பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போலீசார் எச்சரித்துள்ளனர். சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் உற்பத்தி சட்டம் (COTPA / கோட்பா) 2003ன்படி, பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோட்பா சட்டத்தின் விதிமுறைகள் அடங்கிய குறிப்பேட்டை டெல்லி காவல் துறையின் சிறப்பு கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) காமராஜ் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோட்பா சட்டத்தின்படி, பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘சம்பந்த் ஹெல்த் பவுண்டேஷன்’, ‘புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்டோர் குரல்’ (விஓடிவி) தொண்டு நிறுவனங்கள் மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து பிரசாரம் நடத்த உள்ளது.
[wp_ad_camp_4]



