Home Blog Page 5767

Indian Museum comes to the aid of the visually challenged

Visually challenged visters will soon be able to touch and feel replicas of some of the artefacts and read about them in Braille signages.

We will have signages in all the galleries within a year. It doesn’t matter whether you can see with your eyes or not. What we have here is national treasure and it should be accessible for all,” museum Director Dr Jayanta Sengupta told

[wp_ad_camp_4]

Sachin launches clothing brand

Sachin launches clothing brand

Cricket legent Sachin Tendulkar lanched his premium menswear and assessories brand in Mumbai.

About his brand True Blue, Sachin said, “In the last 24 years if I wasn’t in whites on the field, I was in blues. Blue happens to be my favourite colour as well. So I thought, I might as well take that off the field and share that with people who have supported me for so many years and give them the opportunity to wear something which is of my taste, what I like.”

Sachin has launched True Blue in association with Arvind Fashion Brands. They also announced the launch of a store in Mumbai and plan to open 25-30 stores and aim to get a turnover of Rs.200 crores in the next five years.

[wp_ad_camp_4]

மக்களவைத் தலைவருக்கு சொகுசுக் கார்

மக்களவைத் தலைவருக்கு ரூ.48.25 லட்சம் மதிப்புள்ள சொகுசுக் கார்!*
சுமித்ரா மகாஜனின் உபயோகத்திற்காக இந்த சொகுசுக் கார் வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக டொயோட்டா ரக காருக்குப் பதில் ஜாக்குவார் ரக கார் அவருக்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கடந்த 23ம் தேதி மக்களவைச் செயலகம் வழங்கியுள்ளது.

தேர்தலை ரத்து செய்தது, ஜனநாயகத்துக்கு விரோதமானது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எவரும் மோதிக்கொள்ளவில்லை. மாறாக கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலின் பேரில் சிலர் மோதிக் கொண்டனர் என்றும் கூறியுள்ளார்.

[wp_ad_camp_4]

 

கரூர் அருகே ரயில் இஞ்சினில் திடீர் தீ!

கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயிலின் என்ஜின் பகுதியில் திடீரென தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூரில் இருந்து திருச்சிக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலின் நடுப்பகுதியில் என்ஜினும், இரு புறங்களில் ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் இன்று காலை புலியூர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது ரயிலின் என்ஜின் பகுதியில் புகை வருவதை கண்ட புலியூர் ஸ்டேஷன் மாஸ்டர், வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். வீரராக்கியம் ரயில் நிலையத்தில் ரயில் நின்று, பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த போது, ரயிலின் என்ஜின் பகுதியில் தீப்பற்றியது.

இதனால் பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக கரூர்-திருச்சி மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது: பினராயி விஜயன்

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என புதுடில்லி்யில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் மேலும் கூறியதாவது: அணை பாதுகாப்பாக உள்ளதா என்பது தான் முதல் பிரச்னை: அனை தேவையான அளவு பலமானதாக இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.மக்களின்பாதுகாப்பு குறித்து பிரச்னை அணுகப்பட்டது. தமிழகத்துடனான சுமூகமான உறவை பேண விரும்புகிறோம். சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு அணை பலமாக உள்ளது என தெரிவித்துள்ளது. தற்போது ஆய்வு மேற்கொண்டு வரும் குழுவும் அணை பலமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் தன்மையை பொறுத்தே பிரச்னைகளை அணுக முடியும், என கூறினார்

[wp_ad_camp_4]

 

வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு நீட்டிக்கும்: வானிலை மையம் தகவல்

‘கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், ‘அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்’ என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ‘பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்’ என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

[wp_ad_camp_4]

 

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர்!

வித்தையடி நானுனக்கு! ஒரு நவீன திரில்லர். நாம் இரசித்துக் குடிக்கும் காபி, அக்னிக் கனல் போல நம் நாவையே எரித்தால் எப்படி இருக்கும். அப்படி விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம்தான்வித்தையடி நானுனக்கு.

தன் வழி தனி வழி அதுதான் ஒரே வழி. இதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய நேரெதிர் துருவங்கள் (Noir characters).  அவர்களின் காதலும், மோதலும் தான் வித்தையடி நானுனக்கு.

ஒரே காட்சியில் ஒரே சூழ்நிலைக்கு அதில் உள்ள கதாபாத்திரங்கள் விதம்விதமான மனோபாவங்களை வெளிப்படுத்துவார்கள் . அந்த உணர்வுக்குவியல்களை  தனது (Stroop effect) இசையால்  திகிலும் தீஞ்சுவையும் கலந்து நமக்குள் ஊடுருவுகிறார் இசையமைப்பாளர் விவேக் நாராயண்.

அமெரிக்காவில் வசிக்கும் சௌரா சையத் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆழ்மனத் துடிப்பை எகிற வைத்து, திரையை சூடாக்கும் அனலடிக்கும் காட்சிகளுடன் ராம்நாதன் கே.பி எழுதி இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் வித்தையடி நானுக்கு திரைப்படம் எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் பெருமை மிகு கூட்டுத் தயாரிப்பு.

இரு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் சைக்கோ த்ரில்லர் ‘வித்தையடி நானுனக்கு’!…

ராமநாதன் KB இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்  தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.
இது ஒரு சைக்கோ த்ரில்லர் படமாகும்.
சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படம் நினைவிருக்கிறதா.. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா…’ பாடல் மிகப் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது ‘ராமநாதன் KB’ என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, படத்தின் இரு கதாப்பாத்திரங்களில் ஒருவர்  இவர்தான். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் பேனரில் லோகநாதன் D – ஐஎஸ்ஆர் செல்வகுமார்  தயாரிக்கின்றனர்.

படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு ‘எனத் தொடங்கும் அற்புதமான பாடல். இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளாராம் விவேக் நாராயண்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானலில்  படமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ‌5-ம் வகுப்பு வரை தேர்வு நடத்த கூடாது: மத்திய அரசுக்கு பரிந்துரை

[wp_ad_camp_4]

பள்ளிகளில் ‌5-ம் வகுப்பு வரை தேர்வு நடத்த கூடாது என்று மத்திய அரசுக்கு உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்‌ளது.

சுப்பிரமணியன் தலைமையிலான உயர்மட்டக் குழு 200 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, ‌8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடையச் செய்யக் கூடாது என்ற கல்வி உரிமைச் சட்ட விதியை திருத்த அக்குழு பரிந்துரைத்துள்ளது.

‌6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு தேர்வு வைக்கலாம் என்றும், தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மேலும் 2 வாய்ப்புகள் கொடுக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம் என்று சுப்பிரமணியன் குழு தெரிவித்துள்ளது

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவியேற்பு

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்கவுள்ள கிரண்பேடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் அம்மாநில அ‌ரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, வளமான புதுச்சேரியே தமது நோக்கம் என்றும், அதற்காக அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும் என்றும் கூறினார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் வேண்டுகோள் விடுத்தார்

[wp_ad_camp_4]