Home Blog Page 5694

சிரிக்க விடலாமா? : உத்தரவு கேட்கிறார் பவர்ஸ்டார்!

நிதின் சத்யா – பவர்ஸ்டார் – V.R.விநாயக் கூட்டணியில் உருவாகும் படம் ‘சிரிக்க விடலாமா’..!
‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.. சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா,பவர்ஸ்டார் சீனிவாசன் & V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.

இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் V.B.காவியன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ‘ஆயுதபூஜை’ சி.சிவகுமார் மற்றும் ‘உன்னை கொடு என்னை தருவேன்’ கவி காளிதாஸ் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவை K.S.முத்து மனோகரன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவனிக்கிறார் S.R.முத்துக்கொடப்பா.

பாடகர்கள்: வேல்முருகன், ஜெயக்குமார்
நடனம்: ரமேஷ் கமல், அக்சயா ஆனந்த்
கலை: ஏ.சி.சேகர்
தயாரிப்பு நிர்வாகி: மனோகரன்

தங்கம் விலை குறைவு

தங்கம் விலை குறைவு
22 கேரட் தங்கம் ஒரு கிராம் – ரூ.2,805
22 கேரட் தங்கம் ஒரு சவரன் – ரூ.22,440
24 கேரட் தங்கம் 10 கிராம் – ரூ.29,530
வெள்ளி: ஒரு கிராம் – ரூ.45.10
வெள்ளி கட்டி: ஒரு கிலோ – ரூ.42,115
*ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்*
வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 53.97 புள்ளிகள் உயர்ந்து 28,280.58. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 4.40 புள்ளிகள் அதிகரித்து 8,738.65.
*இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு*
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்தது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் விற்றது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.33. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.37.
*காசிமேட்டில் மீன் வியாபாரம் சரிவு*
கடலில் எண்ணெய் படலம் மிதப்பதால், மீன்களை வாங்க சென்னை மக்கள் அச்சப்படுகின்றனர்.இதனால் சுமார் 2000 டன் மீன்கள் விற்காமல் தேக்கம் அடைந்துள்ளன.ஆனால் காசிமேடு மீன் சந்தையில் விற்கப்படுவது ஆந்திர மீன்கள் என மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.எனவே மக்கள் அச்சமின்றி மீன்களை வாங்கிச் செல்லலாம் என கூறியுள்ளனர்.

தூத்துக்குடி காவல் நிலையத்தில் கைதி உயிரிழப்பு

தூத்துக்குடி சிதம்பரநகர் தேவாலயத்தில் நடத்த தகராறு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த வியாபாரி பாண்டியராஜன் சாவு.

கோயில் விழாவின் போது பெண் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாண்டியராஜ் மீது வழக்குபதியப்பட்டது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாண்டியராஜ் தெற்கு காவல் நிலையத்தில் உயிரிழந்த்துள்ளார்.

பாண்டியராஜன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

வீறுகொண்டு வரும் விஜயகாந்த் தொண்டர்கள் உற்சாகம்

ஜெயலலிதா மறைவிற்கு பின் தேமுதிக தனது அரசியல் பயணத்தில் கடும் சிரத்தைகளை எடுத்து வருகிறது

உடல்நிலை சரியில்லாதவர் என தேமுதிக தலைவரை சட்டமன்ற தேர்தலின் போது
கடுமையாக அதிமுக நாலந்தர பேச்சாளர்கள் போல் பல முக்கிய நிர்வாகிகளே
பேசினார்கள்

விமர்சிக்கப்பட்ட  விஜயகாந்த் தனது படை பலத்தை பெருக்குவதில் தமிழ்நாடு முழுவதும் பவனி வருகிறார்

விமர்சனம் செய்தவர்கள் நிலை என்ன ஆனது என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை

இன்று கேப்டன் அரசியல் செயல்பாடைக் கண்டு அவரது உடல்நிலையில் எந்த
பிரச்சனையும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் தோற்றதில் புதுப்பொலிவுடன்
வலம் வருவதைக் கண்டு அதிமுக,திமுக, கட்சிகள் அலறி துடிக்க ஆரம்பித்துள்ளன

கலைஞர் தலைமை, செயல் தலைமையென. ஸ்டாலினுக்கு பெயர் அங்கும் அதிருப்தி
இருப்பதை அழகிரி பிறந்த நாள் போஸ்டரில் காண முடிந்தது, ஜெயலலிதா
மறைவையொட்டி முதல்வர் பன்னீர்செல்வம்,சசிகலா, என அதிமுக கலகலக்க இவர்கள்
இருவரையும் தீபா கலங்கடிக்க

பிரச்சனையில்லாமல் பவனி வருவது தேமுதிக தான்

அலங்காநல்லூர் போரட்டத்தை துவக்கியவர் என கேப்டன் போற்றப்பட,
போரட்டத்திற்கு உதவியவர்கள் என நடுக்குப்பம் மக்களை காவல் துறை வீடு
புகுந்து நொறுக்கியது

அதைக்கண்டு அறிக்கைகள் பலரிடம் இருந்து பறக்க நமது  கேப்டன் மட்டுமே அவர்கள் வீடுகள் இருக்கும் நடுக்குப்பம் நோக்கி  பறந்தார்

மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லி பத்து லட்ச ரூபாய்கான உதவிகளை செய்து
விட்டு எல்லோருக்கும் முன்னுதாரண தலைவராக தன்னை அடையாளப்படுத்தினார்
அண்மையில்

மேலும் சாலையோரம் சாப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், மக்களுடன்
நான்,தொண்டர்களுடன் நான் என்பதை உணர்த்தும் வகையில் உங்களுடன் நான் என்ற
அற்புத நிகழ்வை ஏற்படுத்தி மக்களை சந்தித்து வருகிறார்

தமிழக அரசியல் மிளிரும் தலைவராக வலம் வரும் கேப்டனை மாற்றுக்கட்சியினர் மூக்கில் விரல் வைத்து பார்க்க துவங்கி விட்டனர் என்பதே உண்மை

10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லுபடியாகும்படி: ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “10 ரூபாய் நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், ரூபாய் குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளன. அவை சற்றே மாறுபட்டு தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாக கூடியவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவை” என்றும் தெரிவித்துள்ளது. மேலும் “பொதுமக்கள் இத்தகு முழு விவரங்களை அறியாததால் தோன்றும் கோட்பாடுகளுக்கு மதிப்பு தராமல், அவற்றை ஒதுக்கித் தொடர்ந்து இந்த நாணயங்களை தங்களின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் தயக்கமின்றி, சட்டப்படி செல்லுபடியாகும்படி பயன்படுத்திட இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்டத்தை
பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்தக்கோரி  நூற்றுக்கும் மேற்பட்ட
பெண்கள் முற்றுகையிட்டனர்.

தேசிய ஊரக வேலை வாயப்பு உறுதியளிப்பு திட்டத்தில் சட்டமாக்கப்பட்டுள்ள 100
நாட்கள் வேலையை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி வேலை
வழங்கக்கோரி கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட
பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட
பெண்கள் அனைவரும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுக்களை வழங்கி விட்டு
கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால்  அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பாவூர் செ.பிரமநாயகம்


தூத்துக்குடி- சென்னைக்கு புதிய விமான சேவை தொடக்கம் : ஏர் கார்னிவெல் அறிமுகம்

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஏர் கார்னிவெல் நிறுவனம் புதிய விமான சேவையை வரும் 20 ம் தேதி தொடங்குகிறது.

 கோயமுத்துாரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எஸ்.ஐ நாதன் என்பவருக்கு சொந்தமான ஏர் கார்னிவெல் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு புதிய விமான சேவை இயக்கப்பட இருக்கிறது.

 வரும்  20 ம் தேதி மதியம் 2.25 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் விமானம் 3.50 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. தூத்துக்குடியிலிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.25க்கு சென்னையை சென்றடைகிறது. 70 பேர் செல்லக்கூடிய இவ்விமானத்தில் 1450 ரூபாய் விமான பயண கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best Regards,

Senkottai Sriram

(Journalist / Writer)

Executive Editor,
Kalki's Deepam Magazine

(Administrator, Editor : www.dhinasari.com)

Cell: +91 94445 54500 / 98840 49108

Facebook | Twitter | LinkedIn  | Blog

(Res: address:)

F-101, VGN Southern Avenue,
Potheri, Kattankulathur PO
(Opp. Road to SRM University)
Chennai – 603 203

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக கலவரம் – நாகாலாந்து மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் சூறை

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக பழங்குடியின அமைப்புகள், தலைநகர் கோகிமாவில் நேற்று வன்முறையில் ஈடுபட்டன. மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன.

கோகிமா:

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்து தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியின அமைப்புகள், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆனாலும், தேர்தலை நடத்துவதில் மாநில அரசு தீவிரமாக இருப்பதால், பழங்குடியின அமைப்புகள், தலைநகர் கோகிமாவில் நேற்று வன்முறையில் ஈடுபட்டன. மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன. கோகிமா மாநகராட்சி கட்டிடம், மண்டல போக்குவரத்து அலுவலகம், கலால் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

முதல்-மந்திரி ஜெலியாங் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்று பழங்குடியின அமைப்புகள் அறிவித்துள்ளன.

7 லட்சம் பேரை ஏமாற்றி 3,400 கோடி சுருட்டிய 3 பேர் கைது

நொய்டா:  உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை ஏஎஸ்பி அமித் பதக்
கூறியதாவது: டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைன்
வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று  ஆசைக்காட்டி
உறுப்பினர்களாக பலரை சேர்த்து பணம் திரட்டியுள்ளது. இந்த வகையில், 7 லட்சம்
பேரை ஏமாற்றி சுமார் 3,400 கோடியை திரட்டியது.  அந்த நிறுவனம் மோசடி
செய்ததால் உரிமையாளர் அபினவ் மிட்டல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஸ்ரீதர்
மற்றும் மகேஷ் ஆகியோரை  போலீசார் கைது செய்தனர். மேலும், நிறுவனத்தின்
வங்கி கணக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கணக்கில் 500 கோடி இருப்பு
இருந்தது.

Best Regards,

Senkottai Sriram

(Journalist / Writer)

Executive Editor,
Kalki's Deepam Magazine

(Administrator, Editor : www.dhinasari.com)

Cell: +91 94445 54500 / 98840 49108

Facebook | Twitter | LinkedIn  | Blog

(Res: address:)

F-101, VGN Southern Avenue,
Potheri, Kattankulathur PO
(Opp. Road to SRM University)
Chennai – 603 203

லட்சுமி கடாட்சம் நிச்சயம்: ரத சப்தமியின் மகிமை!

மகாலட்சுமியின் அருளை அள்ளித்தரும் தினமாகத் திகழ்வது ரத சப்தமி ( 03-02-2017)

உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாக கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வார்கள்.

சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன.

சூரிய சக்தியால் தான் பயிர்கள் வளர்கின்றன. ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. கோடை, மழை, குளிர் உள்ளிட்ட பருவநிலைகள் சூரியனை சுற்றியே அமைகின்றன. சூரியனை கடவுளாக வழிபட்டு வரும் மதத்திற்கு ‘சவுமாரம்’ என்று பெயர்.

சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களேடு ஒளி மண்டலத்தில் உலாவரும் உயர்வையும் அடைந்தார். இதனால் இருளை அழிக்கவும், ஒளியை உண்டாக்கவும், வெப்பத்தை தரக்கூடிய வல்லமையையும் பெற்றார்.

காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவான் முதலான 12 சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்களானதால், பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்தர்’ என்பார்கள்.

சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார்.

அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் சமயமே மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சித்திரை மாதப்பிறப்பை சித்திரை விசு என்றும், ஐப்பசி மாதப்பிறப்பை ஐப்பசிவிசு என்றும் கூறுவர். சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியர்களாக கொள்ளப்படுகிறார்.

சூரியன் ஏறிவரும் தேருக்கு ஒரு சக்கரம் உண்டு. அந்த தேரில் பச்சை வண்ணமுடைய ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு இழுக்கின்றன. இந்தக் குதிரைகளை ஓட்டுகிற ரத சாரதி அருணன். இவர் காலில்லாதவர். சூரியனின் ரதம் பொன்மயமானது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும், மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும் ஆறு ருதுக்களை குறிக்கின்றன.

சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கின்றன. சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றிவந்து உதயம், மத்தியானம் அஸ்தமனம், அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி.

அவரது பிறந்த தினத்தையே ரத சப்தமியாக கொண்டாடுகின்றனர்.

சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மறுபெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை கழிந்து, பவுர்ணமி கழிந்த 7–ம் நாளை ‘சப்தமி திதி’ என்கிறோம்.

உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில், 7–வது நாள் வரும் சப்தமி திதியே ரத சப்தமி ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகிறது. அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும், ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. அன்று சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட செல்வது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் போன்றவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது.

ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர் களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

அன்று சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை செய்து இரண்டையும் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி ரொட்டி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும்.

வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.

‘ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹீ
தன்னோ சூரிய பிரசோதயாத்’
– என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லலாம்.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார்.

சூரியனுக்கு உகந்தவை:

தானியம்     – கோதுமை
மலர்     – செந்தாமரை
வஸ்திரம்     – சிவப்பு ஆடை
ரத்தினம்     – மாணிக்கம்
நிவேதனம்    – கோதுமை சக்கரன்னம்
சமித்து     – வெள்ளெருக்கு
உலோகம்     – செம்பு

7 வாகனங்களில் பவனி  வரும்  ஏழுமலையான்  

திருப்பதி ஏழு மலையான் கோவிலில் ரதசப்தமி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு ஏழு மலைகள் இருப்பதால் ஏழு குதிரைகள் போல் நினைத்து இங்கு ரதசப்தமி கொண்டாடப்படுகிறது.

திருமலையில் காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை ஏழு வாகனங்களில் மலையப்பன் வலம் வருவார். பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையான் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் தான் வலம் வருவார்.

ரத சப்தமியன்று ஒரே நேரத்தில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருவது அர்த்த பிரம்மோற்சவம் என்பார்கள்.

வாயு புத்திரனான அனுமன் சூரியனிடம் இருந்தே கல்வி கற்றான் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.

பீஷ்மருக்கு  நீர்க்கடன்:

மகாபாரத போரில் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து இருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் வரம் பெற்று இருந்ததால், பீஷ்மரின் உயிர் உடனடியாக பிரியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்த வண்ணம் சென்றனர்.

அப்போது அங்கு வந்த வியாசரிடம், ‘நான் என்ன பாவம் செய்தேன். என் உயிர் போகவில்லையே’ என்று பீஷ்மர் மனம் வருந்தினார்.

அதற்கு வியாசர், ‘ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை செய்யாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருந்தாலும் பாவம் தான் என்றார். உடனே பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை துச்சாதனன் துகில் உரிந்த போது அதை தடுக்காமல் இருந்த தவறு நினைவுக்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா? என்று கேட்டார்.

அதற்கு வியாசர் எப்பொழுது நீ உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டது. இருந்தாலும் கண்டும், காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது விதி என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பை கொண்டு தன்னை சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். அதற்கு வியாசர் அவரிடம் எருக்க இலை ஒன்றை காட்டி எருக்கஇலை சூரியனுக்கு உகந்தது. சூரியனின் சாரம் உள்ளது. ஆகவே அந்த இலைகளால் உன் அங்கங்களை அலங்கரிக்கிறேன் என்று கூறி பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். இதனால் அமைதியாக இருந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசியன்று உயிர் நீத்தார்.

பீஷ்மருக்கு நீத்தார் கடன் செய்ய யாரும் இல்லாததால் தர்மர் வருத்தப்பட்டார். இதுகுறித்து அவர் வியாசரிடம் கூற, அதற்கு அவர் சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரத சப்தமி நாளில் நாடு முழுவதும் மக்கள் பீஷ்மருக்காக நீர்க்  கடன் அளிப்பார்கள் என்று கூறினார். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்து கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். பீஷ்மருக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார். அதனால் தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், எருக்க இலையை உடலில் பல அங்கங்களிலும் வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது.

ரத ஸப்தமி தினம் 3-2-2017, வெள்ளிக்கிழமை.
Ratha Sapthami Snanam and Arghyam

சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வட திசையை நோகி திருப்புவதால் இன்று ரத ஸப்தமி என்று பெயர்.
இன்று காலையில் ஏழு எருக்க இலைகள் பச்சரிசி, அருகம் புல் மஞ்சள் பொடி பசுஞ்சாணி ஆகியவற்றை தலையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி
கீழ் கண்ட மந்திரம் சொல்லி ஸ்நானம் செய்வதால் ஏழு பிறவிகளில் செய்த பாபம் அகலும்.

रथसप्तमी स्नान – अर्घ्य मंत्राः
सप्त सप्ति प्रिये देवि सप्त लोक प्रदीपिके।
सप्त जन्मार्जितं पापं हर सप्तमि सत्वरम्।। 1
यद्यत् सर्वं कृतं पापं मया सप्तसु जन्मसु।
तन्मे शोकं च मोहं च माकरी हन्तु सप्तमी।। 2
नौमि सप्तमि देवि त्वां सर्व लोकैक मातरम्।
सप्तार्क पत्र स्नानेन मम पापं व्यपोहय।। 3

इति स्नात्वा अर्घ्यं दद्यात्

सप्त सप्ति रथ स्थान सप्त लोक प्रदीपक।
सप्तम्या सह देव त्वं गृहाणार्घ्यं दिवाकर।। 4
दिवाकराय नमः अर्घ्यं समर्पयामि।

ரத ஸப்தமி ஸ்னான அர்க்ய மந்த்ரம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு ஸங்கல்பம் செய்துகொண்டு ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும்.

ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக
திவாகர க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே

திவாகராய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம், இதமர்க்கியம்.