Home Blog Page 5765

12 killed in UP storms

0

At least 12 people including two children were killed across Uttar Pradesh (UP) due to storms, lightning and heavy rains, an official said.

The rains are likely to contiune in some parts of the state for the next 48 hours an offical at the regional Met office said

David Warner praised Bhuvi

0

IPL’s highest wicket-taker Bhuvneshwar Kumar is a world-class bowler and he just can’t wait to take on the seamer as a opposition batsman said Sunrisers Hyderabad captain David Warner said.

Armed squad kills 11 people in Venezuela

0

An armed squad has killed 11 people in Venezuela, including a Colombian national and three minors, official said.

According to the offical statement, The victims were in their homes in Andres Bello in the northwestern state of Trujillo, When several men forced them to move into coutryards where they were shot dead.

The suspects fled the scene in cars and motorcycles. Two prosecutors have be assigned to the case.

பெண்கள் என்றும் இளமையாக இருக்க!

பெண்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் தாம்பத்யம்.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.

பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.

உடல் ரீதியான நெருக்கத்தை வளர்த்தல் மற்றும் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துதல் எனும் போது, உடலுறவில் பல பயன்கள் உள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு அதிக பயன்கள் அடங்கியுள்ளன.

* வாரத்திற்கு 4 தடவைக்கு மேல் உடலுறவில் ஈடுபடுபவர்கள் தங்கள் உண்மையான வயதை விட 10 மடங்கு இளமையாக தோன்றுவார்கள் என 10 ஆண்டு கால ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஆக்சிடாஸின் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகள் உள்ளதால், உடலுறவில் ஈடுபடுவது நன்மையை அளிக்கிறது.

“உடலுறவு கொள்ளும் போது, ஆக்சிடாஸின் மற்றும் பீட்டா எண்டோர்பின்கள் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகளில் உங்கள் சருமம் குளிக்கும்.

நமக்கு வயது ஏறும் போது, நமக்கு பழுது ஏற்படும் அளவிற்கு குணமாகும் தன்மை இருப்பதில்லை.

ஆனால் உடலுறவு கொள்வதால் இந்த பிரச்சனை நீங்கும்.

* உடலுறவு கொள்வதால் ஒற்றைத் தலைவலி பிரச்சனைகள் தடுக்கப்படும் என தற்போதைய ஆய்வுகள் கூறுகிறது.

உடலுறவில் ஈடுபடும் போது உற்பத்தியாகும் என்டார்பின்கள் நல்ல உணர்வை உண்டாக்கும். இது வலியை குறைக்க உதவும்.

* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தலைவலிக்கு கூறப்பட்ட அதே காரணம் இதற்கும் பொருந்தும்.

அதற்கு காரணம் எண்டார்பின்கள் மற்றும் ஆக்சிடாக்சின் போன்ற ஹார்மோன்கள் வெளிப்படும் போது பதற்றம் மற்றும் அழுத்தம் நீங்கும்.

* சீரான முறையில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்வாய் படும் வாய்ப்புகள் குறையும்.

அதிகமாக உடலுறவு கொள்ளாதவர்களை விட, அதிகமாக உடலுறவு கொள்பவர்களுக்கு ஆன்டிஜென் இம்யூனோக்ளோபின் ஏ 30% அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து ஆன்டிஜென் உங்கள் உடலை பாதுகாக்கும்.

இதனை உங்கள் உணவிலும் சேர்த்துக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.

* உடல் எடையை குறைக்கும் சந்தோஷமான வழிகளில் தாம்பத்தியமும் ஒன்று.

உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆண்கள் 4.2 கலோரிகளையும், பெண்கள் 3.1 கலோரிகளையும் எரிக்கின்றனர்.

காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்: வேந்தர் மூவீஸ் மதன் கடிதம்

2011ம் ஆண்டு S.மதன் அவர்களால் நிறுவப்பட்டது வேந்தர் மூவீஸ். இந்த நிறுவனம் ஆதி நடித்த “அரவான்” படத்தை முதல் படமாக வெளியிட்டு திரைத்துறையில் நுழைந்தது. பின்னர் விஷால் நடித்த “பாண்டிய நாடு” திரைப்படத்தை வெளியிட்டது.. சிவா நடித்த “தில்லு முள்ளு” படம் மூலமாக தயாரிப்பை தொடங்கினார் மதன். வேந்தர் மூவீஸ் நிறுவனம் திரைப்படம் தயாரிப்பதை விட விநியோகம் செய்வதில் மிக அதிக கவனம் செலுத்தியது. இது, சுமார் இருபது படங்களுக்கும் மேல் விநியோகம் செய்துள்ளது.

திரைப்படத்துறை மட்டுமின்றி, வெளியுலகிலும் மதன் SRM கல்லூரி மற்றும் SRM குழுமம் நிறுவனர் பச்சைமுத்து (என்னும்) பாரிவேந்தர் அவர்களுடைய பினாமி என்று சொல்லப்பட்டு வந்தது. வேந்தர் மூவிஸின் பல திரைப்பட விழாக்களில் பச்சைமுத்து கலந்துகொண்டார். இது மட்டுமின்றி SRM கல்லூரிகளில் எந்த ஒரு மாணவன் சீட் தேவை என்றாலும், மதனை சந்திப்பது வழக்கம் சில நேரங்களில் அது அவசியமாகவும் இருந்துள்ளது.

பெரும்பாலும் SRM கல்லூரியில் சேரும் மாணவர்கள் தாங்கள் செலுத்தப்பட வேண்டிய நன்கொடைத்தொகை (கேபிடேஷன் பீஸ்-Capitation Fees) மதனிடம் செலுத்தப்படுவது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த நன்கொடை பணம் மதன் மூலமாக SRM கல்லூரிக்கு சென்றடைந்து விடுமாம். SRM குழுமம் நிறுவனர் பச்சைமுத்து’க்கு மிக நெருக்கமானவர் மற்றும் நம்பிக்கையானவராகவும் இருந்துள்ளார் வேந்தர் மூவிஸ் மதன்.

இப்படி இருக்கும் சூழலில் சிலர் மதனை பற்றி பச்சைமுத்து’விடம் தவறாக சொல்லி, இருவருக்குள் ஒரு பிளவை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மதனுக்கும் பச்சைமுத்து’க்குமான சுமுக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக “வேந்தர் மூவீஸ்” மதன் ஐந்து பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய “வேந்தர் மூவீஸ்” லெட்டர் பேட்டில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில் “காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டும்மின்றி SRM கல்லூரி சம்மந்தமாக சில முக்கிய தகவல்களை பற்றியும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மதன். கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்ற மதன் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்பது இதுவரை எந்த தகவலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. மதன் இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கடிதத்தை எழுதிவிட்டு காணாமல் சென்றுள்ளதால், SRM கல்லூரி மற்றும் SRM குழுமத்திற்கு வருமானவரி துறையினர் மற்றும் காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என சொல்லப்படுகிறது.

மதனின் இந்தக் கடிதத்திற்கு SRM குழுமத்தின் சார்பில் அதன் நிறுவனர் பச்சைமுத்து என்ன கூறப் போகிறார் என்பதைப்பொறுத்தே இந்த விவகாரம் சூடு பிடிக்கும்!

மதன் எழுதிய கடிதம்:

என் நண்பர்களுக்கு, என் உயிர் வேந்தருக்கு, என் குடும்பத்தினருக்கு,

ஒரு zeroவில் தொடங்கி, zeroவில் முடிகிறது என் வாழ்க்கை. கடைசியில் என்ன ஒரு நிம்மதி. காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணம் அடைந்தால் அடுத்த ஜென்மம் இல்லை. எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன். அப்புறம் என்ன இந்த letter.

என்னிடம் Admission பணம் தந்தவர்களும், எனக்காக சினிமாவில் முதலீடு செய்தவர்களும் பயப்பட வேண்டாம். பணம் SRM நிறுவனத்திலும் mgm(ODY) நிறுவனத்திலும் safe ஆக உள்ளது. நீங்கள் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

என் வாழ்வில் எனக்குத் தெரிந்த ஒரே மந்திரம் வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து என்னை எந்த உலகுக்குக் காட்டியவர். SRM நிறுவனம் என்றால் Admission, சினிமாவில், கட்சியில் (IJK) மதன் தான் என்று பெயரைக் கொடுத்தவர். என் தலைவருக்காக வாழ்ந்தேன். தலைவனால் போகிறேன்.

SRM group No (1) ஆக வர வேண்டும் என்று பாடுபட்டேன். SRMக்கு எந்த ஒரு பிரச்னை என்றாலும் முதலில் நான் நின்றேன். SRM என்று ஒரு universityயாக வளர்வதற்கு எங்கள் Group ஒரு காரணம். எல்லா seatம் full. எல்லா இடத்திலும் வேலை. எப்படி சாத்தியம். இது Vendharக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் SRM இல்லாத எல்லா College Chairmanக்கும் மதனை தெரியும.

ஏன் என்றால் எனக்கு வேந்தர் மேல் உள்ள வெறி. அவர் மனம் வருத்தப்படக்கூடாது என்று அவருக்காக எல்லாம் செய்தேன். மாணவர்கள் கல்லூரியில் செலுத்தும் பணம் குறைவாக இருக்கும். ஆனால் கல்லூரிக்குப் போகும் பணம் நிறைவாக இருக்கும். எப்படி? எல்லாம் என் கையில் இருந்து. என் முயற்சி. என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும். தலைவர் எப்போதும் என்னை கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்று வெறி.

நீங்கள் நம்பாமல் இருக்கலாம். என்னிடம் 8 வருடமாக உள்ள பெற்றோர் Address, மாணவர்கள் Phone நம்பர் உள்ளது நீங்கள் விசாரிக்கலாம்.

Tiruchi Medical College Permission கிடைக்கவில்லை. இரண்டு வருடமாக நடக்கவில்லை. முகம் வாடியது. நான் என்ன செய்தேன். எவ்வளவு செய்தேன் என்று அவருக்கு தெரியாது. ஆனால் என் நண்பர்களுக்கு தெரியும் எல்லாத்துக்கும் Proof உள்ளது. இந்த வருடம் P.6 and U.6 Medical admission NEET Exam இருந்தும் 102 Seat Fullஆக உள்ளது SRMயும் MGMமியும். எப்படி?

மாணவர்கள் Tiruchi Medical Collegeலும் 1 வருடமாக வெயிட் செய்கிறார்கள் எப்படி? எல்லாம் நான் பட்ட உழைப்பு.

IJK Party கட்சி தொடங்கி முதல் மாநாடு. Trainல் வெளி மாநில மாணவர்கள், 100 Bus மாணவர்கள் கலந்து கொண்டனர். எப்படி Bihar. election. 14 தொகுதில் IJK நின்றது எப்படி? கட்சி தொடங்கி 6 மாதம் இருக்கும் பொது எப்படி MLA.[Tirunelvi] election, Southல், IJK எப்படி வந்தது, BJP மாநாடு., Counsilor election., Puthukotai Bye election., பெரம்பலூர் MP election, யார் செலவு செய்தது நான் தான்.

நான் பொய் சொல்லவில்லை இல்லத்தை இணையதளத்தில் UTubeலிம் பார்க்கலாம். [சினிமா]

ஒரு படத்தில் Director shankar ஐயா பெயரை கேவலப்படுத்தியதால் வந்தது தான் இந்த வேந்தர் மூவீஸ். எத்தனை படம் பண்ணினோம். எல்லாம் நஷ்டம். தலைவா படம் இவர் பேர் போட்டதால் படத்தையே நிறுத்தி விட்டார்கள். linga, Payumpuli எல்லாம் நஷ்டம் இருந்தாலும் Vendhar movies நிற்கவே இல்லை. இன்னும் படம் எடுத்துக்கொண்டு இருக்கிறது.

என் ஐயா பெயரில் உள்ளது. அதனால் எல்லாம் நல்ல தானா போகுது… அப்புறம் ஏன் இந்த முடிவு!

ஐயா குடும்பத்துக்கு சந்தேகம் வருது. என்ன சந்தேகம். மதன் இவர் பையனா? இவர் ஏன் மதனுக்கு முதலிடம் கொடுக்கிறார். ஐயாவிற்கு Pressure. ஆனால் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. எனக்கு வந்தது என்ன? Income tax raid 6 ½ கோடி போச்சு., ஒரு பொய் என் மேல் MR. Ravi recommadationல்ல. Ravi சார் கட்சியில் வரார் Admissionக்கு மதனை வரவிடக் கூடாது. கட்சியில் மதனை வெளியே கொண்டு வர வேண்டும். ஐயாவையும் மதனையும் பிரிக்கணும். ஏதோ சொத்தை என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என்று, Kerala போய் பில்லி சூனியம் வரை வைத்து விட்டாச்சு.

எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனா கடந்த 6 மாதமாக ஐயா என்னிடம் பேசுவது இல்லை. Phone கட் பண்ணார். நேத்து கூட காசு அனுப்ப சொல்லு Ranga Babu சார் போன் பண்றார். Sukumar phone பண்றார். நான் யாருக்காக வாழ்ந்தேனோ, யாருக்கு செலவு பண்ணனோ அவர் பேசுவது இல்லை.

Electionக்கு கூப்படவில்லை. அதனால் இந்த முடிவு. நான் போறேன். Already இது புதுசு இல்லை Nov 30 Try பண்ணினேன். முடியல… So இப்போது நான் போறேன். என் கோரிக்கைகள் Vendhar familyக்கு …. மதன் போயிட்டானே SRM அவருக்கு என்ன சம்மதம் இல்லை

ரவி சொல்வார். ஆனால் இந்த தடவை அது நடக்காது.
(1) 8 வருடமாக நான் SRMக்கு போட்ட student list நான் இதில் சேர்த்து இருக்கிறேன்.
(2) Vendhar movies, Vendhar TV Bank Statement connection பார்த்தால் தெரியும்.
(3) Income tax raidயில் எடுத்த Payment ரேபுந்து SRM வாங்கி உள்ளது.
(4) Vendhar TV Satellite Telecast ஆகும் படங்களில் நிறைய படங்கள் என் பெயரில் உள்ளது இருக்கும். அதுக்கு எந்த ஒரு Paymentம் நான் வாங்கி இருக்க மாட்டேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு. நான் இல்லாவிட்டால் என்ன. என் உயிர் நண்பர்கள் Pressக்கு வருவார்கள்.
நான் last ஆக கேட்பது என்னன்னா….
இந்த நான் அனுப்பிய list P6/U6 மாணவர்கள் எல்லாம் College சேரனும்.
அவர்களிடம் வாங்கிய பணம் உங்களிடம் முழுமையாகக் கொடுக்கப் பட்டு உள்ளது.
NEET வந்தால் அவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப கொடுக்கப்படவேண்டும்.
Vendhar movies மேல் எந்தக் கடனும் வரக் கூடாது. இதையும் மீறி நீங்கள் என் நண்பர்களையோ, என் குடும்பத்தையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவுளும்  மன்னிக்க மாட்டார்.

So ஐயா தான் உங்களை பார்க்காமல் போகிறேன்… என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.
உங்கள் உயர்
(கையொப்பம்)

vendhar1 vendhar2

தூமணி மாடம் – வரதராஜன் ஸ்வாமி!

“கைலி கட்டிக்கொண்டும், மீசை வைத்துக்கொண்டும், திருமண் (நாமம்) இட்டுக் கொள்ளாது பாழும் நெற்றியுடன்” உள்ள லௌகீக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கான பத்திரிகை”

இப்படி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வெளிவந்த பத்திரிகைதான் “தூமணிமாடம்” என்னும் வைஷ்ணவ மாத இதழ்.

மிக எளிய, யார் மனதையும் புண்படுத்தாத எழுத்து நடை, கல்கியின் தீவிர ரசிகர் என்பதால் அதேபாணி நகை(ச்)”சுவை”.

விஷயங்களை “நறுக்”கென சொல்லி விளக்கும் தீவிரம், பிரச்சனைகளை மட்டும் சொல்லாது அதற்கு தீர்வும் சொல்லி, என்ன செய்யவேண்டும் என வழிகாட்டும் திட்டம், இதில் தூமணிமாடம் பாணி புத்தூர் ஸ்வாமி பாணி.

ஸ்ரீவைஷ்ணவம் என்பது உலகின் ஆதிமதம், வேதமதம், வைதீக மதம், இன்று அது ஐயங்கார்கள் என ஒரு ஜாதி போல அழைக்கப்படுவது  அவலம், அறியாமை.

வைஷ்ணவ மத அடையாளம் என்பது எல்லாவற்றிலும் தனித்துவம் பெற்றது,நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருமண் என்னும் மத சின்னமானாலும் சரி, ‘பாயசம்’என்பதை ‘திருக்கண் அமுது’ என்றும் ‘துளசி’யை ‘திருத்துழாய்’ என சொல்லுவதிலும் சரி, ‘மறந்தும் புறந்தொழாமை’ என்னும் இறைவழிபாடானலும் சரி. கட்டிக்கொள்ளும் வேஷ்டி, உடுத்திக்கொள்ளும் மடிசார், மணிப்ரவாள எழுத்து நடை, பேச்சு நடை,மொழி, என எல்லாவற்றிலும் தனித்துவம்.

இந்த கலாசார அடையாளங்கள் நாகரீக உலகில் கடந்த சில தலைமுறைகளில் தொலைந்து வருவதை இயன்றவரை மீட்டு வரவேண்டும் என எண்ணி ஆரம்பிக்கப்பட்டது தூமணிமாடம் மாத இதழ், இது மற்ற ஸ்ரீவைஷ்ணவ பத்திரிகை போல அல்ல, இது செய்தியையும் சிந்தனையையும் தாங்கி வந்தது. ஸ்ரீ:யபதியான ஸர்வேஸ்வரன்  என ஆரம்பிக்காத பத்திரிகை.

1993 களில் வெளியாகி பிறகு நின்றுபோய் மீண்டும் 2002 இல் துவங்கியது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் பரமபதம் அடைந்து விட்டால் மறுபிறவி கிடையாது ஆனால் ஸ்ரீ வைஷ்ணவ பத்திரிகைகளுக்கு அப்படியில்லையே? அதனால் மறுபிறவி.

எங்கும் சைவம்தான் வளர்ந்துள்ளது வைஷ்ணவம் வளரவே இல்லை

எப்படி சொல்றே ?!

எங்குபாத்தாலும் சைவ ஹோட்டல்கள் தான் உள்ளது ‘வைஷ்ணவ ஹோட்டல்’னு ஒண்ணுகூட இல்லையே?!

——————————————————————

இந்தாங்கோ கோவில் பிரசாதம் தத்யோன்னம் (தயிர்சாதம்), இன்னிக்கு எனக்கு பிறந்த நாள் அதனால்…

பெருமாளுக்கு சக்கரைபொங்கல்தானே உகப்பு

எனக்கு சுகர் இருக்கே அதனால்தான்

!!!!!

பல மனித மனத்தின் போலி பக்தியை கீரியும், கிண்டியும் பார்க்கும் அவரது கடைசி பக்க ஜோக்குகள்.. “விருச்சிகம்” என்ற பெயரில் எழுதியவை..

அதனால்தான் தேள் கொட்டுவது போல் உள் அர்த்தத்துடன் இருந்தது அவரது நகைச்சுவை.

வைஷ்ணவர்களுக்கு என்று ஒரு செய்தி பத்திரிகை வேண்டும் கோயில் ஸம்ப்ரோஷ்ணம், முதல் நமது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் என எல்லாவற்றினையும் பற்றிய செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் அதுவே தூமணிமாடத்தின் ப(பா)ணியாக இருந்தது.

ஸ்ரீ ராமானுரரின் ஆயிரமாவது ஆண்டு வரப்போகிறது எனவே ஸ்ரீ ராமானுஜரின் திருவுருவம் பொறித்த காசு, ஸ்டாம்ப் வெளியிட வேண்டும் என அறிவிஜீவி உலகம் சிந்தனையை வெளியிட்டபோது அதில் உள்ள முட்டாள்தனத்தினை கிண்டல் செய்து அவர் தூமணிமாடம் இதழில் வெளியிட்ட கார்ட்டூன்.

கல்யாணம், சீமந்தம் என எந்த ஒரு பெரிய சிறிய குடும்ப விசேஷமானாலும் நடுத்தர வயதுக்காரர்கள் பத்துபேர் ஸம்ப்ரதாயம் கலாசாரம் எல்லாம் ரொம்ப கெட்டுடுத்து… யார் சொல்றது யார் திருத்துவது என “நெட்டைமரங்களென பெட்டை புலம்பல்” செய்யும்போது..

ஸம்ப்ரதாயம் கெட்டுப்போயிடுத்து என நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அதை திருத்த நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நாம எல்லோரும் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதனால் ஆவது என்ன? ஏதாவது செய்ய வேண்டாமா? என எதிர்கேள்வி கேட்டு ஒரு லெட்டர் பேட் அமைப்பாவது  நமக்கென வேண்டும் அது இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என்பார்.

நமக்கென்று ஒரு அமைப்பு வேண்டும் என எண்ணி ஸ்ரீ வைஷ்ணவ கலாசார பாதுகாப்பு இயக்கம்” என்ற ஒன்றை துவங்கினார், வேளச்சேரியில் அவரது திருமாளிகையில் அதன் துவக்கவிழா.

இயக்கம் மூலம் வைஷ்ணவர்கள் பற்றிய சென்சஸ் ஒன்றை துவங்கியிருந்தார் அது நாகை மாவட்டத்தில் நடந்தது

நக்கீரனில் இந்துமதம் எங்கே போகிறது? என்னும் தலைப்பில் ஆஸ்திக வேடம் பூண்ட நாஸ்திகராம் ராமானுஜ தாதாசாரியார் அவர்கள் எழுதிவந்த பொய்யையே ஆதாரமாக கொண்ட தொடருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இயக்கத்தின் சார்பில், ராமானுஜ தாதாசாரியாரை நேரில் சந்தித்து கேள்விகள் கேட்டு திணற அடித்தததும்,தாதாசாரியாரே தனது தவறை ஒத்துக்கொண்டதும் சாதனைகள்

தினமலரில் ஆன்மீகம் என்கிற பெயரில் ஸ்ரீ ராமர் லிங்கபூஜை செய்தார், ஸ்ரீ நரசிம்ஹரை சரபர் அடக்கினார் என்றெல்லாம் பொய்யை எழுதி வந்த தினமலர் ஆன்மீகப்பகுதியை தினமலர் திருச்சி அலுவலகம் சென்று நேரடியாக கண்டித்து அதன் ஆசிரியரிடம் வலியுறித்தியது எல்லாம் இயக்கத்தின் சாதனைகள்.

திருக்கண்ணமங்கை திவ்யதேசத்தில் ஸாயரக்ஷை ஆராதனத்துக்காக திரை சாத்தியிருந்தது, பெருமாள் தரிசனத்திற்கென்று காத்திருந்தனர், சிலர் மௌனம், சிலர் பேச்சு, ஆனால், அங்கே இருந்த ஒரு சிறு கம்பை எடுத்துக்கொண்டு துவாரபாலகர் அருகேயும் நிலைக்கதவுகள் ஓரத்திலும் இருந்த ஒட்டடையை நீக்கிக்கொண்டிருந்தார். ஆம் அதுதான் அவர்…

தாம்ப்ராஸ் தலைவர் ஸ்ரீ நாராயணன் அவர்களை நீங்கள் வைஷ்ணவர் உங்கள் சமூக சேவை பாராட்டுக்குரியது அதே சமயம் உங்கள் சமயச்சின்னத்தினை திருமண்ணை ஏன் நீங்கள் நெற்றியில் தரிப்பதில்லை என நேரடியாக கேட்டவர்,இப்போதெல்லாம் ஸ்ரீ நாராயணன் நெற்றியில் குறைந்த பட்சம் ஒற்றை திருமண்ணுடனாவது காட்சி தரும்போது தூமணிமாடம் ஸ்வாமி அதில் தெரிகிறார்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற அவரது பல நகைச்சுவைகளில் மற்றொன்று

அவர் எல்லா விஷயத்திலும் ஸ்ரீ வைஷ்ணவர்

எப்படி சொல்றே?

அவர் குடிப்பது சக்ரா டீ, வீடுகட்றது விஷ்ணு சிமிண்ட், அய்யங்கார் பேக்கரீலதான் ஸ்வீட் வாங்கறார். தீபாவளிக்கு லக்ஷ்மி வெடி, விஷ்ணு சக்கரம்தான்.

அப்படியா பேஷ் பேஷ் உடுத்திக்க என்ன செய்யறார்

சங்கு மார்க் கைலிதான்

———————————————————————

நம் மனதில் மாற்றத்தினை தூண்டும் அவரது சிறுகதை வாழைப்பழத்தில் ஸாரி தேங்காயில் ஏற்றிய ஊசி.

 

ஜருகண்டி

என்ன வரதன் ஸ்வாமி திருப்பதி போகலாமா?

என்ன விஸேஷம்?

கைங்கர்யத்துக்கும் பெருமாள் சேவிக்கவும் தான் ..திருப்பதி தேவஸ்தானம் இப்போ பக்தர்கள் வரிசையை சரிபண்ண, லட்டு புடிக்க, அன்னதான கூடத்தில் வேலை செய்ய என வாலண்டியர்சை கூப்பட்றா.. பத்துபேரா சேந்து போகலாம்…

அதுக்கென்ன எனக்கும் டிக்கெட் புக் பண்ணுங்கோ என்றார் வரதன்,

வரதனுக்கு பூர்வீகம் சீர்காழிக்கு அருகே உள்ள கூத்தியான்பேட்டை கிராமம் அவர் அப்பா சன்னதி அர்ச்சகர், எதற்கும் இருகட்டும், அவசர உதவிக்கு என ஆராதனையை பையனுக்கும் சொல்லிக்கொடுத்து வைத்திருந்தார். கிராமத்துக் கோயில் மிகச்சிறியதாக இருக்கும். ஒருவேளை பூஜைக்கே சிரமம்.

வேலை நிமித்தமாக வரதன் வெளியூர் சென்று ரிட்டயரும் ஆகி பையங்களுடன் சென்னையில் செட்டில் ஆனாலும் அடிக்கடி கிராமத்துக்கு  வந்து வரதராஜ பெருமாளை சேவித்துச் செல்வதுண்டு தான் வாழ்கையில் இந்த அளவு முன்னேறி வந்தது கூதியான்பேட்டை பெருமாள் அனுக்ரஹத்தால்தான் என்பது வரதனின் அசைக்கமுடியாத எண்ணம்.

வயோதிக வயதில் பல கிலோமீட்டரிலிருந்து வரும் ஆராதகர். கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு  ஸ்மார்தர் உதவியால் ஆராதனை நடக்கிறது. வயசாச்சு வேறு ஆள் வெச்சுக்கோங்கோ என அடிக்கடி சொல்லிவரும் வயோதிக ஆராதகர்.  காலம் ஓடிக்கொண்டிருக்கிறது

வரதா டிக்கெட் புக் பண்ணியாச்சு என இரவு வந்து சொல்லிவிட்டு போனார் ஜகந்நாதன் ஸ்வாமி.

திருப்பதி செல்லும் உற்சாகம், மனக்கண்ணில் விரிய படுக்கைக்கு சென்றார் வரதன்

திருப்பதிக்கு போயாச்சு நீண்ட க்யூவில் நின்று மெதுவாக நகர்ந்து இதோ பெருமாள் சன்னதி வாசலுக்கு வந்தாச்சு கூட்டம் மறைக்கிறது எம்பி பார்க்கிறார் வரதன்

இதென்ன ஆச்சர்யம் வேங்கடாசலபதியின் நெடிய உருவம் தெரியவில்லையே?சுற்றிலும் இப்போ ஜனங்களையும் காணவில்லை?! திருப்பதி கற்பக்ரஹமாகத் தெரியவில்லையே? அதற்குப் பதில் .. இருண்ட கற்பக்ரஹம், அங்கே மினுக்கென்று ஒளிரும் சிறுவிளக்கு வௌவால் புழுக்கை மணம், பெருமாளும் வேறே… அப்போ… பொரிதட்டினார் போல் விழித்து எழுந்தார்  வரதன். உடம்பெல்லாம் இனம்புரியாத சிலிர்ப்பு.

வசந்தா வசந்தா என விடிந்ததும் விடியாதும் மனைவியை கூப்பிட்டார்.. ஜகந்நாதன் ஸ்வாமி வந்தால் திருப்பதிக்கு நான் வரலைன்னு சொல்லு.. நான் முன்னாடி கிளம்பி போறேன் நீ துணிமணியெலாம் எடுத்துண்டு ஆத்தை காலி பண்ணிண்டு வா. பஸ்டாண்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக பயணத்தினை துவங்கினார்.

கிராமத்துக்கு போய் சேரும்போது சாயங்காலமாகிவிட்டது.

மாமா நல்லவேளை நீங்களே வந்துட்டேள்.. நானே உங்களுக்கு போன் செய்யணும்னு நினைச்சேன். ஆராதகர் மாமா நாளையிலேந்து வரமுடியாதுன்னு சொல்லிவிட்டார். என்ன பண்றதுன்னு நினைச்சேன்…

கவலை படாதீர் எல்லாம் பகவான் செயல், உங்காத்திலே ஒரு போர்ஷனை ஒதுக்கி கொடுங்கோ நானும் என் ஆத்துக்காரியும் தங்க அதுபோதும்.

தீர்தாமாடி வேஷ்டி உடுத்தி, நெற்றி இட்டுக்கொண்டு சன்னதி நோக்கி நடந்தார்.

பெருமாள் சேவையானார்,

ஆனால்! என்ன ஆச்சர்யம் !

இங்கே ஸேவை ஆவது வரதராஜன் அல்லவே… ‘ஜருகண்டி’, ‘ஜருகண்டி’ என்ற சத்தம் துல்லியமாக கேட்டது.

தன்னை மறந்து கை கூப்பி நின்றுகொண்டே இருந்தார் வரதன்.  ஹே! வேங்கடேசா , ஹே! வரதராஜா!  உடம்பில் ஒரு புல்லரிப்பு… கண்களில் நீர் பெருக்கு,மனதில் இனம் புரியாத உற்சாகம்..

கட்டுரை – தேப்பெருமாநல்லூர் நரசிம்மன்

திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்

மண்ணச்சநல்லூர்:சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் பெண்ணாடத்தில் இருந்து தேனி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரியின் பின் புறம், அரசு விரைவு பஸ் மோதியது. பின்னர் நிலை தடுமாறிய பஸ், அப்பகுதியில் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ் பயணிகள் 22 பேர் காயமடைந்தனர்.இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மனோகர், சப்-இன்ஸ்பெக் டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு இருங்களூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:–சேகர் (வயது 32), பஸ் டிரைவர், மதுரை திருமங்கலம், கமலகண்ணன் (38), மதுரை, சுரேஷ் (28), பொன்னமராவதி, முருகன் (22), ஸ்ரீரங்கம் சேதுராப்பட்டி, பாத்திமா (22), சென்னை போரூர், மஸ்தான் அலி (28), திருபுவனம், ராபிகாபீவி (35), முகமது கதிஜா (12), கோவிந்த சாமி (22), தென்னிலைப்பட்டி, இலுப்பூர், சண்முகம் (35), பூலாங்குளத்துப்பட்டி, ஸ்ரீ ரங்கம், இஸ்மான்பீவி, ஆலங்குளம், நெல்லை மாவட்டம், ரமேஷ் (22), வானகரம், சென்னை, ஜெனி (24), பெத்தநாடார்பட்டி, நெல்லை. இவர்கள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[wp_ad_camp_4]

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. தற்போது தனியார் நிறுவனமான திருமலா, பால் விலையை ரூ.2 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமுலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருமலா நிர்வாகம், பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது மக்கள் விரோத நடவடிக்கை என்றும், உடனடியாக இந்த விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தாா்

96 நிமிடத்திற்கு ஒருவர் மதுவால் உயிரிழப்பு: இந்தியாவில்தான் இந்த நிலை!

இந்தியாவில் மதுவால் 96 நிமிடத்திற்கு ஒருவர் என்ற கணக்கில், நாள் ஒன்றிற்கு 15 பேர் பலியாகி வருவதாக தேசிய குற்றப்பதிவு கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கை 38 விழுக்காடு அதிகரித்திருப்பதாக உலக நலவாழ்வு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கம் உள்ளது. இருப்பினும், குஜராத் மற்றும் நாகாலாந்தில் மட்டுமே பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அண்மையில், பீஹாரில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்ற நாளில் கையெழுத்திட்டுள்ளார். இருப்பினும் உலக அளவில் இந்தியாவில்தான் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகம் முழுவதும் சராசரியாக மது அருந்தும் 16 விழுக்காட்டினரில், 11 விழுக்காட்டினர் இந்தியாவில் தான் உள்ளனர்.

அண்மையில், சட்டசபை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பூரண மதுவிலக்கிற்கு கேரளாவில் 47 விழுக்காட்டினரும், தமிழகத்தில் 52 விழுக்காட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான குற்றங்களுக்கு மூல காரணம் மது என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மதுவால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், மத்திய பிரதேசம் 2வது இடத்திலும், தமிழகம் 3வது இடத்திலும், கர்நாடகா 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன.

மதுவால் மாரடைப்பு மற்றும் நரம்புத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிப்பதால் மட்டுமே மது அருந்துவோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று, சமூக ஆர்வலர்களும், நலவாழ்வு ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

படகு கடலில் மூழ்கி 700 பேர் பலி

கடந்த சில நாட்களில், இத்தாலியை அடைய முயற்சி செய்த 700க்கும் மேற்பட்ட அகதிகள் மெடிட்டீரிநியன் கடலில் மூழ்கி பலியாகியிருக்கக்கூடும் என ஐ.நா.,வின் கூறியுள்ளது. கடத்தல்காரர்கள் படகில் வந்த 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும் கூறியுள்ளது. கடந்த வியாழன் அன்று, 550 பேருடன் வந்த படகு மாயமாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. அகதிகள் யாரும் பாதுகாப்பு உபகரணங்களுடன் வரவில்லை எனவும், அகதிகள் வந்த படகில் இன்ஜீன் இல்லை எனவும் அகதி ஒருவர் கூறியதாக ஐ.நா., கூறியுள்ளது.

[wp_ad_camp_4]