Home Blog Page 5813

பெங்களூரில் இன்று ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

பெங்களுரில் இன்று நடந்து வரும் ஐபிஎல் ஏலத்தில் புனே அணி பீட்டர்சனை 3.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதே அணி இஷாந்த் ஷர்மாவை 3.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆரோன் பிஞ்சை யாரும் ஏலம் எடுக்கவில்லை. ஷேன் வாட்சனை ரூ.9.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  ஏலம் எடுத்தது. ஆசிஷ் நெஹ்ராவை ரூ.5.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. அதே அணி யுவராஜ் சிங்கை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

 

டேல் ஸ்டெயினை 2.3 கோடி ரூபாய்க்கு குஜராத் லயன்ஸ் அணியும், சஞ்சு சாம்சனை 4.2 கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியும்  ஏலம் எடுத்தன.  ஹசிம் ஆம்லா, ரூசோவ், புஜரா, மைக் ஹசி மற்றும் ஜெயவர்த்தனே, ஜார்ஜ் பெய்லி, பத்திரிநாத் ஆகியோரை   எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

 

9-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 230 பேர் இந்தியர்கள். இதிலிருந்து 116 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குஜராத் பஸ் விபத்து: மோடி இரங்கல்

புது தில்லி:

குஜராத் மாநிலம் நவ்சரியில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து மூழ்கி விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை மோடி  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அவர்கள் விரைவில் இந்த துயரச் சம்பவத்தில் இருந்து வெளிவர பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

 

கிழக்கு முன்னேறாமல் நாடு முழுமை பெறாது: அசாமில் மோடி பேச்சு

சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கே திப்ரூகர் நகரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பிளாஸ்டிக் மற்றும் மெழுகுப் பொருட்கள் தயாரிப்பதற்கான 2 பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளை அவர் தொடங்கி வைத்தார்.

அந்த விழாவில்  மோடி பேசும்போது…

இந்த 2 ஆலைகளையும் மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் இங்கு இன்னும் பல சிறிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் அது இயற்கை வளத்தை மதிப்படையச் செய்வதுடன் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.

ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறாவிட்டால் இந்தியாவின் முன்னேற்றம் முழுமை அடையாது. இதற்காக அண்டை நாடுகளான மியான்மர், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகியவற்றுடன் நமது கிழக்கு மாநிலங்களும் பயன் அடையும் வகையில் ‘கிழக்கு கொள்கை’ என்னும் திட்டத்தை மத்திய அரசு வகுத்து உள்ளது என்று அவர் பேசினார்.

 

பாரதீய ஜனதா கட்சியும் ஊழல் செய்யும் கட்சியே ! : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

 
பாரதீய ஜனதா கட்சியும் ஊழல் செய்யும் கட்சி தான் .எந்த ஊழலும் செய்யாத கட்சி என அந்த கட்சியை கூற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
பாரதீய ஜனதா கட்சி அரசில் ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூட கூற முடியாத நிலையில் காங்கிரஸ் தத்தளிப்பதாக மோடி கூறியுள்ளார். இதன்பின்னர், பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இதற்கு, எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் படேலின் மகள் அனர் ஜெயேஷ் படேல் மிகப்பெரிய நிலப் பறிப்பு ஊழலில் சிக்கியுள்ளார். சிங்கங்களின் சரணாலயம் உள்ள பகுதியில் 400 ஏக்கர் அரசு நிலம் ஒரு சதுர அடி ரூ.1.50-க்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
எனவே, பாரதீய ஜனதா கட்சி எந்த ஊழலையும் செய்யாத கட்சி என்று நரேந்திரமோடி கூறுவது போலித்தனமானது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

தேர்தல் தோல்வியால் மக்களைப் பழிவாங்க நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்: மோடி

 

திப்ரூகர்:
சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கே  மொரான் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசும்போது சோனியாவும், ராகுல் காந்தியும் நாடாளுமன்றத்தை முடக்குவதாக  அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், மறைமுகமாக குற்றம் சாட்டிப் பேசினார்.

அந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது..
ஒரு குடும்பத்தினர் மட்டும் நாட்டில் எதிர்மறை அரசியலை நடத்துகின்றனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளின் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மோடிக்கு எதிராக செயல்பட்டாலும்கூட நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற வேண்டும் எனவும் விரும்புகிறார்கள். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2014) தோல்வி அடைந்து, 400 பேரில் இருந்து 40 பேராகக் குறைந்து போனவர்கள் மோடியை பணியாற்ற விடாமல் தடுக்கின்றனர். அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

அந்த சதித் திட்டத்தில் தொடர்ந்து அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். தேர்தலில் அடைந்த தோல்விக்காக மக்களை பழிவாங்கவே இவ்வாறு செய்கின்றனர்.

தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள போனஸ் உச்சவரம்பு அதிகரிப்பு சட்ட மசோதா, பிரம்மபுத்திராவில் போக்குவரத்து தொடர்பான மசோதா போன்ற பல முக்கியமான மசோதாக்களை அந்தக் குடும்பம் நிறைவேற்ற விடாமல் தடுக்கிறது.

இதுபோல எதிர்மறை மற்றும் முட்டுக்கட்டை போடும் அரசியலில் யாராவது ஈடுபடுவார்களேயானால் இது அவர்களுக்கும் பயன் அளிக்காது, நாட்டுக்கும் நன்மை கிடைக்காது.

மாநிலத்தில் பல கட்சிகள் ஆட்சி அமைக்க நீங்கள் ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். அசாமின் கனவுகள் நனவாக வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்.  அசாமில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று பேசினார்.

தேர்தலில் மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளித்து உதவ வேண்டும் : மோடி.

 
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்காக ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என தலைவர் சோனியா காந்தியை விமர்ச(சி)னம் செய்துள்ளார் பிரதமர் மோடி.
பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணிக் கூட்டம்அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார்க் மாவட்டத்தின் மோரான் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு மோடிகூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்காக ஒரே ஒரு குடும்பம் பாராளுமன்றம் நடைபெறுவது தடுக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்காக அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளில் உள்ள சில தலைவர்கள் பாராளுமன்றத்தை நடத்துவதற்கு தயாராக இருக்கும் நிலையில், ஒரே ஒரு குடும்பம் மட்டும் மாநிலங்களவையை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தரூண் கோகோய் தலைமையிலான அரசு எவ்வித வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவில்லை.
வரவிருக்கும் தேர்தலில் அஸ்ஸாம் மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளித்து அஸ்ஸாம் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று மோடி கூறினார்.

முதலமைச்சர் மகள் மீது நில மோசடி புகார் !

 
குஜராத் முதலமைச்சர் மகள் மீது நில மோசடி புகார் கூறப்பட்டுள்ளதால் ஆனந்திபென் பட்டேல் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஆனந்திபென் பட்டேல் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள் அனார்ஜெஷ் பட்டேல், இவர் வெய்ல்டு உட்ஸ் ரிசார்ட்ஸ் மற்றும் ரியாலிட்டிஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
இந்த நிறுவனத்திற்காக குஜராத் அரசு கிர்காடு பகுதியில் 250 ஏக்கர் நிலம் குறைந்த விலைக்கு அரசு ஒதுக்கியதாகவும், மேலும் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆனந்தி பென்பட்டேல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிப்ரவரி 20 அன்று அறிவிப்பா ?

 
சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்நேற்று நடைபெற்ற இந்த அவசரக் கூட்டத்துக்கு, விஜயகாந்த் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலர் வி.சி.சந்திரகுமார், தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணி அமைப்பதே சரியாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமித்ஷா சந்திப்பு தவிர்ப்பு: கூட்டணி தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுடன் தேமுதிகவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், அவசரப்பட்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்பதற்காக அந்தப் பேச்சுவார்த்தையை விஜயகாந்த் தவிர்த்துவிட்டார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 20 அன்று நடைபெறும் மாநாட்டில் விஜயகாந்த் தனது முடிவை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
 
 

நாடு முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது

புது தில்லி:
நாடு முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதுடன், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் மிகவும் ரகசியமாக செயல்பட்டு வருவது அண்மைக் கால சம்பவங்களால் உலகத்துக்குத் தெரியவந்துள்ளது. இதனால், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன.
 
குறிப்பாக, இந்த இயக்கத்திற்கு பணம் சேர்க்கவே பல்வேறு நாடுகளில் இருந்து அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களுக்கு ரகசியமாகப் பயிற்சியும் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் சுமார் 15 பேரை நாடு முழுவதும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
தில்லி சிறப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவரை கைது செய்தனர்.  இதில், இப்ராகிம் சையது (28) என்பவனை ரகசிய தகவலின் பேரில் கைது செய்த போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தியதில், இவன் இந்தியாவில் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், ஐ.எஸ். இயக்கத்தில் சே்ந்து பணியாற்ற  சிரியா செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. அவனிடம் இருந்த ரூ.85 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

இந்தியாவின் முதல் பெண் ஆங்கில மருத்துவர்
சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

*இந்தியா என்று அல்ல. இங்கிலாந்தில் கூட. இந்த பெண்ணிற்கு முன் யாரும் மருத்துவ படிப்பு படிக்கவில்லை. அந்த பெண்மணி தான் முத்துலட்சுமி ரெட்டி.

இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர்.

சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இவர் மருத்துவ படிப்பை முடித்து. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனார். ஆண்கள் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்ட முதல் ஒரே பெண் மருத்துவர் இவர் தான். கல்லூரியில் இவரை தனியாக ஒரு இடத்தில் அமர வைப்பார்கள்.

இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்து. மருத்துவ மேல் படிப்புக்கு இவர் இங்கிலாந்தில் உள்ள Royal London School of Medicine கல்லூரியில் விண்ணப்பித்தார். சிகப்பு கம்பளம் விரித்து. ராயல் லண்டன் முத்து லட்சுமி ரெட்டி அவர்களை வரவேற்றது.அங்கும் அதே கதை தான். ஆணாதிக்கத்தில் இந்தியா என்ன, இங்கிலாந்தென்ன எல்லாம் ஒன்னு தான்.

முத்து லட்சுமி ரெட்டி அவர்கள் படித்து கொண்டு இருந்த பொழுது. அவர் உடன் படித்த அனைவருமே ஆண்கள். அன்று. அந்த காலேஜை கூட்டி, பெருக்கும் வேலையையும் ஆண்களே செய்தார்கள். முத்து லட்சுமி ரெட்டியோடு படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர்கள். இந்த ஒரு பெண்ணால். இந்த கல்லூரியில் படிக்கும் அணைத்து ஆண்களின் மனதும் சலனப்படுகிறது. அதனால் இவளை இந்த கல்லூரியை விட்டு துரத்த வேண்டும் என்று. டீனிடம் முறையிட்டார்கள். அதற்க்கு அந்த டீன். பெற்றோர்களிடம் சொன்ன பதில் என்ன..தெரியுமா…?

அப்படியா..? உங்கள் மகன்கள் யாரும் இங்கே வர வேண்டாம். வீட்டிலேயே இருக்கட்டும். இன்று. இந்த ஒரு பெண்ணை பார்த்தே உங்கள் மகன்களின் மனம் சலனபடுகிறது என்றால். நாளை உங்கள் மகன்கள் மருத்துவர் ஆனால். பல பெண்களின் நாடி பிடித்து மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கும். இத்தகைய சலன புத்தி உடைய ஆண்களுக்கு மருத்துவர் ஆகும் எந்த, வித தகுதியும் இல்லை டீன் முத்துலட்சுமிக்கு ஆதரவாக என்று துணிவுடன் கூறினார்.

இவர் வெறும் மருத்துவர் மட்டும் அல்ல. சென்னையின் முதல் பெண் துணை மேயர். சட்ட சபைக்கு போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டவர். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
அடையார் கேன்சர் இன்ஸ்ட்டிடியூட் இவர் நிறுவியது தான். அடையாரில் உள்ள அவ்வை இல்லம். ஆயிரக்கணக்கான ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வு அளித்து உள்ளது. அளித்து கொண்டு இருக்கிறது. . தமிழ் மொழி, தமிழிசையின் வளர்ச்சியிலும் இவர் மிகப்பெரிய தொண்டு ஆற்றியுள்ளார்.