Home Blog Page 5692

டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வாஷிங்டன்:

இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அண்மையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், ஏழு நாடுகளிலிருந்து அகதிகள் மற்றும் பயணிகள், அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார்.இதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த உத்தரவின் காரணமாக அமெரிக்கா வாழ் வெளிநாட்டவர்கள் சட்டச் சிக்கலுக்கும், மன உலைச்சலுக்கும் ஆளாவர்கள் என வாஷிங்டன் மற்றும் மினிசோட்டா மாகாணங்களை சேர்ந்த சிலர் , சியாட்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .

வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

‛கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். அதிபரின் உத்தரவு நாட்டின் பாதுகாப்புக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது’ எனக் கூறினார்.

ரயில் மாறி ஏறிய சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்!

புது தில்லி:

ரயில் மாறி ஏறியதால், 15 வயது சிறுமி கடத்தி சீரழிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது உறவினர்களை பார்ப்பதற்காக ரயில் ஏறச் சென்றார். ஆனால், அவர் தவறுதலாக தில்லி செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். தில்லி சென்று அவர் இறங்கியதும், உதவிக்காக தண்ணீர் பாட்டீல் விற்கும், அர்மான் என்பவரை அணுகியுள்ளார். அந்த நபர், சிறுமியை ஏமாற்றி சராய் கலே கான் பகுதிக்கு அழைத்து சென்று, தனது மனைவி ஹசீனா உதவியுடன் பல முறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள், அந்தச் சிறுமியை, ரூ.70 ஆயிரத்திற்கு பப்பு யாதவ் என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர்.

சிறுமியை வாங்கிய பப்பு யாதவ், அவரைத் திருமணம் செய்து, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார். சில நாட்களுக்கு பின் அங்கிருந்து தப்பிய, அந்தச் சிறுமி, ரயில் நிலையத்திற்கு வந்தார். மீண்டும் அங்கு அவரைப் பார்த்த ஹசீனா, மயக்கும் வகையில் பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அவருக்குக் கொடுத்தார். அதில் அந்தச் சிறுமி மயக்கமடைந்தார். பின்னர் அந்தச் சிறுமியை, 22 வயது இளைஞர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஹசீனா ஒப்படைத்தார். அந்த இளைஞரும் சிறுமியை ரயில் நிலையம் அருகேயே பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிச் சென்றார்.

மயக்கம் தெளிந்த சிறுமி, அங்கிருந்த பொது மக்கள் உதவியுடன் தப்பித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள், சராய்சலேகான் மற்றும் பரிதாபாத்தில் சோதனை நடத்தி, பப்புயாதவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். தப்பிச் சென்ற மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! 6 ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகும்.

கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் அரசு ஒதுக்கிய ரூ.25 கோடியிலும், பக்தர்கள் நன்கொடையாலும் நடந்தன.

இதில் புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, கோவிலில் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் பிரகாரங்கள் விரிவாக்கப்பட்டு பரிவார விமானங்கள் மற்றும் மண்டபங்கள் புதுப்பித்து பஞ்சர்வணம் செய்யப்பட்டுள்ளன.

திருப்பணிகள் நிறைவடைந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர், கடைவீதி விநாயகர், சன்னதி வீதி விநாயகர், செல்லாண்டியம்மன், மாரியம்மன், கருப்பண்ணசுவாமி மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதனையொட்டி வரும் 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் க.தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

கும்பாபிஷேக விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்! 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகும்.

கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் அரசு ஒதுக்கிய ரூ.25 கோடியிலும், பக்தர்கள் நன்கொடையாலும் நடந்தன.

இதில் புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, கோவிலில் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் பிரகாரங்கள் விரிவாக்கப்பட்டு பரிவார விமானங்கள் மற்றும் மண்டபங்கள் புதுப்பித்து பஞ்சர்வணம் செய்யப்பட்டுள்ளன.

திருப்பணிகள் நிறைவடைந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர், கடைவீதி விநாயகர், சன்னதி வீதி விநாயகர், செல்லாண்டியம்மன், மாரியம்மன், கருப்பண்ணசுவாமி மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதனையொட்டி வரும் 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் க.தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

கும்பாபிஷேக விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விவேகானந்த நவராத்திரி பிப்.6ல் துவங்குகிறது!: ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர்

குரு என்ற சொல்லுக்கு இருளை நீக்குபவர் என்று பொருள். அறியாமை இருளகற்றும் ஞானாசிரியரை குரு என்போம். ஆசான், ஆசிரியர், ஆசார்யர் என்றெல்லாம் சொல்லி வணங்கும் குருவுக்கு முற்காலத்தில் தகுந்த தட்சிணை கொடுத்து மரியாதை செய்து காத்தும் வந்தார்கள், குரு தட்சிணை என்ற பெயரில்! அந்த குருவின் ஒரு உருவாகவே புத்தகங்கள் திகழ்கின்றன. நல்ல நூல்கள், நம் அறிவுக் கண் திறப்பவை மட்டுமல்ல, நம் வாழ்க்கையை செப்பனிடும் பணியையும் செய்பவை!

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்து புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல அச்சு. தெளிவான உரு. விரும்பிப் படிக்கும் தலைப்புகள். அவற்றில் சில மொழிபெயர்ப்புகளாக இருந்தாலும் எளிய நடை! அத்துடன், ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர், ராமகிருஷ்ணானந்தர் ஆகியோரின் பிறந்த நாள்களில் 40% தள்ளுபடி விலையில் மடத்தின் புத்தகங்களை அளித்து, எளியோருக்கும் அவை சென்று சேர வகை செய்வது. மடத்தின் பெரும்பாலான நூல்கள் என் இல்லத்து நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

வழக்கம்போல் மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றுவிட்டு, மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இன்றைய பேப்பர், அச்சு மை விலையேற்றம் எல்லாவற்றையும் தாக்குப்பிடித்து, மடத்தால் மட்டும் எப்படி இவ்வளவு மலிவாகவும் தள்ளுபடியிலும் புத்தகங்களைத் தரமுடிகிறது என்று கேட்டேன். அதற்கு இப்போது புதிய திட்டம் ஒன்றை முன்வைத் திருக்கிறோம் என்றார்.

“புத்தகப் பிரிவுக்கு என்று ஒரு வைப்புநிதி, கார்பஸ் ஃபண்ட் துவங்க யோசித்திருக்கிறோம். ரூ. 6.5 கோடி அளவுக்கு நன்கொடை திரட்டி, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு இந்தப் பணியை தொடர்ந்து செய்ய திட்டம். மடத்தின் வெளியீடுகளை விலை ஏற்றாமல் தொடர்ந்து இப்பணி நடக்க வேண்டும். குறைந்தது ரூ.5 ஆயிரம், அல்லது நூறு டாலர் அளவில் நன்கொடையாளர்களிடம் பெற்று, வைப்பு நிதியில் சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.” என்றார்.

மடத்து நூல்கள் தொடர்பாக பேச்சு சென்றது. அப்போது ஒரு தகவலைச் சொன்னார் சுவாமிஜி. ஒருமுறை, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், இந்திய தத்துவங்கள், மரபு மற்றும் இந்தியாவைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும், அதற்கு எந்த புத்தகத்தைப் படிப்பது என்று ராஜாஜியிடம் கேட்டாராம். அதற்கு ராஜாஜி, ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் செல்லுங்கள். அங்கே, ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் என்று ஒரு புத்தகம் உள்ளது. அதனைப் படியுங்கள் என்று அவருக்கு வழிகாட்டினாராம்.

இதைச் சொல்லிவிட்டு, அமரர் கல்கி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மீதும் குருமார்கள் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார். அதனால்தானோ, அவர் தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட கடைசி இதழின் அட்டைப்படமும் சாரதா தேவியாரின் படமாகவே இருந்தது என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

மடத்தில் வெளியான நூல்களில் மிகவும் பிடித்த நூல் என ஸ்ரீராமானுஜர் நூலைக் குறிப்பிடுவேன். அந்த நூலின் பின்னணி குறித்துக் கேட்டேன். “வங்கத்தில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தொடராக எழுதினார். வங்க மக்களுக்கு ராமானுஜரை அறிமுகம் செய்வதுபோல் அமைந்த அந்த நூலை கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழாக்கினார். அது, வங்கத்துக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கே ராமானுஜரின் வாழ்க்கையை பரவலாக அறிமுகம் செய்தது போல் ஆனது” என்றார் சுவாமி.

விமூர்த்தானந்தர் ராமகிருஷ்ணவிஜயம் ஆசிரியராக இருந்தபோது, இலக்கியம், ஆன்மீகம் இணைந்து, அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை உள்ளடக்கிய, ‘கரு உண்மை, உரு கற்பனை’ என நவீன கண்ணோட் டத்தில் சிறுகதைகளை எழுதினார். அது குறித்து கருத்து கேட்பார். என் விமர்சனத்தை அவரிடம் முன்வைப்பேன். அதுகுறித்து நினைவூட்டிய போது, அவை 5 தொகுதிகளாக நூல்களாகியுள்ளன என்றார்.

பேசிக் கொண்டிருந்ததில் அவர் தெரிவித்தவை…விவேகானந்தர் வந்தார் இந்து மதம் காக்கப் பட்டது என்றார் ராஜாஜி. மடத்தின் நூல் பிரிவு இந்து தர்ம பாரம்பரிய நூல்களைப் பதிப்பித்து அவற்றைக் காத்து வருகிறது. சுமார் ஆயிரம் தலைப்புகளுக்கு மேல் நூல்கள் உள்ளன. பாரம்பரிய நூல்கள், ஆங்கிலம், தமிழில் பல உள்ளன. சுவாமி தபஸ்யானந்தர் வேத உபநிடத விளக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 63 நூல்கள் எழுதியுள்ளார். உபநிடதங்கள், ருத்ரம், தேவீ பாகவதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், வேத மந்திரங்கள், உபநிஷத் சாரம் என பல சம்ஸ்க்ருத நூல்களை ஆதார பூர்வமாக மொழி பெயர்த்தவர் அண்ணா சுப்ரமணியம். அண்ணா என்ற பெயரில் அவர் மொழி பெயர்த்தவை இன்றும் மடத்தின் நூல்களில் பளிச்செனத் தெரிபவை.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முதல் துறவி ஆசிரியராக இருந்தவர் விபுலானந்தர். அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். நம் பாரதப் பண்பாடு, பாரம்பரியப் பெருமைகளை நூல்களாக்கினார். யோகா தியானம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இளைஞர்களுக்கு மட்டுமேயான நூல்களே சுமார் நூற்றுக்கும் மேல் உள்ளன. சுய முன்னேற்றம், ஊக்கம், உற்சாகமூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவற்றுடன், சுவாமி விவேகானந்தர் இளைஞர் களுக்குக் கூறும் செய்திகள், விடுக்கும் அறைகூவல்கள், வாழ்க்கையை வெற்றிகரமாகக் கட்டமைக்கும் வழிகள் ஆகியவற்றைத் தாங்கிய நூல்கள் இளைஞர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றவை. ‘வாழக் கற்றுக் கொள்’ என்ற நூல் நிறைய விற்பனையாகியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், சிறுகதைகள் தொகுப்பும் உண்டு. சிறுகதைகளின் வழியே நல்ல பண்புகளைப் பதியவைக்கும் முயற்சியை சுவாமி கமலாத்மானந்தர் மேற்கொண்டார். ஆன்மீகம், பக்தி, தெய்வீகக் கதைகள், அருள் நெறியாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் என பலவற்றை அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தில் தொடராக எழுதியிருந்தார். அவை தொகுக்கப் பட்டு நூல்களாக வந்துள்ளன.

இன்றைய நவீன உலகில், பெரும் அழுத்தத்துக்கு ஆட்பட்ட மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் காணும் பிரச்னைகளுக்கு பாரம்பரிய முறையிலும் ஆன்மிக வழியிலும் தீர்வுகளைச் சொல்லும் புத்தகங்கள் பல உள்ளன.

ரா.கணபதியின் 3 நூல்கள் மிகவும் பிரபலமானவை. ‘அறிவுக் கடலே அருட்புனலே’, ‘சுவாமி விவேகானந்தர்’, ‘அம்மா’ ஆகிய மூன்றும் ரா.கணபதியின் பிரபலமான நூல்கள். அதுபோல், அப்துல் கலாமின் ‘வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம்!’ என்ற நூல் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று!

சைவ, வைணவ பேதமின்றி நூல்கள் வெளியா கின்றன. வைணவக் கருத்துகளை உள்ளடக்கிய நூல்களும் பல உண்டு என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, நண்பரும் நாடக ஆசிரியருமான் விவேக் சங்கர் அப்போது உள்ளே வந்தார். அவரை சுட்டிக் காட்டிய சுவாமிஜி, இந்த வருடம் சகோதரி நிவேதிதையின் 150வது ஆண்டு என்பதால் சிறப்பாகக் கொண்டாடத் திட்டம் உள்ளது. ‘நிவேதிதை 150 என்ற நூல்’ வெளியிடுகிறோம். வங்காளத்தில் மேடை நாடகங்கள், தமிழில் சினிமா எடுப்பது, பெண்களுக் கான நிகழ்ச்சிகள் என திட்டமிட்டிருக்கிறோம். விவேக் சங்கர் நிவேதிதை வாழ்க்கை குறித்த நாடகம் எழுதியுள்ளார். ஊர் ஊராகச் சென்று அதனை மேடையேற்றி வருகிறோம் என்றார்.

சரி சுவாமிஜி, புத்தகக் காட்சிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், ஏதாவது சிறப்பு திட்டம் உள்ளதா என்று கேட்டேன்.

இந்த வருட புத்தகக் கண்காட்சியில் வழக்கம்போல் பங்குபெறுகிறோம். தவிர தெய்வீக புத்தகத் திருவிழா, விவேகானந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது நடத்தப் படுகிறது. விவேகானந்தர் இல்லத்தில், தொடர்ந்து 9 நாட்கள் இது நடத்தப் படுகிறது. இதில் தனியாக மடத்து நூல்களை விற்பனைக்கு வைத்து ஒரு தனி புத்தகக் காட்சியாகவே நடத்துகிறோம்.

சுவாமி விவேகானந்தர் அந்த இல்லத்தில் தங்கிய தினத்தை ஒட்டி, இந்த விழா அங்கே நடத்தப் படுகிறது. வரும் 2017 பிப். 6-14ஆம் தேதிகளில் ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுகிறது. இந்த முறை இவ்விழாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை அழைத்திருக்கிறோம் என்றார் சுவாமி விமூர்த்தானந்தர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
(கல்கியில் வெளியானது)

பவானி பிரச்னைக்காக கோவையில் பிப்.9ல் ஆர்ப்பட்டம்: டி.ராஜேந்தர்

சென்னை:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று கோரியும், தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு மத்திய அரசு உடனே செவிசாய்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் பிப். 9 வியாழக்கிழமை கோவை மாநகரில் தெற்கு தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில் ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக, லட்சிய திமுக., தலைவர் டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சீமைக்கருவேலமரங்கள் அகற்றும் பணியில் வைகோ

நெல்லை மாவட்டதில் தனது ஊரான கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஊர் மக்களுடன் இணைந்து விவசாயிகளின் அழிவுக்கு காரணமான சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.1 கோடி தங்க கட்டிகள் பிடிபட்டன

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில்  உள்ள எல்லையோர சோதனைச்சாவடியில் மத்திய நுண்ணறிவு பிரிவு  போலீசார் நடத்திய சோதனையில்
தனியார் சொகுசு பேருந்தில்  ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 3360 கிராம் எடை கொண்ட 20 பார்கள் தங்கம்  சிக்கின. அதன் மதிப்பு  ரூபாய் ஒரு கோடி. நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பஞ்சாப், கோவா சட்டப்பேரவை தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

பஞ்சாப், கோவா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. கோவாவில் 9 மணி வரையிலான நிலவரப்படி 15% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது*

சென்னையில் நடிகை அதீதி மேனன் துவக்கிவைத்த இந்திய சுற்றுலா பொருட்காட்சி 2017!

சென்னையில் 43 – வது இந்திய சுற்றுலா  மற்றும் தொழில் பொருட்காட்சி 2017 தொடங்கியது!

சென்னையில் அதீதி மேனன் துவக்கிவைத்த அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கடந்த 42 வருடங்களாக சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் நடத்தக்க வருகிறது. இந்த வருட 43வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் மறைந்துவிட்ட காரணத்தினாலும், வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களினாலும் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த வருட பொருட்காட்சி FUN WORLD & RESORTS INDIA PVT. LTD என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இப்பொருட்காட்சியில் அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி முதன்முறையாக சென்னையில் இடம் பெற்றுள்ளது.

இதனை கடந்த மாதம் வெளிவந்த பட்டதாரி படத்தின் கதாநாயகி அதீதி மேனன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இவர் ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவாகும் ‘சந்தன தேவன்’ படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.நிகழ்ச்சியில் புழல், திருட்டு விசிடி படங்களின்  நாயகன் மனோவும் பங்கேற்றார்.

மேலும் பலவிதமான இராட்டினங்கள், 3D Show கண்ணாடி மாளிகை, மோட்டு பட்லு, 3D செல்பி, பேய் வீடுகள், மீன் கண்காட்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, பஞ்சு மிட்டாய், பாப் கார்ன், ஐஸ் கிரீம் போன்ற அனைத்து வகையான உணவு பொருட்களும் பொருட்காட்சியில் கிடைக்க பெறுகின்றன. மேலும் பலவிதமான கைத்தறி கைவினை பொருட்கள், பிளாஸ்டிக் சாமான்கள், ரெடிமேட் ஆடைகள், காஸ்மெட்டிக் மற்றும் பேன்சி வகைகள் மிக குறைந்த விலையில் இங்கே கிடைக்கிறது. வழக்கம் போல் மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்களின் அரங்குகளை அமைத்து பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு விளக்குகின்றன.

பொருட்காட்சியில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.25/- ம்  சிறுவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூபாய் 15/- ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பொருட்காட்சிக்கு வருகை தரும் மக்களின் வசதிக்காக பொருட்காட்சியின் முன் மாநகர பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இப்பொருட்காட்சி 70 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்ற ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.