Home Blog Page 5693

புதிய வாக்காளர்களுக்கு பிப்., 15ல் அடையாள அட்டை: ராஜேஷ் லக்கானி

சென்னை :

 ''புதிய வாக்காளர்களுக்கு, பிப்., 15 முதல், அடையாள அட்டை வழங்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது

  தமிழகம் முழுவதும், ஜன., 5ல், புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், புதிதாக, 15.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களில், 2.32 லட்சம் பேர், தங்கள், மொபைல் போன் எண்களை கொடுத்திருந்தனர். அவர்களுக்கு, ரகசிய குறியீடு எண், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. அதை, அருகில் உள்ள, இ – சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறலாம். அதற்குரிய பணத்தை, இ – சேவை மையங்களுக்கு, தேர்தல் கமிஷன் வழங்கும்.

மொபைல் எண் கொடுக்காத வாக்காளர்களுக்கு, பிப்., 15 முதல், இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். அதற்கு முன், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், இ – சேவை மையங்களில், 25 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். வாக்காளர்கள், '1950' என்ற, கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் மொபைல் எண்களை கொடுக்கலாம். அவர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., தகவல்கள் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


கலாமுக்கு கோவில் கட்டிய திருச்சி இளைஞர்!

திருச்சி தில்லை நகரில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டு, சமூக சேவைகளும் செய்து வரும் புஷ்பராஜ் என்பவர்தான் இக்கோவிலைக் கட்டியுள்ளார். இந்த சிறிய கோவிலில், 2 அடி உயர கலாமின் சிலைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார் புஷ்பராஜ்!

இலவச கல்வி திட்டத்தில் அரசு ரூ.300 கோடி பாக்கி : மாணவர்களை சேர்க்க தனியார் பள்ளிகள் மறுப்பு

சென்னை- தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய ரூ. 300 கோடியை வழங்கினால்தான், இந்த கல்வி ஆண்டில் இலவச கல்விக்கான மாணவர்களை சேர்ப்போம் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில்,சமூகத்தில் நலிந்த இயலாத பிரிவு மற்றும் ஆதரவற்ற பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும்.

அதற்கான செலவை மாநில அரசு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சட்டத்தின் கீழ் அந்தந்த மாநில அரசுகள் அரசாணைகள் பிறப்பித்தன.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி தனியார் பள்ளிகள் நடத்துவோர், தங்கள் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவியரை சேர்க்கும் போது, அதில் 25 சதவீதம் இடங்கள், நலிந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கி இலவச கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசாணை நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை என்று தனியார் பள்ளிகள் குற்றம்சாட்டி வந்தன.

இதையடுத்து கடந்த 2014-2015ம் ஆண்டு வரை உள்ள பாக்கியை அரசு வழங்கியது. 2015-2016ம் ஆண்டு 25 சதவீத அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.
அந்த ஆண்டுக்கான செலவுத் தொகை ரூ. 125 கோடி, 2016-2017ம் ஆண்டும் அதே அளவு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.

அதற்கு ரூ. 125 கோடி என மொத்தம் ரூ. 250 கோடி அரசு தரப்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

பாக்கியுள்ள தொகையை அரசு வழங்கினால் தான் இந்த ஆண்டில் 25 சதவீதத்தின் கீழ் குழந்தைகளை சேர்ப்போம். இல்லை என்றால் சேர்க்கமாட்டோம் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த 2015-2016ம் ஆண்டுக்கான செலவுத் தொகை ரூ. 125 கோடியை வழங்க சட்டப் பேரவையில் அறிவித்தனர். அதனால் அந்த தொகை விரைவில் வழங்கப்படும்.
மற்ற ஆண்டுக்கான தொகையும் அரசு விரைவில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

ரூ.20க்கு புடவை விற்பனை. அலைமோதும் பெண்கள் கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ரூ.20க்கு புடவை விற்கப்படுவதால் பெண்கள் கூட்டம் அந்த கடையை நோக்கி அலைமோதுகிறது.

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை ஊக்குவிக்கும் விதமாக ரூ.20க்கு தினமும் 500 புடவைகளை விற்பனை செய்வதாக கர்நாடக மாநிலத்தில் பிதார் என்ற பகுதியில் இயங்கி வரும் சிருஷ்டி திருஷ்டி சாய் சென்டர் என்ற ஜவுளிக்கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
முதலில் ரூ.1க்கும், பின்னர் ரூ.15க்கும் புடவைகள் விற்பனை செய்வதாகவும், தற்போது ரூ.20க்கு தினமும் 500 புடவைகள் விற்பதாகவும், முதலில் வரும் 500 பெண்களுக்கு இந்த புடவைகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தினமும் 12 மணி முதல் 2 மணி வரை ரூ.20க்கு இந்த கடையில் புடவைகள் வழங்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு மணி நேரமும் இந்த கடையில் பெண்கள் கூட்டம் பெருமளவு காணப்படுகிறது.

 

அன்புமணி ராமதாசுக்கு திடீர் நெஞ்சுவலி! பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி

தர்மபுரி: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் இன்று கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தர்மபுரிக்கு வந்தார். அங்கே கட்சி நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதனிடையே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் சில நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்துவிட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ். சிகிச்சைக்குப் பின்னர் அன்புமணி நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாக்அப் மரணம் : விசாரணை நடத்த கம்யூ. கோரிக்கை

லாக்அப் மரணம் – தவறிழைத்த
காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்த
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தல்!
தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் போலிஸ் காவலில் இருந்த போது போல்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பரின் மகன் பாண்டியராஜன் (34) மர்மமான முறையில் இறந்துள்ளார்.
அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. காவலர்கள் அடித்ததால் தான் அவர் இறந்திருக்கக்கூடும் என்று குடும்பத்தினரும், பொதுமக்களும் சந்தேகிக்கிறார்கள். பாண்டியராஜன் பின்னிரவு சுமார் 12.15 மணிக்கு குடிக்கத் தண்ணீர் கேட்டதாகவும்,  அதன் பிறகு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் காவல்நிலையத்திற்கு அடுத்த வளாகத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் அவர் இறந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட காரணமும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்றதாகச் சொல்லப்படும் விவரங்களும் நம்பத்தகுந்ததாக இல்லாததோடு, சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.  பொதுமக்களும், குடும்பத்தினரும் சொல்லுவது போல் போலிஸ் காவலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்ப இடம் உள்ளது. 
எனவே, காவல்நிலையத்தில் சம்பவம் நடந்த போது பணியில் இருந்த  அதிகாரிகள் மற்றும் காவலர்களை பதவி இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும், உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
3-2-2017

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பேன்: பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் விளக்கம் அளிக்க தயார் என பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி இவ்வாறு கூறினார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அயானாவரத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு

அயானாவரம்: அயானாவரத்தில் வெடிபொருள் போன்ற சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விளையாடும்போது குழந்தைகள் எடுத்த பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டுபிடிக்கப்பட்ட பொருள் ராணுவத்தில் பயன்படுத்த கூடிய பொருள் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

அம்மனுக்கு நகை செய்து தருவதாகக்கூறி பூசாரியிடம் 4 சவரன் திருட்டு

ரூ. 2 லட்சம் செலவில்
அம்மனுக்கு வெள்ளி அலங்கார வளையம்  செய்து தருவதாக கூறி
பூசாரியிடம் 4 சவரன் அபேஸ்
வண்ணாரப்பேட்டையில் நூதன திருட்டு
 
சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில், ரூ. 2 லட்சம் செலவில், அம்மனுக்கு வெள்ளியில் அலங்கார வளையம்  செய்து தருவதாக கூறி, பூசாரியிடம், 4 சவரன் செயினை நூதன முறையில் திருடி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன், இவர், புரசைவாக்கம் , பாதாள பொன்னியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 31மற்றும் 1ம் தேதி அன்று, இந்த கோவிலுக்கு’ கார்த்திக் என்பவர் வந்துள்ளார். விஸ்வநாதனிடம், தான் வெளியூரில் இருந்து வருவதாக தெரிவித்த அவர், வேண்டுதலின் பேரில், அம்மனுக்கு ரூ.2 லட்சம் செலவில் அலங்காரம் வளையம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு கார்த்திக் பாரிமுனை வந்துள்ளார். வெள்ளியில் அலங்கார வளையம் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார். பின்னர், விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு, வன்னாரப்பேட்டைக்கு கார்த்திக் வந்து, அங்குள்ள பிரபல துணிக்கடைக்கு சென்று, அம்மனுக்கு 10 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பட்டுப்புடவைகள் எடுத்துள்ளனர். அதை தொடர்ந்து, இரண்டு குர்தாவும் கார்த்திக் எடுத்துள்ளார்.
அதை கார்த்திக் போட்டு, அழகு பார்த்துள்ளார். அப்போது, பூசாரி கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை கார்த்திக் போட்டுப்பார்க்க கேட்டுள்ளார். பூசாரி விஸ்வநாதன் தயங்கியபோது, கார்த்திக் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த பையை விஸ்வநாதனிடம் கொடுத்து கவனத்தை திசை திருப்பியுள்ளார். பணம் கையில் இருக்கும் தைரியத்தில், விஸ்வநாதன் 4 சவரன் செயினை கழட்டி காரத்திடம் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, மற்றொரு குர்த்தாவை விஸ்வநாதன் போட்டுப்பார்க்க , டிரெஸ்சிங் அறைக்கும் கார்த்திக் அனுப்பி வைத்துள்ளார்.  அந்த நேரத்தில், கார்த்திக் தங்க செயினுடன் தப்பிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஸ்வநாதன், கார்த்திக் கொடுத்த பணப்பையை திறந்துப்பார்த்தார். அதில், வெள்ளை காகிதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் உடனடியாக வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, துணிக்கடையில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..    
***
இராயபுரம் செய்தியாளர் இ.முகமது முஸ்தபா

ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடக்கம்

*ஜல்லிக்கட்டு: காளைகள் முன்பதிவு தொடங்கியது!*
அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடக்கிறது.காளைகளை பரிசோதனை செய்து உடல் தகுதிச் சான்று வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.கால்நடை பராமரிப்புத் துறையின் கட்டுப்பாட்டிலேயே ஜல்லிக்கட்டு நடக்கிறது.