Home Blog Page 5697

அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று மத்திய நிதி நிலை அறிக்கை 2016-2017 தாக்கல் செய்து பேசினார். அப்போது, நாட்டை விட்டு தப்பிய குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புது சட்டம் கொண்டு வரப்படும். சிட்பண்டு மோசடிகளை தடுக்க புது சட்டம் இயற்றப்படும் எனக் கூறினார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் மேலும் கூறியதாவது:*

* 1 கோடி குடும்பம் வறுமை நிலையிலிருந்து மீட்கப்படுவார்கள்
*கட்டமைப்பு கிராமப்புற வளர்ச்சி வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம்
*கிராமபுரங்களில் நாள்தோறும் 133 கி.மீ.,தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.
*மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கடந்த ஆண்டு 38,500 கோடி ஒதுக்கீடு.
*பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி.
*2018 மே 1ம் தேதிக்குள் அனைத்த கிராமங்களுக்கும் மின்சாரம்
*கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
*கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த 1,17,000 கோடி கடந்த ஆண்டு 87,765 கோடி
*ஊரக வேளாண் வளர்ச்சிக்கு 187,223 கோடி
*நுண்ணீர் பாசனத்திற்கு நபார்டு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் கோடி
*தீன் தயாள் யோஜனா திட்டத்திற்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு
*பெண்கள் குழந்தைகளுக்கான திட்டங்களுக்குரூ.1,84,000 கோடி
*குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்
*கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைப்பு
*2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
*மருத்துவ சாதனங்கள் விலையை குறைக்க நடவடிக்கை
*வீடு இல்லாதவர்களுக்காக 2019க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்
* ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இரண்டு இலக்கத்தில் இருந்த பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேளாண் துறை குறித்து அருண் ஜேட்லி கூறியவை:

இந்த நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ராபி பருவத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் ஏக்கர் கணக்கு அதிகம்.
2017 – 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் வருவாயை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.
நீர்ப்பாசனத்துக்காக ரூ,40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019 ஆண்டின் இறுதியில் 50,000 கிராம பஞ்சாயத்துகள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்.
நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனமாக ரூ.5000 கோடி ஒதுக்கப்படுகிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து….

* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க புதிய திட்டம் வகுக்கப்படுகிறது.
* உற்பத்தித் துறையில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் இருக்கிறது.
முன்னதாக 9-வது இடத்தில் இருந்தது. இந்திய பொருளாதாரம் வியத்தகு சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது.
* கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்திருக்கிறது.
* பண மதிப்பு நீக்கம் நீண்ட கால பலனைத் தரும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை சாத்தியமாக்கும்.
* பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
* பல காலமாக நடந்துவந்த வரி ஏய்ப்பை பண மதிப்பு நீக்கம் தடுத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் ஊழல் குறைந்திருக்கிறது.
நல்ல நோக்கங்கள் தோற்பதில்லை என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. அதன்படி கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையான பண மதிப்பு நீக்கம் ஒரு போதும் தோல்வியடையாது. பண மதிப்பு நீக்கத்தின் மூலம் ஜிடிபி உயரும், வரி வசூல் அதிகரிக்கும். – என்று அருண் ஜேட்லி தனது பட்ஜெட் தாக்கலின் போது கூறினார்.

ட்விட்டரில் பதிலளிக்கிறார் ஜேட்லி

புது தில்லி:
பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “மக்களவையில் புதன்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். அதைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பாக ட்விட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து அவரது டிவிட்டர் பக்கத்தை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

மக்களவையில் 2017-2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11.08 மணிக்கு தாக்கல் செய்தார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல முதல்முறையாக பிப்ரவரி 28-க்குப் பதிலாக பிப்ரவரி 1-ம் தேதியே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அருண் ஜேட்லியின் டிவிட்டர் பக்கம்:

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை: ரூ.5 லட்சம் வரை 5% ஆகக் குறைப்பு

புதுதில்லி :
நாடாளுமன்றத்தில், மத்திய நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்று அறிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள் மற்றும் வரி சலுகைகள் ஏதும் இடம்பெறவில்லை.

ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 % மட்டும் வருமான வரி விதிக்கப்படும் என்றும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தார்.

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கான 15 சதவீதம் கூடுதல் வரி தொடரும் என்றும் அறிவித்தார்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உதவும் வகையில், ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பத்துக்குள்ள பட்ஜெட் மேட்டர் இருக்குங்க!

புது தில்லி:
பத்துக்குள்ள பட்ஜெட் மேட்டர் இருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

2017 – 18 மத்திய பட்ஜெட் 10 முக்கிய கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்தார்.
அவை, 1. விவசாயிகள் நலன் 2. கிராமப்புற மக்கள் நலன் 3. இளைஞர் மேம்பாடு 4. ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை பேணுதல் 5. உட்கட்டுமான மேம்பாடு 6. வலுவான நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதித்துறை 7. பொது சேவை 8. பொறுப்புகளை துரிதமாக செயல்படுத்துதல் 9. நேர்மையானவர்களுக்கு ஏற்ற வரிவிதிப்பு 10. விவேகமான நிதி மேலாண்மை ஆகிய 10 கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார் அருண் ஜேட்லி.

முன்னதாக, இன்று முற்பகல் 11.08 மணியளவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 3-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி. இந்த பட்ஜெட்டில், பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இணைந்து முதல்முறையாக தாக்கலானது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இன்று காலை மக்களவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அறிவிப்பு ஒன்றை வாசித்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “வழக்கமாக அவை உறுப்பினர் மறைந்தால் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு. ஆனால், இன்று 2017 – 2018 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என ஏற்கெனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் திட்டமிடப்பட்டதால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கு பதிலாக நாளை அவை ஒத்திவைக்கப்படும் என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன் கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடும் அமளிக்கு இடையே பட்ஜெட்டை11.08 மணிக்கு அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

மத்திய ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்!

புது தில்லி:
மத்திய ஒருங்கிணைந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை தாக்கல் செய்தார். பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை ஒன்றாக இணைத்ததன் காரணம் குறித்து அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் விளக்கினார். ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தை சீரமைப்பதற்காகவே ஒரே பட்ஜெட் கொண்டு வரப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

2017- 2018 பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் புதன்கிழமை இன்று காலை 11.08 மணியளவில் தாக்கல் செய்தார். முதன்முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் சில அம்சங்கள்:
7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி
*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை
*ரூ.1 லட்சம் கோடியில் ரயில் பாதுகாப்பு நிதி உருவாக்கம்
*வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்களுக்கு தனி ரயில்கள்
*9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்
*3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை
*வேலைவாய்ப்பை உருவாக்க புதிய மெட்ரோ கொள்கை
*500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி.
*ஆன்லைன் ரயில் டிக்கெட் பதிவுக்கு சேவை வரி இல்லை
* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகள்
2018 க்குள் 3500 கி.மீ., ரயில் பாதை
ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி
அனைத்து ரயில் பெட்டிகளிலும் புகார் அளிக்கும் வசதி
2019 ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி
ரயில்வே துறைக்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடு
தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து
நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படும்.
2017 – 18 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,31,000 கோடி ஒதுக்கீடு; இதில் ரூ. 51,000 கோடி அரசு பங்களிப்பாக இருக்கும்.
இந்த நிதியாண்டில் 3,500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைக்கப்படும்.
கடந்த ஆண்டு 2,800 கி.மீ. ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
ரயில்வே வாரியத்தின் செலவினங்கள், ரயில்வே சேவை மீதான சமூக எதிர்பார்ப்புகள், சேவை தரம், ரயில்வே துறை எதிர்கொள்ளும் போட்டி ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் சில:

கறுப்புப் பணத்தை ஒழிக்க பட்ஜெட்டில் 10 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
அதிக நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் கிராமப்புறங்களில் ஏழ்மை ஒழிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறுகுறு விவசாயிகள் எளிதில் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறைந்த வட்டியில் கடன் வழங்க மத்திய அரசின் பணமதிப்பிழப்பு வழிவகை செய்யும்.
தேசிய வேளாண் சந்தைகளின் கீழ் ஒருங்கிணைப்பு சந்தைகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்த்தப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக ரூ.1.84 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளது.
ஏழைகளின் உடல்நலத்தைக் காக்கும் வகையில் அரசு ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்துள்ளது. 2025-க்குள் காசநோய் முழுமையாக ஒழிக்கப்படும்.
ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் புதிதாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் நிதியுதவி ரூ. 52,393 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும்.
* தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் விநியோகிக்க வழிவகை செய்யப்படும்.
* உயர் கல்விக்கு நிதியுதவி:
உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நிதியுதவி.
யுஜிசியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
அங்கீகாரம், தரவரிசை மற்றும் தன்னாட்சி அந்தஸ்தின் அடிப்படையில் கல்லூரிகள் அடையாளம் காணப்படும்.
இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்கில் இந்தியா’ திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நாடு முழுக்க 100 சர்வதேச இந்திய திறன் வளர் மையங்கள் நிறுவப்பட உள்ளன.

ஜவுளித்துறை சிறப்புத் திட்டம் போல், தோல் மற்றும் காலணி துறைகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள்
பிரதான் மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு
வரும் மார்ச் 2018-க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் மின் வசதி
நாடு முழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர்

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 40%ல் இருந்து 55% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
100 நாள் வேலைதிட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கல்யாணம் என்றால் என்ன முன்னேற்பாடு செய்ய வேண்டும்!

கல்யாணம் என்று வந்து விட்டால் எல்லா இல்லங்களிலும் தற்காலத்தில் உடனே என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஞாபகத்திற்கு கொண்டுவந்து பட்டியல் போடுவார்கள். திட்டமிடுவார்கள். இதில் தவறில்லை. அவசியமும் கூட.

ஆனால் இதில் நடக்கும் ‘தமாஷ்’களை என்னவென்று சொல்லுவது?

ஒன்றிரண்டை மாத்திரம் பார்ப்போம்.

பத்திரிகை:
இவர்கள் பத்திரிகை டிசைன் செய்யும் போக்கை பார்த்தால் இவர்கள் ஏதோ நமது கலாசாரத்தில் மிகவும் ச்ரத்தை உள்ளவர்கள் போல தோன்றும். நாம் அசந்து போய்விடுவோம். கஷ்டப்பட்டு வாசகங்களையும் பத்திரிகையின் ’டிசைனை’ தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் யதார்த்தத்தில் கல்யாணத்திற்கு வரும்போதுதான் சாயம் வெளுக்கும். பத்திரிக்கையில் போட்டுள்ள எந்த சடங்கையும், மந்திரத்தையும் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள். அந்த சிந்தனை துளியும் இருக்காது.எல்லாம் ஃபேஷனுக்காகத்தான் என்று சுலபமாக புரிந்துக் கொள்ளலாம்.

நமது கலாச்சாரத்திற்கும் அங்கு காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இருக்காது.

தலைவிரிக்கோலம்:
உதாரணத்திற்கு ஒன்றை மாத்திரம் இங்கு எடுத்து சொல்லுகிறேன். தலைவிரிக் கோலத்தோடு ‘பாலிகை’ தெளிக்கும் கன்றாவியை என்னவென்று சொல்லுவது. முன்பெல்லாம் மடிசார் இல்லை என்றாலேயே பாலிகையை தெளிக்க வருவதற்கு கூச்சப்படுவார்கள்.
தம்பதிகளுக்கு கடைசியில் ஆரத்தி எடுக்கும் பெண்கள்கூட இப்போதெல்லாம் தலை விரிக்கோலத்தோடு எடுக்கத் தயங்குவதில்லை. இதெல்லாம் ஆகவே ஆகாது.

அபர கார்யத்தில்தான் (செத்த வீட்டில்தான்) தலைவிரிக் கோலத்துடன் ஸ்த்ரீகள் சில விஷயங்களை செய்யச் சொல்லியுள்ளது.

உணவு வகைகளும் மற்ற விஷயங்களும்:
அடுத்தது உணவு விஷயத்துக்கு வருவோம். வந்தவர்களை உபசரிக்க வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியுமா; இருக்க முடியாதுதான். அதற்காக இன்று பலர் அடிக்கும் கூத்து இருக்கின்றதே அதை என்னவென்று சொல்லுவது? மாலை ரிசப்ஷன் சாப்பாட்டில் எக்கச்சக்கமான கணக்கற்ற அயிட்டங்களை சேர்ப்பார்கள். அங்கு வீணடிக்கும் பொருட்களின் எண்ணிக்கையையும். அளவையும் பார்த்தால் பல கேள்விகள் மனதில் தோன்றுவது இயற்கைதான்.
எல்லாமே இரண்டு மூன்று மணி நேர கூத்துக்காக. கேட்டால் வருபவர்களை அசத்த என்று பதில் வரும்.

மெஹந்தி:
இந்த ‘மெஹந்தி-ப்ரோக்ராம்’ எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை; இதற்கு ஆகும் பட்ஜெட்டை கேட்டால் தலையை சுற்றும். இவையெல்லாம் வேண்டுமா வேண்டாமா என்ற ஆர்க்யுமெண்ட்குள் நான் போக போவதில்லை.

ஆனால் வைதீக கார்யங்கள் ‘கடனே’ என்றுதான் நடக்கும். மற்ற விஷயங்களுக்கு தருகிற முக்கியத்துவத்தில் இதில் ஒரு சிறு துளிதான் ’இண்ட்ரெஸ்ட்’ இருக்கும்.

நமக்கு விதிக்கப்பட்டுள்ள சம்ஸ்காரங்களில் விவாஹம் ஒன்று என்று சிந்தனை இருக்க வேண்டாமா?

இதை ஒரு “சோஷல் ஃபங்ஷனாக” மாத்திரம் பார்க்காமல் கூடியமானவரையில் சாஸ்த்ரோக்தமாக நடத்த எண்ண வேண்டாமா?

ஒரு சிலர் இன்னும் இருக்கத்தான் இருக்கிறார்கள்:
இரண்டு நாள் கல்யாணமோ அல்லது நாலு நாள் கல்யாணமோ முடிந்தவரையில் விதிப்படி விவாஹத்தில் வைதீக கார்யங்களை ஆசாரத்துடன் நடத்துவதில் ஆங்காங்கு ஒரு சிலர் விடாப்பிடியாக இருந்து வருகின்றதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இவர்களது எண்ணிக்கை பெருக பகவானை ப்ரார்த்திப்போம்.

தகவல்:- சர்மா சாஸ்திரிகள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதான 36 மாணவர்கள் விடுதலை: முதல்வர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதான 36 மாணவர்கள் விடுவிக்கப்படவார்கள் என தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வ
ம் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போடப்பட்ட 26 வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

பிளஸ் டூ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: நீட் இன்றி முடிவு

*நீட் தேர்வின்றி 12ஆம் வகுப்பு கட்ஆஃப் மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு முடிவு.*
*தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு தாக்கல்.*
*முதுநிலை படிப்புகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு தாக்கல்.*
*மருத்துவ படிப்பில் பழைய முறையை பின்பற்ற வகை செய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்*
*நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் நடவடிக்கை.*

குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்

*நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை.*
*கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.*
*தாமாக முன்வந்து எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.*
*வங்கி முறையில் வராதவர்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.*
*20 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது.*
*26 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கித் தரப்பட்டுள்ளன.*
*சிறு தொழில் செய்பவர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக முத்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.*
*ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்காகவே அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.*
*மத்திய அரசின் திட்டங்கள் மூலம் 3 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.*
*5 கோடி இல்லங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன.*
*இதுவரை மின்சாரவசதி இல்லாமல் இருந்த 11,000 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.*
*விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.*
*விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
*பருப்புகளின் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது.*
*ஒலிம்பிக்கில் ஜொலித்த பி.வி.சிந்து, சாக்சி மாலிக், தீபா கர்மாகர் மூலம் பெண்களின் திறமை வெளிப்பட்டது.*
*பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.*
*12 வாரங்களாக இருந்த பேறுகால விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது.*
*வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.*
*குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் வங்கி முறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.*
*ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் தலித், பழங்குடியின தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை.*
*பழங்குடியினர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
*மாற்றுத் திறனாளிகளுக்கும் சமவாய்ப்புகளை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.*
*சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கே அரசு பணியாற்றி வருகிறது.*
*ஏழைகள், நலிந்த பிரிவினருக்காகவே அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது.*

டிரம்பின் புதிய கட்டுப்பாட்டால் இந்திய பங்கு சந்தை சரிவு

அமெரிக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் மூலம் இந்திய ஐடி துறையில் முக்கிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது. செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் 3.18 சதவீதமும், டிசிஎஸ் 4.68 சதவீதமும், விப்ரோ 2.65 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.