சட்டமன்றத்தில் கவர்னர் உரையை வாசிக்க விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி !
அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து 37 பேர் பலி
இந்தியாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல்
மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: கேரள சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக கவர்னர் பேச்சு
கேரள சட்டப்பேரவையில் பஜ்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சதாசிவம் உரையாற்றினார். அப்போது சோலார் மின் திட்ட முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநர் உரையை படிக்க விடாமல் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
அமளிக்கு நடுவே பேசிய ஆளுநர் சதாசிவம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானபடுத்தும் வகையில் பேசிய ஆளுநர் சதாசிவம் உங்களது போராட்டம் அரசுக்கு எதிரான என்பது தெரியும் அதனை மக்களிடம் தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார். மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று சட்டப் பேரவையில் ஒரு ஆளுநர் கூறியிருப்பது கேரள சட்டப் பேரவை வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என கருதப்படுகிறது.
12-வது தெற்காசிய விளையாட்டு போட்டி கவுகாத்தியில் தொடங்கியது
தெற்காசிய 12 வது விளையாடி போட்டி சற்று முன்னதாக கவுகாத்தியில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இன்று முதல் 16-ம் தேதி வரை நடக்கிறது. கவுகாத்தியில் 16 வகையான போட்டிகளும், ஷில்லாங்கில் 7 வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியில் தடகளம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, நீச்சல், மல்யுத்தம், கபடி, ஸ்குவாஷ், டென்னிஸ், ஹேண்ட்பால், வில்வித்தை உள்பட 23 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 228 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. தெற்காசிய போட்டியில் இருபாலருக்கும் சரிசமமான அளவில் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டிக்கான இந்திய அணியில் 245 வீராங்கனைகள் உள்பட 521 பேர் இடம் பிடித்துள்ளனர்.
தங்கம் விலை ரூ.112 உயர்வு
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,603-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.20,824-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.27,835-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.38.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.36,275-க்கும் விற்பனையாகிறது.
ஊழல் தடுப்பு மேற்பார்வை குழுவில் ராகுல் டிராவிட்
ஐ.சி.சி. ஊழல் தடுப்பு மேற்பார்வை குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக வருவாய் மற்றும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய விதிமுறையை நீக்க, ஷசாங் மனோகர் தலைமையில் நேற்று நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் சாய்னா, காஷ்ய்ப், தீபிகா பல்லிக்கல் விலகல்
கவுகாத்தி, ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஒலிம்பி போட்டிக்காக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் விலகியுள்ளார். காயம் காரணமாக் காயம் இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்ய்ப் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் ஒற்றையர் பிரிவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஆனலும் இவர் அணிகள் பிரிவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம் இன்று வெளியிடப்பட்டது. இந்த இரு தொடர்களிலும் ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மணீஷ் பாண்டேவும் புவனேஸ்வர் குமாரும் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை டி20 தொடருக்கான அணியில, தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, ஆஷிஷ் நேஹ்ரா, ஹர்பஜன் சிங், முகமது சமி, பவன் நேகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி இலங்கைக்கு எதிராக மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 9ம் தேதி புனேவில் நடக்கிறது. ஆசிய கோப்பை தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. வழக்கமாக 50 ஓவர்களை கொண்ட போட்டியாகவே நடத்தப்படும். இம்முறை டி 20 உலககோப்பையை கருத்தில் கொண்டு தொடரின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது.
காகபுசுண்டர் வணங்கிய ஷோடச லிங்கம்


எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவதரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு நந்தியெம்பெருமான் பால நந்தியாக வீற்றிருப்பதால், பிரதோஷத்தின்போது கொம்புகளுக்கிடையே தரிசனம் செய் யும் அவசியம் இன்றி, நேரடியாகவே சிவ தரிசனம் செய்யலாம். இது ஒரு சிறப்பம்சம்.

கோயிலுக்குச் செல்லும் வழி சே லம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் _ கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே 1 கி.மீ. தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. |
கிருத கம்பளம்! ஒ வ்வொரு பௌர்ணமி பூஜையும் சிவ பெருமானுக்கு சிறப்பானது ஆகும். இதில் மாசி மாத பௌர்ணமி பூஜை இறைவனுக் குச் செய்யும் அபிஷேகங்களில் மிகவும் முக்கியமானது. அபிஷேகம் நடைபெற்று முடிந்ததும் ‘கிருத கம்பளம்’ சாத்துவார்கள். கம்பளி ஒன்றை நெய்யில் நனைத்து சாத்துவதை ‘கிருத கம்பளம்’ என்பர். இந்த வழிபாட்டை தரிசித்தால் தேக ஆரோக்கியம் சிறக்கும் என்று நூல்கள் கூறுகின்றன. ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் போல கிருத கம்பளம் சாற்று தல் மாசி மாத பூஜையாய் திருவையாற்றில் நடைபெறும். கட்டுரை: ஹிந்து ஸ்பிரிசுவல்ஸ் |

