Home Blog Page 5766

பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ. 200 அபராதம்

பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போலீசார் எச்சரித்துள்ளனர். சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் உற்பத்தி சட்டம் (COTPA / கோட்பா) 2003ன்படி, பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோட்பா சட்டத்தின் விதிமுறைகள் அடங்கிய குறிப்பேட்டை டெல்லி காவல் துறையின் சிறப்பு கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) காமராஜ் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோட்பா சட்டத்தின்படி, பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘சம்பந்த் ஹெல்த் பவுண்டேஷன்’, ‘புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்டோர் குரல்’ (விஓடிவி) தொண்டு நிறுவனங்கள் மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து பிரசாரம் நடத்த உள்ளது.

[wp_ad_camp_4]

சளித்தொல்லைக்கு இயற்கை மருத்துவம்

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

துளசி கஷாயம் :  சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்

[wp_ad_camp_4]

பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்

பிரதமர் மோடிக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் தொடர வேண்டும். கிறிஸ்தவராக மாறிய பின் அவர்கள் பெறும் சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. மதம் மாறிய பின்னரும் அதே சமூகத்தினராக கருதி சலுகைகள் வழங்க வேண்டும். நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி. மீனவ சமுகத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

[wp_ad_camp_4]

போராட்டத்தில் ஈடுபடும் போலீசாருக்கு அரசு எச்சரிக்கை

சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் வரும் ஜூன் 4ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இவர்களின் போராட்டத்தை முடக்கி, கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு தயாராகி வருகிறது.போராட்டத்தில் ஈடுபடும் போலீசார் பணி நீக்கம் செய்யப்படுவர் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

[wp_ad_camp_4]

 

களைகட்டும் ஊட்டி மலர்க் கண்காட்சி

ஊட்டி மலர்க் கண்காட்சி சற்று தாமதமாகவே தொடங்கினாலும், வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.மலர்களால் உருவாக்கப்பட்ட சென்னை சென்ட்ரல், சிட்டுக்குருவி உருவங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.துளிப்ஸ், சிம்பீடியம், அல்லியம், பட்டன் உள்ளிட்ட பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

[wp_ad_camp_4]

ம.ந.கூட்டணியில் இருந்து திருமா. வெளியேற்றம்

இனி மக்கள் நலக் கூட்டணியுடன் சேரப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் திருமாவளவன்.  உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் களமிறங்கவும் உள்ளாராம்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

[wp_ad_camp_4]

திருப்பதி சுவாமி தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு

கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் + பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.மேலும் அங்கு தெலுங்கு தேசக் கட்சியின் மாநாடு நடப்பதால் கட்சியினர் கோவிலுக்கும் ஒரு விசிட் அடித்துள்ளனர்.பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

[wp_ad_camp_4]

Sushma Swaraj inaugurates PMOIndia website in 6 language languages

0

India’s External Affairs Minister Sushma Swaraj  inaugurates 6 language (Bengali,Marathi,Gujarati,Malayalam, Tamil&Telugu) versions of PMO India website.

[wp_ad_camp_4]

 

நவகிரக கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது திரும்பி வரும் போதோ மற்ற கோவில்களுக்கு செல்லலாமா??

இறைவன் என்பவன் தண்டிப்பவன் அல்ல.அவன் கருணையின் சிகரம்.பொறாமை இல்லாதவன்.எங்கும் நிறைந்து இருப்பவன்.நீங்கள் ஒவ்வொரு நவகிரக கோவில்களிலும் பார்த்தால் சிவன் தான் மூலக் கருவறையில் இருந்து அருள் பாலிப்பார்.அந்தந்த தலம் , அந்த கிரகங்களுக்கு உரிய சீதோஷ்ணம் ,காரத்துவம் நிறைந்து காணப்படும்.

சிவ பெருமான் தான் இத்தலத்தின் நாயகனாக ஆட்சி புரிபவராக இருப்பார்.இங்கே நவக்கிரகங்கள் அதிகாரிகளாக இருப்பார்கள்.சில நேரங்களில் அதிகாரிகள் சரியில்லாமல் இருப்பார்.அதிகாரிகள் வன்மை காரணமாகத் தான் ஜோதிடர்கள் ஆட்சி புரிபவர்களை நேராகப் பொய் பார்க்கச் சொல்வார்கள்.ஆகவே ,இப்படி க்ஷேத்திரங்களுக்கு நீங்கள் போகும்போது வழியில் பல கோயில்களில் ஆட்சியாளர்களைச் சந்திக்கலாம் ; வழிபடாலாம்;கர்மத்தை போக்கலாம்.சந்தோசமாக வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.
ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட்டவர்கள்.அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்களை விட அதிகாரம் இல்லை.ஆகவே நாம் தாராளமாக எல்லா கோவில்களுக்கும் சென்று வழிபடலாம்.நவகிரக கோவிலுக்கு சென்று திரும்பும் போது வழியில் பல கோவில்களுக்கு சென்று அருள் மழையில் நனையலாம். ஆகவே இறைவன் தண்டிப்பவன் அல்ல.

இறைவன் ஒருவன் தான் மிகப் பெரியவன் என்ற எண்ணத்தோடு எல்லா கோவில்களுக்கும் செல்வோம்

[wp_ad_camp_4]

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!

1. வேங்கட மலை:

‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை:

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை:

வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை:

இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை:

விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை:

ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.

7. ஆனந்த மலை:

ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர்

திருப்பதி திருமலையில்,

1.த்ருவ ஸ்ரீநிவாசர்,
2. போக ஸ்ரீநிவாசர்,
3. கொலுவு ஸ்ரீநிவாசர்,
4. உக்ர ஸ்ரீ நிவாசர்,
5. மலையப்பர்
என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :

கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தரு ளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :

இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.
சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு

[wp_ad_camp_4]