Home Blog Page 5769

செய்தி சுருக்கம் 28/5/16

பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து புதிய அணி தொடங்க மம்தா பானர்ஜி உதவ முன் வந்துள்ளார்

 

கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவுவதால் அங்கு இருந்து தமிழகத்துக்கு கோழிகள், முட்டைகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் சோதனை சாவடிகளில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது

 

பிரதமர்-மக்கள் நிதி திட்டத்தின் கீழ் (ஜன்தன் யோஜனா) வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.37,617 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 22 கோடி கணக்குகளில் இந்த தொகை செலுத்தப்பட்டு இருக்கிறது

 

லண்டன் ஆஸ்பத்திரியில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் விரைவில் பூரண குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்

 

45 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது. மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

 

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய ராணுவ அமைச்சர்  மனோகர் பாரிக்கர் கூறி உள்ளார்.

 

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தேதி பற்றி இந்திய தேர்தல் துணை கமிஷனருடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது 

 

டெல்லி மேல்-சபை, கர்நாடக மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து சோனியா காந்தியை முதலமைச்சர் சித்தராமையா நேற்று சந்தித்து பேசி உள்ளார்.

 

பிரதமர் மோடி நாளை கர்நாடகம் வருகிறார். தாவணகெரேயில் நடைபெறும் பா.ஜனதா 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். 

 

இரு நாட்டு உறவுகள் மேம்பட தீவிரவாத தடைக்கற்களை பாகிஸ்தான் தானாக அகற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

 

இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதி ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ்  பயங்கரவாத தடுப்பு போலீசார் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்தனர்.

 

மத்திய தரைக்கடல் அருகே அகதிகளின் படகு விபத்துக்குள்ளாதில், இதுவரை 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடற்படை தெரிவித்துள்ளது. 

 

ராஜஸ்தானில் உள்ள ஏவுகணை சோதனை மண்டலத்தில் இருந்து விமானப்படை நடத்திய மிக அதிக வேகத்துடன் சென்று தாக்கும் பலம் வாய்ந்த இந்த சூப்பர்சானிக் (பிரமோஸ்)  ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

 

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை மற்றும் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3½ கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 

மக்களவை சபாநயகருக்கு ஆடம்பரமான ஜாகுவார் கார் ஒதுக்கீடு செய்தது குறித்து சுமித்ரா மகாஜன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

 

முதலமைச்சர்  மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்ட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது பரூக் அப்துல்லா செல்போனில் பேசியதாக கூறப்படும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 

 

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவரும் பலியானார். 

 

2-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் ‘அக்னி’ நட்சத்திரம் இன்று விடைபெறுகிறது. இருந்தபோதிலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

 

பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தேசிய விசாரணைக் குழுவை பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என்றால் அது நிச்சயம் நம்பிக்கை துரோகமாக தான் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

 

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம்பெண்ணை காதலரும் அவரது நண்பர்கள் 30 பேரும் கும்பலாக சேர்ந்து கற்பழித்து சின்னாபின்னப்படுத்தியுள்ளனர்  

 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு லண்டனில் வருகின்ற செவ்வாய்க்கிழமை திறந்த இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்- அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

பிரதமர் ஜவகர்லால் நேரு குறித்து அண்மையில் முகநூலில் மறைமுகமாக புகழ்ந்து எழுதிய கலெக்டர் அஜய்சிங் காங்வாரை  அதிரடியாக மாற்ற மத்தியபிரதேச மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது 

 

ம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சர் பதவியேற்றுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் புதிய அமைச்சர்கள் அவரது காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். 

 

சென்னை விமான நிலையத்தை செம்மைப்படுத்தவும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் சிறப்பு குழு விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததுள்ளதாக விமான போக்குவரத்து துறை  அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறியுள்ளார். 

 

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், 2-வது தகுதி சுற்றில் வார்னரின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

 

சவுதியின் தலைநகரான ரியாத்தில் தனது மனைவி பிரசவத்தின் போது டாக்டர் மீது ஏற்பட்ட பொறாமையால் அவரை துப்பாக்கியால் சுட்ட கணவரிடம் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகளில் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

 

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 6 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பானுக்கு  மத்திய  அமைச்சர் அருண்ஜெட்லி.  செல்கிறார்

 

இந்திய ரெயில்வே கடந்த சில ஆண்டுகளாக சிக்கலில் இருப்பதாகவும், ரெயில்வே துறையை அவசர சிகிக்சை பிரிவில் இருந்து மீட்க போராடிக் வருவதாக மத்திய ரெயில்வேத்துறை அமைச்சர்  சுரேஷ் பிரபு கூறியுள்ளார். 

 

குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரை கொலை செய்யும் உரிமை சாதாரண மனிதனுக்கு உள்ளது என்று அரியானா மாநில போலீஸ்( டிஜிபி )அதிகாரி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி போர்க்கப்பல் 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 71 உடல்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு பயணிகள் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

 

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் நடந்த சண்டையின்போது, இந்திய ராணுவ வீரர் ஒருவர் மிகவும் துணிவுடன் போராடி 4 தீவிரவாதிகளை கொன்று தனது உயிரை தியாகம் செய்துள்ளார். 

 

புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கிரண்பேடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புதுவை கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்கிறார்.

 

உலகம் முழுவதும் வரும் 2050-ம் ஆண்டுவாக்கில் ஆண்டுதோறும் ஒருகோடி பேரை கொல்லும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த மாற்றுமருந்து கண்டுபிடிக்க இயலாமல் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர். 

 

புதுக்கோட்டையில் பாலியல் புகாரில் கைதான சரத்குமார் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓட்டம். இதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக போலீஸ்காரர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். 

 

கரூரில் நேற்று காலையில் மனைவி உயிரிழந்த நிலையில் மாலையில் கணவரின் உயிரும் பிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

மாம்பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கல் பயன்படுத்தினால் 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 36 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

 

சென்னை-மைசூர் சென்ற சதாப்தி ரெயிலின் மேற்கூரை கிழிந்ததால் பயணிகள் அச்சம்

 

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது

PM Modi wishes Sharif for open heart surgery

Prime Minister Narendra Modi on Saturday extended his best wishes to his Pakistan counterpart Nawaz Sharif who will undergo an open heart surgery on May 31.

Sharif’s daughter, Maryam Nawaz, has confirmed on twitter that her father will undergo an open-heart surgery on Tuesday. “Prayers are the most effective and potent medicines. Millions will pray for him so he will be fine,” she tweeted.

[wp_ad_camp_4]

 

அக்னி நட்சத்திரம் இன்று விடை பெறுகிறது – ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் ‘அக்னி’ நட்சத்திரம் இன்று (சனிக்கிழமை) விடைபெறுகிறது. இருந்தபோதிலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’ வெயில் காலம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. சென்னை, வேலூர், கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் முதல் 13 நாட்களும், கடைசி 9 நாட்களும் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த கத்திரி வெயில் காலம் இன்றுடன் விடைபெறுகிறது.இடையில் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் கனமழை பெய்து, கத்திரி வெயிலுக்கு ஓய்வு கொடுத்தது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 26-ந் தேதி 106.16 டிகிரி வெயில் பதிவானது.கத்திரி வெயில் இன்று விடை பெற்றாலும், வெயிலின் தாக்கம் வரும் 3 நாட்கள் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தரைக்காற்று தொடர்ந்து மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசி வருகிறது. கடல்காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி தாமதமாக வீசுகிறது. எனவே வரும் 3 நாட்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட ஒரு டிகிரியோ அல்லது 2 டிகிரியோ கூடுதலாக இருக்கும். அதன்பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கும்.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப சலனம் காரணமாகவும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னை நகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

[wp_ad_camp_1]

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் செல்ல வாட்ஸ்ஆப்பில் கோரிக்கையை பரவவிட்ட போலீஸார் !

 
தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் 16 கோரிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து அந்த தகவலை வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளன்ர்.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போலீஸார் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ள கோரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :-
 
1.காவல்துறைக்கு பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும்.
 
2.காவலர்களின் பெற்றோர்கள்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
 
3.காவலர்களின் தர ஊதியம் 1900ரூ லிருந்து 2400ரூ யாக உயர்த்த வேண்டும்.
 
4.ஓய்வுகாலம் வரை சொந்த மாவட்டத்தில் பணிபுரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 
5.காவலர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 50% சலுகை வழங்க வேண்டும்.
 
6.வாரம் ஒருமுறை அனுமதி விடுப்பு கட்டாயப்படுத்த வேண்டும்.
 
7.மாதம்தோறும் ஒவ்வொரு காவலர்களுக்கும் ரூ4000 முதல் ரூ5000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால் பெட்ரோல் அலவன்ஸ் கொடுக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 
8.இரண்டாம்நிலை காவலர் பதவியில் இருந்து 7 வருடங்களில் முதன்நிலை காவலர்களாக பதவி உயர்வும் 12 வருடங்களில் தலைமை காவலர்களாக பதவி உயர்வும் 20 வருடங்களில் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வும் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 
9. குறைந்த வட்டி வீதத்தில் வீடு கட்டுவதற்கும் பெர்ஷனல் லோன் பெறுவதற்கும் 30 நாட்களில் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
 
10.காவலர்களின் யூனிபார்ம் ஊர்க்காவல்படை,வாட்ச்மேன்,செக்யூரிட்டி, மற்றும் மற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் யூனிபார்ம் க்கும் வித்தியாசப்படுத்தி காவலர்களுக்கு தரமான உடைகள் கொடுக்க வேண்டும்.
 
11.அரசு விடுமுறை நாட்களில் ( பொங்கள், தீபாவளி,குடியரசுதினம், சுதந்திரதினம், ரம்ஜான், பக்ரீத், x mass…,etc) பணிபுரியும் காவலர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
 
12.பயணப்படி TA 10% லிருந்து 20% உயர்த்த வேண்டும்.14. இடர்படி 750ரூ ஆகவும் மருத்துவபடி 500ரூ ஆகவும் உயர்த்த வேண்டும்.15. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பணிபுரியும் காவலருக்கு வழங்கும் ETR 200ரூ லிருந்து 400 ரூ ஆக உயர்த்த வேண்டும்.
 
13. ஒருநாளைக்கு ஒரு காவலருக்கு ஒரு அலுவல் மட்டும் வழங்க வேண்டும்.
 
14.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும்.
 
15.அனைத்து மாவட்டத்திலும் காவலர்களின் நல அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
 
16.Risk அலவன்ஸ் 400ரூ லிருந்து 1000ரூ ஆக உயர்த்த வேண்டும்.
 
இதை அதிகம் ஷேர் செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தவும் என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.
[wp_ad_camp_4]

பாலம் கட்டும் பணி தென்காசி எம்.எல்.ஏ .,தொடங்கி வைத்தார்

உயர் மட்டபாலம் கட்டும் பணி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடங்கி வைத்தார்
நபார்டு வங்கி திட்டதின் கீழ் 1 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட இடையார்தவணையில் இருந்து பங்களா சுரண்டையை இணைக்கும் உயர் மட்ட பாலம் கட்டும் பணியினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடங்கி வைத்தார்
நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் சேர்மபாண்டியன் ,முருகேசன் ,ஒன்றியக்குழு தலைவர் (பொறுப்பு )குணம் ,அரசு ஒப்பந்ததாரர்கள் சண்முகவேலு,முத்தையாசாமி,,ஒன்றிய கவுன்சிலர்இரமேஷ்,,ஊராட்சி மன்ற தலைவர் முருகையா நம்பியார் ,ஊராட்சி கழக செயலாளர் திருமால் முருகன்,பொறியாளர்கள் ஜான் சுகிர்தராஜ் ,இரமாதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

மேற்கு வங்க முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கிறார். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 211 இடங்களை கைப்பற்றி அருதிப் பெரும்பன்மை பெற்றது. இதனை தொடர்ந்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக மம்தாபானர்ஜி இன்று பதவியேற்கவுள்ளார். இதற்காக 41 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலை நேற்று அவர் ஆளுநரிடம் அளித்தார்.

பதவியேற்பு விழாவிற்காக கொல்கத்தாவில் உள்ள சிவப்பு சாலையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்திரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். எனினும் இந்த பதவியேற்புவிழாவை முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[wp_ad_camp_1]

இன்று துவங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி

நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில், 120வது மலர் கண்காட்சி இன்று(மே 27) துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது. புதிய அரசின் முதல் விழாவாக நடத்தப்படும் கண்காட்சி, காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. மேரிகோல்டு, பிஞ்ச்மேரி கோல்டு, பால்சம், பெகோனியா, டேலியா, லில்லியம், சன்பிளவர் உட்பட பல வண்ண மலர்கள், தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து 30 ஆயிரம், சிவப்பு ரோஜாக்கள் மற்றும் கார்னேஷன் மலர்களை கொண்டு, 68 அடி நீளம், 10 அடி அகலம், 30 அடி உயரத்தில், சென்னை மத்திய ரயில் நிலைய கட்டட வடிவமைப்பு மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது. ‘ஆர்கிட்’ மலர்கள் உட்பட, பல வண்ண மலர்களில், ஐந்து அலங்கார வளைவுகள் காட்சி திடலில் வைக்கப்பட்டு உள்ளன; பார்வையாளர்களை கவரும் என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது

[wp_ad_camp_1]

மத்திய ராணுவ அமைச்சர் இன்று சென்னை வருகிறார்.

மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், இன்று(மே 27) சென்னை வருகிறார்.இரண்டாண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சியில், மக்களின் நலனுக்காக, மேற்கொண்ட நடவடிக்கைகளையும், அதன் சாதனைகளையும், நாடு முழுவதும் எடுத்துரைக்க, கட்சித் தலைமை முடிவு எடுத்துள்ளது. மக்களுக்காக, பா.ஜ., அரசு ஆற்றியுள்ள பணிகளை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், நாடு முழுவதும், மத்திய அமைச்சர்கள் பிரசாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, சென்னை, தி.நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச, மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் இன்று தமிழகம் வருகிறார்.

[wp_ad_camp_1]

மாதம் ஒவ்வொருவருக்கும் ரூ 1.70 லட்சம் தரும் அரசு?

நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 1.70 லட்சம்) நிரந்தர வருமானம் வழங்கும் திட்டத்திற்கு உலகின் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஜூன் 5-ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நடைபெற உள்ளது. உலகளவில் எந்த நாடும் அறிமுகப்படுத்தாத திட்டத்தை சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 2,500 டாலர் ஊதியத்தை அரசே வழங்கும். குழந்தைக்கு 625 டாலர் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் ஆண்டிற்கு 200 பில்லியன் டாலர் சுவிஸ் அரசுக்கு செலவாகும்.

[wp_ad_camp_1]

இது நம்ம ஆளு- படத்தை திரையிட இடைக்கால தடை

நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, -இது நம்ம ஆளு- படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வெள்ளிக்கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

எனவே, மனுதாரரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் வரை வட ஆற்காடு, தென் ஆற்காடு சினிமா விநியோக பகுதிகளான கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

[wp_ad_camp_1]