Home Blog Page 5733

எம்.எல்.ஏ., விளையாட்டு! ஈ.ஓ., தூக்கியடிப்பு! ஆணையர் எகத்தாளம்!

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிறந்த சிவஸ்தலம். சுற்றுலாத் தலமாகவும் அது விளங்குகிறது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு MLA. ஆளும் கட்சியின் ஆணவக்காரன். அந்தச் சிவஸ்தலத்திற்குச் சொந்தமான இடம் அருவிகளுக்கு அருகில் இருப்பதால் இவனும், இவன் எடுபிடிகளும் அந்த இடத்தை அடிக்கடி தங்குவதற்கு “ரூம்” கேட்டு அங்கு இருக்கும் கோயில் EOவைத் தொந்திரவு செய்து வந்தனர். EO கொஞ்சம் நியாமான ஆசாமி. MLAவிடம் நீ வேண்டுமானால் வந்து தங்கித் தொலை. உன் எடுபிடிக்கும், உன் வைப்பாட்டி வேலைக்காரனுக்கும் ரூம் தர முடியாது என்று சொல்லி விட்டார்.வந்தது ரோசம் மானம் கெட்ட MLAவிற்கு. கயவாளிகள் துறை பூனையரிடம் துறை மந்திரி மூலம் சொல்லி EOவை இடம் மாற்றம் செய்யச் சொன்னான். பூனையரும் கையைப் பிசைந்துக் கொண்டு அருகில் உள்ள ஊரிலேயே EOவை இடம் மாற்றம் செய்தார். MLAக்கு இது பொறுக்குமா?

இந்த மாவட்டத்திலேயே EO இருக்கக் கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறானாம். பூனையர் வேறு வழி இல்லாமல் EO வை எங்கு மாற்றலாம் என்று யோசிக்கிறார் என்று கேள்வி.

அந்தக் கோயிலுக்கு கோடிக்கணக்கில் வாடகையும் குத்தகைப்பணமும் பாக்கி உள்ளன. இப்படி ஒட்டுப் பொறுக்கிகள் சொல்கிறான் என்று இடம் மாற்றம் செய்தால், நாளை குத்தைகைக்காரனிடம் வாடகை கேட்ட குற்றத்திற்கும் இடம் மாற்றம் செய்ய நேரிடும். இந்தப் புண்ணியம் எல்லாம்
ஆட்சியின் தலைமைக்குப் போகும். தங்கத் தேர் இழுப்பதாலோ, 1008 குடம் பால் அபிஷேகம் செய்வதாலோ தலைமைக்கு நன்மை ஏற்படாது. கோயில் சொத்துக்களைப் பாதுகாத்து கோயில் வருமானத்தை முறையாகப் பெற்றால் அந்தப் புண்ணியம் காப்பாற்றும்.

இந்தக் கயவாளி ஒட்டுப் பொறுக்கிகள் செய்யும் கோயில் திருட்டுகளைத்
தலைமை ஒரு பொழுதும் பொறுத்துக் கொள்ள கூடாது.

– சிவபாதசேகரன்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது  ஒருநாள் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 118, லதாம் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் தரப்பில் மிஸ்ரா, பூம்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 243 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது

குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ்க்கு முக்கியத்துவம்: சாயா இயக்குனர்

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக  எடுக்கப்பட்டுள்ள படம் ”சாயா”

பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும்அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்துஉருவாகியுள்ளது ’சாயா’.

சாயா படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காகஎடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப்பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆத்மா என்பதுஎப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலை பார்க்கமுடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும்”சாயா” படம் ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. ஆத்மா விட்ட சவாலைமாணவியின் ஆத்மா ஜெயித்துக் காட்டியதா? என்பதற்கான விடை படத்தில்இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குனர் V.S. பழனிவேல்.  இவரே படத்தின் கதை, பாடல்கள், பின்னணி இசையையும் கவனித்திருக்கிறார்.

படம் முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. குழந்தைகளைகவர்வதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து அறுபதுநாட்களுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.

Y.G.மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாகவும், பாய்ஸ் ராஜன்தலைமையாசிரியராகவும் நடித்திருக்கிறார்கள். பஞ்சாயத்தார்களாக ஆர்.சுந்தர்ராஜனும், பயில்வானும் கலக்கி உள்ளார்கள். இதற்கிடையே வாய் தவறிசொன்ன ஒரு வார்த்தையால் ஆத்மாவாக மாறி படம் முழுக்க சேட்டைகள்செய்திருக்கிறார்கள் நெல்லை சிவாவும், மனோகரும். வில்லன்களான பாலாசிங்,மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகியோர்  இப்படத்தில் கிராமத்துபண்ணையார்களாக மிரட்டியிருக்கிறார்கள்.

புதுமுகம் சந்தோஷ் கண்ணா, நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் திறமையாகநடித்துள்ளார். நாயகி டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி படம் முழுக்க அனுபவபட நடிகை போல் அசத்தி உள்ளார். சோனியா அகர்வால் விஜய சாந்தி இடத்தைநிரப்பும் அளவுக்கு, நிறைய காட்சிகளில் டூப் வேண்டாம் என அதிரடி நாயகியாகநடித்து பிரமிக்க வைத்து உள்ளார். கொட்டாச்சி வில்லன் பங்காளியாக காமெடிசெய்துள்ளார்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெயிடுகிறார்  V.S. சசிகலா பழனிவேல். நவம்பர் வெளியீடாக வெளிவரவிருக்கிறது சாயாதிரைப்படம்.

இசை: ஜான் பீட்டர்

கதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை: V.S. பழனிவேல்

சண்டை: பவர் பாஸ்ட்

டான்ஸ்: ரமேஷ் கமல்

தயாரிப்பு மேற்பார்வை: மதுபாலன்

மேனேஜர்: ஆத்தூர் ஆறுமுகம்

தயாரிப்பு : V.S. சசிகலா பழனிவேல்

பி.ஆர். ஓ :  A. ஜான்

‘திட்டக்குடி’ இயக்குனரின் அடுத்த படைப்பு ‘ரங்கராட்டினம்’

காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை ‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் ஒரு விளையாட்டு சாதனம். ரங்கராட்டினம் என்பது அதிகப்படியான சந்தோஷத்தை கொடுப்பதாகும். ஒரு சேட்டைக்கார பையன், பயங்கர குறும்புக்காரன். அவன் அடக்கமும், அமைதியும் கொண்ட ஒரு பெண்ணைப் பார்த்து ஒருதலையாக காதலிக்க ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த பெண் இவனை விட பயங்கர சேட்டை மற்றும் குறும்புக்காரப் பெண் என்று தெரிந்தவுடன் அவளை விட்டு விலக நினைக்கிறான். ஆனால், அவளோ அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 4 பாடல்கள். இதில் நா.முத்துக்குமார் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் காமெடி வேடத்தில் மட்டுமில்லாமல் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். யதார்த்தமான கதையாக ‘ரங்கராட்டினம்’ படத்தை இயக்கி இருக்கிறேன். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல், படம் பார்ப்பவர்களுக்கு அதிக சந்தோஷத்தை இப்படம் கொடுக்கும்’ என்றார்.

நடிகர்கள். நடிகையர்:
கதாநாயகன்: மகேந்திரன், கதாநாயகி: ஷில்பா
‘நான்கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன்,
சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி

இசை: செல்வநம்பி
ஒளிப்பதிவு: ராசாமதி
படத்தொகுப்பு: விஷால் V.S
பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, ஏகாதசி
நடனம்: தினேஷ்
நிர்வாகத் தயாரிப்பு: பெருமாள் காசி
எழுத்து, இயக்கம்: சுந்தரன்
தயாரிப்பு: G.ராமசாமி BA.BL

சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி”

வைஷாலி பிக்சர்ஸ்  வெங்கட் தயாரிப்பில் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி”

’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக சொல்லும் படம் தான் ’பலசாலி’.

பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் ”பலசாலி”. ”சூது கவ்வும்” பாணியிலான ”பிளாக் ஹியூமர்” படமாக உருவாகிறது ”பலசாலி”.

பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவை பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால் ”பலசாலி” படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனைவிட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் சண்டைகளாகத் தான் இருக்கும்.

கதைக்கு தேவைப்பட்டது ”தமிழ் சினிமாவின் பாக்கியம்” ”நகைச்சுவையின் எல்லை” நாகேஷ் மாதிரியான ஒருவர்.   இயக்குனர் ஆறு மாதங்களுக்கு மேல் தேடி சோர்ந்துவிட்டார். கடைசியாக வந்து கிடைத்தவர் ”நடன மன்னன்”  சாண்டி. நடமாடினாலும் அதில் ஒரு  நகைச்சுவை கலர் இருக்கும் சாண்டியின் அணுகுமுறையில். அந்த அணுகுமுறையே  இந்த படத்தில் பலசாலியாக அதாவது ஹீரோவாக சாண்டி நடிக்கக் காரணம் . அவருக்கு ஜோடியாக சண்டிக்குதிரை படத்தில் கதாநாயகியாக நடித்த மானஸா நடிக்கிறார்.

நடிகர் ஆனந்த ராஜ்  ஹீரோவுக்கு  இணையான ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.

சாம்ஸ்,லொள்ளுசபா சுவாமிநாதன், மனோபாலா, லொள்ளுசபா மனோகர், தினா, நிரோஷா, ஆதித்யா டிவி லோகேஷ், நிஷாந்த் என தமிழ் சினிமாவில் வளர்ந்த,வளரும் காமெடியன்கள் பலசாலிக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இஎன் ஜே ஹரீஷ். ”பர்மா” படத்திற்கு இசையமைத்த சுதர்சன் இசை. படத்தொகுப்பு வில்சி.

பலசாலி படத்தை இயக்குபவர் இயக்குனர் சிவகார்த்திக். இவர் ஏற்கெனவே ”ரீங்காரம்”,”கடலை போட பொண்ணு வேணும்” ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இரண்டு படங்களுமே ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. வைஷாலி பிக்சர்ஸ் சார்பாக கோவையைச் சேர்ந்த வெங்கட் தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க சென்னையில் உருவாகும் பலசாலி படம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் நல்ல பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது.

செக்யூலரிஸமும் செருப்படியும்!

இந்த நாட்டுல கடவுள் மறுப்புக் கொள்கையும் இருக்கு… அதுக்கு பேர் செக்யுலரிசம்…
அப்டின்னு கினாதானாகானா சொல்லுறாரு… அதுக்கு அவ்ளோ வேகமா எஸ் எஸ்..னு சத்தமா சொல்லுது பொண்ணு…! ஏன்டியம்மா நீ படிச்ச ஊடக தர்மம் என்னான்னு அழகா தெரிஞ்சு போய்ட்சி!

அதாகப்பட்டது….
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொள்கையும் செக்யுலரிஸம்… அப்டின்னா,
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கொள்கையும் செக்யுலரிஸம்தானே…!
அந்த வகையில் நான் மத சார்பற்றவன் தான்!

ஆகவே என் போன்ற பலரின் எண்ணத்தை முன்வைக்கிறேன்…

கிறிஸ்துதாஸ் காந்தி – தனி மனிதன் அல்ல… கிறிஸ்துவ மதமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., அரசு அதிகாரிகள், அரசு இயந்திரத்தின் ஒட்டு மொத்த வடிவத்தின் ஒரு சிந்தனைக் கருத்துரு! இவர் என்ன சொல்கிறாரோ… அதுதான் அவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கும்!

பெருவாரியான மக்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்துவதும், இழிவு படுத்திப் பேசுவதும் பேச்சுரிமை என்றால், நமக்கும் அந்தப் பேச்சுரிமை உண்டு. ஆகவே, எப்படியெல்லாம் அந்தப் பேச்சுரிமையை நாமும் பயன்படுதலாம் என்று எல்லோரும் இறங்கிவிட்டால், இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ன பாடு படும்!?

ஊடகத்தினர் இப்படிப்பட்ட நபர்களை அழைத்து பேச வைத்து வேடிக்கை பார்ப்பதும், இப்படிப்பட்ட விதண்டாவாத தலைப்புகளை முன்வைத்து வேண்டுமென்றே காழ்ப்புணர்வை விதைப்பதும் மிகத் தவறு. நேரலையில் தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய பேச்சு வந்தாலும், உடனே பகிரங்க மன்னிப்பு கேட்டு அல்லது பேசியவரை அங்கேயே மன்னிப்பு கேட்க வைத்து பொது அமைதியைக் காப்பதில் ஊடகத்தின் பங்கு மிகப் பெரிது. இந்த இரண்டையுமே தந்தி டிவி., பின்பற்றத் தவறி விட்டது. நண்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், அறிமுகமான ஒருவராக இதன் பொறுப்பாளர் பாண்டேக்கு இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்!

ஏற்கெனவே அதிகாரி மட்டத்தில் இருந்த உமாசங்கர் என்ற ஒரு பைத்தியத்தை வைத்து ஆட்டம் போட்ட கிறிஸ்துவ மிஷனரிகளின் கிறிஸ்துதாஸ் காந்தி என்ற சாயம் இப்போது வெளுத்திருக்கிறது.

கிறிஸ்து தாஸ் காந்தி, தான் அளித்த வாக்குமூலத்தின் படி, இந்து சான்றிதழ் வைத்துக் கொண்டு அரசின் சலுகைகளைப் பெற்று, தேசத்தின் அமைதிக்கு விரோதமாக ஊழியம் செய்திருக்கிறார்! இவர் பணியில் இருந்த போது, எத்தகைய விரோதக் காரியங்களைச் செய்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது. இவர் போன்றவர்களை, உடன் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் இப்போதே சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும்! அதிகார மட்டம் அழுக்கு நிறைந்துள்ளதை கிறிஸ்துதாஸ் காந்தி வெளிப்படுத்தியிருக்கிறார்.

(என் உதாரண புருஷனை) செருப்பால் அடித்தால் அதை எப்படி தவறென்று சொல்வீர்கள்? அது செக்யூலரிஸம் என்று ஓர் அரசு அதிகாரியாக இருந்த ஒருவர் வலியுறுத்தி பகிரங்கமாக மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்வதால்…
இவர் சொல்வதன் பேரில் காவல் துறையோ நீதித்துறையோ இவர் பெயரில் தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இவர் சொல்வது உண்மை, உரிமை என்றாகும்.
அப்படி என்றால்,
இனி செக்யூலரிஸம் என்ற பெயரில் எதை யெல்லாம் செய்யலாம் என்று ஒரு பட்டியலைப் போட்டேன்…

அதில் முதலாவதாக வந்து நின்றது… தாடிவாலா சிலைகள் !
என் தாய்த் தமிழை, என் தெய்வத் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று வாய் கூசாமல் சொல்லி, தமிழர்களின் தன்மான உணர்வை மழுங்கடிக்கச் செய்த, ஊருக்கு ஊர் சிலையாக உட்கார வைக்கப் பட்டிருக்கும் கன்னட வெறியர் ஈ.வே.ரா. சிலை…கள்! அடுத்து, அவரின் சீடர்கள் என்ற போர்வையில் மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்த அண்ணாத்துரை சிலைகள்…அடுத்து வாழும் பெரியார், வாழும் அண்ணா என்று திராவிடக் குடியர்களால் சொல்லப்படும் அந்த ஒருவர்….

அதன் பின், ஏற்கெனவே சிலுவை சுமந்து புனிதர்களால் கல்லடி பட்ட ஒருவர்… மீண்டும் செருப்படி படுவதால் அவருக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை! காரணம் இது செக்யுலர் நாடு. செக்யுலர் நாடு கொடுத்த உரிமையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்!

அடுத்து, இன்னும் இருக்கவே இருக்கிறது… உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் கருத்து இடலாம்! காரணம், இது நமக்கான பேச்சுரிமை, எழுத்துரிமை, செக்யூலர் நாடு கொடுத்த உரிமை!

#த்தூ

செக்யுலர் என்ற பெயரில் காட்டுமிராண்டிகள் தர்பார் நடத்தும் இந்த ஒரு காரணத்துக்காகவே, என் நாட்டை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும்! அதன் பின்னர் மைனாரிடி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளட்டும்! செக்யூலர் நாட்டில் எதுக்கடா மைனாரிட்டி சலுகைகள் முண்டங்களா!

தமிழில் நடிக்கவரும் கனடிய நடிகர் பிரஷ்!

சினிமா எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. எப்பாடு பட்டாலும் காதலியை நாயகன் அடைந்து விடுவான்.

சினிமாவைக் காதலிப்பவர்களும் அப்படித்தான் .எங்கிருந்தோ வந்து சினிமாவில் சங்கமித்து விடுவார்கள்.

இதற்கு உதாரணமாக நடிகர் பிரஷ் இருக்கிறார்.  இவரது இயற்பெயர் பிரஷாந்த் ஜெயக்குமார். சினிமாவுக்காக பிரஷ்.

பிறப்பால் சென்னைக்காரரான இவருக்கு, சிறுவயது முதல் சினிமா ஆர்வம். ஆனால் நெருங்க முடியவில்லை. இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றார். அங்குள்ளபல்கலைக் கழகத்தில் அறிவியலில் முதுகலைப் பட்டம் எம்.எஸ்ஸி முடித்தார்.வேலை நிமித்தமாக கனடா போனார் அங்கு சில ஆண்டுகள் தங்கினார். அவருக்குள்’நீறுபூத்த நெருப்பு’ போல கனன்று கொண்டிருந்த சினிமா ஆர்வம் தலைதூக்கி ஒரு கட்டத்தில் தலைவிரித்தாடவே, தன்னைச் சினிமாவுக்கு முழுத் தகுதியாக்கிக்கொள்ள விரும்பினார்.

அங்குள்ள ‘சிட்டாடல் தியேட்டர்ஸ் அகாடமி’ என்கிற ஆக்டிங் ஸ்கூலில் நடிப்புப் பயிற்சி பெற்றார். அதுமட்டுமல்ல ‘சக்சஸ் லைப் ஒர்க்ஷாப்’ பில் திரைக்கதை எழுதும்பயிற்சியும் பெற்றார். அவர் நடிப்புப் பயிற்சி முடித்ததும்  கனடாவில்  ஒரு படத்துக்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்டார். ஆச்சரியம் என்ன வென்றால் பிரஷ்தேர்வாகி விட்டார். அந்தப் படத்தில் முக்கிய வேடமும் ஏற்றார். அந்தப் படம்தான் ‘வித்தின் சர்க்கிள்ஸ்'( WITHIN CIRCLES) என்கிற  கனடியப்படம். அதை இயக்கியவர் பிலிப்வில்சன்.இதுபற்றிப் பிரஷ் பேசும் போது,

” எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிப்பில் மீது ஆர்வம். சென்னையின் ‘ஐஐடி கேந்திரீய வித்யாலயா ‘பள்ளி,செயின்ட் ஜோசப் பொறியியல்  கல்லூரி,மான்செஸ்டர் பல்கலைக் கழகம் வரை மேடையேறி நடித்தவன் நான்.

ஹாலிவுட்டில் நடிப்பு பயிற்சி பெற்று விட்டுத்தான் நடிக்க வருகிறார்கள்.எனவே கனடாவில் நான் நடிப்பு பயிற்சி பெற விரும்பினேன்.  நான் அங்கு  நடிப்புக்கானபயிற்சிபெற்றபோது முதலில் கற்றது நடிக்கும்  போது நடிப்பது என்பதே இருக்கக் கூடாது என்பதுதான்.

அதாவது நடிப்பதே தெரியாமல் யாதார்த்தமாக இயல்பாக இருப்பதே நல்லநடிப்பு என்பதையே அங்கு கற்றேன். புதிய திசை தெரிந்ததுபோல் இருந்தது. புதிதாக எனக்குள்ஒரு ஜன்னல் திறந்தது போல ஒரு தெளிவு கிடைத்தது. எனக்கு பயிற்சி அளித்தவர் கனடிய நடிகை லியானா ஷெனன். சினிமா நுணுக்கங்களை இயக்குநர் பேரிஜே.கில்லிஸ் கற்றுக் கொடுத்தார்.

இப்படி அவர்களிடம் பெற்ற பயிற்சி ,சினிமாவில் நடிக்க பெரிதும் நம்பிக்கை தந்தது. அதனால் முதல் படத்திலேயே பதற்றமில்லாமல் 200 சதவிகித நம்பிக்கையுடன்நடித்தேன்.

இப்போது இந்தியாவில்தான் இருக்கிறேன். நான் கனடாவில் ‘நிரந்தரமாக தங்கியிருப்பவர் ‘என்கிற  வசிக்கும் உரிமையைப் பெற்று இருக்கிறேன். எப்போதும் இங்குவந்து போகத்தடையில்லை.

எனக்கு தமிழில் நடிக்க மிகவும் விருப்பம். நான் ஒரு திரைக்கதை கூட எழுதிவைத்திருக்கிறேன்’ என்கிறார்.

நம்நாட்டில் நிலவும்  வன்கொடுமைகள், பெண்கொடுமைகள், கொலை, கொள்ளை .ஊழல், பாலியல்கொடுமை எல்லாம் அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.புராணத்தில் கல்கி அவதாரம் எடுப்பது போல் நாயகன் இவற்றைக்களைய எடுக்கும் அவதாரம்தான் கதை. கை கோர்க்க தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்கவும் தயாராகஇருக்கிறார். இது மெகா பட்ஜெட் படம். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழியில் உருவாக்கும் திட்டமுள்ளதாம். தமிழில் ‘புத்தம்புது பூமி’ என்கிறபெயரிட்டுள்ளார்.இந்தியில் , ‘ புனர் நிர்மான் ஜமீன்’ ,ஆங்கிலத்தில் ‘ ஸ்டார்ஸ் ஆன் ரீபில்ட் எர்த்’ என்பது பெயர்கள்.
” என்னிடம் கதையையோ , நடிப்பையோ ‘கேளுங்கள் தரப்படும் தோண்டுங்கள் கிடைக்கும். ” என்று கூறுகிறார் பிரஷ் நம்பிக்கையுடன்.
கனவு கண்களில் மின்னுகிறது. ‘கடைவிரித்தேன் கொள்வார் யார் ? ‘என்று கேட்கிறார்.
பிரஷ்ஷுக்கு பிரெஷ்ஷாக ஒரு பிரகாச வாய்ப்பு வருமா? வந்துவிட்டால் வென்று விடுவார்.ஏனென்றால் காதலியை மட்டுமல்ல சினிமாவையும் தேடிப்பிடித்தால்ஜெயித்து விடலாம்.

நேரடி கேஸ் மானியம்; ஆதார் எண் பதிவுக்கான காலக்கெடு நவம்பருடன் முடிகிறது

சென்னை :

இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பி.பி.சி.) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (ஹெச்.பி.சி.) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டு, கடந்த ஜூலை மாதத்திற்குள் ஆதார் எண்கள் சமர்ப்பிக்க தவறிய, வாடிக்கையாளர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் நிறுத்தப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் மானியத்தை தனி வங்கி கணக்கு ஒன்றில் எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன.

வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் நேரடி கியாஸ் மானியம் பெற காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டு உள் ளது. அதற்குள் ஆதார் எண்ணை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட சமையல் கேஸ் மானியத்தை திரும்ப வழங்குவதுடன், வரும் காலத்திற்கான சிலிண்டர் மானியமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களில் தமிழகத்தில் 1 கோடியே 67 லட்சத்து 63 ஆயிரமும், புதுச்சேரியில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 700 வாடிக்கையாளர்களும் உள்ளனர். இதில் தமிழகத்தில் 1 கோடியே 58 லட்சத்து 61 ஆயிரம் பேரும், புதுச்சேரியில் 2 லட்சத்து 92 ஆயிரம் பேரும் மானியம் பெறுகின்றனர்.இவர்களுக்கு 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 1-ந் தேதி வரை ரூ.3 ஆயிரத்து 877 கோடியும், புதுச்சேரியில் ரூ.80 கோடியே 73 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆதார் எண்கள் சமர்ப்பித்து உள்ள சமையல் கேஸ் சிலிண்டர்கள் பெறும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு ஆண்டில் வீடு ஒன்றுக்கு மானிய விலையில் 14.2 கிலோ எடைகொண்ட 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் நேரடியாக தனிநபர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மானியம் தேவையில்லை என்று கூறி உள்ள வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

கடலூர்

கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். முக்கிய வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள் என்று பல பெருமைகள் இம்மாவட்டத்திற்கு உரியது. புகழ்மிகு தில்லை நடராசர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்த்துக்கீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க்க நெறி கண்ட வள்ளலார் பிறந்த வடலூர் என பல சிறப்புகள் உண்டு.

சிதம்பரம்

சிதம்பர ரகசியம் தெரியாதவர்கள் உண்டா! சிதம்பரம் நடராசர் chidambaram - 2026நாட்டியக் கலையின் கடவுள். இந்த பிரமாண்டக் கோயிலில் உள்ள நடனச் சிலைகள் ஒயிலும் எழிலுமாய் அழகுற அமைந்துள்ளன. தென்னாடுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபையும் இதுதான். இந்த அடைமொழிக்குப் பொருத்தமாக நடராசர் ஆலயத்தின் மேற்கூரையை பொன்னால் வேய்ந்து பொலிவூட்டினான் பராந்தகச் சோழன். தொலைபேசி – 04144 222696

காட்டு மன்னார்குடி

சிதம்பரம் வட்டத்திலுள்ள சிறு நகரம். இங்குள்ள பெருமாள் கோயில் மிகப் பழமையானது. வைணவத் துறவிகளான நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் பிறந்த இடம். இதுவே காட்டு மன்னார்குடியின் தனிச்சிறப்பு.

பாடலீஸ்வரர் கோயில்

பாடல் பெற்ற ஸ்தலம். கடலூரின் மையத்தில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு அருகே இக்கோயில் உள்ளது.cadalore3 - 2026 இதன் தல விருட்சம் பாதிரிமரம். ஊரின் பழைய பெயர் புலியூர். இரண்டும் சேர்ந்து திருப்பாதிரிப்புலியூர் என்று மருவியதாகச் சொல்லப்படுகிறது. திருநாவுக்கரசர், ஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம். இக்கோயிலுக்கு அருகே புகழ்பெற்ற பிடாரிஅம்மன் கோயிலும் அமைந்துள்ளது. தொலைபேசி – 04142-236728.

நெய்வேலி

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி போலவே முந்திரியும் விளைகிறது. இந்தியாவிலேயே அதிக அளவு பழுப்புcadalore2 - 2026நிலக்கரி இங்குதான் வெட்டியெடுக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு நெய்வேலி மின்சாரம் மூலம் வெளிச்சமும் தருகிறது. உரமும் தயாரிக்கப்படுகிறது. கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் நெய்வேலி அமைந்துள்ளது.

பிச்சாவரம்

நீரில் மிதந்தபடி சுரபுன்னைக் காடுகளைப் பார்ப்பது அழகு. நிலத்திற்குள் கடல் வந்து முத்தமிடும் கழிமுகம் இது. இங்கு 11000 ஏக்கர் பரப்பளவில் சுரபுன்னைக் காடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. இங்கு பல வகையான மீன்களை உண்டு மகிழலாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள், அழகிய குடில்கள், உணவு விடுதி, படகுப் பயணம் என்று பிச்சாவரத்தை மிச்சமின்றி ரசித்து மகிழ பல வசதிகள் உள்ளன. தொலைபேசி – 04144-249232.

கடலூர் துறைமுகம்

கடலூர் துறைமுகம் தனிச் சிறப்புமிக்கது. சரக்குப் படகுகள் வரப்போக கப்பல் நிறுத்துவதற்குcadalore4 - 2026 வசதியான துறைமுகம் இது. தென்னக ரயில்வேயின் பிரதான தடங்களில் ஒன்றான கடலூர் ரயில் நிலையத்தோடு இப்பகுதி சரக்குப் போக்குவரத்தின் காரணமாக இணைக்கப்பட்டுள்ளது. உப்பனாற்றின் மேற்குப் பக்கம் புதிய துறைமுக அலுவலகத்திற்கு அருகே சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியுடைய கப்பல் துறை மேடையொன்று 200 மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தின் பரப்பளவு 1132.4 மீட்டர். இதன் ஆழம் 15 முதல் 18 மீட்டர்.

பரங்கிப்பேட்டை

இங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். அடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர் cadalore6 - 2026காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள். மாலுமியார் அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.

ஸ்ரீமுஷ்ணம்

சுயம்பு வடிவில் உள்ள எட்டு திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவராகசாமி கோயில் இங்குள்ளது. ரதம் போன்ற வடிவிலான புருஷhஷ்குத மண்டபத்தில் போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இதைக் காணக் கண் கோடி வேண்டும். இந்நகர் கடலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

திருவகிந்தபுரம்

வைணவ தேசங்கள் 108இல் நடுநாட்டுத் திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கடலூர் நகரையொட்டிய ஓர் அமைதியான கிராமம்.cadalore7 - 2026இலங்கை போர்க் களத்திற்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைக் கையில் ஏந்திச் சென்றபோது அதிலிருந்து விழுந்த ஒரு துளியே தேவநாதப் பெருமாளாக எழுந்தருளியதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் போற்றி வணங்கும் புனிதத்தலம்.

வடலூர்

வடலூர் என்றதும் வள்ளலார் ஞாபகத்திற்கு வருவார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய ராமலிங்க சுவாமிகள் சத்யஞான சபையை நிறுவிய இடம் இது. சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்லும் இடமாகவும் இருக்கிறது. நெய்வேலியிலிருந்துcadalore5 - 2026 மிக அருகில் கங்கை கொண்டான் பேரூராட்சிக்கு அடுத்ததாக அமைந்துள்ள இந்நகரம் கடலூரிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது.

தில்லை காளி கோயில்

மிகப் பழமையான கோயில் கடலூர் நகரின் வட திசை எல்லையில் இது அமைந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் ஆண்ட கப்பேருஞ்சன் என்ற மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. பக்தர்கள் நாடும் நற்கோயில். தொலைபேசி – 04144-230251.

பஞ்ச சபைக் கோயில்கள்

சிவபெருமான் தன் பிரபஞ்ச நடனத்தை திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும் (சிற்சபை) சிதம்பரத்தில் உள்ள பொற்சபையிலும் மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்திலும் திருநெல்வேலியில் உள்ள தாமிர சபையிலும் குற்றாலத்தில் உள்ள சித்திர சபையிலும் ஆடினார். இச்சபைகள் உள்ள கோயில்களே பஞ்ச சபைக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

விருத்தாச்சலம்

மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்த நகரம். இங்குள்ள விருத்தகிரிஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்தது. மாசிமகத் திருவிழாவில் யாத்ரிகர்கள் மணிமுத்தாறு நதியில் புனித நீராடுவர். கடலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

நடனக்கலையின் தலைவன் நடராஜன். அவன் ஆடும் நாட்டியம் பிரபஞ்ச இயக்கம். இதன் அடிப்படையில் நடராஜபெருமானுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்படும் விழா இது. இந்த விழா மகா சிவராத்திரி ஐந்து நாட்களும் நடைபெறுகிறது. பல நடனக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நாட்டியத்தின் மூலம் நடனக் கடவுளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

பஞ்சபூதத் தலங்கள்

சிவபெருமானின் ஐந்து பண்பு நலன்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களே பஞ்சபூதத் தலங்கள் எனப் புனிதமாகக் கருதி மக்கள் வழிபடுகிறார்கள். சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவானைக்காவல் மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆகியவையே பஞ்சபூதத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அரியலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு முன்னணி சிமெண்ட் தொழிற்சாலைகள் இங்குதான் அமைந்துள்ளன.

கங்கைகொண்ட சோழபுரம்

kangai - 2026கங்கை அரசர்களை வெற்றி கொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழபுரம். வடநாட்டுப் போரில் அடைந்த வெற்றியின் அடையாளம். இங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசர் முதலாம் இராஜேந்திரர். இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர் உட்பட பல அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சிங்கத் தலை கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்கள் இந்தக் கோயிலில் உள்ளன. சோழர்களின் பழமையான சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனிப்பெருமை உண்டு.

ஏலாக்குறிச்சி – அடைக்கலமாதா கோயில்

‘தேம்பாவணி’ari2 - 2026 எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம். ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட இந்தக் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார், 1711 இல் ஏலாக்குறிச்சியில் இதை உருவாக்கினார். இங்குள்ள அடைக்கலமாதா சொரூபம் லண்டன் மாநகரில் இருந்து கொண்டு வரப்பட்டது. பெரம்பலூரில் இருந்து 65 கி.மீ. திருச்சியில் இருந்து 80 கி.மீ. சென்னையில் இருந்து 375 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஏலாக்குறிச்சி. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்தத் தெய்வீக சிறப்பு பெற்ற தேவாலயத்தைச் சுற்றுலாத் தலமாக அறிவித்தது. இந்த மாதா கோயிலுக்கு சோழ மன்னன் நிலக்கொடை அளித்ததை அறிவிக்கும் கல்வெட்டு சாசனம் ஏலாக்குறிச்சியின் மற்றுமொரு சிறப்பு. தொலைபேசி – 621715.

ஜெயங்கொண்டம்

நெல்லிமண ari3 - 2026கிராமம் என்றால் யாருக்கும் புரியாது. ஜெயங்கொண்டம் என்றால் புரிந்துவிடும். இவ்வூரின் இயற்பெயர் இதுதான். இங்குள்ள சிவன் கோயிலின் ஸ்தல விருட்சம் நெல்லிமரம் என்பதால் ஊர்ப் பெயரில் நெல்லியும் சேர்ந்து கொண்டது. தனது தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றுவதற்கு முன்னால் இராஜேந்திர சோழன் ஜெயங்கொண்டம் என்ற பெயரை இந்த ஊருக்கு வைத்தான். கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜெயங்கொண்டம் எல்லோரும் கண்டிப்பாக போய்ப் பார்க்க வேண்டிய சோழர் காலக் கலை நகரம்.

மாளிகை மேடு

இந்த மாளிகை மேடு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ளது. தொல்லியம் துறையின் அகழ்வாய்வுகள் முதலாம் இராஜேந்திர சோழனின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் தொல்லியல் துறை இந்த இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மாமன்னர்கள் கால்பதித்த மாளிகை மேட்டிலும் நம் கால் பதிய வேண்டாமா?

காரைவெட்டி பறவைகள் சரணாலயம்

பறவைகள் எங்கிருந்தால் என்ன? பார்க்கப் பார்க்க அழகுதான். தஞ்சாவூருக்கு வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம். இதன் மொத்தப் பரப்பு 454 ஹெக்டர். காலிமர் பறவைகள் சரணாலயத்துக்கு அடுத்து இந்தச் சரணாலயம்தான் பெரும்பாலான நீர்ப்பறவைகளைக் கவரக் கூடியது என்ற புகழுக்குரியது. ஒவ்வொரு நவம்பர் மாதமும் பறவைகள் இங்கு வருகை தரும். அந்தக் காலங்களில் பறவைகள் நீரில் வண்ண ஓவியங்களாகத் தெரியும். நீர்வண்ண ஓவியங்கள்!

திருமானூர்

திருமான் ari4 - 2026ஊர் திருமானூர். ஒரு கலைமானுடன் நடராசர் நாட்டியம் ஆடியதாக உள்ளூரில் புராணக் கதை ஒன்றுள்ளது. அதனால் இந்தப் பெயர் வந்ததாக வரலாறு. இராஜராஜ சோழன் பெரம்பலூரிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் வழியில் 20 அடி உயரம் உள்ள ஒரு சிலையைவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. வருடத்தில் சில நாட்கள் சூரியக் கதிர்கள் கோயிலின் கர்ப்பக் கிரகத்தின் உள்ளே விழும். சோழர்கால வரலாற்றின் காலச் சுவடுகள் பதிந்த ஊர் இது. ஒருமுறை பார்த்தால்தான் என்ன குறைந்துவிடப் போகிறது.

திருமழப்பாடி

ஊருக்கொரு புராணக் கதையோ, வாய்மொழிக் கதையோ இருக்கிறது. அப்படியொரு கதை இந்த ஊருக்கும் உண்டு. இங்கு பிரபலமான புராணக்கதை ஒன்று உலவுகிறது. தாளவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் மார்க்கண்டேய முனிவருக்காக மற்றோரு பிரபஞ்ச நடனத்தை வைகாசி மாதம் பௌர்ணமி அன்று அருளுவதாக நடராசர் வாக்கு தந்தாராம். ஏனெனில் சிதம்பரத்தில் நடராசர் ஆடிய ஆதி தாண்டவத்தை காணமுடியவில்லையாம். ari5 - 2026எனவே இந்த ஊர் திரு-மழ-பாடி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் திருக்குளத்தில் குளித்தால் தொழுநோய் தீரும். பிள்ளை பாக்கியம் கிட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

காமரசவல்லி

தஞ்சை மாவட்டத்தைப் போலவே சோழர் காலத்து பிரமாண்ட எழில் நிறைந்த கோயில்களைக் கொண்டுள்ளது அரியலூர் . இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த ஏராளமான ஆதாரங்கள் இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்டன. இங்கு அப்பர் சுவாமிகள் மேளத்துடன் சாக்கைய கூத்து ஆடிய நிலையில் காணப்படுகிறார்.

கள்ளன் குறிச்சி கோயில்

இவ்வூர் ஒரு சிறு கிராமம். ஆனால் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் பரிச்சயமான கிராமம். இங்குதான் கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அரியலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கள்ளன் குறிச்சி உள்ளது.

மேலப்பழுவூர்

தமிழ்த் ari6 - 2026துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்துள்ள ஊர் இது. அரியலூர் – திருச்சி சாலையில் அமைந்திருக்கிறது. மேலப்பழுவூருக்கு வரலாற்றில் முக்கிய இடமுண்டு. இந்தப் பகுதியில் தலைவராக ஆட்சி புரிந்துள்ள பழுவேட்டரையரின் தலைமையகமாக விளங்கியுள்ளது. இங்குள்ள குடைவரைக் கோயிலான விஷ்ணு கோயில் மனத்தைக் கவரக் கூடியது. இக்கோயிலில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளியன்று பூஜைகள் நடக்கும்.