Home Blog Page 5728

ஜெயலலிதாவுக்கான இரங்கல் கூட்டம்: படம் பிடிக்க அனுமதி மறுப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரங்கல் கூட்டத்தை படம் எடுக்க ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுப்பு…

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்க படம் பிடிக்க அனுமதியில்லை. வளாகத்தின் உள்ளே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளே செல்ல அனுமதி கொடுத்த நிலையில் வெளியில் நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மாநில காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர்.

உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் கூறியும் உயர் நீதிமன்ற உதவி ஆய்வாளர், கட்டுப்பாட்டு அறையிலிருந்து அறிவுறுத்தல் வரவில்லை என காவலர்கள் அனுமதி மறுத்து வருகின்றனர்.

  1. மறைந்த தமிழக முதல்வருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தை படம் எடுக்க மாநில காவல்துறையே அனுமதி மறுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவை ஊடகங்கள் முன்னிறுத்தும் மர்மம் என்ன?

அஇஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவரவேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டில் சில முன்னணி ஊடகங்கள் ஓவர் டைம் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டன.

இந்த ‘திருப்பணியை’ நாளிதழ்கள், வாரமிருமுறை வரும் இதழ்கள் மற்றும் தொலைக் காட்சிகள் என்று ஜனநாயகத்தின் நான்காம் தூணின் பல தரப்பினரும் செய்யத் துவங்கி விட்டன. ஜெயலலிதா வின் மறைவுக்குப் பின்னர் சசிகலா வெளிப்படையாகவே தன்னுடைய அதிகாரத்தை காட்டத் துவங்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குறிப்பாக ஜெ வின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது அங்கு நீக்கமற நின்றிருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தெளிவாகவே ஒரு செய்தியை மக்களுக்கு உணரத்தி விட்டார்கள். இனிமேல் தமிழ் நாட்டில் அதிகாரம் யார் கையில் என்பதை அவர்கள் ஜெ உடல் வைக்கப் பட்டிருந்த அந்த 12 மணி நேரத்தில் நேர்த்தியாக வெளியுலகிற்கு காட்டி விட்டார்கள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவர் முன் தலை காட்ட முடியாமல் இருந்த நடராஜன் ராஜாஜி ஹாலில் முதலில் தூணுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வந்த போது வெளிப்படையாகவே வெளியில் வந்தார். அவரை மோடிக்கும், ராகுலுக்கும் அங்கிருந்தவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதே போலத்தான் சசிகலாவின் தம்பி திவாகரன். இவரும் ஜெ வால் ஓரங் கட்டப்பட்டிருந்தவர். நடராசன் மற்றும் திவாகரன் மீது 2011 – 2016 ஆட்சிக் காலத்தில் திரும்பத் திரும்ப நில அபகரிப்பு வழக்குகளை போட்டு பல முறை சிறையில் தள்ளியவர்தான் முதலமைச்சர் ஜெயலலிதா. இருவர் மீதும் பல நில அபகரிப்பு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன. இதே போலத்தான் சசிகலா வின் வேறு பல உறவினர்கள் மீதும் வழக்குகள் தொடர்ச்சியாக போடப்பட்டன. இன்று கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே வெளிப்படையாகவே போயஸ் தோட்டத்தில் உலா வரத் துவங்கி விட்டனர்.

நாடு விடுதலை அடைந்து இந்த 69 ஆண்டு காலத்தில் பதவியிலிருக்கும் போது ஒரு முதலமைச்சர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டது தமிழ் நாட்டில்தான். 2014 செப்டம்பர் 27 ல் இது நடந்தது. ஜெ வைத் தவிர தண்டிக்கப்பட்ட மற்ற மூவர் சசிகலா மற்றும் அவரது உறவினர்களான சுதாகரன், இளவரசி. ஆகவே ஏக இந்தியாவிலும் இல்லாத விதமாக செந்தமிழ் நாட்டுக்கு இந்த அளப்பரிய பெருமையை தேடித்தந்ததில் நால்வரில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். நாட்டைக் காக்கும் களப் போரில் விழுப்புண்களை ஏந்திய, வலுவான தியாகப் பின்புலத்தை கொண்ட, இத்தகைய ஒருவரைத்தான் இன்று தமிழ் நாட்டு ஊடகங்களின் ஒரு தரப்பினர் ஆதரிக்கின்றன. அவரை அசுர பலங் கொண்ட ஆளும் அஇஅதிமுக வின் பொதுச் செயலாளர் பதவியில் உட்கார வைப்பதற்கு கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் நின்று கொண்டிருக்கின்றன.

நீதிபதி மைக்கேல் ஜான் டீ குன்ஹா வின் தீர்ப்பை ஊன்றிப் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரியும். 66 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என்று தீர்ப்பு உருவாவதற்கு இந்த மூவரும் செய்த காரியங்கள்தான் முக்கியமான காரணிகளாக இருந்திருக்கின்றனர். 1988 ம் ஆண்டு ஊழல் வழக்கு சட்டத்தின்படி இந்த வழக்கு நடத்துப்பட்டது. இந்த சட்டம் தெளிவாகவே ஒன்றைக் கூறுகிறது. அரசு ஊழியராக, அதாவது பொது ஊழியராக இருக்கும் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்ப்பது எவ்வளவு குற்றமோ அதற்கிணையான குற்றம்தான் அதற்கு துணை போகுபவர்கள் செய்யும் குற்றமும். அதனால்தான் ஜெ உடன் சேர்த்து மற்ற மூவருக்கும் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததற்காக ஜெ மீது போடப்பட்ட வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்தான் சசிகலா.

1996 ல் ஜெ தோற்ற பின்னர் முதலில் கைதானது சசிகலாதான். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரையில் 10 மாதங்கள் சிறையில் இருந்தவர். மத்திய அரசின் அமலாக்கப் பிரிவால் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. ஒவ்வோர் வழக்கிற்கும் உச்ச நீதி மன்றத்திற்கு போய் தடை வாங்கினார்கள். எல்லா வழக்குகளும் அப்படியே அமுங்கிப் போயின. சில வழக்குகள் இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் நின்று கொண்டிருக்கின்றன.

2011 டிசம்பர் 19 ம் தேதி சசிகலா, நடராஜன் உள்ளிட்ட அவரது பல உறவினர்கள் அஇஅதிமுக விலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுடன் கட்சிக்காரர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று ஜெ வே வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் நான்கரை மாதங்களில் சசிகலா மட்டும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2012 ஏப்ரல் 1 ம் தேதி மீண்டும் ஜெ உடன் சேர்ந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சசிகலா எழுதிய ஒரு கடிதத்தில் ‘எனக்குத் தெரியாமல் என்னுடைய உறவினர்கள் சிலர் துரோகம் செய்து விட்டனர். அவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இனிமேல் அவர்களுடன் எனக்கு எந்த உறவும் கிடையாது. என் வாழ்வை நான் அக்காவுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்து விட்டேன்’ என்று கூறியிருந்தார்.

இந்தக் கடிதம் எல்லா ஊடகங்களிலும் வந்து, இன்று பொது வெளியில் உள்ளது. தற்போது சசிகலாவுக்காக வெண் சாமரம் வீசிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக தார, தப்பட்டையுடன் கிளம்பி வந்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் இந்த கடிதத்தைப் பற்றியும் சற்றே பிரஸ்தாபித்தால் அது நன்றாக இருக்கும். நாட்டின் சுதந்திர வேள்வியில் முக்கிய பங்காற்றிய அந்த நாளிதழ் சசிகலாதான் ஆளுங்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக வேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது.

நிச்சயமாக அந்த நாளிதழுக்காக தங்கள் உதிரம் சிந்திய அதனுடைய முன்னாள் ஆசிரியர்கள் தங்களுடைய கல்லரையில் புரண்டு கொண்டிருப்பார்கள். மற்றோர் நாளிதழ் ஜெ வின் கடைசி நிமிடங்களில் சசிகலா எப்படித் துடித்தார் என்று அப்பல்லோவில் அருகில் இருந்து பார்த்தது போல சித்தரிக்கிறது. இன்னுமோர் வாரமிருமுறை இதழ் கடந்த 34 ஆண்டுகளில் ஜெ வுக்காக சசி எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தார் என்று காவியம் படைக்கிறது. மற்றுமோர் காட்சி ஊடகம், முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை சசிகலாவுக்குக் கொடுக்கிறது. இதுவரையில் எந்த முதலமைச்சரையும் இந்தளவுக்கு அந்த காட்சி ஊடகம் இருட்டிப்பு செய்தது இல்லை. தற்பொழுது செய்கிறது.

அண்ணா திமுக வில் யார் பொதுச் செயலாளாக வர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் கட்சியும், அதனது தொண்டர்களும்தான். ஒருவேளை சசிகலாவே பொதுச் செயலாளராக வந்தால் அப்போது அதனை ஆதரிக்கவும், எதிர்க்கவும் ஊடகங்களுக்கு எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் அதற்கு முன்பே சசிகலாவை செல்வாக்கு மிக்க கட்சிப் பதவியில் அமர்த்தும் காரியத்தில், கூச்ச நாச்சமில்லாமல் ஈடுபடுவதும், எழுதுவதும், அதற்காக லாபி செய்வதும், பொதுக் கருத்தை ஏற்படுத்த முயற்சிப்பதும் அருவருப்பான காரியங்கள். இது குறைந்த பட்ச பத்திரிகை தர்மம், நேர்மை இல்லாத காரியமாகும். இதற்குப் பெயர்தான் பெயிட் நியூஸ் …. அதாவது காசு வாங்கிக் கொண்டு எழுதுவது, கூவுவது!

இரண்டாண்டுகளுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஊடகவியலாளர்களைப் பார்த்து ‘ஒரு காரியத்தை’ச் செய்தார். விஜயகாந்த் அப்படிச் செய்தது சரியானதுதான் என்ற கருத்தை 90 சதவிகித மக்களிடம் ஏற்படுத்தும் காரியத்தைத்தான் சசிகலா விவகாரத்தில் சில ஊடகங்கள் இன்று செய்து கொண்டிருக்கின்றன …. இதுதான் உண்மை.

கட்டுரை: ஆர் மணி

ஜெயலலிதா இறப்பில் சந்தேகம்: பிரதமர் மோடிக்கு நடிகை கௌதமி கடிதம்

சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக நடிகை கவுதமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் விரிவாக எழுதியிருப்பதாவது….

‛‛நான் ஒரு சாதாரண இந்தியக் குடிமகளாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நான் ஒரு குடும்பத் தலைவி, தாய் மற்றும் வேலைக்கு செல்லும் ஒரு பெண். அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் நானும் ஒருத்தி. ஜெயலலிதா சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாது, பெண்கள் எப்படி தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருந்தவர். அவரால் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அவருக்கு ஏற்பட்ட மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், உடல்நலம் தேறி வருகிறார், நலமாக இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் சொல்லி வந்த நிலையில் திடீரென அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த விஷயத்தில் பிரதமர் மோடி அவர்கள் தலையிட வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதால் மோடி அவர்கள் இந்த மர்மங்களை விலக்க முன் வர வேண்டும்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவரின் மரணத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதுவும் மக்களால் விரும்பப்பட்ட ஒரு முதல்வரின் மரணத்தை அறிவதில் எந்தத் தவறும் இல்லை.

ஒரு சாதாரண குடிமகளாகத்தான் இந்தக் கடிதத்தை நான் அனுப்பியுள்ளேன். மோடி அவர்களே நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உண்மையை வெளிக் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.

எதையும் துணிச்சலாகச் செய்பவர்கள் நீங்கள். அதை பலமுறை நிரூபித்துள்ளீர்கள். இந்த விஷயத்திலும் நீங்கள் உண்மையை நிலைநாட்டுவீர்கள் என நம்புகிறேன்.
– இவ்வாறு கடிதம் எழுதியுள்ளதாக கௌதமி கூறியுள்ளார்.

 

TRAGEDY AND UNANSWERED QUESTIONS

The Honourable Prime Minister of India,

Shri Narendra Modiji

Dear Sir,

I write this letter to you today as an ordinary citizen of India. I am a homemaker, a mother and a working woman. My concerns and priorities in my life are those that are shared by many of my fellow countrymen, primarily to build a safe and nurturing environment for my family that will allow them to live a safe and fulfilled life.

I am also one among the crores who are mourning the recent shocking demise of our late Chief Minister, Selvi Dr. J Jayalalithaa ji. She was a towering personality in Indian politics and was a great inspiration for women from all walks of life. Her leadership of Tamil Nadu, over several terms in office, has brought us to the forefront in many spheres of development. Selvi Dr. Jayalalithaa ji’s undeniable strength and determination to persevere against all odds are a lasting legacy that will continue to inspire individuals of every gender to persist in pursuit of their dreams in life.

Her demise is all the more tragic and unsettling because of the circumstances over the past few months and the sheer volume of unanswered questions about our late Chief Minister’s hospitalisation, treatment, reported recovery and very sudden passing. There has been a near total blanketing of information regarding these matters. Nobody had been allowed access to her and many dignitaries who visited her with deep concern were denied an opportunity to convey their wishes in person. Why this secrecy and isolation of a beloved public leader and the head of the Tamil Nadu government? What/whose authority restricted access to the late Chief Minister? Who were the concerned persons who were making the decisions about Selvi Dr. J Jayalalithaa ji’s treatment and care when her health was apparently in such a delicate state? And who is responsible for these answers to the people? These and many other burning questions are being asked by the people of Tamil Nadu and I echo their voice in bringing them to your ears, sir.

No doubt some might say that it is a moot point because it has happened as it has, but that, sir, is precisely my fear. I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? The confidence of every Indian in the democratic process that makes our nation so great is precious and must be protected against all odds.

I am writing to you now, sir, with the complete confidence that you share my anxiety and determination to uphold the rights of every Indian to be aware and informed of any factor that impacts our day to day life. You have proven yourself in many ways to be a leader who is unafraid to stand up for the rights of the common man and I am confident that you will heed the call of your fellow countrymen.

With my deepest respects and trust

Jai Hind!

Gautami Tadimalla

08.12.2016

4/472, Kapaleeswarar Nagar

Neelankarai, Chennai 600041

+917338713979

70வது பிறந்த நாள் கொண்டாடும் சோனியாவுக்கு மோடி வாழ்த்து!

புது தில்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1946ம் ஆண்டு பிறந்த, காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சோனியா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

பேச மறுத்ததால் காதலி கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞர்!

சென்னை :

சென்னையில் பரபரப்பான பெருங்குளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தன்னிடம் பேச மறுத்ததால் இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர் போலீஸாரிடம் சரண் அடைந்தார்.

சென்னை நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் சோனியா (23). இவர் தாம்பரத்தில் உள்ள கடை ஒன்றில் சேல்ஸ்கேர்ளாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு வீடு திரும்புவதற்காக பெருங்குளத்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்றுள்ளார். அப்போது அங்கே பைக்கில் வந்த பிரசாத் (24) என்ற இளைஞர், பைக்கில் ஏறும்படி சோனியாவை அழைத்துள்ளார். அதற்கு சோனியா மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரசாத், கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்து விட்டு, பைக்கில் தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க அருகில் இருந்தவர்கள் முயன்றும், முடியவில்லை.

தப்பிச் சென்ற பிரசாத் பீர்கங்கரை போலீஸ் ஸ்டேஷனில் சென்று சரணடைந்துள்ளார்.
அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரசாத், கூடுவாஞ்சேரியில் உள்ள ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் சோனியாவும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் 6 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். பிரசாத், சோனியாவை தனது பைக்கில் அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பிரசாத்தின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த சில வாரங்களாக சோனியா, பிரசாத்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். பிரசாத்தின் தொலைப்பேசி அழைப்பையும் சோனியா தவிர்த்து வந்துள்ளார். இதனால் நேற்று அவரை பின்தொடர்ந்து வந்த பிரசாத், பைக்கில் ஏறும்படியும், தன்னை காதலிக்கும் படியும் வற்புறுத்தி உள்ளார். இதற்கு சோனியா மறுத்ததால், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனியாவை, அருகில் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே சோனியா உயிரிழந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இதே போல் ஒருதலைக் காதலால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர், ராம்குமார் என்ற இளைஞனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது…

அப்பல்லோ, ஜெயலலிதா, அந்த 75 நாட்கள்

  • “என் வீட்டுக்கு வாருங்கள், சூப்பர் டீ தருகிறேன்” என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா நர்சுகளிடம் மிக சாதாரணமாக சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் ஜெயலலிதா எப்படி இருந்தார்?

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற எந்த ஒரு புகைப்படமும் வெளியாகாத காரணத்தால் 75 நாட்களும் ஜெயலலிதா தொடர்பான சந்தேகங்கள் தமிழக மக்கள் மனதில் பலவிதமாக எழுந்தன. ஜெயலலிதா உயிரோடுதான் இருக்கிறாரா? என்று கூட மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

உண்மையில் அந்த 75 நாட்களும் ஜெயலலிதா நன்றாகவே இருந்தார் என்ற ஆச்சரிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும், நர்சுகளும் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்குப் பிறகு அதுபற்றி வாய் திறந்து பேச தொடங்கியுள்ளனர்.

ஜெயலலிதாவை கவனித்துக் கொள்ள ஒரு மூத்த நர்சு தலைமையில் 15 நர்சுகள் பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நர்சுகள் தலா 5 பேர் வீதம் 3 ஷிப்ட்களாக ஜெயலலிதாவுக்கு பணி விடை செய்தனர்.

இந்த 16 நர்சுகளில் சி.வி. ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி ஆகிய மூன்று நர்சுகள் ஜெயலலிதா மனதில் தனி இடம் பிடித்திருந்தனர். அவர்கள் மூவரையும் ஜெயலலிதா மிகவும் நேசித்தார். அவர்களிடம் அதிக பாசத்தை காட்டினார்.

அந்த 3 நர்சுகளையும் ஜெயலலிதா செல்லமாக “கிங்காங்” என்று பெயர் சூட்டி அழைத்தாராம்.

ஜெயலலிதா நர்சுகளிடம் மிக சாதாரணமாக சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இதுபற்றி நர்ஸ் வி.சி. ஷீலா கூறியதாவது:-

தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நான் நுழைந்ததுமே ஜெயலலிதா என்னைப் பார்த்து வாஞ்சையுடன் சிரிப்பார். என்னை அருகில் அழைத்து பேசுவார். உனக்கு என்ன வேண்டும் கேள். இப்போதே செய்து தருகிறேன் என்று பல தடவை கூறினார்.

அவரை இரும்புப் பெண்மணி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்து கொண்டார். நாங்கள் செய்த பணி விடைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட பத்திய முறையிலான உணவு வகைகளை சாப்பிட அவர் கஷ்டப்பட்டார். என்றாலும் அவர் அதை சாப்பிட தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வார்.

இந்த ஒரு ஸ்பூன் உணவை ஷீலாவுக்காக சாப்பிடுகிறேன். இதை ரேணுகாவுக்காக சாப்பிடுகிறேன். இதை சாமுண்டீஸ்வரிக்காக சாப்பிடுகிறேன் என்று சொல்லி, சொல்லி சாப்பிடுவார். எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருக்கும்.

ஜெயலலிதாவுக்கு உப்புமா, பொங்கல் இரண்டும் மிகவும் பிடித்த உணவாகும். அவற்றை வீட்டில் இருந்து வரவழைத்து சாப்பிட்டார். ஒரு தடவை சாண்ட்விச் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டார்.

செயற்கை சுவாசம் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு டாக்டர்கள் மற்றும் எங்களிடம் நன்றாக பேசினார். எங்களுக்கு அவர் மருத்துவ டிப்ஸ் எல்லாம் கொடுத்தார். எங்கள் தலை அலங்காரத்தை கூட மாற்ற சொன்னார்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் சத்தியபாமா கூறுகையில், “பெண்கள் எப்போதும் ‘பிசி’யாக இருக்கிறோம். நாம் நம்மை கவனித்துக் கொள்ளவும் நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என ஜெயலலிதா கூறினார்” என்றார்.

அடிக்கடி ஊசி போடப்படுவதை அவர் விரும்பவில்லை. அதுபற்றி அவர் எழுதி காட்டியதாக டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் கூறினார்.

ஒரு தடவை டாக்டர்களும், நர்சுகளும் சூழ்ந்து நின்ற போது ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் காபி வழங்கப்பட்டது. அதை குடித்த ஜெயலலிதா முகம் மாறியது.

அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகளிடம், “என்ன காபி இது. வாங்க… எல்லோரும் என் வீட்டுக்குப் போகலாம். கொடநாட்டு டீ தயாரித்து தருகிறேன்” என்றாராம்.

சினிமா பாடல்கள் என்றால் ஜெயலலிதா மிக விரும்பி கேட்பார். தன் அறையில் பழைய பாடல்களை ஒளிபரப்ப செய்து டி.வி.யில் பார்த்தார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்ற தகவல் டி.வி.யில் அறிவிக்கப்பட்டதும், அதை பார்த்து ஜெயலலிதா புன்னகைத்தாராம். அதன் பிறகு ஜெயலலிதா உடல்நிலையில் மிக வேகமான முன்னேற்றம் ஏற்பட்டதாக நர்சுகள் கூறினார்கள்.

ஜெயலலிதா தினமும் ஒரு மணி நேரம் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பதை வழக்கத்தில் வைத்திருந்தாராம். கோவில்களில் தனக்காக நடத்தப்படும் பிரார்த்தனைகளைப் பார்க்கும் போதெல்லாம் மிகவும் நெகிழ்ச்சி அடைவாராம்.

இதுபற்றி நர்ஸ் ஷீலா கூறுகையில், “நான் குணமாகி விடுவேன் என்று அவர் அடிக்கடி கூறுவார். நன்றாக குணமான பிறகு எங்களை எல்லாம் தமிழக சட்டசபைக்கு அழைத்து செல்வதாக கூறி இருந்தார்” என்றார்.

சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த பிசியோதெரபி பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி, ஜெயலலிதா தினமும் பந்து வீசி எறிந்து பயிற்சி செய்தார். அவரிடம் பந்துகளை எடுத்து கொடுத்து நர்சுகள்தான் விளையாட்டில் ஈடுபட்டனர்.

அப்போது நர்சுகள் கூறுவதை ஜெயலலிதா அப்படியே ஏற்றுக்கொண்டாராம். பந்துகளை வீசி பயிற்சி செய்யும் சில சமயம் ஜெயலலிதாவுக்கு சலிப்பாக இருந்ததாம். என்றாலும் நர்சுகள் கூறியதால் மறுக்காமல் செய்தாராம்.

பந்து வீசும் பயிற்சி மிக, மிக போரடித்தால் மட்டுமே, “எனக்கு சோர்வாக உள்ளது. பிறகு கொஞ்ச நேரம் கழித்து விளையாடுவோமா?” என்று நர்சுகளிடம் மென்மையாக கேட்பாராம்.

நர்ஸ் ரேணுகா கூறுகையில், “ஜெயலலிதா ஒரு பென்டிரைவ் வைத்திருந்தார். பழைய தமிழ் – இந்தி பாடல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றை அடிக்கடி கேட்டு ரசித்தார்” என்றார்.

சில நர்சுகளிடம், “சென்னையில் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்? எப்படி வேலைக்கு வருகிறீர்கள்? இவ்வளவு அதிகாலையிலேயே எப்படி வந்தீர்கள்? உங்கள் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள்” என்று கூறி உள்ளார்.

இந்த தகவல்களை அப்பல்லோ டாக்டர்களும், நர்சுகளும் நேற்று மிகவும் கண் கலங்க தெரிவித்தனர்.

சில சமயம் ஜெயலலிதா நர்சுகளிடம், “நான்தான் முதல்-அமைச்சர். நான் உங்களுக்கு உத்தரவிட்டதை செய்யுங்கள்” என்று வேடிக்கையாக கூறுவாராம்.

ஆனால் டாக்டர்களும், நர்சுகளும் என்ன சொன்னாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஒருநாள் ஜெயலலிதா இருந்த அறையில் இளம் நர்சுகளிடம், இவர் முதல்வராக இருந்தாலும் தான் சொல்வது போல எப்படி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்று கூறி சில அறிவுரைகள் வழங்கினாராம்.

அப்போது ஜெயலலிதா மெல்லிய குரலில், “இங்கும் நான்தான் உங்களுக்கெல்லாம் “பாஸ்” என்றாராம். அதைக் கேட்டு டாக்டர்களும், நர்சுகளும் சிரித்தார்களாம்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாட்களும் இப்படி நிறைய ருசிகரங்கள் நடந்ததாக நர்சுகள் சொல்கிறார்கள். நர்சுகள் ஷீலா, ரேணுகா, சாமுண்டீஸ்வரி, சூப்பிரண்டு சுனிதா ஆகியோர் ஜெயலலிதாவுடனான அனுபவங்களை சொல்லும்போது பிரமிப்பாக உள்ளது.

இப்படியெல்லாம் இருந்த ஜெயலலிதா திடீரென தன் பேச்சை, தன் மூச்சை நிறுத்தியதை அந்த நர்சுகளும் இன்னமும் நம்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

சசிகலா தொடர்பு நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை; பின்னணி!

தமிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி? சசிகலா குடும்பத்தினரைக் குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு? தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற வருமானவரித் துறையின் அதிரடிச் சோதனை மூலம் எதை உணர்த்த விரும்புகிறது?

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி என்ற ஊர்தான் சேகர் ரெட்டியின் சொந்த ஊர். வயது 45. மத்தியதரக் குடும்பம். மனைவி, ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்டராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச் சாலைகள் போடுவது; டெலிபோன் கேபிள் அமைப்பது என சிறுசிறு வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். தொடக்கத்தில் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தபோது எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் தங்குவார். ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் தொடர்பு மூலம் ரயில்வேயில் சிறுசிறு கான்ட்ராக்ட்களை எடுத்துச் செய்தார்.

அப்படித்தான் சேகர் ரெட்டி சென்னையில் கால்பதித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தன் நண்பர் பிரேம் என்பவருக்குச் சொந்தமான விடுதியில் தங்கி, கான்ட்ராக்ட் மற்றும் டெண்டர் விஷயங்கள் தொடர்பாக அதிகாரிகளைச் சந்தித்து வந்தார்.

எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறையப் பணிகள் நடைபெறும். அது தொடர்பான கான்ட்ராக்ட்களைப் பெற, சட்டமன்ற விடுதியில் எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்துப் பேசுவார். டெண்டர் சிபாரிசுக்காக எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க ஆரம்பித்தபோது, ‘அரசியல் தொடர்புகள்’ ஏற்பட்டன. அதன்மூலம், 1998-ல் அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார்.

திருப்பதி கோயிலில் அவருக்கு செல்வாக்கு இருந்தது. திருப்பதி கோயில் உயர் அதிகாரிகள் தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது சேகர் ரெட்டிதான். திருப்பதி கோயில் பிரசாதம் மற்றும் லட்டுகளை வாராவாரம் வாங்கித் தந்து, பல வி.ஐ.பி-க்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். வேலூர் கலெக்டராக இருந்த ஒருவருக்கு, திருப்பதியில் வேண்டிய உதவிகளைச் செய்தார் சேகர் ரெட்டி. அதன்மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் நுழைந்தார்.

அரசியல் வட்டாரத்தில் நெருங்கியபோதுதான் டாக்டர் விஜயபாஸ்கரின் நட்பு கிடைத்தது. இருவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். தனியார் மருத்துவமனையில் விஜயபாஸ்கர் டாக்டராகப் பணியாற்றிய நேரத்தில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷின் நட்பு கிடைத்தது. அந்த நட்பை சேகர் ரெட்டிக்கும் அறிமுகம் செய்துவைத்தார் விஜயபாஸ்கர். யாருடன் பழகினாலும் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிடுவது சேகர் ரெட்டியின் ப்ளஸ். இது, எல்லோருக்கும் பிடித்துவிட வி.ஐ.பி-க்கள் வட்டாரத்தில் உலவ ஆரம்பித்தார்.

தி.மு.க ஆட்சியின்போதும் அதிகாரிகள் துணையுடன் சகல காரியங்களையும் செய்து வந்தார். அந்த ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை எடுத்து கைமாற்றிவிட்டு, பணம் சம்பாதித்து வந்தார். அ.தி.மு.க ஆட்சி வந்ததும், அவருக்கு மீண்டும் ராஜயோகம் அடித்தது.

கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவருடன் சேகர் ரெட்டிக்கு நெருக்கம் அதிகம் ஆனது. இருவரும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள். இப்போது, அந்த அதிகாரி… அதிகார மையத்தில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அந்த அதிகாரியின் ஆசி இப்போதும் அவருக்கு உண்டு. அவருடைய மகள் திருமணம் நடந்தபோது அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சேகர் ரெட்டிதான் பார்த்தார். அவரின் ஆதரவோடு அரசின் பெரிய கான்ட்ராக்ட்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன. அவருக்குப் போகத்தான், மற்றவர்களுக்கு கான்டராக்ட்கள் கிடைக்கும் என்கிற நிலை உருவானது. ஒரு கட்டத்தில், ஆறுமுகசாமியிடம் இருந்து மணல் கான்ட்ராக்ட் பறிபோனதற்கு… அந்த அதிகாரிகளும் சில அமைச்சர்கர்களும் சேர்ந்த கூட்டணிதான் காரணம்! புதுக்கோட்டை ராமச்சந்திரன், சேகர் ரெட்டி வசம் இன்று மணல் பிசினஸ் போய்விட்டது!

ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. மொத்த கேபினெட்டும் அம்மாவுக்காக பூஜை புனஷ்காரங்களில் இருந்தபோது… இந்த ஃபைல் மட்டும் மூவ் ஆனது என்றால், சேகர் செல்வாக்கைக் கவனியுங்கள். திருப்பதியில் மொட்டை போட போனபோது, ஓ.பன்னீர்செல்வத்துடன் போகும் அளவுக்கு நெருக்கம். பன்னீர்செல்வத்தின் அந்தப் பயண ஏற்பாட்டைச் செய்தவர் அவர்தான்.

அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல வளையங்களைத் தாண்டி கார்டனுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டார் சேகர் ரெட்டி. காலப்போக்கில் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கார்டனைவிட்டு வெளியேற்றப்பட்டபோதும் விசுவாசத்தின் விளைவாக கார்டனுக்குள் நிலைத்து நின்றார். கார்டனில் அதிகமாக ஒலிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது சேகர் ரெட்டியின் பெயர். கார்டனுக்குத் தேவையான எதையுமே இவர்தான் செய்து முடிக்கிறார். இப்போது, அ.தி.மு.க-வில் சேகர் ரெட்டி அசைக்க முடியாத ஆள். தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், கலியமூர்த்தி, ‘மிடாஸ்’ மோகன் போன்றவர்கள் கண் அசைவுக்கு அ.தி.மு.க-வினர் தவம் கிடந்ததுபோல, சேகர் ரெட்டியைப் பார்க்கக் காத்துக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். சேகர் ரெட்டி போன் என்றால், அமைச்சர்கள் பலர் எழுந்து நின்றுதான் பேசுவதாகக் கிண்டல் அடிக்கிறார்கள். இவ்வளவு அதிகாரத்தோடு வலம் வந்தாலும்… அவர், அ.தி.மு.க-வில் வெறும் உறுப்பினர் மட்டுமே!

இன்று (8-12-16), சேகர் ரெட்டியின் தி.நகர், அண்ணா நகர் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதன் பின்னணி பற்றி விசாரித்தபோது பி.ஜே.பி பிரமுகர் ஒருவர், பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பி.ஜே.பி அதற்கான முதல்கட்ட வேட்டையை தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு, பி.ஹெச்.பாண்டியனையோ அல்லது செங்கோட்டையனையோ நியமிக்க வேண்டும் என்றும், தம்பித்துரையை மத்திய அமைச்சர் ஆக்கும் யோசனையும் இருப்பதாக சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துமனையில், சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர். அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டனர். அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்த வெங்கய்ய நாயுடு, அவர் தயார் செய்து கொண்டு வந்திருந்த பைலில்… எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அத்துடன், அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்தது வரை எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, விமானத்தைவிட்டு 20 நிமிடங்கள் கழித்தே வெளியே வந்தார். விமானத்தில்… அவர், ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுத்தான் வந்தார். வரும் காலங்களில் யாரிடம் பேசுவது, என்ன செய்வது என்கிற உத்தரவுகளை பிரதமர், அவர்களுக்கு சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார். அதன்படி, தமிழகத்தில் ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில்… தம்பித்துரை மட்டுமே தொடர்பாக இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அப்போது, இன்னும் பல விஷயங்கள் நடக்கும். அதற்குள், சசிகலா குடும்பத்தை தங்கள் வளையத்துக்குள் கொண்டுவரவே இன்று சேகர் ரெட்டி வீடுகளிலும், ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை இன்று நடத்தியுள்ளனர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு இளையராஜா இசையஞ்சலி!

சென்னை:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பாடலாசிரியர் அஸ்மின் இயற்றி, வர்சன் இசை அமைத்து, இளையராஜா உருக்கமாக இசை அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்த பாடல் இணையதளம் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் கேட்டு வருகின்றனர்.
மறைந்த ஜெயலலிதா உடலுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ் திரை உலகத்தினர் இளையராஜா, ரஜினி உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இளையராஜா பாடி ஒரு இசை சமர்ப்பணம் செய்துள்ளார்.

இந்த பாடலில் அம்மா இல்லாமல் நாடே கலங்குதம்மா என்று உணர்த்தப்பட்டுள்ளது,
” வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,

தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,”
என்று துவங்கும் இந்த பாடலில் அம்மா , அம்மா என்று ஒவ்வொரு வரிக்கும் முடிகிற படி அமைக்கப்பட்டுள்ளது. ” நெஞ்சுக்குள் நிம்மதி போனதம்மா ” என்று உச்ச ஸ்தாயியில் பாடும் போது முழு சோகத்தை உணர முடிகிறது.

அனுபல்லவி:

யாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா
உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா
தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா
பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா., – (வானே இடிந்.,)

[embedyt]https://www.youtube.com/watch?v=u1OPkMwMOwk[/embedyt]

டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது

டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்ட இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு இன்னும் 41 ரன் மட்டுமே தேவை.

* மும்பை வாங்கடே மைதானத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. கடைசியாக 2013 நவம்பரில் வெஸ்ட் இண்டீசுடன் நடந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் & 126 ரன் வித்தியாசத்தில் வென்றது. அது சச்சின் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும்.

* வாங்கடே மைதானத்தில் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 2 டெஸ்டிலும் வென்றுள்ளது. இங்கு இந்தியா 24 டெஸ்டில் 10 வெற்றி கண்டுள்ளது.

* இங்கிலாந்து அணியில் அறிமுகமாகும் கீட்டன் ஜென்னிங்ஸ், தென் ஆப்ரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்சின் மகன் ஆவார்.

* கடந்த 20 ஆண்டுகளில் வாங்கடேவில் நடந்த 9 டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் யாரும் 5+ விக்கெட் வீழ்த்தியதில்லை. ஸ்பின்னர்கள் 13 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்

செய்திகள்: சில வரிகளில்… (8.12.2016)

செய்திகள் … சில வரிகளில்!
மாநில செய்திகள்⭕

✳? தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வருகை: ஜெயலலிதா சமாதியில் கூட்டம் அலைமோதியது; பலர் மொட்டை அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

✳? மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் சென்னையை அச்சுறுத்தும் புயல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

✳? அணையா விளக்குடன் ஜெயலலிதா சமாதியில் நினைவிடம் அமைக்கப்படுகிறது அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24–ந்தேதி திறக்க முடிவு

✳?மறைவையொட்டி பெங்களூருவில் ஜெயலலிதா படித்த பள்ளியில் இரங்கல் கூட்டம் ‘அரசியலில் துணிச்சலாக செயல்பட்டு உச்சத்தை அடைந்தார்’ என புகழாரம்

✳? ஜெயலலிதா மறைவு தாங்காமல் உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: அ.தி.மு.க. அறிவிப்பு

✳? ஜெயலலிதா வீட்டை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வாசலில் நின்று வணங்கி சென்றனர்

✳? பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு கமிஷன் அடிப்படையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுத்த 4 பேர் கைது ரூ.19 லட்சம் பறிமுதல்

✳? அமெரிக்கா சுற்றுலா பயணிகள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி ‘‘இப்படிப்பட்ட தலைவி எங்கள் நாட்டில் பிறக்கவில்லையே’’ என்று ஏக்கம்

⭕தேசிய செய்திகள்⭕

?? ரூபாய் நோட்டு விவகாரம்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு “பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுக்கின்றன

?? சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

?? ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிப்பு ரூ.71 லட்சம் முறைகேடாக மாற்றிக்கொடுத்த வங்கி அதிகாரி கைது 2 தொழில் அதிபர்களும் சிக்கினர்

?? ரூபாய் நோட்டு பிரச்சினை: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்கிறது இரு அவைகளும் ஒத்திவைப்பு

?? ஜெயலலிதா மறைவுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்

?? டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வீட்டில் கொள்ளை பழமையான சாமி சிலைகளை திருடி சென்றனர்

?? வாரணாசி தொகுதி வெற்றியை ரத்து செய்யக்கோரிக்கை: மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

?? சோ ராமசாமி மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

?? காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சார்பில் மேற்கு வங்காள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் சபாநாயகர் அனுமதி

?? மேற்கு வங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 2 பேர் சாவு; 6 பேர் காயம்

⭕உலகச் செய்திகள்⭕

?? காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடர்ந்து அந்தமானில் 1,500 சுற்றுலா பயணிகள் தவிப்பு

??இந்தோனேஷியாவில் பயங்கர நில நடுக்கம்; 100 பேர் பலி கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டம்

?? ‘டைம்’ ஏட்டின் தேர்வு: 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் டிரம்ப்

??பாகிஸ்தானில் பயணிகள் விமானம் மலையில் மோதி நொறுங்கியது 47 பேர் கருகி சாவு???

?? இங்கிலாந்து தூதரை கொல்ல முயன்ற வழக்கு தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் உள்பட 3 பேருக்கு தூக்கு வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது

⭕வர்த்தகச் செய்திகள்⭕

??தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2713-22(-0.8%) 24 காரட் 10கி
28690-240(-0.83%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43500 -400(-0.91%) பார் வெள்ளி 1 கிலோ
40650 -405(-0.99%)

?? ஐரோப்பா, ஜப்­பானை விஞ்சி இந்­தியா 3வது இடம் பிடிக்கும் – உள்­நாட்டு வைர சந்தை

?? உருக்கு பொருட்­க­ளுக்கு தரச்­சான்று ‘கெடு’ 2 மாதங்கள் நீட்­டிப்பு

?? வட்டி விகி­தங்­களில் மாற்­ற­மில்லை ஜி.டி.பி.,யை குறைத்­தது ரிசர்வ் வங்கி

?? சோனா­லிகா ஐ.டி.எல்., நிறு­வ­னத்தின் டிராக்டர் ஏற்­று­மதி அதி­க­ரிப்பு

⭕விளையாட்டுச் செய்திகள்⭕

??இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் உத்வேகத்தில் இந்தியா 4–வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடக்கம்

??இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய போட்டி தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நிதி வழங்க அனுமதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

??சவுராஷ்டிரா–டெல்லி அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரே நாளில் 18 விக்கெட்டுகள் சரிந்தன

??ரஹானேவுக்கு விரலில் காயம் எஞ்சிய தொடரில் ஆடமாட்டார்

?? பயிற்சியாளர் பெக்கரை பிரிந்தார், ஜோகோவிச்
⭕பொன்மொழி⭕

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் உயர்வதும்.

– அரிஸ்டாட்டில்

⭕தகவல்துளி⭕
உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27