Home Blog Page 5819

பிரகாஷ் ராஜ், போனி தம்பதியினருக்கு ஆண்குழந்தை!

கன்னடத்தின் மிதிலேயா சீதேயாரு படம் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் பிரகாஷ் ராஜ். தமிழில் டூயட் படம் மூலம் அறிமுகம், தொடர்ச்சியாக பாம்பே, கல்கி, இருவர், அந்தப்புரம், அப்பு, கில்லி, போக்கிரி உள்ளிட்டப் படங்களால் புகழடைந்தார்.

1994ம் ஆண்டு டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்கள் இருவருக்கும் மேகனா, பூஜா, என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

2009ம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்த பிரகாஷ் ராஜ் 2010ம் ஆண்டு பாலிவுட் நடன இயக்குநர் போனி வெர்மாவை திருமணம் செய்தார்.

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் போனி வெர்மா இருவருக்கும் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது . இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

 

பெங்களூரில் தொழிலதிபரை மணந்த நடிகை சங்கவி

சென்னை:

நடிகை சங்கவிக்கு பெங்களூரில் இன்று (புதன்கிழமை) திருமணம் நடந்தது. அவர் தொழில் அதிபரை மணந்தார்.

நடிகை சங்கவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் பெயர், வெங்கடேஷ். தொழில் அதிபர். சங்கவி-வெங்கடேஷ் திருமணம் பெங்களூரில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியில் இருந்து 10-30 மணிக்குள் நடந்தது.

‘‘இது, காதல் திருமணம் அல்ல. இரண்டு பேரின் பெற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம். திருமணத்துக்குப்பின், நான் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் அனுமதி கொடுத்து இருக்கிறார்’’ என்று சங்கவி தெரிவித்தார்.

1993-ம் ஆண்டில் வெளிவந்த ‘அமராவதி’ என்ற படத்தில் அஜித்குமார் ஜோடியாக அறிமுகமானவர், சங்கவி. விஜய் ஜோடியாக ‘ரசிகன்,’ ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். தொடர்ந்து, ‘நாட்டாமை,’ ‘கட்டுமரக்காரன்,’ ‘லக்கிமேன்,’ ‘சேலம் விஷ்ணு,’ ‘மன்னவா,’ ‘உளவுத்துறை,’ ‘ரிஷி’ உள்பட பல படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

ஸ்டியரிங்கிலேயே தலை கவிழ்ந்த போதை டிரைவர்: பயணிகள் அதிர்ச்சி

திண்டுக்கல்:
பழனி அருகே மது போதையில் அரசு பேருந்தை ஓட்ட முடியாமல் அந்த பேருந்தின் டிரைவர் ஸ்டியரிங்கில் சாய்ந்து தூங்கியதால் நடுவழியில் பயணிகள் தவித்தனர்.

பழனியிலிருந்து கள்ளிமந்தயம் கிராமத்திற்கு நேற்று மாலை அரசு பேருந்து புறப்பட்டு சென்ற போது, அந்த பேருந்தின் டிரைவர் தியாகராஜன், சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்தை நடுவழியில் நிறுத்தினார். மேற்கொண்டு அவரால் பேருந்தை ஓட்ட முடியவில்லை,

அப்போது, அவர் மதுபோதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அவர் சாய்ந்து கிடந்தார். இதனால், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டார். அப்போது, பேருந்தில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, பேருந்து கண்டக்டருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதையில் இருந்த டிரைவரை பேருந்தில் இருந்து கிழே இறக்கி, அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கண்டக்டர் உடனடியாக பழனி போக்குவரத்து பணிமனை அலுவலகத்திற்கு தகவல் கூறியுள்ளார். உடனடியாக மாற்று டிரைவர் மூலம் அந்த பேருந்து புறப்பட்டு சென்றது. போதை டிரைவர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி

ஆஸ்திரேலியா– நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஆக்லாந்தில் நடந்து வரும் முதல் ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி தொடக்கம் அதிரடியாக இருந்தது. 11–வது ஓவரில் 79 ரன் எடுத்தது. கேப்டன் மேக் குல்லம் 29 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 44 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் குப்தில் சதத்தை தவறவிட்டார். அவர் 76 பந்தில் 90 ரன் எடுத்து ‘ரன் அவுட்’ ஆனார். இதில் 8 பவுண்டரியும், 5 சிக்சரும் அடங்கும். பின்னர் வந்த வீரர்களில் நிக்கோலஸ் 61 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புககு 307 ரன் குவித்தது. சான்டெர் 39 பந்தில் 35 ரன் எடுத்தார். ஹாஸ்லேவுட், பல்க்னெர், மிச்சேல் மார்ஷ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 308 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிரங்கிய ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, தோல்வியடைந்து. இரு அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வரும் 6-ம் தேதி நடக்க உள்ளது.

ஹிந்தி நடிகர் அனுபம் கெர்க்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுப்பு

புது தில்லி:

பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெருக்கு பாகிஸ்தான் செல்வதற்கான நுழைவு இசைவை (விசா) அளிக்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வரும் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்குமாறு இந்தியாவிலிருந்து அனுபம் கெர், நடிகை நந்திதா தாஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்பட 18 பேருக்கு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.அதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்குச் செல்வதற்கான நுழைவு இசைவை பெற 18 பேரும் விண்ணப்பித்திருந்ததாகவும், அனுபம் கெர் தவிர மற்ற அனைவருக்கும் நுழைவு இசைவு அனுமதியை பாகிஸ்தான் குடிவரவுத் துறை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பத்ம பூஷண் விருது பெற்ற அனுபம் கெர், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தான் மக்களிடையே நிலவும் இந்தியா மீதான தவறான புரிதல்களை நீக்க இந்த இலக்கிய நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் விசா தர மறுக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. பாகிஸ்தான் கலைஞர்கள் இங்கு வர இந்தியா எப்போதும் அனுமதி அளித்து வருகிறது.

இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அவர்களின் நிகழ்ச்சி நடத்த மறுப்பு எழுந்தாலும்கூட மற்ற பகுதிகளில் நிகழ்ச்சியை அவர்கள் நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து தந்திருக்கிறது (பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலி நிகழ்ச்சி நடத்த மறுப்பு எழுந்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டார்).

நான் ஒரு காஷ்மீர் பண்டிட் என்பதால்கூட விசா மறுக்கப்பட்டிருக்கலாம். இதற்காக வருத்தம் அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டனர் என்றார் அனுபம் கெர்.

இதனிடையே, இதுகுறித்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக செய்திதுறைத் தலைவர் மன்சூர் மேமன் கூறுகையில், “நுழைவு இசைவு பெறுவதற்கான விண்ணப்பத்தை அனுபம் கெர் சமர்ப்பிக்கவில்லை. விண்ணப்பித்த தற்கான ஆதாரம் அவரிடம் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், கராச்சி இலக்கியத் திருவிழா (கேஎல்எஃப்) செய்தித்தொடர்பாளர் அமீனா சையது கூறுகையில், “அனுபம் கெர்க்கான விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டாம் என்று தெரிவிக்குமாறு தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் எங்களிடம் கேட்டுக் கொண்டது’ என்றார்.

அண்ணா நினைவு நாளில் 319 கோயில்களில் பொது விருந்து

சென்னை:

அண்ணா நினைவு நாளில் 319 கோயிகளில் பொதுவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுதெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா நினைவுநாளையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 3-ந் தேதி (இன்று) 319 திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெறுகிறது. இதில் சபாநாயகர், அமைச்சர்கள், மக்கள்பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.

திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் சபாநாயகர் ப.தனபால் கலந்து கொள்கிறார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பார்த்தசாரதி சுவாமி கோவிலில் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் காமராஜ், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சென்னையில் 32 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற உள்ளது. மாநிலத்தின் பிற இடங்களில் அண்ணா நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெறும் கோவில்களில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அம்பேத்கர் பெயர் உள்ள வரை இட ஒதுக்கீடு தொடரும்: மோடி உறுதி

கோவை:

இந்தியர்கள் இதயத்தில் அம்பேத்கர் பெயர் உள்ள வரை தலித்துகளுக்கு எவராலும் அநீதி இழைக்க முடியாது என்றும், தலித்துகளுக்கான இடஒதுக்கீடு தொடரும் என்றும் கோவையில் பிரதமர் மோடி உறுதிபட கூறினார்.

கோவைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு, கொடீசியா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை பாஜக-வின் எச்.ராஜா மொழிபெயர்த்தார். கூட்டத்தில் மோடி பேசியதாவது:

தேநீர் விற்றவர் பிரதமர் ஆனதை சிலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒன்றரை ஆண்டு கால ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பாக நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஏழைத்தாயின் மகன் நாட்டின் பிரதமராக நிர்வாகத்தை நடத்துவதை சிலரால் ஏற்க முடியவில்லை. அதனால் ஆட்சிக்கு தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். ஏழை மக்களுக்கு எதிராக இருக்கும் 1800 சட்டங்களில் 700 பழைய சட்டங்களைத் தூக்கி எறிய காங்கிரஸ் எதிர்ப்பு காட்டுகிறது.

மாநிலங்களவையில் பாஜக-வுக்கு பலம் இல்லாததை வைத்து அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இதில் விவசாயிகளுக்குச் சாதகமான சட்ட மசோதாக்கள் மீதும் இவர்களது எதிர்ப்பு பாய்ந்துள்ளது. விவசாயிகளுக்காக ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறோம். நான் பதவியேற்றதும் மாநிலங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவியதாக பல்வேறு மாநில முதல்வர்கள் எனக்கு கடிதம் எழுதினர்.

ஆனால் 2015-ல் இத்தகைய நிலை இல்லை, யூரியாவை போதுமான அளவுக்கு உற்பத்தி செய்தோம். மேலும் கள்ளச்சந்தை யூரியா விற்பனையும் தடுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவகாரங்களில் மாற்றம் கொண்டு வந்ததால் கரும்பு விவசாயிகளும் பயன்பெற்றுள்ளனர். கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை இருப்பதாக புகார்கள் வந்துள்ளதா? 60 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கிடைக்காத பல நல்ல திட்டங்களை நாங்கள் இந்த குறுகிய ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தியிருக்கிறோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் ஊழல்களினால் நாட்டில் இளைஞர்கள் நம்பிக்கை இழந்து இருந்த போது பாஜக ஆட்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. இதுதான் எதிர்க்கட்சியினரின் தூக்கத்தை கெடுத்துள்ளது, நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் தங்கள் கோபத்தை அவர்கள் காட்டி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினர் எனது அரசுக்கு எதிராக தலித் சமுதாயத்தினரை தூண்டி விடுகின்றனர். ஆனால் உண்மையென்னவெனில் தலித்துகள், ஏழைகள் முன்னேற்றத்துக்காகவே எனது அரசு பாடுபட்டு வருகிறது.

இந்திய மக்களின் இதயத்தில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் உள்ள வரையில் தலித்துகளுக்கு ஒருவரும் அநீதி இழைக்க முடியாது. தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு தொடரும்.

ஒரு நாடு முன்னேற ஒருமைப்பாடு அவசியம். நமது நாட்டில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 35 வயதினர். இது இளமையான நாடு. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஓராண்டில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. மேலும், அரசுப்பணிகளில் சேர லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லா ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுதும் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசும் போது, பொதுத்துறை தனியா துறை வளர்ச்சியையே மையப்படுத்துக்கின்றன, நான் தனிமனித வளர்ச்சியைப் பார்க்கிறேன். தன்மனிதனின் பொருளாதார வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாகும். இதற்காகத்தான் முத்ரா யோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தோம். சிறுதொழில் செய்வோருக்கு நிதியுதவி அளிக்கும் இத்திட்டத்தினால் இதுவரை 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் ரூ.95,000 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கிறேன். நாம் நம் நாட்டை ஒளிரும் பாதையில் அழைத்துச் செல்வோம்.

இவ்வாறு பேசினார் நரேந்திர மோடி.

 

வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அரசே சொன்னதாக ஸ்டாலின் அறிக்கை

சென்னை:
சென்னையில் திடீர் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு அதிமுக அரசு தான் காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னையில் திடீர் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று அதிமுக அரசு பச்சை பொய் சொல்கிறது என நான் திரும்ப திரும்ப கூறி வந்திருக்கிறேன். இதை உறுதி செய்யும் விதத்தில் இப்போது மத்திய அரசு அறிக்கை வெளி வந்துள்ளது. அதில் கன மழை பெய்யும் என்று 48 மணி நேரத்திற்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்தும் மாநில அரசு எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது.

மத்திய அரசு. தமிழக அரசின் பொய்யினை இந்த அறிக்கை தகர்த்து விட்டது. இது இயற்கை பேரழிவு அல்ல என்ற உண்மையும் இப்போது வெளி வந்து விட்டது. அதிமுக அரசு உருவாக்கிய செயற்கை பேரிடர் இந்த மழை வெள்ள பாதிப்பு என்று திமுக கூறி வந்தது தற்போது நிரூபிக்கப்பட்டு விட்டது. கழகம் சொன்னதை இப்போது மத்திய அரசே உண்மை என்று உறுதி செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

மத்திய அரசின் இந்த அறிக்கைக்கும் தன் தோல்விக்கும்அதிமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? உரிய கால அவகாசம் கிடைத்தும் முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை அதிமுக அரசு திறந்து விட்டதால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நாசமானது. இதற்கு அதிமுக அரசே முழு பொறுப்பு.

எனவே, உண்மையை மக்களுக்கு அறிவிக்க உடனடி நீதி விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுமாறு சுரேஷ் பிரபுவுக்கு கருணாநிதி கடிதம்

சென்னை:
தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

கருணாநிதி எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–

புதிய வெளிப்புற உள்கட்டமைப்புகள் விரிவாக்கம் மற்றும் புதிய பகுதிகளுக்கு இணைப்பு தொடர்பாக தாங்கள் மேற்கொண்டுவரும் ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகளை நான் அறிந்துள்ளேன்.

சில சவால்களை எதிர்கொண்டு தாங்கள் மேற்கொண்ட சில குறிப்பிட்ட முயற்சிகள் சேவையை மேம்படுத்தியுள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ரயில்வே துறையை மேலும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக உருவாக்குவதற்கு தாங்கள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளிலும் தாங்கள் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் தடைபட்டு நிற்பதை குறிப்பிடாவிட்டால் நான் என்னுடைய கடமையில் இருந்து தவறியவன் ஆவேன்.

இந்திய ரயில்வேயில் நீண்ட காலமாகவே தமிழ்நாட்டுக்கு அதற்குரிய பங்கு அளிக்கப்படாமலே இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு என் இதயம் வேதனை அடைகிறது.

அதற்கு நிதி பற்றாக்குறை, ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் சிக்கல்கள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்று அந்தத் திட்டங்களை கைவிடுவதற்கான நிரூபணங்கள் என்று காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றுக்கு தீர்வே இல்லையா என்பதில் நான் முழுமையாக மனநிறைவு அடையவில்லை.

சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை மூன்றாவது இருப்புப்பாதை சென்னை சென்டிரல்–பேசின்பிரிட்ஜ் 5 ஆவது மற்றும் 6 ஆவது இருப்புப்பாதைகள் அத்திப்பட்டு–புதூர் 88.3 கி.மீ. நீளமான புதிய இருப்புப்பாதை, சென்னை கடற்கரை – அத்திப்பட்டு நான்காவது இருப்புப்பாதை ஆகிய மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே இணைப்புகளை மேம்படுத்தவும் அதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டவை. ஆனால் அவை இப்போது திரும்பப்பெறப்பட்டுள்ளன.

ரயில்வேயால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இதர முக்கிய திட்டங்கள் வருமாறு:–

கும்பகோணம்–திருவாரூர், ஓமலூர்–மேட்டூர் அணை, ஈரோடு–பழனி, ஸ்ரீபெரும்புதூர்–கூடுவாஞ்சேரி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி, பெங்களூரு–சத்தியமங்கலம், திண்டிவனம்–திருவண்ணாமலை, மதுரை–போடிநாயக்கனூர், மாமல்லபுரம் வழியாக சென்னை–கடலூர் மற்றும் திண்டிவனம்–நகரி ஆகியவையாகும்.

இவற்றுள் சில திட்டங்கள் 1996–1997 மற்றும் 1998–1999 ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டவையாகும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு ஏற்ற நிலை சாத்தியமானதா என்ற ஆய்வுகள் தொடக்க நிலைப்பணிகள் அனைத்தும் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நிறைவு செய்யப்பட்டவையாகும்.

இத்தகையத் திட்டங்களை நிறுத்துவது எந்த அரசுக்கும் சரியானதாகாது. இது குழந்தையிடம் ஒரு பழத்தைக் காண்பித்துவிட்டு, அந்தக் குழந்தை மனம் வேதனையடையும் வகையில் அதைத் திடீரென்று மறைத்து வைப்பது போன்றதாகும்.

2004–2009 ஆம் ஆண்டு காலத்தில் ஈரோடு–பழனி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நானே தனிப்பட்ட முறையில் முயற்சிகளை மேற்கொண்டேன் என்று இங்கு நான் குறிப்பிட்டால் அது பொருத்தமற்ற இடத்தில் கூறிய கருத்தாகாது.

திருப்திகரமான முறையில் திட்டத்தைத் தொடங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்ட பிறகு, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.

மேற்கண்ட திட்டங்களை எல்லாம் மீண்டும் தொடங்குவதற்கு அன்புடன் தாங்கள் கவனம் செலுத்தி, அவற்றுக்குப் புத்துயிர் அளிக்க, வரவிருக்கும் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தீவிரமாக நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டால் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைவதோடு தங்களுக்கு மிகுந்த நன்றியோடும் இருப்பார்கள்.

நான் தனிப்பட்ட முறையில் தங்களுடைய விரிவான கடிதத்திற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

கூகிள் உதவி கொண்டு ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்

கூகிளின் உதவி கொண்டு பல ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்.

CBSE பள்ளிகளிலிருந்து எல்லா junk food நீக்க கட்டளை.

பல கோடி பேர் வங்கி கணக்கு துவங்க உதவி. பல கோடி பேருக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு வங்கியில் கணக்கு துவங்கியவுடன்.

9 என்ற எண்ணை அதிக நேரம் அழுத்தினால் போலீஸ் மற்றும் உறவினருக்கு தகவல் போகும் அப்ப்ளிகேஷன் துவக்கம்.

காணமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் திட்டம்.

தனியாக குழந்தைகளுடன் இருக்கும் பெண்களுக்கு வரி சலுகை பற்றி பேச்சு வார்த்தை நடக்கிறது.

10 ஆண்டுகள் காத்திருப்பில் இருந்த 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகள் இராணுவத்துக்கு வழங்கப்பட்டன.

இதுவரை மின்சாரமே பார்த்திராத 276 கிராமங்களுக்கு மின்சாரம். இதில் 139 கிராமங்கள் அஸ்ஸாம் 25 பீகாரில், 21 ஜார்க்ஹண்டில் 60 ஓடிஷவில், 30 உத்திர பிரதேசத்தில் உள்ளன. 1 ராஜஸ்தானில். இன்னும் சில கிராமங்கள் என் கணக்கில் வரவில்லை. இவற்றில் சொல்லப்பட்ட பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கவில்லை. சாதாரணமாக தங்கள் மாநிலத்துக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கும் தன்மை பல மந்திரிகளுக்கு உண்டு.

450 ரயில் கோச்சுகள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி ஒப்பந்தம். முதல் தவணையாக 6 அனுப்பப்பட்டன. மேக் இன் இந்தியா செயல் திட்டம்.

கல்வி கற்கும் மாணவர்களுக்காக கடன் வழங்கும் திட்டம். www.வித்யாலட்சுமி.கோ.இன்

சோமாபாய் என்பது மோடிஜியின் அண்ணனின் பெயர். யாருக்காவது தெரியுமா? நாங்கள் யாருமே அவர் டில்லி வீட்டுக்கு போனதில்லை. போனால் 15-20 நிமிடம் செலவழிக்க வேண்டியிருக்கும். நாட்டுக்கு அவ்வளவு பெரிய நேர நஷ்டத்தை ஏற்படுத்த விருப்பமில்லை.

மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதேனும் உண்டா என்றபோது, முதவராக இருந்த பொது நரேந்திரா என் வீட்டுக்கு வந்தார். என் மகன் ஜிதேந்திரா கடைசி ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்தான்.

மோடி: என்னப்பா எப்படி படிக்கிறாய்?

ஜிதேந்திர: அடுத்த ஆண்டு டிகிரி வாங்கிவிடுவ்சென்.

மோடி: பிறகு?

ஜிதேந்திர: எனக்கு ஒரு வேலை வாங்கி தர முடியுமா? (மோடி மவுனம்)

ஜிதேந்திர: பணம் உதவி கிடைத்தால்……..

மோடி: எனக்கு யாராவது உதவி செய்தார்களா? உன் காலில் நீ நிற்க பழக வேண்டும். போராடு. என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

ரயிலுக்கு பயணசீட்டு பதிவு செய்யும் irctc.com ஒரு லாபம் கொழிக்கும் இணையதளமாக மாறியுள்ளது. சர்வர் படுத்துவிடுகிறது. வேலையே செய்வதில்லை என்ற புகாரெல்லாம் போய் இப்போது ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதள லாபத்தை விட இந்த இணையதளம் அதிக லாபம் சம்பாதிக்கிறது.

shipping corporation of india இன்று100 கோடிக்கு மேல் லாபம் தொட்ட நிறுவனம். இது ஒரு ரெக்கார்ட்.

ஏர் இந்தியா முதல் முறையாக லாபம் பார்த்திருக்கிறது.

668 கோடி ரூபாய் வங்கி கணக்கில் ராஜஸ்தான் விவசாயிகளுக்கு தரப்பட்டது. இதே போல தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்.

இந்த ஆண்டு மட்டும் 2,50,000 IT வேலை வாய்ப்பு உருவாக்கப்படவிருக்கிறது.

திருமண சேவை இணையதளங்களில் பதிய அரசு அடையாள ஆதாரம் வேண்டும். இனி அங்கு பதிவு செய்து பெண்களை ஏமாற்ற முடியாது.

ஒரு 11 வயது சிறுவன் தன் வீட்டருகே நின்று போன bridge திட்டத்தால் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக எழுதி போட்டான். அடுத்த நாள் நின்ற வேலை துவங்கியது.

பிப்ரவரி 15 க்குள் அனைத்து நின்று போன சாலை திட்டங்கள் வேலை துவங்க வேண்டும் என்று உத்தரவு.

கண்ணில் பட்டவை இவை. சொல்லாமல் விடப்பட்டவை இன்னும் உள்ளன.

தகவல்:  NAMO Vision INDIA 360 முக நூல் பக்கம்.