Home Blog Page 5770

போலீசார் ஸ்டிரைக்கிள் குதிக்க உள்ளதால் கலக்கத்தில் அரசு

பணிச்சுமை, மேலதிகாரிகள் நெருக்கடி, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக, ஜூன் 4ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் ‘வேலை நிறுத்த’ போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை கட்டிக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காவல்துறை கையில்தான் உள்ளது என்பதால், ஒழுங்கை மீறி அவர்கள் நடக்க அனுமதி கிடையாது. அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உடனடியாக பணியில் இருந்து நீக்க முடியும்.
எனவே, கர்நாடக கான்ஸ்டபிள்கள் நடத்தப்போகும் போராட்டம் நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

15 மணிநேர வேலை
தினமும் 15 மணி நேர வேலை, விடுமுறை மறுப்பு, கூடுதல் நேர பணிக்கு பணம் தராதது, குறைவான ஊதியம், அதிகாரிகள் நெருக்கடி போன்றவை இந்த போராட்டத்திற்கு காரணமாம்.

சம்பளம் வேறுபாடு
பக்கத்து மாநிலமான ஆந்திராவில், சப்-இன்ஸ்பெக்டருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கும் நிலையில், அதே ரேங்கிலுள்ள கர்நாடக போலீஸ்காரருக்கு கிடைப்பது ரூ.35 ஆயிரம்தான். இதுபோன்ற ஊதிய ஏற்றத்தாழ்வுகளை களைய மாநில அரசை பலமுறை கேட்டுக்கொண்டும், பலனில்லை.

குமுறல்
85 ஆயிரம் போலீசாரை கொண்ட கர்நாடக காவல்துறையில், சுமார் 60 ஆயிரம் பேர் கான்ஸ்டபிள்கள்தான். இவர்கள் கோரிக்கைகள் அரசுக்கு சென்று சேராத அளவுக்கு உயர் அதிகாரிகளின் அடக்குமுறை இருப்பதாக குமுறுகிறார்கள் கான்ஸ்டபிள்கள்.

அரை லட்சம் போலீசார்
இந்நிலையில்தான் சுமார் 50 ஆயிரம் கான்ஸ்டபிள்கள் ஜூன் 4ம் தேதி மொத்தமாக விடுமுறை எடுக்க உள்ளனராம். இந்த போராட்டத்தை ‘அகில கர்நாடக போலீஸ் மகா சங்கா’ என்ற அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.

கலக்கத்தில் கர்நாடக அரசு
நாட்டில் எங்குமே இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறாத நிலையில், கர்நாடக அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனைத்து வகை நடவடிக்கைகளையும் எடுத்து போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர கதியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[wp_ad_camp_4]

 

தேர்தல் தோல்வி: பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக தமிழருவிமணியன் அறிவிப்பு

tamilaruviஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம் போல தன்னுடைய அரசியல் வாழ்வு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மதுவைக் குடித்து மயங்கிக் கிடக்கும் மனிதர் கூட்டத்தில் காந்திய கொள்கைகளை எதிர்பார்ப்பது ஏமாளித்தனம் என தெரிவித்துள்ள தமிழருவி மணியன், தமிழக வாக்காளர்களிடம் இலட்சியம் பேசி வெற்றி பெறமுடியும் என்பது பைத்தியக்காரத்தனம் என்று தமக்கு புரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமல் போனால், பொது வாழ்வில் இருந்து முற்றாக தாம் விலகி விடுவதாக அறிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தன்னுடைய இறுதி காலம் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்துள்ள தமிழருவி மணியன், 48 ஆண்டு காலப் பொதுவாழ்விலிருந்து முற்றாக விலகிக் கொள்வதாகவும்  தெரிவித்துள்ளார்.

 [wp_ad_camp_4]

jolly llb 2 வில் நான் நடிக்கவில்லை: அக்ஷ்ய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் ஜூன் 3ம் தேதி ஹவுஸ்புல்-3 படம் வெளியாக aksai kumarஉள்ளது. இந்த படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கும் அக்ஷ்ய்குமாரிடம் ஜாலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதாக வரும் செய்திக்க பற்றிய கேள்விக்கும் “‘ஜாலி எல்எல்பி இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கவில்லை. இதுதொடர்பாக யாரும் என்னிடம் வந்து பேசவில்லை”என்று தெரிவித்துள்ளார்.

 

[wp_ad_camp_4]

நடிகர் அஜீத்துடன் இணையும் முருகதாஸ்

ajithஅஜீத்தின் ‘தீனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.2 வது முறையாக இருவரும் இணையவிருந்த ‘மிரட்டல்’ ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இருவரும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

[wp_ad_camp_4]

 

சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் கைது

அம்பாசமுத்திரம் அருகே சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் ராஜவேலு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோபலசமுத்திரத்தில் குண்டும், குழியுமாக உள்ள [td_smart_list_end]சாலைகளை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

[wp_ad_camp_1]

தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகங்கள் இன்று துவங்கியது. 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 6ம் தேதி மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 7 ம் தேதி மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

[wp_ad_camp_1]

பாவூர்சத்திரம் ஷாலோம் பள்ளி 100 சததேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பாவூர்சத்திரம் ஷாலோம் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவியர்கள் சாதனை .,அசோக்குமார் என்ற மாணவன் 495 மதிப்பெண்கள் பெற்று முதல் இடமும் ( தமிழ் 97 ஆங்கிலம் 99 கணிதம் 100,அறிவியல் 99 சமூக அறிவியல் 100 என மொத்தம் 495 மதிப்பெண்கள்) பிரீத்தி என்ற மாணவி 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் ( தமிழ் 97 ஆங்கிலம் 95 கணிதம் 99 ,அறிவியல் 98 சமூக அறிவியல் 100 என மொத்தம் 489 மதிப்பெண்கள்) ,பிரஜித் என்ற மாணவன் 485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் (தமிழ் 95 ஆங்கிலம் 96 கணிதம் 97 ,அறிவியல் 97 சமூக அறிவியல் 100 என மொத்தம் 485 மதிப்பெண்கள் )இப்பள்ளி 100 சத தேர்ச்சி பெற்றுள்ளது, வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளி தாளாளர் சி.கே.ராஜா சிங் ,முதல்வர் சங்கரன் ,துணை முதல்வர் ஆதிலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்

சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு தேர்தல் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதற்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.




அதன்படி, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் வேட்பாளராக தனபாலும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை முன்னவராக ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப் பேரவை அரசு தலைமை கொறடாவாக அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

[wp_ad_camp_4]

ராஜேந்திரன் கொறடாவாக நியமிக்கப்பட்டதற்கு அதிமுக-வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

[wp_ad_camp_4]

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராஜேந்திரன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக அரசின் கொறடாவாக ராஜேந்திரன் இன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து அரியலூர் மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து சட்டமன்றத்தில் முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் முதல் நபர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ பள்ளி புதிய சாதனை

பாவூர் சத்திரம் அடுத்த அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர் சிவானந் 496மதிப்பெண்கள் பெற்று தென்காசி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் ,மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார் ,ஆகாஷ்,சர்மியா ஆகியோர் 495மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர் ,மாணவர் வெங்கட்ராமன் 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர் அனைத்துப் பாடங்களிலும் சராசரியாக 487 மதிப்பெண்கள் அனைத்து மாணவர்களும் பெற்றுள்ளதால் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது ,மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ள மாணவர் சிவானந்தை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டி கேடயம் வழங்கினார்
வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர் இராஜசேகரன் ,முதல்வர் டாக்டர் மகேஸ்வரி இராஜசேகரன் துணை முதல்வர் சரளா இராமச்சந்திரன்,அக்காடமிக் அட்வைசர் இன்பசேகரன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்