Home Blog Page 5815

ரயில் விபத்தால் சென்னை- பெங்களுர் ரயில்கள் ரத்து : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ், திருப்பத்துாரை அடுத்த பச்சியூர் எனுமிடத்தில், ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டது.

இந்த விபத்து குறி்த்த விவரங்களை அறிய உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சேலம் ரயில் நிலையம்: 0427-2431947

திருச்சூர் ரயில் நிலையம்: 0487-2430060

பாலக்காடு ரயில் நிலையம்: 044-2555231, 0491-2556198

திருவனந்தபுரம் ரயில் நிலையம்: 0471-2320012

என்ற எண்களில் விபத்து குறித்த விவரங்களை அறியலாம்.

இந்நிலையில், ஜோலார்ப்பேட்டை அருகே ரயில் விபத்தால் சென்னையிலுருந்து பெங்களுர் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின்போது அரசு மெதுவாக செயல்பட்டதாக மத்திய குழு அறிக்கை அளிக்கவில்லை: தலைமைச்செயலாளர்

மழை வெள்ளத்தின்போது தமிழக அரசு மெதுவாக செயல்பட்டதாக மத்திய குழு அறிக்கை அளிக்கவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு. ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2-ம் தேதி ‘எக்கனாமிக் டைம்ஸ்‘ நாளேட்டில், ‘‘வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு மெதுவாக செயல்பட்டது – மத்திய அறிக்கை கூறுகிறது’’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து, அந்த தகவலின் உண்மைத்தன்மையை சோதித்து அறியாமல், அந்த செய்தியை பிற மீடியாக்களும் வெளியிட்டுள்ளன.

எக்கனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான இந்த கட்டுரை அடிப்படை ஆதாரமற்றது; தவறானது.

இந்த விஷயம் தொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டது. அதற்கு பதில் அளித்து அந்த அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்துள்ளது.

அதில், அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதுபோல், “மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் எந்த அறிக்கையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் வந்த தகவல் எதையும் அமைச்சகம் தங்கள் கருத்தாக ஏற்கவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பட்ஜெட்டில் ரெயில் பயணிகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு

மத்திய ரெயில்வே பட்ஜெட் வருகிற 25-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இது குறித்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தாவது:

ரெயில் விபத்தை தவிர்ப்பதில் ரெயில்வே துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 2016-2017ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில் பயணிகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எங்களின் நோக்கம் ஒரு ரெயில் விபத்து கூட நடைபெறக்கூடாது என்பது தான்.

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்: மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் 19,600 அடி உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை பனிச்சரிவில் புதைந்தது. அப்போது பணியில் இருந்த ஒரு இளநிலை ராணுவ அதிகாரி மற்றும் 9 வீரர்கள் உயிருடன் புதைந்தனர். அவர்கள் அனைவரும் மெட்ராஸ் பட்டாலியனை சேர்ந்தவர்கள்.அவர்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் விமானப்படையில் உள்ள சிறப்பு மீட்புப்படையினர் ஏராளமானவர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். மோப்ப நாய்கள், பனிக்கட்டிகளை உடைக்கக்கூடிய எந்திரம் உள்பட பெரிய கருவிகளும் அனுப்பப்பட்டன. மோசமான பருவநிலை மற்றும் பனிக்கட்டிகளை உடைத்துக் கொண்டு செல்ல வேண்டியது இருப்பதால், மீட்புப்படையினர் பனிச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு பனிச்சரிவில் சிக்கி புதைந்துபோன 10 ராணுவ வீரர்களும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் இதனை அறிவித்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‘சியாச்சின் சிகரத்தில் 10 ராணுவ வீரர்கள் இறந்தது மிகவும் துயரமானது என்று, நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை இழந்த அந்த துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க திட்டம்

புது தில்லி:

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. “பஞ்சாயத்து சட்டம்’ தொடர்பான 2 நாள் பயிலரங்கை தில்லியில் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் வீரேந்தர் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

அந்தப் பயிலரங்கில அவர் பேசியபோது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்தங்களை, வரும் 23-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மேற்கொள்ள முயற்சிக்கப்படும். தற்போது, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. இந்த பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பெண்களால் தலைமைப் பண்பை வலுப்படுத்திக் கொள்ளவும், பொதுப் பணிகளில் ஆர்வமாக ஈடுபடவும் முடியும் எனறார்.

இலங்கை மக்களுக்கு மோடி சுதந்திர தின வாழ்த்து

புது தில்லி:

இலங்கை மக்களுக்கு இன்று தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்துஅவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட வாழ்த்து:

 

உறவுகள் ஒரு தொடர்கதை!

இந்தத் தலைமுறையில் பெரும்பாலும் தாத்தா பாட்டி வரை பலரும் பார்த்திருப்போம். அதாவது நமக்கு முந்தைய இரு தலைமுறை வரை. மூன்று தலைமுறை பின்நோக்கி யோசித்தால்…?

கூட்டுக் குடும்பங்களில் சிறார்கள் பாட்டி, பூட்டி வரை பார்த்திருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு வாய்ப்பு கிடைக்காத நிலையில்..? சரி நாமே தேடிப் போவோமே என்று திடீர் ஆசை !

முதலில் அப்பா, பெரியப்பா முன் அமர்ந்து, அவர்களின் அப்பா, அப்பா வழித் தாத்தா… அம்மா, அம்மா வழி தாத்தா இவர்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் பழக்க வழக்கம், எங்கே எப்படி இருந்தார்கள்? அந்த கால சூழ்நிலை, சிறுவயது அனுபவங்கள்… இப்படி!

என் பெரியப்பாவுக்கு படு உற்சாகம்! அவருக்கு வயது 75 கடந்து விட்டது. நெல்லை மாவட்ட வீரகேரளம்புதூரில் பிறந்தவர். அவருடைய அப்பாவின் (அதாவது என் தாத்தாவின்) பூர்வீகம் எது, எங்கே இருந்தார் என்றெல்லாம் கேட்டேன்.

நெல்லை ஜில்லா சேந்தமரம்தான் அவர் இருந்த இடம் என்று அவரின் சிறுவயது நினைவுகளை அசைபோட்டார். (நான் என் தாத்தா ராம ஐயங்காரைப் பார்த்ததில்லை. என் தந்தையாரின் திருமணத்துக்கு முன்பே அவர் காலமாகிவிட்டிருந்தார்.)

ஒரு சில சம்பவங்களைத் தவிர பெரிதாக அவர் நினைவில் சொல்லும்படியாக ஏதும் இல்லை.

சரி பெரியப்பா.. பாட்டி பூர்வீகம் பத்தி சொல்லுங்க… என்று இழுத்தேன்.

குப்பு ஜானகி என்ற பேர். நினைவு தெரிந்து எனக்கு 8 வயது இருந்தபோது அவர் காலமாகிவிட்டார். அவர் முகம் நினைவில் உள்ளது என்றாலும், பின்னணி தெரிந்து கொள்ள ஆசை எனக்கு. பெரியப்பாவிடம் தோண்டித் துருவினேன்…

தேனி-க்கு அருகே 4 கி.மீட்டரில் உள்ள பூதிப்புரம். அதுதான் பாட்டியின் பூர்வீகம். அவரின் தந்தையார்… (என் அப்பாவின் தாத்தா) அனந்தகிருஷ்ண ஐயங்கார். அங்கே சித்த மருத்துவத்தில் கைதேர்ந்த வைத்தியராக இருந்துள்ளார். அவரின் ஒரே பெண்ணான என் பாட்டிக்கு திருமணமாகி நெல்லை ஜில்லாவுக்கு வந்த பின்னர், தேனி (பூர்வீகத்துடனான) தொடர்பு அவருக்கு முற்றிலும் போய்விட்டதாம். 
உடனே என் பத்திரிகை வட்ட தேனி நண்பர்களிடம் விசாரித்தேன். ஊர் குறித்த தகவல் எல்லாம் கிடைத்தது.

இப்போது எனக்குள் ஓர் ஆசை. தேனி- பூதிப்புரத்துக்குச் சென்று வர வேண்டும். அங்கே அக்ரஹாரம் ஏதும் உண்டா? இப்போது இருந்தால் எப்படி உள்ளது? சுமார் 100 வருடம் முன்னர் பாட்டியின் அப்பா வைத்தியர் அனந்தகிருஷ்ண ஐயங்கார் எப்படி இருந்தார்… இப்போதும் அவரை அங்கே நினைவு கொண்டிருப்பவர்கள் யாரும் உண்டா? நாட்களை எதிர்பார்த்துள்ளேன்.

இந்தப் படத்தில் நடுவில் இருப்பவர் என் பாட்டி குப்பு ஜானகி. இடதுபுறம் இருப்பவர் அவர் மகளும் என் அத்தையுமான ருக்மிணி. வலப்புறம் இருப்பவர் என் அத்தையின் மகளும் என் சிற்றப்பாவின் மனைவியுமான மைதிலி…

ஓர் ஆச்சரியம்… எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக (ஒன்றுவிட்ட சித்தப்பா, பெரியப்பா, அத்தை என யார் இருந்தாலும்….) ஒவ்வொருவருக்கும் ஒரு பெண் குழந்தை என்பதே!
பின்குறிப்பு:

இது ஏதோ சுயபுராணம் என்று நட்பு வட்டம் எண்ணக் கூடாது. முன்னோர் வாழ்ந்த மண்ணையும் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்வதிலும், பெருமித உணர்வை வளர்த்துக் கொள்வதிலும் இந்தத் தலைமுறை ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் சொன்னேன். குடும்பத்தில் இருந்து கிளம்பும் இந்த உணர்வு, ஊர், ஜில்லா, மாநிலம், நாடு என்று விரிவடையும். செய்வோமா?

 

ªË© µ°Áš®Í ªËŸÍŸ¤Á…. ***‡¨Í¤¤Í ¤²È®Á±È¯¿²Í ªÆ°Á®Íª¾²Á®Í ¤¾¤Í¤¾ ª¾ŸÍŸ¿ µ°È ª²°Á®Í ª¾°Í¤Í¤¿°ÁªÍªË®Í. …¤¾µ¤Á ¨®•Í•Á ®Á¨…

Posted by Senkottai Sriram on Thursday, February 4, 2016

 

பகவத் கீதை: விளக்கம்

41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:

ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:

அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால், க்ருஷ்ண-கண்ணா, குலஸ்த்ரிய-குலப் பெண்கள், ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள், துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால், வர்ணஸங்கர: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது, வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!

பொருள் : கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச

பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:

ஸங்கர-குழப்பத்தால், குலஸ்ய ச-குலத்தையும், குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும், நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது), பிண்ட, தகக்ரியா: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி, ஏஷாம் பிதர: ஹி-இவர்களுடைய முன்னோர்களும், பதந்தி-வீழ்வர்.

பொருள் : அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

மரணமடைந்தவர் கொஞ்சகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர். அவர்களையும், பித்ருலோகத்தில் அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களையும் குறித்து எண்ணும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது. இச்செயல் சிராத்தம் என்று சொல்லப்படுகிறது. முன்னோர்களைக் குறித்து எழும் நல்லெண்ணம் உறுதிப்படுதற் பொருட்டுப் பிண்டம், ஜலம் முதலிய பண்டங்கள் கையாளப்படுகின்றன. மற்றும் பல மனிதர்களுடைய நல்லெண்ணங்களை அவ்வேளையில் துணைகொள்ளுதற்பொருட்டு வறியோர்க்கும் மற்றவர்க்கும் சிராத்த காலங்களில் உணவளிக்கப்படுகிறது.

43. தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:

உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா:

குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின், ஏதை: வர்ணஸங்கரகாரகை: தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால், ஸாஸ்வதா-என்றும் உள்ள, ஜாதிதர்மா: குலதர்மா ச-குல ஜாதி தருமங்கள், உத்ஸாத்யந்தே-அழிகின்றன.

பொருள் : வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.

44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந

நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

உத்ஸந்ந குலதர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள், மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு, அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம், வதி-ஏற்படுகிறது,

இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.

பொருள் : ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்

யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா:

அஹோ-அந்தோ, பத-பாவம், வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம், வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம், யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு, ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல, உத்யதா-முனைந்து விட்டோம்,

பொருள் : அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!

46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய:

தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே ÷க்ஷமதரம் பவேத்

அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி, அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல், மாம்-என்னை,

ஸஸ்த்ரபாணய-ஆயுதம் தாங்கிய, தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார், யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும், தத் மே-அதில் எனக்கு, ÷க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.

பொருள் : கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.

இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.

ஸஞ்ஜய உவாச

47. ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்

விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ:

ஸங்க்யே-போர்க்களத்தில், ஸோக ஸம்விக்ந மாநஸ-சோகத்தினால் கலங்கிய மனத்துடன், அர்ஜுந: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி, ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும், விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு, ரதோபஸ்த-தேர்த்தட்டில், உபாவிஸத்-உட்கார்ந்தான்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

சுஷ்மாவுடனான விக்னேஸ்வரன் சந்திப்புக்கு அனுமதி மறுப்பு

சுஷ்மா ஸ்வராஜின் இலங்கை பயணம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இரு நாட்டு பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, மின்சாரம், தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக – கலாசாரம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, இரு தரப்பு மக்கள் ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து கொழும்பில் நடைபெறவுள்ள ஒன்பதாவது இரு நாட்டு கூட்டு ஆணையம் விவாதிக்கும். கொழும்பில் பிப்ரவரி 6-ஆம் தேதி இலங்கை அதிபர் மைதிரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே ஆகியோரை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனுடனான சந்திப்புக்கு அனுமதி மறுப்பு

இலங்கைப் பயணத்தின் போது தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திக்க இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்த சுஷ்மா திட்டமிட்டுள்ளார். இதேபோல, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்க சுஷ்மா ஸ்வராஜ் விரும்பினார். ஆனால், அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்யவில்லை என்பதால் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

இன்று இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

புது தில்லி:

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வெள்ளிக்கிழமை இன்று புறப்பட்டுச் செல்கிறார். கொழும்பில் இன்று பிற்பகல் 3.30க்கு நடைபெறவுள்ள இந்தியா – இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

இந்தப் பயணம் குறித்து தில்லியில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் கூறியபோது…. இரு தரப்பு நல்லுறவு தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்களும் விவாதிப்பர். குறிப்பாக தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை இலங்கைத் தரப்பிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்குவார். இரு நாட்டு மீனவர்கள் சர்வதேசக் கடல் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக இரு தரப்பு சங்கங்களும் தொடர்ந்து பேசி வருகின்றன. துரதிருஷ்டவசமாக இந்த விஷயத்தில் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவர்களின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளும் கொழும்பு பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டில் சமஉரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதை தனது பயணத்தின் போது, அந்த நாட்டுத் தலைவர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் நிச்சயம் வலியுறுத்துவார் என்று விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.