Home Blog Page 5698

குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்

*நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை.*
*கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.*
*தாமாக முன்வந்து எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.*
*வங்கி முறையில் வராதவர்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.*
*20 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது.*
*26 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கித் தரப்பட்டுள்ளன.*
*சிறு தொழில் செய்பவர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக முத்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.*
*ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்காகவே அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.*
*மத்திய அரசின் திட்டங்கள் மூலம் 3 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.*
*5 கோடி இல்லங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன.*
*இதுவரை மின்சாரவசதி இல்லாமல் இருந்த 11,000 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.*
*விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.*
*விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
*பருப்புகளின் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது.*
*ஒலிம்பிக்கில் ஜொலித்த பி.வி.சிந்து, சாக்சி மாலிக், தீபா கர்மாகர் மூலம் பெண்களின் திறமை வெளிப்பட்டது.*
*பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.*
*12 வாரங்களாக இருந்த பேறுகால விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது.*
*வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.*
*குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் வங்கி முறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.*
*ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் தலித், பழங்குடியின தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை.*
*பழங்குடியினர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
*மாற்றுத் திறனாளிகளுக்கும் சமவாய்ப்புகளை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.*
*சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கே அரசு பணியாற்றி வருகிறது.*
*ஏழைகள், நலிந்த பிரிவினருக்காகவே அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது.*

டிரம்பின் புதிய கட்டுப்பாட்டால் இந்திய பங்கு சந்தை சரிவு

அமெரிக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் மூலம் இந்திய ஐடி துறையில் முக்கிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது. செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் 3.18 சதவீதமும், டிசிஎஸ் 4.68 சதவீதமும், விப்ரோ 2.65 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

டிரம்பின் அடுத்த அதிரடி: இந்திய ஐடி., பணியாளர்க்கு வேட்டு

88 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினால் தான் எச்1பி விசா.. டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவு..!
*இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்1பி விசாவை பெறுவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு.
இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்1பி விசா பெற ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 1,30,000 அமெரிக்க டாலர் (8,840,000 ரூபாய்) அளவிற்குச் சம்பளம் வாங்க வேண்டும் என அறிவித்துள்ளது. தற்போது இதன் அளவுகள் வெறும் 60,000 டாலராக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி 4,080,000 ரூபாய் புதிய கட்டுப்பாடுகள் மூலம் குறைந்தபட்ச சம்பள அளவுகளை விடச் சுமார் 2 மடங்கு அதிகமாக உள்ளது. இப்புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் உரையின்போது மயங்கி விழுந்த எம்.பி! அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

புதுதில்லி: குடியரசு தலைவர் உரையின்போது, நாடாளுமன்ற அவைக்குள் திடீரென, முன்னாள் அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பியுமான அகமது மயங்கி சாய்ந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்தினார்.
ஜனாதிபதி உரை இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்தது. சுமார் ஒன்றேகால் மணி நேரம் ஜனாதிபதி உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்ற அவைக்குள் திடீரென, முன்னாள் அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பியுமான அகமது மயங்கி சாய்ந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. டாக்டர்கள் அவருக்கு பரிசோதனைகளுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் கேரள மாநிலம் மலப்புரம் லோக்சபா தொகுதியின் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்களுக்கு தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
*ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.*
*தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி:*
*ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதித்தது ஏன். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. எந்த அடிப்படையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு சட்டத்தை இயற்றியது என வினவியுள்ள அவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு வெளியி்ட்ட அறிவிக்கையை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜல்லிகட்டு தமிழகத்தில் நடந்த வன்முறை தொடர்பில் உச்ச நீதி மன்றம் அதிருப்தி

*ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.*
*ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வாதம்.*
*மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப்பெற அனுமதி அளிக்க வேண்டும் – மத்திய அரசு வழக்கறிஞர்.*
*அறிவிக்கை திரும்பப்பெறப்பட்டாலும், ஜல்லிக்கட்டு வழக்கை முடித்து வைக்கக்கூடாது – விலங்குகள் நல வாரியம்.*
*சட்டப்பேரவையின் அதிகாரத்திற்குட்பட்ட விவகாரத்தை இடைக்கால மனுக்கள் மூலம் எதிர்க்க முடியாது-மத்திய அரசு.*
*இடைக்கால மனுவாகவோ அல்லது மனுவாக தாக்கல் செய்வது மனுதாரரின் விருப்பம் – உச்சநீதிமன்றம் கருத்து.*
*சட்டம் இயற்றுவது சட்டப்பேரவையின் அதிகாரத்திற்குட்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.*
*எதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கிறீர்கள்? விலங்குகள் நல வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி.*
*ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? – தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி.*
*ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இன்று குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது – தமிழக அரசு தகவல்.*
*இன்னும் 2 நாளில் ஜல்லிக்கட்டு அவரச சட்டம் காலாவதியாகி, ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்துவிடும் – தமிழக அரசு.*
*தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றதால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மாநில அரசு சட்டம் கொண்டு வந்ததா? உச்ச நீதிமன்றம்.*
*வழக்கு நிலுவையில் உள்ளபோது அது பற்றி பேசவேகூடாது என்பது சட்டம்; இதை மீறி தமிழகத்தில் எப்படி போராட்டம் நடத்தினார்கள்?- உச்சநீதிமன்றம்.*
*சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தமிழகம் கண்காணிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்.*
*சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துங்கள் – தமிழக அரசு மூத்த வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுரை.*
*தமிழகத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி.*

மல்லையாவிற்கு உதவி? ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’: மன்மோகன் சிங் பதில்

புதுடெல்லி,
விஜய் மல்லையாவின் மூழ்கிக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டது. விஜய் மல்லையா கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி மத்திய நிதி மந்திரியாக இருந்த சிதம்பரத்துக்கும், 2011-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எழுதிய கடிதங்களை ஆங்கில நாளிதழ் வெளியிட்டது பூதகரமாகியது.
விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதிமந்திரி ப.சிதம்பரமும் தொடர்ச்சியாக உதவி செய்து உள்ளனர் என்ற குற்றம் சாட்டிஉள்ள பாரதீய ஜனதா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, விஜய் மல்லையாவிற்கு கோடி கணக்கில் கடன் வழங்கப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
தொழில் அதிபர் விஜய் மல்லையா சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி வரையில் இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பிவிட்டார். அவருக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு கோர்ட்டுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது, அனைத்து விசாரணை முகமைகளும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு உள்ளது. பல்வேறு முறை இந்திய நீதிமன்றங்கள், விசாரணை முகமைகள் சம்மன் அனுப்பியும், விஜய் மல்லையா திரும்பவரவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்நகர்வு ஏற்பட்டு உள்ளது.
மன்மோகன் சிங் பதில்
குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், “எந்தஒரு ஆட்சியிலும் பிரதமர் மற்றும் பிற மந்திரிகளுக்கு தொழில்துறையின் பல்வேறு தலைவர்களிடம் இருந்து கோரிக்கைகள் வருவது வழக்கமானது… வழக்கமான முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனை நாங்கள் அனுப்புவோம். நாம் சட்டத்திற்கு எதிராக தவறு எதுவும் செய்யவில்லை என்ற திருப்தியுடனே பணியை செய்தேன்,” என்று கூறிஉள்ளார்.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பிப்ரவரி 28ம் தேதி வரை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 25ம் தேதி  முதல் 29ம் தேதி வரை தங்கள் ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.  தற்போது பிப்ரவரி 28ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாணவர்கள் இணையதளத்தில் ஹையர் செகண்டரி எக்சாம் மார்ச் 2017- பிரைவேட் கேன்டிடேட்-ஹால்டிக்கெட் பிரிண்ட் அவுட் என்ற வாசகத்தை கிளிக் செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல சிறப்புக்குழு

புதுடில்லி : ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கம் வெல்வதற்காக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் 8 பேர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.
*சிறப்புக்குழு:*
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கம் வெல்வது இதுவரை விரல் விடும் எண்ணிக்கையிலேயே இருந்தது. ஒலிம்பிக்கில் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்கவும், பங்கேற்கும் இந்திய வீரர்களை தயார் படுத்தவும், அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளிக்கவும் எட்டு பேர் கொண்ட சிறப்புக்குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இக்குழுவில், கடந்த 2012 ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூட்டில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, பேட்மின்டன் வீராங்கனை சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட 8 பேர் உள்ளனர்.
*3 ஒலிம்பிக் போட்டிகள் :*
அனைத்து விளையாட்டு சங்கங்களை ஒருங்கிணைப்பது, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது மற்றும் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் தங்களது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த இக்குழு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், அடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகள்(2020, 2024 மற்றும் 2028) வரை, இப்பொறுப்பில் இருப்பார்கள்.

வாக்காளர்களுக்கு மது கூப்பன் அதிர வைக்கும் பஞ்சாப் தேர்தல்

சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு, வார இறுதி நாட்களில், மதுபானங்கள் சப்ளை செய்ய ஏதுவாக, முன்கூட்டியே, கூப்பன்கள் வினியோகிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
*போதை பழக்கம் அதிகரிப்பு*
பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமை யில், அகாலி தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்கு, பிப்., 4ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில், மதுபானங்கள் மற்றும் போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து இருப்பது, முக்கிய தேர்தல் பிரச்னையாக எதிரொலிக்கிறது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆளும் கூட்டணி தவறி விட்டதாகக் கூறி, காங்., – ஆம் ஆத்மி கட்சி கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
*வாக்காளர்களுக்கு கூப்பன்*
இந்நிலையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள், மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுஉள்ளனர்; இதில், கட்டுக்கட்டாக பணமும், ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்களும் பிடிபட்டு வருகின்றன. வார இறுதி நாட்களில், மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களை பெற வசதியாக, வாக்காளர்களுக்கு கூப்பன்களும் வினியோகிக்கப்பட்டு உள்ளன; அதில், ரம், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் மற்றும் போதை பொருட்களின் பெயர்கள், தனித்தனியாக அச்சிடப்பட்டு, கூப்பன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இது போன்ற ஏராளமான கூப்பன்களை, அதிகாரிகள், நேற்று முன்தினம் கைப்பற்றி உள்ளனர்.
*பரஸ்பரம் புகார்*
'அகாலி தள கட்சி பிரமுகர்கள், மதுபான ஆலைகளை நடத்தி வருகின்றனர். அவர்களே, கூப்பன்கள் வழங்கி வருகின்றனர்' என, காங்., குற்றஞ்சாட்டி உள்ளது. அதே சமயம், 'காங்., தலைவர் அமரீந்தர் சிங்கிற்கு சொந்தமான மதுபான ஆலைகளில் இருந்தே, வாக்காளர்களுக்கு, மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகின்றன' என, அகாலி தள கட்சி புகார் கூறியுள்ளது.