தங்கம் விலை குறைவு
22 கேரட் தங்கம் ஒரு கிராம் – ரூ.2,805
22 கேரட் தங்கம் ஒரு சவரன் – ரூ.22,440
24 கேரட் தங்கம் 10 கிராம் – ரூ.29,530
வெள்ளி: ஒரு கிராம் – ரூ.45.10
வெள்ளி கட்டி: ஒரு கிலோ – ரூ.42,115
*ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்*
வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 53.97 புள்ளிகள் உயர்ந்து 28,280.58. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 4.40 புள்ளிகள் அதிகரித்து 8,738.65.
*இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு*
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்தது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் விற்றது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.33. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.37.
*காசிமேட்டில் மீன் வியாபாரம் சரிவு*
கடலில் எண்ணெய் படலம் மிதப்பதால், மீன்களை வாங்க சென்னை மக்கள் அச்சப்படுகின்றனர்.இதனால் சுமார் 2000 டன் மீன்கள் விற்காமல் தேக்கம் அடைந்துள்ளன.ஆனால் காசிமேடு மீன் சந்தையில் விற்கப்படுவது ஆந்திர மீன்கள் என மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.எனவே மக்கள் அச்சமின்றி மீன்களை வாங்கிச் செல்லலாம் என கூறியுள்ளனர்.



