இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம் போல தன்னுடைய அரசியல் வாழ்வு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மதுவைக் குடித்து மயங்கிக் கிடக்கும் மனிதர் கூட்டத்தில் காந்திய கொள்கைகளை எதிர்பார்ப்பது ஏமாளித்தனம் என தெரிவித்துள்ள தமிழருவி மணியன், தமிழக வாக்காளர்களிடம் இலட்சியம் பேசி வெற்றி பெறமுடியும் என்பது பைத்தியக்காரத்தனம் என்று தமக்கு புரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமல் போனால், பொது வாழ்வில் இருந்து முற்றாக தாம் விலகி விடுவதாக அறிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தன்னுடைய இறுதி காலம் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்துள்ள தமிழருவி மணியன், 48 ஆண்டு காலப் பொதுவாழ்விலிருந்து முற்றாக விலகிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.



