Home Blog Page 5817

தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளும் தலைவர் கருணாநிதியே எடுப்பார் : மு.க.ஸ்டாலின்

காப்பி அடித்து வெற்றி பெற பெண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என சென்னையில் நமக்கு நாமே பயணத்தின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளும் தலைவர் கருணாநிதியே எடுப்பார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவோம் என்று அவர் கூறியுள்ளார். 3 மாணவிகள் உயிரிழப்பு தொடர்பான விசாரணை உண்மை வெளிவரும்படி இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்ற திமுக தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

 

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய இலங்கையில் கையெழுத்து பிரச்சாரம்:முருகன் தாயார் அறிவிப்பு

 

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சியில், தமிழக சிறையில் உள்ள 7 தமிழர்களில் ஒருவரான முருகனின் தாயார் சோமினி பேசுகையில், கடும் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உலக தலைவர்கள் மன்னித்ததற்கு முன்னுதாரணங்கள் உள்ளன. இதே போன்று தன் மகனுக்கும் கருணை காட்டப்படும் என்று நம்புகிறேன். அதற்காக என் மகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி, இலங்கையில் கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். 10 லட்சம் கையெழுத்துகளை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளேன். இந்த கையெழுத்துகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சோமினி மகன் முருகன் உள்பட 7 பேர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.,23 முதல் மார்ச் 17 வரை நடைபெறும் என அறிவிப்பு

“பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23-ம் தேதி துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறும்” என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 29ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தில் பட்ஜெட் உரையின் மீதான விவாதம் நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா குரு ராம்தேவ் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில அரசு எடுக்கும்: அமைச்சர் எச்சரிக்கை

யோகா குரு ராம்தேவ்வின் பதஞ்சலி ஆயுர்வேத மையத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், உத்தரகாண்ட் அரசு சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் சுகாதாரத் துறை அமைச்சர் சுரேந்தர் சிங் நேகி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு கடந்த ஆண்டே கொண்டு செல்லப்பட்டு விட்டது. பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம் குறித்து இது வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பசுவை வணங்கும் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

இந்தியாவில் பசுவை வணங்கும் இந்துக்களை குறிவைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐ.எஸ். செய்தி பத்திரிக்கையான ’தாபிக்’கில் இத்தகவல் இடம்பெற்று உள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளது.

’தாபிக்’கில் வெளியிடப்பட்டு உள்ள பேட்டியில் குறிப்பிட்டப்பட்டுள்ளதாவது, ஐ.எஸ். தீவிரவாத இயக்க கமாண்டர் தாங்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் எங்களுது பிரிவை பரவசெய்ய விரும்புகிறோம் என்று கூறிஉள்ளான்,. இந்துக்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிடவில்லை என்றும் ஷியா இஸ்லாமியர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்ற தகவலும் இடம்பெற்று உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

கிடப்பில் கிடக்கிறது கோவையில் உலகத்தர பல்கலைக்கழக திட்டம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் கோவையில் உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, மத்திய பல்கலைக்கழகமும், இந்திய மேலாண்மை நிறுவனமும் அமைக்கப்பட்ட நிலையில், உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் மட்டும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட 2 வழக்குகள் மீது விசாரணை நடத்தாது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

பிரதமர் நரேந்தி மோடி, 2014 பாராளுமன்ற தேர்தலில் கட்சி சின்னமான தாமரை வடிவத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் உயர்நீதி மன்றத்தில் நிஷாந்த் தாக்கல் செய்த மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், குஜராத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருவதால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்தி மோடிக்கு எதிராக தொடரப்பட்ட 2 வழக்குகள் மீதும் விசாரணை நடத்தப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ராகுல் முதல்வராக வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் காங்., துணைத் தலைவர் ராகுல், முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் விரும்புதாக, தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவே காங்கிரஸ் விரும்புகிறது. அப்படி, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் ராகுல் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர். அவர் தமிழக முதல்வராக வேண்டும் என காங்., விரும்புகிறது. சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை விரைவில் முடிவு செய்யும். கெய்ல் திட்டம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

பெங்களூருவில் தான்சானியா நாட்டு மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: 5 பேர் கைது

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில்பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து தாக்குதல் நடத்தினர்.

அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர். மேலும், அவரது ஆடைகளையும் களைந்ததாகத் தெரிகிறது. மேலும் அந்த மாணவி அங்கு வந்த பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றபோது, அவரைத் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது.

பெங்களூரில் ஆப்பிரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவியை பொதுமக்கள் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக உரிய விளக்கம் மற்றும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையாவிடம், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கோரியுள்ளார்.

கார் விபத்தில் காமெடி நடிகர் மதுரை முத்து மனைவி பலி

காமெடிப் பேச்சாளரும் தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் இன்று கார் விபத்தில் பலியானார்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இன்று காலை வீட்டிலிருந்து காரில் வையம்மாள் புறப்பட்டார் காலை 7 மணியளவில் திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார் சென்றபோது எதிர் பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் காரில் இருந்த வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.