தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்களுக்கு தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
*ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.*
*தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி:*
*ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதித்தது ஏன். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. எந்த அடிப்படையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு சட்டத்தை இயற்றியது என வினவியுள்ள அவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு வெளியி்ட்ட அறிவிக்கையை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.



