Home Blog Page 5699

ஐடிஐ, பட்டதாரிகளுக்கு சென்னை CIPET-ல் பணி

சென்னையில் உள்ள Cental Institute of Plastics Engineering & Technology (CIPET)-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விளம்பர எண்: CIPET/HO-AI/01/2017 Graduate Engineer Trainee (Tool Room/Processing/ Skill Development) சம்பளம்: மாதம் ரூ.18,000 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், பாலிமர் டெக்னாலஜி போன்ற துறையில் முதல் வகுப்பில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பாலிமர் அறிவியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 
பணி: Technician Trainee (Testing/Processing/Tooling/Skill Training) சம்பளம்: மாதம் ரூ.10,000 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: Turner, Fitter, Machinist பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பணி: Assistant Officer (Trainee) (Per & Admn./HR/Finance & Accounts) சம்பளம்: மாதம் ரூ.18,000 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: நிர்வாகம், மனிதவளம், நிதியியல், கணக்கியல், சிஏ, ஐசிடபுள்யூஓ போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Admn.Asst.Gr.II/Accts.Asst.GR-II சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: கலை, அறிவியல் துறையில் பட்டம் பெற்றி தட்டச்சில் முதுநிலை, சுருக்கெழுத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Admn Asst.Gr.III, Accts.Asst.Gr.III சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: கலை, அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் முதுநிலை, சுருக்கெழுத்தில் இளநிலை முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Officer (Admn./HR), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2017 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cipet.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம்: டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் சாலியேட்ஸை அதிபர் டொனால்டு டிரம்ப், பதவி நீக்கம் செய்துள்ளார். 7 நாடுகளை சேர்ந்தவர்களின் பயண தடைக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.*

தேசிய புலனாய்வு துறையில் 111 ஆய்வாளர் பணிக்கு பிப்.2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேதிய புலனாய்வு துறையில் நிரப்பப்பட உள்ள 111 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணி: Inspector – 23 பணி: Sub-Inspector – 54 பணி: Assistant Sub-Inspector – 34 
விண்ணப்பிக்கும் முறை: www.nia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.02.2017 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

நீட் தேர்வு – சட்ட முன்வடிவு இன்று தாக்கல்

நீட் தேர்வு தொடர்பான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்ட முன்வடிவை தாக்கல் செய்கிறார். அரசு இயற்ற உள்ள சட்டத்தின் மூலம் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேரலாம்.

ஜனவரியில் பெய்த மழை: விவசாயிகளுக்கு பாதிப்பா?

 ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பெய்த மழை: விவசாயிகளுக்கு இழப்பா? வரமா?
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓரளவே மழை பெய்துள்ள நிலையில், தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்த மழையினால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்று பிபிசி தமிழோசை, காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களிடம் கேட்டபோது , ''டெல்டா மாவட்டங்களில் ஆற்று நீரை பயன்படுத்தி நடக்கும் சம்பா பயிர் காலத்தில் தேவையான நீர் இல்லாததால், பெரிதாக எந்த சாகுபடியும் நடக்கவில்லை. அதே நேரத்தில் வடிமுனை குழாய்கள் மூலம் வளர்க்கப்படும் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளன'' என்று தெரிவித்தார்.
''தற்போது இந்த சம்பா பயிர்களை நீர் சூழ்ந்துள்ளது. இவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஆனால், இது விரைவில் வடிந்து விடும் '' என்று தெரிவித்த ஆறுபாதி கல்யாணம், மேலும் கூறுகையில், ''ஆனால், அதே சமயத்தில் தற்போது பெய்த இந்த மழையால் நெல்லில் 22 முதல் 24 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளது'' என்று கூறினார்.
போதுமான அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாத சூழலில், தனியார் கொள்முதல் நிலையங்கள் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்காது என்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை பற்றி அவர் குறிப்பிட்டார்.
''கடும் கோடையையும், வறட்சியையும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள இந்த சூழலில், தற்போது பெய்த இந்த மழை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்'' என்று ஆறுபாதி கல்யாணம் தெரிவித்தார். ஆனால், இந்த மழை போதுமானதாக இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில் குளிர்காலத்திலும் சில சமயங்களில் மழை பெய்வதுண்டு. ஆனால், இந்த ஆண்டு சற்றே அதிகமாக இது பெய்துள்ளது. பொதுவாக ஜனவரி மாதத்தில் 17 மில்லிமீட்டர் அளவு மழை பெய்வது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு, இது வரை 38 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது'' என்று தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது மேற்கு திசை நோக்கி சென்று விட்ட நிலையில், சென்னையில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பில்லை. அதே வேளையில் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளது எனவும், குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யாது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
குளிர்காலமான ஜனவரி மாதத்தில் மழை பெய்வது இயற்கை தான் என்று தெரிவித்த பாலச்சந்திரன், இது போன்ற காலகட்டத்தில் மழை பெய்வதற்கு வானிலை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றமும், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றமும் தான் காரணம் என்று மேலும் குறிப்பிட்டார்.

தேசிய நெடுஞ்சாலைகள் எப்போது புதுப்பிக்கப்படும்? எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்

கடலுார்: கடலுார் முதுநகர் தேசிய நெடுஞ்சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஆகி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடலுார் புதுநகரில் இருந்து முதுநகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையினால் கடும் பாதிப்பிற்குள்ளானது. தண்ணீர் ஓட வழியில்லாமல் ஆங்காங்கே சாலை அரிப்பு ஏற்பட்டு பெரும் சேதம் அடைந்தது. சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி அவசியம் என்பதை கடந்த வெள்ளத்தில் பாடம் கற்ற அதிகாரிகள், அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு கடலுார் முதுநகர் சாலையை 2 கோடி ரூபாய்க்கு 'பேட்ஜ் ஒர்க்' செய்ய டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகள் முடிந்த சில நாட்களிலேயே சாலைகள் மீண்டும் ஜல்லிகள் பெயர்ந்து யானை பிடிக்கும் பள்ளங்களானது.
சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கத்தில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள், கனரக வாகனங்கள் வந்து செல்வதால் 'பேட்ஜ் ஒர்க்' சாலையால் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலை சேதம் அடைந்தது. சாலையில் ஏற்படும் பள்ளத்தை நிரப்புவதற்காக 'குவாரி டஸ்ட்' நிரப்பி அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த சாலையை முழுவதுமாக சீரமைக்க 18 கோடி ரூபாய் மதிப்பில் 5 கி.மீ., தார் சாலை, சாலையின் இரு பக்கமும் மழைநீர் வடிகால், 4 சிறிய அளவிலான கல்வெர்ட் பாலங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டது.
அதன்படி கல்வெர்ட் பாலம் கட்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதேப்போல் பச்சையாங்குப்பம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி நடைபெற்று வருகிறது. நகருக்குள் வடிகால் பணி நடைபெறவில்லை. காரணம், சாலையின் (பவுண்டரி) எல்லை குறித்து இன்னும் சர்வே செய்யப்படாததால் வடிகால் வாய்க்கால் கட்டுமானப்பணிகள் தாமதமாகி வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் கடலுாரில் பெய்த கனமழையால் சாலையின் பள்ளத்தில் போடப்பட்டிருந்த 'குவாரி டஸ்ட்' பவுடர் காற்றிலே பறந்து புழுதி நகரமாக காட்சி தந்தது. இதனால் சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் பல இடங்களில் யானை பிடிக்கும் பள்ளங்கள் உருவானதால் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் ஊர்ந்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சர்வே செய்யும் பணிகளை துரித படுத்தி சாலை போடும் பணியை விரைவாக துவங்க வேண்டு ம்.

பெட்ரோல் நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

முத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் இருவருக்கு திருவாரூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்ட னை விதித்து தீர்ப்பளித்தது. 
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நாச்சிக்குளத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர் வெங்கடேஷ் (24). இவர் முன்விரோதம் காரணமாக கடந்த 11.5.2015 அன்று பெட்ரோல் நிலையம் அருகில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எடையூர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து வெங்கடேஷை கொலை செய்த சித்தமல்லியைச் சேர்ந்த விஜி என்கிற விஜயேந்திரன் (31), எடையூர் அருகே சோழி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்கிற சிவக்குமார் (25) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து வழக்கு திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். சீனிவாசன் குற்றஞ்சாட்டப்பட்ட விஜயேந்திரன் மற்றும் சிவக்குமார் (இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார்) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றாலத்தில் குளிக்க போடப்பட்ட தடை நீக்கம்: அருவியில் நீர் குறைந்தது

நெல்லையில் பெய்த பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று விலக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குவியத்துவங்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நவம்பர்,டிசம்பரில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணைகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
அணைகள் நீர்மட்டம் : 
தற்போது ஜனவரியில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்துவருகிறது. நேற்றுமுன்தினம் 39 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. அணைக்கு ஆயிரத்து 141 கனஅடிவீதம் நீர்வரத்து உள்ளது.
39.90 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 46 அடியானது. அணைக்கு ஆயிரத்து 257 கனஅடிநீர்வரத்து உள்ளது. சேர்வலாறு அணை நீர் மட்டம், 75. 49 அடியாக உயர்ந்துள்ளது.
அருவிகளில் வெள்ளம்: குற்றால மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் மெயின்அருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி ப்பட்டுள்ளது 

பிப்.15 முதல் ‘ஸ்டிரைக்’ : அரசு பஸ் ஊழியர்கள் அறிவிப்பு

பிப்.15 முதல் 'ஸ்டிரைக்' : அரசு பஸ் ஊழியர்கள் அறிவிப்பு
சென்னை: 'ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே துவக்காவிட்டால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்' என, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னையில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்கள், பொதுமக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதற்கான செலவை, அரசு தராததால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை, நஷ்டம் என, அரசு கணக்கு காட்டுவது சரியல்ல.வருவாய் இழப்பால், ஊழியர்களின் வைப்புத்தொகை, காப்பீட்டு உள்ளிட்ட, 5,000 கோடி ரூபாயை, போக்குவரத்து கழகங்கள் எடுத்து, செலவு செய்து விட்டன. இதனால், ஓய்வூதியர்களுக்கு, பண பலன்கள் கிடைக்கவில்லை. ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. அதற்கு முன், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி முடித்திருக்க வேண்டும். இதுவரை, பேச்சு நடத்தவில்லை. பேச்சை துவக்கா விட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என, நாளை அரசுக்கு, 'நோட்டீஸ்' அளிக்க உள்ளோம். அரசு அலட்சியம் காட்டினால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருச்சி டிசி மயில்வாகனனை அழைத்துப் பாராட்டிய முதல்வர்

சென்னை:
ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்காமல் பாதுகாப்பாகவும் அதே நேரம் திறமையாகவும் கையாண்டு அமைதியை ஏற்படுத்தியதற்காக, திருச்சி காவல் துறை துணை ஆணையர் மயில்வாகனனை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவருடன் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், இதே போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையைச் செவ்வனே செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.