Home Blog Page 5686

பிப்.20 முதல் சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்க வசதி

புது தில்லி

தனிநபர் சேமிப்புக் கணக்கில் இருந்து வாரம் ஒன்றுக்கு எடுக்கப் படும் மதிப்பு ரூ.50 ஆயிரமாக வரும் பிப். 20 ஆம் தேதியில் இருந்து உயர்த்தப் படும் என்றும், மார்ச். 13ஆம் தேதி முதல் அந்தக் கட்டுப்பாடும் நீக்கப்பட்டு, எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர்.காந்தி பொருளாதாரக் கொள்கை கூட்டத்தின் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2016 நவ.8ம் தேதிக்குப் பின்னர் ரூ.500, ரூ.1000 பண மதிப்பு நீக்கத்துக்குப் பின்னர், ஏடிஎம்.,களில் எடுக்கப் படும் பணத்தின் அளவுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்த ஆர்.பி.ஐ.,

பன்னீர்செல்வம் குறித்து ஜெயலலிதாவின் கருத்து!

சென்னை:

தற்போதைய முதல்வராக இருந்துவரும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து, அதிமுக., பொதுச் செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓர் இக்கட்டான தருணத்தில் எப்படி விசுவாசமாக நடந்து கொண்டார் என்றும், தாம் அவரைப் போன்ற தொண்டரைப் பெற்றிருப்பது பெரும் பாக்கியம் என்றும் புகழ்ந்துரைத்தார்.

அந்த விடீயோ இப்போது வைரலாக பரவி வருகிறது..

 

இடைக்கால பொதுச் செயலரை நியமிக்க அதிமுக சட்டவிதியில் இடமில்லை!

புதுதில்லி:
அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர். 
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.
இந்நிலையில், இடைக்கால பொதுச் செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை. சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே பொதுச் செயலாளராக நியமிக்க முடியும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,
இது குறித்து அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என்று கூறப்படுகிறது. 

”தி.மு.க. மீது பாயாதே! திராணி இருந்தால் ஒ.பி.எஸ்ஸூக்கு பதில் சொல்!” : ஸ்டாலின்a

*- திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை*
“எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப்  பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் “அதிரடி” வரவான பொதுச் செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது அவர் ஏற்கனவே “நான் பினாமி அல்ல” என்று “சொத்துக் குவிப்பு வழக்கில்” வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினைத்த வேகத்தில், குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் ‘எதைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்ற போக்கில் தி.மு.க. மீது போலி விமர்சனத்தை வைத்துள்ளதாகவே கருதுகிறேன். அதிமுகவிற்குள் நடக்கும் கேலிக் கூத்துகளுக்கும், அரசியல் கோமாளித்தனங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை திருமதி சசிகலா நடராஜன் அறிய வேண்டும் என்றால் அவர் முதலில் “தமிழக அரசியலை” புரிந்து கொள்ள வேண்டும்.
மாண்புமிகு ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை போயஸ் தோட்டத்திற்கு வர வைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அதிமுக தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி தி.மு.க. மீது பழி போடுவது அரைவேக்காட்டுத்தன அரசியல். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகவும், வெளியில் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கும் கட்சியாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் முதலமைச்சராக அம்மையார்  ஜெயலலிதா அவர்கள் பதவியேற்ற போது அந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பங்கேற்றேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களே அதற்காக எனக்கு நன்றி தெரிவித்ததை தோழி என்று சொல்லிக் கொள்ளும் திருமதி சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி? ஏன் சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக் கொண்டிருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து திருமதி சசிகலா நடராஜன் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க முடியுமா?
அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தது, அவர் திடீரென மறைந்தவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது, அம்மையார் ஜெயலலிதாவின் பூத உடலின் அருகில் இருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறியது எல்லாமே திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடிக்கும் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடு மட்டுமே! அவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகும், அதே அரசியல் நாகரீகத்தை சட்டமன்றத்திலும், வெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்றது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுவது ஒரு வேளை திருமதி சசிகலா நடராஜனுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்கு தி.மு.க. பொறுப்பாக முடியாது. ஆகவே அதிமுகவிற்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு” என்னைப் பார்த்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது. அதை விட தனது எடுபிடியாக இருக்கும் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை மூலமாக ஒரு பேட்டி கொடுக்க வைத்து, டெல்லி பயணம் என்றெல்லாம் கதை அளப்பது “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்”  கேவலமான செயல் என்பதை திருமதி சசிகலா நடராஜன் உணர வேண்டும்.
முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு அவர் பட்ட அவமானங்களை மறைந்த அம்மையார் ஜெயலலிதா சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார். திராணி இருந்தால் அதற்கு திருப்பி பதில் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு தி.மு.க.வை சீண்ட வேண்டாம் என்று திருமதி சசிகலா நடராஜனை எச்சரிக்க விரும்புகிறேன். அமைச்சர்களை வைத்து, பாராளுமன்ற துணை சபாநாயகரை வைத்து, அதிகார பூர்வ ஏடான “நமது எம்.ஜி.ஆர்” இதழை வைத்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அவமானப்படுத்தியது திருமதி சசிகலா நடராஜனும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தானே தவிர தி.மு.க. இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய திருமதி சசிகலா நடராஜனும் அவரது குடும்பத்தினரும் இப்போது முதலமைச்சரையே மிரட்டி கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக குடியரசு தின விழாவில் தனது மனைவியுடன் வந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத திருமதி சசிகலா நடராஜன் முதலமைச்சரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளார் என்பதுதான் உண்மை. ஆனால் அந்தக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், இன்றைக்கு மாநிலத்தில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டு நிலைத்த ஆட்சியின் சக்கரம் தடுமாறி நிற்கிறது.
இன்றைக்கு முதலமைச்சரையே மிரட்டியிருக்கின்ற நிலையில், இந்த மிரட்டல் குறித்தும், போயஸ் கார்டனில் அமர்ந்து கொண்டு நிலைத்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வரே மிரட்டப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுப்பதை விட இது குறித்து சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மூன்று மாதங்கள், தேர்தலுக்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிப்பால் இரண்டரை மாதங்கள், அவர் மறைந்த பிறகு செயல்பட விடாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசால் இரண்டரை மாதங்கள் என்று ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு மேல் தமிழக அரசு நிர்வாகம் முழுவதும் செத்து விட்டது. நிர்வாக எந்திரம் நிலைகுலைந்து கிடக்கிறது. ஆகவே அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் பொறுப்பு ஆளுநர் அவர்கள் உடனடியாக சென்னைக்கு வந்து முகாமிட்டு, தமிழக நலனை பாதுகாக்க நிலையான ஆட்சி அமைவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசியல் சட்டத்தை தமிழகத்தில் செயல்பட வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் அரசியல் : உடனடி நடவடிக்கை

# மக்கள் அரசியல் (1)

இப்படி ஓர் இக்கட்டான நிலையில் மக்கள், இந்நாட்டின் உண்மையான மன்னர்கள், செய்யத் தக்கது என்ன? ஒவ்வொரு தொகுதியிலும், பகுதி வாரியாக, வீடு வீடாகப் போய் விரைவில் மக்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, தங்கள் M. L. A. வை அழைத்து, தொகுதி மக்கள் சார்பாக அவர் இக் கட்டத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை அவருக்கு அறிவுறுத்தி, அதை எழுதி, அவரிடம் உறுதி மொழிக் கையொப்பம் வாங்க வேண்டும். உண்மையான மக்களாட்சி மலர விதை தூவ இதுவே உகந்த நேரம்.

# மக்கள் அரசியல் (2)
இந்த நிலையில் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தங்கள் உண்மையான எஜமானர்களான தொகுதி மக்களை அணுகிக் கருத்துக் கேட்காமல், எங்கெங்கோ போய், யார் யாரிடமோ ஆலோசனை கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். எம்.எல்.ஏ. என்பவர் மக்களால் நியமிக்கப் படும் மக்கள் ஊழியர்கள் என்ற உணர்வு பரவ வேண்டும். தனி மனிதர்களைப் போற்றுவதும், தூற்றுவதுமா அரசியல்? தனி மனிதர்களை விட்டு விட்டுத் தத்துவங்களை விவாதிக்கத் தயாராகுங்கள்.

# மக்கள் அரசியல் (3)
“மக்களா? வெறும் ஆட்டு மந்தைகள். நோட்டைக் காட்டினால் ஓட்டுப் போடும் அறிவிலிகள். தேர்தலின் போது இவர்களைப் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை கட்சித் தலைவர் / தலைவி தான் ”
இப்படி அலட்சியமாக, ஆணவத்தோடு இருக்கும் எம்.எல்.ஏ க்களை அடையாளம் காண இதுவே சரியான சந்தர்ப்பம்.
மக்களே, நம் மானம், மரியாதையை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
மக்கள் குரலே மகேசன் குரல் !

சசிகலாவால் ராஜினாமா; மனம் திறந்தார் பன்னீர்செல்வம்: தனியாகப் போராட சூளுரை

சென்னை:

சசிகலாவால் தான் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், தான் எவர் எதிர்த்தாலும் தனியாகப் போராடுவேன் எனவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்., திடீரென தியான மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரையில் அமர்ந்து 30 நிமிடங்களுக்கும் மேலாக தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து திடீர் தியானம் செய்தார். அவர் திடீர் தியானத்தில் ஈடுபட்டதால்,  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  நாளை அல்லது நாளை மறுநாள் சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் பன்னீர்செல்வம் மவுன புரட்சியில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகத்தினர், கட்சியினர் பெருமளவில் அங்கே கூடியிருந்தனர்.

முன்னதாக, எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம், அதிமுகவை விட்டு விலகுகிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.

சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், குறிப்பாக எதிர்க்கட்சிகளும் போற்றும் வகையில் முதல்வர் பதவியை சரியாக நிர்வகித்து வந்த நிலையில்,  ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென முதல்வர் பதவியை தியாகம் செய்ய சசிகலா வற்புறுத்தினார். இதனால் அதிருப்தியில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், சசிகலாவுக்கு ஓபிஎஸ் இன்று திடீர் கடிதம் அனுப்பினாராம். அதில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தாராம். இதைப் பார்த்ததும் போயஸ் கார்டன் அதிர்ச்சியில் உறைந்ததாக அதிமுக வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

இன்று இரவு 9 மணி அளவில்  ஜெயலலிதா சமாதிக்கு வந்த பன்னீர்செல்வம், தானும் சமாதி நிலையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். கண்களை இறுக மூடி, உடலில் எந்த வித அசைவும் அற்று, தியானத்தில் ஆழ்ந்தார். பின்னர் அரை மணி நேரம் கழித்து, கண்களைத் திறந்து, நீர் வழிய இருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு, மெல்ல எழுந்தவர், சமாதியை ஒரு முறை சுற்றி வந்து அப்படியே வெளியில் வந்தார். அவரிடம் கேள்வி கேட்பதற்கும், தியானம் செய்ய வந்ததன் நோக்கம் என்ன என்று கேட்பதற்கும் செய்தியாளர்கள் வற்புறுத்தி மொய்த்தனர்.

சிறிது நேர தயக்கத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் முன்னர் வந்த பன்னீர்செல்வம், பின் மனம் திறந்து, தன் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்தார். அவரது பேட்டியின் மூலம், அவர் சசிகலா குடும்பத்துடன் நேரடி மோதலுக்குத் தயாராகி விட்டார் என்பதையே வெளிப்படுத்தியது.

சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக புகார்களை சுமத்திய அவர்,  சசிகலாவின் ஆதிக்கத்திற்கு இதுவரை பணிந்து போய்க் கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தி, தனது ஸ்டைலில் அமைதியான முறையில் ஒரு புரட்சியை மெரீனாவில் நடத்திவிட்டார்.

இதன் மூலம், சசிகலா கும்பலால் அவர் தொடர்ந்து மறைமுகமாக மிரட்டப்பட்டு வந்தார் என்பதை நாட்டுக்கு சொல்லிவிட்டார்.  அவரை பதவியிலிருந்து தூக்கி விட்டு முதல்வர் பதவியில் சசிகலாவை அமர வைக்க சசிகலா குடும்பத்தினர் தீவிரமாக முயன்று வந்தனர். படிப்படியாக காய்களை நகர்த்தி வந்தனர். ஆனால் அதை தனது பாணியில் அமைதியாக எதிர்கொண்டு வந்தார் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில்தான் அவருக்கு மத்திய பாஜகவின் முழுமையான ஆசியும், ஆதரவும் கிடைத்தது. அது கொடுத்த தெம்பில் தொடர்ந்து சசிகலாவை முடிந்தவரை சமாளித்துப் பார்த்தார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆனால் அண்மையில் அவரிடமிருந்து முதல்வர் பதவியை சசிகலா கும்பல் பிடுங்கியது. சசிகலாவை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏக்கள்  தேர்வு செய்தனர். அப்போதும் கூட புன்னகையுடன்தான் இருந்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று அளித்த பேட்டி அவரது மனதை உலுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா இறந்தது குறித்து சசிகலா தரப்பு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. அழவில்லை,. சோகமடையவில்லை என்று கூறியிருந்தார் பி.எச்.பாண்டியன்.

ஓ.பி.எஸ்ஸின் பேட்டி மூலம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக உடையும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பாஜகவின் முழுமையான ஆதரவுடன் அவர் சசிகலாவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கலாம். மீண்டும் முதல்வர் பதவியை அவர் கைப்பற்றி சசிகலா கும்பலை அடியோடு விரட்டவும் முயற்சிக்கலாம். அதிமுகவையும், தமிழக அரசையும் மத்திய அரசு மற்றும் பாஜகவின் துணையுடன் ஓ.பன்னீர் செல்வம் கைப்பற்றலாம். முதல்வர் ஒருவர் இதுபோல கடற்கரையில் போராட்டம் நடத்துவது மிகவும் அசாதாரணமானதுதான்…

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியவை:

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி, அம்மா நினைவிடத்திற்கு வந்து, அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளேன். என் மனசாட்சி உந்தப்பட்டதால் இங்கு வந்து சேர்ந்தேன்.

அம்மாவின் ஆன்மா என்னை உந்துதல் படுத்தியது. எனவே உங்களிடம் நான் நின்று கொண்டுள்ளேன். புரட்சித் தலைவி அம்மா அவர்கள், நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருடைய உடல்நிலை, 70 தினங்கள் கழித்த பிறகு மோசமான நிலையை எட்டியபோது, என்னிடம் வந்து மிகவும் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

கட்சியும், ஆட்சியும், காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்ற நிலையில், என்னை வந்து சந்தித்து கேட்டபோது, மாண்புமிகு அம்மா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாற்று ஏற்பாட்டுக்கு என்ன தேவை என்று கேள்வி எழுப்பினேன். அசாதாரண சூழ்நிலை எழுந்தால் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நான் கேட்டு, அரை மணி நேரம், அம்மா நிலையைக் கண்டு அழுது புலம்பினேன்.

என்ன சொல்ல வருகிறீர்கள் என மீண்டும் கேட்டபோது, அம்மா இல்லாவிட்டால், கழக பொதுச்செயலாளர் முதல்வர் ஆகிய பொறுப்பை ஏற்று நடக்க உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். என்ன சொல்கிறீர்கள் என கேட்டேன். கழக பொதுச்செயலாளராக கழக அவைத்தலைவர் மதுசூதனன் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். முதல்வராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றனர். நான் அதை மறுத்தேன். வற்புறுத்தலுக்கு பிறகே ஏற்றேன்.

ஜெயலலிதா இறந்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து திவாகர் சார் உங்களிடம் ஒன்று சொல்லச் சொன்னார் என்று கூறினார். நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்டீர்கள். மற்றவர்கள் அமைச்சர்கள் ஆகிவிட்டனர். என் அக்காவை நான் அழைத்துக் கொண்டு ஊருக்கே போகிறேன் என்று கூறினாராம். சரி என்ன செய்ய வேண்டும் நாம் என்று கேட்ட போது, உங்களை முதல்வர் பதவியை விட்டுத்தரச் சொன்னார் என்று சொன்னார். எனக்கு வருத்தமாக இருந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது நற்பெயரை காப்பாற்றும வகையில் செயல்பட்டேன். வார்தா புயல் வந்தபோது, சிறப்பாக செயல்பட்டு, நான்கு நாட்களில் மீண்டு வந்தோம். ஜல்லிக்கட்டு பிரச்னை வந்தபோது, மத்திய அரசின் உதவியுடன் மிக விரைவில் சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆந்திராவுடன் நீர்ப் பிரசனையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இப்படி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பெயரை காப்பாற்றும் வகையில் செயல்பட்டது சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும எரிச்சலை ஏற்படுத்தியது

மற்றவர்கள் முன்னிலையில் சசிகலா தரப்பினர் இகழ்ச்சியாக பேசினர். அவமானப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியே ராஜினாமா செய்ய வைத்தார்கள். ஒட்டு மொத்த நாடும் அ.தி.மு.க., மீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும் என எண்ணி, என்னால் எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்டதே எனக்கு தெரியாது. சசிகலாவை முதலவராக்க கட்டாயப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியதால் நான் ராஜினாமா செய்தேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியே போராடுவேன்… என்று தெளிவாக அமைதியாகக் கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.

முதல்வரின் இந்த மௌனக் கலைப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சியில் அலறிய சசிகலா: பி.எச். பாண்டியனுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்

சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்களை பிஎச் பாண்டியன் வெளியிட்டதை டிவியில் பார்த்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்தாராம். இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரை செய்தியாளர்களை சந்தித்து மறுப்பு தெரிவிக்க அவர் உத்தரவிட்டாராம்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் பல்வற்றை வெளியிட்டார். அவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பேட்டியை நேரலையாக டிவியில் பார்த்துக் கொண்டிருந்த சசிகலா அதிர்ச்சியில் உறைந்து போனாராம். உடனே தன் உறவினர்களிடம் ஆவேசமாகப் பேசி, பண்ருட்டி ராமச்சந்திரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரை அழைத்து பி.எச். பாண்டியனுக்கு பதில் தர உடனே பிரஸ் மீட்க்கு ஏற்பாடு செய்ங்க என காட்டமாகக் கூறினாராம். இதை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் இருவரும் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்…
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார். எம்ஜிஆரை திமுக பொதுக்குழுதான் கட்சியைவிட்டு நீக்கியிருந்தது. எனவே அவர் மனவருத்தம் காரணமாக, பொதுக்குழு மட்டும் இதுபோன்ற முடிவை தீர்மானிக்க கூடாது. எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையை அதிமுகவில் எம்ஜிஆர் கொண்டுவந்தார். வேறு எந்தக் கட்சியிலும் இப்படி ஒரு விதிமுறை கிடையாது.

இப்போது அதிமுகவை வழிநடத்த ஒரு பொதுச்செயலர் தேவை. ஆனால் அனைவரிடமும் வாக்குப்பதிவு நடத்தி பொதுச்செயலரைத் தேர்ந்தெடுக்க போதிய கால அவகாசம் இல்லை என்பதால், பொதுக்குழு கூடி, சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக பரிந்துரை செய்தது.

மேலும், பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்களிப்பு உரிமை பறிக்கப்படவில்லை. தேவைப்படும்போது பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்.

தற்போதைக்கு பொதுச்செயலராக நியமிக்க பொதுக்குழு சட்டத்தில் வாய்ப்புள்ளது. ஆனால் பி.எச்.பாண்டியனும் அவரது மகனும் வழக்கறிஞர்கள். ஜெயலலிதாவையே சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்க வைத்தவர்கள். அதனால் அவர்கள் அப்படித்தான் ரூல்ஸ் பேசுவார்கள்.

சசிகலா பொறுப்பு பொதுச்செயலராக இருப்பதால் இப்போது கட்சி நியமனங்களை செய்கிறார். கட்சியின், நிரந்தர பொதுச்செயலராக தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் வாக்களிப்பு பெறப்படும். அதிமுக சட்டங்களை உருவாக்கிய குழுவில் பி.எச்.பாண்டியன் இருந்தது உண்மைதான். ஆனால் எம்.ஜி.ஆர் ஏன் அப்படி ஒரு ரூல்ஸ் உருவாக்கினார் என்பது எம்.ஜி.ஆருடன் இருந்த எனக்குத்தான் தெரியும் என்றார்.

 

காவிரி வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைப்பு


புது தில்லி:
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கு, மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 11வரை தினம்தோறும் காவிரி வழக்கு விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இன்றோ நாளையோ ஆளுநர் சென்னை வருவார்: உதவியாளர் தகவல்


மும்பை: 
இன்றோ நாளையோ ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என அவரது உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராகப் பதவியேற்க தயாராக உள்ள நிலையில், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், திடீரென உதகையிலிருந்து தில்லிக்குக் கிளம்பிச் சென்றார்.  பின்னர் அவர் நேற்று தில்லியிலிருந்து அப்படியே, மும்பைக்குப் பறந்து விட்டார்.
Tamilnadu Governor Vidyasagar Rao, will arrive Chennai on today or tomorrow 
இதனால் சசிகலா தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். எனவே மத்திய அரசுக்கு சசிகலாவை முதல்வராக்க விருப்பம் இல்லை என்ற செய்திகள் பரவின. இந்நிலையில், ஆளுநரின் உதவியாளர் உமேஷ் தன்னைத் தொடர்பு கொண்ட செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளுநர் இன்று மாலை அல்லது நாளை சென்னைக்கு வருவார் என்று கூறினார்.  இதனால் சசிகலா தரப்பினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதை அடுத்து, சசிகலா வரும் 9ஆம் தேதி பதவ ஏற்கக் கூடும் என்று தெரிகிறது. 

விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் என அஞ்சினார் ஜெயலலிதா: மனோஜ் பாண்டியன் பகீர்

சென்னை:

தன்னை விஷம் வைத்து கொன்று விடுவார்கல் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்தார் என்று, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் கூறினார்.

தமிழக முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் இருவரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். தமிழகத்தின் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சம்பவங்களின் பின்னணி குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
அப்போது, மனோஜ் பாண்டியன் கூறியதாவது:

2011 டிச.19க்கு ஒரு வாரத்திற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் 45 நிமிடம் என்னிடம் பேசினார். அப்போது, நான் முதல்வராக இருக்கிறேன். ஒரு பெருங் கூட்டம் முதல்வர் பதவியில் இருந்து என்னை நீக்க சதி செய்கிறது. அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றப் போகிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களில் அந்தக் கும்பலை கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் நீக்கினார். அதன் பின்னர், கட்சியின் சட்டப்பிரிவுச் செயலாளர் என்ற முறையில், கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை நான் வழங்கினேன்.

மார்ச் 30க்குப் பிறகு, சசிகலா மன்னிப்புக் கடிதம் ஒன்று கொடுத்து விட்டு, மீண்டும் உள்ளே வந்தார். அவர் ஜெயலலிதா ஆசி பெற்று உள்ளே சென்றார். அப்போது 5 பேரை மாடிக்கு ஜெ., அழைத்தார். அதில் நானும் ஒருவன். அப்போது என்னிடம், அவர்களை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன். பெங்களூருவில் அவர்கள் செய்த சதியை மறக்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு உதவியாளர் தேவை. அதனால் அவர்களை நான் அனுமதித்தேன்.

பிறகு, துக்ளக் ஆசிரியர் சோவையும் என்னையும் அழைத்த ஜெயலலிதா, எனக்கு பயமாக உள்ளது. இந்தக் கும்பல் என்னை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயமாக உள்ளது என்றார். அதற்கு 1.5 கோடி தொண்டர்களும் உங்களுக்குச் சொந்தமானவர்கள். மக்கள் உங்களைப் பாதுகாப்பார்கள். உங்களுக்கு அச்சுறுத்தல் வராது எனக் கூறினேன்.

தற்போது அதிமுக., சட்டவிதி 19 – 8 என்ற விதியின் கீழ் சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்ததாகக் கூறுகின்றனர். அதிமுகவின் கொள்கைகளை வகுப்பதுதான் பொதுக்குழு. அது தொண்டர்களைக் கட்டுபடுத்தும் எனக் கூறப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி தற்போது அவர்கள் பொதுச் செயலாளராகத் தேர்வானதாகக் கூறுகின்றனர். 20 – 2 என்ற விதியில் பொதுச் செயலாளர் என்பவர், தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும்.

தற்காலிகப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யக்கூடிய எந்த அதிகாரமும் இதில் வழங்கப்படவில்லை. சட்ட விதிகள் 205 என்ற விதிப்படி, பொதுச் செயலர் காலியாக இருந்தாலும், தாற்காலிகமாகத் தேர்வானவர் நிரந்தரமாகத் தேர்வு செய்யப்படுவார் என்பது விதி. ஜெயலலிதா, சசிகலாவை கவுன்சிலர் ஆக்கியதுகூடக் கிடையாது.

போயஸ் கார்டன் அதிமுக தொண்டர்களுக்கு கோயில் போன்றது. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். போயஸ் கார்டன் வீடு, விருது, கார் ஆகியவற்றை ஜெயலலிதாவின் நினைவாக, தமிழக மக்கள், தொண்டர்கள் வணங்க வேண்டும் என்பதற்காக அங்கே நினைவகம் அமைக்கப்பட வேண்டும்.

25 நாளில் பொதுச் செயலாளர், 60 நாளில் முதல்வர் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஜெயலலிதாவிடம் எப்படி அன்பாக இருந்திருக்க முடியும்? ஆசையில்லாதவர்களாக இருக்க முடியும்? ஜெயலலிதாவுடன் ராஜம் என்பவர்தான் நீண்ட வருடங்கள் உடன் இருந்தார். அவர் ஜெயலலிதாவின் 13 வயதில் இருந்து மரணமடையும் வரை ஜெ.,வுடன் தான் உள்ளார். அவர் தான் தாயாக உள்ளார்

மக்கள் அனைவரின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறது. தொண்டர்களை வஞ்சித்தும் நடக்கிறது. பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்கள் நாடாண்டால் என்னாகும். இவர்கள் முதல்வராக தமிழகத்தை எங்கே கொண்டு செல்வார்கள். மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்காலிக பொதுச் செயலாளருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கக்கூட அதிகாரம் கிடையாது. நிர்வாகிகள் யாரையும் நீக்கவும் முடியாது. நியமிக்கவும் முடியாது. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு என்பதுகூட தேர்தல் ஆணையம் முன்பு கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
– இவ்வாறு அவர் கூறினார்.