத்தில் இன்று மூழ்கி 9ம் வகுப்பு பயிலும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் – தங்கமீனா தம்பதியினர் இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இன்று விடுமுறைநாள் என்பதால் இவர்ளின் 9ம் வகுப்பு பயிலும் அருண்குமார் என்ற மாணவர் இன்று தனியார் கல்லூரியில் உள்ள நீச்சல்குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்பொழுது அருண்குமார் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கியுள்ளான். இதனால் அந்த சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு.சென்றதாகவும் அங்கு முடியாத காரணத்தால் சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த மாணவன் இறப்பிற்கு காரணம் கல்லூரி நிர்வாகத்தின் மெத்தனப்போக்க காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர்
திருநெல்வேலி -சென்னை -திருநெல்வேலி வந்தே பாரத் மதுரை திருச்சி ஸ்டேஷனை விட்டால் எங்கேயும் நிற்காது என வெளியான புது தகவல் பலரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து சென்னை , சென்னை -திருநெல்வேலி க்கு ஆகஸ்ட்டு மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்ற தகவலை ரயில்வே வெளியிட்டுள்ளது.
பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை வந்தே பாரத் ரயில்கள் பெற்று வருகின்றன. முற்றிலும் மாறுபட்ட வெளித்தோற்றம் மற்றும் பல்வேறு வசதிகள் வந்தே பாரத் ரயிலில் இருப்பதால் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் சாய்வு இருக்கைகள், அகலமான ஜன்னல்கள், முழுவதும் ஏசி, தானியங்கி கதவுகள், வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என இப்படி பல வசதிகள் வந்தே பாரத் ரயிலில் உள்ளது.
சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பயணிகளுக்கு விமானத்தில் உள்ள வசதிகளுக்கு நிகரான வசதிகள் கொடுக்கப்படுவதால் இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில் முதல் முறையாக கடந்த 2019 – ஆம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது வரை நாடு முழுவதிலும் மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருக்கை வசதிகள் எப்படி: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் வழியாக மைசூரு வரை ஒரு வந்தே பாரத் ரயிலும், சென்னை – கோயம்புத்தூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும் என தமிழகத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பயணிகள் போக்குவரத்து அதிகம் நிறைந்த தென் மாவட்ட வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது.
எந்த ரயில் நிலையங்களில் நிற்கும்: முதல்வர் மு.க ஸ்டாலின் கூட பிரதமரிடம் நேரடியாகவே இந்த கோரிக்கையை வைத்து இருந்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிடப்பட்டது. அதுவும் அடுத்த மாத தொடக்கத்தில் இந்த ரயிலை இயக்குவதற்கான பணிகள் நடந்து வந்தது. முற்றிலும் இருக்கை வசதிகள் மட்டுமே கொண்ட ரயிலாக சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
ஆரம்பத்தில் 8 பெட்டிகளை கொண்டதாகவே இந்த ரயில் இயக்கப்படும் என்றும் பயணிகளின் பயன்பாட்டை பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற தகவலை ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ஆகஸ்டு மாத இறுதியில்: முதலில் சென்னை நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலை நவம்பர் மாதத்தில் தான் இயக்க திட்டமிட்டோம். ஆனால் தண்டவாள மேம்பாட்டு பணிகள் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடியும் தருவாயில் உள்ளது. எனவே வரும் ஆகஸ்டு மாத இறுதியில் சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பயண நேரத்தை விட இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பயணிக்கும் போது 2 மணி நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
அதாவது 8 மணி நேரத்தில் சென்னை – நெல்லை ரயில் வந்தடையும். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரயில் நிலையங்களில் மட்டுமே ரயில் நிற்கும். இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் மட்டுமே வரும் ஆகஸ்டு மாத இறுதியில் இயக்கப்பட உள்ளது. 8 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.
சிறப்பம்சங்கள்: எனவே பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை நெல்லை இயக்கப்படும் இந்த ரயிலில் ஒரு பெட்டி முழுவதுமாக விஐபிகளுக்காக ஒதுக்கப்பட உள்ளது. பிற பெட்டிகளில் ஒரு பக்கம் 3 சீட்களும் மற்றொரு பக்கம் 2 சீட்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் அதிகபட்சமாக 552 பயணிகள் வரை பயணிக்கலாம்.
கட்டணத்தை பொறுத்தவரை விஐபி கோச்சில் பயணம் செய்ய 2,800 முதல் 3 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. பிற பெட்டிகளில் ரூ. 1,200 முதல் 1,300 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தெரிகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது.
பயண நேரம்: நெல்லையில் இருந்து காலை 6 மணி அளவில் புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 முதல் 2.30 மணிக்குள் சென்னை வந்து சேரும் என்றும் சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் நெல்லைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக 10 மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் வந்தே பாரத்தில் பயணித்தால் 2 மணி முதல் இரண்டரை மணி நேரம் வரை பயணிகளுக்கு மிச்சம் ஆகும் எனத்தெரிகிறது.
ஜூலை 29, 2023 காலை 11 மணிக்குத் தமிழ்நாடு மேதகு ஆளுநர் மாளிகையில் 1100 வது கலைமகள் இதழ் மற்றும் ‘சுதந்திரமும் முத்தமிழும்’ -ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் – புத்தகமும் வெளியிடப்பட்டன. புத்தகம் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கியவர் தமிழ்நாடு மேதகு ஆளுநர் திரு R.N.Ravi அவர்கள். ஆளுநர் மாளிகையின் எழில்மிகு ‘தர்பார்’ அரங்கில், அமைதியாகவும், நேரப்படியும், அழகாகவும் சிறப்பாக நடந்தேறியது புத்தக வெளியீட்டு விழா.
நான் ஆளுநர் மாளிகைக்குள் சென்றதில்லை. முதல் முறையாக இந்த விழாவிற்காகச் சென்றபொழுது, அங்கு இருந்த செக்யூரிடி மற்றும் அலுவலக ஊழியர்கள் வருகின்ற விருந்தினர்களை வரவேற்ற விதமும், அரங்கத்திற்குள் அழைத்துச் சென்ற விதமும் வியக்க வைத்தன. அவ்வளவு மரியாதையும், அன்பும் கூடிய வரவேற்பு. மெலிதான நாதஸ்வர இசையுடன் குளிருட்டப்பட்ட அரங்கில் இரண்டு பக்கமும் இருக்கைகள். அலங்கரிக்கப்பட்ட மேடையில் மூன்று இருக்கைகள். விழா குறித்த வெண்மை நிற போஸ்டரில், கருநீல வண்ண எழுத்துக்கள் அன்றைய விழாவினைத் தெரிவித்துக் கொண்டிருந்தன.
கீழாம்பூர் அவர்களும், பதிப்பாளர் ராஜன் அவர்களும், இரு கரம் கூப்பி வந்தவர்களை வரவேற்ற வண்ணம் இருந்தனர். ஒரு மங்களகரமான நிகழ்ச்சியின் துவக்கமாக வந்திருந்தவர்களின் மகிழ்ச்சியும், உரையாடல்களும் அமைந்திருந்தன. சரியாக 11.05 மணிக்கு, ஆளுநர் அரங்கத்துக்குள் நுழைய, அரங்கம் ஆவலுடன், அமைதியானது!
இணைப்புரைத் திலகம், கலைமாமணி சந்திரமோகன் தனது இயல்பான நடையில் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அரசு விழாக்களின் ப்ரோட்டகால் – வரைமுறை – படி, முதலில் தேசீய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன, பாடியவர் திருமதி வைஷ்ணவி ராம்தாஸ். அரங்கில் இருந்த விருந்தினர்களும் உடன் பாடியது சிறப்பு! அடுத்து திரு அநிருத் அவர்கள் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்னும் மகாகவியின் பாடலை ஜோன்புரி ராகத்தில், தேசப்பற்று பொங்கி வழியப் பாடியது சிறப்பு. பாரதி என்னும் தீர்க்கதரிசியின் பாடலில்தான் எவ்வளவு நம்பிக்கையும் நாட்டுப்பற்றும்!
விழாவின் தொடக்கமாக ஆளுயரக் குத்துவிளக்கினை ஏற்றியவர்கள், மேதக ஆளுநர், திருமதி சரளா சங்கரசுப்ரமணியன், திருமதி லலிதா சுரேஷ்குமார், டாக்டர் திருமதி ஜாய்ஸ் திலகம் மற்றும் கீழாம்பூர். விழா மேடை விளக்கொளியுடன் மங்களகரமான மேடையாக மாறி ஒளிர்ந்தது.
வரவேற்புரை வழங்கியவர் பேராசிரியர் ரகுநாதன் அவர்கள். ஆளுநர், கலைமகள் ஆசிரியர், பதிப்பாளர், வந்திருந்த விருந்தினர் அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து கலைமகள் சார்பில் மேதகு ஆளுநர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்து, திரு கீழாம்பூர் எழுதியுள்ள ‘சுதந்திரமும் முத்தமிழும்’ புத்தகத்தை மேதகு ஆளுநர் வெளியிட, கீழாம்பூர், ராஜன் மற்றும் ஆர் சங்கரநாராயணன், பேரா.சுந்தரம், என் விஜயராகவன், ஆர் சிவக்குமார், ஆடிட்டர் ஜெ.பாலசுப்ரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து, பாரம்பரியம் மிக்க கலைமகளின் 1100 வது இதழை மேதகு ஆளுநர் வெளியிட, நீதி அரசர் ராமநாதன், ஜெ.குமார், டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஏ.மோகன், சுதர்சன் ராமபத்ரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேதகு ஆளுநர் தன் உரையில் சுதந்திரத்திற்கு முன்பும், அதற்குப் பின்பும் இருந்த இந்தியாவைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவின் ஒரு மூலையில் நடக்கும் எந்தப் பிரிவினை வாதமோ, கலவரங்களோ எதுவானாலும், இந்தியா முழுவதும் அதற்கு எதிர்வினையற்றும் தேசப்பற்றும், ஒற்றுமையும் இருந்ததைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், பாடுபட்டவர்கள் பலரை மக்கள் அறியவில்லை. சரித்திரத்தில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள் என்றவர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துழைப்பில், மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். தன் உயிரையும் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்தவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாதது வருந்தத்தக்கது. 1905ல் வங்கப் பிரிவினை போது, வ.உ.சி. அவர்கள் இங்கிருந்து குரல் கொடுத்ததைக் குறிப்பிட்டவர், சுதந்திரத்திற்குப் பிறகு அத்தகைய தேசீய சிந்தனையுடன் குரல்கள் எழுப்பப்படாதமைக்கு வருந்தினார். வியாபாரம் செய்ய வந்தவர்கள், நம் மொழி, கலாச்சாரம், கல்வி அனைத்தையும் மாற்றி, வரலாற்றையும் மாற்றி எழுதிவிட்டனர். ஆங்கிலம் மட்டுமே சிறந்த மொழி என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டனர். அந்தக் காலக் கட்டத்திலிருந்து, தமிழுக்காகவே ஒரு பத்திரிகையாக கலைமகள் இருந்ததைப் பாராட்டினார். தேசீய விடுதலை, பாரத தேசக் கலாச்சாரம் மற்றும் தமிழ் இலக்கியம் ஆகியவற்றுக்குக் கலைமகள் ஆற்றிய பணியைப் பாராட்டினார். இந்தியா என்பது ஒரு பாரம்பரியம், என்றும் நிலைத்திருப்பது – இன்றைய இளைஞன் இந்தியாவின் உண்மை வரலாற்றினைத் தெரிந்துகொள்ள வேண்டும், அதன் ஒற்றுமைக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவை என்றார். மேதகு ஆளுநர் உரையில் தொனித்த நாட்டுப்பற்றும், நம் ஒற்றுமைக்கான அவசியமும் மிகவும் எழுச்சி அளிப்பதாக இருந்தது.
ஏற்புரை வழங்க வந்த கலைமகள் ஆசிரியர், மூன்று முறை கலைமகள் பதிப்பகப் புத்தகங்கள் ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்டதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். கலைமகள் தனது பாதையில் சிறிதும் வழுவாமல், திரு உ.வே.சா., திரு கி.வா.ஜ. ஆகியோர் அமைத்துக்கொடுத்த பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி கூறினார். வழக்கம்போல, குறிப்பொன்றுமில்லாத சுவாரஸ்யமான உரை!
மேதகு ஆளுநருக்கும், வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆளுநர் மாளிகை சிப்பந்திகள் அனைவருக்கும் நன்றி கூறினார் திரு சந்திரமோகன் (முதலில் தமிழிலும், உடனே அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கூறி விழாவை நடத்திச் சென்ற சந்திரமோகன் பாராட்டுக்குரியவர்!).
தேசீய கீதம் பாடிய பிறகு, சிற்றுண்டி வழங்கப்பட்டது.
1100 இதழ்கள் – நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் கலைமகளின் மணிமகுடத்தில் மற்றுமோர் வைரக்கல் இந்த விழா என்றால் அது சற்றும் மிகையில்லை!
ரிக் வேதம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் கணபதி வழிபாடும் 5000 வருடத்திற்கு முந்தியது என்று அறிய முடிகிறது. சிலர் மேலே உள்ள மந்திரத்தில் வருகிற கணபதி என்கிற வார்த்தை பிரஹஸ்பதியைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் யானை முகம் கொண்டவருக்கான வழிபாடு இருந்தது என்றும் வேதகாலத்தை ஆய்வு செய்கிறவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்த் தாத்தா உ வே சா அவர்கள் ஊர் ஊராகப் போய் ஓலைச்சுவடியைச் சேகரித்தவர். அந்த ஓலைச்சுவடியில் உள்ள சங்க இலக்கியங்களைப் பதிப்பித்தவர். பரிபாடலையும் தமிழ்த் தாத்தா 1918 ஆம் ஆண்டு பதிப்பிக்கிறார். பரிபாடலில் வரும் ஒரு பாடலைக் கீழே காணலாம்.
திருமால் ஆகிய நீயே முக்கை முனிவன் அதாவது தவத்தில் இருக்கும் சிவபெருமான், நீயே சதுர்புஜத்தோனான ப்ரஹ்மதேவன், நீயே ஐந்து கரங்களை உடைய விநாயகன், நீயே ஆறுகரங்களை உடைய முருகப்பெருமான்என்று சங்கப்புலவர் புகழ்கிறார். இதில் விநாயகரை ‘ஐங்கை மைந்த’ என்கிறார் ஐந்து கரத்தனை என்று தானே திருமூலரும் திருமந்திரத்தில் தெரிவிக்கிறார்?
பரிபாடலில் திருமாலுக்கு 8பாடல்கள், முருகனுக்கு 31பாடல்கள், காளிக்கு அதாவது கொற்றவைக்கு1 பாடல்,வையைநதிக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)
திருமாலுக்கு 6பாடல்கள், முருகனுக்கு 8பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள்என 22 பாடல்களே கிடைத்துள்ளன. பெருமாளுக்கு உரிய பாடலில் விநாயகரைப் பற்றிய செய்திகள் வருகின்றன
விநாயகருக்கு ஒரு பெயர் பிள்ளை அல்லது பிள்ளையார்( மூத்த பிள்ளை) ஆகும். பிள்ளை என்றால் “குழந்தை” என்றும், பிள்ளையார் என்றால் “உன்னதமான குழந்தை” என்றும் சொல்வார்கள்.
தமிழ் மொழி உள்ளடங்கிய திராவிட மொழி குடும்பத்தில் பாலி மொழியில் பில்லக்கா என்று ஒரு வார்த்தை உள்ளது. பில்லக்கா என்றால் இளம் யானை என்று பொருள். பிள்ளையார் என்று பின்னர் (பில்லக்கா) மாறியிருக்கலாம் என்று சொல்வோரும் உண்டு. பாலியில் பன்னெடுங்காலமாகப் பிள்ளையார் வழிபாடு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமய நூல் ஆகும்.சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
“சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட”, “ஆம் ஆறு உரைக்கும் அறு சமய ஆதிக்குப்” என்ற இப்பாடல்கள் மூலம்……திருமந்திர காலத்திற்கு முன்பு ஆறு முக்கிய சமயங்கள் இருந்துள்ளன என்பது தெரியவருகிறது. ஆறு சமயங்களில் ஒன்று விநயாகரை வணங்கும் சமயம். எனவே விநயாகரை வணங்கும் வழக்கம் திருமந்திரக் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் இருந்துள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.
தில்லைத்திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்திற்குக் கி.பி. 500-ல் ஆண்ட பல்லவ அரசன் சிம்மவர்மன் பொன் வேய்ந்தான். அதன்பின் அது பொன்னம்பலம் ஆயிற்று. திருமூலர் இப்பெயரைக் கையாள்கின்றார். எனவே, திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவராக இருக்கக்கூடும்!! இன்னும் சிலரோ இவர் சங்க காலத்திற்கும் முன்பாக வாழ்ந்தவர் என்றும் சொல்கிறார்கள்.
பிள்ளையார்பட்டி குடை வரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை, 6-ம் நூற்றாண்டுக்கு முந்தையது ஆகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல்தச்சனின் பெயர் எக்காட்டூரூக்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது. இது 6-ம் நூற்றாண்டில் காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது!
திண்டிவனம் அருகே ஆல கிராமத்தில் உள்ள எம தண்டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளையார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புறப் பகுதியில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் வெட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பீடத்தில் 3 வரிகளில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடிவம் பூளாங்குறிச்சி எழுத்து வடிவத்துக்குப் பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல்லெழுத்து வடிவத்துக்கு முந்தையதும் ஆகும். அதாவது 4-ம் நூற்றாண்டுக்கும், 6-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம்!! அப்படியானால் பிள்ளையார் வழிபாடு நாலாம் நூற்றாண்டுக்கு முந்தியது!!
பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரை ஆறு சமயத்தையும் இணைத்த ஷண்மத ஸ்தாபகர் என்று சொல்கிறோம். ஆதிசங்கரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. எனவே இந்த நூற்றாண்டுக்கு முன்னரே அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். முழு முதல் கடவுளான பிள்ளையார் சங்க காலத்துக்கும் முந்தியவர் என்று வாதிப்போர் நிறைய பேர்.
பிரதமர் மோடியின் மனதின் குரல் தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன் ஒலிபரப்பு நாள்: 30.07.2023 தமிழ் ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.
நண்பர்களே, மழையின் இந்த நேரம் தான் மரம் நடுதலுக்கும், நீர்ப்பாதுகாப்பிற்கும் மிக உகந்த, அவசியமான நேரம் ஆகும். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின் போது உருவாக்கப்பட்ட 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் கூட மெருகேறியிருக்கிறது. இப்போது 50,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. நமது நாட்டுமக்கள் முழுமையான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வோடு, நீர்ப்பாதுகாப்பிற்காக புதியபுதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சில காலம் முன்னதாக, நான் மத்திய பிரதேசத்தின் ஷஹடோலுக்குச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அங்கே பகரியா கிராமத்தின் பழங்குடியினச் சகோதர சகோதரிகளைச் சந்திக்க நேர்ந்தது. அங்கே இயற்கையைப் பராமரிப்பது தொடர்பாகவும், நீரைப் பராமரிப்பது தொடர்பாகவும் பேசினோம். பகரியா கிராமத்தின் பழங்குடியின சகோதர சகோதரிகள் இது தொடர்பான பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது இப்போது எனக்குத் தெரிய வந்துள்ளது. இங்கே, நிர்வாகத்தின் உதவியோடு, மக்கள் கிட்டத்தட்ட நூறு குளங்களை, நீர் மீள்நிரப்பு அமைப்புகளாக மாற்றியிருக்கிறார்கள். மழைநீர் இப்போது இந்தக் குளங்களுக்குச் செல்கிறது, மேலும் குளங்களின் நீரானது நிலத்தடி நீராக மாறுகிறது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் நிலத்தடி நீரின் மட்டம் மெல்ல மெல்ல மாற்றம் காணும். இப்போது அனைத்து கிராமவாசிகளும், அந்தப் பகுதி முழுவதிலும் சுமாராக 800 குளங்களை மீள்நிரப்பு அமைப்புக்களாக மாற்றும் இலக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதைப் போன்றே ஒரு உற்சாகமளிக்கும் செய்தி, உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வந்திருக்கிறது. சில நாட்கள் முன்பாக, உ.பியில், ஒரு நாளில் மட்டும் 30 கோடி மரங்கள் நடும் சாதனை புரியப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் தொடக்கத்தை மாநில அரசு செய்தது, இதை முழுமையடையச் செய்தவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள். இப்படிப்பட்ட ஒரு முயற்சி, மக்களின் பங்களிப்போடு கூடவே மக்கள் விழிப்புணர்வுக்கும் ஒரு பெரிய எடுத்துக்காட்டு. நாமனைவரும், மரம் நடுதல், நீரைப் பராமரித்தல் போன்ற இந்த முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
எனதருமை நாட்டுமக்களே, இது ச்ராவணம் என்று சொல்லப்படும் புனிதமான ஆடி மாதம். சதாசிவனான மகாதேவரை வணங்கிப் பூசிப்பதோடு கூடவே, இந்த மாதம் பசுமை மற்றும் சந்தோஷங்களோடு தொடர்புடையது. ஆகையால், இந்த சிரவண மாதம் ஆன்மீகத்தோடு கூடவே கலாச்சாரப் பார்வையும் மகத்துவமும் நிறைந்தது. சிராவண மாதத்தின் ஊஞ்சல்கள், சிராவணத்தின் மருதாணி, சிராவணத்தின் உற்சவங்கள், அதாவது சிராவணம் என்றாலே ஆனந்தம், உல்லாசம் தான்.
நண்பர்களே, நமது இந்த நம்பிக்கை மற்றும் இந்தப் பாரம்பரியங்களில் மேலும் ஒரு பக்கமும் உண்டு. நமது இந்தத் திருநாட்களும் பாரம்பரியமும் நமக்கு இயக்கத்தை அளிக்கின்றன. சிராவணத்திலே சிவத்தைப் பூசிக்கும் வகையிலே, எண்ணற்ற பக்தர்கள் காவட் யாத்திரையை மேற்கொள்கிறார்கள். சிராவண மாதம் காரணமாக இந்த நாட்களில் 12 ஜோதிர்லிங்கங்களுக்கு நிறைய பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றார்கள். பனாரஸ் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் இருக்கிறது. இப்போது காசிக்கு ஒவ்வோர் ஆண்டும் பத்து கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அயோத்தி, மதுராபுரி, உஜ்ஜைன் போன்ற புனிதத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கூட வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது, அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. இவையனைத்தும் நமது கலாச்சார விழிப்புணர்வின் விளைவு தான். இப்போது உலகத்தோர் அனைவரும் நமது புனிதத்தலங்களை நோக்கி வருகிறார்கள். அந்த வகையில் எனக்கு இரண்டு அமெரிக்க நண்பர்களைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது; இவர்கள் கலிஃபோர்னியாவிலிருந்து இங்கே அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள வந்திருந்தார்கள். இந்த அயல்நாட்டு விருந்தினர்கள் அமர்நாத் யாத்திரையோடு தொடர்புடைய சுவாமி விவேகானந்தரின் அனுபவங்கள் குறித்தும் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறார்கள். இது இவர்களுக்கு அதிக கருத்தூக்கத்தை அளித்து, இவர்கள் தாங்களே அமர்நாத் யாத்திரையை மேற்கொள்ள முடிவெடுத்தார்கள். இதை இவர்கள் பகவான் போலேநாத்தின் ஆசிகளாகவே கருதுகிறார்கள். இது தான் பாரதத்தின் சிறப்பு; அதாவது அனைவரையும் அரவணைக்கிறது, அனைவருக்கும் ஏதோ ஒன்றை அளிக்கிறது. இதே போல, ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பெண்மணியான Charlotte Shopa – ஷார்லோட் ஷோபா அவர்களை, சில நாட்கள் முன்பாக நான் ஃப்ரான்ஸ் நாடு சென்றிருந்த போது சந்திக்க நேர்ந்தது. இவர் யோகக்கலை பயில்பவர், பயிற்றுநரும் கூட. இவருடைய வயது 100க்கும் அதிகம். இவர் ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்டார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக யோகக்கலையைப் பயின்று வருகிறார். இவர் தனது உடல்நலம் மற்றும் 100 ஆண்டுகள் வாழ முடிந்தமைக்கும் முழுக்காரணம் யோகக்கலை என்று கூறுகிறார். உலகிலே, இவர் பாரதத்தின் யோக விஞ்ஞானம், இதன் சக்தியின் ஒரு முக்கியமான முகமாக ஆகியிருக்கிறார். இவரிடமிருந்து அனைவரும் கற்க வேண்டும். நாம் நமது பாரம்பரியத்தை அங்கீகரிப்பதோடு கூடவே, அதைப் பொறுப்புணர்வோடு உலகின் முன்பாக சமர்ப்பிக்கவும் வேண்டும். இதே போன்ற ஒரு முயற்சி சில நாட்களாக உஜ்ஜயினில் நடைபெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே நாடெங்கிலுமிருந்து 18 ஓவியர்கள், புராணங்களை ஆதாரமாகக் கொண்ட கவரக்கூடிய ஓவியக்கதைகளை உருவாக்கி வருகிறார்கள். இந்த ஓவியங்கள் பூந்தி பாணி, நாத்துவாரா பாணி, பஹாடி பாணி, அபப்ரம்ஷ் பாணி போன்ற பல சிறப்பான பாணிகளில் உருவாக்கப்படும். இவை உஜ்ஜைனின் திரிவேணி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். அதாவது சில காலம் கழித்து நீங்கள் உஜ்ஜைன் சென்றால், மஹாகால் மஹாலோகோடு கூடவே, மேலும் ஒரு தெய்வீகமான இடத்தை நீங்கள் தரிசிக்கலாம்.
நண்பர்களே, உஜ்ஜைனில் உருவாக்கம் பெற்று வரும் இந்த ஓவியங்களைப் பற்றிப் பேசுகையில், மேலும் ஒரு விசித்திரமான ஓவியம் என் நினைவிற்கு வருகிறது. இந்தச் சித்திரத்தை ராஜ்கோட்டின் ஒரு ஓவியரான प्रभातसिंगमोडभाईबरहाट,பிரபாத் சிங் மோட்பாய் பர்ஹாட் அவர்கள் உருவாக்கினார். இந்த ஓவியம், சத்ரபதி வீர சிவாஜி மஹாராஜின் வாழ்க்கையின் ஒரு சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டது. சத்ரபதி சிவாஜி மஹராஜாவின் ராஜ்யாபிஷேகத்திற்குப் பிறகு தனது குலதேவியான துல்ஜா மாதாவை தரிசனம் செய்யச் சென்றதை ஓவியரான பிரபாத் பாய் வரைந்திருந்தார். நமது பாரம்பரியங்கள், நமது மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க நாம் அவற்றைப் பராமரிக்க வேண்டும், அவையாகவே நாம் வாழ வேண்டும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்று இந்தத் திசையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
என் இனிய நாட்டுமக்களே, பல முறை நாம் சூழலியல், தாவரங்கள், விலங்குகள், உயிரிப் பன்முகத்தன்மை போன்ற சொற்களைக் கேட்கும் போது, இது ஏதோ தனிச்சிறப்பு வாய்ந்த விஷயங்கள் என்று சிலருக்குப்படுகிறது, ஆனால் அப்படி கிடையாது. நாம் உண்மையிலேயே இயற்கையின் பால் நேசம் கொண்டவர்கள் என்றால், நாம் சின்னச்சின்ன முயற்சிகளைக் கூட மேற்கொள்ளலாம். தமிழ்நாட்டில் வடவள்ளியைச் சேர்ந்த ஒரு நண்பரான சுரேஷ் ராகவனுக்கு ஓவியம் வரைதல் என்றால் கொள்ளைப் பிரியம். ஓவியம் என்பது தூரிகை மற்றும் கலையோடு தொடர்புடையது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், தனது ஓவியங்கள் வாயிலாக மரம் செடிகளையும், உயிரினங்களையும் பற்றிய தகவல்களைப் பராமரிக்க வேண்டும் என்று ராகவன் அவர்கள் தீர்மானித்தார். பல்வேறு தாவரங்கள்-விலங்குகளின் ஓவியங்களைத் தீட்டி அவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார். இப்போது இவர் வழக்கொழிந்து போகும் கட்டத்தில் இருக்கும் பல டஜன் பறவைகள், விலங்குகள், பகட்டு வண்ணமலர்ச் செடியான ஆர்கிட் தாவரங்களை ஓவியங்களாக வரைந்திருக்கிறார். கலையின் வாயிலாக இயற்கைக்குச் சேவை புரியும் இந்த எடுத்துக்காட்டு உண்மையிலேயே அற்புதமானது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்று உங்களுடன் மேலும் ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக சமூக ஊடகத்தில் ஒரு அற்புதமான பேரார்வத்தை ஏற்படுத்தும் விஷயம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மிகவும் துர்லபமான, பண்டைய கலைப்படைப்புக்களை அமெரிக்கா நமக்குத் திருப்பி அளித்தது. இந்தச் செய்தி வெளியான பிறகு சமூக ஊடகங்களில் இந்தக் கலைப்பொருட்களைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசப்பட்டது. இளைஞர்கள் தங்கள் மரபின் மீது பெருமிதத்தை வெளிப்படுத்தினார்கள். பாரதத்திற்கு மீண்டு வந்த இந்த கலைப்பொருட்கள் 2500 ஆண்டுகள் முதல் 250 ஆண்டுகள் வரை பழமையானவை. இந்த அரிய பொருட்கள், தேசத்தின் பல்வேறு பகுதிகளோடு தொடர்புடையன என்பது உங்களுக்கு மேலும் சந்தோஷத்தை அளிக்கலாம். இவை Terracotta – சுடுமண், கல், உலோகம் மற்றும் மரத்தால் தயாரிக்கப்பட்டவை. இவற்றில் சில உங்களுக்கு பேராச்சரியத்தை அளிக்க வல்லவை. நீங்கள் இவற்றைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். இவற்றில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அழகான Sandstone Sculpture, மணற்பாறைச் சிற்பம் உண்டு. இது நடனமாடும் ஒரு அப்சரசின் கலைப்படைப்பு, இது மத்திய பிரதேசத்தோடு தொடர்புடையது. சோழர்கள் காலத்திய பல விக்ரகங்களும் இதிலே அடங்கும். தேவி, முருகப்பெருமானின் விக்ரகங்கள் எல்லாம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, இவை தமிழ்நாட்டின் மகோன்னதமான கலாச்சாரத்தோடு தொடர்புடையவை. பகவான் கணேசனின் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கல விக்கிரகமும் பாரதம் திரும்பியிருக்கிறது. லலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் உமா மகேஸ்வரரின் ஒரு விக்கிரகம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது, இதிலே இவர்கள் இருவரும் நந்தியின் மீதமர்ந்து கொண்டிருக்கிறார்கள். கற்களால் உருவாக்கப்பட்ட ஜைன தீர்த்தங்கரர்களின் இரு விக்கிரகங்களும் பாரதம் மீண்டிருக்கின்றன. பகவான் சூரிய தேவனின் இரு திருவுருவங்களும் உங்கள் மனதைக் கொள்ளை கொண்டு விடும். இவற்றில் ஒன்று மணல்பாறையால் உருவானது. மீட்டெடுக்கப்பட்ட பொருட்களில் மரத்தாலான ஒரு பலகை உள்ளது, இது பாற்கடலைக் கடைதல் நிகழ்வை முன்னிறுத்துவது. 16ஆம்-17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பலகை தென்னாட்டைச் சேர்ந்தது.
நண்பர்களே, இங்கே நான் குறைவான பெயர்களையே குறிப்பிட்டிருக்கிறேன்; ஆனால் பார்க்கப் போனால் இந்தப் பட்டியல் மிக நீண்டது. நமது இந்த விலைமதிப்பற்ற மரபுச்சொத்தை நமக்குத் திருப்பியளித்தமைக்கு நான் அமெரிக்க அரசுக்கு என் நன்றிகளை அளிக்கிறேன். 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் கூட நான் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்ட போது, அப்போதும் கூட பல கலைப்பொருட்கள் பாரதத்திற்குத் திருப்பியளிக்கப்பட்டன. இப்படிப்பட்ட முயற்சிகளால் நமது கலாச்சாரச் சின்னங்கள் களவாடப்படுவதைத் தடுக்கும் விஷயம் தொடர்பாக, நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலமாக வளமான நமது பாரம்பரியத்தின்பால் நாட்டுமக்களின் பிடிப்பு மேலும் ஆழமாகும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, தேவபூமியான உத்தராகண்டினைச் சேர்ந்த சில அன்னையர்-சகோதரியர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், இது என்னை உணர்ச்சிவயப்பட வைத்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய மகனுக்கு, தங்களுடைய சகோதரனுக்கு நெஞ்சு நிறையநிறைய ஆசிகளை நல்கி விட்டு எழுதியிருக்கிறார்கள், நமது கலாச்சார அடையாளமான போஜபத்ரம் – புரசு இலை எங்கள் வாழ்வாதாரத்திற்கான சாதனமாகும் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்று எழுதியிருக்கிறார்கள். எதைப் பற்றிக் கூறுகிறார்கள் என்று தானே எண்ணமிடுகிறீர்கள்?
நண்பர்களே, இந்தக் கடிதத்தை எனக்கு எழுதியிருப்பவர்கள் சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த நீதி-மாணா பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெண்கள். இந்தப் பெண்கள் தாம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் புரசு இலை மீது ஒரு அருமையான கலைப்படைப்பை ஏற்படுத்தி எனக்கு அளித்தவர்கள். இந்தப் பரிசைப் பெற்று நான் உணர்ச்சிவயப்பட்டேன். பண்டைய காலம் தொட்டே நமது நாட்டிலே நமது சாஸ்திரங்கள், நமது புனித நூல்கள் ஆகியன புரசு இலைகளிலே எழுதப்பட்டு வந்தன. மகாபாரதமுமே கூட இதே போன்று புரசு இலைகளில் எழுதப்பட்டது. இன்று தேவபூமியைச் சேர்ந்த இந்தப் பெண்கள், இந்த புரச இலைகளிலே, மிகவும் அழகான கலைப்படைப்புக்களையும், நினைவுப்பரிசுகளையும் உருவாக்கி வருகிறார்கள். மாணா கிராமத்தின் யாத்திரையின் போது, நான் அவர்களின் இந்த தனித்தன்மையான முயற்சியைப் பாராட்டியிருந்தேன். நான் தேவபூமிக்கு வரும் பயணிகளிடமும் வேண்டிக் கொண்டேன், நீங்கள் அதிக அளவில் உள்ளூர்ப் பொருட்களை வாங்குங்கள் என்றேன். இது அங்கே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று புரச இலையில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள், நல்ல விலைக்கு வாங்குகிறார்கள். புரச இலையின் இந்த பண்டைய பாரம்பரியம், உத்தராகண்டின் பெண்களின் வாழ்க்கையிலே மகிழ்ச்சியின் புதியபுதிய வண்ணங்களை இட்டு நிரப்பியிருக்கிறது. புரச இலையால் புதியபுதிய பொருட்களை உருவாக்குவதற்காக மாநில அரசும், பெண்களுக்குப் பயிற்சிகள் அளித்து வருவதை அறிந்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மாநில அரசு புரச மரத்தின் மிக அரிய வகைகளைப் பாதுகாக்கவும் கூட ஒரு இயக்கத்தைத் தொடக்கி இருக்கிறது. எந்தப் பகுதிகள் தேசத்தின் கடைநிலைகள் என்று பார்க்கப்பட்டதோ, அவை இப்போது தேசத்தின் முதன்மை கிராமங்களாக வளர்ச்சிப் பயணத்தில் முன்னேறி வருகின்றன. இந்த முயற்சிகள் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதோடு, பொருளாதார முன்னேற்றத்தின் காரணிகளாகவும் ஆகி வருகின்றன.
என் கனிவுநிறை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை வந்திருக்கும் பல கடிதங்கள் மனதிற்கு மிகுந்த நிறைவையளிப்பவையாக இருக்கின்றன. இவை, தற்போது தான் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டு விட்டு வந்திருக்கும் இஸ்லாமியப் பெண்கள் எழுதியிருப்பவை. பல காரணங்களுக்காக அவர்களின் இந்தப் பயணம் சிறப்பு வாய்ந்தது. இந்தப் பெண்கள் தங்களுடைய புனித ஹஜ் யாத்திரையை, எந்த ஒரு ஆணின் துணையும் இல்லாமல் நிறைவு செய்திருக்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை 50-100 அல்ல, 4,000த்திற்கும் அதிகமாகும், இது ஒரு பெரிய மாற்றமாகும். முதலில், இஸ்லாமியப் பெண்கள் மெஹ்ரம் அதாவது ஆண் துணை இல்லாமல் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லாமல் இருந்தது. மனதின் குரல் மூலமாக நான் சவூதி அரப் அரசுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை வெளிப்படுத்துகிறேன். ஆண் துணை இல்லாமல் ஹஜ் செல்லும் பெண்களுக்காக, விசேஷமாக பெண் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளாகவே ஹஜ் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுவரும் மாற்றங்கள் முழுமையாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. நமது இஸ்லாமிய தாய்மார்-சகோதரிமார்கள் இது தொடர்பாக எனக்கு நிறைய எழுதியிருக்கிறார்கள். இப்போது அதிகம் பேர்களுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியோர், குறிப்பாக நமது தாய்மார்-சகோதரிகள் கடிதங்கள் வாயிலாக எனக்கு நல்லாசிகள் வழங்கியிருக்கிறார்கள், இது மிகவும் உத்வேகமளிப்பதாக இருக்கிறது.
எனதருமை நாட்டுமக்களே, ஜம்மு-கஷ்மீரத்திலே இரவு நேர இசை நிகழ்ச்சிகள் ஆகட்டும், உயரங்களில் பைக்குகளின் பயணங்களாகட்டும், சண்டீகட்டில் உள்ளூர் க்ளப்புகள் ஆகட்டும், பஞ்சாபின் ஏகப்பட்ட விளையாட்டுக் குழுக்களாகட்டும், இவை பற்றியெல்லாம் கேட்கும் போது கேளிக்கை பற்றிப் பேசப்படுகிறது, சாகஸங்கள் பற்றிப் பேசப்படுகிறது என்று தானே உங்களுக்குப் படுகிறது!! ஆனால் விஷயமே வேறு. இந்த ஏற்பாடுகள் அனைத்துமே ஒரு பொதுக் காரணத்தோடு இணைந்தவை. அது என்ன பொதுநோக்குக்காரணம்? போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் தான் இந்த பொதுநோக்குக் காரணம். ஜம்மு-கஷ்மீரத்தின் இளைஞர்களை போதைப் பொருட்களிலிருந்து காக்க பல நூதனமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கே இரவுநேர இசை நிகழ்ச்சிகள், பைக் தொடர்கள் பயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சண்டீகட்டிலே இந்தச் செய்தியைப் பரப்ப, உள்ளூர் கிளப்புகள் இதோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் இவற்றை வாதா கிளப்புகள் என்று அழைக்கிறார்கள். VADA, வாதா என்று ஆங்கில முதலெழுத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொல். Victory Against Drugs Abuse, அதாவது போதைப் பொருட்களுக்கு எதிரான வெற்றி என்பது பொருள். பஞ்சாபின் பல விளையாட்டுக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை உடலுறுதியின் மீது கவனம் செலுத்தும் அதே வேளையில், போதைப் பழக்கத்திலிருந்து விடுபடும் விழிப்புணர்வு இயக்கத்தையும் நடத்துகின்றன. போதைப் பழக்கத்திற்கு எதிரான இயக்கத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கெடுத்து வருவது அதிக உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது. இந்த முயற்சி, பாரதத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான இயக்கத்திற்கு மிகுந்த பலத்தை அளிக்கிறது. தேசத்தின் வருங்காலத் தலைமுறையினரை நாம் காத்தளிக்க வேண்டும், அவர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்தாக வேண்டும். இந்த எண்ணத்தை அடியொற்றி, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று போதைப் பொருளிலிருந்து விடுபட்ட பாரதம் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தோடு 11 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இணைக்கப்பட்டார்கள். இரண்டு வாரங்கள் முன்பாக பாரதம் போதைப் பொருட்களுக்கு எதிராக மிகப்பெரிய செயல்பாட்டைப் புரிந்திருக்கிறது. போதைப் பொருட்களின் கிட்டத்தட்ட ஒண்ணரை இலட்சம் கிலோ தொகுப்பைக் கைப்பற்றிய பிறகு அதை அழித்திருக்கிறது. நாம் பத்து இலட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்த அலாதியான சாதனையையும் படைத்திருக்கிறோம். இந்த போதைப் பொருட்களின் விலை 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். போதைப் பொருட்களின் பிடியிலிருந்து விடுபட, இந்த சீரிய இயக்கத்தில் தங்கள் பங்களிப்பை அளித்துவரும் அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். போதையின் தீமை, குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமே பெரிய தீங்காக மாறுகிறது. அந்த வகையில் இந்த அபாயத்துக்கு நிரந்தரமாக முடிவுகட்ட வேண்டும் என்றால், நாம் ஒன்றாக இணைந்து இந்தத் திசையில் முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியம்.
என் பாசமிகு நாட்டுமக்களே, போதைப் பொருட்கள், இளைய தலைமுறையினர் என்று வரும் போது, மத்திய பிரதேசத்தின் உத்வேகமளிக்கும் பயணம் பற்றிப் பேசியே ஆக வேண்டும். இந்த உத்வேகமளிக்கும் பயணம் ஒரு மினி ப்ரேசில் பற்றியது. என்னது, மத்திய பிரதேசத்திலே மினி ப்ரேசிலா என்று தானே நினைக்கிறீர்கள்!! இங்கே தான் ஒரு சின்ன திருப்பம் இருக்கிறது. மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோலில் இருக்கும் ஒரு கிராமம் பிசார்புர். இந்த பிசார்புரைத் தான் மினி ப்ரேசில் என்று அழைக்கிறார்கள். ஏன் மினி ப்ரேசில் என்றால், இந்தக் கிராமம், இந்தியக் கால்பந்தாட்டத்தின் இளம் நட்சத்திரங்களின் கூடாரமாக ஆகி விட்டது. சில வாரங்கள் முன்பாக, ஷஹ்டோலுக்கு சென்றிருந்த போது, அங்கே பல கால்பந்தாட்ட வீரர்களை நான் சந்திக்க முடிந்தது. இது பற்றி நான் நாட்டுமக்களுக்கு, அதுவும் குறிப்பாக என் இளைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் அப்போதே முடிவு செய்தேன்.
நண்பர்களே, பிசார்புர் கிராமம், ஒரு மினி ப்ரேசிலாக ஆனதன் பின்னணியில் இருந்த பயணம் 20-25 ஆண்டுகள் முன்பாகத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில், பிசார்புர் கிராமம் கள்ளச்சாராயத்துக்குப் பேர் போனதாக இருந்தது, மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தது. இந்தச் சூழலில் மிகப்பெரிய பாதிப்பு இங்கிருந்த இளைஞர்களுக்குத் தான் ஏற்பட்டது. முன்னாள் தேசிய ஆட்டக்காரரும், ஒரு பயிற்றுநருமான ரயீஸ் அஹ்மத் தான் இந்த இளைஞர்களின் திறமைகளை அடையாளமறிந்தவர். ரயீஸ் அவர்களிடத்திலே அதிக ஆதாரங்கள்-வசதிகள் இருக்கவில்லை; ஆனால் அவர் முழு முனைப்போடு, இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே, இங்கே கால்பந்தாட்டம் எந்த அளவுக்குப் பிரபலமாகி விட்டது என்றால், பிசார்புர் கிராமத்தின் அடையாளம் என்றால் அது கால்பந்தாட்டம் என்றாகி விட்டது என்றால் பாருங்களேன்!! இப்போது இங்கே கால்பந்தாட்டப் புரட்சியின் பெயரில் ஒரு செயல்திட்டம் நடத்தப்படுகிறது. இந்தச் செயல்திட்டத்தின் படி இளைஞர்கள் இந்த விளையாட்டோடு இணைக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தச் செயல்திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றால், பிசார்புரிலிருந்து தேசிய மற்றும் மாநில அளவில் 40க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வந்திருக்கிறார்கள். இந்த கால்பந்தாட்டப் புரட்சி இப்போது மெல்லமெல்ல, அந்தப் பகுதி முழுவதிலும் பரவி வருகிறது. ஷஹ்டோலும், அதற்குப் பக்கத்தில் இருக்கும் பரவலான பல பகுதிகளில் 1200க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட கிளப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இங்கே அதிகமான எண்ணிக்கையில் வெளிப்படும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் விளையாடுகிறார்கள். கால்பந்தாட்டத்தின் பல பெரிய முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் இன்று இங்கே இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்கள். நீங்களே எண்ணிப் பாருங்கள், ஒரு பழங்குடிப்பகுதி, கள்ளச்சாராயத்திற்காகப் பெயர் போனது, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற அவப்பெயர் பெற்றது, இப்போது தேசத்தின் கால்பந்தாட்ட நாற்றங்கால் ஆகியிருக்கிறது. ஆகையினால் தானே சொல்கிறார்கள் – மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று. நமது தேசத்திலே திறன்கள்-திறமைகளுக்குக் குறைவே இல்லை. தேவை என்று வரும் போது, அதை நாம் நாடுகிறோம், தேடுகிறோம், அடைகிறோம். இதன் பிறகு இதே இளைஞர்கள் தேசத்தின் பெயருக்குப் பெருமை சேர்க்கிறார்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு வழி கோலுகிறார்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் உற்சாகத்தோடு அமுதப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அமுதப் பெருவிழாவின் போது, தேசத்தில் சுமார் இரண்டு இலட்சம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன, பன்முகத்தன்மையால் நிறைந்திருக்கின்றன. இந்த ஏற்பாடுகளின் மேலும் ஒரு அழகு என்னவென்றால், இதோடு சாதனை படைக்கும் எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலே நமது இளைஞர்களுக்கு தேசத்தின் மாபெரும் ஆளுமைகளைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. முதல் சில மாதங்களைப் பற்றி மட்டுமே பேசினால், மக்களின் பங்களிப்போடு தொடர்புடைய பல சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் மாற்றுத் திறனாளி எழுத்தாளர்களின் எழுத்தாளர் சந்திப்புக்கான ஏற்பாடு. இதிலே சாதனை எண்ணிக்கையில் மக்களின் பங்கெடுப்பினைக் காண முடிந்தது. அதே போல, ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியிலே தேசிய சம்ஸ்கிருத சம்மேளனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நமது வரலாற்றிலே கோட்டைகளின் மகத்துவம் என்ன என்பதை நாமனைவருமே நன்கறிவோம். இதை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு இயக்கமான கோட்டைகளும், கதைகளும், அதாவது கோட்டைகளோடு தொடர்புடைய கதைகளுமே கூட மக்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.
நண்பர்களே, இன்று தேசத்தின் நாலாபுறத்திலும் அமுதப் பெருவிழா எதிரொலிக்கும் வேளையில், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தேசத்தின் மேலும் ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்த பலிதானிகளின் நினைவுகளைப் போற்றும் வகையிலே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த ஆளுமைகளின் நினைவாக, தேசத்தின் இலட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துக்களில், சிறப்புக் கல்வெட்டுக்களும் நிறுவப்படும். இந்த இயக்கத்தின்படி தேசமெங்கும் அமுதக் கலச யாத்திரையும் மேற்கொள்ளப்படும். தேசத்தின் கிராமம் தோறும், பட்டி தொட்டிகளிலிருந்தும், 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, இந்த அமுதக்கலச யாத்திரை, தேசத்தின் தலைநகரான தில்லியை வந்தடையும். இந்த யாத்திரையானது, தன்னோடு கூடவே தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, மண்ணோடு சேர்ந்து செடிகளையும் கொண்டு வரும். 7500 கலசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணையும், செடிகளையும் சேர்த்து, தேசியப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகிலே அமுதப்பூங்காவனம் நிர்மாணிக்கப்படும். இந்த அமுதப்பூங்காவனம், ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மிக உன்னதமான அடையாளமாக ஆகும். கடந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து அடுத்த 25 ஆண்டுகளின் அமுதக்காலத்தை ஒட்டிய 5 உறுதிமொழிகள் குறித்துப் பேசியிருந்தேன். என் மண் என் தேசம் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு நாம் இந்த 5 உறுதிமொழிகளை நிறைவேற்றும் சபதமும் ஏற்போம். நீங்கள் அனைவரும், தேசத்தின் புனிதமான மண்ணை கைகளிலே ஏந்தி சபதம் எடுக்கும் வகையிலே உங்களை நீங்களே சுயமாகப்படம் பிடித்து, அதாவது செல்ஃபி எடுத்து, yuva.gov.in இலே கண்டிப்பாகத் தரவேற்றம் செய்யுங்கள். கடந்த ஆண்டு சுதந்திரத் திருநாளன்று, வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்திற்காக, எப்படி நாடு முழுவதும் ஒருங்கிணைந்ததோ, அதே போல நாம் இந்த முறையும் மீண்டும், வீடுகள்தோறும் மூவண்ணத்தைப் பறக்க விட வேண்டும். இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த முயற்சிகளில் நமது கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும், தேசத்தின் சுதந்திரத்திற்காக அளிக்கப்பட்டிருக்கும் கணக்கற்ற உயிர்த்தியாகங்கள் பற்றிய தெரிதல் உதிக்கும், சுதந்திரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஏற்படும். ஆகையால், நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், இந்த முயற்சிகளோடு கண்டிப்பாக இணைய வேண்டும்.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இன்று இம்மட்டே. இன்னும் சில நாட்களில் நாம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்ற மிகப்பெரிய திருநாளின் அங்கமாக ஆவோம். தேசத்தின் சுதந்திரத்தின் பொருட்டு வாழ்ந்து கொண்டிருப்போரையும்-உயிர்த்தியாகம் செய்தோரையும் என்றென்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் கனவுகளை மெய்யாக்கும் வகையிலே இரவுபகல் பாராது நாம் உழைக்க வேண்டும், மேலும், நாட்டுமக்களின் இந்த உழைப்பினை, அவர்களின் சமூக மட்டத்திலான முயற்சிகளை முன்னுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு சாதனமாக மனதின் குரல் விளங்கும். அடுத்த முறை, மேலும் சில புதிய விஷயங்களோடு, உங்களை சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.
ஆரிய திராவிட வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது அது பிரிவினையை ஏற்படுத்த பயன்பட்டது நாம் அனைவரும் ஒன்று ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் கருத்து. அவரின் சேவைகளை, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பாடமாக எடுத்துச் செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி பேசினார்.
ஏகாத்ம மானவ வாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய நூல் தொகுப்பு வெளியீட்டு விழா ஜூலை 29 சனிக்கிழமை, சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
அதில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி தீந்தயாள் உபாத்யாய நூல் தொகுப்பை வெளியிட்டார். துக்ளக் பத்திரிகை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, Research and Development foundation for integral humanism- Tamilnadu Chapter தலைவர் மகேஷ் சந்திரா சர்மா, இரட்டைமலை சீனிவாசன் மற்றும் பண்டிதர் அயோத்திதாசர் கொள்ளு பேத்தி நிர்மலா அருள்பிரகாஷ், இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் செயல்பாடுகளும், தத்துவங்களும் நம் அன்றாட வாழ்வில் வெளிப்பட்டபடியே உள்ளது. நம் நாடு முன்னோக்கிச் செல்வதற்காகப் பாடுபட்டவர் தீன்தயாள் உபாத்யாய. அவர், அனைவரும் ஒன்று தான் என்பதை வலியுறுத்தினார்… என்றார்.
மேலும், இந்த பிரபஞ்சத்தை ஒரே பரமேஸ்வரன் தான் படைத்தார். நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன்தான் இருந்தோம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில், குறிப்பாக 400 ஆண்டுகள்தான் அடிமையாக இருந்தோம். மேற்கத்தியவர்களிடம் ராணுவ பலம், தொழில்புரட்சி இருந்தன. அவை நம்மை விட உயர்ந்தது என்று நினைத்து வேறு வழியில்லாமல் நாம் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தற்போது அதுவே நம் கலாசாரமாக மாறிவிட்டது.
மேற்கத்திய நாட்டவர்களால் தான் நம்மிடையே பிரிவினை ஏற்பட்டது. ஆரியர்- திராவிடர் என்ற வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதுவே பிரிவினையை ஏற்படுத்தியது.
தற்போது மொழியின் பெயரில் சிறுபான்மை மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. பலர் பள்ளிகளை நடத்துகிறார்கள். அதில் அவர்களின் தாய்மொழியில்கூட கற்றுத் தருவதில்லை. ஒரே நிலத்தில் இருந்தவர்கள்கூட, மொழியால் தங்களை இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கருதுகின்றனர்.
உலகளாவிய ஒருமைப்பாடு பற்றிக் கூறிய ஒரே நாடு இந்தியாதான். இந்தியாவே உலகிற்கு ஒளி காட்டுகிறது. நம் பாரதம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு தீன்தயாள் உபாத்யாயவின் தத்துவம் இருக்க வேண்டும். அவரின் நூல் தொகுப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, ஆய்வுகள் பல மேற்கொண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தீன்தயாள் உபாத்யாயாவின் கருத்துகள், அவர் ஆற்றிய சேவைகளை பாடமாகவும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினார்.
Governor released English edition of 15 volumes Complete Works of Pt Deendayal Upadhyay and urged academia to mainstream #IntegralHumanism as social, economic and political thought of India relevant for the distressed world. pic.twitter.com/bT6TK0qNw7
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 29, 2023
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 6:30 மணியளவில் இஸ்ரோவின் பி.ஸ்.எல்.வி சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் DS-SAR புவி கண்காணிப்பு செயற்கை கோள் உள்பட 7 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன. பூமியிலிருந்து 535 கி.மீ., உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் இது நிலைநிறுத்தப்படும்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்டை ஏவுவதற்கான 25.30 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 5.30க்கு தொடங்கியது. பின், திட்டமிட்டபடி காலை 6.30க்கு ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் சிங்கப்பூரின் 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சார்’ என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் இணைக்கப் பட்டு விண்ணில் ஏவப்பட்டன. ‘டிஎஸ்-சார்’ செயற்கைக்கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டது. ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கைத் துளை ரேடார் கருவியைக் கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலைத் தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டது.
ராக்கெட்டுடன் செலுத்தப்பட்ட ஏழு செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. பிஎஸ்எல்வி-சி56 வாகனம் 7 செயற்கைக்கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் துல்லியமாக செலுத்தியதாகவும் அது தெரிவித்துள்ளது.
ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.
கலைமகள் மாத இதழின் 1100 ஆவது இதழை தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி இன்று வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலைமகள் இதழின் 1100 ஆவது இதழையும், கலைமகள் இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் நூலையும் அவர் வெளியிட்டுப் பேசினார்.
தமிழக ஆளுநர் மாளிகையில் கலைமகள் மாத இதழின் 1100 ஆவது இதழும் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் எழுதியுள்ள ” சுதந்திரமும் முத்தமிழும் ” என்கிற நூலும் சனிக்கிழமைஇன்று முற்பகல் 11 மணியளவில் தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டது.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆளுநர் ரவி, கடந்த 92 ஆண்டுகளாக தமிழ் மொழி, கலாசாரம், சிந்தனைகள் & பாரதியத்தை செழுமைப்படுத்த ‘கலைமகள்’ தமிழ் மாத இதழ் வழங்கிய பங்களிப்புகளை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டினார். ‘சுதந்திர போராட்டத்திற்கு முத்தமிழ் ஆற்றிய பங்களிப்பு’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்… என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கழுக்கு, காகம் கதை மூலம் ரஜினிகாந்த் கொடுத்துள்ள அட்வைஸ் யாருக்கு என்பதில் இன்றைய சமூக தளங்களில் விவாதங்கள் பிறந்தன.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசியதாவது…
காட்டில் பெரிய மிருகங்களை எப்போதும் சிறிய மிருகங்கள் சீண்டிக் கொண்டே இருக்கும். காக்கா, கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். கழுகு எப்போதும் அமைதியாக இருக்கும். கழுகை விட காக்கா உயர பறக்க நினைக்கும். ஆனால் அதன் இறக்கையைக்கூட காகத்தினால் தொட முடியாது.
உலகின் உன்னதமான மொழி மவுனம். நம்ம வேலையை பார்த்துக்கிட்டு நாம் போய்க்கிட்டே இருக்கணும். குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை.
குடிப்பழக்கம் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம். நீங்க குடிப்பதினால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படு கிறது. அதனால் தயவு செய்து குடிக்காதீர்கள்.
படத்தில் உள்ள ஹூக்கும் பாடலில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஸ்டார் என்பதை மட்டும் எடுக்கச் சொன்னேன். அது எப்போதுமே தொல்லை தான். 1977-லிலேயே இந்த பிரச்னை ஆரம்பித்தது. ஒரு படத்தின் டைட்டில் சூப்பர் ஸ்டார் என்று போட்டார்கள். அதை நான் வேண்டாம் என்று சொன்னேன். காரணம் அப்போது கமலும், சிவாஜியும் பெரிய ஹீரோ. அதனால் வேண்டாம் என்று சொன்னேன். உடனே என்னை பயந்துட்டேன் என்று சொன்னார்கள். நாம பயப்படுகிற இரண்டு பேர் ஒன்று கடவுள் இன்னொன்று நல்லவர்கள்… என்று பேசினார் ரஜினி.
இந்த நிகழ்ச்சியில், ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா, ரஜினியின் பேரன்கள் யாத்ரா லிங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ரஜினி சொன்ன காகம் – கழுகு கதை, கருத்து சமூகத் தளங்களில் பெரிதும் விவாதத்துக்கு உள்ளானது. இது நடிகர் விஜய்யை ரஜினி மறைமுகமாக தாக்கிச் சொன்னதாகக் கூறி விவாதிக்கப் பட்டது.