Home Blog Page 5812

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

நியூசிலாந்து – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வெலிங்டனில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.  இந்த போட்டியில்  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 281 ரன்கள் எடுத்தது, 282 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கி விளையாடி, 46.3 ஓவர்களில் ஆறு விக்கெட்களை இழந்த நிலையில், வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 98 ரன்களும் மார்ஷ் 69 ரன்களும் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 8-ம் தேதி ஹமில்டனில் நடக்க உள்ளது.

பீகார் மாணவனுக்கு ஒரு கோடி ஆண்டு சம்பளம்: மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

பீகார் மாநிலம் காகரியா பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியின் மகன் வத்சல்யா சிங் சவுகானிற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆண்டிற்கு 1.02 கோடி ரூபாய் சம்பளமாக தர முன்வந்துள்ளது. வத்சல்யா சிங் சவுகான், தற்போது காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இறுதியாண்டு படித்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், வரும் அக்டோபர் மாதம், அவர் பணியில் சேர உள்ளார்.

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரி மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், 1,500 ஆண்டுக்கு முன்பாக சபரிமலை கருவறையில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?,  “மத அடிப்படையில் மட்டுமே பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க முடியும். மற்றபடி அனைவரும் கோயிலுக்கு செல்வதற்கு அரசமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. எனினும், பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஒரு வாரத்துக்குள் இதுதொடர்பாக கேரள அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் பிப்ரவரி 8ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியம் பாமகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். வேட்பாளர் பட்டியலில் பட்டதாரிகள், இளைஞர்கள் அதிகமாக இடம் பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் களுக்கான நேர்காணல் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர், இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியம் பாமகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை என்றார்.

சென்னையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்,திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மைத்திரிபால சிறிசேன – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை சந்தித்து பேசி உள்ளார்.

பின்னர், இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றிய ‘எதிரொலிக்கும் மலைக்குன்றுகள்’ என்ற 30 நிமிட நேர ஆவண படத்தை அவரும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் இணைந்து வெளியிட்டனர்.

அந்த படத்தில், 1,800-களில், தேயிலை தோட்ட வேலைக்காக, இந்திய தமிழர்களை ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு கூட்டிச்சென்றது பற்றியும், தமிழர்களின் இன்றைய நிலை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.எஸ். இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது: டெல்லி போலீசார் தகவல்

இது குறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி அரவிந்த் தீப் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஐ.எஸ். இயக்க ஆதரவாளர் டெல்லிக்கு வந்துள்ளதாக மத்திய உளவுத் துறை மூலம் தனிப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி பகுதியில் இளைஞர் ஒருவர் தனிப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மும்பையைச் சேர்ந்த இப்ராகிம் சையது என்று தெரிய வந்தது.

ஹரித்துவாரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் நால்வருக்கும் இவர் பணம் கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

என்று தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக தலைமை ஆசிரியர் சுப்பையன் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், மாணவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் சுப்பையன் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

 

அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நடுவானில் விமானங்கள் நேருக்குநேர் மோதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான இரு விமானங்களும் துறைமுகம் அருகே விழுந்து கடலில் மூழ்கியதாகவும், உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துறைமுக நுழைவு பகுதி அமைந்துள்ள இடத்தில் இருந்து 2 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கிய இந்த விமானத்தை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்களும், மீட்புகுழுவினரும் ஈடுபட்டுள்ளனர். 90 அடி ஆழமுள்ள அந்த கடற்பரப்பில் அடியில் விமானங்கள் விழுந்து கிடக்கலாம் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். விமானத்தில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிருடன் உள்ளனரா? விமானத்தில் எத்தனைபேர் பயணம் செய்தனர்? என்பது பற்றி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

பெண் கொலை வழக்கு: திரைப்பட நட்சத்திரங்கள் 2 பேர் கைது

ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே குப்பைத் தொட்டியில் அருகே ஜனவரி 5-இல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சசிரேகா என்ற பெண் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக போலீஸார், சசிரேகாவுடன் வாழ்ந்த ரமேஷ் , அவருடன் இருந்த லக்குவியா ஆகிய 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ரமேஷுக்கு, கேளரத்தைச் சேர்ந்த லக்குவியா என்ற துணை நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் வைத்து ரமேஷுக்கும், சசிரேகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் தாக்குதலுக்கு ஆளான சசிரேகா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, ரமேஷும், லக்குவியாவும் தலையை துண்டித்து கொளப்பாக்கத்தில் உள்ள ஒரு கால்வாயில் வீசியுள்ளனர். பின்னர் சடலத்தை ராமாபுரம் பள்ளியின் அருகே உள்ள குப்பைத் தொட்டி அருகே போட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.