சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பிப்ரவரி 28ம் தேதி வரை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை தங்கள் ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. தற்போது பிப்ரவரி 28ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாணவர்கள் இணையதளத்தில் ஹையர் செகண்டரி எக்சாம் மார்ச் 2017- பிரைவேட் கேன்டிடேட்-ஹால்டிக்கெட் பிரிண்ட் அவுட் என்ற வாசகத்தை கிளிக் செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.
Popular Categories



