Home Blog Page 5768

ராஜ்யசபா தேர்தலில் ப.சிதம்பரம் போட்டி

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிறுத்தப்பட்டுள்ளார். கபில்சிபல் உத்திர பிரதேச காங்., வேட்பாளராகவும், ஜெய்ராம் ரமேஷ் கர்நாடக காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிட உள்ளனர்.

[wp_ad_camp_4]

முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு; சாலை மறியல், கல்வீச்சால் பதற்றம்

புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு  நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இதுமட்டுமின்றி காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தார்.  புதுச்சேரியின் பல பகுதியில் சாலை மறியல், கல்வீச்சால் புதுச்சேரியில் பதற்றம் நிலவி வருகிறது

புதுச்சேரி முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் நாராயணசாமியை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். எம்.எல்.ஏ.வாக இல்லாத நாராயணசாமி 6 மாதத்தில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி திமுகவை எதிர்கொள்ளும் நெருக்கடி அதிமுகவுக்கு உள்ளது: கருணாநிதி

இதுதொடர்பாக நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது உண்மை என்றாலும், தனிப்பெரும்பான்மையை விட 12 உறுப்பினர்களே அக்கட்சிக்கு அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, சட்டமன்ற உறுப்பினர்களை எங்கும் அலைபாய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் திமுகவை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலும் அக்கட்சிக்கு உருவாகி இருப்பதாகவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசு பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த விளக்கத்தில், திமுகவுடன் இணைந்து பணியாற்றத் தயார் எனக் குறிப்பட்டது தொடர்பான கேள்விக்கும் கருணாநிதி பதிலளித்துள்ளார். அதன்படி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஜெயலலிதாவுடன் மட்டுமல்ல யாருடனும் திமுக இணைந்து செயல்படத் தயாராகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

[wp_ad_camp_4]

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று நடக்கிறது

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று நடைபெறுகிறது.

2016-18-ஆம் கல்வியாண்டுக்கு முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் அரசு இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன

கலந்தாய்வில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அரசு இடங்கள் 48, சுயநிதிக் கல்லூரிகளில் 37 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவ இடங்கள் 12 என மொத்தம் 97 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்று சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும். மே 31-ஆம் தேதிக்குள் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, நேர்காணல் மூலம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

[wp_ad_camp_4]

தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வி துறை, திட்டமிட்டபடி ஜூன் 1ல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

[wp_ad_camp_4]

 

டிரம்ப் பிரச்சார கூட்டத்தில் வன்முறை: 35 பேர் கைது

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள டோனால்டு டிரம்ப் பிரச்சார கூட்டத்தின் போது, அவரது ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்திய போலீஸார் 35 பேரை கைது செய்துள்ளனர். டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்தில் கடந்த 3 தினங்களில் நடைபெறும் இரண்டாவது மோதல் இதுவாகும். [wp_ad_camp_4]

அமைச்சர் நிலோபர் கபிலிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு

முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் இருந்த வக்பு வாரியம் அமைச்சர் நிலோபர் கபிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் வக்பு வாரிய துறையை நிலோபருக்கு கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் ரோசையா அறிவித்துள்ளார். ஏற்கனவே நிலோபர் கபில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[wp_ad_camp_2]

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியானது. https://cbseresults.nic.in/., www.results.nic.in இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

[iframe src=”https://cbseresults.nic.in/class10/cbse1016_all.htm” width=”100%” height=”500″]

[wp_ad_camp_4]

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழ.நெடுமாறன்

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

[wp_ad_camp_3]

 

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஷீலா தீட்சித் மற்றும் முகுல் வாஷ்னிக் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

[wp_ad_camp_2]