Home Blog Page 5816

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் முத்னமை செயலாளராக ராஜாராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக உதய சந்திரன், ஊரக சுகாதார திட்ட இயக்குனராக தரேஷ் அகமது, தொழில் வணிகத்துறை ஆணையர் அம்பூஜ் சர்மா கூடுதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் (கல்வி) ஆசியா மரியம் , மதுரை மாநகராட்சி ஆணையராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என் மகன் குறளரசனுக்கு ஆதர தாங்கள்… டி.ஆர் வேண்டுகொள்

சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இது நம்ம ஆளு படத்தில் பிரபலமான பலரின் வாரிசுகள் இணைந்துள்ளனர். சிம்பு,குறளரசன்,மதன் கார்க்கி, ஸ்ருதி ஹாசன், யுவன் சங்கர்ராஜா, ஸ்ரீராம் பார்த்தசாரதி எனப் பல வாரிசுகள் பங்கு பெற்றுள்ளார்கள்.

இப்படத்தின் மூலம் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில், சிம்புவின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் பாடல்களை வெளியிட்டனர். இந்த விழாவில் டி.ராஜேந்தர், குறளரசன் கலந்து கொண்டனர்.

இதில் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘சிம்பு பிறந்தநாளில் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் சிம்பு, குறளரசனுடன் நானும் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய போதும், கதாநாயகனாக அறிமுகப்படுத்திய போதும் நீங்கள் கொடுத்த ஆதரவை போல, இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் குறளரசனுக்குத் தரவேண்டும்.

இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. ஒரு பாடலை ஆண்ட்ரியாவை வைத்தும் மற்றொரு பாடலை பிரம்மாண்டமாகவும் படமாக்க இருக்கிறோம். மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட இருக்கிறது. சமீபத்தில் வந்திருக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சட்டப்படி எதிர் கொள்வோம். இறைவன் அருளால் வெல்வோம்.’ என்றார்.

குறளரசன் பேசும்போது, ‘முதலில் என் குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அண்ணன் படத்திற்கு முதலில் இசையமைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்திற்காக நிறைய டியூன்களை தயார் செய்தேன். அதில் சிறந்ததை தேர்வு செய்து இசையமைத்திருக்கிறேன். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, ஸ்ருதி ஹாசன், சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். நானும் ஒரு பாடலை பாடியிருக்கிறேன். எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது.

இந்த சமயத்தில் இயக்குநர் பாண்டிராஜ்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பற்றி நிறைய செய்திகள் வந்தது. பாடல்களுக்கு இசையமைக்க லேட் செய்கிறேன் என்று. எல்லா பாடல்களும் நல்லதாகவும் சிறப்பாகவும் வரவேண்டும் என்பதற்காகத்தான் தாமதம் ஆனது. நான் இசையமைத்த பாடல்களை இயக்குநர் பாண்டிராஜ் கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்.” இவ்வாறு  குறளரசன் சொன்னார்.”

சிம்பு சர்ச்சைகள் கருதி இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

உலகப் படவரிசையில் ஒரு தமிழ் படம்: தனுஷை வாழ்த்திய ரஜினி

விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் ‘விசாரணை’. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது.

பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற இப்படம் நாளை (பிப்ரவரி 5) வெளியாக இருக்கிறது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளையும், இயக்குநர் வெற்றிமாறனுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

‘விசாரணை’ படம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை. உலகப் படவரிசையில் ஒரு தமிழ்ப் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் – தனுஷ்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு தனுஷ் ‘நன்றி தலைவா’ என்று பதில் ட்வீட் அடித்திருக்கிறார்.

மும்பை கடற்கரையில் மோடி நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்ற அனுமதி

மும்பை கிர்காவ் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று அனுமதி அளித்தது. இந்நிகழ்ச்சி வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இத்திட்டத்தை மேற்கொண்டு பிரபலப்படுத்தவும், மராட்டியத்தில் முதலீட்டை ஊக்குவிக்கவும், ‘மேக் இன் இந்தியா வாரம்’ என்ற நிகழ்ச்சி மும்பை கிர்காவ் கடற்கரையில் வருகிற 13 முதல் 18-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

6 நாட்கள் நடைபெறும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு பிரதமர்கள், பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 600–க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

 

இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் முகாந்திரம் இருப்பதை அறிந்த நீதிபதிகள், கிர்காவ் கடற்கரையில் நிகழ்ச்சிகள் நடத்த மும்பை ஐகோர்ட்டு விதித்த தடையை நிறுத்தி வைத்தனர். மேலும், அங்கு பிரதமர் மோடி பங்கேற்கும் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.

உம்மன் சாண்டியுடன் நான் இருப்பது போன்ற ஆபாச வீடியோ பொய்யானது. : சரிதா நாயர்

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் சோலார் பேணல் மோசடி வழக்கில் கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அந்நாளில் பிஜூ ராதாகிருஷ்ணன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்பின் நீதிமன்றம் விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் சரிதா நாயர் தெரிவித்ததாவது, ”கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முஹம்மது ஆகியோரின் உதவியாளர்களிடம் ரூ.1 கோடியே 90 லட்சம் லஞ்சம் கொடுத்தேன். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்னாள் மற்றும் தற்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., க்கள் என்னுடன் பேசிய ஆடியோ சிடிகளை வெளியிட உள்ளேன்.

உம்மன் சாண்டியுடன் நான் இருப்பது போன்ற ஆபாச வீடியோ பொய்யானது. என்னை மது ஆலை உரிமையாளர்கள் பின்னிருந்து இயக்குகின்றனர் என உம்மன்சாண்டி கூறுவது தவறு. என்னை யாரும் இயக்கவில்லை” என தெரிவித்தார்

2 மாதத்தில் முடிவை அறிவிப்பேன்: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

இன்று மு.க.அழகிரி தனது குடும்பத்தாருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு மு.க.அழகிரி பேட்டி அளித்தார். பத்திரிகையாளர்களை பார்த்து நீங்களாகவே கேள்வி கேட்கிறீர்கள். நீங்களாகவே அதற்கு பதில் போட்டுக்கொள்கிறீர்கள். நான் சொல்வதை போடுவதில்லை
என்று கோபமாக கூறினார்.

 

 

உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. திமுகவிலி ருந்து உங்கள் ஆதரவாளர்கள் விலக்கப்பட்டு இருக்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டனர். எனது ஆதரவாளர்களை விலக்குவதாக இருந்தால் லட்சம் பேரை விலக்க வேண்டியதிருக்கும் என்று அவர் கூறினார்.

 

 

திமுகவில் சேருவீர்களா என்று கேட்டபோது, நான் சொல்வதை எல்லாம் போடுவீர்களா என்று திருப்பி கேட்டார்.உங்கள் நிலை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இன்னும் 2 மாதங்களில் என் முடிவை அறிவிப்பேன் என்று மு.க.அழகிரி கூறிவிட்டு குடும்பத்தாருடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீராங்கனைக்கு தடை

சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீராங்கனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பிபா கிளாரி (Piepa Cleary) என்பவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆண்கள் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கிளாரிக்கு 6 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கெயில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு – ஜெயலலிதா உத்தரவு

கெய்ல் நிறுவன வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். சீராய்வு மனுவில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார். பின்னர், கெயில் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் பெண்கள் நலனுக்காக ‘ஸ்திரீ சக்தி’ லாட்டரி

கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் பெண்கள் நலனுக்காகவும் ஒரு புதிய லாட்டரி சீட்டு அறிமுகப்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. ‘ஸ்திரீ சக்தி’ என்ற பெயரில் இந்த லாட்டரி சீட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.50 ஆகும். இதன் பரிசு குலுக்கல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நடத்தப்படும். ‘ஸ்திரீ சக்தி’ லாட்டரி விற்பனை மூலம் இந்த வருடம் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் தேசிய கீதம் பாடும் போது குழப்பம் ஏற்படுத்த திட்டம் உளவு துறை தகவல்

இலங்கையின் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொழும்புவில் உள்ள காலிமுகத்திடலில் இன்று நடைபெறும் சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படக்கூடாது என எதிர்ப்புகள் வெளியாகியிருக்கும் இந்த நிலையில் இன்றைய நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதனை கூச்சலிட்டுக் குழப்புவதற்கு சிலர் தயாராகி வருவதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உளவுத்துறை தகவல் அளித்துள்ளதை தொடர்ந்து, குழப்பம் விளைவிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்த வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.