Home Blog Page 5820

பெண்ணிடம் அசிங்கப்பட்ட கோஹ்லி

கிரிக்கெட் உலகின் புகழ் பெற்ற வீரரான வீராட் கோஹ்லி இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது, ஒரு பெண்ணிடம் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது என்று கோஹ்லி மேனேஜர் தெரிவித்துள்ளார். நீங்கள் என்ன அவ்வளவு பிரபலமானவரா? என்று கேள்வி எழுப்பி அசிங்கப்படுத்தியுள்ளார்.

 

இந்த சம்பவத்தை குறித்த பெண்ணின் கணவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சல்மான்கான் புகைப்படத்துடன் வாக்குசீட்டு ஹைதராபாத்தில் பரபரப்பு

ஹைதராபாத்தில் நடிகர் சல்மான்கான் புகைப்படத்துடன் வாக்குசீட்டு வழங்கப்பட்டு உள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான்கான் புகைப்படத்துடன் வாக்குசீட்டு வழங்கப்பட்டு உள்ளது.

வாக்குசீட்டில் அவருடைய அடையாள அட்டை எண் YVO1360395 என்றும் வயது 60 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வாக்காளரின் தந்தை காலத்திலும் சல்மான்கான் என்றே பெயர் அச்சிடப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குசீட்டு இவ்வாறு வழங்கப்பட்டது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க ‘யுனிக் ஐடி’

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் இந்த ஆண்டு முதன்முறையாக 14 இலக்கம் கொண்ட நிரந்தர யுனிக் ஐடி எண் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதில் எந்த வகுப்பு, தேர்வு எழுதும் மாதம், ஆண்டு, மாவட்ட கோடு எண், ரெகுலர் என்றால் ஆர், பிரைவேட் என்றால் பி ஆகிய ஏழு குறியீடுகளுடன் 14 இலக்க எண்களும் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும். அதேபோல் 10ம் வகுப்பில் வழங்கப்படும்

இதே எண்ணை பிளஸ் 2 தேர்விலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் மாணவர்களின் பதிவு எண் போன்று விடைத்தாளின் முதல் பக்கத்திலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் யுனிக் ஐடி எண்ணும் இடம்பெறும்.

இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சத்து 79 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து மேற்பட்டவர்களும் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா வின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

 

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.  

 

பின்னர் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். திமுக தலைமை, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அமைதிப் பேரணியிலும், அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் பங்கேற்றனர்.

அண்ணா நினைவு தினதைத்யொட்டி திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட பலர் நினைவிடத்தில் அஞ்சலி !

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணியை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை செல்லும் இந்த அமைதிப் பேரணியில் மு.க.ஸ்டாலின், துரை முருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட பலர் மெரினா கடற்கரையில் உள்ள அண்னா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்

சமபந்தி விருந்தில் கிராம மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி !

 
ஆந்திரபிரதேச மாநிலம்ஆனந்தப்பூர் மாவட்டத்தில் பண்ட்லா பள்ளி கிராமத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கிராம மக்களிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை குறித்து கேட்டறிந்தார்.
தேசிய ஊரக வேலை திட்டத்தை காங்கிரஸ் அரசு கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முதல் முறையாக இந்த திட்டத்தை இங்கு தான் தொடங்கி வைத்தனர் என நினைவு கூறி நாட்டில் வறுமையை அகற்ற இந்த திட்டம் ஒரு மைல்கல்லாக அமைந்தது என கூறினார்.
மேலும் கிராம மக்களுடன் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டார்.

வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியாம் !

 
உலக அளவில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை எட்டிவிட்டதாக அந்த சேவையை வழங்கிவரும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து “வாட்ஸ் ஆப் இணைய தள செய்தி பதிவில் தெரிவித்துள்ளதாவது :-
வாட்ஸ் ஆப்பை உலகில் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் 10 கோடி பேர் இச்செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் 7 பேரில் ஒருவர் தங்களது கைப்பேசி அல்லது கணினி மூலம் கட்செவி அஞ்சலை பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கட்செவி அஞ்சலை பயன்படுத்தி புகைப்படங்கள் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன என்று அந்த நிறுவன இணைய தள செய்தி பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்பு குறித்து முஸ்லிம் மதத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை !

 
இந்திய முஸ்லிம் சமூக இளைஞர்களிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீதான தாக்கத்தைக் கண்காணித்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முஸ்லிம் மதத் தலைவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது:-
சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது அந்த அமைப்புகளுக்கு ஆள்சேர்க்கும் பணியை மேற்கொள்வோரின் மூலமாகவோ பயங்கரவாத அமைப்புகள் இந்திய இளைஞர்களுக்கு பணத்தாசை காட்டி மூளைச் சலவை செய்கின்றன.
இதனால் கடந்த காலங்களில் இளைஞர்களிடையே அந்த அமைப்புகளின் தாக்கம் அதிகரித்ததன் விளைவாக, இதுவரை 23 இந்தியர்கள் ஐ.எஸ். அமைப்புகளில் இணைந்துள்ளனர்.
அறிவுறுத்துங்கள்: மேலும் இணையம் மூலம் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருக்கும் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளின் இந்தச் செயல்களை இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் குடும்ப கலாசாரம் கொண்டு சமாளிக்கும் திறனை நாம் பெற்றுள்ளோம்.
அதேவேளையில், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஐ.எஸ். அமைப்புகள் இந்தியாவில் பிரபலமடைவது அதிகபட்சம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்து தரப்பிலும் இருந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து கண்காணிப்பு அவசியம்.
எனவே மதத் தலைவர்களாகிய நீங்கள், முஸ்லிம் இளைஞர்களிடையே ஐ.எஸ். அமைப்புகள் குறித்த தாக்கத்தை கண்காணித்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, தடம்மாறும் இளைஞர்களுக்குத் தக்க அறிவுரை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
முதல்முறையாக ஐ.எஸ். விவகாரம் குறித்து முஸ்லிம் மதகுருக்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, மத்திய உளவு அமைப்புகள், புலனாய்வு அமைப்புகள், 13 மாநிலங்களின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஐ.எஸ். அமைப்பின் மீதுள்ள இளைஞர்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய முஸ்லிம் தலைவர்களுடன் விரைவில்…: தென்னிந்திய இளைஞர்கள் அதிக அளவில் ஐ.எஸ். அமைப்புகளில் இணைவது குறித்து மத்திய அரசு கவலைத் தெரிவித்துள்ளது.
கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை அந்த அமைப்புகளின் வலையில் சிக்காமல் இருக்க அந்த மாநில முஸ்லிம் மதத் தலைவர்களை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் சந்திப்பார் என கருதலாம் .

​ஓரினச் சேர்க்கை வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு !

 
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஓரினச் சேர்க்கை குற்றமற்ற செயல் என அறிவிக்கக்கோரிய மனு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் விரும்பி ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என்று கடந்த 2009ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும், ஓரினச் சேர்க்கையை குற்றம் எனக் கூறும் அரசியல் சட்டப்பிரிவு 377-ஐ, ரத்து செய்வதாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
இதை எதிர்த்து ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விசாரித்தது.
பின்னர், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு ஓரினச் சேர்க்கை ஆதராளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற மத்திய அமைச்சருக்கு கருணாநிதி கோரிக்கை !

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு மு.க.கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது :- புதிய வெளிப்புற உள்கட்டமைப்புகள் விரிவாக்கம் மற்றும் புதிய பகுதிகளுக்கு இணைப்பு தொடர்பாக தாங்கள் மேற்கொண்டுவரும் ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகளை நான் அறிந்துள்ளேன். சில சவால்களை எதிர்கொண்டு தாங்கள் மேற்கொண்ட சில குறிப்பிட்ட முயற்சிகள் சேவையை மேம்படுத்தியுள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ரயில்வே துறையை மேலும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக உருவாக்குவதற்கு தாங்கள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளிலும் தாங்கள் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் தடைபட்டு நிற்பதை குறிப்பிடாவிட்டால் நான் என்னுடைய கடமையில் இருந்து தவறியவன் ஆவேன். இந்திய ரயில்வேயில் நீண்ட காலமாகவே தமிழ்நாட்டுக்கு அதற்குரிய பங்கு அளிக்கப்படாமலே இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு என் இதயம் வேதனை அடைகிறது. அதற்கு நிதி பற்றாக்குறை, ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் சிக்கல்கள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்று அந்தத் திட்டங்களை கைவிடுவதற்கான நிரூபணங்கள் என்று காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றுக்கு தீர்வே இல்லையா என்பதில் நான் முழுமையாக மனநிறைவு அடையவில்லை. சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை மூன்றாவது இருப்புப்பாதை சென்னை சென்டிரல்–பேசின்பிரிட்ஜ் 5–வது மற்றும் 6–வது இருப்புப்பாதைகள் அத்திப்பட்டு–புதூர் 88.3 கி.மீ. நீளமான புதிய இருப்புப்பாதை, சென்னை கடற்கரை – அத்திப்பட்டு நான்காவது இருப்புப்பாதை ஆகிய மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே இணைப்புகளை மேம்படுத்தவும் அதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டவை. ஆனால் அவை இப்போது திரும்பப்பெறப்பட்டுள்ளன. ரயில்வேயால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமுக்கிய திட்டங்களாவது :- கும்பகோணம்–திருவாரூர்–ஓமலூர்–மேட்டூர் அணை, ஈரோடு–பழனி, ஸ்ரீபெரும்புதூர்–கூடுவாஞ்சேரி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி, பெங்களூரு–சத்தியமங்கலம், திண்டிவனம்–திருவண்ணாமலை, மதுரை–போடிநாயக்கனூர், மாமல்லபுரம் வழியாக சென்னை–கடலூர் மற்றும் திண்டிவனம்–நகரி ஆகியவையாகும். இவற்றுள் சில திட்டங்கள் 1996–1997 மற்றும் 1998–1999–ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டவையாகும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு ஏற்ற நிலை சாத்தியமானதா என்ற ஆய்வுகள் தொடக்க நிலைப்பணிகள் அனைத்தும் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நிறைவு செய்யப்பட்டவையாகும். இத்தகையத் திட்டங்களை நிறுத்துவது எந்த அரசுக்கும் சரியானதாகாது. இது குழந்தையிடம் ஒரு பழத்தைக் காண்பித்துவிட்டு, அந்தக் குழந்தை மனம் வேதனையடையும் வகையில் அதைத் திடீரென்று மறைத்து வைப்பது போன்றதாகும். 2004–2009–ம் ஆண்டு காலத்தில் ஈரோடு–பழனி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நானே தனிப்பட்ட முறையில் முயற்சிகளை மேற்கொண்டேன் என்று இங்கு நான் குறிப்பிட்டால் அது பொருத்தமற்ற இடத்தில் கூறிய கருத்தாகாது. திருப்திகரமான முறையில் திட்டத்தைத் தொடங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்ட பிறகு, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. மேற்கண்ட திட்டங்களை எல்லாம் மீண்டும் தொடங்குவதற்கு அன்புடன் தாங்கள் கவனம் செலுத்தி, அவற்றுக்குப் புத்துயிர் அளிக்க, வரவிருக்கும் ரெயில்வே நிதிநிலை அறிக்கையில் தீவிரமாக நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டால் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைவதோடு தங்களுக்கு மிகுந்த நன்றியோடும் இருப்பார்கள். நான் தனிப்பட்ட முறையில் தங்களுடைய விரிவான கடிதத்திற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் .