Home Blog Page 5696

சமையல் காஸ் விலை உயர்வு; ரூ.66 அதிகரிப்பு

சென்னையில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, 66.50 ரூபாய் உயர்ந்து உள்ளது.
*மாற்றம்:*
பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு, வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர்களை, வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதம்தோறும், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
*ரூ.66 உயர்வு:*
சென்னையில், ஜன., மாதம், வீட்டு சிலிண்டர், 594.50 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, அதன் விலை, 66.50 ரூபாய் உயர்ந்து, 661 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம், சென்னையில், 19 கிலோ, வணிக பயன்பாட்டு சிலிண்டர், 1,233.50 ரூபாய்க்கு விற்பனையானது. இம்மாதம், அதன் விலை, 104.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 1,338 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இரு மாதங்களாக, காஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது' என்றார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் டெபாசிட் கட்டணம் கிடையாது: மாவட்ட ஆட்சியர்

மதுரை: அவனியாபுரத்தில் 5ம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டில் டெபாசிட் கட்டணம் கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் விதிகளை ஆட்சியர் அறிவித்தார். அதன்படி மது அருந்தி விட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை என அவர் தெரிவித்தார்.

காஞ்சி மஹான் கருணை: திருமணத் தடைக்கு பெரியவர் சொன்ன வழி

கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

பரமாச்சார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்

மங்கள சரணே மங்கள வதனே
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே
ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி
நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

சிவமுக விநுதே பவசுக தாயினி
நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

பக்த சுமானஸ தாப வினாசினி
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

கேனோ பநிஷத் வாக்ய வினோதினி
தேவி பராசக்தி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

பரசிவ ஜாயே வர முனி பாவ்யே
அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

நன்றி – ஸ்ரீ மடத்தில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் கிடைக்கப்பெற்ற ஒரு கையடக்க புத்தகத்தில் அஷ்டோத்ர சத மற்றும் த்ரிசதீ நாமாவளிகளுடன் காணப்பெற்றது.

– பரஸ் நாகராஜ சர்மா

கோயிலுள் பக்தர்கள் அன்னதானத்துக்கு தடை: அறநிலையத்துறை அராஜகம்

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் அராஜகம்
கோவிலின் உள்ளே பக்தா்கள் பிரசாதம் தருவதை தடுக்கும் பிரசாத கடை காண்டரக்ட்கள். இலட்சக்கனக்கிள் குத்தகை எடுத்த கடைக்காரா்கள் ரவுடிகளை வைத்து மிரட்டுகிறது.
நாங்கள் சொல்வதை நம்பவில்லை என்றால் நீங்களே புளிசாதம் செய்து கோவிலின் உள்ளே சென்று பக்தா்களுக்கு விநியோகம் செய்து பாருங்கள்.சிறிது நேரத்தில் நீங்கள் கோவிலை விட்டு வெளியே போய் தரச்சொல்வாா்கள்.
கோவில்கள் பணம் சாம்பாதிக்கும் தொழிற்சாலையா? பக்தா்கள் வழிபடும் ஆலயமா? சிந்தியுங்கள்!
ஒவ்வொரு பூஜைக்கும் 1000 கணக்கில் பணம். ஏஜெண்டாக வேளை பாா்க்கும் ஊழியர்கள்
இதையெல்லாம் கண்டு கொள்ளாத அதிகாாிகள்.
?நாம் கொடுக்கும் காணிக்கை எங்கே செல்கிறது?
?இலவச கழிவறை எங்கே? இது போல பல வசதிகள் எங்கே?
?வாகனம் நிறுத்த கட்டனம்
?கழிவறை செல்ல கட்டணம்
?கோவிலின் பிரசாதம் கட்டணம்
?பூஜைகள் செய்ய கட்டணம்
?சிறப்பு தாிசனம் கட்டணம் ?
இதில் குற்றவாளி யார் என்றால் நாம்தான்.எதை பற்றியும் கவலை இல்லை.
நாம் போனமா சாமி கூம்பிட்டமா.வசதியானவா்கள் பூஜைக்கு பணத்தை வாாி வழங்குகிறோம்.
நமது ஆலயத்தில் நாம் இலவசமாக பிரசாதம் வழங்க முடியாது. இலட்சகணக்கில் குத்தகை எடுத்தவன் பிரசாதத்தை விற்பான்.
இதற்கு பெயா் இந்து அறநிலையத்துறை!
பெயரை மாற்றி விற்பனை துறை என்று வைக்கலாம்.
ஆலயம் என்பது பொது சொத்தம்.நமக்கே கோவிலில் உாிமை இல்லை என்றால் யாருக்குதான் உாிமை
அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள்.
கோவிலுக்குள் சோற்றை விற்பதா?

84 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் காணும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்

கும்பாபிசேகம்:2-2-17

”கங்கை கொண்ட சோழபுரம் பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோயில்”.   ஆலயத் தொடர்புக்கு:97513 41108.   திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.   இந்தக் கோவிலை நிர்மாணித்தவர் ராஜேந்திரசோழன்.   தஞ்சைக் கோவிலை கட்டிய ராஜராஜசோழன் – திருபுவனமாதேவியின் புதல்வன்.  இவனது ஆட்சி காலமான 1012–1044 கடல் கடந்தும் சென்று நாடுகளைக் கைப்பற்றியதால் கடாரம் கொண்ட சோழன் என்ற பெயர் பெற்றார்.   தந்தை வழியில் ஆன்மீகத்தையும் பரப்பினார்.
இந்த கோவிலை உருவாக்கி கும்பாபிஷேகத்திற்கு கங்கையிலிருந்து புனித நீரை தன்னிடம் தோற்ற மன்னர்களின் தலையில் ஏற்றி இங்கு கொண்டு வரச்
செய்தான்.   மேலும் கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோவிலுக்கு உள்ளேயே கிணறு வெட்டச் செய்து,   அந்த புனித நீர் அங்கு வந்து சேரும் படி
நேர்த்தியாக ஏற்பாடு செய்தான்.

சிவதரிசனம் செய்ய வரும் பொழுதெல்லாம்,  இந்த புனித நீரை எடுத்து தலையில் தெளித்துபின்னர் வழிபாடு செய்தான்.  இங்கு விநாயகர் கையில் எழுத்தாணியுடன் காணப்படுகிறார்.   ராஜேந்திர சோழன் தன் அமைச்சரிடம்,   கோவில் பணிக்கு ஆன செலவுகள் என்ன என்று கேட்டவுடன் நினைவுக்கு வராததால் தடுமாறி பதறினார்.   இந்த விநாயகர் முன்னின்று வணங்க,   அனைத்து விபரங்களும் பளீரென நினைவுக்கு வந்ததாம்.   எனவே தான் இவர் கணக்கு
விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.  .

இங்கு லிங்கத்தின் அடியில் சந்திர காந்தக் கல் வைத்துள்ளனர் என்பதால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெப்பத்தைத் தந்து வருகிறது.  இங்கு மன சுமையோடு வரும் அடியவர்களின் வாழ்க்கையிலும் அனலை போக்கி,  குளிர்ச்சியை உண்டாக்குகிறார் பிரகதீஸ்வரர்.  .

தஞ்சைக்கு அடுத்து இந்த கோபுர விமானம் தான் தமிழகத்தில் பெரியது.  தஞ்சாவூர்க் கோயிலுக்குத் தந்தை அளித்த பல நேர்த்திகளை எல்லாம் மகன் தன் கோயிலுக்குத் திருப்பிவிட்டான் என்கிறார்கள்கங்கைகொண்ட சோழபுரத்தில் காணப்படும் சண்டேச அனுக்ரஹ மூர்த்தி வெகு சிறப்பு உள்ளது.  காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார்.   அருகில் பார்வதி.  .  .

சிவன் காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருப்பவர் : மாமன்னன் “இராஜராஜசோழனாவான்”.
மாமன்னன் இராஜராஜசோழனுக்கு [சிவபாதசேகரன்] என்னும் சிறப்பு பட்டம் உண்டு.   அதன் தோற்றம் தான் இந்த சிலை.  தன் தந்தையின் நினைவாக கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலில் அமைத்துள்ளார் இராஜேந்திரசோழன் என்பவர்களும் உள்ளார்கள்.  கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது.
விக்ரமசோழன் உலா,   இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன.

சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்த இடம் இது.   தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில்,   கங்கைகொண்ட சோழபுரம் கோயில்,
திருபுவனம் கோயில்,   தாராசுரம் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் சற்றொப்ப ஒரே மாதிரியான கலை வடிவைக் கொண்டவையாகும்.  கும்பகோணத்திலிருந்தும்,  அரியலூரில் இருந்தும் சுமார் 38கி.  மீ.   தூரத்தில் உள்ளது.  .  “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்”.  .  ஆம்! உங்கள் வாழ்க்கையின் தீவினைகள்,  தீயவை அகன்று உங்கள் வாழ்வின் புரியாத ஓர் ஆனந்தம் புதிதாக ஆரம்பிக்கும் இத்தல தரிசனத்தால்.  .  .  .  “நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம’ எனப் பெற்றேன்?”.  “நேற்றைய வாழ்வு அலங்கோலம்,  அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,  வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,  அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,  எனக்கும் இடம் உண்டு,  அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்”.  .  .

கட்டுரையாக்கம்: சிவ.  அ.  விஜய் பெரியசுவாமி,
கல்பாக்கம்,  9787443462

Megalaya: Many signatories still in dark about content of letter

RAJ BHAVAN SCANDAL

SHILLONG: Many Raj Bhavan staff did not read the content of the letter lodged with the Prime Minister narrating the many anomalies carried out by former Governor V. Shanmuganathan.
Nearly 100 staff had written to the Prime Minister with copies to the President, Union Home Minister, Chief Minister, Chief Secretary and others about the misconduct of the Governor that ultimately resulted in his resignation.
A fourth grade employee on Tuesday said that she was compelled to sign the letter by one P. Lyngdoh, accountant at Raj Bhavan.
“We were asked by the accountant to sign the papers otherwise she said our files related to pay and other benefits will not move,” one of the signatories said while adding that it was under threat that she signed the papers.
The woman also added that she does not know the content of the letter as she was only asked to sign by the higher-ups.
According to the signatory, if there is an inquiry into the matter, she will tell the truth.
A few others have also echoed the same and added that the letter, which was written in English, was alien to them though they were the signatories.
The high-level officials are not signatories to the letter as it starts from Anamika Dutta, Comptroller of Household with accountants, chaparasis, gardeners, khalasis, laundrymen, electricians, cooks, stenos, typists and carpenters being part of the nearly 100 signatories.
After the swearing-in ceremony of the new Governor on Saturday, when asked, Dutta did not want to further comment on the matter.
To a query whether there is any evidence to prove the allegations, she only said that everything was there in the letter and now she wants to consider the episode as closed.
While a few lower level staff admitted of being signatories, they did not know the details of the letter, while many others moved away without giving any answer.
A source said that these staff were pushed to the fore by the senior officials who wanted to remain in the background. Though the number was mentioned as 100, two names were erased from the list and 10 staff did not sign, though their names were mentioned even as a thumb impression is also visible in the letter. The list also features over 30 persons who have not mentioned their designations.
Despite queries, senior Raj Bhavan officials are yet  to provide the total number of staff employed at the Governor’s House
Former Meghalaya Governor V Shanmuganathan had resigned on January 26 after nearly 100 members of his staff alleged in a letter to Prime Minister Narendra Modi that he had “compromised the dignity” of the Governor’s House and turned it into a “young ladies’ club”.


Read more at https://www.theshillongtimes.com/2017/02/01/many-signatories-still-in-dark-about-content-of-letter/#x4lWRHvM8cBhqJHP.99

கடைசி டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்து அணியுடனான கடைசி டி 20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 75 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்தது. 203 ரன் என்ற இலக்கை நோக்கித் துரத்திய இங்கிலாந்து அணி, 16.3 ஓவர் விளையாடி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்களே எடுத்து 75 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்திய அணி தரப்பில் ஷஹல் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இங்கிலாந்து தரப்பில் ராய் 32 ரன்னும், ரூட் 42 ரன்னும், மோர்கன் 40 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். ஆறு பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்தது.

ஆபத்தை உணராத நெல்லை மாவட்டம்: நஞ்சாக மாறக் காத்திருக்கும் விவசாயம்!


nellai fields - 2026

ஆபத்தை உணராத  திருநெல்வேலி மாவட்டத்தில் விசம் கலந்த நஞ்சாக மாற காத்திருக்கும் விவசாயம்.

ஆபத்தின் விழிம்பில்  செட்டிக்குளம். அதை அறியாமலும், உணராமலும் உறக்கத்தில் ஊர்மக்கள். விழித்துக் கொள்வார்களா……………..?

செட்டிக்குளம் கிராமம் – திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஆழ்வார்க்குறிச்சி ரயில் நிலையத்தின் மேற்க்கு பகுதியில் அமைந்துள்ளது.  இது இயற்கையான ஆறு,  குளம், வயல் என எழில் நிறைந்து காணப்படும் கிராமம்.  இங்குள்ள மக்களின் தொழில் விவசாயமும் பீடி சுற்றுவதும் ஆகும். மக்கள் சாதி, மத வேறுபாடு இன்றி நல்லிணக்கத்துடன் ஒற்றுமைக்கு பெயர் பெற்ற சிறந்த கிராமம் என்றால் அது மிகையாகாது.!

செட்டிக்குளத்திற்க்கு வந்த சோதனை என்ன……………?

செட்டிக்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும்.  அதற்க்கு ஆதாரமாக விளங்குவது கடனாநதி மற்றும் அச்சன்குளம் ஆகும்.  இப்போ அந்த அச்சங்குளம் தண்ணீர் பாசனம் முழுவதும் விஷம் கலந்த நஞ்சாக மாற்ற ஆயுத்தம் செய்யப்படுகிறது என்பது இந்த கிராம மக்கள் யாருக்கும் தெரியாது.

எப்படி ஆபத்து சூழ்ந்தது.?

johans food Industries என்னும் உணவு பதப்படுத்தி  வெளிநாடுகளுக்கு Food Package செய்யும் கம்பெனி சத்தம் இல்லாமல் தனது கட்டுமான பணிகளை மிக வேகமாக முடுக்கி விட்டுள்ளது. இந்த Food கம்பெனி துவங்கப்பட்டால் செட்டிக்குளம் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட காத்து இருக்கிறார்கள்.

பாதிப்பு :- 1

இந்த ஆலைக்கு தேவையான அடிப்படை தண்ணீரை அச்சன்குளத்திற்க்கு செல்லும் முகதுவாரம் வழியாக இந்த கம்பெனிக்கு தேவையான தண்ணீரை பின்புறம் வழியாக கணிசமாக உறிஞ்சப்படும். இந்த ஆலையை இயக்க ஒரு நாளைக்கு லட்சக்ணக்கான லிட்டர் சுத்தமான தண்ணீர் தேவைப்படுவதால் பூமியில் இருந்து எடுத்தாலும் நிலத்தடிநீர் வெகு மோசமாக பாதிக்கப்படும்.!  ஆக விவசாயத்தை   நம்பியிருக்கும் அச்சங்குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்க வாய்ப்பில்லை. அனைத்தும் உறிஞ்சப்பட்டுவிடும்.( ஆதாரம் செயற்கை கோள் புகைப்படம் )

பாதிப்பு :-2

ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயணம் நிறைந்த கொடிய நஞ்சு கழிவுகள் கம்பெனியின் பின்புறமாக திறந்து விடப்பட்டால் அச்சன்குளம் பாசனக்கால்வாய் வழியாக குளத்திற்க்கு மீண்டும் வந்து சேரும். விஷத்தன்மையுடன் கூடிய  கழிவு நீர் எப்படி திறந்தாலும் குளத்திற்க்கு தான் வந்து சேரும். இதற்க்கு வேறு வழியே இல்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் கருகும் உணவு நஞ்சாகும்.!விவசாயிகள் மேலும் இறக்க நேரிடும். மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.

யார் இந்த
johans food Industries.?

புகழ்பெற்ற வெளிநாட்டு Food கம்பெனியின் இந்தியாவின் பினாமி. கேரளாவை சேர்ந்த Mathew Joseph Neerackal and Annu Maria Alexander. இவர்கள் தான் டைரக்டர்களாக செயல் படுகிறார்கள். இதன் தலைமை அலுவலகம் கேரளாவில் உள்ளது.

இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் கேரளாவில் பலத்த எதிர்ப்பு உள்ளதால்;  கேரள முதலைகள் எதிர்ப்பே இல்லாத தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் ஆலை பற்றிய ரகசிய விசயங்கள். கசியாமல் இருக்க உள்ளுர் ஆட்களை வேலைக்கு வைக்காமல் வெளி ஆட்களை வைத்து விறுவிறுப்பாக வேலை நடக்கிறது. உள்ளே என்ன நடக்கிறது என்பதை அந்நியர்கள் யாரும் கண்காணிப்பு செய்யாமல் இருக்க முன்னேற்பாடாக  சுற்று சுவர் மிக கம்பீரமான உயரத்துடன் யாருக்கும் தெரியாதபடி எழுப்பி வருகிறார்கள் .

யார் அனுமதி கொடுத்தார்கள்.?

கோடிக்கணக்கில் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆலை விவசாயம் செய்யும் பகுதிகளுக்கிடையே நிறுவ அனுமதி வழங்கிய புண்ணியவான்கள் யார் யார்.? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழல் அமைச்சகம் மூலம் முறையான அனுமதி பெற்றார்களா.?  சுற்று சூழலை மாசுபடுத்தும் ஆலைக்கான கட்டுமான பணிக்காக உள்ளூர் பஞ்சாயத்து எவ்வாறு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள்.? இதற்காக எவ்வளவு பணம் கைமாறியது…?

எப்படி காப்பாற்ற போகிறோம்..தமிழ்நாட்டை?

கூடங்குளம்  அனு உலை, பெப்சி ஆலை என எல்லாமே உரிய காலத்தில் தடுக்கப்படாமல் கை மீறிப்போய் போராட்டத்தின் மூலம்  பல மனித உயிர்களை காவு  வாங்கியுள்ளது என்பதைவிட நாம் தட்டிக்கேட்க முடியாமல் சாவுக்கு ஆளாகிவிட்டோம். செட்டிக்குளம் மக்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தை  நாசம் செய்ய முனைந்திருக்கும் johan food கம்பெனியை எப்படி தடுக்க போகிறார்கள்.?

எதிர்காலத்தில்  இந்த ஆலை மூலம் எந்த விதத்திலும் உள்ளுர்வாசிகளுக்கு கடுகளவு கூட நன்மை ஏற்பட போவதில்லை.
ஆனாலும், இது தமிழ்நாட்டில் எத்தனை செட்டிக்குளத்தான்களின் உயிரை காவு வாங்க போகிறது என்பது தெரியவில்லை.! உள்ளுர் இளைஞர்களும். அரசியல் கட்சிகளும் ஆபத்தை கவனித்து விழித்து கொள்வார்களா.?  இவர்கள் காலத்தே எடுக்கும் முடிவை பொருத்தே அழிவின் தன்மைகள்  அமையும்.! என்ன செய்யப்போகிறார்கள்  இவர்கள்.?

கடைசி டி20 போட்டி: இந்தியா 202/6

பெங்களூர்:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 202 ரன்களைஎடுத்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை பேட் செய்யப் பணித்தது துவக்க வீரர்களாகக் களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2 ரன்னிலும் ராகுல் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தாலும், சுரேஷ் ரெய்னாவும் தோனியும் இங்கிலாந்து பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். ரெய்னா 45 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 63 ரன் எடுத்தார். தோனி 36 பந்துகளில் 2 சிக்ஸருடன் 56 ரன் எடுத்தார். பின் வந்த யுவராஜ் 10 பந்துகளில் 3 சிக்ஸருடன் 27 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 202 ரன் எடுத்து 203 ரன் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.

ஏற்கெனவே நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளுன் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருப்பதால், இந்தப் போட்டியில் வெல்லும் அணி, தொடர் வெற்றியைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழைகளுக்கான உத்தம பட்ஜெட்: மோடி கருத்து

புது தில்லி:
அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், ஏழைகளுக்கான உத்தம பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

2017 – 18ஆம் நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று முற்பகல் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இது ஏழைகளுக்கான பட்ஜெட், எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட், 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமானவரி விகிதக் குறைப்பு நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், ஏழைகள், வேளாண்மை, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு கிடைப்பது விரைவில் சாத்தியமாகும் எனக் கூறினார்.

தேர்தல் நிதி திரட்டுவதில் ஊழலைத் தடுக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ரயில்வே பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, சாலை கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினரையும் திருப்திப் படுத்தும் பட்ஜெட். தனி நபர் வருமான வரி அளவு குறைக்கப்பட்டுள்ளது, நடுத்தர வர்க்கத்தினருக்கு நேரடி பலன் கிடைக்கும். நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பாராட்டு தெரிவித்தார்.

வேளாண்மை, மீன்வளம், தூய்மையான இந்தியா உள்ளிட்ட இலக்குகளை கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் இது. இளைஞர்கள், பெண்கள், முதியோர் நலனுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதுஎன்று குறிப்பிட்ட மோடி, மொத்தத்தில் இது ஊழலை ஒழிக்கும் உத்தம பட்ஜெட் என்று கூறினார்.

கறுப்புப் பணத்துக்கு எதிராக கடைசி வரை போராடுவேன் என்று உறுதிபடத் தெரிவித்த மோடி, இது ஏழைகளுக்கான பட்ஜெட், எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட், கடந்த இரண்டரை ஆண்டுகளில் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம் என்று கூறினார்.