Home Blog Page 5762

Venkat Prabhu, Simbu might join hands for ‘Billa’ reboot

0

Filmmaker Venkat Prabhu and actor Simbu might join hands for the reboot of Tamil actioner “Billa”. The film was earlier twice made with superstar Rajinikanth and Ajith Kumar.

“Billa” was the Tamil remake of Amitabh Bachchan-starrer “Don”.

அரசுப்பள்ளியில் அம்மா நோட்டிற்கு பதில் கருணாநிதி நோட்டுகளா ? செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளராக இருந்தால் இந்த நிலை இருந்திருக்க முடியுமா ? பொங்கும் கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர்

04-06-16 Karur Admk Ex Minister Ex News photo 01 04-06-16 Karur Admk Ex Minister Ex News photo 02

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். இந்நிலையில் கடந்த 1 ம் தேதியே தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா சீருடைகள், விலையில்லா நோட்டு புத்தகங்கள் ஆகியவைகள் கொடுத்தனர். ஆனால் இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 119 பள்ளிகளில் கொடுக்கப்பட்டது. ஆனால் நேற்று தமிழக அளவில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தை கொண்டாடினாலும், கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மந்த நிலையிலேயே கொண்டாடப்பட்டது. ஆனால் கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் திமுக தலைவர் கருணாநிதி 93 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் அதுவும் அம்மா நோட்டு புத்தகங்களுக்கு பதில் கருணாநிதியின்  நோட்டு புத்தகங்களா ? என்று தற்போது பிரச்சினை ஏற்பட்டதோடு, முன்னாள் மாவட்ட செயலாளர் வி.செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளராக இருந்திருந்தால் இது போன்ற செயல்கள் நடைபெற்று இருக்குமா ? என்றும் அ.தி.மு.க வினரே கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு சில இடங்களில் பெயரளவிற்கு கொடியேற்றி நோட்டு புத்தகம் அதுவும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கும் அரசுப்பள்ளியில் அதுவும் கருணாநிதியின் புகைப்படம் அடங்கிய நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் கடைவீதியில் நடந்த திமுக  கொடியேற்று விழாவிற்கு ஒன்றிய அவைத்தலைவர் மொஞ்சனூர் பழனிச்சாமி வரவேற்றார். திமுக ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமை வகித்து கழக கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.

திமுக ஒன்றிய தி.மு.க செயலாளர் கருணாநிதி தலைமை வகித்து கழக கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி எலவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.

விழாவில் தி.மு.க மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் முன்னாள்இ இன்னாள்இ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தற்போது முடிந்து போன இந்த விஷயம் பூதாகரமாகியுள்ளது. ஏனென்றால் கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி தான், தி.மு.க அரசின் போதும், அம்மா படத்தை கொடுத்து பிரச்சினையை கிளப்பியதோடு, அதே தி.மு.க ஆட்சியிலே தற்போதைய முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி விழாக்கோலம் பூண்டது போல், விளையாட்டு போட்டிகளை நடத்தியும், சுமார் லட்சக்கணக்கான நோட்டு, புத்தகங்கள் கொடுத்தும் சிறப்பாக கொண்டாடுவார். ஆனால் மாவட்ட செயலாளர் இல்லை என்பதை தி.மு.க கட்சி சுட்டி காட்டுகிறதா ? இதே செயல் செந்தில் பாலாஜி அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருக்கும் போது நடந்திருக்குமா ? என்ற கேள்வி அ.தி.மு.க வினரிடையே மட்டுமில்லாமல் பல்வேறு கட்சியினரிடையே எழுந்துள்ளது. ஆனால் இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுபட நாகை அருகே வேதாரண்யத்தை அடுத்துள்ள சிக்கல் சிங்காரவேலர் முருகன் கோயிலுக்கும், பழனி பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கும் என்று முருகன் ஆலயமாக தமிழக அளவில் உள்ள முருகன் கோயிலுக்கு சுற்றி வருகிறார் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளி கட்டணக்  கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணக்  கொள்ளையை தடுத்து நிறுத்த ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான பாட வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கல்விக் கட்டணக் கொள்ளை குறித்த புகார்களும் மலை போல குவியத் தொடங்கியுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று போற்றும் அளவுக்கு கல்வி ஒரு காலத்தில் ஈடு இணையற்ற உன்னத சேவையாக இருந்து வந்தது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எல்லையில்லா லாபம் தரும் வணிகமாக மாறி விட்டது. ஒரு மாணவன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் பட்டப்படிப்பு வரை படிக்க முடியுமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், ஒன்றாம் வகுப்பு மட்டும் உள்ள பள்ளிக்கூடத்தைக் கட்டி கல்வி வணிகத்தைத் தொடங்கினால், கல்லூரியைத் தாண்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வரை கட்டும் அளவுக்கு லாபம் ஈட்ட முடியும் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல… அவமானப்பட வேண்டிய வளர்ச்சியாகும்.
கல்வி வணிகமயமானதற்கும், கட்டணக் கொள்ளை தொடர்வதற்கும் இரு திராவிடக் கட்சிகள் தான் காரணமாகும். கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் நோக்குடன் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையான பள்ளிகள் அக்குழு நிர்ணயித்த கட்டணத்தை மதிப்ப்பதில்லை. குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை தனியார் பள்ளிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசூலித்து வருகின்றன.  ஆனால், இன்று வரை ஒரு பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில்லை. மாறாக கல்விக் கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடத்தும் பெற்றோர்கள் தான் மிரட்டப் படுகின்றனர்.காரணம், பள்ளி நிர்வாகங்கள் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக இருப்பது தான்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக கடைசியாக அமைக்கப்பட்டக் குழு நீதிபதி சிங்கார வேலு தலைமையிலான குழு தான். அக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்து விட்டது. அக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கான கட்டண விகிதமும் காலாவதியாகிவிட்டது. இதுபோன்ற சூழல்களில் கடந்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தான் இந்த ஆண்டும் பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகளோ, இவ்வாண்டு தங்களைக் கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை என்று கூறி விருப்பம் போல கட்டணம் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு வாய்மூடி ஊமையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு வெளிப்படையாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் சூழல் எதிர்பாராமல் ஏற்பட்டதில்லை. மாறாக தமிழக அரசால் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டதாகும். நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பது தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரியும். மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால் நீதிபதி சிங்கார வேலு ஓய்வு பெற்றதுமே புதியக் குழுவை அமைத்து கட்டண நிர்ணயத்திருக்கலாம் அல்லது நீதிபதி சிங்காரவேலு குழுவின் பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்கள் நீட்டித்து புதிய கட்டணத்தை நிர்ணயித்து வழங்கும்படி கூறியிருக்கலாம். ஆனால், அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை. குறைந்தபட்சம் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்கும்படி ஆணை பிறப்பித்து இருக்கலாம். ஆனால், எதையும் செய்யாததற்கு காரணம் தனியார் பள்ளிகள் மீதான பாசம் தான். இப்படிப்பட்டதொரு நிலைமை உருவாக வேண்டும்; அதன்மூலம் தனியார் பள்ளிகள் விருப்பம் போல கட்டணம் வசூலித்து பயனடைய வேண்டும் என்று திட்டமிட்டே இப்படி ஓர் ஏற்பாட்டை அரசு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.
தனியார் பள்ளிகள் அளவுக்கதிகமாக கட்டணம் வசூலிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி இலவசமாக நிரப்பப்பட வேண்டிய 25% இடங்களும் முறையாக நிரப்பப்படவில்லை. பள்ளி நிர்வாகங்களிடமிருந்து கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டது என்பதற்காக கட்டணக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. உடனடியாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக வசூலித்த பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நோன்புக் கஞ்சிக்கு அரிசி கொடுத்தார்; அம்மன் கூழுக்கு என்ன கொடுத்தார்?: ராம.கோபாலன் கேள்வி

தமிழக முதல்வருக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு ஆணையிடுகிறார்!
ஆலய அன்னதானத்திற்கு ஆணை போடுகிறார்!
ஆடி கூழுக்கு என்ன கொடுத்தார்?
– இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இந்துமுன்னணி நிறுவனர் ராமகோபாலன் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்
அவரது அறிக்கை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நேற்று ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு தமிழக அரச இலவசமாக 4600 மெட்ரிக் டன் அரிசியை வழங்கிட தனது தலைமையிலான அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரை வழங்க உள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார். நல்லது. அதேசமயம் இந்து கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக அரசு அன்னதான திட்டத்திற்கு என்ன கொடுத்துள்ளது? ஆனால் அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக முதல்வர் பல முறை உத்திரவிட்டுள்ளார். இவரது உத்திரவிற்கு என்ன பொருள்?
நடந்த சட்டமன்றத் தேர்தலில் கஸ்தூரி என்ற மூதாட்டியை வைத்து அதிமுக வெளியிட்ட விளம்பர விடியோவில் கோயில் அன்னதானத்தில் சாப்பிட்டு, வாயார புகழும் காட்சியில் நடித்தார். வாரிகொடுத்த வள்ளல் என ஜெயலலிதாவை புகழ்ந்த அந்த காட்சியை வெளியிட அதிமுகவிற்கோ, முதல்வருக்கோ என்ன தகுதி இருந்தது? பக்தர்கள் தரும் காணிக்கையில் நடைபெறும் அன்னதானத்தை தனது ஆட்சியில் செய்யப்பட்டதாக கூறிய அதிமுக முதல்வர், தனது முயற்சியால் மசூதி, தர்காக்களில் அரசு செலவில் ரம்ஜான் நோன்பிற்கு கஞ்சி ஊற்றுவதை ஏன் விளம்பரப்படுத்தவில்லை? இந்தாண்டு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர், தனது தாயுள்ள கருணையை விளம்பரப்படுத்த தயாரா? செய்யமாட்டார்! ஏன்? அப்படி வெளியிட்டால் முஸ்லீம்களில் ஒருபிரிவினரின் எதிர்ப்பு கிளம்பிவிடும் என்பது தமிழக முதல்வருக்குத் தெரியும். ஆனால், இந்துக்கள் ஏமாளிகள். எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்பதை திராவிட கட்சிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன. ஆனால், இந்துக்கள் விழிப்படைந்து வருகிறார்கள். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடவும் தயங்குவதில்லை. இது இந்து முன்னணி தொடங்கி, இந்து விழிப்புணர்வை  36 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்ததன் பயனாக முடிந்திருக்கிறது.
கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அரசு, அந்தக் கோயில்களுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை வசூலிக்காத சாதனையைத்தான் செய்திருக்கிறது. அங்கு வரும் அப்பாவி பக்தர்களிடம் சுவாமி, அம்பாளை காட்சிப்பொருளாக்கி தரிசனம் செய்ய பல வகையிலும் கட்டணக் கொள்ளை நடக்கிறது! ஆலய சொத்துக்கள், திருக்குளங்கள் களவாடப்படுகின்றன, திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இந்துக்களுக்கு ஏதாவது செய்வது என்றால் அது கோயில் வருமானத்தில் இருந்துதான் செய்யப்படுகிறது! அறநிலையத்துறை அதிகாரிகள், தமிழக அரசு பிரதிநிதிகள், அவர்களுக்கான வாகனமோ, வாகனங்களுக்கு பெட்ரோலோ ஆலய வருவாயிலிருந்து செலவு செய்யப்படுகிறது. என்ன அநியாயம்! என்ன அக்கிரமம்!!
முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாளுக்கு, கோயில் செலவில் கோயில்களில் சமபந்தி போஜனம் போடப்படுகிறது. அண்ணாதுரை நாத்திகவாதியாக இருந்தவர், அவரது நினைவு நாளுக்கு சாப்பாடு போட்டு புண்ணியத்தை தேடட்டும். அதற்கான செலவை அண்ணாதுரை நிறுவிய தி.மு.க.வோ, அதனால் இன்று  வரை பதவி சுகத்தை அனுபவித்து கோடானுகோடி சம்பாதித்தவர்கள் தரட்டுமே! இல்லை, அண்ணாதுரை உருவத்தை, பெயரை தனது கட்சியின் வர்த்தக முத்திரையாக பயன்படுத்தும் அ.தி.மு.க. செலவு செய்யட்டும். ஒரு சல்லிகாசுகூட செலவில்லாமல், தனது ஆணையை வெளியிடும் வள்ளல்களை என்னவென்று கூறுவது. இதற்கு வெட்கப்படவேண்டாமா?
பாரபட்சமாக செயல்படமாட்டேன் என உறுதியேற்றது உண்மையானால் தமிழக முதல்வர் ஆடி கூழ்க்கு அம்மன் கோயில்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை தரமுள்ளதாக தர வேண்டும். ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு தேவையான அரிசியையாவது அரசு தானிய கிடங்கிலிருந்து அளிக்க முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தரிசனக் கட்டணத்தை முழுமையாக நீக்கிட அறநிலையத்துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறோம்.
தமிழக முதல்வர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. ஓட்டு வங்கிக்காக நடந்துகொள்வது, அநாகரிகமான செயல் என்பதை நடுநிலையான மக்கள், ஊடகங்கள் அரசிற்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டும்.

மாயா பட இயக்குனரின் புதிய படம்

மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் மற்றும் “தி ஹிந்து” ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷின் WTF எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த “மோ” படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் புதிய படமொன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்த மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார்.
தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர், விரைவில் முத்திரைப் பதிக்கவிருக்கும் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
தயாரிப்பாளர் G.A.ஹரி கிருஷ்ணன், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்திலும் காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட பல படங்களுக்கு தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகம்

கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல்  தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இதற்க்கு கிடைத்த அமோக வரவேற்ப்பினை தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள  39வது சென்னை புத்தகக் காட்சியில் இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். இதனை ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் துவக்கி வைத்தார்.

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் இந்த முயற்ச்சி குறித்து ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் பேசுகையில் “ஸ்ரீதர் எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய அனைத்து பயனத்திலும், நான் அவருடன் இருந்திருக்கிறேன். இந்த பயனத்திலும் நான் அவருடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தந்திரகலை அருங்காட்சியகம் என்பது இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார். ஓவியங்களுடன் நம்மை இனைத்து கொண்டு புகைப்படம் எடுத்து கொள்ளும் இதனை சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கண்டு மகிழ்வார்கள். இது மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஓவியங்கள் சில…

1. திருவள்ளுவர் திருக்குறள் அறிச்சுவடியை கொடுப்பார்
2. சேகுவேராவுடன் செல்ஃபி எடுக்கலாம்.
3. பாரதியாருடன் செல்ஃபி எடுக்கலாம்.
4. அன்னை தெரசவிடம் ஆசி பெறலாம்.
5. அப்துல்கலாம் பூந்தொட்டி கொடுப்பார்.
6. காந்தியடிகள் ராட்டினத்தை கொடுப்பார்.

இது போல் மேலும் சுவாரஸ்யமான ஓவியங்களுடன் மக்கள் இனைய முடியும். இந்த தந்திரகலை அருங்காட்சியகம் இன்று 01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும்.

இதே போன்று இந்தியாவின் மூன்றாவது  தந்திரகலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது.

cleardot - 2026

Next Sundar C to Direct big-budget Historical Movie

0

According to the Sources, Tamil filmmaker Sunder C’s next project wil be a historical movie like ‘Magadheera’, and will be made on a very high budget. It could easily be the most expensive film in Sundar C’s Career. They are in talks with a leading Bollywood heroine to play the leading lady.

Pre-production work is already underway and the makers plan to go on the floors in the next two months.

Arnold Schwarzenegger got chased by elephant

0

Hollywood actor Arnold Schwarzenegger has been chased by an elephant while on safari in South Africa.

The former Californian governor filmed the terrifying encounter before posting to social media yesterday.

The footage shows the elephant initially approach the four-wheel- drive Schwarzenegger was in before bypassing the vehicle.

The driver and guide is heard on footage explaining what normally occurs when elephants approach.

Tagore’s unpublished poems to see light of day

0

A collection of unpublished short poems written by Rabindranath Tagore while giving autographs is being published for the first time in form of a book. Compiled and edited by curator and poet Nilanjan Banerjee, the gems were so far lying hidden in the archives of Rabindra Bhavana in Tagore’s abode at Santiniketan.

Super Starts Rajinikanth’s Kabali audio launch likely to happen on June 11th

0

According to reliable sources, Kalaipuli S Thanu, who initially planned to organize the audio launch of Kabali on June 9th, has postponed it by two days to June 11th. The sprawling YMCA Grounds is expected to be the venue for the event.

Rajinikanth who is reportedly holidaying in the US will come back next week to Chennai. Directed by Pa. Ranjith, Kabali is all set for release in Tamil, Telugu, Hindi and Malay on July 1st worldwide. The music is composed by Santhosh Narayanan.